Sunday 21 April 2019





1970-களில், இந்தியாவின் உயரமான விமான படைத் தளமாக இருந்தது ஸ்ரீநகர் தான். ஸ்ரீநகரில் உள்ள அவந்திபூர், விமானப்படை தளத்துக்கு போகும் படி ஃப்ளையிங் ஆஃபீஸர் நிர்மல்ஜித் சிங் செகான் மற்றும் ஃப்ளைட் லெஃப்டினன்ட் கும்மனுக்கு இந்திய விமானப் படை தலைமையகத்தில் இருந்து உத்தரவு.   விங் கமாண்டர் சங்கசி பாகிஸ்தானின் விமானப் படை விங் கமாண்டர் சங்கசி, பாகிஸ்தான் விமானப்படை தலைமையகத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறார். 1965 இந்தோ - பாக் போரில் பாகிஸ்தானின் விமானப்படையைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு வெற்றிகளை தேடித் தந்தவர்களில் முக்கியமானவர். அவருக்கு ஒரு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆவணத்தை பார்வையிட்ட சங்கசி முகத்தில் ஒரு வன்மப் புன்னகை. சங்கசி தன் உதவியாளரிடம் பட்டியலை நீட்டுகிறார். இவர்கள் அனைவரும் நாளை (டிசம்பர் 14, 1971) காலை 2.00 மணிக்குள் சக்லாலாவில் (இன்றைய இஸ்லாமாபாத் விமானப் படைதளம்) இருக்க வேண்டும். பாக் திட்டம் டிசம்பர் 14, 1971. காலை 01.58-க்கு சங்கசி அரங்கிற்குள் நுழைகிறார். இந்தோ - பாக் போரின் போக்கையே நாம் மாற்றப் போகிறோம். Are you ready? என்று கூட்டத்தை தொடங்குகிறார். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு விமானப் படை தளத்தை அழிக்கணூம், அவ்வளவு தான் சிம்பில். எந்த விமானப் படைத்தளம்..? அவந்திப்பூர் விமானப் படைத்தளம், ஸ்ரீநகர், இந்தியா. "ஏன்...? பாக் ஃப்ளைட் லெஃப்டினன்ட் சலீம் கேட்கிறார். இந்தோ - பாக் போர் ஒப்பந்ததின் படி ஜம்மு காஷ்மீர் விமானப் படை தளத்தில், இந்தியா அதிக போர் விமானங்களையோ, போர் தளவாடங்களையோ நிறுத்தாது. நிறுத்தவும் கூடாது. எனவே ஜம்மு விமானப் படை தளத்தில் இருந்து இந்திய ராணுவத்துக்கான பொருட்களை முழுமையாக சப்ளை செய்ய முடியாது. இப்போது வரை இந்தியா அப்படி செய்வதும் இல்லை.   ராணுவ தளவாடங்கள் இந்திய ராணுவத்துக்கு, குறிப்பாக காலாட்படைக்குத் தேவையான ஆயுதங்கள், உணவு, மருந்துகள் என்று காஷ்மீர் எல்லைக்கு பொருட்களை விரைவாக கொண்டு வந்து கொண்டிருக்கும் ஒரே வழி இந்த அவந்திபூர் விமானப் படை தளம்தான். அதை அழித்துவிட்டால், இந்திய ராணுவத்துக்கு தேவையான எந்த ஒரு ஆயுதம்... ஏன் குண்டூசி கூட கிடைக்காது. நாம் அவந்திப்பூரை அழித்துவிட்டால், ஜம்மு காஷ்மீரில் எல்லையில் போரிடும் இந்திய ராணுவத்துக்கு தேவையான பொருட்களை நிலம் வழியாக மட்டுமே கொண்டுவர முடியும். இந்தியர்கள் பயன்படுத்தும் சோழா ரேஞ்சுகள் டிசம்பர் மாதப் பனிப் பொழிவு, பனிச் சரிவு, நிலச் சரிவுகளைத் தாண்டி வர வேண்டும். அப்படியே பொருட்களை கொண்டு வர வேண்டும் என்றாலும் மிகக் குறைந்தபட்சம் 36 - 48 மணி நேரம் ஆகும். அதற்குள் நம் பாக் ராணுவம் காஷ்மீரை கைப்பற்றி, பாகிஸ்தான் கொடியை நாட்டி விடும், என மொத்தத் தாக்குதல் திட்டத்தையும் 