Monday, 4 December 2017

VALLALAAR ALIAS RAMALINGA ADIGAL TOUCHES




VALLALAAR ALIAS RAMALINGA ADIGAL TOUCHES




வள்ளலார் மனுமுறைகண்ட வாசகம் என்ற நூலில் எழுதிய அறம் சார்ந்த வரிகள் !
நல்லோர் மனத்தை நடுங்க செய்தேனோ ?
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ ?
வலிய வழக்கிட்டு மானம் கேடுத்தேனோ ?
வரவு போக்கொழிய வழி அடைத்தேனோ ?
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ ?
கலந்த சிநேகிதரை கலகம் செய்தேனோ ?
களவு செய்தோருக்கு உளவு சொன்னேனோ ?
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ ?
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ ?
குடிவரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ ?
குடிக்கின்ற நீருள்ள குளத்தை தூர்த்தேனோ ?
ஏழைகள் வயிறு எரிய செய்தேனோ ?
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேனோ ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ ?
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ ?
பொது மண்டபத்தை போய் இடித்தேனோ ?
ஆசைகாட்டி மோசம் செய்தேனோ ?
அன்புடயவர்க்கு துன்பம் செய்தேனோ ?
வேலையிட்டு கூலி குறைத்தேனோ ?
வெயிலுக்கு ஒதுங்கும் விருத்ச்சத்தை அழித்தேனோ ?
பசித்தோர் முகத்தை பாராது இருந்தேனோ ?
பகை கொண்டு அயலோர் பயிரை அழித்தேனோ
கோள்பல சொல்லி குடும்பம் கலைத்தேனோ ?
கணவன் வழி நிர்ப்போரை கற்பழித்தேனோ ?
கலங்கி ஒழிந்தொரை காட்டிக் கொடுத்தேனோ ?
காதல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ ?
கற்பழித்து களித்திருந்தேனோ?
கற்றவர் தம்மை கடுகடுத்தேனோ ?
கன்றுக்கு பாலூட்டாது கட்டி வைத்தேனோ ?
குருவவை வணங்க கூசிநின்றேனோ ?
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ ?
கட்டிய கூட்டில் பதைக்க அடைத்தேனோ ?
பெரியோர் பாட்டில் குறை சொன்னேனோ ?
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ ?
தவன் செய்வோரை தாழ்வு சொன்னேனோ ?
ஆலைய கதவை அடைத்துவைத்தேனோ ?
இறையடியாரை சீறி வைத்தேனோ ?
சுத்த ஞானியரை தூஷணம் செய்தேனோ ?
மாதா பிதாவை வைத்து நின்றேனோ ?
தந்தை தாய் மொழி தள்ளி நடந்தேனோ ?
தெய்வத்தை இகழ்ந்து செருக்க்டைந்தேனோ ?
என்ன பாவம் செய்தேனோ ?

No comments:

Post a Comment