Wednesday 27 September 2017

COFFEE ,PLANTATION


COFFEE ,PLANTATION 





காப்பி அல்லது குளம்பி (இலங்கைத் தமிழ்: கோப்பி) (en:Coffee) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும். இந்தியாவில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்கரை இல்லாமலும் கசப்பான கரும் காப்பியாகக் குடிக்கிறார்கள். சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காப்பி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளார்) (200 மில்லி லிட்டர்) காப்பி குடித்தாலே அதில் 80-140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கும் [1] இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காப்பி குடிப்பவர்கள் ஒருவகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள் [2]

காப்பிச் செடி (சிறுமரம்). வெண்ணிற பூக்கள் இருப்பதைப் பார்க்கலாம்
காப்பியா அராபிக்கா என்னும் காப்பிச் செடி இனத்தின் இலை, பூ,விதைகளின் படம்
நன்றாக வறுபட்ட காப்பி கொட்டை

உலகிலேயே அதிகமாக விற்று-வாங்கக்கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காப்பிதான். மொத்தமாக கடைவிலை மதிப்பில் (retail value) ஆண்டுக்கு 70 பில்லியன் ஐக்கிய அமெரிக்க நாடுகள் டாலர் ஆகும். காப்பி, உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில் சற்றேறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்படுகின்றது. இன்று ஏறத்தாழ 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காப்பிப் பயிரை ஒட்டி நடக்கின்றது.[3]

காப்பிச் செடியின் பேரினத்தில் 100 க்கும் அதிகமான இன வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டே இரண்டு இனங்கள் மட்டுமே பயிரிடப்பட்டு, நீர்ம உணவுக்குப் பயன் படும் காப்பியாக உள்ளன. இவ்விரு இனங்களின் அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்கள் காப்பியா அராபிக்கா (Coffea arabica), காப்பியா கன்னெஃவோரா (Coffea canephora) (காப்பியா ரொபஸ்ட்டா (Coffea robusta) என்றும் இதற்கு மற்றொரு பெயர் உண்டு). காப்பிச் செடிப் பேரினம் ருபியாசியே (Rubiaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 600 பேரினங்களும் 13, 500 இனச்செடிவகைகளும் உள்ளன.

சொல் வரலாறு

காப்பி என்னும் சொல் ஆங்கிலச் சொல்லாகிய Coffee (காஃவி அல்லது கா’வி ) என்பதன் தமிழ் வடிவம். தென் எத்தியோப்பியா நாட்டில் காஃவா (Kaffa, கா’வ்’வா) என்று ஓர் இடம் உள்ளது. அங்கு விளைந்த ‘பூன் அல்லது ‘பூன்னா (būnn , būnnā) என்று அவர்கள் பேசும் அம்ஃகாரா (Amhara) மொழியில் அழைக்கப்படும் செடியைக் குறிக்க காஃவா என்று ஆங்கிலம் போன்ற மொழிகளில் பயன்படுகின்றது. காபியின் அரபு மொழிப் பெயர் கஹ்வா (qahwa (قهوة)) என்பதாகும். இப்பெயர் அரபு மொழியில் கஹ்வத் அல் ‘பூன் (‘பூன் கொட்டையின் வடிநீர்) என்பதின் சுருக்கம்.

அரபு மொழிச் சொல் கஹ்வா என்பது ஆட்டோமன் துருக்கி மொழியின் கஹ்வே (kahve) என்பதில் இருந்து பெற்றதாகும். இது இத்தாலிய மொழியில் caffè (க’வ்’வே) என்றும் பிரெஞ்ச்சு, போர்த்துகீசு, ஸ்பானிஷ் (எசுப்பானிய) மொழிகளில் café (க’வே) என்றும் [4] வழங்கியது. முதன் முதலில் 16 ஆவது நூற்றாண்டு இறுதியில் இப்பெயர் ஐரோப்பாவில் வழங்கத் தொடங்கினும், ஏறத்தாழ 1650 வாக்கில் தான் ஆங்கிலத்தில் வழக்கில் வந்தது [5].
காப்பியின் வரலாறு