6 விமானிகளுக்கும் விளக்குகிறார் சங்கசி. அவந்திபூர் விமான படை தளம் பிரதான இலக்கு அவந்திபூர் விமானப் படைதளத்தை முழுமையாக அழிப்பது. போர் விமானங்களையும், ஏடிசி என்றழைக்கப்படும் விமான கண்காணிப்பு கோபுரங்களையும் சுக்குநூறாக தகர்க்க வேண்டும் என்று சங்கசி முழங்குகின்றார். தேவையான ராக்கெட் ஏவுகணைகள், வெடி குண்டுகள், துப்பாக்கி குண்டுகளைத் தாராளமாக அனைத்து விமானங்களிலும் நிரப்பச் சொல்கிறார். இந்தியாவில்... இந்தியாவில், அவந்திபூரில், விமான கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து ரோந்து செல்வதற்கான அனுமதிக்காக கும்மனும், நிர்மல்ஜித் சிங் செகானும் காத்திருக்கிறார்கள். பாக் வீரர்கள் தங்கள் திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு சேபர் (SABRE) ரக விமானங்களை எடுத்துக் கொண்டார்கள். அமெரிக்கர்களால் கண்டு பிடிக்கப்பட்டு, அமெரிக்க விமானப் படையில் 1940-களில் சேர்க்கப்பட்டு, 1950-களிலேயே அவுட் ஆஃப் டேட் ஆன விமானம். அந்த காலத்திலேயே ஜப்பான், ஸ்பெயின், கொரியா என்று சேபரை பயன்படுத்திய நாடுகள் பட்டியல் நீள்கிறது. இன்றுவரை அதிகம் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் பெயர்களில் சேபருக்கும் இடம் உண்டு. அந்த அளவுக்கு terrific ஆன heavy ஃபைட்டர் விமானம் பாகிஸ்தானின் சேபர். ஆனால் இதை எதிர்கொள்ள, வடிவத்திலும், கொள்ளளவிலும், திறனிலும் சிறிய நாட் (GNAT) ரக விமானங்கள் தான் அவந்திபூரில் துடைத்து பெட்ரோல் போட்டுக் கொண்டிந்தார்கள் நம் இந்தியர்கள். இது இங்கிலாந்து விமானப் படையினரால் பயன்படுத்தப்பட்ட லைட் ஃபைட்டர் விமானம். இந்தியாவின் நாட் (GNAT) நீளம் 8.7 மீட்டர், அகலம் 6.7 மீட்டர், அதிகபட்ச டேக் ஆஃப் எடை 4,100 கிலோ, வேகம் மணீக்கு 1120 கிமீ, அதிகபட்ச பறக்கும் உயரம் 48000 அடி, ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக பறக்கும் உயரம் 20,000 அடி. பாகிஸ்தானின் சேபர் (SABRE) நீளம் 11.4 மீட்டர், அகலம் 11.3 மீட்டர், அதிகபட்ச டேக் ஆஃப் எடை 8,234 கிலோ, வேகம் மணீக்கு 1106 கிமீ, அதிகபட்ச பறக்கும் உயரம் 49600 அடி, ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக பறக்கும் உயரம் 9,000 அடி. இரண்டிலும் கடைசி விவரத்தை மட்டும் கவனிக்கவும் இந்திய விமானத்தில் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக பறக்கும் உயரம் 20,000 அடி, ஆனால் பாகிஸ்தான் விமானத்தில் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக பறக்கும் உயரம் வெறும் 9,000 அடி தான். பாகிஸ்தானின் தந்திரம் நிர்மல்ஜித் சிங் செகானும், கும்மனும் தங்கள் அறைக்கு சென்று ரோந்துக்கு தயார் ஆகிறார்கள். அதற்குள் பாக் விமானிகள் சக்லாலாவில் இருந்து சேபரோடு அவந்திபூர் விமானப்படை தளத்தை நோக்கி 30 நிமிட போர் பயணத்தை தொடங்குகிறார்கள். சக்லாலாவில் இருந்து இந்தியாவின் புஞ்ச் வரை சுமார் 500 - 