Sunday 6 November 2016

SOOLAMANGALAM SISTERS THE LEGEND OF TAMIL CINEMA DUO SINGERS

SOOLAMANGALAM SISTERS 
THE LEGEND OF TAMIL CINEMA
DUO SINGERS






Soolamangalam Jayalakshmi (Tamil: சூலமங்கலம் ஜெயலட்சுமி) and 
Soolamangalam Jayalakshmi
Birth nameJayalakshmi
Born24 April 1937 (age 79)
OriginSoolamangalamMadras presidencyBritish India
GenresTamil devotionaltamil patrioticfilm music
Occupation(s)Singer-songwriter, musician
Soolamangalam Rajalakshmi (Tamil: சூலமங்கலம் ராஜலட்சுமி), 
Soolamangalam Rajalakshmi
Birth nameRajalakshmi
Born6 November 1940
OriginSoolamangalamMadras presidencyBritish India
Died1 March 1992 (aged 51)
Chennai, Tamil Nadu, India.
GenresTamil devotionaltamil patrioticfilm music
Occupation(s)Singer-songwriter, musician
popularly known as Soolamangalam Sisters (Tamil: சூலமங்கலம் சகோதரிகள்) are Carnatic music sister-pair vocalists and musicians known for their devotional songs in Tamil. They were early singers in the trend of duo singing in Carnatic music, which started in the 1950s, with performers like Radha Jayalakshmi, and later continued by Bombay Sisters, Ranjani-Gayatri, Mambalam Sisters, Bangalore Sisters and Priya Sisters

Early life and background[edit]

Born in Soolamangalam near Tanjore – a village with musical heritage, of Karnam Ramaswmai Ayyar & Janaki Ammal, the sisters had their training in music from K. G. Murthi of Soolamangalam, Pathamadai S.Krishnan, Mayavaram Venugopalayyar.











The duo-sisters were very popular for their matchless rendition of National and Devotional songs. They had a hectic practice for about three decades and were much sought after for providing background music in films. Their Kanda Shasti Kavasam album is very popular with the Lord Muruga devotees.[1









Awards[edit]

Muruga Ganamrtha
Kuyil Isai Thilakam
Isaiarasi
Nadhakanal
Kalaimamani in 1992 by Tamil Nadu Eyal Isai Nataka Mandram.
Filmography[edit]
Among the two of them, Jayalakshmi had rendered only a few songs in films and most of it would be duets with Rajalakshmi.

Whereas Rajalakshmi had more chance as a playback singer in films. Her voice suits all the categories of youthful, soft mellifluousness, evocative feelings, perfection of pronunciation and the best in devotional songs.

Music composers she sang for[edit]

Many of her songs are under K. V. Mahadevan's music direction all the while. Many of her songs were under T. G. Lingappa. She also sang under G. Ramanathan, Naushad, Letchumanan Kurunath, K. N. Thandayuthapani Pillai, Viswanathan-Ramamoorthy, S. Rajeswara Rao, H. R. Padmanabha Sasthri, C. N. Pandurangan, G. K. Venkatesh, V. Kumar, T. R. Pappa, M. S. Srikanth, Kunnakkudi Vaidyanathan, S. M. Subbaiah Naidu, S. Dakshinamurthy, Chittor V. Nagaiah, M. K. Athmanathan, M. S. Viswanathan, T. K. Ramamoorthy, Shankar-Ganesh, Kunnakkudi Vaidyanathan, Rajan-Nagendra, Brother Lakshmanan, V. Dakshinamurthy, P. S. Divakar, Pukazhenthi and under her own music compositions. She sang more often in the 1950s while during the 1960s, she was only sought in songs that needed more than one female voice.

Playback singers she sang with[edit]

She sang immemorable duets mostly with T. M. Soundararajan. Other include Seerkazhi Govindarajan, P. B. Sreenivas, S. C. Krishnan, J. P. Chandrababu, K. R. Ramaswamy, M. Balamurali Krishna, A. L. Raghavan and K. J. Yesudas.