பரவலாக வழங்கும் கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள். ஆடுகள் காப்பிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு தாங்களும் அவ்வாறே உண்டு காப்பியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். எத்தியோப்பியாவில் இருந்து இக்கண்டுபிடிப்பு எகிப்துக்கும் ஏமன் நாட்டிற்கும் பரவியது [6]. அதன் பின்னர் ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டளவில் பெர்சியா, துருக்கி, மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கும் பரவியது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் பிறநாடுகளுக்கும் பரவியது. குறிப்பாக நெதர்லாந்துக்காரர்கள் (டச்சு) பெருவாரியாக காப்பியை இறக்குமதி செய்தார்கள். 1690ல் அரபு நாடுகளின் தடையை மீறி டச்சு மக்கள் காப்பிச்செடியை எடுத்து வந்து வளர்த்தார்கள். பின்னர் டச்சு ஆட்சிசெய்த ஜாவா நாட்டில் பயிர் செய்தார்கள். 1583ல் லியோனார்டு ராவுல்’வு என்னும் ஜெர்மன் நாட்டவர் 10 ஆண்டுகள் அண்மைக் கிழக்கு நாடுகளில் பயணம் செய்த திரும்பியபின்பு கரிய நிறத்தில் உள்ள காப்பியைக் காலையில் பருகுவது பற்றியும், அதனால் பல்வேறு வயிற்று நோய்களுக்குத் தடுப்பாக இருக்கும் என்றும் எழுதினார்[7]
“     A beverage as black as ink, useful against numerous illnesses, particularly those of the stomach. Its consumers take it in the morning, quite frankly, in a porcelain cup that is passed around and from which each one drinks a cupful. It is composed of water and the fruit from a bush called bunnu.     ”
காப்பி விளைச்சல்
உலகில் காப்பி விளைவிக்கும் நாடுகள்

காப்பி உலகில் மிகவும் அதிகமாக பருகுகும் நீர்ம உணவுகளில் ஒன்றாகும். 1998-2000 ஆண்டுகளில் உலகில் ஆண்டொன்றுக்கு 6.7 மில்லியன் டன் காப்பி விளைவிக்கிறார்கள். இது 2010ல் 7 மில்லியனாக உயரும் என்று கருதுகிறார்கள்[8]

ஒருவர் அருந்தும் குடிநீரில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு அளவு காப்பி அருந்துவதாக கணக்கிட்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 6 பில்லியன் கேலன் காப்பி அருந்துகிறார்கள் [9]. 2002ல் அமெரிக்காவில் சராசரியாக தலா 22.1 கேலன் காப்பி அருந்தினார்கள் [10]. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கொடைக்கானலில் மட்டும் 50 ஏக்கரில் காப்பிப்பயிர் பயிரிடப்படுகிறது.[11]
உயிரியல்

காஃபியா பேரினத்தின் பல சிற்றினங்கள் புதர்ச்செடிகளாகும்.அவை பெர்ரி எனும் ஒரு வகை சதைக்கனியை உற்பத்தி செய்கின்றன. காப்பியா கேனெபொரா (Coffea canephora)(பெரும்பாலும் 'ரோபஸ்டா' என்று அறியப்படும் ஒரு வகை காப்பிச்செடி) மற்றும் காப்பியா அராபிகா (C. arabica) ஆகிய இரு சிற்றினங்கள் வணிக ரீதியாக பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. காப்பியா அராபிகா மிக உயர்ந்த மதிப்பு வாய்ந்த காப்பி இனமாகும், இவை எத்தியோப்பியாவின் தென்மேற்கு உயர் நிலப்பகுதிகளிலும் மற்றும் தென்கிழக்கு சூடானிலுள்ள போமா பீடபூமியிலும் ,வடக்கு கென்யாவின் மார்சபைட் சிகரத்தையும் பூர்விகமாக கொண்டது .காப்பியா கேனெபொரா மேற்கு மற்றும் மத்திய சகாரா ஆப்ரிக்கபகுதிகளான கினியா முதல் உகாண்டா மற்றும் சூடான் வரையிலான பகுதியை பூர்வீகமாகக் கொண்டதாகும். காப்பியா லிபெரிக்கா (C. liberica), காப்பியா ஸ்டெனோபிலா ( C. stenophylla), காப்பியா மாரிடியனா (C. mauritiana), மற்றும் காப்பியா ரோசெமோசா (C. racemosa) ஆகியன குறையளவு முக்கியத்துவம் வாய்ந்த காப்பி இனங்களாகும்.

