ASHA BHONSLE ,A GREAT LEGEND SINGER OF BOLLYWOOD
ஆஷா போஸ்லே [1](மராட்டி: आशा भोसले) (பிறப்பு செப்டம்பர் 8, 1933) ஒரு இந்திய பாடகியாவார். அவர் பல துறைகளில் திறமை கொண்டவராக இருந்தாலும், அவர் பாலிவுட் பின்னணிப்பாடகியாக மிகவும் புகழ் பெற்றவராவார். அவரது கலைப்பயணம் 1943 ஆண்டில் துவங்கியது மற்றும் இன்று வரை அறுபது ஆண்டுகளாக தமது சேவைகளை அளித்து வருகிறார். அவர் பின்னணிப்பாடகியாக 1000 த்துக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியதோடு,[2] அவர் பாடிய பல இசைத்தட்டுக்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன.[3] அவர் பின்னணிப்பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார்.
தெற்காசிய நாடுகளில் போஸ்லே அவர்கள் மிகவும் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் பாடகியாவார் — அவரது திறமை திரைப்படப்பாடல்கள், போப் இசை, கஜல் வழிப்பாடல்கள், பஜனைப்பாடல்கள், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசை, நாட்டுப்பாடல்கள், கவ்வாலிப்பாடல்கள், ரபீந்திர சங்கீதம் மற்றும் நஜ்ருல் கீதி பாடல்கள் அனைத்திலுமே பளிச்சென்று வெளிப்படுவதை அனைவரும் அறிவார்கள். அவர் 14 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார், அவற்றில் ஆஸ்ஸாமீஸ், ஹிந்தி, உருது, தெலுங்கு, மராத்தி, பெங்காளி, குஜராத்தி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம், ரஷ்ய மொழி, செக் மொழி, நேபாளி, மலாய் மொழி மற்றும் மலையாளம் போன்ற மொழிகள் அடங்கும்.
போஸ்லே அவர்கள் 12,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளதாக அறியப்படுகிறது. 1974-1991 ஆண்டுகளில்,கின்னஸ் புக் ஓப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் என்ற புகழ்பெற்ற புத்தகப்பதிப்பில், அவருடைய சகோதரியான லதா மங்கேஷ்கர் உலக அளவில் மிகவும் அதிகமான பாடல்களை பாடியதற்கான ஒரு இடத்தை அந்த புத்தகத்தில் பெற்றிருந்தாலும், புகழ் பெற்ற ஆதாரங்களை பதிவு செய்யும் நிறுவனங்கள் இதை உண்மையானதாக ஏற்றுக்கொள்ளவில்லை, மேலும் கின்னஸ் ஏற்றுக்கொண்ட எண்ணிக்கை கணக்கு மிகைப்படுத்திய ஒன்றாகும் என்றும் மேலும் போஸ்லே அவர்கள் லதா மங்கேஷ்கரை விட அதற்கும் மேல் பாடல்கள் பாடியுள்ளதாகவும் உரிமை கொண்டாடுகின்றன. போஸ்லே அவர்களே மற்ற எந்தப்பாடகியையும் விட அதிகமான பாடல்களைப் பாடிப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் - 12,000 பாடல்கள்.[4]
வாழ்க்கை வரலாறு[தொகு]
ஆஷா போஸ்லே மகாராட்டிரத்தில் உள்ள சாங்க்லி மாவட்டத்திலுள்ள கோர் எனப்படும் குக்கிராமத்தில், மராத்திய இசை மேதையான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் குடும்பத்தினருக்குப் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு திரையரங்கு நடிகர் மற்றும் சாஸ்த்ரீய சங்கீத வித்வானாவார் மேலும் அவர் கோவாவில் உள்ள மன்கேஷி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருக்கு ஒன்பது வயது இருக்கும் பொழுது, அவரது தந்தையார் காலமானார். அவரது குடும்பம் முதலில் புனேவில் இருந்து கோல்ஹாபூரிற்கு குடிபெயர்ந்தது மேலும் அங்கிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தது. அவரும் அவரது மூத்த சகோதரியான லதா மங்கேஷ்கர் அவர்களும் குடும்பத்தைப் பேணுவதற்காக திரைப்படங்களில் நடிக்கவும் பாடவும் துவங்கினார்கள். அவர் அவருடைய முதல் திரைப்படப் பாடலான சலா சலா நவ பாலா என்ற மராத்தி மொழிப்பாடலை மாஜா பல் என்ற படத்திற்காக பாடினார்(1943). இந்தப்படத்திற்கு தத்தா தவ்ஜேகர் இசை அமைத்தார். அவர் ஸாவன் ஆயா என்ற பாடலை ஹன்ஸ்ராஜ் பெஹ்ல் அவர்களின் சுனரியா (1948) என்ற படத்திற்கு பாடியதும் அவர் ஹிந்தி திரைப்படப்பாடல் உலகத்திற்கு அறிமுகமானார்.[5] அவர் தனியாக பாடிய முதல் ஹிந்தி திரைப்படப்பாடல் ராத் கி ராணி (1949) என்ற படத்திற்காகும்.[6]
அவருக்கு 16 வயது நிரம்பிய பொழுது, அவர் 31-வயதுடைய கண்பத்ராவ் போஸ்லே என்பவருடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார், மேலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக, அவரை திருமணம் புரிந்து கொண்டார். கண்பத்ராவ் அவரது சகோதரியான லதாவின் தனிப்பட்ட செயலராக பணி புரிந்தவராவார். இந்தத்திருமணம் வெற்றி பெறவில்லை. அவரது கணவர் மற்றும் புக்ககத்தினர் அவரை மிகவும் கொடுமைப்படுத்தினர். திருமணமான சில வருடங்களுக்குப்பிறகு, (சுமார் 1960) அவரது கணவர் கண்பத்ராவ் அவர் மீது சந்தேகப்பட்டு,[7] அவரை வீட்டில் இருந்து துரத்தி விட்டார் மேலும் அவர் அவருடைய இரு குழந்தைகள் மற்றும் அவர்களுடைய மூன்றாவது குழந்தையான ஆனந்தை வயிற்றில் சுமந்துகொண்டு தமது சொந்த வீட்டிற்கு திரும்பி வந்தார். பணம் சம்பாதிப்பதற்காக அவர் தொடர்ந்து திரைப்படங்களில் பாடி வந்தார்.
அந்த சமயத்தில், முன்னணியில் இருந்த கீதா தத், ஷம்சாத் பேகம் மற்றும் அவரது சகோதரியான லதா மங்கேஷ்கர் போன்றோர் கதாநாயகிகளுக்கு மட்டும் பின்னணிப்பாடகியாக பாடி வந்தனர் மேலும் அந்த இடத்தில் மற்றவர்கள் பாடுவதற்கு இடம் அளிக்கவில்லை, எனவே ஆஷா போஸ்லே அவர்கள் பாட விரும்பாத பாடல்களை பாடும் சூழ்நிலைகள் உருவாகின: படத்தில் குறைந்த தரம் வாய்ந்த வேடங்கள் மற்றும் வில்லி வேடங்களில் நடிக்கும் நடிகைகள் பாடும் கீழ்த்தரமான பாடல்கள் அல்லது இரண்டாம் வகைப்பட்ட திரைப்படங்களில் பாட மட்டுமே அவருக்கு அழைப்புகள் வந்தன. 1950 ஆண்டுகளில், அவர் இதர பின்னணிப்பாடகிகள் எல்லோரையும் விட அதிகமான பாடல்களை பாலிவுடில் பாடி இருந்தாலும், அவை யாவும் குறைந்த மூலதனம் கொண்ட அல்லது இரண்டாம் அல்லது மூன்றாம் தரம் கொண்ட படங்களுக்காக பாடப்பெற்றவையாக இருந்தன. அவருடைய முந்தைய பாடல்கள் ஏ ஆர் குரேஷி (அல்லா ரகா கான்), சஜ்ஜத் ஹுசைன் மற்றும் குலாம் முகமது போன்றோர் இசை அமைத்ததாகும், அவற்றில் பல பாடல்கள் மக்களின் செல்வாக்கைப் பெறத்தவறியது.[5] திலிப் குமார் - நடித்த சங்தில் (1952) என்ற படத்திற்கான ஒரு பாடல், சஜ்ஜத் ஹுசைன் இசை அமைத்தது, அவருக்கு முதல் முறையாக நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதன் விளைவாக, பட இயக்குனரான பிமல் ராய், அவருக்கு அவருடைய பரிநீதா (1953) என்ற திரைப்படத்தில் பாடுவதற்கு ஒரு வாய்ப்பளித்தார். ராஜ் கபூர் அவர்கள் அவரை நன்ஹே முன்னே பச்சே என்ற பாடலை முகமது ரபி அவர்களுடன் இணைந்து பூட் போலிஷ் (1954) என்ற படத்தில் பாடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார், அந்த பாடல் அவருக்கு புகழை தேடித்தந்தது.
ஒ. பி. நய்யார் அவர்கள் ஆஷா போஸ்லே அவர்களுக்கு சி.ஐ.டி.என்ற படத்தில் பாடுவதற்கு ஒரு பெரிய வாய்ப்பை அளித்தார் (1956). அவர் பி.ஆர். சோப்ரா அவர்களின் நயா தௌர் (1957), அவரே (ஒ. பி. நய்யார்) இசை அமைத்த படம், அவருக்கு முதல் முதலாக வெற்றியைத்தேடித்தந்தது. அவர் போஸ்லே அவர்களுடன் இணைந்து தயாரித்த பல படங்கள் வெற்றிப்படங்களாக தீர்ந்தன (திகழ்ந்தன). பிறகு, அவர் தன்னை நன்றாக நிலைநிறுத்திக்கொண்டார் மேலும் சச்சின் தேவ் பர்மன் மற்றும் ரவி போன்ற இசை அமைப்பாளர்களின் அன்பிற்கு பாத்திரமானார். போஸ்லே மற்றும் நய்யார் அவர்களிடையே நிலவிவந்த தொழில் சார்ந்த மற்றும் தனிப்பட்ட உறவு முறை 1970 ஆண்டுகளில் பிளவுபட்டது.
1966 ஆம் ஆண்டில், இசை அமைப்பாளர் ஆர் டி பர்மன் அவர்களின் முதல் வெற்றிப்படமான தீஸ்ரி மஞ்சில் என்ற படத்தில் அவர் பாடிய காதல் உறழ் பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 1970 ஆண்டுகளில் அவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்கள் மற்றும் பாடல்களை அளித்தனர் மேலும் இறுதியில் அவர்கள் இருவரும் மணம் புரிந்துகொண்டனர். 1960 மற்றும் 1970 ஆண்டுகளில், அவர் பாலிவுட்டின் மிகவும் புகழ் பெற்ற நடனரான, ஹெலன் என்பவரின் குரலாக மாறினார். ஹெலன் அவர்கள் ஆஷாஜியின் பாடல் பதிவு செய்யும்பொழுது தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டு பாடலை நன்கு புரிந்து கொண்ட பின் அதன் அடிப்படையில் நடனம் புரிவதற்கான ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு அதற்கேற்ப வடிவமைப்பதற்கு மிகவும் கவனம் செலுத்தியதாக கூறுவார்..[8] ஹெலனுக்காக ஆஷா போஸ்லே பாடிய பல பாடல்கள் மக்களின் இதயத்தில் பதிந்தவையாகும் - அவற்றில் சில பியா தூ அப் தொ ஆஜா (காரவான்), ஹஸீனா ஜூல்போன் வாலி (தீஸ்ரி மன்ஜில் ), மற்றும் யே மேரா தில் (டான் ) போன்றவையாகும்.