1000 அடி உயரத்தில் லோ ஃப்ளையிங் செய்கிறார்கள். இப்படி லோ ஃப்ளையிங் செய்வதால் ஸ்ரீநகரின் விமானக் கண்காணிப்பு கோபுரத்தால் சேபர் ரக விமானங்களை கண்டு பிடிக்க முடியாது என்று கணக்கிட்டே பறக்கின்றன சேபர்கள். தாக்குதல் திட்டம் புஞ்ச் பகுதியை கடப்பதற்குள், சேபர்கள் திடீரென விண்ணை நோக்கி பாய்கின்றன. விமானங்கள் உடனடியாக 16,000 அடிக்கு பறக்குமாறு பாக்கின் முக்கிய விமான வீரரான ஃப்ளைட் லெஃப்டினன்ட் சலீம் கட்டளையிடுகிறார். ‘விமானம் 16,000 அடியில் பறந்து கொண்டே அவந்திப்பூரை நெருங்கும் போதே ஶ்ரீநகரின் கண்காணிப்பு கோபுரம் நம்மைக் கண்டுபிடித்துவிடும். அவந்திப்பூருக்கு செய்தி கிடைத்து அவர்கள் தயாராக 6 நிமிடங்களாவது தேவைப்படும். அந்த 6 நிமிடத்துக்குள், குண்டு மழை பொழிந்து இந்திய வரைபடத்தில் இருந்து அவந்திப்பூர் விமானப் படைதளத்தை அழித்து விட வேண்டும்' - இதுதான் பாகிஸ்தானின் திட்டமாக இருந்தது. அலெர்ட்டான இந்தியா ஸ்ரீநகரின் கண்காணிப்பு கோபுரத்திற்கு பாகிஸ்தானின் சேபர்கள் நுழைந்தது தெரிய வருகிறது. உடனடியாக விமானப்படை தலைமையகத்துக்கு தகவல் சொல்லி ஜம்முவில் இருந்து உதவி கோருகிறார்கள். ஜம்முவில் இருந்து உதவி கிடைக்க குறைந்தது 25 நிமிடங்கள் ஆகும் அதுவரை நாம்தான் தாக்கு பிடிக்க வேண்டுமென வீரர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். அபாய ஒலி கேட்ட உடன் நிர்மல்ஜித் சிங் செகானும், கும்மனும் தங்கள் நாட் விமானங்களை டேக் ஆஃப் செய்ய முயற்சிக்கிறார்கள். 0 - 3 நிமிடம் - 1 அதே நேரத்தில் சலீம் தாக்குதலுக்கான உத்தரவுகளை மற்ற விமானிகளுக்கு பிறப்பிக்கிறார். "நம் தாக்குதல் அதே 16,000 அடியில் இருந்து நடத்த வேண்டும். அப்போதுதான் நிலத்தில் இருந்து யாரும் நம்மை தாக்க முடியாது. மிக முக்கியமான விஷயம் ஒரு இந்திய போர் விமானம் கூட டேக் ஆஃப் ஆகக் கூடாது" என்ற உத்தரவோடு SNEB 68 mm ராக்கெட்கள் அவந்திப்பூரின் விமானப் படை ஓடு தளத்தை நோக்கி பாகிஸ்தானின் நேபரில் இருந்து பறக்கின்றன. 0 - 3 நிமிடம் - 2 முதல் ராக்கெட் ஓடு தளத்தில் வெடிப்பதற்கும் கும்மன் தன் நாட் விமானத்தை ஓடு தளத்தில் டேக் ஆஃப் செய்வதற்கும் சரியாக இருந்தது. நிர்மல்ஜித் சிங் செகானின் விமானம் ஓடு தளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போதே சில மீட்டர்கள் வித்தியாசத்தில், பின்னால் ஒரு ராக்கெட் ஓடு தளத்தில் வெடித்து சேதப்படுத்துகிறது. விமானத்தின் வேகத்தை கூட்டிக் கொண்டே இருக்க தொடர்ந்து அவர் பின்னால் ராக்கெட்களையும், குண்டுகளையும் பொழிந்த வண்ணம் ஓடு தளத்தை சிதைத்துக் கொண்டிருந்தது பாகிஸ்தானின் சேபர்கள். 0 - 3 நிமிடம் - 3 கும்மனுக்கோ சில இயந்திரக் கோளாறுகளால் சரியாக பார்க்க முடியாமல் போகிறது. ஒரு வழியாக டேக் ஆஃப் செய்திருந்த செகான் இப்போது உலகிலேயே யாரும் நினைத்து கூட பார்க்காத வேலையை ஒருவராக செய்கிறார். 