அனைத்து காபி சிற்றினங்களும் ரூபியேசி (Rubiaceae) குடும்பத்தில் (வேறு பெயர்: காப்பி குடும்பம்) வகைப்படுத்தப் படுகின்றன. அவை பசுமை மாறா புதர்கள் அல்லது மரங்களாக 5 மீ (15 அடி) உயரம் வரை வளரக்கூடும். இலைகள் இளஞ்சிவப்பு மற்றும் பளபளப்பானவை, வழக்கமாக 10-15 செ.மீ. (4-6 அங்குலம்) நீண்ட மற்றும் 6 செ.மீ. (2.4 அங்குலம்) அகலமானவை. எளிய, முழு மற்றும் எதிரிலையமைவை உருவாக்ககின்றன. இது ருபியேசி குடும்பத்தின் சிறப்பியல்பு ஆகும்
சூழலியல் விளைவுகள்

ஆரம்ப காலக்கட்டத்தில் காப்பியானது மரங்களின் நிழலில் பயிரிடப்பட்டது. காப்பிச்செடி பல விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் வாழ்விடங்களாக இருக்கிறது[12]. இந்த முறையானது வழக்கமாக பாரம்பரிய நிழல் முறை அல்லது "நிழல்-வளர்ப்பு" என குறிப்பிடப்படுகிறது. 1970 களில் தொடங்கி, பல விவசாயிகள் தங்கள் உற்பத்தி முறையை சூரிய சாகுபடிக்கு மாற்றியுள்ளனர்.இம்முறையில் விரைவாக வளர்ச்சியின் மூலம் அதிக மகசூல் கிடைத்தாலும் பூச்சித்தாக்குதலால் காப்பி பயிர்கள் சேதமடைகின்றன.ஆதலால் இதற்கான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்து, சுற்றுச்சூழலை சேதப்படுத்தும் மற்றும் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன[13].
பதப்படுத்துதல்


காப்பியானது நாம் நன்கு அறிந்த வறுத்த காஃபியாக மாறுவதற்கு காப்பியின் கனி மற்றும் அவற்றின் விதைகளை பல செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. காப்பியின் சதைப்பற்றுள்ள நன்கு முற்றிய கனியானது பாரம்பரியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் கையால் பறிக்கப்படுகிறது.[14].

பின்னர் முதிர்ச்சியடை சதைப்பற்றுள்ள காப்பியின் கனிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் சதைப்பகுதிகள் பொதுவாக இயந்திரம் கொண்டு அகற்றப்படுகின்றன,அவ்வாறு அகற்றப்பட்ட பின்னரும் விதைகளில் இருக்கும் மெல்லிய பசைப் பொருள் படலத்தை (Mucilage layer) அகற்றுவதற்காக ஊரவைத்து புளிக்கவைக்கப்படுகின்றன.அவ்வாறு புளிக்கவைக்கப்பட்ட காப்பி விதைகளில் ஒட்டியுள்ள பசைப்படல கழிவுகள் அகற்றப்படுவதற்காக பெருமளவு தூய நீரில் கழுவப்படுகின்றன.இம்முறையில் அதிக அளவு காப்பி விதையிலுள்ள கழிவுகள் கலந்த நீர் வெளியேற்றப்படுகிறது. இறுதியாக காய்ந்த தூய காப்பி விதைகள் கிடைக்கின்றன[15].
வறுத்தல்
வறுக்கப்பட்ட காப்பிக் கொட்டைகள்