She also sang duets with female singers with most notably with her sister Soolamangalam Jajalakshmi, P. Leela and P. Suseela. Others are L. R. Easwari, Radha Jayalakshmi, M. L. Vasanthakumari, T. V. Rathinam, K. Jamuna Rani, S. Janaki, Jikki, B. Vasantha, A. G. Rathnamala, M. R. Vijaya, Sarala and L. R. Anjali.

Music director[edit]

Rajalakshmi assisted S. M. Subbaiah Naidu in Konjum Salangai. Both Jayalakshmi and Rajalakshmi as music directors by the name Soolamangalam Sisters, composed music for films like Dharisanam (1970), Tiger Thathachari (1974), Appodhe Sonnene Kettiya (1979) and Pillaiyar (1984). They also sang under their own compositions.


சூலமங்கலம் ராஜலட்சுமி பிறப்பு 1940 நவம்பர் 6

சென்ற ஜூன் 29ம் தேதி சூலமங்கலம் ஜெயலட்சுமி மறைந்தார். அவர் தனது தங்கை சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் நிகழ்த்திய பக்தி மணம் கமழும் மேடைக் கச்சேரிகள் ஏராளம். இரண்டு தவில்களின் பக்கவாத்தியத்துடன் சூலமங்கலம் சகோதரிகள் கச்சேரிகள் செய்தது, சவால்விடும் புதுமையாக அமைந்தது.
ஜெயலட்சுமியும் (பிறப்பு - 1937) ராஜலட்சுமியும் ( பிறப்பு 1940) சிறுமிகளாக இருந்தபோதே, 'சூலமங்கலம் சகோதரிகள்' என்ற பெயரில் பிரபலமாகி விட்டார்கள். இசை இரட்டையராக 1950களின் தொடக்கத்தில் அவர்கள் வலம் வரத் தொடங்கிவிட்டார்கள். இன்று சென்னை அடையாற்றின் கரையில் அமர்க்களமாக இயங்கும் ‘காந்தி நகர் கிளப்’, தன்னுடைய முதல் இசை நிகழ்ச்சியாக சூலமங்கலம் சகோதரிகளைத்தான் ஏற்பாடு செய்தது. அப்போது ஜெயலட்சுமிக்கு 15 வயது, ராஜலட்சுமிக்கு 12!

எண்பதுகளின் இறுதிவரை இந்த சகோதரிகள் பாடாத கோயில் இல்லை, பங்கேற்காத திருவிழா இல்லை. மலேசியா, சிங்கப்பூர் இசைப் பயணத்திற்காக, 1974ல் அவர்கள் சிதம்பரம் கப்பலில் சென்றபோது, கப்பல் கேப்டனின் கோரிக்கையை ஏற்று கப்பலிலேயே நிகழ்ச்சி வழங்கி அசத்தினார்கள். அவர்கள் இசைத்தட்டில் வழங்கிய ‘கந்த சஷ்டி கவசம்’, தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் இன்றும் ஒலிக்கிறது. ‘அழகெல்லாம் முருகனே’ என்றும், ‘முத்துவேல் ரத்தினவேல்’ என்றும், ‘முருகனுக்கு ஒரு நாள் திருநாள்’ என்றும் சூலமங்கலம் சகோதரிகளின் பக்திப் பாடல்களை ஒலிபரப்பி, சிறு கோயில்கள் கூட தங்கள் வைபவங்களுக்கு இசை மணம் சேர்த்துக்கொள்கின்றன.
சகோதரிகள் பாடிய ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பக்திப் பாடல், குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில், இசைத்தட்டாக முதலில் வந்தது. பிறகு, அது ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. திரை இசையமைப்பாளராக பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் உயர்வதற்கு, அந்தப் பாடல் காரணமாக அமைந்தது. சகோதரிகளின் குரலில் இருந்த காந்த சக்தி, குன்னக்குடிக்குப் புது வாழ்வு தந்தது.