உம்ராவ் ஜான் (1981) மற்றும் இஜாசத் (1987) போன்ற படங்களில், அவர் மரபார்ந்த கஜல் பாடல்களை பாடினார் மற்றும் அதனால் அவரது முழு திறமைகளும் மக்களுக்கு வெளிப்பட்டது, மேலும் அதற்காக அவர் ஆசைப்பட்டபடியே மிகச்சிறந்த பின்னணிப்பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றார்.
1990 ஆண்டுகளிலும் அவரது திரையுலக இசைப்பயணம் தொடர்ந்தது. 1995 ஆம் ஆண்டின் வெற்றிப்படமான ரங்கீலா அவருக்கு மேலும் புகழை சேர்த்தது. 2005 ஆம் ஆண்டில் அவர் 72-வயது-அடைந்த பின்னரும், ஆஷா போஸ்லே தமிழ் படமான சந்திரமுகி மற்றும் சல்மான் கானின் படமான லக்கி என்ற படத்தில் அவர் பாடிய லக்கி லிப்ஸ் போன்ற பாடல்கள் வெற்றிப்பாடல்களாக அமைந்தன. போஸ்லே தமிழில் பாடிய ஓ! பட்டர்பளை, செப்டம்பர் மாதம் மற்றும் வெண்ணிலா வெண்ணிலா போன்ற தமிழில் பாடிய பாடல்கள் மக்களின் மனதைவிட்டு இன்றும் மறையாது நிலைத்து நிற்கும் அருமையான பாடல்களாகும்.
அக்டோபர் 2004 அன்று, தி வெரி பெஸ்ட் ஓப் ஆஷா போஸ்லே, தி க்வீன் ஓப் பாலிவுட் , என்ற பெயரில், போஸ்லே அவர்கள் 1966-2003 ஆண்டுகளுக்கு இடையே பாடிய திரைப்படப்பாடல்கள் மற்றும் இதர வெற்றிப்பாடல்களின் தொகுப்பு, வெளியானது.
தொழில் வாழ்க்கையில் குறிப்பிடும்படியான நிகழ்வுகள்[தொகு]
அருகாமையில் இருந்து கவனித்தால், ஆஷா போஸ்லே அவர்களின் திரைப்பட கலைப்பயண வாழ்க்கையை நான்கு கட்டங்கள் கொண்டதாக பிரிக்கலாம் — நயா தௌர் (1957), தீஸ்ரி மன்ஜில் (1966), உம்ராவ் ஜான் (1981) மற்றும் ரங்கீலா (1995).
"நயா தௌர்", (1957)
ஆஷா போஸ்லேஅவர்களின் முதல் வெற்றிக்கு காரணமாக இருந்தது பி ஆர் சோப்ரா அவர்களின் நயா தௌர் ("புதிய யுகம்", 1957) என்ற படமாகும். அவர் ரபி அவர்களுடன் இணைந்து பாடிய மாங் கே சாத் தும்ஹாரா , சாதி ஹாத் படானா மற்றும் உடேன் ஜப் ஜப் ஜூல்பென் தேரி , போன்ற சாகிர் லுதியான்வி எழுதிய மற்றும் ஒ. பி. நய்யார் இசை அமைத்த பாடல்கள், அவருக்கு புகழை தேடித்தந்தன. ஆஷா மற்றும் ஒ. பி. நய்யார் இருவரும் அதற்கு முன்னரும் இணைந்து பணி புரிந்திருந்தார்கள். ஆனால் கதாநாயகிக்கான அனைத்துப்பாடல்களையும் பாடுவதற்கான முதல் சந்தர்ப்பம் அதுவேயாகும். நயா தௌர் படத்தின் தயாரிப்பாளரான பி ஆர் சோப்ரா, அவருடைய திறமையை நன்கு புரிந்து கொண்டார் மேலும் அதற்குப்பின் அவர் தயாரித்த பல படங்களில், எடுத்துக்காட்டாக வக்த் , கும்ராஹ் , ஹம்ராஜ், ஆத்மி அவுர் இன்சான் , துந் போன்ற திரைப்படங்களில் அவரைப்பாடவைத்தார்.
தீஸ்ரி மன்ஜில், 1966
ராகுல் தேவ் பர்மன்அவர்களின் தீஸ்ரி மன்ஜில் (1966) படத்தில் ஆஷா போஸ்லே போப் பாடகியாக உருவெடுத்தார். அவர் முதல் முதலில் ஆஜா ஆஜா பாடலுக்கான இசை அமைப்பை கேட்டபொழுது, அவரால் அந்த மேற்கத்திய பாடல் பாணியில் பாடமுடியும் என்ற நம்பிக்கை எழவில்லை. ஆர் டி பர்மன் அவருக்காக இசையை மாற்றியமைக்க முன்வந்தார். அவருக்கு இது ஒரு அவமானமாக பட்டதால், இப்பாடலை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு பாடத்துணிந்தார். பத்து நாட்களுக்கு விடாமல் கடுமையாக பயிற்சி செய்து, முடிவில் இந்தப்பாடலை அவர் பாடிய பொழுது, ஆர்.டி பர்மன் அவரைப்பாராட்டி ஒரு நூறு ரூபாய் நோட்டை அவரது கைகளில் திணித்தார். ஆஜா ஆஜா மற்றும் அப்படத்தின் இதர பாடல்களான ஹஸீனா ஜூல்போன்வாலி மற்றும் ஒ மேரி சோனா ரே (அனைத்தும் பாலிவுட் பாடகரான ரபி யுடன் இணைந்து பாடிய டூயட் பாடல்கள்) அந்நாளில் மிகவும் மக்கள் விரும்பிய பாடல்களாகத் திகழ்ந்தன. அப்படத்தில் கதாநாயகானாக நடித்த ஷம்மி கபூர் ஒருமுறை கூறியது - "எனக்காக பாடுவதற்கு முகமது ரபி இருக்கவில்லை என்றால், நான் அந்தப்பணியை ஆஷா போஸ்லே அவர்களுக்கு அளித்திருப்பேன்."
உம்ராவ் ஜான் (1981)
1980 ஆண்டுகளில், ஆஷா போஸ்லே "காபெரெ நடன பாடல்கள்" மற்றும் "போப் இசையில் கூவும்" வகையிலான பாடல்களை மட்டும் பாடுவதற்கே லாயக்கானவர் என்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தார். நடிகை ரேகா - நடித்த உம்ராவ் ஜான் என்ற படத்தில், அவர் தில் சீஜ் க்யா ஹை , இன் ஆன்கோன் கி மஸ்தி கே , யே க்யா ஜகாஹ் ஹை தோச்தோன் மற்றும் ஜுஸ்த்ஜு ஜிஸ்கி தி போன்ற கஜல் வடிவத்தில் இசையமைத்த பாடல்கலைப் பாடினார். இப்பாடல்கள் அவரால் சிரமமான பாரம்பரிய பாடல்களைப்பாட முடியும் என்பதை நிலைநிறுத்தியது. இதன் இசை அமைப்பாளரான கய்யாம்அவர்கள், இதற்காக ஆஷாஜி அவர்களின் குரலை, அரை சுருதி குறைந்து பாடவைத்தார். இப்படியும் ஆஷா அவர்களால் வேறுபட்ட பாடல்களை பாட முடியும் என்பதை அறிந்த அவர், கொஞ்சம் திகைப்படைந்தார். இந்த கஜல் வடிவில் இசை அமைத்த இப்பாடல்கள் அவருக்கு அவரது தொழில் வாழ்க்கையின் முதல் தேசியவிருதை பெற்றுத் தந்ததோடல்லாமல், அவரது திறமைகளையும் வெளிக் கொணர்ந்தது.
"ரங்கீலா", 1995
1995 ஆம் ஆண்டில், 62-வயதான ஆஷா போஸ்லே இளம் நடிகையான ஊர்மிளா மதொன்த்கருக்காக ரங்கீலா என்ற படத்திற்காக பின்னணிப்பாடல்களைப் பாடினார். தன்ஹா தன்ஹா மற்றும் ரங்கீலா ரே போன்ற இனிய வெற்றிப்பாடல்களை வழங்கி அவர் அவரது விசிறிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இப்பாடல்களை இசை மேதை என புகழப்படும் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசை அமைத்தார், மேலும் தொடர்ந்து அவர் ஆஷாஜியுடன் இணைந்து பல வெற்றிப்பாடல்களைப் பதிவு செய்தார். இவை அனைத்திலும் குறிப்பாக ஆஷா போஸ்லே அவர்கள் ஏ ஆர் ரஹ்மானுக்காக முதன்முதலில் பாடிய, தன்ஹா தன்ஹா என்ற பாடல் மிகவும் பாராட்டைப் பெற்றதாகும், மேலும் மனதை மிகவும் கவர்ந்த பாடலாகும்.
இதர இசை அமைப்பாளர்களுடன் பாடிய பாடல்கள்[தொகு]
ஒ. பி. நய்யார்
இசை அமைப்பாளர் ஒ. பி. நய்யார் ஆஷா போஸ்லே அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தது பாலிவுட் வரலாற்றின் ஒரு பழங்கதையாகும். ஆஷா அவர்களுக்கு இசை உலகில் முதன்முதலாக ஒரு தனிப்பட்ட இடத்தை உருவாக்கி, ஒரு மதிப்பை பெற்றுத்தந்த இசை அமைப்பாளர் அவராவார். அவர்கள் இருவர் இடையே ஒரு காதல் உறவுமுறை இருந்ததாக பலர் கருதிவந்தனர்.
ஒ. பி. நய்யார் முதன்முதலில் ஆஷாவை 1952 ஆம் ஆண்டில் சம் சமா சம் என்ற பாடலின் இசைப்பதிவு நடக்கும் பொழுது சந்தித்தார்.[9] அவர் ஆஷாவை முதலில் மங்கு (1954)) என்ற படத்தில் பாடுவதற்காக அழைத்தார். சிஐடி (1956) என்ற படத்தின் மூலம் அவர் ஆஷாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பை அளித்தார். இருந்தாலும், நயா தௌர் (1957), என்ற படத்தின் வெற்றிக்குப்பிறகே அவர்கள் இருவரும் மக்களிடையே பிரபலமானார்கள். 1959 ஆண்டிற்குப்பிறகு, ஆஷா அவர்கள் ஒ. பி. நய்யாரிடம் உணர்ச்சிவசப்பட்டும் தொழில்முறையிலும் மையல் கொண்டார்.
ஒ. பி. நய்யார் மற்றும் ஆஷா போஸ்லே இருவரும் ஒரு ஜோடியாக தேன்றல் காற்று போன்ற இதமான மற்றும் சங்கொலியுடன் கூடிய இனிய பாடல்களை அளித்தவர்களாக நம் மனதில் நிலைத்து நிற்கின்றனர். இதற்கான சில நல்ல எடுத்துக்காட்டுகள் மதுபாலாவிற்காக பாடிய பாடல் ஆயியே மேஹெர்பான் (ஹௌரா பிரிட்ஜ் , 1958) மற்றும் மும்தாஜிற்காக பாடிய பாடல் யெஹ் ஹை ரேஷ்மி ஜுல்போன் கா அன்தேரா (மேரே சனம் , 1965). அவர்கள் இருவரும் பல வெற்றிப்பாடல்களை பதிவு செய்தனர் எ.கா. நயா தௌர் (1957), தும்சா நஹின் தேகா (1957), ஹௌரா பிரிட்ஜ் (1958), ஏக் முசாபிர் ஏக் ஹசினா (1962), காஷ்மீர் கி கலி (1964), போன்றவை. சில இதர ஜனரஞ்சகமான பாடல்கள் ஆவோ ஹுஜூர் தும்கோ (கிஸ்மத்), ஜாயியே ஆப் கஹான் (மேரே சனம்) போன்றவை. ஒ. பி. நய்யார் ஆஷா போஸ்லே-முகமது ரபி ஜோடியை அவருடைய மிகவும் பிரபலமான பாடல்களுக்கு பயன்படுத்தினார், அவற்றில் சில உடே ஜப் ஜப் ஜுல்பென் தேரி (நயா தௌர்), மெயின் ப்யார் கா ராஹி ஹூன் (ஏக் முசாபிர் ஏக் ஹசீனா), தீவான ஹுவா பாதல், இஷாரோன் ஹி இஷரோன் மெய்ன் (காஷ்மீர் கி கலி) போன்றவை.