செயல்முறையின் அடுத்த படிநிலையாக பச்சை காபியை வறுத்தெடுத்தலாகும்.காப்பியானது வழக்கமாக வறுத்த நிலையில் காப்பிக்கொட்டைகளாக விற்கப்படுகிறது, அரிதான விதிவிலக்குகளாக அது காபி சாப்பிடுவதற்கு சற்று முன்பு வறுத்தும் பயன்படுத்தகின்றனர்.பெருந்தொழில் முறை மூலமாகவோ பாரம்பரிய முறையில் வீட்டிலோ காப்பி வறுத்தெடுக்கப்படுகிறது [16]. காப்பிக்கொட்டையை வறுத்தெடுக்கும் செயல்முறை அவற்றின் பௌதீக மற்றும் வேதியப் பண்புகளில் மாற்றுவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. வறுபட்ட காப்பிக்கொட்டையானது ஈரப்பதம் இழக்கப்படுவதால், எடை குறைகிறது மற்றும் அளவு அதிகரித்து குறைவான அடர்த்தி கொண்டவையாக மாறுகிறது. இந்த அடர்த்தியான காப்பியின் வலிமை மற்றும் தரத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
காப்பி விளைச்சலில் முதல் பத்து இடங்களை வகிக்கும் நாடுகள் 2005 நாடு     டன் (1000 கிலோ)
பிரேசில்     2,179,270
வியட்நாம்     990,000
இந்தோனேசியா     762,006
கொலம்பியா     682,580
மெக்சிக்கோ     310,861
இந்தியா     275,400
எத்தியோப்பியா     260,000
குவாத்தமாலா     216,600
ஹொண்டுராஸ்     190,640
உகாண்டா     186,000



உலகை வலம் வந்த கொட்டை

சின்னஞ்சிறு காப்பிச் செடி ஒன்றை ஒருவர் கண்மணி போல் பாதுகாத்து வந்ததைப் பற்றிய ஒரு நிஜக் கதை இருக்கிறது. அது “காப்பிச் செடியின் இனப்பெருக்க சரித்திரத்தில் வெகு சுவாரஸ்யமான சம்பவமாக” விவரிக்கப்படுவதாய் “ஆல் அபெளட் காஃபி” என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.

இன்று வருடத்திற்கு 70 பில்லியன் டாலர் லாபம் தரும் காப்பித் தொழில் அந்தச் சின்னஞ்சிறிய காப்பிச் செடியிலிருந்துதான் உருவானது. இன்று உலகில் அதிகமான டாலர்களை ஈட்டித்தரும் பொருள்களில் பெட்ரோலியத்திற்கு அடுத்தது காப்பிதான் என்கிறது “சைன்டிஃபிக் அமெரிக்கன்” பத்திரிகை.

காப்பிச் செடி பற்றிய அந்தச் சுவாரஸ்யமான சம்பவம், அதன் பிறப்பிடமாகிய எத்தியோப்பியாவின் மேட்டு நிலங்களில் தொடங்கியது. இந்தக் காட்டு இனக் காப்பிச் செடியின் வாரிசுதான் காஃபியா அரேபிகா. இதன் கொட்டைகளிலிருந்தே உலக முழுவதும் பயன்படுத்தப்படுகிற காப்பியில் மூன்றில் இரண்டு பங்கு தயாரிக்கப்படுகிறது. என்றாலும், வறுக்கப்பட்ட காப்பிக் கொட்டைகளிலிருக்கும் குணங்கள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்பது துல்லியமாகத் தெரியவில்லை.