தஞ்சை மண்ணுக்கு இயற்கை வளமும் இசை மணமும் இருந்த காலகட்டத்தில், தஞ்சை டவுனுக்கு அருகே இருக்கும் சூலமங்கலம் கிராமத்தில் இந்த சகோதரிகள் பிறந்தார்கள். தந்தை, கர்ணம் ராமசாமி அய்யர். அம்மா ஜானகி. தன் இரு பெண்களுக்கும் கேட்டதை திருப்பிப்பாடும் திறமை இருப்பதைப் பார்த்த ராமசாமி அய்யர், ஊரில் இருந்த சங்கீத பூஷணம் கே.ஜி. மூர்த்தியிடம் சேர்த்துவிட்டார். சரளி வரிசை, கீதம், வர்ணம் என்று சங்கீதக் கலையின் அஸ்திவாரங்களில் சகோதரிகள் பயிற்சி பெற்றார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947. தூக்கத்திலேயே ராமசாமி அய்யர் இறந்துவிட்டார். ஒரே நாளில் குடும்பத்தின் நிலை மாறிவிட்டது. சகோதரிகளுக்கு அடுத்து சரஸ்வதி என்ற பெண்ணும் இன்னொரு பையனும் பிறந்திருந்தார்கள். சூலமங்கலம் போன்ற செழிப்பான கிராமத்தில் கூட அவர்களின் வயிற்றைக் கழுவ வழியில்லை. மாமா சாமிநாத அய்யர் குழந்தைகளுடன் மதராஸ பட்டணம் வந்து சேர்ந்தார்.
சென்னையில், இசைத்துறையில் சகோதரிகளுக்கு பத்தமடை கிருஷ்ணன் என்ற சங்கீத மேதை ஆசானாக இருந்து வழிகாட்டினார். பத்தமடை கிருஷ்ணன், முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகளில் நிபுணர். ஜோதிட சிம்மம். திருமணமாகி நெடுநாளுக்குப் பிறகும் குழந்தைச் செல்வம் இல்லாமல் இருந்தார் (பின்னாளில்தான் அவரது மகள் காயத்ரி பிறந்தாள்). பாவாடை சட்டையில் வந்த சூலமங்கலம் சகோதரிகளைத் தன்னுடைய மகள்களாக பாவித்து அவர்களுக்கு இசைக்கலையின் நுணுக்கங்களை எல்லாம் நிரம்ப சொல்லிக்கொடுத்தார் பத்தமடை. ‘‘ரொம்ப உயர்ந்த சங்கீதத்தை பத்தமடை கிருஷ்ணன் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். எங்களுக்குக் கிடைச்ச எல்லா புகழுக்கும் காரணமானவர் அவர்தான்,’’ என்று பின்னாளில் சூலமங்கலம் ஜெயலட்சுமி எனக்களித்த பேட்டியில் மனம் திறந்து கூறினார் ('திரை இசை அலைகள்', முதல் பாகம், ஆசிரியர்: வாமனன்).
சூலமங்கலம் சகோதரிகள் கர்நாடக சங்கீதத்தின் மீது தனி கவனம் செலுத்தாமல், திரை இசைக்குள் புகுந்து சமரசங்கள் செய்துகொண்டதில் பத்தமடைக்கு வருத்தம் இருந்தது....ஆனால் அவரைப்போல் எளிமையான வாழ்க்கையை சகோதரிகளால் மேற்கொள்ள முடியுமா? புகழும் பணமும் இல்லாமல், கலையின் தரிசனத்தோடு மட்டும் எத்தனைப்பேரால் வாழமுடியும்?
ஆனந்த விகடன் பத்திரிகையின் கேஷியராக இருந்த வைத்தியநாத அய்யரும், ஜெமினி நிறுவனத்தின் இன்னொரு பத்திரிகையான நாரதரின் ஆசிரியர் சீனிவாச ராவும், சகோதரிகளுக்கு உதவ முன்வந்தனர்.
நாரதர் ராவ், தான் நடத்திய ஓர் இன்ஜினியரிங் பொருட்காட்சியில் சகோதரிகளுக்கு மேடை அமைத்துக் கொடுத்தார். ராவின் வரவேற்பை ஏற்று, தியாகராஜ பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும் சங்கீத சிறுமிகளின் கச்சேரியை கேட்க வந்தார்கள்.
விறுவிறுவென்று தொய்வில்லாமல் சென்ற கச்சேரியில், பாடல்கள், ஆலாபனைகள், சுரவரிசைகள் என்று எதிலும் சுவை குறையவில்லை. சகோதரிகளின் திறமையைக் கண்டு வியந்தார் பாகவதர். அவர்களை அழைத்து வாழ்த்தினார். இளையவள் ராஜலட்சுமிக்குப் பத்தமடையிடமிருந்து பாடமாகியிருந்த தீட்சிதர் கிருதிகளை அவளிடமிருந்து தானும் பாடம் செய்து கொண்டார்!

