ஜிதேந்திராவுக்கு எதிராக, ஷிம்லா போலீசார், எப்.ஐ.ஆர்


ஜிதேந்திராவுக்கு எதிராக, 
ஷிம்லா போலீசார், எப்.ஐ.ஆர்



 பிரபல பாலிவுட் நடிகர், ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர் உறவுப் பெண் அளித்த புகாரின்படி, போலீசார், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர்.பாலிவுட் நடிகர், ஜிதேந்திரா, 75, மீது, அவரது நெருங்கிய உறவுப் பெண், ஹிமாச்சல பிரதேச போலீசுக்கு அளித்த புகார்:நடிகர் ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள, ஷிம்லா நகரில் நடக்கும் சினிமா படப்பிடிப்பை காண வரும்படி, என்னை அழைத்தார்.
அப்போது, எனக்கு வயது, 18. ஷிம்லா நகர ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, இரவில் என் அறைக்கு வந்த ஜிதேந்திரா, என்னை பலாத்காரம் செய்தார். அவர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த புகாரின்படி, ஜிதேந்திராவுக்கு எதிராக, ஷிம்லா போலீசார், எப்.ஐ.ஆர்., பதிவு செய்துஉள்ளனர்.இது குறித்து, போலீஸ் கண்காணிப்பாளர், உமாபதி ஜம்வால், நிருபர்களிடம் கூறியதாவது:ஜிதேந்திரா மீது, ஒரு பெண், இ - மெயிலில், பாலியல் புகார் அளித்துள்ளார். பின், எழுத்து மூலம் புகாரை அனுப்பி உள்ளார்.
அதன்படி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1971ம் ஆண்டு நடப்பில் இருந்த சட்டப்படி, இப்புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.புகார் அளித்த பெண், நடிகருடன் தங்கியிருந்த ஓட்டல் பெயரை, இதுவரை தெரிவிக்கவில்லை. அங்கு தங்கி இருந்ததற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.நடிகர், ஜிதேந்திரா மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகாரை, அவரதுவழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

PARAVAS OF TAMILNADU