இருப்பினும், பொ.ச. 15-⁠ம் நூற்றாண்டிலேயே அரேபிகா இனக் காப்பிச் செடி, அரேபிய தீபகற்பத்தில் பயிரிடப்பட ஆரம்பிக்கப்பட்டிருந்தது. வீரியமிக்க காப்பிக் கொட்டைகள் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த போதிலும், 1616-⁠ல் டச்சுக்காரர்கள் காப்பிச் செடியையும் வீரியமிக்க கொட்டைகளையும் எப்படியோ பெற்றுக்கொண்டார்கள். உடனே சிலோனிலும் (இப்போது இலங்கை) ஜாவாவிலும் (இப்போது இந்தோனேஷியாவின் பாகம்) காப்பித் தோட்டங்களை உருவாக்கினார்கள்.

1706-⁠ல் டச்சுக்காரர்கள் ஜாவாவிலிருந்த காப்பித் தோட்டங்களிலிருந்து ஒரு கன்றை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமிலுள்ள தாவரவியல் பூங்காவிற்கு அனுப்பிவைத்தார்கள். அந்தச் செடி நன்கு செழித்தோங்கியது. அதன் வாரிசுகள் சூரினாம் மற்றும் கரீபியனிலுள்ள டச்சு காலனிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1714-⁠ல், ஆம்ஸ்டர்டாமின் மேயர் இந்த வாரிசுகளில் ஒன்றை பதினான்காம் லூயி அரசருக்குக் கொடுத்தார். அதை அவர் பாரிஸிலுள்ள ஸார்டாங் டெ பிளாங்ட் என்ற அரச தோட்டத்தில், ஒரு கண்ணாடிக் கூண்டிற்குள் நட்டுவைத்தார்.

பிரெஞ்சுக்காரர்கள் காப்பித் தொழிலில் இறங்க ஆவலாக இருந்தார்கள். பிறகு, காப்பிக் கொட்டை களையும் செடிகளையும் வாங்கி ரீயூனியன் தீவிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவற்றில் ஒரே வொரு கொட்டைகூட முளைக்கவில்லை;

செடிகளிலும், ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் காய்ந்துவிட்டன என்பதாக சில அதிகாரிகள் சொல்கி றார்கள். என்றாலும், அந்த ஒரு செடியிலிருந்து கிடைத்த 15,000 கொட்டைகளை வைத்து கடைசியில் 1720-⁠ல் ஒரு காப்பித் தோட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் செடிகள் மிக மதிப்புள்ளவையாகக் கருதப்பட்டன;

எனவே, யாரேனும் அவற்றில் ஒன்றுக்குச் சேதம் விளைவிப்பது கண்டுபிடி க்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையே விதிக்கப்பட்டது! பிரெஞ்சுக்காரர்கள் கரீபியனிலும் காப்பித் தோட்டத்தை உருவாக்க நினைத்தார்கள், அதற்காக அவர்கள் இருமுறை முயற்சி செய்தும் தோல்விதான் மிஞ்சியது.

விடுமுறைக்காக பாரிஸ் நாட்டுக்கு வந்திருந்த பிரெஞ்சு கடற்படைத்துறை அதிகாரியான காப்ரீயெல் மாடியு டெ கிலீயு, அங்கிருந்து ஒரு காப்பிச் செடியை எடுத்துக்கொண்டு மே 1723-⁠ல் மார்டினிக் தீவுக்குத் திரும்பினார். அத்தீவிலுள்ள தன் தோட்டத்தில் அதை நடுவதற்கு கப்பலில் கிளம்பினார்.

ஓரிரு பக்கத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட ஒரு பெட்டியில் அந்தச் செடியை டெ கிலீயு எடுத்து வந்ததற்குக் காரணம், அந்தச் செடி சூரிய ஒளியை உள்ளிழுத்துக்கொண்டு வெயில் இல்லாத நாட்களிலும் அதைப் பயன்படுத்திக்கொள்வதற்கே என்பதாக ஆல் அபெளட் காஃபி புத்தகம் விளக்குகிறது.