1 நாட் ரக விமானத்தை கையாண்டு, 6 சேபர் ரக விமானங்களை சமாளித்துக் கொண்டே, அவர்களை தாக்குகிறார். ஆம் 1:6! உலகில் எந்த விமானப் படை வீரரும் செய்யாத ஒரு விஷயம். 3 - 15 நிமிடம் 1 சேபரின் வேகம், கொள்ளளவு மற்றும் பிரதான துப்பாக்கிகள் பற்றி நிர்மல்ஜித் சிங் செகானுக்கு தெரிந்திருந்தது. எனவே கூடுமான வரை தனக்கும், தன்னை பின் தொடரும் சேபர்களுக்கும் சுமார் 200 - 2500 மீட்டர் இடைவெளியாவது இருக்கும் படி பார்த்துக் கொண்டார். சேபர்களில் இருக்கும் M3 பிரவுனிங் மெஷின் கன் ரக துப்பாக்கிகள், 1800 மீட்டர் வரை குண்டுகள் பாயும் என்பதால் இந்த தூரத்தை தக்க வைத்துக் கொண்டார். 3 - 15 நிமிடம் 2 தன் கண் முன் பறந்த இரண்டு சேபர்களை இலக்குகளாக வைத்துக் கொண்டார். தன்னிடம் இருப்பதோ ADEN கெனான் ரக 30 MM துப்பாக்கிகள், இவை 1200 மீட்டர் வரை குண்டுகள் பாயும் என்பதால் சுமாராக 1000 மீட்டராவது நெருங்கி தாக்க வியூகம் வகுத்தார். முதல் சேபரை தாக்குதல் வட்டத்துக்குள் கொண்டு வந்து வாலில் தாக்கினர். சுக்கு நூறானது. This is nirmal, one down on six pak sabre என்று தகவலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 3 - 15 நிமிடம் 3 முதல் சேபர் அடிவாங்கும் போதே இரண்டாவது சேபர் செகானின் தாக்குதல் வட்டத்தில் இருந்து வெளியே போகத் தொடங்கியதை கவனித்தார். இரண்டாவது சேபரை துரத்தும் போதே தன்னை இன்னொரு சேபர் நெருங்குவதையும் உணர்ந்து உடனடியாக விண்ணை நோக்கி அதிவேகத்தில் பாய்கிறார். உடனடியாக விண்ணில் பறப்பதில் நாட் மிகச் சிறந்தவை. விண்ணை நோக்கி பறந்தவர் திடீரென அதே வேகத்தில் மூன்றாவது சேபரின் பின் பறந்து வந்து தாக்கத் தொடங்கினார். சேபரால் விரைவாக விண்ணை நோக்கிப் பறக்க முடியாததை தெரிந்திருந்த செகான், மூன்றாவது சேபரின் இறக்கைகளை தாக்கி விமானத்தை செயல் இழக்கச் செய்தார். Guys, Two down on six pak sabre. 15 - 25 நிமிடம் 1 நிர்மல்ஜித் சிங் செகானின் பறக்கும் திறனை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த சலீமுக்கு, செகானை சாய்ப்பதற்கான திட்டமும் கிடைக்கிறது. உடனடியாக மீதமுள்ள 3 சேபர்களையும் செகானின் தாக்குதல் வட்டத்துக்கு அருகில் வருமாறு கட்டளை இடுகிறார். 3 சேபர்கள் முன்னுக்கு வரும் அதே நேரத்தில் சரியாக செகானின் தலைக்கு சற்று பின்னே சலீம் தன் விமானத்தை கொண்டு வருகிறார். இப்போது 3 சேபர்களையும் முழு வேகத்தில் செகானிடம் இருந்து தப்பித்து செல்லச் சொல்லி விட்டு, தன் தாக்குதலைத் தொடங்குகிறார் சலீம். 15 - 25 நிமிடம் 2 நிர்மல்ஜித் சிங் செகான் இரண்டு சேபர்களை வீழ்த்துவதற்கு தன்னிடம் இருந்த அத்தனை குண்டுகளையும் பயன்படுத்தி இருந்தார். இனி தாக்க தன்னிடம் குண்டு இல்லை என்பதை உணர்ந்த செகான் பாதுகாப்பு யுக்திகளை கையாளத் தொடங்கினார். சலீமுக்கும், செகானுக்குமான உக்கிரமான மோதல் அவர்கள் கையாளும் விமானங்களில் வெளிப்பட்டது. சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த செகான் திடீரென லோ ஆல்டிட்யூட் ஃப்ளையிங் செய்யத் தொடங்கிறார். இதிலும் நாட் ரக விமானங்கள் தான் முந்தின. சேபர் லோ ஃப்ளையிங் செய்யத் தொடங்கும் போது மீண்டும் விண்ணை நோக்கி விருட்டென பறக்கத் தொடங்கினார். 