மேடையில் இணைந்து கச்சேரி செய்த சகோதரிகள், நாற்பதுகளின் இரண்டாம் பாதியில் வேகமாக வளர்ந்து வந்த பின்னணிப் பாடல் துறையில் பிரவேசித்து, தனித்தனியாகப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
மூத்தவர் ஜெயலட்சுமி, 'போஜன்' (1948), 'சக்ரதாரி' (1949), 'நாட்டிய ராணி' (1949) முதலிய படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடினார். அதே போல் ராஜலட்சுமி, ‘கிருஷ்ண பக்தி’ (1948) என்ற படத்தில், ‘கனவில் கண்டேனே, கண்ணன் மேல் காதல் கொண்டேனே’ என்ற நாட்டியப் பாடலைப் பாடினார்.
பி.யு. சின்னப்பா மூன்று வேடங்களில் நடித்த 'மங்கையர்க்கரசி' (1949) படத்தில், ஒரு நாயகன் இளம் வயதில் இருக்கும் போது பாடுவதாக அமைந்த கவுரி மனோகரி ராகப் பாடலை (அரனே ஆதி தேவா), சூலமங்கலம் ராஜலட்சுமி பாடினார். படப்பிடிப்பின் போது ராஜலட்சுமியை அழைத்துப் பாடச் சொல்லி, அவரது பாட்டுக்கு கஞ்சிரா வாசித்தார் சின்னப்பா. எடுத்த எடுப்பிலேயே இளமையும் இசைத்திறமையும் கொண்டு நட்சத்திரங்களையே வசமாக்கி விட்டார்கள், சூலமங்கலம் சகோதரிகள்.

ஆனால், மூத்தவர் ஜெயலட்சுமி, அதன் பிறகு பின்னணிப் பாடல் பாடவில்லை. ஏன் என்று அவரைக் கேட்டபோது, ---- ‘‘ஒரே வீட்லேர்ந்து ரெண்டு பேருக்கு சினிமா உலகத்திலே வாய்ப்பளிக்க மாட்டாங்க’’ என்றார். அப்படி ஒரு நினைப்பு. ராஜா சந்திரசேகர், -டி.ஆர் ரகுநாத் (இயக்குநர்கள்), எம்.ஜி. ராமச்சந்திரன், -எம்.ஜி. சக்ரபாணி (நடிகர்கள்), டி.கே.சண்முகம்-, டி.கே. பகவதி (நடிகர்கள்), ஊர்வசி-, கல்பனா (நடிகைகள்), சூர்யா-, கார்த்தி (நடிகர்கள்) என்று உடன்பிறந்தவர்கள் சினிமாவில் இருந்துகொண்டுதான் இருந்திருக்கிறார்கள். ஆனால் உடன்பிறந்தவரின் வாய்ப்பைக் கெடுத்துவிடவேண்டாம் என்ற எண்ணத்தில் சிலர் ஒதுங்கிவிடுகிறார்கள்.
நூற்றுக்கணக்கான திரைப்பாடல்கள் பாடிய, இளையவரான சூலமங்கலம் ராஜலட்சுமிதான் திரை இசை ரசிகர்களின் மனதில் நிற்கிறார். மென்மையான குரலும், மிருதுவான பாணியும், தெளிவான உச்சரிப்பும் ராஜலட்சுமிக்கு இருந்தன. நளினமான முறையில் தனி முத்திரையுடன் பாடினார்.
'படிக்காத மேதை' படத்தில், சவுகார் ஜானகிக்கு அமைதியான குடும்பப்பெண் வேடம். அந்த நிலையில் அவருக்கு ராஜலட்சுமி பாடிய, ‘ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா’ பாடல், அற்புதமாக அமைந்தது.
'கொஞ்சும் சலங்கை' படத்தில் சாவித்திரிக்காக, சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய, ‘ஒருமையுடன் நினது திருமலரடி’ என்ற அருட்பா, தமிழ் சினிமாவில் மிகவும் பாந்தமாக ஒலிக்கும் ஒரு தெய்வத்தமிழ் பாடல்.