கப்பலில் இருந்த ஒருவர், டெ கிலீயுவிடம் அந்தச் செடி இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்ப தாகத் தெரிகிறது. டெ கிலீயு அதை வைத்து பெரிய ஆளாக ஆகிவிடுவார் என்பதால் அவருக்குப் பொறுக்கவில்லை போலும். எனவே, அதை அவரிடமிருந்து பிடுங்கிவிடப் பார்த்தார், ஆனால் அவரால் முடியவில்லை. அந்தச் செடி பிழைத்துக்கொண்டது.

இதுதவிர, அந்தச் செடி டுனீஷிய கொள்ளைக்கார ர்களின் கைகளிலிருந்தும் தப்பியது, பயங்கர புயல் காற்றையும் தாக்குப்பிடித்தது. அதுமட்டுமா? காற்று இல்லாததால் கப்பல் நிலநடுக்கோட்டில் நின்றுபோன சமயத்தில் சுத்தமான தண்ணீர் கிடைக்காதபோதுகூட அது தாக்குப்பிடித்தது. டெ கிலீயு இவ்வாறு கூறுகிறார்: “தண்ணீர் தட்டுப்பாடு ரொம்பவே அதிகரித்தது. அதனால் எனக்கென்று வைத்திருந்த கொஞ்சநஞ்சத் தண்ணீரை, ஒரு மாதத்திற்கும் மேலாக என் செடிக்கும் ஊற்ற வேண்டிவந்தது. காரணம், என் எதிர்கால கனவே அதை நம்பித்தான் இருந்தது, என் சந்தோஷமும் அதில்தான் இருந்தது.”

அவர் கண்மணிபோல் அந்தக் காப்பிச் செடியை பாதுகாத்ததற்கு கைமேல் பலன் கிடைத்தது. மார்டினிக் தீவிற்கு அந்தச் செடி நல்லபடியாக வந்து சேர்ந்தது. அந்த வெப்ப மண்டலப் பகுதியில் அது நன்றாக வளர்ந்து செழித்தது. “இந்த ஒரு செடியிலிருந்து கிடைத்த கொட்டைகளை பிரேசில், பிரெஞ்சு கயானா, சூரினாம் ஆகிய நாடுகளைத் தவிர்த்து வட, தென் அமெரிக்க நாடுகள் அனைத்திற்கும் நேரடியாகவோ பிற வழிகளிலோ மார்டினிக் தீவு அனுப்பியது” என காஃபி என்ற தன் புத்தகத்தில் கார்டென் ரிக்லி கூறுகிறார்.

இதற்கிடையில் பிரேசில், பிரெஞ்சு கயானாகூட காப்பிச் செடிகளைப் பெற்றுக்கொள்ள விரும்பின. டச்சுக்காரர்கள் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கொண்டு வரப்பட்ட காப்பிச் செடியின் வாரிசுகளை இன்னும் சூரினாமில் வைத்திருந்தார்கள். ஆனால் அவற்றை பலத்த பாதுகாப்பில் வைத்திருந்தார்கள். என்ற போதிலும், 1722-⁠ல் பிரெஞ்சு கயானாவிலிருந்த பயங்கர குற்றவாளி ஒருவன் சூரினாமிற்கு தப்பிச்சென்று சில காப்பிக் கொட்டைகளைத் திருடினான்.

அந்தக் கொட்டைகளை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவனை விடுவிக்க பிரெஞ்சு கயானா அதிகாரிகள் சம்மதித்தார்கள், பிறகு அவனுடைய சொந்த நாட்டுக்கே அவனை அனுப்பி வைத்தார்கள்.

பிரேசில் நாட்டவர்கள் வீரியமிக்க காப்பிக் கொட்டைகளை முதலில் திருட்டுத்தனமாக தங்கள் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சி பலிக்கவில்லை. பிறகு சூரினாமிற்கும் பிரெஞ்சு கயானாவிற்கும் இடையே எல்லை சம்பந்தமாக ஒரு பிரச்சினை எழும்பியபோது அதைத் தீர்த்துவைப்பதற்கு ஒரு மத்தியஸ்தரை அனுப்பும்படி அவை பிரேசிலிடம் கேட்டுக்கொண்டன.