15 - 25 நிமிடம் 3 இனி தனி ஒருவனாக செகானை சமாளிக்க முடியாதென, 3 சேபர்களையும் தான் பறக்கும் இடத்துக்கு கச்சிதமாக 3000 அடி வித்தியாசத்தில் ஒரு விமானத்தின் கீழ் ஒருவராக வரச் சொன்னார் சலீம். இப்போது கூட்டுத் தாக்குதல். 4 சேபருடன் செகானின் நாட் விமானத்தை 12,000 அடி வரை கவர் செய்தார்கள். செகானுக்கு அவர்கள் அணியாக திரண்டு தாக்கப் போவது புரிந்தது. சலீமின் திறமையான வியூகத்தில் அபிமன்யுவாக சிக்கினார் செகான். இருப்பினும் யாருடைய தாக்குதல் வட்டத்துக்குள்ளும் சிக்காமல் சமாளித்துக் கொண்டிருந்தார். 15 - 25 நிமிடம் 4 3 சேபர் + சலீமின் சேபர் ஆக 4 சேபர்களும் ஒரு சேர ராக்கெட்களை ஏவுவது, ஒரே நேரத்தில் செகானை நோக்கி M3 பிரவுனிங் மெஷின் கன் ரக துப்பாக்கிகளை சுடுவது என்று மாற்றி மாற்றி தாக்குதலை தொடர்ந்தார்கள் பலனளிக்கவில்லை. பாகிஸ்தானின் சக்ர வியூகம் சலீமுக்கு, செகான் ஏன் சேபர்களை தாக்கவில்லை என்று கேள்வி எழ, உண்மையாகவே செகானிடம் ஆயுதம் தீர்ந்து விட்டதா என சோதிக்க ஒரு சேபரை செகானின் தாக்குதல் வட்டத்தில் வெறும் 500 மீட்டர் தூரத்தில் பறக்கச் சொன்னார் சலீம். செகானிடமிருந்து குண்டு பாயவில்லை. சலீமுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. சக்ர வியூகத்தை பயன்படுத்தினார் சலீம். செகானின் நாட் விமானத்தை இரண்டு ஜோடி சேபர்களாக பிரிந்து ஒரு ஜோடி செகானுக்கு முன்னும், ஒரு ஜோடி செகானுக்கு பின் புறத்தையும் கவர் செய்து தாக்கத் தொடங்கினார்கள். சலீமின் சக்ர வியூகத்தால் செகானின் நாட் பலமாக தாக்கப்பட்டது. அப்பாடா ஒழிந்தான் எதிரி என மீண்டும் அவந்திபூரை நோக்கி விமானத்தை திருப்புவதற்குள் இந்திய விமானப்படை விமானங்கள் சேபர்களை சூழ முயற்சி செய்ததை சலீம் கவனித்தார். உடனடியாக முழு வேகத்தில் சக்லாலாவை நோக்கி பறக்குமாறு கட்டளை பறந்தது. அறைகுறை தாக்குதலோடு அவந்திப்பூர் தப்பியது. ரன் வேயில் கொஞ்சமே கொஞ்சம் பாதிப்பு   கடைசி வார்த்தைகள் "கும்மன், நா தாக்கப்பட்டேன்னு நினைக்கிறேன், வாங்க "என்று பேசியது தான் செகானின் கடைசி வார்த்தைகள். குண்டுகளால் துளைக்கப்பட்ட விமானம், எந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை காப்பாற்றப் போராடியதோ, அதே பள்ளத்தாக்கில் வெடித்துச் சிதறியது. 