Saturday 6 April 2019

SUCHITRA SEN ,ACTRESS BORN 1931 APRIL 6- JANUARY 17,2014


SUCHITRA SEN ,ACTRESS BORN 
1931 APRIL 6- JANUARY 17,2014



சுசித்ரா சென் (Suchitra Sen, வங்காளம்: সুচিত্রা সেন, இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க ரோமா தாஸ்குப்தா[1] 6 ஏப்ரல் 1931 – 17 சனவரி 2014) வங்காள மொழித் திரைப்படங்களில் நடித்த ஒரு இந்திய நடிகை ஆவார். 1931-ஆம் ஆண்டு, வங்காளதேசத்தின் பப்னா பகுதியில் பிறந்த சுசித்ராவின் இயற்பெயர் ரமா தாஸ்குப்தா. இவரது பெற்றோர் கருணாமாய் மற்றும் இந்திரா தாஸ் குப்தா ஆவர். நடிக்க வருவதற்கு முன்பே, திபநாத் சென் என்பவரை 1947-ஆம் ஆண்டு மணந்தார். குறிப்பாக, வங்காள மொழித் திரைப்படங்களில் மற்றொரு முன்னணி நடிகராகத் திகழ்ந்த உத்தம் குமாருடன் இணைந்து நடித்த திரைப்படங்கள், வங்காள மொழித் திரைப்படங்களில் எல்லாக் காலத்திலும் புகழ்பெற்றவைகளாகக் கருதப்படுகின்றன. அவர் திரைப்படத்துறையை விட்டு விலகிய போது, வங்காள வெள்ளித் திரையில் முன்னணி நடிகை என்ற நிலையை மெதுவாக இழந்து வந்தார்.

ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகையாக சுசித்ரா சென் விளங்கினார் (1963 மாஸ்கோவ் திரைப்பட விழாவில் சாட் பாக்கே பந்தா திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றார்). உத்தம் குமாருடன் அவரது திரைப்படங்கள் ETV பங்கலா, ஆகாஷ் பங்கலா, DD7 பங்கலா மற்றும் பல வங்காள டிவி அலைவரிசைகளில் இன்றும் ஒளிபரப்பப்படுகின்றன; அதில் பல திரைப்படங்கள் வீடியோ குறுந்தகட்டில் கிடைக்கக்கூடியதாக உள்ளன. குறிப்பாக, அவர் 2005 ஆம் ஆண்டில் தாதாசாஹேப் பால்கே விருதை பெறுவதற்கு மறுத்து விட்டார்; பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருப்பதற்காகவே அவர் இந்த விருதை வாங்க மறுத்து விட்டார்.[2] 2012இல் மேற்கு வங்காள அரசின் மிக உயரிய விருதான பங்க பிபூசன் விருது இவருக்கு வழங்கபட்டது.[3] 2014 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17தேதி, மார்ப்பு புற்றுநோயிற்கு மருத்துவம் எடுத்துக் கொண்டிருந்த போது, மாரடைப்பால், தனது 82 வயதில் காலமானார்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி
பிரிட்டிஷ் இந்தியாவின் (தற்போதைய பங்களாதேஷ்) பப்னா என்ற இடத்தில் சென் பிறந்தார். அவரது தந்தையான கருணாமோய் தாஸ்குப்தா உள்ளூர் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார், அவரது தாயார் இந்திரா தாஸ்குப்தா ஆவார். சென் அவர்களுக்கு ஐந்தாவது குழந்தையும் மற்றும் மூன்றாவது மகளும் ஆவார். சென் அவரது துவக்கக் கல்வியை பப்னாவில் மேற்கொண்டார்.

1947 ஆம் ஆண்டில், மிகவும் வளமான வங்காளத் தொழிலதிபர் ஆதிநாத் சென்னின் மகனான தீபநாத் சென்னை அவர் திருமணம் செய்து கொண்டார். புகழ்பெற்ற நடிகையான மூன் மூன் சென் அவர்களின் மகளாவார்.

சென் தனது திருமணத்திற்குப் பிறகு, 1952 ஆம் ஆண்டில் வங்காள மொழித் திரைப்படங்களில் வெற்றிகரமாக அறிமுகமானார், பின்னர் இந்தித் திரைப்படத் துறைக்கு சென்ற அவருக்கு குறைவான வெற்றியே கிடைத்தது. வங்காளச் செய்தி ஊடகங்கள் மூலமான சில ஊர்ஜிதமற்ற ஆனால் உறுதியான அறிக்கைகளின் அடிப்படையில், திரைப்படத்துறையில் சென்னின் திருமணம் அவரது வெற்றியைக் கடுமையாகப் பாதித்தது.

சுசித்ராவின் மகள் மூன் மூன் சென் வங்காள திரைப்படங்களில் பிரபலமடைந்தாலும், தனது தாயை விட, அவரால் புகழை ஈட்ட முடியவில்லை. சுசித்ராவின் பேத்திகள் ரியா சென், ரெய்மா சின் ஆகிய இருவரும் கூட ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தனர். தமிழில், பாரதிராஜாவின் திரைப்படமான தாஜ்மகாலில், ரியாசென் அறிமுகமானார்.