எனவே, பிரச்சினையைத் தீர்த்துவிட்டு அதற்குச் சன்மானமாக சில காப்பிச் செடிகளை எடுத்து வரச்சொல்லி ஃபிரான்ஸீஸ்கூ டெ மேலூ பால்யிடா என்ற ராணுவத் தலைவரை பிரெஞ்சு கயானாவிற்கு பிரேசில் அனுப்பியது.

பிரச்சினை சுமுகமாக முடிந்ததால் ஆளுநர் அவருக்குப் பெரியளவில் பிரிவுபசார விருந்து வைத்தார். இந்த விசேஷ விருந்தாளியை கெளரவிக்கும் விதத்தில் அந்த ஆளுநரின் மனைவி அழகிய பூச்செண்டு ஒன்றைக் கொடுத்தார். வீரியமிக்க காப்பிக் கொட்டைகளையும் தளிர்களையும் அந்தப் பூச்செண்டில் மறைத்துவைத்துத் தந்தார். 1727-⁠ல், அந்தப் பூச்செண்டிலிருந்து பிறந்ததுதான் இன்றைய பிரேசிலின் பில்லியன் டாலர் காப்பித் தொழில்.

ஆக, 1706-⁠ல் ஜாவாவிலிருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு எடுத்துச்செல்லப்பட்ட இளம் காப்பிச் செடியிலிருந்தும், பாரிஸில் வளர்ந்த அதன் வாரிசிலிருந்துமே மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் காப்பிச் செடிகள் வந்தன. ‘வெகுசில காப்பிச் செடியிலிருந்தே இந்த அரேபிகா காப்பித் தொழில் உருவாகியிருக்கிறது’ என ரிக்லி விளக்குகிறார்.

இன்று சுமார் 80 நாடுகளில் 25 மில்லியனுக்கும் மேலான குடும்பங்கள் காப்பித் தோட்டங்களைப் பயிரிட்டு வருகின்றன. இந்தத் தோட்டங்களில் மொத்தமாக 15 பில்லியன் காப்பிச் செடிகள் இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. ஒவ்வொரு நாளும் 2.25 பில்லியன் ‘கப்’ காப்பி பருகப்படுவதற்குக் காரணம் இந்தச் செடிகளின் கொட்டைகளே.

ஆனால் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், காப்பியின் விளைச்சல் இன்று அளவுக்கதிகமாக இருப்பது பிரச்சினையாக ஆகியிருக்கிறது. அதோடுகூட, அரசியல், பொருளாதாரம், வணிக நிறுவனங்களின் கூட்டணி ஆகியவையெல்லாம் சேர்ந்து நிலைமையை இன்னும் மோசமாக்கி யிருக்கின்றன;

இதனால் காப்பி விவசாயிகள் ஏழைகளாகவும், ஓட்டாண்டிகளாகவும்கூட ஆகியிருக்கிறார்கள். சுமார் 300 வருடங்களுக்கு முன் டெ கிலீயு, குடிப்பதற்கு வைத்திருந்த கொஞ்சநஞ்சத் தண்ணீரை சின்னஞ்சிறிய காப்பிச் செடிக்கு ஊற்றியதையும் இன்று காப்பிச் செடியின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் இருக்கிறது.

மிகப் பிரபலமான இரண்டு காப்பிகள்



“பச்சை காப்பிக் கொட்டைகள், ரூபேஷிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தக் குடும்பத்தில் சுமார் 66 இனங்கள் உள்ளன. மிக அதிகமாக பயன்படுத்தப்படும் இரண்டு இனங்களில் ஒன்று காஃபியா அரேபிகா, இதன் கொட்டைகள் உலகின் மூன்றில் இரண்டு பங்கு காப்பி தயாரிக்க பயன்படுகின்றன. இரண்டாவது இனம் கா[ஃபியா] கேனிஃபோரா, இதன் கொட்டைகள் உலகின் மூன்றில் ஒரு பங்கு காப்பி தயாரிக்க பயன்படுகின்றன. இது பெரும்பாலும் ரோபஸ்டா காப்பி என அழைக்கப்படுகிறது” என்று சைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை சொல்கிறது.