ஒ. பி. நய்யார் இசையில் ஆஷா அவர்கள் கடைசியாக ஒரு பாடலை பிரான் ஜாயே பர் வசன் ந ஜாயே (1974) என்ற படத்திற்காக பதிவுசெய்தார். அவர் தனித்துப்பாடிய சயன் சே என்ற பாடலுக்கு பல விருதுகள் குவிந்தன, ஆனால் அப்பாடல் படத்தில் இடம் பெறவில்லை.
அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 5, 1972 அன்று பிரிந்தார்கள். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கான காரணம் தெளிவாகவில்லை. அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை பற்றி கேட்டதற்கு, ஒ. பி. நய்யார் ஒரு முறை சொன்னது, "எனக்கு ஜோதிஷம் நன்றாகத்தெரியும். ஒரு நாள் அவரிடமிருந்து பிரிவேன் என்று எனக்குத் தெரியும். வேறு எதுவோ கூட ஒன்று நடந்தது, அது என்னை மிகவும் பாதித்தது, அதனால் நான் அவளை விட்டு விட்டேன்."[9] இருந்தாலும், அவர் மேலும் கூறியது "...இப்பொழுது நான் எழுபத்தி ஆறு வயதை அடைந்து விட்டேன், நான் என்ன சொல்லலாம் என்றால் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இடத்தை பெற்ற நபர் ஆஷா போஸ்லே அவர்களே. நான் இது வரை பார்த்த அனைத்து மக்களிலும் அவரே மிக சிறப்பானவர்."
ஆஷா போஸ்லே மற்றும் ஒ. பி. நய்யார் இருவரும் பிரிந்தது மிக கசப்பான சம்பவமாகும், மேலும் அதன் காரணமாக ஆஷா ஒ. பி. நய்யார் அவர்களுக்கு அளிக்கவேண்டிய மரியாதையை அளிக்க தயங்கினார். தி டைம்ஸ் ஒப் இந்தியா என்ற பத்திரிகையில் அவர் அளித்த பேட்டியில் ஒ. பி. நய்யார் அவர்களைப் பற்றிக்குறிப்பிடும் பொழுது, அவர் சொன்னது - "எந்த இசை அமைப்பாளர் என்னை பாட வைத்திருந்தாலும், அந்த நேரத்தில் அந்த இசைக்கு என் குரல் மிகவும் ஏற்றதாக இருந்ததால் மட்டுமே என்னைப்பாட வைத்தார்கள். எந்த ஒரு இசை அமைப்பாளரும் என்னை ஆதரிப்பதற்காக என்னை பாட வைக்கவில்லை."[10] அவருக்கு அவர் வாழ்க்கையில் கிடைத்த முதல் அரிய சந்தர்ப்பத்திற்கு, நயா தௌர் படத்தின் தயாரிப்பாளரான பி. ஆர். சோப்ரா அவர்களே காரணம் என்று கூறுகிறார்.
கய்யாம்
போஸ்லே அவர்களின் திறமையை முதன் முதலில் புரிந்து கொண்ட இன்னொரு இசை அமைப்பாளர் கய்யாம் ஆவார். அவர் ஆஷா போஸ்லே அவர்களை கூட்டாளியாக (கூட்டுனராக) கொண்டது அவரது முதல் படமான பீவி (1948) என்ற படத்திலாகும். கய்யாம் அவருக்கு 1950 ஆண்டுகளில், பல நல்ல சந்தர்ப்பங்களை அளித்தார், அவற்றில் தர்த் மற்றும் பிர் சுபஹ் ஹோகி போன்றவை அடங்கும். ஆனால் இவர்கள் இருவரும் அடங்கிய ஜோடி குறிப்பாக உம்ராவ் ஜான் என்ற படத்திற்காக நினைவு கூரப்படுகிறது.
ரவி
இசை அமைப்பாளரான ரவி அவர்களுக்கு பிடித்த ஒரு பாடகியாக ஆஷா திகழ்ந்தார். அவர் அவருடைய முதல் படமான வசன் (1955) என்ற திரைப்படத்தில் பாடினார். இப்படத்தின் மனத்தைக்கவரும் தாலாட்டுப்பாடலான சந்தாமாமா தூர் கே என்ற பாடல் உடனுக்குடன் அடுத்த நாள் அன்றே இந்தியாவில் வசிக்கும் இளம் அன்னையர்களுக்கு மிகவும் பிடித்த வெற்றிப்பாடலாக அமைந்தது. பல இசை அமைப்பாளர்கள் ஆஷா அவர்களை இரண்டாம் தரம் வாய்ந்த படங்களில் கெட்ட கதாபாத்திரங்கள் மற்றும் வில்லியாக நடிப்பவர்கள் பாடும் பாடல்களை பதிவு செய்வதற்காக பயன்படுத்தி வந்த அக்காலத்தில், ரவி அவர்கள் ஆஷா அவர்களை கரானா , க்ரிஹஸ்தி , காஜல் மற்றும் பூல் அவுர் பத்தர் போன்ற படங்களில் பஜனைப்பாடல்களை பாட வைத்தார். ரவி மற்றும் ஆஷா போஸ்லே ஜோடி இருவரும் இணைந்து பல தரப்பாடல்களைப் பதிவு செய்தனர், அவற்றில் கிஷோர் குமார் அவர்களுடன் பாடிய வேடிக்கையான நையாண்டிப் பாடலான - சி ஏ டி C A T... கேட் மானே பில்லி (தில்லி கா தக்) என்ற பாடலும் அடங்கும். மேலும் பஜனைப் பாடலான தோரா மன் தர்பன் (காஜல்) என்ற பாடல் ஆஷா போஸ்லே பாடிய மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.
மேலும் அவர்களது ஜோடி இணைந்து வக்த் , சௌதுவின் கா சாந் , கும்ராஹ் , பஹு பேடி, சைனா டவுன் , ஆத்மி அவுர் இன்சான் , துந் , ஹம்ராஜ் , மற்றும் காஜல் போன்ற ஜனரஞ்சகமான படங்களில் பல நல்ல பாடல்களை பதிவு செய்தனர். சௌதுவின் கா சாந் படத்தின் பாடலை, ரவி அவர்கள் கீதா தத் (தயாரிப்பாளரான குரு தத் அவர்களின் மனைவி) பாட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அப்பாடலைப்பாட கீதா தத் முன்வராததால், குரு தத் அப்பாடலை ஆஷா போஸ்லே பாட வேண்டும் என கட்டாயப்படுத்தினார்.[5]
சச்சின் தேவ் பர்மன்
பாலிவுட் இசை அமைப்பாளர்களில் மிகவும் புகழ் பெற்ற, சச்சின் தேவ் பர்மன் மற்றும் அவருக்கு மிகவும் பிடித்த பாடகியான, லதா மங்கேஷ்கர், இருவருக்கும் இடையே இடைப்பட்ட 1957 to 1962 ஆண்டுகளில் பிணக்கம் ஏற்பட்டது.[11] இந்த வேளையில், சச்சின் தேவ் பர்மன், ஆஷா போஸ்லே அவர்களை தமது முதன்மை பாடகியாக அங்கீகரித்தார். அவரும் சச்சின் தேவ் பர்மன் அவர்களும் இணைந்து காலா பானி , காலா பாஜார் , இன்சான் ஜாக் உட்டா , லாஜ்வந்தி , சுஜாதா மற்றும் தீன் தேவியான் (1965) போன்ற படங்களில் பல வெற்றிப்பாடல்களை மக்களுக்கு அளித்தனர். 1962 ஆண்டுக்கு பின்னரும் அவர்களுடைய ஜோடி பல வெற்றிப் பாடல்களை பதிவுசெய்தனர். அவற்றில் ஆஷா போஸ்லே முகமது ரபி மற்றும் கிஷோர் குமார் அவர்களுடன் இணைந்துபாடிய பல டூயட் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். அப் கே பரஸ் என்ற பிமல் ராய் அவர்களின் பந்தினி (1963) என்ற படத்திற்கான பாடல் அவரை ஒரு முன்னணிப்பாடகியாக நிலை நிறுத்தியது. ராத் அகேலி ஹை என்ற ஜூவல் தீப் (1967) படத்தின் பாடல், நடிகை தனுஜா நடித்தது, மிகவும் ஜனரஞ்சகமான பாடலாக மக்களால் போற்றப்பட்டது.
ராகுல் தேவ் பர்மன் (பஞ்சம்)
ஆஷா அவர்கள் முதல் முதலில் ராகுல் தேவ் பர்மனை (அல்லது "பஞ்சம்") அவர் இரு குழந்தைகளுக்கு தாயாக இருந்த பொழுது, மேலும் பர்மன் 10 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு இசைப்பயிற்ச்சியில் கவனம் செலுத்த முடிவெடுத்த பொழுது பார்த்தார். அவர்கள் கூட்டுசேர்ந்தது முதன்முதலில் தீஸ்ரி மன்ஜில் (1966) படத்தின் மூலம் அறியப்பட்டது. ஆஷா அவருடன் பல தரப்பட்ட பாடல்களை பாடி பதிவுசெய்தார் - காபெரெ பாடல்கள், ராக் இசை, டிஸ்கோ பாடல்கள், கஜல் பாடல்கள், இந்திய பாரம்பரிய இசை மேலும் இது போன்ற மற்றும் பல.
1970 ஆம் ஆண்டுகளில், ஆஷா போஸ்லே மற்றும் பஞ்சம் இருவரும் சேர்ந்து அளித்த இளமையான மேல்நாட்டு சங்கீதம் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கியது - கேடுகெட்ட காபெரெ பாடலான பியா தூ அப் தொ ஆஜா (காரவான் , 1971, நடிகை ஹெலனுக்காக பாடியது), புரட்சிப்பாடலான தம் மாரோ தம் ( ஹரே ராமா ஹரே கிருஷ்ணா , 1971), இனக்கவர்ச்சியைத் தூண்டும் துனியா மெய்ன் (அப்னா தேஷ் , 1972), காதல் நயம் நிறைந்த சுரா லியா ஹை தும்னே (யாதோன் கி பாராத் , 1973) போன்றவை. மேலும் பஞ்சம் ஆஷா போஸ்லே மற்றும் கிஷோர் குமார் இருவரையும் வைத்து பல வெற்றிப்பாடல்களை அளித்தார் - ஜானே ஜான், டூண்ட்தா பிர் ரஹா (ஜவானி திவானி ), பலி பலி சி ஏக் சூரத் (புட்டா மில் கயா ) போன்றவை.
1980 ஆம் ஆண்டுகளில், பஞ்சம் மற்றும் ஆஷா போஸ்லே மிகவும் நேர்த்தியான பாடல்களை இஜாசத் (1987)- மேரா குச் சாமன் , காலி ஹாத் ஷாம் ஆயி ஹை , கத்ரா கத்ரா போன்ற படங்களுக்கு பதிவு செய்தார்கள். மேலும் அவர்கள் மக்கள் மிகவும் விரும்பிய டூயட் பாடலான ஒ மரியா (சாகர்) பாடலையும் பதிவு செய்தார்கள். மேரா குச் சாமன் , என்ற ஆர்.டி. பர்மன் இசையமைத்த மற்றும் குல்ஜார் அவர்களின் இஜாசத் படப்பாடல் அவருக்கு மிகச்சிறந்த பாடகிக்கான தேசியவிருதை பெற்றுத்தந்தது.