26 வயது இளம் சிங்கம், எதிரிகளை வேட்டையாடிய களைப்பில் வீர சொர்க்கம் அடைந்தான். அவந்திப்பூரையும், காஷ்மீரையும் காத்த மாவீரனை காண முடியவில்லை என இந்திய ராணுவம் கதறி அழுதது. இவன் எங்கள் குலக் கொழுந்து, எங்கள் வீட்டு பிள்ளையின் உடலை எப்படியாவது கண்டுடெடுப்போம் என மாதக் கணக்கில் தேடி கிடைக்காமல் போக காஷ்மீர் குளிரில் கண்ணீர் உறைந்தது ராணுவத்தினருக்கு. எங்களில் ஒருவனை, இந்தியாவின் சிறந்த வீரனை எங்களால் காண முடியவில்லையே என்று வெதும்பிப் போனது. கெளரவங்கள் நிர்மல்ஜித் சிங் செகானின் வீரத்தை பறை சாற்றும் வகையில் அவரது சிலையை லூதியானா மாவட்ட நீதிமன்றத்துக்கு முன் நிறுவி இருக்கிறார்கள். இந்திய விமானப் படையோ தன் வீரப் புதல்வனை, பரம் வீர் சக்ரா முதல்வனை பலம் நகரில் உள்ள விமானப் படை அருங்காட்சியகத்தில் ஒரு சிலை வைத்து, அவர் விரும்பி ஓட்டிய நாட் விமானத்தையும் அவருக்கு அருகில் நிறுத்தி பெருமையடைந்திருக்கிறார்கள். அவரின் பெயரை ஒரு மெரைன் டாங்கருக்கு வைத்திருக்கிறது இந்திய ராணுவம். சலீமின் பாராட்டுக்கள் பாக் விமானப் படையின் ஃப்ளையிங் லெஃப்டினன்ட் சலீம் "தன்னிடம் ஆயுதம் இல்லை என்பதை கூட பொருட்படுத்தாமல் எங்களை பயமுறுத்திய செகானின் திறமை அபரிமிதமானது" என்றார். ஓய்வுபெற்ற பாகிஸ்தான் ஏர் கமான்டர் கேசர் தூஃபல் "சேபர்களுக்கு இணையாக லைட் ஃபைட்டரான நாட் ரக விமானத்தை வைத்து எங்களை கதி கலங்க வைத்த செகானை நான் எப்படி மறப்பேன்! ஒரு இலக்கை முடித்த உடன் அடுத்த சில நிமிடங்களில் அபாயகரமான தாக்குதலை தொடுக்கும் செகான் அந்த 25 நிமிடங்களும், எனக்கு எமனாகவே தெரிந்தார்" என செகானின் வீரத்தைப் புகழ்ந்திருக்கிறார். உடல் கிடைத்ததா? பாரதத் தாயின் அழகிய சிகையாய் இருக்கும் காஷ்மீரத்தை காத்த செகானுக்கு, இந்திய அரசின் உயரிய ராணுவ விருதான ‘பரம் வீர் சக்ரா' வழங்கி கெளரவித்தது. இன்றுவரை இந்திய விமானப் படையில் ‘பரம் வீர் சக்ரா' பெற்ற ஒரே வீரர் நிர்மல்ஜித் சிங் செகான் தான். ஆனால் இன்று வரை விமானப் படையினர் நிர்மல் ஜிங் சிங் செகானின் உடல் கிடைத்து அவருக்கு இறுதி மரியாதை செய்திவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இன்னும் சிலரோ அவரின் உடல் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் விமான தாக்குதலிலேயே அவரின் விமானம் வெடித்துச் சிதறிவிட்டது. அவரின் உடலை தேடிக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. மகன் விருதைப் பெறும் தகப்பன் அதே இந்திய விமானப் படையில் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றி வந்த நிர்மல்ஜித் சிங்கின் தந்தை தர்லோக் சிங் செகான், தன் மகனுக்கான விருதை பெருமிதத்தோடு பெற்றுக் கொண்டார். "என் விருதை அவன் பெறுவான் என்று நினைத்தால், அவன் விருதுகளை என்னை சுமக்க வைத்துவிட்டன். என் தேசத்தை காத்த எங்கள் சக அதிகாரிக்கும் என் முதல் மரியாதை. என் குடும்பக் கொழுந்து தான் அவந்திப்பூர் படை தளத்தையே காத்திருக்கிறது என்கிற கெளரவத்தில் என் மகனை நினைத்து பெருமை படுகிறேன்" என்று மீசையை முறுக்கிச் சொன்னார் தர்லோக் சிங் செகான். நிர்மல்ஜித் சார்... இனிய இந்திய விமானப் படை தினம். சல்யூட். ஜெய்ஹிந்த்... !   தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க 

No comments:

Post a Comment