'கர்ணன்' படத்தில், ராஜலட்சுமி சாவித்திரிக்காகப் பாடிய, ‘போய் வா மகளே போய் வா’, ஆனந்த பைரவி ராகத்தில் ஆனந்தமாக ஒலிக்கிறது.
‘குயில் கூவித் துயில் எழுப்ப’ என்று 'நாணல்' படத்தில் ராஜலட்சுமி பாடிய பாடல், காலை இளம் பொழுதின் அமைதியையும் இனிமையையும் தெய்வீகமாகப் பிரதிபலிக்கிறது.
‘வெள்ளைக்கமலத்திலே’, ‘திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்’ ('கவுரி கல்யாணம்'), ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ (கே.ஆர்.விஜயாவிற்கு, படம் 'திருமால் பெருமை'), ‘திருத்தணி முருகா தென்னவர் தலைவா’ ('நீலகிரி எக்ஸ்பிரஸ்') ஆகிய பாடல்கள், தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் சக்தி படைத்தவை.
'ஜீவநாடி' என்ற படத்தில் ஜேசுதாசுடன் ராஜலட்சுமி ஓர் அருமையான காதல் பாடல் பாடினார். ‘அருவி மகள் வளையோசை’ என்ற அந்தப் பாடல் அசாத்தியமான அழகுகள் கொண்டவை. ‘மல்லிகை பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு’ என்று டி.எம்.எஸ்ஸூடன் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய தாலாட்டு, ஒரு மறக்க முடியாத பாடல். பி. சுசீலாவுடன் ராஜலட்சுமி இணைந்து பாடிய, ‘குங்குமம், மங்கல மங்கையர் குங்குமம்’, ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’, ‘வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்’ முதலிய பாடல்கள், அவை கர்நாடக இசை சார்ந்தவை என்பதை மீறி, எல்லோரும் ரசிக்கும் வண்ணம் அமைந்தன. 'பாமா விஜய'த்தில், ‘ஆணி முத்து வாங்கி வந்தேன்’ என்று மிகச்சிறப்பான ஒரு பாடல். சவுகார் ஜானகி (பி. சுசீலா), ஜெயந்தி (எல்.ஆர். ஈஸ்வரி), காஞ்சனா (சூலமங்கலம் ராஜலட்சுமி) ஆகியோர் பங்கேற்கும் பாடல், ஆணி முத்தாக சுடர்விடுகிறது.
‘தெய்வம்’ படத்தில், சூலமங்கலம் ராஜலட்சுமி, எம்.ஆர் விஜயாவுடன் தோன்றி, இணைந்து பாடிய, ‘வருவான்டி தருவான்டி மலையான்டி’ பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது.
ராஜலட்சுமி, பாலசுப்ரமணியம் என்பவரை மணந்தார். தமக்கை ஜெயலட்சுமி, சினிமா தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் உயர்ந்த வி.டி. அரசுவை மணந்தார். அரசு தயாரித்து இயக்கிய ‘தரிசனம்’ படத்திற்கு, சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைத்தார். ‘டைகர் தாத்தாச்சாரி’, ‘பிள்ளையார்’ ஆகிய படங்களுக்கு சகோதரிகள் இணைந்து இசையமைத்தார்கள்.
திரைத்துறை, சூலமங்கலம் சகோதரிகளுக்கு சினிமா பிரபல்யத்தை அளித்தாலும், கோயில்களில் அவர்கள் அளித்த இசை நிகழ்ச்சிகள் மிக முக்கியமானவை. விசேஷ காலங்களில் அறுபடைவீடுகளிலும், வேறு பிரபலமான முருகன் கோயில்களிலும் இதர கோயில்களிலும், 1980களின் இறுதி வரை அவர்கள் ஏராளமான கச்சேரிகள் செய்தார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் பாடாத கோயில்களே இல்லை என்று கூறும் அளவுக்குப் பிரபலமாக இருந்தார்கள்.
அவர்களுக்கு 1973லிருந்து கடம் வாசித்தவர் புதுக்கோட்டை ராமச்சந்திரன். சகோதரிகளுடன் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை சென்று, கக்சேரிகளில் பங்குகொண்டவர். ‘‘எல்லா இடத்திலேயும் அவா கச்சேரிக்குப் பிரமாதமான வரவேற்பு இருக்கும். அவா விறுவிறுப்பா பாடற காலப்பிரமாணத்துக்கு நாம ஒரு நூறு கச்சேரி வாசிச்சப்புறம், யார் கிட்டேயும் வாசிக்கும் தகுதி வந்துடும். உருப்படிக்கு உருப்படி சின்ன இடைவெளிகூட விடாம நாலு மணி நேரம் பிரமாதமா பாடுவா...நடுவில ஒரு சொட்டுத் தண்ணீகூட குடிக்கமாட்டா,’’ என்பது சகோதரிகளுடன் 17 வருடங்கள் வாசித்தவரின் வாக்கு.