ஆஷா போஸ்லே ஆர் டி பர்மனை "பப்ஸ்" என்று அழைத்து வந்தார். அவர் அவரை 1980 ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இந்த உறவு அவர் உயிர் பிரியும் வரை நீடித்தது.
ஆர்டி பர்மன் ஆஷா அவர்களை வங்கமொழி பாடல்களையும் பாட வைத்தார், அவற்றில் சில மக்களால் மிகவும் போற்றப் பட்டவையாகும், மாதிரிக்கு மொஹுயே ஜோமேச்சே ஆஜ் மௌ கோ ,சோகே சோகே கோதா போலோ சோகே நாமே ப்ரிஷ்டி (வங்க மொழியில் ஜானே க்யா பாத் ஹை), பான்ஷி சுனே கி கோரே தகா ஜாயே, சொந்த்யா பேளே துமி ஆமி, ஆஜ் குண்குண் குண் குஞ்சே அமர் (வங்க மொழியில் ப்யார் தீவானா ஹோதா ஹை), போன்றவை.
இளையராஜா
நிறைந்த தென் இந்திய இசை அமைப்பாளரான இளையராஜா ஆஷா போஸ்லேயின் குரலை 1980 ஆண்டுகளின் முன்பகுதியில் பயன்படுத்தினார், முதல் முதலாக அவர்கள் சேர்ந்தது மூன்றாம் பிறை (1982) என்ற படம் மற்றும் படத்தின் ஹிந்தித் தழுவலான சாத்மா (1983) என்ற படத்திற்காகும். அவர்கள் இருவரும் 1980 மற்றும் 1990 ஆண்டுகள் வரை தொடர்ந்து இணைந்து பணி புரிந்தார்கள். இக்காலங்களில் அவர்களை நினைவு கூரவைக்கும் சில பாடல்களில் செண்பகமே என்ற எங்க ஊரு பாட்டுக்காரன் (1987) தமிழ் பாடலும் அடங்கும். 2000 ஆம் ஆண்டில், ஆஷா அவர்கள் இளையராஜாவின் கருப்பொருள் கொண்ட பாடல் ஒன்றை கமல் ஹாசனின் அரசியல் படமான ஹே ராம் என்ற படத்தில் பாடினார். ஜன்மோன் கி ஜ்வாலா என்ற இப்பாடல் (அல்லது அபர்ணாவின் கருப்பாடல்), ஹரிஹரனுடன் இணைந்துபாடிய ஒரு கஜல் பாணியிலான டூயட் பாடலாகும்.
ஏ.ஆர். ரஹ்மான்
ரங்கீலா (1994) என்ற வெற்றிப்படத்தின் மூலம் ஆஷா போஸ்லே அவர்கள் திரும்பவும் திரைப்படங்களில் பாடவந்ததற்கு ஏ.ஆர். ரஹ்மான் காரணமாவார். தன்ஹா தன்ஹா மற்றும் ரங்கீலா ரே போன்ற பாடல்கள் வெற்றிக்கொடி நாட்டின. அவர் மற்றும் ரஹ்மான் இருவரும் கூட்டாக முஜே ரங் தே (தக்ஷக்), ராதா கைஸே ந ஜலே (லகான், உதித் நாராயணுடன் இணைந்து பாடிய டூயட்), கஹின் ஆக் லகே (தால்), ஓ பன்வாரே (தாவுத், [கே. ஜே. யேசுதாS கே. ஜே. யேசுதாசுடன்) இணைந்து பாடிய டூயட், வெண்ணிலா வெண்ணிலா (இருவர் ,1999) போன்ற பல வெற்றிப்பாடல்களை அளித்தனர். ரஹ்மான் ஒருமுறை கூறியது, "நான் அவர்களுடைய தகுதிக்கு ஏற்றார் போல் நல்ல பாடல்களுக்கு இசை அமைக்கும் பொழுது மட்டுமே நான் அவர்களைப்பற்றி நினைப்பேன் (லதா மற்றும் ஆஷா)".[5]
ஜெயதேவ்
சச்சின் தேவ் பர்மன் அவர்களிடம் உதவியாளராக பணி புரிந்த ஜெயதேவ் தனிப்பட்ட வகையில் இசை அமைக்கத் துவங்கிய பொழுது, அவருடைய சில பாடல்களைப் பாடுவதற்கு ஆஷா அவர்களை பயன்படுத்தினார். அவர்கள் இருவரும் இணைந்து ஹம் தோனோ (1961), முஜே ஜீனே தோ (1963), தோ பூந்த் பானி (1971) மற்றும் இதர படங்களில் பணியாற்றினார்கள். 1971 ஆம் ஆண்டில், இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படம் சாராத எட்டு பக்திப்பாடல்கள் மற்றும் கஜல் வடிவப் பாடல்கள் கொண்ட நீண்ட இசைத்தட்டு ஒன்றை அன் அன்போர்கேட்டபில் ட்ரீட் என்ற பெயரில் வெளியிட்டார்கள். ஆஷா அவர்கள் தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியிலும் கஷ்டங்களை அனுபவித்து வந்த கடுமையான காலத்தில், அவருக்கு கைகொடுத்து உதவிய நெருங்கிய நல்ல நண்பராக ஜெயதேவ் அவர்களை ஆஷா கருதுகிறார். 1987 ஆண்டில் அவருடைய மறைவிற்குப்பிறகு, ஆஷா அவர்கள் பாடுவதற்காக இசை அமைத்த ஆனால் அது வரை வெளிவாராத, ஜெயதேவ் அவர்களால் இசை அமைத்த பாடல்களின் தொகுப்பு ஒன்றை, சுராஞ்சலி என்ற பெயரில் அவர் நினைவிற்கு அஞ்சலி செலுத்தினார்.
ஷங்கர்-ஜெய்கிஷன்
இசை அமைப்பாளர் ஷங்கர்-ஜெய்கிஷன் அவர்களுடன் ஆஷா மிகக்குறைவாகவே பணி புரிந்துள்ளார். இருந்தாலும், இவர்கள் அடங்கிய ஜோடியும் பல வெற்றிப்பாடல்களை அளித்துள்ளன, அவற்றில் நினைவில் நிற்பவை மனதை மயக்கும் பர்தே மெய்ன் ரஹ்னே தோ (ஷிகார் , 1968) போன்றவையாகும். இந்தப்பாடல் ஆஷா அவர்களுக்கு அவருடைய இரண்டாவது பிலிம்ஃபேர் விருதைப் பெற்றுத்தந்தது. ஆஷா ஜிந்தகி ஏக் சபர் ஹை சுஹானா (அந்தாஜ் ) என்ற பாடலை ஷங்கர் ஜெய்கிஷனுக்காகப் பாடினார், அதில் அவர் கிஷோர் குமாரைப்போலவே யோடல் செய்ய முனைந்தார், இதில் கிஷோர் குமார் பாடிய பாடலே நல்ல வரவேற்பை பெற்றது. ராஜ் கபூர், லதா மங்கேஷ்கருடன் பிணக்கத்துடன் இருந்த நாட்களில், அவருக்கு பதிலாக ஆஷா அவர்களை மேரா நாம் ஜோகர் (1970), என்ற படத்தில், ஷங்கர்-ஜெய்கிஷன் இசை அமைப்பில், பாடவைத்தார்.
அனு மாலிக்
இசை அமைப்பாளர் அனு மாலிக் மற்றும் ஆஷா இருவரும் ஜோடியாக பல வெற்றிப்பாடல்களை அளித்துள்ளனர், அவற்றில் அவரது முதல் படமான சோஹ்னி மாஹிவால் (1984) படமும் அடங்கும். அவர்கள் ஜோடியாக அளித்த நல்ல பாடல்களில் பில்ஹால் (பில்ஹால்), கிதாபைன் பஹுத் சி (பாஜிகர் ) மற்றும் இதர பாடல்கள் அடங்கும். ஜப் தில் மிலே (யாதென்) என்ற பாடலுக்கு அனு மாலிக் இசை அமைப்பில் சுக்ஹ்விந்தர் சிங், உதித் நாராயன் மற்றும் சுனிதி சௌஹான் பாடி இருந்த பொழுதும், அப்பாடலில் ஆஷா பாடிய நான்கு வரிகள் எப்பொழுதும் நினைவில் நிற்பவையாகும். அனு மாலிக் அவர்களின் தந்தையான சர்தார் மாலிக் அவர்களுக்காகவும் ஆஷா அவர்கள் 1950 மற்றும் 1960 ஆண்டுகளில் பாடியதுண்டு, அவற்றில் குறிப்பாக சாரங்கா (1960) என்ற படம் நினைவை விட்டு விலகாததாகும்.
இதர இசை அமைப்பாளர்கள்
மதன் மோகன் அவர்களுடனும் ஆஷா பல பாடல்களை பதிவு செய்துள்ளார், அவற்றில் மேரா சாயா என்ற படத்தின் (1966) பிரபலமான நாட்டுப்பாடல் ஜும்கா கிரா ரே பாடலும் அடங்கும். சலில் சௌதுரிக்காக கே.ஜே. ஏசுதாசுடன் சோடி சி பாத் என்ற படத்திற்கு பாடிய ஜானேமன் ஜானேமன் பாடல் மிகவும் புகழ்பெற்றதாகும். 1956 ஆண்டில் ஜாக்தே ரஹோ என்ற படத்திற்காக, டண்டி டண்டி சாவன் கி புகார் என்ற பாடல் சலிலுக்காக ஆஷா பாடியதாகும். ஆஷா அவர்களை ஆதரித்த இன்னொரு இசை அமைப்பாளர் இளம் வயதுடைய இசை அமைப்பாளர் சந்தீப் சௌதா ஆவார், ஆஷா மற்றும் சோனு நிகாம் இருவரும் பாடிய டூயட் பாடலான கம்பக்த் இஷ்க் என்ற பாடல் அவர் இசை அமைத்ததாகும். (ப்யார் துனே க்யா கியா, 2001). இப்பாடல் இந்திய இளம் வயதினரிடம் மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
லதா அவர்களை முழுக்க முழுக்க ஆதரித்த இசை அமைப்பாளர்களான லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால், நௌஷாத், ரவீந்திர ஜெயின், என் தத்தா, ஹேமந்த் குமார் போன்றவர்களிடமும் ஆஷா பாடல்களைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு முறை லதா மற்றும் ஆஷா இவர்களுடைய பாடல்களில் காணப்படும் வேறுபாடுகளைப்பற்றி நௌஷாத் அவர்களிடம் கேட்டதற்கு, "லதா அவர்களிடம் ஒரு சிறிய சிறப்பான அம்சம் உள்ளது, அதில் ஆஷா சிறிது குறைப்படுகிறார் என்று கூறினார்". பிறகு அவர் ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டதாவது, "நான் ஆஷாவைப்பற்றி ஒரு குறுகிய மனம் கொண்டவனாக அந்த வேளையில் இருந்ததால், நான் அவ்வாறு கூறியிருகலாம்" [12] நௌஷாத் அவர்கள், அவருடைய பிற்கால வாழ்க்கையில், அவர் ஆஷா போஸ்லே அவர்களுக்கு தவறு இழைத்து விட்டதாகவும் ஒப்புக்கொண்டார். ஆஷா அவர்கள் பாலிவுட்டின் இதர பிரமுக இசை அமைப்பாளர்களான ஜதின் லலித், பப்பி லஹிரி, கல்யாண்ஜி ஆனந்த்ஜி, உஷா கன்னா, சித்திரகுப்த், மற்றும் ரோஷன் போன்றவர்களுடனும் பணி இயற்றியுள்ளார்.
