Saturday 16 September 2017

COLLOSIUM OF ROME BUILT 72 A.D




COLLOSIUM OF ROME  BUILT  72 A.D




‘எல்லாச் சாலைகளும் ரோம் நோக்கி’ என்ற வழக்குச் சொல், ஒரு மனிதன் தான் இறப்பதற்குள் ஒரு முறையேனும் ரோம் நகரை பார்த்துவிட வேண்டும் என்ற அர்த்தத்தில்தான்!

அப்படிப்பட்ட ரோம் நகரில் இருக்கும் ஒரு பயங்கரமான அரங்கத்தைத் தெரிந்துகொள்வோமா! ஒரு பிறந்த நாள் கேக்கை உள்பகுதியில் குடைந்து வைத்தது போல் இருக்கிறது சிதலமடைந்த அந்த அரங்கம். அதன் பெயர் கொலோசியம். இது ஒரு பயங்கரமான அரங்கம். இத்தாலியின் தலைநகர் ரோமில், கேலியன், எஸ்க்யூலன், பாலட்டைன் மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கில் இந்த கொலோசியம் அமைந்துள்ளது. கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள்,
ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது கொலோசியம். இதன் உயரம் 150 அடி. நீரோ மன்னனின் அரண்மனைக்கு அருகில் அமைக்கப்பட்டது இது.
அரச குடும்பத்தினருக்கு, பெரும் நிலப் பிரபுக்களுக்கு, முக்கியமான வர்களுக்கு, பிறருக்கு என மொத்தம் நான்கு பார்வையாளர்கள் பகுதிகளைக் கொண்டது இது. கொலோசியத்துக்குக் கீழே உள்ள அடித்தளத்தில் அடிமைகளும் மிருகங்களும் தனித்தனியாகத் தங்க வைக்கப்பட்டனர். ஆயுதங்களைச் சேமித்து வைக்க தனிப் பகுதி உண்டு

தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். இது நீள்வட்ட வடிவமான கட்டிடம். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் எனப்பட்டது.
இலத்தீன் மொழியில் வட்டவடிவ அரங்கம் என்று பொருள். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள். கி.பி 72 ம் ஆண்டில், வெஸ்பாசியன் என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. 217 ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டு புதுப்பிக்கப்பட்டது.
காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ம் ஆண்டுவரை பயன்பட்டது. 847 மற்றும் 1349 ஆகிய ஆண்டுகளில் புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. நீண்ட காலமாக ஆம்ஃபி தியேட்டர் என்றே அழைக்கப்பட்டு வந்த அந்தரங்கினை பெடெ என்ற வரலாற்று ஆய்வாளர் கொலோசியம் என்று பெயர் மாற்றினார்.

நீரோ பூங்காவுக்கு அருகில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்திருந்த நீரோவின் சிலையை ஒட்டி அந்த அரங்கு அமைக்கப்பட்டதால் அந்த பெயர் வந்தது.
கோலோஸ்ஸியம் என்ற பெயர் நீரோவின் ஒரு பெரிய சிலையின் பெயரில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது [4] (நீரோவின் சிலை ரோடஸின் கொலோசஸின் பெயரால் அழைக்கப்படுகிறது)
ஆறு ஏக்கர் நில பரப்பில் 615 அடி நீளமும், 510 அடி அகலமும் உடைய அந்த அரங்கின் சுற்றுச்சுவர் 157 அடி உயரம் கொண்டது. மொத்தம் ஒரு லட்சம் க்யுபிக் மீட்டர் ட்ராவெல்டன் கற்கள் அருகிலிருந்த டிவோலி மலைப்பிரதேசத்திலிருந்து 2,40,000 முறை வண்டி களில் எடுத்துவரப்பட்டு யன்படுத்தப்பட்டிருக்கின்றன. கட்டுமானப் பணிகளில் 40 ஆயிரம் யூத அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். இத்தனை சிறப்புகள் கொண்ட கொலோசியம், கட்டப்பட்டதற்கான காரணம் அத்தனை உன்னதமானது இல்லை.
மனித மனத்தின் வக்கிர எண்ணங்களுக்கு வடிகாலாய் அந்த காலத்தில் அரசுகளை ஆண்ட மன்னர்களே பல அநீதியான காரியங்களை சட்டப்பூர்வமாக செய்திருக்கின்றனர். அதற்கு உதாரண சாட்சியாக இருப்பதுதான் அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கொலோசியம். கொலோசியம் அரங்குகளில் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளோடு மோதி அவற்றைக் கொல்லும் விளையாட்டுக்களும் உண்டு. டைட்டஸ் காலத்தில் அரங்கின் துவக்க விழா நிகழ்ச்சியின்போது 9000 விலங்குகள் கொல்லப்பட்டிருக்கின்றன.
கிறுஸ்துவ சமயம் வேகமாக இத்தாலியில் பரவத்தொடங்கிய பின் க்ளேடியேட்டர் விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டு 6ம் நூற்றாண்டில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. வரலாற்றின் பக்கங்களை கொலோசியம் பயங்கரத்தை நிரப்பினாலும், இத்தாலி நாடு அதன் பயங்கரத்தை அழித்து, அதனை ரோமன் -கிரேக்க கட்டடக்கலைக்கு உதாரணமாக சொல்லும்படி மாற்றிவருகிறது.


இத்தாலிய அரசு 1948 ம் ஆண்டு தனது நாட்டில் மரணதண்டனையை முற்றிலுமாக ஒழித்து சட்டம் இயற்றியது. அதன் அடையாளமாக கொலோசியத்தை அலங்கரித்து பிரகாசிக்கச்செய்து உலகுக்கு அறிவித்தது.
மரணதண்டனைக்கு எதிரான குரலை பிரதிபலிக்கும் சின்னமாக கொலோசியத்தை அப்பொழுது பிரகடனப்படுத்தியது. அன்றிலிருந்து எந்த நாட்டில் மரணதண்டனையை ஒழித்து சட்டம் இயற்றினாலும், கொலோசியம் பொன்விளக்குகளால் மின்னும். ஒரு காலத்தில் மரண ஓலங்களால் நிரம்பிய கொலோசியம் இன்று மரணதண்டனைக்கு எதிரான அடையாளச்சின்னமாக கருதப்படுவது விசித்திரமான வரலாற்று முரண்தானே!

No comments:

Post a Comment