சில வித்வான்கள் சங்கீதம் எல்லாம் பிரமாதமாக வழங்கிவிட்டு, பக்கவாத்தியக்காரர்களை சரியாக நடத்தாமல் போவார்கள். ஆனால் சகோதரிகள் அப்படி இல்லை. எல்லோரிடமும் இனிமையாகப் பேசுவார்கள், நடப்பார்கள். ‘‘கூட வாசிக்கிறவங்களை விட்டுக்கொடுக்கவே மாட்டா. ரேடியோ, டிவி. ஸ்டேஷன், எல்.பி.ரிக்கார்டிங்குன்னு வேற எங்கே பாடினாலும், இவாளத்தான் கூப்பிடணும்னு சொல்லிடுவா. உதவி பண்ற மனப்பான்மை உடையவா,’’ என்கிறார் கடம் ராமச்சந்திரன்.
சிதம்பரத்தில் 1990ல் கச்சேரி செய்துகொண்டிருந்தபோது, இளையவர் ராஜலட்சுமி நோய்வாய்ப்பட்டார். அதற்குப் பிறகு அவரால் சரியாகப் பாடமுடியவில்லை. 1992ல் மறைந்தார்.
‘‘நீ ராமர் மாதிரி முன்னாடி போவே. நான் லட்சுமணன் மாதிரி பின்னாடி வருவேன்,’’ என்று தமக்கை மீது வாஞ்சை வைத்திருந்த ராஜலட்சுமி, மரியாதையாக கூறுவாராம்.
ஆனால், வயதில் தான் மூத்தவராக இருந்தாலும், இசை ஆளுமையில் தங்கை பலமானவள் என்பதை ஜெயலட்சுமி உணர்ந்திருந்தார். தங்கையின் நினைப்பில் இத்தனை வருடங்கள் வாடிக் கொண்டிருந்தவர். இப்போது, தங்கை முன்னாடி போன இடத்திற்கு அவளைத் தொடர்ந்து சென்றுவிட்டார். சகோதரிகள் இணைந்து சூட்டிய அழகு தமிழ்ப் பாமாலைகள், கோயில்கள்தோறும் ஒலித்தவாறு இருக்கின்றன.



No comments:

Post a Comment