பாலிவுட் சாராத இசை[தொகு]
மராத்தி இசை[தொகு]
லதா மங்கேஷ்கரைப் போலவே, ஆஷா போஸ்லே அவர்களும் மராத்தி இசைக்காக சமுதாயத்தினர் மிகவும் விரும்பிய பாடகியாவார்.(மராத்தி அவரது தாய்மொழியாகும்). மராத்தி மொழியில் திரைப்படம் சாராத பாவ கீத் எனப்படும் கணக்கற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார், அப்பாடல்கள் புகழ் பெற்ற கவிஞர்கள் இயற்றிய கவிதைகளை சார்ந்ததாகும். ஸ்ரீதர் பாட்கே இசை அமைத்த ருது ஹிரவா ("பச்சை பருவ காலம்") என்ற தொகுப்பு, இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
மராத்தி பாடல்களை விரும்பும் மக்களிடையே, ஆஷாவின் சகோதரரான ஹ்ரிதய்நாத் மங்கேஷ்கர் அவர்கள் இசை அமைத்து ஆஷா அவர்கள் பாடிய பல பாடல்கள் மிகவும் பிரபலமானதாகும். ஹிந்தி மொழியில் இருப்பது போலவே, மராத்தி மொழியிலும் அவர் பலதரப்பட்ட வகைகளில் பாடல்களை பாடியுள்ளார், எடுத்துக்காட்டாக மேற்கத்திய இசை கலந்த ருபேரி வாலுத் ("கடல் மணலில் தென்னை மரங்களுக்கிடையே என்னை வந்து பார்க்கவும்") மற்றும் பாரம்பரிய இசையில் சிக்கலான பாடல்கள் வரை தருண் ஆஹே ராத்ரா ஆஜுனி ("இரவு இன்னும் இளமை கொஞ்சுகிறது") போன்ற பாடல்களை அவர் பாடியுள்ளார். மகாராட்டிர மக்களுக்கிடையே அவர் பாடிய மராத்திய பக்திப் பாடல்கள் மிகவும் பிரபலமடைந்ததாகும். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு பக்தர் மற்றும் கவிஞராக விளங்கிய தியாநேஷ்வர் அவர்களின் காணாதவோ விட்டல்லு போன்ற பக்திப்பாடல்களாகும். அவர் தந்தையான தீனாநாத் மங்கேஷ்கர் அவர்களின் இசைக்கு அவர் பாடிய மராத்தி நாட்ய சங்கீத பாடல்கள் இன்றும் மக்களால் போற்றப்பட்டவையாகும்.
மகாராட்டியர்கள் அவரை அன்புடன் ஆஷாத்தாயி என்று அழைப்பார்கள், மராத்திய மொழியில் தாயி என்பது பெரிய சகோதரியைக் குறிப்பதாகும். அவர் மக்கள் விரும்பிய மற்றும் பிரபலமான அனைத்து விழாக்களிலும் தவறாமல் பங்கேற்கிறார், எடுத்துக் காட்டாக நக்ஷ்த்ராஞ்சே தேனே (மொழிபெயர்ப்பு: நட்ச்சத்திரங்கள் அளித்த பரிசு), ஆப்லி ஆஷா போஸ்லே (மொழிபெயர்ப்பு: உங்களுடைய, ஆஷா போஸ்லே)
தனிப்பட்ட தொகுப்புகள்[தொகு]
ஒரு தனிப்பட்ட அவசரத்தில், புகழ் பெற்ற பாடலாசிரியரான குல்ஜார், இசை அமைப்பாளர், ஆர்.டி. பர்மன் மற்றும் ஆஷா போஸ்லே, மூவரும் இணைந்து 1987 ஆம் ஆண்டில் ஒரு இரட்டை தொகுப்பினை, தில் படோசி ஹை என்ற தலைப்புடன், ஆஷா போஸ்லே அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 8, 1987, அன்று வெளியிட்டார்கள்.[13] 1995 ஆம் ஆண்டில், ஆஷா அவர்கள் ஹிந்துஸ்தானி பாரம்பரியப் பாடல்களை மரபு சார் வழக்களின் படி கற்றுக்கொள்வதற்காக கதா பந்தன் (கையில் நூல் கட்டுவது) என்ற சடங்கில் பங்கேற்று அவர் ஹிந்துஸ்தானி மரபுசார் இசை மேதையான அலி அக்பர் கான் அவர்களிடம் நூலை கட்டிக்கொண்டார் மேலும் மைஹார் கரானா (இந்திய பாரம்பரிய இசைகளை கற்றுக்கொடுக்கும் புகழ்பெற்ற குடும்பத்தில் கற்றுக்கொள்வதற்கான அமைப்பு) எனப்படும் குடும்பத்தின் வழக்கங்களின் படி நடந்து கொண்டார், மரபுசார் முறையில் கான் அவர்களுக்கு அவரது தந்தையான அல்லவுத்தின் கான் (இவர் ரவி ஷங்கர் அவர்களின் குரு ஆவார்) இந்த இசையை கற்றுக் கொடுத்திருந்தார். பிறகு, ஆஷா மற்றும் உஸ்தாத் அலி அக்பர் கான் இருவரும் இணைந்து லேகாசி என்று பெயருடன் கூடிய தனிப்பட்ட தொகுப்பினை வெளியிடுவதற்காக பதினொன்று நிரந்தரமான பாடல்களை (பந்திஷ் என அறியப்படுவது) காலிபோர்னியா வில் பதிவு செய்தார்கள் மேலும் இத்தொகுப்பு அவர்களுக்கு கிராம்மி விருதிற்கான பரிந்துரையை தேடித்தந்தது.
1990 ஆண்டுகளில், ஆஷா அவர்கள் ஆர்.டி. பர்மன் அவர்களின் பாடல்களை மறுகலப்பு செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கய்யாம் உட்பட பலர் அவர் பழம்பெரும் பாடல்களில் குறுக்கிட்டுத் திருத்துவதை கடுமையாக விமரிசனம் செய்தார்கள். அப்படி இருந்தும், ராகுல் அண்ட் ஐ போன்ற தொகுப்புகள் மக்களால் வரவேற்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில், ஆஷா அவர்கள் ஒரு தனிப்பட்ட இந்திபோப் தொகுப்பினை ஜானம் சம்ஜா கரோ என்ற தலைப்புடன் லெஸ்லி லெவிஸ் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார். இந்த தொகுப்பு மிகவும் பிரபலமடைந்தது மற்றும் அவருக்கு பல விருதுகளைப் பெற்றுத்தந்தது, அவற்றில் 1997 ஆண்டின் எம்டிவி விருதும் அடங்கும்.
ஒரு முறை இயக்குனர் பி ஆர் இஷாரா ஆஷா அவர்களை ஒரு படத்தில் இசை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார் ஆனால் அவர் அதை கனிவோடு ஏற்றுக்கொள்ள மறுத்தார். 2002 ஆண்டில், அவர் ஆப் கி ஆஷா , என்ற எட்டு பாடல்கள் கொண்ட இசை மற்றும் விடியோ தொகுப்பினை இசை அமைத்து வெளியிட்டார். இதற்கான பாடல் வரிகளை மஜ்ருஹ் சுல்தான்பூரி அவர்கள் எழுதினார் (அவரது கடைசி படைப்பு) மேலும் ஆஷா அதற்கு இசை அமைத்தார். மும்பையில் மே 21, 2001 அன்று நடந்த ஒரு பெரிய விருந்தில் சச்சின் டெண்டுல்கர் இந்த தொகுப்பை வெளியிட்டார். இந்த தொகுப்பிற்கு பரவலாக இரண்டும் கலந்த விமரிசனம் கிடைத்தது.
பாகிஸ்தான் பாடகரான அட்னான் சாமியின் திறமையை ஆஷா அவர்கள் அவர் 10 வயது சிறுவனாக இருக்கும் பொழுதே கண்டுகொண்டார். அப்பொழுது அவர் ஆர் டி பர்மன் அவர்களுடன் ஒரு நிகழ்ச்சியை லண்டனில் நடத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் அவனிடம் இசையில் தீவிரமாக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டது. அட்னான் வளர்ந்து பெரிய பாடகராக உருவெடுத்ததும், அவருடைய முதல் இசை கதம்பமான கபி தொ நஜர் மிலாவோ என்ற மக்களால் நன்கு வரவேற்கப்பட்ட தொகுப்பிற்காக ஆஷா அவருடன் ஜோடியாக தொகுப்பின் தலைப்புடன் கூடிய டூயட் பாடலைப்பாடினார். அவர்கள் இருவரும் மீண்டும் பர்சே பாதல் என்ற தொகுப்பிற்காக இணைந்து பணியாற்றினர். இந்தத் தொகுப்பானது இந்திய பாரம்பரிய இசை முறையில் இசையமைத்த எட்டு பாடல்களின் இனிய தொகுப்பாகும். அவர் அவருடைய பங்களிப்பாக யுன் ந தி என்ற பாடலை வோமாத் ரிகொர்ட்ஸ் என்ற நிறுவனத்திற்காக அவர்களுடைய வோமாத் பேசும் புத்தகம் நான்காம் புத்தகத்தொகுப்பு:ஆசிய நாடுகளுக்கு ஒரு அறிமுகம் என்ற புத்தகத்தொகுப்பில் பதிவு செய்தார்.
ஆஷா அவர்கள் மெராஜ்-எ-கஜல் , ஆப்ஷர்-எ-கஜல் மற்றும் கஷிஷ் போன்ற பல கஜல் பாடல் தொகுப்புகளை பாடியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் ஆஷா அவர்கள் தனது பெயரிலேயே ஒரு தொகுப்பை, (ஆஷா ), நான்கு கஜல் இசை மேதைகளுக்கு எனது காணிக்கை - மெஹ்தி ஹஸன், குலாம் அலி, பரீதா கானும் மற்றும் ஜக்ஜித் சிங் என்ற தொகுப்பை வெளியிட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்த தொகுப்பு அவருக்கு மிகவும் பிடித்த எட்டு கஜல் பாடல்கள் கொண்டவை, அவற்றில் பாரீதா கானுமின் ஆஜ் ஜானே கி ஜித் ந கரோ , குலாம் அலி அவர்களின் சுப்கே சுப்கே , ஆவர்கி மற்றும் தில் மெய்ன் ஏக் லஹர் , ஜக்ஜித் சிங்கின் ஆஹிஸ்தா ஆஹிஸ்தா மற்றும் மெஹ்தி ஹஸன் அவர்களின் ரஞ்சிஷ் ஹி சஹி , ரப்த ரப்த மற்றும் முஜே தும் நஜர் சே போன்றவை அடங்கும். இப்படிப்பட்ட பாரபரிய கஜல் பாடல்களை நவீன இசைக்கருவிகள் மற்றும் ஒலித்திரட்டுகளைப் பயன்படுத்தி, பண்டித் சொமேஷ் மாதுர் அவர்கள் புதுப்பித்துள்ளார். இந்த தொகுப்பு தற்போதைய இளைய தலைமுறையை குறி வைத்ததாகும், அவர்கள் பாரம்பரிய இசைக் கருவிகளான தப்லா மற்றும் சாரங்கி போன்ற கருவிகளை கேட்பதில் காணப்படும் தயக்கத்தை களைந்து மீண்டும் இப்பாடல்களுக்கு புத்துயிர் ஊட்டுவதற்காகவே அவர் இந்த தொகுப்பினை வெளியிட்டார்.
ஆஷா அவர்கள் பாடிய பல தரப்பட்ட பாடல்கள் வெளிவந்துள்ளது. அவரது 60 தாவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஈஎம்ஐ இந்தியா நிறுவனம் மூன்று இசைத்தட்டுத் தொகுப்புகளை வெளியிட்டன: பலா மெயின் பைராகன் ஹூங்கி (பக்திப் பாடல்கள்), தி கோல்டன் கல்லக்சன் மறக்க முடியாத கஜல் பாடல்கள் (திரைப்படம் அல்லாத)குலாம் அலி,ஆர் டி பர்மன் மற்றும் நாசர் ஹுசைன் வழங்கிய கஜல் பாடல்கள்), மற்றும் தி கோல்டன் கல்லக்சன்: தி எவர் வெர்சடைல் ஆஷா போஸ்லே (44 பெயர்பெற்ற திரைப்பட பாடல்களின் தொகுப்பு).