தொழில் வாழ்க்கை
தொடக்கத்தில், நடிப்பதை விட பாடுவதில்தான் சுசித்ராவின் ஆர்வம் இருந்தது. 1951-ஆம் ஆண்டு, பிண்ணனிப் பாடகி வாய்ப்பிற்க்காக அவர் பாட சென்றபோதுதான், இயக்குனர் சுகுமார் தாஸ்குப்தா நடிக்க வாய்ப்பு வழங்கினார். சுகுமாரின் உதவி இயக்குனர் நிதிஷ் ராய் என்பவர் தான், சுசித்ரா என்கிற பெயரை வைத்தார். 1952 ஆம் ஆண்டில் சென் ஷேஷ் கோத்தே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், ஆனால் அத்திரைப்படம் வெளிவரவே இல்லை. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில் சரே சவுத்தர் என்ற திரைப்படத்தில் உத்தம் குமாருக்கு ஜோடியாக அவர் நடித்தார். அத்திரைப்படம் வசூல் ரீதியாக (Box-Office) பெரும் வெற்றியைப் பெற்றது. 1953-ஆம் ஆண்டு, அவரது மற்ற மூன்று படங்களும் வெளியானது. 1954-ஆம் ஆண்டு, அக்னி பரிக்‌ஷா திரைப்படம், தொடர்ந்து 15 வாரங்கள் அரங்கு நிறந்த காட்சிகளாக ஓடி சாதனை படைத்தது. மேலும் உத்தம்-சுசித்ரா இருவரும் முன்னணி ஜோடிகளாக நினைவு கூறப்பட்டனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வங்காள நாடகங்களின் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்தனர். பெரும்பாலும் அவர்களுடைய வாழ்க்கை நடைமுறைக்காட்சிகளுக்காக எடுத்துக் கூறப்பட்டன.

அவரது முதல் இந்தித் திரைப்படமான தேவ்தாஸ் (1955) திரைப்படத்திற்காக, அவர் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். குறிப்பாக உத்தம் குமாருடன் அவரது காப்புரிமைபெற்ற வங்காள நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகள், அவரை எக்காலத்திலும் மிகவும் பிரபலமான வங்காள நடிகை ஆக்கியது. 1960கள் மற்றும் 1970களில் அவரது திரைப்படங்கள் நன்றாக ஓடின. அவரது கணவர் இறந்த பின்பும் சென் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார், அவற்றில் அவர் அரசியல்வாதியாக நடித்த ஆன்ந்தி (1974) என்ற இந்தியில் வெற்றிபெற்ற திரைப்படமும் அடங்கும். இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியை ஆன்ந்தி திரைப்படம் கவர்ந்தது. சென் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார், அதேசமயம் அவரது கணவர் பாத்திரத்தில் நடித்த சஞ்சீவ் குமார் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சாட் பாக்கே பந்தா திரைப்படத்திற்காக மாஸ்கோ திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அவர் வென்றதன் மூலம், 1963 ஆம் ஆண்டில் அவர் சர்வதேச அளவில் வெற்றி பெற்றார். உண்மையில், சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது பெறும் முதல் பெண் சென் ஆவார்.

தேதிப் பிரச்சினை காரணமாக சத்யஜித்ரேயின் திரைப்படத்தில் நடிக்கக் கோரியதை ஏற்க மறுத்ததன் காரணமாக, தேவி சவுதுராணி திரைப்படத்தை சத்யஜித்ரே எடுக்கவே இல்லை. RK தயாரிப்பு
நிறுவனத்தின் கீழ் ராஜ் கபூரின் கோரிக்கையையும் அவர் ஏற்க மறுத்து விட்டார். 25 ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைப்படத் தொழில் வாழ்க்கைக்குப் பின்னர், அமைதியான வாழ்க்கைக்காக 1978 ஆம் ஆண்டில் வெள்ளித் திரையில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் தனது ஓய்விற்குப் பிறகு பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருந்தார், மேலும் அவரது நேரத்தை ராமகிருஷ்ணா மிஷனில் ஈடுபடுத்திக்கொண்டார்.[1] 2005 ஆம் ஆண்டின் தாதாசாஹேப் பால்கே விருதிற்கான போட்டியாளராக சுசித்ரா சென் இருந்தார், அவ்விருதை அவர் நேரில் வந்து வாங்வதற்குத் தயாராக இருந்தால்
வழங்கப்படுவதாக இருந்தது. அந்த விருதைப் பெறுவதற்கு அவர் புது டெல்லி செல்வதை மறுத்ததால், தனிப்பட்ட முறையில் இந்தியாவின் குடியரசுத்தலைவரிடமிருந்து அந்த விருதைப் பெறும் வாய்ப்பை இழந்தா


No comments:

Post a Comment