ரோபஸ்டா காப்பியின் மணம் ரொம்ப காட்டமாக இருக்கிறது. அதனால் இது பெரும்பாலும் இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. என்றாலும், இந்தச் செடியின் விளைச்சல் அதிகம், நோய் எதிர்ப்புச் சக்திகூட இதற்கு அதிகம். இதன் உயரமோ 12 மீட்டர். வெட்டப்படாமல் விடப்படும் அதிக மென்மையான, விளைச்சல் குறைந்த அரேபிகா செடியின் உயரத்தைவிட இது இரு மடங்காகும். ரோபஸ்டா கொட்டைகளின் மொத்த எடையில் 2.8 சதவீதம் கேஃபின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அரேபிகா கொட்டைகளிலோ இது 1.5 சதவீதம் மட்டுமே இருக்கிறது. அரேபிகா காப்பிச் செடியில் 44 குரோமோசோம்களும், ரோபஸ்டா காப்பிச் செடிகளிலும் மற்ற காட்டு இனக் காப்பிச் செடிகளிலும் 22 குரோமோசோம்களும் இருந்தால்கூட அவற்றில் சில கலப்பினம் செய்யப்பட்டிருக்கின்றன.

பானத்திற்கு “பாப்டிஸம்”


காப்பி முதன்முதலில் 17-⁠ம் நூற்றாண்டின்போது ஐரோப்பாவில் அறிமுகமானபோது கத்தோலிக்க மத குருமார் சிலர் அதற்கு சாத்தானின் பானம் என பெயர் சூட்டினார்கள்; அது திராட்சரசத்தை மாற்றீடு செய்துவிடுமோ என அஞ்சினார்கள். ஏனெனில், திராட்சரசத்தை கிறிஸ்து பரிசுத்தப்படுத்தியிருந்ததாக அவர்கள் கருதினார்கள். ஆனால், போப் எட்டாவது கிளெமன்ட் காப்பியை ருசித்தபோது தன் மனதை உடனடியாக மாற்றிக்கொண்டாராம்; இதை காஃபி என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. மத சம்பந்தமான இந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக போப் அந்தப் பானத்திற்கு அடையாள அர்த்தத்தில் “பாப்டிஸம்” கொடுத்தார். இப்படியாக, கத்தோலிக்கர்களுக்கு ஏற்கத்தகுந்த ஒரு பானமாக அதை மாற்றினார்.

காப்பி பரவியது எப்படி


1. 1400’களில் அரேபிகா காப்பி அரேபிய தீபகற்பத்தில் பயிரிடப்படுகிறது

2. 1616 காப்பிச் செடிகளை அல்லது விதைகளை டச்சுக்காரர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்

3. 1699 காப்பிச் செடிகளை ஜாவாவிற்கும் கிழக்கிந்தியாவிலுள்ள மற்ற தீவுகளுக்கும் டச்சுக்காரர்கள் அனுப்பிவைக்கிறார்கள்

4. 1700’களில் மத்திய அமெரிக்காவிலும் கரீபியனிலும் காப்பிச் செடி பயிரிடப்படுகிறது

5. 1718 பிரெஞ்சுக்காரர்கள் காப்பிச் செடியை ரீயூனியன் தீவுக்கு எடுத்துச்செல்கிறார்கள்

6. 1723 கா. மா. டெ கிலீயு பிரான்சிலிருந்து ஒரு காப்பிச் செடியை எடுத்துக்கொண்டு மார்டினிக் தீவிற்குச் செல்கிறார்

7. 1800’களில் ஹவாயில் காப்பிச் செடி பயிரிடப்படுகிறது

No comments:

Post a Comment