2006 ஆண்டில், அவர் ஆஷா அண்ட் பிரெண்ட்ஸ் என்ற தொகுப்பை வெளியிட்டார், அதில் அவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் டூயட் பாடல்களை இணைந்து பாடினார், அவரில் சிலர் சஞ்சய் தத் மற்றும் ஊர்மிளா மட்டனத்கர் மேலும் புகழ் பெற்ற துடுப்பாட்ட பந்து வீச்சாளர் ப்ரெட் லீ, அவருடன் அவர் யு ஆர் தி ஒன் போர் மீ என்ற பாடலைப் பாடினார் (ஹான் மெயின் தும்ஹாரா ஹூன் ). இப்பாடல்கள் அனைத்திற்கும் ஷாமீர் தாண்டன் அவர்கள் இசை அமைத்துள்ளார் மற்றும் பத்திரிகையாளராக இருந்து இயக்குனராக மாறிய எஸ். ராமச்சந்திரன் அவர்கள் இத்தொகுப்பினை விடியோ தட்டுக்களில் பதிவு செய்துள்ளார்.
வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் மற்றும் வல்லுனர்களுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சிகள்[தொகு]
த பயணங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் காரணமாக, ஆஷா அவர்களின் உடல் நலம் குன்றியது, பெருங்குடல் அழற்சியுடன் ஜூரம், சளி மற்றும் உடல் சோர்வினால் பாதிக்கப்பட்டார். ஸ்டோக்ஹோல்ம் நகரத்தில் ஒரு அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது, ஆஷாஜியின் உடல் நலக்குறைவு பற்றி பேசப்பட்டது, அதில் ஆஷாவின் மகன் (மற்றும் மேலாளர்) ஆனந்த் மற்றும் நிகழ்ச்சியை வழங்கும் பங்களிப்போர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் பொழுது, இசைக்குழு இசைக்கருவிகள் கொண்1980 மற்றும் 1900 இடைப்பெட்ட ஆண்டுகளில், ஆஷா அவர்கள் உலகப்பயணம் மேற்கொண்டார், மேலும் கனடா, துபாய், ஐக்கிய பேரரசு, அமெரிக்கா மற்றும் பல இதர நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். 1989 ஆம் ஆண்டில், உலக சுற்றுப் பயணத்தின் பொழுது, அவர் 20 நாட்களில் 13 அமெரிக்க நகரங்களில் பாடினார். இது முடிந்த உடனேயே, முன்னதாகவே அனைத்து இருக்கைகளும் முழுமையாக பதிவு செய்யப்பட ஸ்வீடன் நாட்டு ஸ்டோக்ஹோல்ம் நகரத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. அயராடு பல பாடல்களை வாசிப்பதாகவும், கூடவே வந்துள்ள சுரேஷ் வாத்கர் போன்ற பாடகிகள் நிறைய பாடல்களை பாடுவதாகவும், மேலும் ஆஷாஜி ஒரு சிறு காட்சியில் வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் ஆஷாஜி அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை, மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குரல் தடுமாறினாலும், மிகவும் கஷ்டப்பட்டு பாடினார். அவர் பாடிய முதல் ஆறு பாலிவுட் பாடல்களுக்கு பார்வையாளர்களிடையே நினைத்தபடியான வரவேற்பு கிடைக்கவில்லை, மேலும் அங்கு குழுமியிருந்த பார்வையாளர்கள் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவர்களாக இருந்தனர். இரண்டாவது முறை அவர் பாடல்களை பாட வருவதற்கு முன், ஒரு விசிறி அவரிடம் ஒரு மராத்தி பாடலை பாடும் படி கேட்டுக்கொண்டார். ஆஷா அவர்களும் அவருடைய விருப்பத்திற்கிணங்கி, நாச் -நாசுனி அதி மி டமாலே ("நான் இந்த அந்தமில்லா ஆட்டத்தின் காரணமாக சோர்வுற்றேன்") என்ற வகையிலான பாடலைப் பாடினார். பாடல் முடிந்த உடன், திரைஅரங்கமே கரகோஷத்தால் ஆர்ப்பரித்து மக்கள் நிகழ்ச்சியில் ஆர்வத்துடனும் மிகவும் குதூகலத்துடனும் பங்கேற்க தொடங்கினர். இந்த நிகழ்ச்சிக்குப்பின்னர். ஆஷாஜி ஒரு மாதத்திற்கு ஒய்வெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டார், அவர் உடல் நிலை மிகையான உணர்ச்சிகளால் பாதிப்படைந்து காணப்பட்டது. அக்டோபர் 2002 இல், அவர் சுதேஷ் போஸ்லே மற்றும் இதர பாடகர்களுடன், லண்டனில், ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார் மேலும் அந்நிகழ்ச்சியில் வசூலான பணத்தை "முதியோர்களை உதவுவதற்காக" என்ற அமைப்பிற்கு வழங்கினார். 2007 ஆண்டில், அவர்களுடைய இசைக்குழு "தி இன்க்ரெடிபிள்ஸ்" என்ற பெயரில் பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா, கானடா மற்றும் மேற்கத்திய தீவுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்தப்பயணத்தின் பொழுது, அவருடன் சோணு நிகாம், குணால் கன்ஜாவாலா மற்றும் கைலாஷ் க்ஹெர் போன்ற பாடகர்கள் அவருடன் சென்றனர். முதலில் 12 இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மேற்கொண்ட இந்தப்பயணம், முடிவில் 20 நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியதாக தீர்ந்தது.
1980 ஆண்டின் பிற்பகுதியில், ஆஷா அவர்கள் பாய் ஜார்ஜ் மற்றும் ச்டீபான் லாச்கொம்ப் அவர்களுடன் இணைந்து பாடல்களைப் பாடினார் (பௌ டௌன் மிஸ்டர் ) 1997 ஆண்டில், அவருடைய 64 ஆவது வயதில், பாய் பான்ட் என்ற கோட் ரெட் குழுவினருடன் இணைந்து காதல் பாட்டு ஒன்றை பாடினார். மேலும் அவர் மைகேல் ஸ்ட்டைப் என்பவருடன் பதிவு செய்த பாடலான தி வே யு ட்ரீம் (ஒன் ஜையண்ட் லீப்,[1]), ஆங்கிலப்படமான புல்லெட்ப்ரூப் மோன்கில் பயன்படுத்தப்பட்டது.
1997 ஆண்டில், பிரிட்டிஷ் இசைக்குழுவான கோர்ணர்ஷாப் ஆஷா அவர்களை கவுரவிக்கும் வகையில் ப்ரிம்புள் ஓப் ஆஷா என்ற ஒரு தொகுப்பினை வெளியிட்டனர், அது உலக அளவில் வெற்றியை தேடித்தந்தது மேலும் அதில் வரும் பாடல்கள் பாட்பாய் ஸ்லிம் என்பவரால் மீண்டும் 'மறுகலப்பு' 'மறுகலவை' செய்யப்பட்டது. 2001 ஆண்டில், நெல்லி புர்டடோ அவர்களின் "ஐயாம் லைக் எ பேர்ட்" என்ற தனிநபர் பாடல்தொகுப்பு சிடியில், டிஜிடல் கட்டப் லௌஞ் குழுவினரின் "நெல்லிக்கு எதிராக ஆஷாவின் மறுகலவை" கூட சேர்க்கப்பட்டு இருந்தது.
2002 ஆம் ஆண்டில், அவர் மைகேல் ஸ்டைப்புடன் 1 ஜையண்ட் லீப் என்ற தொகுப்பிற்காக "தி வே யு ட்ரீம்" என்ற பாடலின் காட்சிகளில் தோன்றினார்.
2003 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஒபேரா போப் பாடகியான சாராஹ் ப்ரைட்மான் ஆஷா அவர்களின் பாடலான "தில் சீஜ் கயா ஹை" என்ற பாடலை அவருடைய ஹாரம் என்ற தொகுப்பில் பயன்படுத்திப்பார்த்தார். அவரது பாடலான "யு டேக் மை ப்ரெத் அவே" என்ற தொகுப்பில் அப்பாடலை அறிமுகப்பாடலாக வெளியிட்டார்.
2005 ஆண்டில் அமெரிக்காவில் நால்வர் அடங்கிய ஸ்ட்ரிங் குழுவினர் ஆகிய க்ரோநோஸ் க்வார்டெட் ஆர் டி பர்மன் அவர்களின் வெற்றிப்பாடல்களை மீண்டும் ஆஷா அவர்களைக் கொண்டு பாட வைத்தனர், அவற்றில் சுரா லியா , பியா தூ , மேரா குச் சாமன் போன்றவை அடங்கும். அவரது முதுமையிலும் (அப்போது அவர் 70 வயதையும் தாண்டி விட்டார்), அவர் ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு பாடல்களை பதிவு செய்தது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஆகஸ்ட் 23, 2005, அன்று யு ஹாவ் ஸ்டோலென் மை ஹார்ட் - ஆர் டி பர்மன் அவர்களின் பாலிவுட் திரை இசைக் கதம்பம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் இந்தத் தொகுப்பு "மிகவும் சிறந்த நவீன உலகளாவிய இசை தொகுப்பு" என்ற பகுப்பில் கிராம்மி விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு முன்னர், 1990 ஆண்டுகளில், இந்த நாலவர் அடங்கிய க்ரோநோஸ் க்வார்டேட்குழுவின் அங்கத்தினரான டேவிட் ஹாரிங்டன் என்பவரை ஒரு நண்பன் ஆஜ் கி ராத் என்ற இனிமையான பாடலுக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஹாரிங்டன் அப்பாடலில் மயங்கி விட்டார் மேலும் அப்பாடல் க்ரோநோஸ் கேரவன் என்ற தொகுப்பில் இடம்பெற்றது.
மேலும் 2005 ஆம் ஆண்டில், தி ப்ளாக் ஐய்ட் பீஸ் என்ற இசைக்குழு "ஏ நவ் ஜவான் சப் குச் யஹான்" (அபராத் , 1972) மற்றும் "யஹ் மேரா தில் ப்யார் கா தீவானா" (டான் , 1978) போன்ற பாடல்களைத் தழுவி அவர்களுடைய வெற்றி பெற்ற இசைத்தொகுப்பான "டோன்ட் புங் வித் மை ஹார்ட்" இசைத்தட்டில் பயன்படுத்தினர். 2006 ஆண்டு இறுதியில் ஆஷா அவர்கள் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளரான ப்ரேட் லீ யுடன் இணைந்து பணியாற்றினார். யு ஆர் தி ஒன் போர் மீ என்ற அறிமுகப்பாடல் மக்களிடையே 4 இடத்தை விருப்பதேர்வில் பிடித்து, இரண்டாம் இடத்திற்கு நாளடைவில் நகர்ந்தது.
2006 ஆம் ஆண்டில், ஆஷா போஸ்லே பாகிஸ்தான் நாட்டு திரைப்படமான மெய்ன் ஏக் தின் லவுட் கே ஆவூங்கா என்ற படத்திற்காக ஒரு பாடலைப்பதிவு செய்தார். அவர் புகழ் பெற்ற பாகிஸ்தானி போப் பாடகரான ஜவாத் அஹ்மதுடன் இணைந்து தில் கி தார் பஜே என்ற பாடலைப்பாடினார். அந்தப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அப்பாடல் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது மேலும் அதனால் அப்பாடல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றது, மேலும் முதன்மை பெற்ற விருப்ப பாடல்களில் ஒன்றாக திகழ்ந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
ஆஷா அவர்களின் இல்லம் தெற்கு மும்பையில் உள்ள பெத்தர் சாலையிலுள்ள பிரபுகுஞ் அபார்ட்மென்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அவருக்கு மூன்று குழந்தைகள் மற்றும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளார்கள். அவருடைய மூன்று குழந்தைகளில் மூத்தவர் ஹேமந்த் போஸ்லே ஆவார், (ஹேமந்த் குமார் என்ற அடிப்படையில் பெயர் கொண்டவர்), அவரது முந்தைய வருடங்களை ஒரு வானூர்தி ஓட்டுனராக இருந்து ஒரு இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என்பதற்காக வேலையை விட்டுவிலகி வந்தவராவர். ஆஷாவின் மகள் வர்ஷா, ஹேமந்தை விட சிறியவர், தி சண்டே அப்செர்வர் மற்றும் ரிடிப்ப் போன்ற நிறுவனங்களில் பத்திரிகையாளராக பணிபுரிந்தவர் ஆவார். மிகவும் சிறிய குழந்தை ஆனந்த போஸ்லே ஆவார், அவர் வணிகம் மற்றும் படத்தயாரிப்பு போன்ற துறைகளில் படித்தவராவர். அவரே ஆஷாவின் வாழ்க்கைத் துறையை கவனித்து வருகிறார். அவருடைய பேரனான சைதன்யா (சிந்து) போஸ்லே (ஹேமந்தின் மகன்) கூட இசை உலகத்தில் பயணம் செய்பவராவார், அவர் ஒரு நன்கு செயல்படும் பாய் பான்ட் எனப்படும் ஆண்பிள்ளைகளின் இசைக்குழுவின் ஒரு உறுப்பினராவார். அவரது பேத்தியான அன்னிகா போஸ்லே (ஹேமந்தின் மகள்) ஒரு நல்ல படம் பிடிப்பவராக உருவாகி வருகிறார். அவருடைய சகோதரிகளான லதா மற்றும் உஷா மங்கேஷ்கர் இருவருமே பின்னணிப்பாடகிகள் ஆவார்கள். அவரது இதர இரு உறவினர்கள், சகோதரி மீனா மங்கேஷ்கர் மற்றும் சகோதரன் ஹ்ரிதயநாத் மங்கேஷ்கர் இருவரும் இசை அமைப்பாளர்களாவார்கள்.
ஆஷாவுக்கு நன்றாக சமைக்கத்தெரியும் மேலும் சமைப்பது அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். பாலிவுட் பிரபலங்கள் அவரிடம் அடிக்கடி கடை கோஸ்த் மற்றும் பிரியாணி போன்றவை வேண்டும் எனக்கேட்பார்கள் மேலும் அவரும் முகம் சுளிக்காமல் அவற்றை செய்து அவர்களுக்கு அனுப்பிவைப்பார். ஒரு முறை, அவர் டைம்ஸ் ஒப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், அவர் பாடகியாக வந்திருக்காவிட்டால் என்ன செய்திருப்பார் என்ற கேள்விக்கு தான் "ஒரு சமையல் காரியாக பணி புரிந்திருப்பேன் என்று பதிலளித்தார். நான் நான்கு வீடுகளுக்கு சமைத்துப்போட்டு பணம் சம்பாதித்திருப்பேன்."
ஆஷா ஒரு உணவகத்தை வெற்றிகரமாக நடத்துபவராவார் மேலும் துபாய் மற்றும் குவைத்தில் ஆஷா என்ற பெயரிலான உணவகத்தை நடத்தி வருகிறார். ஆஷாவின் உணவகங்களில் பாரம்பரியமான வட-மேற்கு இந்திய உணவு வகைகள் கிடைக்கும் . அவரது உணவகங்கள் துபாயில் வாபி நகர மேம்பாட்டு திட்ட வட்டாரங்களிலும் மற்றும் குவைத்தில் இரு இடங்களில், அதாவது தி அவேன்யூஸ் மாள் மற்றும் தி மரீனா மாளில் இடம் பெற்றுள்ளன. ஆஷா போஸ்லே அவர்களுக்கு இந்த வணிகங்களில் 20% பங்கு உண்டு. ஆஷா அவர்கள் இந்த உணவகங்களை நேருக்கு நேர் மேற்பார்வை இடுவதில்லை, அதனை வாபி குழுவினர் கவனித்துக் கொள்கின்றனர். அவர் உணவகத்தின் சமையல், அடுக்களையின் தோற்றம் மற்றும் உணவகத்தின் தோற்றம் / அலங்காரம் போன்றவைகளை கவனித்துக் கொள்கிறார். அவரே தனிப்பட்ட முறையில் சமையல்காரர்களுக்கு ஆறு மாதத்திற்கும் மேல் பயிற்சி அளித்துள்ளார். மெனு மேகசின் என்ற இதழில் வந்த டிசம்பர் 2004 ஆம் ஆண்டின் குறிப்பின் படி,[14] ரஸ்ஸல் ஸ்காட் என்பவர், முந்தைய ஹார்ரி ராம்ச்தென்னிடம் பணி புரிந்தவர் (மீன்கள் மற்றும் வறுவல்களுக்கான சங்கிலித்தொடர் உணவகங்களின் தலைவராக இருந்தவர்), ஆஷா அவர்களின் வணிகச்சின்னத்தை பயன்படுத்துவதற்கான உரிமங்களை வாங்கி வரும் ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய பேரரசு நாடுகளில் 40க்கும் மேற்ப்பட்ட உணவக சங்கிலித்தொடர்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளார். ஆஷா அவர்களின் சங்கலித்தொடர் உணவகங்களுக்கு மேலும் ஒரு பங்காக, ஆஷாத்தாய் அவர்கள் ஐக்கிய பேரரசில் உள்ள பர்மிங்காமில் ஓர் புதிய உணவகத்தை அண்மையில் நிறுவியுள்ளார்.
ஆஷா அவர்கள் விரும்பி அணியும் உடைகளானவை அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளை நிறச்சேலை, மற்றும் கழுத்தில் முத்துமாலை மற்றும் வைரங்களால் ஆன இதர அணிகலன்கள். க்ரோநோஸ் க்வார்டெட் குழுவை சார்ந்த ஹார்ரிங்க்டன் சொன்னது "நான் முதல் முறை ஆஷா ஜி யைப்பார்த்த பொழுது, அவர் மிகவும் அழகான சேலை அணிந்திருந்தார் மேலும் வைரங்களில் ஜொலித்தார் மற்றும் அரச பரம்பரையினரைப் போல காட்சி அளித்தார். பிறகு நான் அவர்களுடைய கால்களை பார்த்தேன் மேலும் அவர் அப்பொழுது கால்களில் டென்னிஸ் காலணிகள் அணிந்திருந்தார்! அப்பொழுதே நான் அந்தப் பெண்ணை மிகவும் நேசிப்பதாக நினைத்தேன்."
ஆஷா அவர்கள் மற்றவர்களைப் போல் பாசாங்கு செய்வதிலும் வல்லவராவார். துபாயில் ஏப்ரல் 22, 2004 அன்று உலக வர்த்தக நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர் கபி தொ நஜர் மிலாவோ என்ற பாடலை நூர் ஜஹான், லதா மங்கேஷ்கர் மற்றும் குலாம் அலி அவர்களின் குரல்களில் மாற்றியமைத்து பாடிக்காட்டினார்.
இப்பொழுதெல்லாம், அவர் தமது உணவகங்களில் பணி புரியாத நேரங்களில், அவரது சொந்த வரலாற்றை எழுதுவதில் முனைந்திருக்கிறார்.
லதா மங்கேஷ்கருடன் ஆன இனிய போட்டி[தொகு]
ஆஷா அவர்கள் அவரது சகோதரியான லதா மங்கேஷ்கருடன் கொண்டிருந்த உடன் பிறந்தவர்களுடன் கூடிய போட்டி மனப்பான்மை பற்றி அடிக்கடி பேசப்படுவதுண்டு ஆனால் அவர்கள் அதை வெறும் கட்டுக்கதைகளாக எப்பொழுதும் மறுத்து வந்துள்ளனர்.[10] சிறுமிகளாக இருக்கும் பொழுது, அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். குழந்தையாக இருக்கும் பொழுது, லதா அவர்கள் ஆஷாவை எப்பொழுதும் தமது கைகளில் சுமந்து கொண்டு சென்று வந்தார். அவர்கள் இருவரும் மிகவும் இணைபிரியாமல் இருந்து வந்தார்கள் மேலும் லதா அவர்கள் பள்ளிக்கு செல்லும் பொழுதும், அவர் ஆஷாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்று வந்தார், ஆனால் ஒரு நாள் அவர்களுடைய ஆசிரியர் அப்படி செய்வதை எதிர்த்தார் மேலும் ஒரே கட்டணத்தில் இருவர் பள்ளிக்கூடத்தில் படிக்க இயலாது என்று வாதாடினார். லதா அவர்கள் ஆஷாஜி இல்லாமல் பள்ளிக்கு திரும்பி வருவதை விரும்பவில்லை மேலும் அவர் அப்படியே தமது படிப்பை நிறுத்தி விட்டார்.[15]
ஒரு நாள் ஆஷா அவர்கள் தமது காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதை லதா அவர்கள் பொறுப்பில்லாத செயல் என்று கண்டித்தார், அதனால் அவர்களுடைய குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக தனியாக அவரே திரைப்படங்களில் பாடி சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இதனால் அவர்களுக்கிடையே ஓர் பனிப்போர் வலுத்தது. இதனை ஆஷா அவர்களே ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார்[15] -"அது ஒரு காதல் திருமணம் மற்றும் லதா அக்காள் (பெரிய சகோதரி) நிறைய நாட்களுக்கு என்னிடம் பேசமுன்வரவில்லை. அவர் நாங்கள் மணம்புரிந்துகொண்டதை ஏற்றுக்கொள்ளவில்லை." ஒரு சமயத்தில், அவர்கள் இருவரிடையே இருந்த உறவு மிகவும் பகமை கொண்டதாக இருந்தது மேலும் பல நேரங்களில் அவர்கள் பேசுவதையும் தவிர்த்து வந்தனர்.
திரைப்படத்துறையில் பணி புரிந்த துவக்க நாட்களில், ஆஷா அவர்கள் எப்பொழுதும் தமது மூத்த சகோதரிக்கு மிகவும் மரியாதை செலுத்தி வந்தார். ஒ. பி. நய்யாருடன் ஆஷா அவர்கள் கொண்டிருந்த உறவை ஒரு முறை லதா அவர்கள் விமரிசனம் செய்ததாக சிலர் கூறுகின்றனர். இது இந்த இரு சகோதரிகளுக்கிடையே நிலவி வந்த பிளவை மேலும் விரிவடைய செய்தது மற்றும் ஒ. பி. நய்யார் அதற்குப்பிறகு லதாவுடன் பணியில் ஈடுபடப்போவதில்லை என்று தீர்மானம் செய்தார். ஒ. பி. நய்யார் ஒரு முறை தெரிவித்தது — "ஆஷா மற்றும் லதா இருவரும் மும்பையில் உள்ள பெத்தார் சாலையில் உள்ள ஒரே குடியிருப்பில், ஒன்றோடொன்று எதிரில் உள்ள வீடுகளில் வசித்து வந்தனர் மற்றும் இருவருக்கும் ஒரே வேலைக்காரி வீட்டு வேலைகளை செய்து வந்தார். இப்பொழுது இந்த வீட்டு வேலைக்காரி அங்கிருந்து வந்து இளம் சகோதரியிடம் லதா இப்போது தான் ஒரு நல்ல பாடலை பதிவு செய்து விட்டு வந்தார் என்று சொன்னால் போதும், வீட்டில் ஆஷாவின் குரல் தொய்ந்துபோய்விடும். அவர் லதாவிடம் மிகவும் பயம் கொண்டிருந்ததால், ஆஷா அவர்களிடமும் ஒரு தனிப்பட்ட கவர்ச்சிகரமான குரலோசை இருப்பதை புரிய வைத்து அதனை மேம்படுத்த பல மாதங்கள் எடுத்துக் கொண்டன."[12] ஆஷா அவர்களே லதாவின் குரலுக்கு வேறுபட்ட மற்றும் தனிப்பட்ட விதத்தில் அக்குரலை வெளிப்படுத்தும் ஒரு நயத்தை உருவாக்கிட, அவர் பல வருடங்கள் கடும் முயற்சி எடுத்துக் கொண்டதாகவும், அவளுடைய நிழலில் வாழாமல், அவருக்கான தனிப்பட்ட பாணியை உருவாக்க பாடுபட்டதாகவும் தெரிவித்தார்.[15]
ஆஷா மற்றும் லதா இருவரும் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து முதல் முதலில் பாடிய பாடல் தாமன் (1951)[12] என்ற படத்திற்காகும். இவற்றில் சில எடுத்துக்காட்டு மன் பாவன் கே கர் ஆயே (சோரி சோரி , 1956), சாகி ரி சுன் போலே பபிஹா உஸ் பார் (மிஸ் மேரி, 1957), ஒ சாந்த் ஜஹான் வோ ஜாயே (சாரதா , 1957), மேரே மெஹபூப் மெய்ன் கயா நஹின் (மேரே மெஹபூப் , 1963), ஐ காஷ் கிஸி தீவானே கோ (ஆயே தின் பஹார் கே , 1966), மெயின் சலி மெயின் சலி (படோசன் , 1968), சாப் திலக் சப் (மெயின் துளசி தேரே ஆங்கன் கி , 1978), மற்றும் மன் க்யூன் பெஹ்கா (உத்சவ் , 1984). பாடும்பொழுது, லதா அவர்கள் அவரது நோட்டு புத்தகத்தை அவரது வலது கரத்தில் பிடித்தார் மற்றும் ஆஷாஜி அவர்கள் அவரது புத்தகத்தை இடது கரத்தில் பிடித்தார். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், லதா அவரது முகத்தை ஆஷாவிடம் இருந்து அகற்றி தூரத்தில் வைத்துக்கொண்டார், அதனால் ஒருவரை ஒருவர் முன்பே அறிந்துகொண்டு செயல்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.[15]
சாஸ் என்ற திரைப்படம், லதா மற்றும் ஆஷா அவர்களுக்கிடையே நிலவி வந்த போட்டி மனப்பான்மையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகும்.[16] இந்தப்படத்தைப்பற்றி ஆஷா அவர்கள் குறிப்பிட்டது - " இரு நீண்ட தலைமுடிகளுடன் கூடிய இரு பெண்களை சித்தரிப்பதற்கு, ஒரு சில நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு அதையே மூன்று மணி நேர நீண்ட திரைப்படமாக மிகைப்படுத்தி காட்டுவது நேரத்தை வீணடிப்பதாகும்"[15] கடந்த சில ஆண்டுகளாக, ஆஷா மற்றும் லதா இருவரும் அடிக்கடி மக்களுக்கு முன்னால் பல நிகழ்ச்சிகளில் சேர்ந்து காட்சி தருகின்றனர், இருவரும் சேர்ந்து இருப்பதை அவர்கள் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது. தி டைம்ஸ் ஒப் இந்தியா என்ற பத்திரிகைக்கு ஆஷா அளித்த பேட்டியில் அவர் ஒருமுறை கூறியது - "சில நேரங்களில் நாங்கள் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு வரும் பொழுது, சில துறையை சார்ந்த மாதிரிகள் தமது விசுவாசத்தை வெளிப்படுத்த என்னை ஒதுக்கிவிட்டு மற்றவரிடம் மட்டும் சிரித்துப் பேசுவதை, நான் இன்றும் ஞாபகம் வைத்துள்ளேன்." பிறகு, நானும் என் அக்காவும் (மூத்த சகோதரி) அதை நினைத்து நினைத்து சிரிப்போம்!"
புகழ் பெற்ற பாலிவுட் பாடலாசிரியர்-படத்தயாரிப்பாளர் ஆன குல்ஜார் ஒரு முறை கூறியது – "விண்வெளியில் சந்திரனை தொட்ட ராக்கெட்டைப்போலவே ஆஷா வந்து நீல் ஆர்ம்ஸ்ட்றோங்கின் துணைவனாவார். லதாஜி சந்திரனை தொட்ட பிறகு, சந்திரனைத்தொட இயலும் இரண்டாம் பயணி ஆஷாஜியாகத்தான் இருக்க முடியும்."
விருதுகள்[தொகு]
பிலிம்ஃபேர் விருதுகள்
ஆஷா போஸ்லே அவர்களுக்கு மொத்தமாக கிடைத்த 18 பரிந்துரைகளில், அவர் ஏழு முறை பிலிம்ஃபேரின் மிகச்சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதுகளைவென்றுள்ளார்.[17] அவர் அவருடைய முதல் இரு விருதுகளை 1967 மற்றும் 1968, ஆண்டுகளில் பெற்றார், அப்பொழுது லதா மங்கேஷ்கரும் விருதுகள் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவராக இருந்தார் (1969 ஆண்டிற்குப்பிறகு, புதிய பாடகிகளை கண்டறிவதற்காக, லதா மங்கேஷ்கர் தம்மை விருதுகளுக்காக பரிந்துரைப்பதிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்). 1979ஆண்டில் விருதுகளைப்பெற்றபிறகு, போஸ்லே அவர்களும் தமது சகோதரியைப்போலவே தமது பெயரையும் விருதுகள் பெற தகுதி பெற்ற பட்டியலில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்படி இருந்தும், இது வரை அடிக்கடி இந்த் விருதைப் பெற்ற பாடகிகளில் அதிகம் விருதுகளை பெற்றவராக, அல்கா யக்னிக்குக்கு இணையாக ஆஷா அவர்கள் உள்ளார்கள். அதற்குப்பிறகு அவருக்கு ரங்கீலா படத்திற்காக 1996 ஆண்டில் சிறப்பு விருது வழங்கப்பெற்றார்.மேலும் 2001 ஆண்டில் பிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது ம் கிடைக்கப்பெற்றார். அவருக்கு கிடைத்த பிலிம்ஃபேர் விருதுகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பிலிம்ஃபேர் மிகச்சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருது:
1968: "கரிபோன் கி சுனோ" (தஸ் லாக் , 1966)
1969: "பர்தே மெய்ன் ரஹ்னே தோ" (ஷிகார் , 1968)
1972: "பியா தூ அப் தொ ஆஜா" (காரவான் , 1971)
1973: "தம் மாரோ தம்" (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா , 1972)
1974: "ஹோனே லகி ஹைன் ராத்" (நைனா , 1973)
1975: "சயன் சே ஹம்கோ கபி" (பிரான் ஜாயே பர் வசன் ந ஜாயே , 1974)
1979: "யெஹ் மேரா தில்" (டான் , 1978)
இதர விருதுகள்
1996 - சிறப்பு விருது (ரங்கீலா , 1995)
2008 - பிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
தேசிய சினிமா விருதுகள்
ஆஷா அவர்கள் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை இருமுறை வென்றிருக்கிறார்:
1981: தில் சீஜ் க்யா ஹை (உம்ராவ் ஜான் )
1986: மேரா குச் சமான் (இஜாசத் )
இதர விருதுகள்
ஆஷா அவர்கள் பல இதர விருதுகளையும் வென்றுள்ளார், அவற்றில் சில:
1987: நைட்டிங்கேல் ஓப் ஆசியா விருது (இந்தோ–பாக் அச்சொசியேசன், ஐக்கியப் பேரரசு).[17]
1989: லதா மங்கேஷ்கர் விருது (மத்தியப் பிரதேச) அரசு [17]
1997: ஸ்க்ரீன் வீடியோகோன் விருது (ஜானம் சமஜா கரோ ) என்ற தொகுப்பிற்காக.[17]
1997: எம்டிவி விருது (ஜானம் சமஜா கரோ) என்ற தொகுப்பிற்காக.[17]
1997: சேனல் V விருது (ஜானம் சமஜா கரோ) என்ற தொகுப்பிற்காக.[17]
1998: தயாவதி மோதி விருது.[18]
1999: லதா மங்கேஷ்கர் விருது (மகாராட்டிரா அரசு விருது) )
2000: இந்த நூற்றாண்டின் சிறந்த பாடகி (துபாய்).
2000: ஜீ கோல்ட் பாலிவுட் விருது (தக்ஷக் படத்திலிருந்து முஜே ரங் தே ).
2001: எம்டிவி விருது (கம்பக்த் இஷ்க் படத்திற்காக).
2002: பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது (ஐக்கிய பேரரசு முதல்வர் டோனி ப்ளைர்அவர்களால் வழங்கப்பட்டது).
2002: ஜீ சினே விருது சிறந்த பெண் பின்னணிப் பாடகி க்காக (லகான் என்ற படத்திலிருந்து ராதா கைஸே ந ஜலே என்ற பாடலுக்காக).
2002: ஜீ சினே சிறப்பு விருது, ஹால் ஓப் பேமுக்காக.
2002: ஸ்க்ரீன் வீடியோகோன் விருது (லகான் என்ற படத்திலிருந்து ராதா கைஸே ந ஜலே என்ற பாடலுக்காக).
2002: சான்சூய் திரைப்பட விருது (லகான் என்ற படத்திலிருந்து ராதா கைஸே ந ஜலே என்ற பாடலுக்காக).
2003: ஸ்வராலயா யேசுதாஸ் விருது இந்திய பரம்பரை இசைக்கு அளித்த பங்கீடை போற்றுவதற்காக விருது [17]
2004: லிவிங் லெஜென்ட் விருது பெடரேசன் ஓப் இந்தியன் சேம்பர் ஓப் காம்மேர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி.[19]
2005: எம்டிவி இம்மீஸ், சிறந்த பெண் போப் நடிப்பு ஆஜ் ஜானே கி ஜித் ந கரோ .[20]
2005: மிகவும் ஒயிலுடன் கூடிய இசைக் கலைஞர்கள்[21]
மதிப்பு மற்றும் மரியாதை
1997 ஆம் ஆண்டில், லேகாசி , என்ற உஸ்தாத் அலி அக்பர் கான் அவர்களுடன் பாடிய இசைத்தொகுப்பிற்காக ஆஷாஜி அவர்கள் முதல் முதலாக இந்தியாவிலிருந்து கிராம்மி விருதுக்காக பரிந்துரை செய்த நடிகையாவார்.
அவர் பதினேழு மகாராட்டிர அரசு வழங்கிய விருதுகளை பெற்றவராவார்.
அவர் இந்தியத் திரைப்பட உலகத்திற்கு அளித்த சேவையை பாராட்டி 2000 ஆம் ஆண்டில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பெற்றார்.[17]
அமராவதி பல்கலைக்கழகம் மற்றும் ஜல்காவோன் பல்கலைக்கழகம் அவருக்கு இலக்க்யத்தில் டாக்டரேட் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
இலக்கியத்தில் அவர் புரிந்த சேவைகளுக்காக அவர் தி பிரெட்டீ மெர்குரி விருதுகளை பெற்றார்.
நவம்பர் 2002 அன்று பர்மிங்காமில் நடந்த திரைப்படவிழாவில், அவர் சிறப்பாக கௌரவிக்கப்பெற்றார்.
இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் பட்டத்தை அளித்து கௌரவித்துள்ளது.[2]
ஆஷா போஸ்லே அவர்கள் பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி பிரதிபா பாடில் அவர்களிடமிருந்து திங்கள்கிழமை மே 5, 2008 அன்று பெற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment