Thursday, 31 October 2019

KARNAN IN MAHABHARAT-KRISHNA REVEALS



KARNAN IN MAHABHARAT-KRISHNA REVEALS




மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டு விட்டார். முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?
நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை. இது என் தவறா?
பரசு ராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார். இது என் தவறா?
ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது . அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.
திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்.
குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது, துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்
அதற்கு கிருஷ்ணன் பதிலாக
"கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.
நீ சிறுவயதிலிருந்து, வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலைக் கேள்விப்பட்டிருப்பாய்..
ஆனால் நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன
நல்ல கல்வி இல்லை.
இராணுவ பயிற்சி இல்லை.
ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்
நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிற போது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!
நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்து கொண்டேன்.
ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!
துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன் தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்.
கர்ணா ஒன்றை நினைவில் கொள்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.
ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும்.
எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுத்தப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானது அல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.
நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை.
எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை என்பது ஒரு பாதை. சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் . அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல. நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.

Wednesday, 30 October 2019

V.SHANTARAM ,ACTOR,DIRECTOR AND PIONEER OF INDIAN CINEMA BORN NOVEMBER 18,1901 - OCTOBER 30,1990







V.SHANTARAM ,ACTOR,DIRECTOR AND 
PIONEER OF INDIAN CINEMA BORN 
NOVEMBER 18,1901 - OCTOBER 30,1990





வி. சாந்தாராம் (V. Shantaram / Shantaram Rajaram Vankudre / சாந்தாராம் ராஜாராம் வணகுத்ரே நவம்பர் 18, 1901 – அக்டோபர் 30, 1990) இந்தியத் திரைப்பட்ட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமாவார்[2]. 'ஜனக் ஜனக் பாயல் பாஜே' என்ற இந்தியாவின் முதல் டெக்னிக் கலர் படத்தை இயக்கியவர் இவர்.

பிறப்பு மற்றும் திருமணம்
மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் 1901-ல் பிறந்தார். இவரின் முதல் மனைவி நடிகை ஜெயஸ்ரீயை மணந்தார். பின் அவருடன் மனக்கசப்பு ஏற்படவே அவர்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. பின் ஜனக் ஜனக் பாயல் பாஜே திரைப்படத்தின் கதாநாயகியான சந்தியாவை மறுமணம் செய்துகொண்டார்.

இவரது மகள் ராஜ்யஸ்ரீ ஆவார். இவரும் மிக பெரிய நடிகையாவார். காதல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.

வெற்றிப் படங்கள்
கோட்னீஸ் என்ற படம் இவருக்கு பேரும் புகழும் சம்பாதித்து கொடுத்தது. இதில் இவர் கதாநாயகனாகவும் நடித்தார். பின் சாந்தாராமுக்கு அகில இந்திய அளவில் புகழை சேர்த்த படங்கள் பர்சாயின், ஆத்மி, சகுந்தலா, தஹேஜ், படோசி, சந்திரசேனா, அமிர்தமந்தன் போன்ற படங்களாகும். 'தோ ஆங்கேன் பாரஹாத்' எனும் இந்தி படம் பல விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது. 'தீன் பத்தி சார் ரஸ்தா' என்ற இவரது படம் பெரும் வெற்றி கண்டது.[3]

இறப்பு

அக்டோபர் 30, 1990 இல் மும்பையில் இறந்தார்.


இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட கலைஞன்,வி.சாந்தாராம் . இந்தியாவில் சினிமா எடுக்க ஆரம்பித்த காலத்தில், ஆண்களே பெண் வேடமிட்டு நடித்துவந்தனர். ஆனால் அதை உடைத்து, பெண் கதாபாத்திரங்களில் பெண்களையே நடிக்க வைத்தார். மெளனப்படக் காலத்திலேயே படங்களை இயக்கத் தொடங்கினார். இந்தி, மராத்தி மற்றும் தமிழிலும் படங்களை எடுத்துள்ளார். 1936-ல் இவர் இயக்கிய 'அமர் ஜோதி' என்ற திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சமூகக் கருத்துகளை திரைப்படங்களின் வழியே கூறியவர். பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைக்கும் பெண்களின் வாழ்க்கை, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, வயதானவர்கள் இயம் பெண்களைத் திருமணம் செய்தால் பெண்கள் அவர்களை விவாகரத்துசெய்தல் போன்றவற்றைத் தன் படங்களின் வழியே கூறினார். 'ஜனக் ஜனக் பாயல் பாஜே' என்ற இந்தியாவின் முதல் கலர் படத்தை எடுத்ததும் சாந்தாராம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1957-ல் அவர் இயக்கிய, `தோ ஆன்கி பாரா ஹாத்' என்ற திரைப்படத்துக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் 'வெள்ளிக் கரடி' விருது பெற்றது. இவரது திரைத்துறை சேவையைப் பாராட்டி, இந்திய அரசு பத்ம விபூஷணும், தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கி கெளரவித்துள்ளது. கலை எப்போதும் சமூக அவலங்களிலிருந்து மக்களை மீட்டெடுத்து மேம்படுத்தும். அத்தகைய கலையை மிகுந்த பொறுப்புடன் கையாண்டு மக்களிடம் சேர்த்த மகத்தான கலைஞர் வி.சாந்தாராம்.

‘‘படங்களை இயக்குவதற்கு என் மானசீக குருவாகத் திகழ்ந்தவர் வி.சாந்தாராம்’’ என்று புகழாரம் சூட்டிய எம்.ஜி.ஆர்., அவர் காலில் விழுந்து வணங்கினார் என்றால், சாந்தாராம் எப்படிப்பட்ட மாமனிதராக இருக்க வேண்டும்!

தமிழ் நாட்டில் டைரக்ஷனில் புதுமையைப் புகுத்திய ஸ்ரீதர், கே.பாலசந்தர் உள்பட பல டைரக்டர்களும், வடநாட்டில் உள்ள பல பிரபல டைரக்டர்களும் கூட, சாந்தாராமை தங்கள் வழி காட்டியாகக் கொண்டிருந்தனர்.

சாந்தாராம், ஒரு பிறவி மேதை. ஊமைப்பட காலத்திலேயே சினிமா துறையில் நுழைந்தார். 1920–ம் ஆண்டில் இருந்து 70 ஆண்டுகாலம் கொடிகட்டிப் பறந்தார். இந்தியப் படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

சரித்திர நாயகர்

சாந்தாராம் வாழ்க்கை ஒரு ‘‘சரித்திரம்’’ என்றும், ‘‘சகாப்தம்’’ என்றும் சொல்லலாம்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் ஓர், எளிய குடும்பத்தில் 1901–ம் ஆண்டு நவம்பர் 18–ந் தேதி சாந்தாராம் பிறந்தார். தந்தை பெயர் வன்குந்தரே. தந்தை சமண (ஜெயின்) மதத்தை சேர்ந்தவர். தாய் இந்து.

சாந்தாராம் இளைஞராக இருந்தபோது 1918–ம் ஆண்டு கர்நாடகாவிலுள்ள ஊப்ளியில் ஒரு சிறிய தொழிற்சாலையில் அடித்தளப் பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்பு, நல்ல வேலை தேடி மும்பை பயணமானார். ஒருவழியாக வடஇந்தியாவில் செயல்பட்டு வந்த பாலகந்தர்வ நாடகக் கம்பெனியில், நாடக நடிகராக சேர்ந்தார். நாடக அனுபவத்தைக் கொண்டு 1920–ம் ஆண்டில், பாபுராவ் மகாராஷ்டிரா பிலிம் கம்பெனியில் பல ஊமைப் படங்களில் நடித்தார். பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடிப்பில் தன்னைப் பக்குவப் படுத்திக் கொண்டார்.

பிறகு படிப்படியாக உயர்ந்து, கதாநாயகன் அந்தஸ்தை பெற்றார். 1925–ம் ஆண்டில் மகாராஷ்டிரா பிலிம் கம்பெனி தயாரித்த ‘சவுகரிபாஸ்’ என்ற கலைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். ஒரு ஏழை இளைஞன் வட்டிக்காரனிடம் சிக்கித் தவிப்பதே, இப்படத்தின் கதை. ‘சவுகரிபாஸ்’ தான் இந்தியாவின் முதல் கலைப்படமாகக் கருதப்படுகிறது. மேலும் இது இந்தியாவின் முதல் ‘நியோ– ரியலிஸம்’ (இயற்கை நடிப்பைக் கொண்ட) படமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே திரைப்படங்களில் ‘நியோ– ரியலிஸ’த்தை புகுத்தியவர் என்ற பெருமைக்குரியவராகிறார்.

இதன்பின்பு மகாராஷ்டிரா பிலிம் கம்பெனியிலிருந்து விலகி தாம்லே, பதேலால் என்ற திறமைமிக்க தன் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து 1929–ம் ஆண்டில் கோலாப்பூரில் ‘‘பிரபாத் பிலிம் கம்பெனி’’ என்ற புதிய திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினார்.

மராத்தி, இந்தி மொழிகளில் பிரபாத் கம்பெனி, திரைப்படங்களை எடுக்க ஆரம்பித்தது. பின்னர் தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை புனாவுக்கு மாற்றி அங்கேயே கட்டிடம் கட்டி பிரபாத் ஸ்டூடியோவை நிர்மாணித்தனர். பிரபாத் ஸ்டூடியோஸ் அரங்கங்களில் பல்வேறு படப்பிடிப்புக்கள் தொடங்கின.

புனா பிலிம் இன்ஸ்டிடியூட் எனப்படும் புனா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிலையம் இன்று அங்குதான் இயங்கிவருகிறது என்பது ஒரு சிறப்புச் செய்தி.

தமிழ்ப்படம்

இந்தியில் பேசும் படங்கள் வரத் தொடங்கிய 1931–ம் ஆண்டிலேயே, முதல் தமிழ்ப்படம் (காளிதாஸ்) வெளிவந்தது. தமிழ்ப்படங்களும் அகில இந்திய கவனத்தைக் கவர்ந்தன.

எனவே, தமிழ்ப்படத் தயாரிப்பிலும் பிரபாத் கம்பெனி ஈடுபட்டது. 1934–ம் ஆண்டு தொடக்கத்தில் பிரபாத் படக் கம்பெனி தயாரித்த தமிழ்ப் படத்தின் பெயர் ‘‘சீதா கல்யாணம்’’.

பிற்காலத்தில் சினிமா நடிகராகவும், டைரக்டராகவும், வீணை வித்வானாகவும் புகழ்பெற்ற எஸ்.பாலசந்தரின் குடும்பமே இதில் நடித்தது.


பாலசந்தரின் தந்தை பெயர் சுந்தரம் அய்யர். இவர் புகழ்பெற்ற வக்கீல். ஆயினும் பொழுது போக்காக சினிமாவில் நடித்து வந்தார். அவர் ‘‘சீதா கல்யாண’’த்தில், தசரத சக்கரவர்த்தியாக நடித்தார். அவருடைய மூத்தமகன் எஸ்.ராஜம் ராமராகவும், மகள் ஜெயலட்சுமி சீதையாகவும் நடித்தனர். (பிற்காலத்தில் பட்சிராஜா தயாரித்து எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘‘சிவகவி’’யில், ஜெயலட்சுமி பாகவதரின் மனைவியாகவும், ராஜம் வேடன் வேடத்தில் முருகனாகவும், சுந்தரம் அய்யர் குருகுல ஆசிரியராகவும் நடித்தனர்).

‘‘சீதா கல்யாணம்’’ படம் தயாரான போது எஸ்.பாலசந்தர் சின்னப் பையன். எனவே, ராஜசபையில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக நடித்து, சாந்தாராமின் பாராட்டைப் பெற்று, தபேலா ஒன்றை அவரிடம் பரிசாகப் பெற்றார்.

இந்தப் படத்தை சாந்தாராம் டைரக்ட் செய்யவில்லை. தயாரிப்பை மட்டும் கவனித்தார். படத்தை பாபுராவ் பண்டர்கர் டைரக்ட் செய்தார். வசனம் எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர். பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களுக்கு ஏ.என். கல்யாணசுந்தரம் இசை அமைத்தார். 24–2–1934–ல் வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது. பிரபாத் கம்பெனி வேறு சில படங்களையும் தயாரித்தது.

பிரபாத் பிலிம் கம்பெனியில் சாந்தாராமைப் பொருத்தமட்டில் நிலை என்ன? சாந்தாராம் மகாராஷ்டிரா பிலிம் கம்பெனியில் இருந்தபோது ‘நேதாஜு பால்கர்’ என்ற ஊமைப்படத்தை இயக்கிய முன் அனுபவம் இருந்தது. அதைக்கொண்டு 1934–ம் ஆண்டு ‘அம்ரித் மந்தன்’ என்ற திரைப்  படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

இந்த வெற்றியின் உந்துதலால் 1925–ம் ஆண்டில் தான் கதாநாயகனாக நடித்த ஊமைப்படமான ‘சவுகாரி பாஸ்’ படத்தையே பேசும்படமாக 1936–ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டார். ஆனால் இப்படத்தில் அவர் நடிக்கவில்லை. இயக்குனராக மட்டும் பணியாற்றினார்.

அதே ஆண்டில் ‘அமர்ஜோதி’ என்ற படத்தையும் இயக்கினார். இப்படம் மகத்தான வெற்றிபெற்றது. இதில் நடித்த துர்கா கோட்டே, சாந்தே ஆப்தே, சந்திரமோகன் ஆகியோர் பெரும் புகழ்பெற்றனர்.

சாந்தாராமின் திரைப்படமான ‘துனியா நமானே’ பிரபாத் ஸ்டூடியோவின் புகழ்க்கொடியை உயர்த்திப் பிடித்தது. 1930–களில் சமூக வழக்கப்படி பெண்கள் வீட்டுக்குள் அடைந்தபடியே வாழவேண்டும் என்பது வழக்கு. இப்படத்தில் மனைவியை இழந்த ஒருவர், வளர்ந்த பிள்ளைகளுக்குத் தந்தையான முதியவர், ஒரு இளம் பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்கிறார். வெகுண்ட அந்த இளம்பெண் தன் வயோதிக கணவனோடு வாழ விரும்பவில்லை. ‘‘எந்தக் கஷ்டத்தையும் தாங்கத் தயார். ஆனால் ஒருக்காலும் அநியாயத்திற்கு உடன்படமாட்டேன்’’ என்று சூளுரைக்கிறாள்.

தன் தவறை உணர்ந்த கிழவன், தற்கொலை செய்து கொள்கிறான்.

மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கிப்போன சமூகம், விதவை விவாகரத்தை அனுமதிக்காத காலம் அது. இளம் பெண் வயோதிகனுடன் வாழ்வதைவிட விதவையாக வாழ்வது மேல் என்ற கருத்துடன் படம் முடிகிறது.

கண் மூடித்தனமாக சம்பிரதாயங்களை திணிக்கும் மூடர்களை படம் சாடியது. சாந்தாராமின் இயக்கம் படம் முழுவதும் பளிச்சிட்டது.

1939–ம் ஆண்டில் ‘ஆத்மி’, ‘படோசி’ போன்ற கிளாசிக் திரைப்படங்கள் பிரபாத் டாக்கீஸ் தயாரிப்பாக வெளிவந்தன. பின்னர் புனாவில் பிரபாத் பிலிம் ஸ்டூடியோவை மூடிவிட்டு, 1939–ம் ஆண்டு சாந்தாராம் மும்பை நகரில் ‘ராஜ்கமல் கலாமந்திர்’ என்ற பெயரில் ஒரு ஸ்டூடியோவையும், ‘சாந்தாராம் புரடெக்ஷன்ஸ்’ என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி செயல்பட ஆரம்பித்தார்.

ராஜ்கமல் ஸ்டூடியோவில் அவர் முதலாவதாக இயக்கிய படம் ‘‘சகுந்தலா’’. இதில் ஜெயஸ்ரீ கதாநாயகியாகவும், சந்திரமோகன் கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். படம் 1943–ல் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.

டாக்டர் கோட்னீஸ்

1946–ம் ஆண்டு சாந்தாராம் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் ‘‘டாக்டர் கோட்னீஸ் அமர் கஹானி’’. இது, உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

சீனாவுக்கும், ஜப்பானுக்கும் நடந்த போரின் போது, காயமுற்ற சீனர்களுக்கு சிகிச்சை செய்ய இந்தியாவில் இருந்து பல டாக்டர்கள் சென்றனர். அவர்களில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கோட்னீஸ் என்ற இளம் டாக்டரும் ஒருவர்.

அவருக்கு உதவியாக கிங்யாங் என்ற சீன நர்ஸ் (ஜெயஸ்ரீ) பணி புரிகிறாள். இருவருடைய நட்பு, காதலாக மலர்கிறது. திருமணம் செய்து கொள்கிறார்கள்.

போர் முடிவில், சீனப் படைகள் தப்பி ஓடி, ஒரு பள்ளத்தாக்கில் தங்குகின்றனர். அங்கு, இனம் தெரியாத தொற்று நோய் பரவுகிறது. டாக்டர் கோட்னீஸ் சிரமப்பட்டு அந்த நோய்க்கு மருந்து தயாரித்து, பலரை குணப்படுத்துகிறார். ஆனால், இறுதியில் அந்த தொற்று நோய் கோட்னீசையும் தாக்குகிறது. சிகிச்சை பலன் இன்றி, மரணம் நெருங்கும் தருணத்தில், தன் கர்ப்பிணி மனைவியை அழைத்து, இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் தன் தாய் பற்றியும், குடும்பம் பற்றியும் கூறுகிறார்.

‘‘நீ நம் குழந்தையுடன் இந்தியாவுக்கு செல். நம் கிராமத்துக்கு போ. ரெயில் நிலையத்திற்கு வெளியே ஒரு மாட்டு வண்டியுடன் பெரியவர் ஒருவர் இருப்பார். அவரிடம் என் பெயரைச் சொன்னால், நம் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு என் தாயாரைப் பார். அவர் உன்னையும், நம் குழந்தையையும் ஏற்றுக் கொள்வார்’’ என்று கூறியபடி உயிர் துறப்பார்.

இந்த இறுதிக் காட்சியை மவுனமாகவே படமாக்கி இருப்பார். சாந்தாராம். பார்ப்பவர்கள் கண்கலங்கி விடுவார்கள்.

இந்தப்படம் இந்தியாவிலும், சீனாவிலும் படமாக்கப்பட்டது. இந்தியில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் படத்தை வெளியிட்டார், சாந்தாராம்.

நம் நாடு

சாந்தாராமின் பார்வை மீண்டும் தமிழ்நாட்டை நோக்கித் திரும்பியது. 1949–ல் ‘அப்னா தேஷ்’ என்ற படத்தை இந்தியில் தயாரித்து இயக்கினார், சாந்தாராம். கள்ளமார்க்கெட்டைக் கண்டித்தும், தேச பக்தியை தூண்டும் விதத்திலும் தயாரிக்கப்பட்ட இப்படத்தில், புதுமுகம் புஷ்பா ஹன்ஸ் கதாநாயகியாகவும், சதீஷ் கதாநாயகனாகவும் நடித்தனர்.

இந்தப்படத்தை ‘‘நம் நாடு’’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து தமிழில் வெளியிட்டார். படத்தில் எம்.எல்.வசந்தகுமாரி பின்னணியில் பாடியிருந்தார். ‘‘நமது நாடு, நமது நாடு நம் நாடே’’, ‘‘ஜெய்ஹிந்த் என்று சொல்வோமே’’ என்ற பாடல்கள் இனிமையாக ஒலித்தன. இந்தப்படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.

1950–ம் ஆண்டில் சாந்தாராம் இயக்கத்தில் வந்த ‘‘தஹேஜ்’’ (வரதட்சணை) என்ற படம் மகத்தானது. ஜெயஸ்ரீ–கரன்திவான் இணைந்து நடித்த இந்தப்படத்தில், ஜெயஸ்ரீயின் தந்தையாக பழம்பெரும் நடிகர் பிருத்விராஜ்  கபூர் (ராஜ்கபூரின் தந்தை) நடித்திருந்தார்.

மகளை வாழவைக்க முடியாமலும், வரதட்சணை கொடுக்க முடியாமலும், கவுரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் தத்தளிக்கும் மனக் கொந்தளிப்பை, தன் பண்பட்ட நடிப்பால் அற்புதமாக சித்தரித்திருந்தார்.


உயிருக்குப் போராடும் கணவனைப் பார்க்கத் துடிக்கும் மகள் ஜெயஸ்ரீயை, ஜமீன் வழக்கப்படி பல்லக்கில் தான் தூக்கிச் செல்லவேண்டும். வீட்டில் இருப்பதோ, ஒரே வேலையாள். ஜெயஸ்ரீ பல்லக்கில் ஏறியதும், முன்னால் வேலைக்காரனும், பின்னால் பிருதிவிராஜ் கபூரும் பல்லக்கை தூக்கிச் செல்கின்றனர். பல்லக்கை தூக்கி வருபவர், வயது முதிர்ந்த தன் தந்தை என்பதை அறியாத ஜெயஸ்ரீ, விரைந்து செல்லுமாறு அழுகிறாள். பிருதிவிராஜ் கபூர், வேகமாக கிளம்பி பிறகு தள்ளாடுகிறார். மகளின் கண்ணீரால் தூண்டப்பட்டு, காலணிகள் கழன்று விழ, வெயில் சுட்டெரிக்க, வியர்வை ஆறாகப் பெருக, கண்கள் பஞ்சடைய இதையெல்லாம் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு மகளை கணவன் வீட்டில் கொண்டு போய் சேர்க்கும் காட்சி, காண்போரின் உள்ளத்தை உருக்கி, கண்ணீரை வரச் செய்தது.

இதே கதையை, 1958–ம் ஆண்டில் ‘‘பொம்மைக் கல்யாணம்’’ என்ற பெயரில் அருணா பிலிம்சார் தயாரித்தனர். மகளாக ஜமுனாவும், தந்தையாக எஸ்.வி.ரங்காராவும் நடித்தனர்.

இந்தியில் பிருதிவிராஜ் கபூர் நடித்ததற்கு இணையாக எஸ்.வி.ரங்காராவும் சிறப்பாக நடித்தார்.

அமர்பூபலி (1952), பர்சாயின் (1953), தீன் பத்தி சார் ரஸ்தா (1954) என்று வரிசையாக வந்த புதுமையான புரட்சிகரமான படங்கள் சாந்தாராமுக்கு மேலும் புகழ்தேடித் தந்தன.

தீன் பத்தி சார் ரஸ்தா (மூன்று விளக்குகளும், நாற்சந்தியும்) கதை மிகவும் புதுமையானது. ஒரு வீட்டில் நாலைந்து மருமகள்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமொழி பேசுபவர்கள். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படும். அவர்களை வேலைக்காரி (சந்தியா) சமரசம் செய்து வைப்பாள். காரணம் அவளுக்கு அத்தனை மொழிகளும் தெரியும்!

இந்தப் படத்தில், மும்பையை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் தமிழ்ப்பெண்ணாக நடித்தார். பரத நாட்டியம் ஆடியதுடன் ஒரு தமிழ்ப் பாட்டையும் பாடினார்.

ஜனக் ஜனக் பாயல் பாஜே

1955–ம் ஆண்டு சாந்தாராம் வாழ்க்கையில் மட்டுமல்ல, இந்திய சினிமாப்பட வரலாற்றிலும் முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டுதான், முழுவதும் நடனங்கள் நிறைந்த உன்னதமான கலைப்படைப்பான ‘‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’’ என்ற டெக்னிக் கலர் படத்தை சாந்தாராம் எடுத்தார். சந்தியா கதாநாயகியாகவும், கதக் நடனக் கலைஞர் கோபி கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்தனர்.

கோபி கிருஷ்ணா நடிகர் அல்ல. நடனத்துக்காகவே கதாநாயகன் வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு டைரக்டர் சாந்தாராம் நன்கு பயிற்சி கொடுத்து, சிறப்பாக நடிக்க வைத்தார்.

கதை, நடிப்பு, பாடல்கள், காட்சி, அமைப்பு, கலை அம்சம், டைரக்ஷன் எல்லாவற்றிலும் இப்படம் சிறந்து விளங்கியது. பாராட்டு மழையிலும், வசூல் மழையிலும் சாந்தாராம் நனைந்தார்.

60 வருடத்துக்கு முன் எடுக்கப்பட்ட படம். இன்று பார்த்தாலும், இப்போது எடுக்கப்பட்ட படம் போல் ஜொலிக்கும்.

தோ ஆங் கேன் பாராஹாத்

1957–ம் ஆண்டு சாந்தாராம் கதை எழுதி, கதாநாயகனாக நடித்து, டைரக்ட் செய்த படம், ‘‘தோ ஆங் கேன் பாராஹாத்’’ (இரண்டு கண்களும், 12 கைகளும்). பயங்கரமான 6 கைதிகளை திருத்தி, மனிதர்களாக மாற்றுவதுதான் கதை.

படம் மிகப்பிரமாதமாக அமைந்தது. வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களில் கலந்து கொண்டு, பரிசுகளை வாரிக்குவித்தது.

இந்தப்படத்தின் இறுதிக் காட்சியில், ஒரு கைதியை   கொம்புகளால் குத்திக் கொல்ல ஒரு காளை மாடு சீறி வரும். ஜெயில் அதிகாரியான சாந்தாராம், பாய்ந்து சென்று கைதியைக் காப்பாற்ற காளையின் கொம்புகளைப் பிடிப்பார். காளை மாடு அவரைப் புரட்டி எடுக்கும்.

இந்த சண்டையில், கைதியின் உயிரைக் காக்க தன் உயிரை தியாகம் செய்வார், சாந்தாராம்.

இந்தக் காட்சியைப் படமாக்கும் போது, காளையின் கூரிய கொம்பு, சாந்தாராமின் கண் அருகே பாய்ந்து விட்டது. படுகாயம் அடைந்த சாந்தாராம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பல மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. சாந்தாராம் பார்வையை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கடைசியில், அந்த அபாயத்தில் இருந்து அவர் தப்பினார்.

நவ்ரங்

சாந்தாராமின் மற்றொரு கலைப்படைப்பு ‘‘நவ்ரங்’’. கதாநாயகன் (மகிபால்) ஒரு கவிஞன். அவன் மனைவி ஜமுனா (சந்தியா) ஒரு கர்நாடகம். அவளை ‘‘மோகினி’’ யாக கற்பனை செய்து கொண்டு அற்புத கவிதைகள் எழுதுவான், கவிஞன். ஆனால் தன் கணவன், மோகினி என்ற யாரோ ஒரு பெண்மணியை காதலிப்பதாக நினைப்பாள், ஜமுனா. கடைசியில், ராஜசபையில் கவிஞன் பாடும் பாட்டு மூலம் உண்மையை ஜமுனா உணருவாள்.

மகிபால் தன் மனைவி ஜமுனாவை மோகினியாக உருவகப்படுத்தி கொண்டு பாடும் பாடல்களின் போது, விதம் விதமான நடனங்கள் ரசிகர்களை வசீகரித்தன. சி.ராமச்சந்திராவின் இசை அமைப்பில் பாடல்கள் அற்புதம். கடைசி பாடல் காட்சியின் போது, பிரமாண்டமான ஆலய மணிகள் தொங்க, அவற்றில் பெண்களும், சந்தியாவும் நடனம் ஆடுவார்கள். பிரமாண்டமான கண்கவர் காட்சி.

சகுந்தலா

1943–ம் ஆண்டு கறுப்பு வெள்ளையில் எடுத்த ‘‘சகுந்தலா’’ படத்தை மீண்டும் 1961–ம் ஆண்டில் கலரில் எடுத்தார், சாந்தாராம். படத்தின் பெயர் ‘‘ஸ்திரி’’.

முந்திய படத்தில் ஜெயஸ்ரீ சகுந்தலாவாகவும், சந்திரமோகன் துஷ்யந்தனாகவும் நடித்தனர். ‘‘ஸ்திரி’’யில் சந்தியா சகுந்தலை வேடம் ஏற்றார். துஷ்யந்தனாக சாந்தாராமே நடித்தார். படம், வழக்கம் போல் கலை அழகுடன் விளங்கியது.

மகள், நடிகை ஆனார்

1964–ல்,தன் மகள் ராஜ்ஸ்ரீயை கதாநாயகி யாக அறிமுகப்படுத்தி, ‘‘கீத் கயா பத்ரோனே’’ என்ற படத்தை எடுத்தார். இந்தப் படத்தின் கதாநாயகன் ஜித்தேந்திரா.

இந்தப் படம் மகத்தான வெற்றிபெற்றது. ராஜ்ஸ்ரீயின் அழகும் நடிப்புத் திறமையும், பட அதிபர்களை மிகவும் கவர்ந்தது. ராஜ்ஸ்ரீ பல படங்களுக்கு ஒப்பந்தமானார்.

சாந்தாராம் இன்னொரு படத்தில் தன் மகளை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால், அதற்கு ‘கால்ஷீட்’ கொடுக்க ராஜ்ஸ்ரீக்கு தேதி இல்லை!

இதன்பிறகு சில படங்களை இயக்கிய சாந்தாராம், 1972–ல் ‘‘பிஞ்சரா’’ என்ற படத்தை எடுத்தார். இதில் கதாநாயகியாக சந்தியாதான் நடித்தார்.

73 வயதாகிவிட்டதால், சாந்தாராம் முன்போல் வேகமாக செயல்பட முடியவில்லை. தனக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்தார்.

சுமார் 14 ஆண்டுகள் படம் எடுக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் 1987–ம் ஆண்டில் ‘‘ஜான்ஜார்’’ என்ற படத்தை எடுத்தார். அதுதான் சாந்தாராமின் கடைசி படம்.

சுமார் 70 ஆண்டுகாலம் இந்தியப் பட உலகின் சக்கரவர்த்தி யாகத் திகழ்ந்த சாந்தாராம், 1990–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30–ந் தேதி மும்பையில் மரணம் அடைந்தார்.

(அடுத்த வாரம்:  மாறுபட்ட இரட்டை வேடப் படங்கள்)


குடும்பம்

சாந் தாராமுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் விமலா. இவர்களுக்கு பிரபாத்குமார் என்ற ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி நடிகை ஜெயஸ்ரீ. (டாக்டர் கோட்னீஸ், பர்சாயின் ஆகிய படங்களில் சாந்தாராமுடன் இணைந்து நடித்தவர்). இவர்களுக்கு ராஜ்ஸ்ரீ உள்பட 2 மகள்கள். ஒரு மகன்.

மூன்றாவது மனைவி சந்தியா. இவருக்கு மதுரா என்ற ஒரு மகள்.


விருதுகள்

சாந் தாராம் பெற்ற விருதுகளும் பரிசுகளும் ஏராளம். திரைப்படத்துறையில் வாழ்நாள் சேவைக்காக வழங்கப்படும் மிகப் பெரிய விருதான ‘‘பால்கே விருது’’ இவருக்கு 1985–ம் ஆண்டு வழங்கப்பட்டது.

மத்திய அரசு ‘‘பத்ம விபூஷண்’’ விருது வழங்கி கவுரவித்தது. பல பல்கலைக்கழகங்கள் ‘‘டாக்டர்’’ பட்டம் வழங்கின.

சாந்தாராம், தன் சுயசரிதையை ‘‘சாந்தாராமா’’ என்ற பெயரில் இந்தியிலும், மராத்தியிலும் எழுதி உள்ளார்.


அமெரிக்காவுக்குப் பறந்த ராஜ்ஸ்ரீ!

சாந்தாராம்–ஜெயஸ்ரீ தம்பதிகளின் மகளான ராஜ்ஸ்ரீ, 1945–ம் ஆண்டு பிறந்தார். குழந்தையாக இருக்கும் போதே, நடனம் பயின்று நன்கு தேர்ச்சி பெற்றார். 18 வயதில் அழகு தேவதையாக காட்சி அளித்தார்.1964–ம் ஆண்டில், ‘‘கீத்கயா பத்ரோனே’’ என்ற படத்தில், ராஜ்ஸ்ரீயை கதாநாயகியாக சாந்தாராம் அறிமுகப்படுத்தினார். படம் பெரும் வெற்றி பெறவே, ஏராளமான படங்கள் ஒப்பந்தம் ஆயின. 18 படங்களில் ராஜ்ஸ்ரீ நடித்தார். ஷம்மி கபூர், தர்மேந்திரா, முதலிய முன்னணி காதநாயகர்களுடன் இணைந்து நடித்தார்.

ராஜ்கபூருடன் ‘‘அரவுண்ட் த வேர்ல்ட்’’ (உலகத்தைச் சுற்றி) என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்த போது, கிரீக்சாப்மேன் என்ற அமெரிக்க வாலிபனுடன் காதல் ஏற்பட்டது.

ராஜ்ஸ்ரீ இந்தியா திரும்பிய பிறகும் காதல் தொடர்ந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜ்ஸ்ரீ–கிரீக் சாப்மேன் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன், இந்து முறைப்படி மும்பையில் நடந்தது.அப்போது சில படங்களில் ராஜ்ஸ்ரீ நடித்துக் கொண்டு இருந்தார். சினிமாவில் தொடர்ந்து நடிக்க அவர் விரும்பவில்லை. எனவே, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கணவருடன் விமானத்தில் பறந்து விட்டார்! ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த படங்கள் அரைகுறையாக நின்று போயின.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறிய ராஜ்ஸ்ரீ, உடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தினார். சில படங்களுக்கு துணை டைரக்டராகவும் பணிபுரிந்தார்.


சமூக சீர்திருத்தக் கருத்துகளை கலைவடிவத்துக்கு மாற்றி எப்படி திரைப்படமாக்குவது என்று இந்திய இயக்குநர்களுக்கு வழிகாட்டிய இந்தி திரைப்பட இயக்குநர் வி.சாந்தாராம் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் பிறந்தவர். இளம் வயதிலேயே சினிமா மீது அளவுகடந்த ஆர்வம் இருந்தது. நடிகனாகும் முயற்சி யிலும் ஈடுபட்டுவந்தார்.


 பாபுராவின் சினிமா கம்பெ னியில் வேலைக்குச் சேர்ந் தார். சினிமா தயாரிப்பு, ஆய்வுக்கூட வேலை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் போன்ற நுட்பங்களை தெரிந்து கொண்டார். 1929-ல் நண்பர்களுடன் சேர்ந்து ‘பிரபாத் பிலிம் கம்பெனி’ தொடங்கினார்.

 தாதா சாஹேப் பால்கே தயாரித்த ‘ராஜா ஹரிச்சந்திரா’ படத்தின் கதையை 1932-ல் ‘அயோத்யா கா ராஜா’ என்ற பெயரில் இயக்கினார். முதன் முதலில் பெண்களை நடிக்கவைத்தார்.

 மவுனப் படக் காலத்திலேயே 6 படங்களை இயக்கினார். இந்தி, மராத்தி, தமிழில் 1934-ம் ஆண்டுமுதல் படம் எடுக்கத் தொடங்கினார். ‘அம்ரித் மந்தன்’ படம் மூலம் புகழ்பெற்றார்.

 இவரது ‘அமர்ஜோதி’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பெண்கள் பிரச்சினைகள் குறித்து ‘துனியா ந மானே’, பாலியல் தொழிலில் இருந்து மீள நினைக்கும் பெண்ணின் வாழ்க்கையை ‘ஆத்மி’ (1939) ஆகிய படங்கள் எடுத்துக்காட்டியது. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை ‘படோஸி’ திரைப்படம் வலியுறுத்தியது. 1941-ல் பிரபாத் ஸ்டுடியோவை விட்டு விலகி ‘ராஜ்கமல் கலா மந்திர்’ என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்மூலம் தயாரிக்கப்பட்ட ‘சகுந்தலை’, வர்த்தக ரீதியில் வெளிநாட்டில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம். இவரது ‘டாக்டர் கோட்னிஸ் கீ அமர் கஹானி’ திரைப்படம் சோஷலிச நாடுகளில் புகழ்பெற்றது.

 1957-ல் இவரது ‘தோ ஆங்க்கே பாரஹ் ஹாத்’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வெள்ளிக் கரடி’ விருது பெற்றது. எம்.ஜி.ஆர். இந்த படத்தை தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ என்ற பெயரிலும் இவரது ‘அப்னா தேஷ்’ படத்தை ‘நம் நாடு’ என்ற பெயரிலும் எடுத்தார். 1959-ல் இவர் தயாரித்த ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ திரைப்படம், இந்தியாவின் முதல் கலர் படம் அவருக்கு பாராட்டுகளை அள்ளிக் குவித்தது.

 சமூக முற்போக்குச் சிந்தனைகளை கலை வடிவத்துக்கேற்ப மாற்றி எவ்வாறு திரைப்படமாக்குவது என்பதை இந்திய இயக்குநர்களுக்குக் கற்றுக்கொடுத்த மாமேதை சாந்தாராம். வாழ்நாள் சாதனையாளர் விருது, 1985-ல் தாதா சாஹேப் பால்கே விருது, 1992-ல் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.
 நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறன் படைத்த இவர் ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கோலோச்சி வந்தவர். 89-வது வயதில் காலமானார்.






ஒரு சிவாஜி ரசிகர் சொன்னார்,

`எம்.ஜி.ஆரை விட எங்கள் சிவாஜிதான் வசூல் மன்னன். ஒரே நாளில் அவருடைய இரண்டு படங்கள் வந்து இரண்டுமே நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கின்றன. ஆனால் எம்.ஜி.ஆரின் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும். அதனால் எம்.ஜி.ஆரை ஆறு மாதங்களாக திரையில் பார்க்காத ரசிகர்கள் அலைமோதி படத்திற்கு வசூலை குவிக்கும்’ என்றார்.

ஒரு சிவாஜி ரசிகர் என்கிற முறையில் அவருடைய வாதம் சரியாக இருக்கலாம். சிவாஜி ஒரு கலைப் புதையல். ஆனால் எம்.ஜி.ஆரை மக்கள் ஒரு கதாநாயகனாக மட்டும் பார்க்கவில்லை. வீட்டில் உலையை வைத்துவிட்டு எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு போனால் அரிசி கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். அதனால்தான் அவருக்கு அரசியலில் அசைக்க முடியாத ஒரு வெற்றி.

சிவாஜியை திரையோடு மட்டும் பார்த்தார்கள். எம்.ஜி.ஆரை சமூகத்தோடும் இணைத்தார்கள். சிவாஜியின் சினிமா சரித்திரத்தில் நீக்க முடியாத படங்கள் 'ராஜா', 'ஞான ஒளி', 'தவப்புதல்வன்', 'நீதி', 'பட்டிக்காடா பட்டணமா', 'வசந்த மாளிகை'.

'ராஜா'வில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி, 'ஞான ஒளி'யில் பாசமுள்ள ஒரு முரட்டுத்தகப்பன், 'தவப்புதல்வ'னில் மாலைக்கண் நோயாளி, 'நீதி'யில் குடியினால் பாதிக்கப்பட்ட ஒரு கொலைகாரன், 'பட்டிக்காடா பட்டணமா'வில் ஒரு பணக்கார கிராமத்தான், 'வசந்த மாளிகை'யில் குடிக்கு அடிமையான ஒரு ஜமீன் காதலன்.

சிவாஜிக்கு தன் இமேஜை பற்றி கவலையேயில்லை. அவருக்குத் தேவை அவர் நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதாபாத்திரங்கள். அது மாதிரி பாத்திரங்களாகவே தேர்வு செய்து நடிப்பார்.  நல்ல நாடகங்களைத் தேடிப் போய் பார்ப்பார். அப்படி அவருக்கு கிடைத்ததுதான் 'ஞான ஒளி'.

'வசந்த மாளிகை'  படத்தின் ஒவ்வொரு பாட்டும் சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் விருந்து. 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் வேடத்தில் பாலாஜி நடித்தார்.

அந்த கதாபாத்திரத்தின் மேல் சிவாஜிக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதற்கு  'சினிமா பைத்தியம்' படத்தில் கிடைத்தது. சினிமா வெறியர்களின் முட்டாள்தனத்தை துகிலுரித்துக் காட்டிய படம். இந்த படத்தை ஏல்.எல்.எஸ்.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து முக்தா சீனிவாசன் இயக்கினார். இதில் சிவாஜிக்கு கவுரவ வேடம். அந்த கதாபாத்திரம்தான் வாஞ்சிநாதன். 'டாக்டர் சிவா'வில் தொழுநோயாளிகளை குணப்படுத்தும் ஒரு டாக்டர் வேடம் சிவாஜிக்கு! இந்த படத்தை ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். சிவாஜிக்கு ஜோடி மஞ்சுளா. அந்த வருடம் முழுவதும் இந்தப்படத்தில் ஜேசுதாஸும், ஜானகியும் பாடிய 'மலரே குறிஞ்சி மலரே’ பாடல்தான் நம்பர் ஒன்னாக இருந்தது.

கவுரிமனோகரி ராகத்தில் மெட்டமைத்திருந்தார் எம்.எஸ். விஸ்வநாதன்.  ரசிகர்களை சுண்டியிழுத்த பாட்டு இது. தனக்குள் இருக்கும் எல்லா திறமைகளும் திரையில் வெளிப்பட வேண்டும் என்று ஆசைப்படுபவர் சிவாஜி.

`ஜனக் ஜனக் பாயல் பாஜே’ – இது பிரபல இந்தி இயக்குநர் சாந்தாராம் இயக்கிய படம். இது நாட்டியத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். 1955ல் வெளிவந்த படம் இது! இந்த படத்திற்கு வசந்த் தேசாய் இசையமைத்திருந்தார். ஒரு இளவரசனுக்கு ஒரு நாட்டிய தாரகை மேல் ஆசை. அவளுக்கோ நாட்டிய கலைஞன் மேல்தான் ஆசை. அதற்காகவே நாட்டியம் கற்றுக் கொள்வான் இளவரசன். இந்த படத்தில் அகில உலகப் புகழ் பெற்ற நாட்டியக்கலைஞர் கோபிகிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் 1955ல் இந்தி உலகை கலக்கியது.. சிவாஜி, எம்.ஜி.ஆர்., இருவருக்குமே இந்தி இயக்குநர் வி. சாந்தாராம் மீது ஓர் ஈர்ப்பும், மரியாதையும் உண்டு.

அதனாலேயே அவர் இயக்கிய `தோ ஆங்கே பாரா ஹாத்’ படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் 'பல்லாண்டு வாழ்க' படமாக எடுக்க வைத்து நடித்தார்.

சிவாஜி தேர்ந்தெடுத்த சாந்தாராம் கதைதான் ஜனக் ஜனக் பாயல் பாஜே.  சிவாஜி கோபிகிருஷ்ணா வேடத்தில் நடித்தார். நாட்டிய தாரகையாக ஜெயலலிதா நடித்தார். அவரைக் காதலிப்பதற்காகவே நாட்டியம் தெரியாத பணக்காரர் நாட்டியம் கற்றுக் கொண்டு ஜெயலலிதா உடனேயே  நடனப் போட்டியில் இறங்குவார்.

சிவாஜிக்கு நாட்டிய பயிற்சி கொடுப்பதற்காகவே மும்பையில் இருந்து கோபிகிருஷ்ணாவின் சீடர் உதய்சங்கர் சென்னை வந்தார்.

வழக்கம்போல் விஸ்வநாதன் இசையில் பாட்டுக்கள் அத்தனையும் அருமை. படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவீஸிற்காக பி.மாதவன் தயாரித்து இயக்கியிருந்தார். வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். சிவாஜி ரசிகர்களுக்கு முழு தீனி போடவில்லை என்பதுதான் உண்மை. 'மன்னவன் வந்தானடி', 'வைர நெஞ்சம்' இரண்டுமே சிவாஜிக்கு பொருத்தமில்லாத படங்கள்.

`தெய்வத்தாய்’ படத்திலெல்லாம், சத்யா மூவீஸில் ஆர்.எம். வீரப்பனுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம். இவர்கள் தயாரித்து பி. மாதவன் இயக்கிய மிகப்பெரிய சிவாஜியின் தோல்வி படம் இது. இதிலும் ரசிகர்களை இழுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்தான். வழக்கம்போல் எம்.எஸ். விஸ்வநாதன் இசை.  'வைரநெஞ்சம்' ஸ்ரீதர் இயக்கம். இந்தியில் மிகப்பெரிய வெற்றிப் படம்

`நமக்ஹராம்’.

இந்த படத்தில் தர்மேந்திராவும், ராஜேஷ்கன்னாவும் இணைபிரியா நண்பர்களாக நடித்திருந்தனர். இதன் உரிமையை வாங்கினார் பாலாஜி. சிவாஜி-, ஜெமினி இருவரையும் வைத்து எடுத்த படம் 'உனக்காக நான்'.

சிவாஜியை விட ஜெமினிக்கு ஒப்பனையை மீறிய வயோதிகம் முகத்தில் தெரிய ஆரம்பித்திருந்த நேரம். இதுவும் சிவாஜி ரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றம்தான். அடுத்து சிவாஜி ரசிகர்களுக்கு தீனி போட்ட படம் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் வி.பி. ராஜேந்திரபிரசாத் இயக்கத்தில் வந்த 'உத்தமன்'.

கே.வி. மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் அருமையாக அமைந்த படம் இது. அடுத்தடுத்து வந்த சிவாஜி படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் 'கிரஹப்பிரவேசம்'– இது யோகானந்த இயக்கத்தில் வந்த படம். தம்பிக்காக பாடுபடும் அண்ணனின் கதை இது. இதில் சிவாஜிக்கு ஜோடி கே.ஆர். விஜயா. தம்பியாக சிவகுமார் நடித்தார். இந்த படத்திற்குப்  பிறகு எந்த பெரிய நடிகர்களோடும் நடிப்பதில்லை என்று சிவகுமார் என்ன காரணத்தினாலோ முடிவெடுத்தார். 'சித்ரா பவுர்ணமி' வந்த சுவடு தெரியாமல் போன சிவாஜியின் படம் இது.  இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா! இந்த படத்தை காஷ்மீரில் போய் எடுத்தார்கள். இந்த படத்திற்கு இயக்கம் பி. மாதவன். இந்த படத்தில் நடிக்க காஷ்மீருக்கு போகக்கூடாது என்று ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர். நிபந்தனை விதித்ததாக செய்திகள் வந்தன. இந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆர்., ஒரு முடிவு எடுத்தார்.




‘மராட்டிய திரைப்பட மேதை’ வி.சாந்தாராம்!
November 18, 2017 by admin
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், சமூக முற்போக்குச் சிந்தனைகளை கலை வடிவத்துக்கேற்ப மாற்றி எவ்வாறு திரைப்படமாக்குவது என்பதை இந்திய இயக்குநர்களுக்குக் கற்றுக்கொடுத்த மாமேதை என பல துறைகளிலும் தனிச் சாதனைப் ப்டைத்தவர் ‘மராட்டிய திரைப்பட மேதை’ வி.சாந்தாராம்.

மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் இதே நவம்பர் 18ம் தேதி பிறந்தவர். இளம் வயதிலேயே சினிமா மீது அளவுகடந்த ஆர்வம் இருந்தது. நடிகனாகும் முயற்சி யிலும் ஈடுபட்டுவந்தார். ஆனாலும் 1901-ல் கோல்காபூரில் இருப்புப் பாதை பராமரிக்கும் வேலையில் 15 ரூபாய் சம்பாதித்து வந்தார் இவர். இதுபோலவே தன்னுடைய 16-வது வயது வரை பல சில்லறை வேலைகளைச் செய்து வந்தார். எந்த வேலையைச் செய்தாலும் சினிமா பார்ப்பதை மட்டும் அவர் விடவே இல்லை. படங்களைப் பார்த்து அவராகவே நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது கோல்காபூரில் பாப்பு ராவுவால் ஆரம்பிக்கப்பட்ட மஹாராஷ்டிர சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார். அங்குதான் சினிமா தயாரிப்பு, ஆய்வுக்கூட வேலை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் முதலிய நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார். தனது நண்பர்களுடன் இணைந்து 1929-ல் ‘பிரபாத் ஃபிலிம் கம்பெனி’யை நிறுவினார். இந்தியாவில் திரைப்பட ஸ்டுடியோக்கள் வட நாட்டில்தான் முதலில் தோன்றின. இந்தியாவின் பிற பகுதியில் இருந்தவர்கள் கூட மஹாராஷ்டிராவிலிருந்த ஸ்டுடியோக்களான கோல்காபூர், புனே, மும்பை ஸ்டுடியோக்களில் தான் தமிழ், தெலுங்கு படங்கள் தயாராயின. அதனால்தான் தொடக்ககாலத் தமிழ்ப் படங்கள் மராட்டியப் பண்பாட்டுடன் வெளிவந்தன.



1913-ம் ஆண்டு தாதா பால்கே, ‘ராஜா ஹரிச்சந்திரா’வை எடுத்திருந்தார். இதே கதையை 1932-ம் ஆண்டு ‘அயோத்தி எச்சே ராஜா’ என்ற பெயரில் இயக்கினார் சாந்தாராம். தொடக்க காலத்தில் பெண் வேடத்திற்கு ஆண்களே நடிப்பார்கள். அதை மாற்றி முதன் முதலில் பெண்களையே நடிக்க வைத்தவர் சாந்தாராம் தான். துர்கா கோட் என்ற நடிகை இவரது நிறைய படங்களில் நடித்தார்.
இப்படி மெளனப்படக் காலத்திலேயே 6 படங்களை இயக்கியவர், 1934-ம் ஆண்டு முதல் இந்தி, மராத்தி மற்றும் தமிழிலும் படமெடுக்கத் தொடங்கினார். அப்போது வெளிவந்த ‘அம்ரித் மந்தன்’ என்ற படம் இந்தியிலும், மராத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

1936-ல் இந்தியிலும், மராத்தியிலும் வெளிவந்த ‘அமர் ஜோதி’, வெனிஸில் நடைபெற்ற சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது. இதேபோல அடுத்த ஆண்டு வெளிவந்த ‘துனியானாமேனே’ என்ற படத்தில் பெண்களின் பிரச்னையை முதன்மையாக எடுத்துக் கொண்டு, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களுடன் காட்சிகளைப் படைத்தார். வயதானவர்கள் இளம் பெண்களை மணந்துகொள்ளும் வழக்கத்தைக் கண்டித்து விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்தார். இந்தப்படத்தின் பிரதிபலிப்பு 1930, 40-களில் தமிழ், தெலுங்கு, வங்கப்படங்களில் காணப்பட்டது.

1939-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘ஆத்மி’ என்கிற படம், பாலியல் தொழிலில் இருந்துகொண்டு மீள நினைக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மிகச்சிறந்த முறையில் எடுத்துக் காட்டியது. 1941-ல் ‘படோசி’ என்கிற படம் வெளிவந்தது. இந்து, முஸ்லிம் உறவின் மேம்பாட்டை வலியுறுத்துவதாக அந்தப் படம் இருந்தது. நண்பர்கள் இருவர் இனக்கலவரத்தில் இறந்து விடுகின்றனர். அதை உருவகப்படுத்தி ஒரு பெரிய அணைக்கட்டு உடைவது போல காட்சிப்படுத்தியிருந்தார்.

1941-ம் ஆண்டு பிரபாத் ஸ்டுடியோவை விட்டு விலகி, ‘ராஜ்கமல் கலா மந்திர்’ என்கிற திரைப்படக் கம்பெனியை ஏற்படுத்தினார். அதன்மூலம் காளிதாசரின் சகுந்தலத்தை திரைப்படமாக்கினார். வெளிநாட்டில் வர்த்தக ரீதியில் திரையிடப்பட்ட முதல் படம் இதுதான்.

இந்திய மருத்துவர் ஒருவர் சீனப்போரில் கலந்துகொண்டு வீரர்களுக்கு முதலுதவி செய்து பெயர்பெற்றார். சீனச்செவிலியை திருமணம் செய்துகொண்டு அங்கேயே இறந்தார். அவர் ஒரு மராட்டியர். அவரது வாழ்க்கையை வைத்து கே.ஏ.அப்பாஸ் ‘திரும்பி வராத ஒருவர்’ என்ற நாவலை எழுதினார். அந்தப் புத்தகத்தைப் படித்த சாந்தாராம், நாவலாசிரியரை திரைக்கதையாக்கித் தரச்சொல்லி, அதனை ‘கோட்நிஸ்கா ககாணி’ என்கிற பெயரில் திரைப்படமாக்கி வெளியிட்டார். சோசலிச நாடுகளில் இந்தப்படம் சிறப்பாக வெளியிடப்பட்டது.

1959-ம் ஆண்டு பாடல், நாட்டியம் இவற்றை வலியுறுத்தி ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ என்கிற படத்தை வெளியிட்டார். இதுதான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம் ஆகும்.

ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்ட 6 சிறைக்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி, அவர்களை உயர்த்திய அதிகாரியின் உண்மைக் கதையை வைத்து ‘தோ ஆன்கி பாரஹாத்’ என்கிற படத்தை எடுத்தார். இதன் சமூக உள்ளடக்கம் கருதி 1957-ம் ஆண்டு வெனிஸ் உலகத்திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி விருதினை பெற்றது. தனது வாழ்வின் இறுதிவரை அவர் சிறந்த இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக விளங்கினார். முன்பு இயக்கிய ‘சகுந்தலா’ திரைப்படத்தை ‘ஸ்த்ரி’ என்ற பெயரில் வண்ணப்படமாகத் தயாரித்தார்.



தமிழ்நாட்டுடன் சாந்தாராமுக்கு நெருக்கமான உறவு இருந்தது. அவர் படம் தயாரித்ததால் மட்டுமல்ல; படத்தயாரிப்பினை எவ்வாறு செய்யவேண்டும், சமூகப்படங்களை எவ்வாறு எடுக்கவேண்டும் என்கிற முறையினைக் காண்பித்தார். சாந்தாராமின் ஆளுமை எம்.ஜி.ஆரைப் பெரிதும் கவர்ந்த்தது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது டெல்லியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சாந்தாராமின் காலில் விழுந்து ஆசி பெற்றார். சாந்தாராமின் ‘தோ ஆன்கி பராஹாத்’ என்ற படத்தை தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ என்று 20 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். எடுத்தார். இதே போல சாந்தாராமின் ‘அப்னாதேஸ்’ என்கிற படம் ‘நம் நாடு’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர்’ நடிப்பில் வெளிவந்தது. சாந்தாராமால் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மராட்டிய நடிகை சாந்தா ஆப்தே. இவர் அந்தக்காலத்திலேயே தமிழக ரசிகர்களுக்கு தமிழில் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவரை நினைவுறுத்தி உள்ளது கூகுள்

REEMA SEN INDIAN ACTRESS BORN 1981 OCTOBER 29




REEMA SEN INDIAN ACTRESS 
BORN 1981 OCTOBER 29


ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெலுங்கு திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த மாதம் டெல்லி தொழிலதிபரை ஆடம்பரமாக திருமணம் முடித்த ரீமா சென் மீண்டும் நடிக்க வந்துவிட்டார் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய செய்தி!
விசாரித்ததில் இது அதிகாரப்பூர்வமானதுதான் என உறுதியானது.

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் சொந்தப்பட நிறுவனமான கில்லி பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படமான சட்டம் ஒரு இருட்டறையில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

1981-ல் வெளியாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய அதே சட்டம் ஒரு இருட்டறைதான் இப்போது ரீமேக் செய்யப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ரீமா சென் கூறுகையில், "இந்தப் படத்தின் இந்தி ரீமேக் அந்தா கானூனை நான் பார்த்திருக்கிறேன். அதில் ஹேமமாலினியின் பாத்திரம் ரொம்பப் பிடிக்கும். அந்த பாத்திரத்தைதான் இப்போது தமிழில் நான் செய்யப் போகிறேன் என்பதில் ரொம்ப மகிழ்ச்சி. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்துவேன். முன்பை விட இன்னும் வேகமான ரீமாவை படத்தில் காணலாம்," என்றார்.


நடிகை ரீமா சென் தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் இவர் முதல் முதலில் தெலுங்கில் தான் அறிமுகமானார் ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை அதன் பின்பு தமிழில் மின்னலே என்ற படத்தில் மாதவனுடன் நடித்தார்.இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் தான் இயக்கினார் கௌதம் திரைப்படம் என்றால் சும்மாவா சொல்லவேணும் தொடர்ந்து விஜய், விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ரீமா சென், ஒரு கால கட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் 2012 ல் அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.




இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அங்கு வந்த ரீமா சென் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார், மிகவும் உடல் எடை போட்டு குண்டாக மாறியுள்ளார், இவருக்கு தற்பொழுது 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது இவரின் சமீபத்தில் உள்ள புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்

JONAS SALK, FOUND MEDICINE FOR POLIO ATTACK BORN 1914 OCTOBER 28- 1995 JUNE 23




JONAS SALK, FOUND MEDICINE 
FOR POLIO ATTACK 
BORN 1914 OCTOBER 28- 1995 JUNE 23


போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு
? எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி
தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள்.

முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க
வைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும் வேகப்படுத்தியது.


உலகம் முழுக்க இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். அதில் தொன்னூறு சதவிகிதம் பேர் பால் மணம் மாறாத சிறுவர்கள். அமெரிக்காவில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு முறை நோய் தாக்கினால் பின்னர் அதில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அளவுக்கு கொடுமையான வியாதி இது.

பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். பெரும்பாலும் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ்களை கொண்டே சிகிச்சை தரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.ஜான் எண்ட்லர் ஆய்வுக்கு தேவையான்
தூய்மையான போலியோ வைரஸ்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருந்தார். சால்க் பார்மல்டிஹைடை கொண்டு போலியோ கிருமிகளை கொன்றார். முதலில் குரங்குகளில்
கொல்லப்பட்ட வைரஸ்களை கொண்ட மருந்தை சோதித்து பார்த்த பின்பு,தாங்களே மருந்தை செலுத்திப்பார்த்தார்கள்.

யாருக்கும் எந்த தீங்கும் உண்டாகாமல் இருக்கவே நாடு முழுக்க ஐந்து லட்சம் பிள்ளைகளிடம் இந்த மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில்
இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது.

சால்க்கின் தடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி
உடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டியிருக்க முடியும். சால்க் என்ன சொன்னார் தெரியுமா ? “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா ? சொல்லுங்கள் ?”. அத்தகு அரிய மனிதரை நினைவு கூர்வோம். போலியோ தடுப்பு மருந்து இன்றைய தினம் தான் முதன்முதலில் அமெரிக்காவில் பெருமளவில் சோதிக்கப்பட்டது 

ஒரு மாமனிதனின் பிறந்தநாள் இன்று.. யார் இவர்.?

"மொத்தமும் தேவையில்லை.அதில் இரண்டே இரண்டு சொட்டுக்கள் போதும்..."

--என்று அவர் கூறியதை உலகம் பலத்த அதிசம் கலந்த ஆச்சர்சயத்துடன் பார்த்தது.

அது எப்படி இரண்டே இரண்டு சொட்டுகள் போதும் என்கிறார் அவர்?

-- என மருத்துவ உலகம் கேள்விகளோடு தயாராக இருந்தது.

அவர் தரப்போகும் அந்த இரண்டு சொட்டுக்களுக்காக ஒட்டு உலகமே காத்திருந்தது.

ஏப்ரல் 12, 1955.

ஒட்டு மொத்த உலகமே இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தது.ஒரு மருத்துவர் தனது இரண்டு சொட்டுக்கள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடப் போகின்றார்.அவரது அந்த ஆராய்ச்சி முடிவுகளுக்காகத் தான் ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைமை மருத்துவரான டாக்டர்.தாமஸ் பிரான்சிஸ் மேடையில் ஏறி மைக்கின் முன் வந்து நிற்கிறார்.அவர் பேசப்போகும் வார்த்தைகளை எதிர் நோக்கி ஒட்டு மொத்த உலகமே எதிர்பார்ப்பில் அப்படியே உறைந்து நிற்கிறது,

"நீண்ட காலமாக மனித குலம்-நடத்தி வந்த யுத்தம் இதோ இன்றோடு முடிவுக்கு வருகிறது.ஆராய்ச்சி முடிவுகள் மிகச் சாதகாமான விளைவுகளைத் தந்துள்ளன.இந்த வேக்சின் அருமையான முடிவுகளைத் தந்துள்ளது.பலதரப்பட்ட சோதனைகளைச் செய்து பார்த்து விட்டோம்.அனைத்து சோதனைகளிலும் சாதகமான பலன்களே வந்துள்ளது.இந்த வேக்சின் முழுப் பாதுகாப்பானது.

இந்த வேக்சின் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.

இதை கண்டுபிடித்த நம் பல்கலைக்கழகத்தின் "அந்த மருத்துவர்" தனக்கு எந்தக் காப்புரிமையும் வேண்டாமென மறுத்து விட்டார்.

எனவே இன்றில் இருந்து இந்த மருந்து முழுக்க முழுக்க இலவசமாகத் தரப்படுகிறது"

---என்று பரபரப்பாக அறிவிக்கிறார்.

அவர் அறிவித்து முடித்து மேடையை விட்டு இறங்கிய அடுத்த நொடி,பெருத்த ஆரவாரம் எழுந்தது.

மக்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு கண்ணீர் விடுகின்றனர்.

அமெரிக்க நாடு முழுவதுமுள்ள தேவாலயங்களின் மணிகள் ஒலிக்கப்படுகின்றன, பிரார்த்தனைகள் நடக்கிறது.

தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் கூட ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டு--மௌன மரியாதை தரப்படுகிறது.

எதற்காக?

"அந்த ஒரு மனிதருக்காக.."

பத்திரிக்கைகளும்,புகப்படக்காரர்களும் அந்த மனிதரை--அந்த மருத்துவரை மொய்த்துக் கொண்டு,பல கேள்விகளைக் கேட்டார்கள்.அனைத்திலும் பிரதானமாக அமைந்த கேள்வி

"நீங்கள் ஏன் இந்த வேக்சினுக்கு காப்புரிமையைப் பெறவில்லை,பெற்றிருந்தால் ட்ரில்லியன்களில் பணம் வந்திருக்குமே?" என்பது தான்.

இப்படிபட்ட ஒரு மாமருந்தை கண்டுபிடித்துவிட்டு,அதை காப்புரிமை செய்யாமல் இலவசமாகத் தந்துள்ளாரே.இதை மட்டும் இவர் காப்புரிமை செய்து இருந்தால் இந்த மனித இனம் உள்ள மட்டும் இவருக்கு பணம் கொட்டிக் கொண்டிருக்குமே...இவர் ஏன் அப்படி செய்யவில்லை....என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.

எனவே ஒருமித்த குரலில் அந்த ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்டனர்.

அமைதியான சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்த அந்த மருத்துவர்,

"காப்புரிமையா?இதற்கா?எனக்கா? உலகத்திற்கு ஆற்றலைத் தரும் சூரியன் அதற்காக காப்புரிமையைப் பெற்றுள்ளதா?"

---என்று மட்டும் சொல்லிவிட்டு தனது அடுத்த பணிக்கு சென்றுவிட்டார்.

விக்கித்து திகைத்து அதிசயித்து நின்றது உலகம்.

அதுமட்டுமல்லலல,அக்காலகட்டத்தில் வைரஸ் கிருமியால் பரவும் நோய்களுக்கு லைவ் வைரஸ்களைக் கொண்டு அதாவது உயிருடன் இருக்கும் வைரஸ்களைக் கொண்டு தான் வேக்சின்களைத் தயாரிப்பார்கள்.

அதாவது உயிருள்ள ஆனால் பலவீனமாக்கப்பட்ட வைரஸை உடலில் செலுத்தி--உடலின் நோயெதிர்ப்பு சக்தி--அந்த வைரசிற்கு எதிராக போராடும் வல்லமையை,ஆண்டிபாடிகள் வடிவில் உடலைப் பெற வைப்பார்கள்.எனவே பிற்காலத்தில் நிஜமான வைரஸ் தாக்குதல் வந்தால்,இவனைத் தான் நாம ஏற்கனவே அடிச்சுருக்கோமே என்று உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறன் அந்த நோயை விரட்டி விடும்.

ஆனால் அந்த மருத்துவர் பயன்படுத்தியது இறந்த வைரஸ்களை.வைரஸ்களை ஆய்வகத்தில் வளர வைத்து-பின் அதில் பார்மால்டிஹைடு வேதிபொருளை செலுத்த,அந்த வைரஸ்கள் முற்றிலும் செயலிழந்து போகும்.பின் அந்த செயலழிந்த வைரஸ்களை உடலின் செலுத்தினால்--உடல் வழக்கம் போல ஆண்டிபாடிகளை உருவாக்கும்.இதையும் அவர் காப்புரிமை செய்யவில்லை.

இப்படி மருத்துவ உலகின் மாபெரும் புரட்சிகளை செய்து விட்டு,அதை இலவசமாக மனித குலத்திற்கு அர்ப்பணித்துவிட்டு அமைதியாகத் தன் அடுத்த பணியைப் பார்க்க சென்ற,

அவர் மருத்துவர் தான் "ஜோன்ஸ் சால்க்."

அவரால் இரண்டே இரண்டு சொட்டில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த நோய்--"போலியோ"...

இன்று அந்த மாமனிதன் மருத்துவர் ஜோன்ஸ் சால்க்கின் 105 வந்து பிறந்தநாள்....

போட்டோவில் இருப்பவர் தான் டாக்டர் ஜோன்ஸ் சால்க்....

Tuesday, 29 October 2019

VAALI ,LYRICS WRITER OF TAMIL CINEMA BORN 1931 OCTOBER 29-2013 JULY 18





VAALI ,LYRICS WRITER OF TAMIL CINEMA 


BORN 1931 OCTOBER 29-2013 JULY 18



கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பிறப்பும் வளர்ப்பும்
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட[1] வாலி திருச்சி மாவட்டம் திருப்பராய்துறையில் பிறந்து, திருவரங்கத்தில் வளர்ந்தார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான்.[2] தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.[3][4]

திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா [5][6]

வாலி இறப்பு
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்.[7][8]

வாலி பெயர்க்காரணம்
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.[9][10]

எழுதிய நூல்கள்

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்[1] .அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.[11]

இவற்றையும் பார்க்கவும்
1967ல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள்.


சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில் கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறையில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள்.[12]


தளபதி என்ற பெயருக்கும் வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!.

குறிப்பிடத்தக்க பாடல்களில் சில
பாடல் படம் வருடம்
" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " ஆயிரத்தில் ஒருவன் 1968
" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " தீர்க்க சுமங்கலி 1974
" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " இரு மலர்கள் 1967
நான் ஆணையிட்டால் எங்க வீட்டுப் பிள்ளை (1965)
காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் (1965)
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- சந்திரோதயம் (1966)
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - எதிர்நீச்சல் (1968)
இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (1968)
அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968)
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- இருகோடுகள் (1969)
ஆண்டுக்கு ஆண்டு சுபதினம் (1969)
மதுரையில் பறந்த மீன்கொடியை- பூவா தலையா (1969)
விருதுகள்
பத்மஸ்ரீ விருது-2007
1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.
வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்[13].

1970 – எங்கள் தங்கம்
1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்
1989 – வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள்
1990 – கேளடி கண்மணி
2008 – தசாவதாரம்





1950களில்
1958- அழகர்மலை கள்வன் (முதல் திரைப்படம்)
ஆண்டு முதல் திரைப்படம் பாடல் பாடியவர் இசையமைப்பாளர் குறிப்புகள்
1958 அழகர்மலை கள்வன் நிலவும் தாரையும் நீயம்மா-இந்த உலகம் ஒருநாள் உனதம்மா பி சுசிலா கோபாலம் முதல் பாடல்
1960களில்
1961- "சந்தரகாந்த்"
1961- "நல்லவன் வாழ்வான்"
1963- "இதயத்தில் நீ"
1963- "கற்பகம்"
1963- "எதையும் தாங்கும் இதயம்"
1964- "தாயின் மடியில்"
1964- "தெய்வத்தாய்"
1964- "படகோட்டி"
1965- "பஞ்சவர்ணக்கிளி"
1965- "வெண்ணிற ஆடை"
1965- "பணம் படைத்தவன்"
1965- "தாழம்பூ"
1965- "அன்புக்கரங்கள்"
1965- "கலங்கரை விளக்கம்"
1965- "ஆயிரத்தில் ஒருவன்"
1965- "ஆசை முகம்"
1965- "நீ"
1965- "எங்கள் வீட்டு பிள்ளை"
1965- "காக்கும் கரங்கள்"
1965- "குழந்தையும் தெய்வமும்"
1966- "சின்னஞ்சிறு உலகம்"
1966- "மோட்டார் சுந்தரம் பிள்ளை"
1966- "நாடோடி"
1966- "அன்பே வா"
1966- "சந்தரோதயம்"
1966- "மேஜர் சந்தரகாந்த்"
1966- "தாலி பாக்கியம்"
1966- "நான் ஆணையிட்டால்"
1966- "பெற்றால்தான் பிள்ளையா"
1967- "பேசும் தெய்வம்"
1967- "அவள்"
1967- "செல்வமகள்"
1967- "அதே கண்கள்"
1967- "அரச கட்டளை"
1967- "காவல்காரன்"
1967- "நெஞ்சிருக்கும் வரை"
1967- "இருமலர்கள்"
1968- "உயர்ந்த மனிதன்"
1968- "ஒளி விளக்கு"
1968- "எதிர்நீச்சல்"
1968- "ஜீவனாம்சம்"
1968- "கல்லும் கனியாகும்"
1968- "கண்ணன் என் காதலன்"
1968- "கலாட்டா கல்யாணம்"
1968- "குடியிருந்த கோயில்"
1969- "நம் நாடு (1969 திரைப்படம்)"
1969- "மன்னிப்பு"
1969- "நில் கவனி காதலி"
1969- "சுபதினம்"
1969- "இருகோடுகள்"
1969- "அடிமைப்பெண்"
1969- "கன்னிப்பெண்"
1969- "பூவா தலையா"
1970-1974
1970- "மாணவன்"
1970- "தலைவன்"
1970- "என் அண்ணன்"
1970- "தேடிவந்த மாப்பிள்ளை"
1970- "மாட்டுக்கார வேலன்"
1970- "எங்கள் தங்கம்"
1971- "நூற்றுக்கு நூறு"
1971- "தேனும் பாலும்"
1971- "குமரிக்கோட்டம்"
1971- "ஒரு தாய் மக்கள்"
1971- "ரிக்ஷாக்காரன்"
1971- "நீரும் நெருப்பும்"
1971- "முகமது பின் துக்ளக்"
1971- "பாபு"
1972- "ராமன் தேடிய சீதை"
1972- "வெள்ளி விழா"
1972- "இதய வீணை"
1972- "நான் ஏன் பிறந்தேன்"
1972- "அன்னமிட்ட கை"
1972- "பிள்ளையோ பிள்ளை"
1973- "சொல்லத்தான் நினைக்கிறேன்"
1973- "சூரியகாந்தி"
1973- "உலகம் சுற்றும் வாலிபன்"
1973- "அரங்கேற்றம்"
1973- "பாரத விலாஸ்"
1974- "தீர்க்க சுமங்கலி"
1974- "சிரித்து வாழ வேண்டும்"
1974- "உரிமைக்குரல்"
1974- "நேற்று இன்று நாளை"
1974- "சிவகாமியின் செல்வன்"
1974- "அத்தையா மாமியா"
1974- கலியுகக் கண்ணன்
1975-1979
1975- "புதுவெள்ளம்"
1975- "அவளும் பெண்தானே"
1975- "பட்டிக்காட்டு ராஜா"
1975- "அன்பே ஆருயிரே"
1975- "அபூர்வ ராகங்கள்"
1975- "இதயக்கனி"
1975- "டாக்டர் சிவா"
1975- "நினைத்ததை முடிப்பவன்"
1975- "தேன்சிந்துதே வானம்"
1976- "ஒரு கொடியில் இரு மலர்கள்"
1976- "ஊருக்கு உழைப்பவன்"
1976- "நீதிக்கு தலைவணங்கு"
1976- "நாளை நமதே"
1976- "பத்ரகாளி"
1977- "பெண் ஜென்மம்
1977- "இன்று போல் என்றும் வாழ்க"
1977- "நவரத்தினம்"
1977- "மீனவ நண்பன்"
1977- "ஆறு புஷ்பங்கள்"
1978- "மாங்குடி மைனர்"
1978- "வணக்கத்திற்குரிய காதலியே"
1978- "பைலட் பிரமநாத்"
1978- "சிகப்பு ரோஜாக்கள்"
1978- "அச்சாணி"
1978- " அவள் ஒரு அதிசயம்
1978- "ஜஸ்டிஸ் கோபிநாத்"
1978- "சதுரங்கம்"
1978- "இளமை ஊஞ்சலாடுகிறது"
1978- "சிட்டுக்குருவி"
1978- மச்சானை பாத்தீங்களா
1978- "வண்டிக்காரன் மகன்"
1978- "அன்னப்பூரணி"
1979- "லட்சுமி
1979- "அன்னை ஒரு ஆலயம்"
1979- "நான் வாழவைப்பேன்"
1979- "அன்பே சங்கீதா"
1979- "தர்மயுத்தம்"
1979- "கடவுள் அமைத்த மேடை"
1979- "அலாவுதீனும் அற்புதவிளக்கும்"
1979- "நீயா"
1979- "பட்டாகத்தி பைரவன்"
1979- "இவர்கள் வித்தியாசமானவர்கள்"
1979- "அழகே உன்னை ஆராதிக்கிறேன்"
1980-1984
1980- "கண்ணில் தெரியும் கதைகள்"
1980- "நிழல்கள்"
1980- "ஒத்தையடி பாதையிலே"
1980- "நட்சத்திரம்"
1981- "மௌன கீதங்கள்"
1981- "குடும்பம் ஒரு கதம்பம்"
1981- "ஆணிவேர்"
1981- "அக்னி சாட்சி"
1981- "மணல்கயிறு"
1982- "சிம்லா ஸ்பெஷல்"
1982- "மூன்று முகம்"
1982- "தூறல் நின்னு போச்சு"
1982- "தனிக்காட்டு ராஜா"
1982- "வாழ்வே மாயம்"
1982- "பட்டணத்து ராஜாக்கள்"
1982- "வா கண்ணா வா"
1982- "தாய் முகாம்பிகை"
1982- "சகலகலா வல்லவன்"
1982- "துணை"
1982- "கண்ணே ராதா"
1982- "பரிட்சைக்கு நேரமாச்சு"
1982- "நெஞ்சங்கள்"
1982- "எங்கேயோ கேட்ட குரல்"
1982- "கோபுரங்கள் சாய்வதில்லை"
1982- "ரங்கா"
1982- "தீர்ப்பு"
1982- "வடமாலை"
1983- "அந்த சில நாட்கள்"
1983- "வெள்ளை ரோஜா"
1983- "அடுத்த வாரிசு"
1983- "சிவப்பு சூரியன்"
1983- "தங்கமகன்"
1983- "சந்திப்பு"
1983- "சூரக்கோட்டை சிங்கக்குட்டி"
1983- "நீதிபதி"
1983- "சரணாலயம்"
1983- "கோழி கூவுது"
1983- "பாயும் புலி"
1983- "தாய்வீடு"
1983- "சுமங்கலி"
1983- "தூங்காதே தம்பி தூங்காதே"
1983- "மிருதங்க சக்கரவர்த்தி"
1983- "சட்டம்"
1984- "அன்பே ஓடி வா"
1984- "வம்சா விளக்கு"
1984- "மதுரை சூரன்"
1984- "தாவணிக் கனவுகள்"
1984- "தீர்ப்பு என் கையில்"
1984- "கை கொடுக்கும் கை"
1984- "வெள்ளை புறா ஒன்று"
1984- "வீட்டுக்கொரு கண்ணகி"
1984- "சத்தியம் நீயே"
1984- "வைதேகி காத்திருந்தாள்"
1984- "ஓசை"
1984- "இரு மேதைகள்"
1984- "விதி"
1984- "சிம்ம சொப்பனம்"
1984- "மெட்ராஸ் வாத்தியார்"
1984- "அன்புள்ள ரஜினிகாந்த்"
1984- "குழந்தை யேசு"
1984- "நல்லவனுக்கு நல்லவன்"
1984- "நல்ல நாள்"
1984- "நாளை உனது நாள்"
1984- "இது எங்க பூமி"
1984- "குடும்பம்"
1985-1989
1985- "ஆண்பாவம்"
1985- "தென்றலே என்னை தொடு"
1985- "ஸ்ரீ ராகவேந்திரா"
1985- "ஒரு நல்லவன் ஒரு வல்லவன்"
1985- "மனக்கணக்கு"
1985- "குங்குமச்சிமிழ்"
1985- "கீதாஞ்சலி"
1985- "மங்கம்மா சபதம்"
1985- "ஜப்பானில் கல்யாண ராமன்"
1985- "படிக்காதவன்"
1985- "கன்னிராசி"
1985- "நீதியின் நிழல்"
1985- "ராஜ ரிஷி"
1985- "கெட்டி மேளம்"
1985- "நான் சிவப்பு மனிதன்"
1985- "பந்தம்"
1985- " வேஷம்
1985- "படிக்காத பண்ணையார்"
1985- "நல்ல தம்பி"
1985- "உயர்ந்த உள்ளம்"
1985- "உதயகீதம்"
1985- "இதய கோவில்"
1985- "நாம் இருவர்"
1985- "காக்கிசட்டை"
1985- "கரையை தொடாத அலை௧ள்"
1985- "சாவி
1986- "மீண்டும் பல்லவி"
1986- "கண்மணியே பேசு"
1986- "கரிமேடு கருவாயன்
1986- "நான் அடிமை இல்லை"
1986- "எனக்கு நானே நீதிபதி"
1986- "விடுதலை"
1986- "அன்னை என் தெய்வம்"
1986- "ஒரு இனிய உதயம்"
1986- "சாதனை"
1986- "மௌன ராகம்"
1986- "மௌனம் கலைகிறது"
1986- "ஆனந்த கண்ணீர்"
1986- "நம்பினோர் கெடுவதில்லை"
1986- "வசந்தராகம்"
1986- "தர்மதேவதை"
1986- "தர்ம பத்தினி"
1986- "லட்சுமி வந்தாச்சு"
1986- "உயிரே உனக்காக"
1986- "சம்சாரம் அது மின்சாரம்"
1986- "மருமகள்"
1986- "மெல்லத் திறந்தது கதவு"
1986- "நானும் ஒரு தொழிலாளி"
1987- "முப்பெருந் தேவியர்"
1987- "எங்க சின்ன ராசா"
1987- "பாடு நிலாவே"
1987- "பூமழை பொழியுது"
1987- "குடும்பம் ஒரு கோயில்"
1987- "ஊர்க்காவலன்"
1987- நல்ல பாம்பு
1987- "காவலன் அவன் கோவலன்"
1987- "சிறைப்பறவை"
1987- "அஞ்சாத சிங்கம்"
1987- "வீர பாண்டியன்"
1987- "இனிய உறவு பூத்தது"
1988- "பூவுக்குள் பூகம்பம்"
1988- "பெண்மணி அவள் கண்மணி"
1988- "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு"
1988- "அண்ணா நகர் முதல் தெரு"
1988- "குரு சிஷ்யன்"
1988- "பொறுத்தது போதும்"
1988- "இது நம்ம ஆளு"
1988- "சத்யா"
1988- "கலியுகம்"
1988- "சொல்ல துடிக்குது மனசு"
1988- "தர்மத்தின் தலைவன்"
1988- "என் தமிழ் என் மக்கள்"
1988- "தம்பி தங்க கம்பி"
1988- "மணமகளே"
1988- "சகாதேவன் மகாதேவன்"
1988- "அக்னி நட்சத்திரம்"
1988- "தாய்ப்பாசம்"
1989- "புதுப்புது அர்த்தங்கள்"
1989- "ஆராரோ ஆரிரரோ"
1989- "ராஜநடை"
1989- "ராஜாதி ராஜா"
1989- "என்ன பெத்த ராசா"
1989- "தர்மம் வெல்லும்"
1989- "வருஷம் 16"
1989- "அபூர்வ சகோதரர்கள்"
1989- "சிவா"
1989- "வெற்றி விழா"
1989- "பொன்மன செல்வன்"
1989- "சோலை குயில்"
1989- "ஒரே ஒரு கிராமத்திலே"
1989- "வாத்தியார் வீட்டுப்பிள்ளை"
1989- "எம்புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்"
1990-1994
1990- "கேளடி கண்மணி"
1990- "புது வசந்தம்"
1990- "துர்கா"
1990- "ஆரத்தி எடுங்கடி"
1990- "தாலாட்டுப் பாடவா"
1990- "அதிசயப் பிறவி"
1990- "மைக்கேல் மதன காமராஜன்"
1990- "புரியாத புதிர்"
1990- "வாழ்க்கைச் சக்கரம்"
1990- "புதுப்பாட்டு"
1990- "நடிகன்"
1990- "வேலை கிடச்சுடுச்சு"
1990- "உன்னை சொல்லி குற்றமில்லை"
1990- "சிறையில் பூத்த சின்ன மலர்"
1990- "மை டியர் மார்த்தாண்டன்"
1990-" மனைவி ஒரு மாணிக்கம்
1990- "எதிர்காற்று"
1990- "அஞ்சலி"
1990- "ராஜா கைய வச்சா"
1990- "சந்தன காற்று"
1990- "கிழக்கு வாசல்"
1990- "சத்ரியன்"
1990- "அரங்கேற்ற வேளை"
1990- "தைமாசம் பூவாசம்"
1991- "வாசலில் ஒரு வெண்ணிலா"
1991- "ஞான பறவை"
1991- "தைப்பூசம்"
1991- "ருத்ரா"
1991- "பிரம்மா"
1991- "ஈரமான ரோஜாவே"
1991- "இதயம்"
1991- "ஆயுள் கைதி"
1991- "சின்ன தம்பி"
1991- "கோபுர வாசலிலே"
1991- "நீ பாதி நான் பாதி"
1991- "தாலாட்டு கேக்குதம்மா"
1991- "கிழக்குக்கரை"
1991- "மரிக்கொழுந்து"
1991- "மாநகரக்காவல்"
1991- "தையல்காரன்"
1991- "தளபதி"
1991- "குணா"
1991- "வசந்தகால பறவை"
1992- "திருமதி பழனிச்சாமி"
1992- "உன்னை வாழ்த்தி பாடுகிறேன்"
1992- "அம்மா வந்தாச்சு"
1992- "வில்லுப்பாட்டுக்காரன்"
1992- "செம்பருத்தி"
1992- "பாண்டியன்"
1992- "தேவர் வீட்டுப் பொண்ணு"
1992- "மீரா"
1992- "மன்னன்"
1992- "உன்ன நினச்ச பாட்டு படிச்சு"
1992- "செந்தமிழ் பாட்டு"
1992- "தெய்வவாக்கு"
1992- "சின்ன மருமகள்"
1992- "நாடோடி பாட்டுக்காரன்"
1992- "ஊர்பஞ்சாயத்து"
1992- "சிங்கார வேலன்"
1992- "சூரியன்"
1992- "நாங்கள்"
1992- "தேவர்மகன்"
1992- "தாலிகட்டிய ராசா"
1992- "வண்ண வண்ண பூக்கள்"
1993- "ஐ லவ் இந்தியா"
1993- "சின்ன ஜமீன்"
1993- "வள்ளி"
1993- "வால்டர் வெற்றிவேல்"
1993- "உள்ளே வெளியே"
1993- "மணிசித்திரத்தழு" (மலையாளம்)
1993- "தர்மசீலன்"
1993- "சின்ன கண்ணம்மா"
1993- "உழைப்பாளி"
1993- "உழவன்"
1993- "எஜமான்"
1993- "சின்ன மாப்பிள்ளை"
1993- "மகாராசன்"
1993- "கலைஞன்"
1993- "காத்திருக்க நேரமில்லை"
1993- "கற்பகம் வந்தாச்சு"
1993- "ஜென்டுல்மேன்"
1993- "செந்தூரப் பாண்டி"
1994- "சீமான்"
1994- "இந்து"
1994- "என் ஆசை மச்சான்"
1994- "வீட்ல விசேஷங்க"
1994- "வாட்ச்மேன் வடிவேல்"
1994- "ரசிகன்"
1994- "மோகமுள்"
1994- "காதலன்"
1994- "செந்தமிழ் செல்வன்"
1994- "ராசாமகன்"
1994- "கண்மணி"
1994- "மகாநதி"
1994- "வீரா"
1994- "நம்ம அண்ணாச்சி"
1994- "பிரியங்கா"
1994- "மிஸ்டர் ரோமியோ"
1994- "அமைதிப்படை
1995-1999
1995- "ராசய்யா"
1995- "நான் பெத்த மகனே
1995- "கட்டுமரக்காரன்"
1995- "சின்ன வாத்தியார்"
1995- "தொட்டா சிணுங்கி"
1995- "தேவா"
1995- "பாட்டு பாடவா"
1995- "பெரிய குடும்பம்"
1995- "முத்துக்காளை"
1995- "ஆணழகன்"
1995- "ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி"
1995- "ஆசை"
1995- "மிஸ்டர் மெட்ராஸ்"
1995- "ராஜாவின் பார்வையிலே"
1995- "ரகசிய போலீஸ் (1995)"
1995- "திருமூர்த்தி"
1995- "ஆயுத பூஜை"
1996- "இந்தியன்"
1996- "அவதார புருஷன்"
1996- "அவ்வை சண்முகி
1996- "வான்மதி"
1996- "நேதாஜி"
1996- "காதல் தேசம்"
1996- "பூவே உனக்காக"
1996- "பூவரசன்"
1996- "இரட்டை ரோஜா"
1996- "கல்லூரி வாசல்"
1996- "டாடா பிர்லா"
1996- "கோயமுத்தூர் மாப்ளே"
1997- "தம்பிதுரை"
1997- "வாய்மையே வெல்லும்"
1997- "பாரதி கண்ணம்மா"
1997- "பெரிய மனுஷன்"
1997- "பொங்கலோ பொங்கல்"
1997- "பாசமுள்ள பாண்டியரே"
1997- "மன்னவா"
1997-"ரட்சகன்
1998- "கலர் கனவுகள்
1998- "காதலா காதலா"
1998- "மறுமலர்ச்சி"
1998- "நினைத்தேன் வந்தாய்"
1999- "காதலர் தினம்"
1999- "மன்னவரு சின்னவரு"
1999- "மனம் விரும்புதே உன்னை"
1999- "விரலுக்கேத்த வீக்கம்"
1999- "பூவாசம்"
2000-2004
2000- "வண்ண தமிழ் பாட்டு"
2000- "ஹேராம்"
2000- "கண்ணுக்கு கண்ணாக"
2000- "பாளையத்து அம்மன்"
2000- "பிரியமானவளே"
2000- "சிம்மாசனம்"
2000- "நாகலிங்கம்"
2000- "பெண்ணின் மனதை தொட்டு"
2001- "டும் டும் டும்"
2001- "மிடில் கிளாஸ் மாதவன்"
2001- "மின்னலே"
2001- "பார்த்தாலே பரவசம்"
2001- "தீனா"
2001- "லூட்டி"
2001- "சாக்லெட்"
2001- "தோஸ்த்"
2001- "நரசிம்மா"
2002- "யூத்"
2002- "பகவதி"
2002- "தென்காசி பட்டணம்"
2002- "புன்னகை தேசம்"
2002- "ஸ்ரீ"
2002- "காதல் வைரஸ்"
2002- "மௌனம் பேசியதே"
2002- "இவன்"
2002- "பாபா"
2003- "புதிய கீதை"
2003- "லேசா லேசா"
2003- "சிம்ஹகிரி" (தெலுங்கு)
2003- "பாய்ஸ்"
2004- "மன்மதன்"
2004- "குத்து"
2004- "நியூ"
2005-2009
2005- "மண்ணின் மைந்தன்"
2005- "கஜினி"
2005- "சந்திரமுகி"
2005- "மும்பை எக்ஸ்பிரஸ்"
2005- "ஒருநாள் ஒருகனவு"
2005- "அன்பே ஆருயிரே"
2005- "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி"
2006- "கள்வனின் காதலி"
2006- "சில்லுனு ஒரு காதல்"
2006- "தலைமகன்"
2006- "வல்லவன்"
2007- "இனிமே நாங்கதான்"
2007- "சிவாஜி"
2007- "சென்னை 600028"
2007- "ஆழ்வார்"
2007- "என் உயிரினும் மேலான"
2007- "பில்லா"
2007- "தொட்டால் பூமலரும்"
2007- "உன்னாலே உன்னாலே"
2007- "அழகிய தமிழ் மகன்"
2008- "சரோஜா"
2008- "ஜெயம் கொண்டான்"
2008- "பீமா"
2008- "தசாவதாரம்"
2008- "சரோஜா" (தெலுங்கு)
2008- "சக்கரகட்டி"
2008- "தனம்"
2008- "குசேலன்"
2008- "பொம்மலாட்டம்"
2008- "சிங்ககுட்டி"
2008- "சிலம்பாட்டம்"
2008- "உளியின் ஓசை"
2009- "பஞ்சாமிர்தம்"
2009- "அருந்ததி"
2009- "மலை மலை"
2009- "நாடோடிகள்"
2009- "மத்திய சென்னை"
2009- "நான் கடவுள்"
2009- "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்"
2009- "ஆதவன்"
2009- "வால்மீகி"
2009- "அய்யன்"
2009- "ஜெகன் மோகினி"
2009- பழசிராஜா
2010-2014
2010- "ஜிக்கு புக்கு"
2010- "பெண் சிங்கம்"
2010- "மாஞ்சா வேலு"
2010- "நந்தா நந்திதா"
2010- "காதலுக்கு மரணமில்லை"
2010- "விருதகிரி"
2010- "குரு சிஷ்யன்"
2010- "கோவா"
2010- "தொட்டுப்பார்"
2010- "வாலிபன் சுற்றும் உலகம்"
2010- "தில்லாலங்கடி"
2010- "லீலை"
2010- "தீராத விளையாட்டு பிள்ளை"
2010- "அகராதி"
2010- "சுறா"
2010- "நினைவில் நின்றவள்"
2010- "பாணா காத்தாடி"
2011- "பொன்னர் சங்கர்"
2011- "எங்கேயும் காதல்"
2011- "கண்டேன்"
2011- "மாவீரன்"
2011- "உயர்திரு 420"
2011- "ஒஸ்தி"
2011- "வெடி"
2011- "மங்காத்தா"
2011- "சட்டப்படி குற்றம்"
2011- "ஆடுபுலி"
2011- "அய்யன்"
2012- "ஆதலால் காதல் செய்வீர்"
2012- "தடையறத் தாக்க"
2012- "மிரட்டல்"
2012- "போடா போடி"
2013- "தில்லு முல்லு"
2013- "எதிர்நீச்சல்"
2013- "என்றென்றும் புன்னகை"
2013- "அலெக்ஸ் பாண்டியன்"
2013- "பிரியாணி"
2013- "கண்ணா லட்டு திண்ண ஆசையா"
2013- "உதயம் NH4"
2013- "மரியான்"
2014- "யான்"
2014- "திருடன் போலீஸ்"
2014- "கோச்சடையான்"
2014- "ராமானுஜன்"
2014- "பண்ணையாரும் பத்மினியும்"
2014- "நான்தான் பாலா"
2014- "காவியத்தலைவன்" (கடைசி திரைப்படம்)
திரைக்கதை வசனம்
1974- கலியுகக் கண்ணன்
1975- காரோட்டிக் கண்ணன்
1976- ஒரு கொடியில் இரு மலர்கள்
1978- சிட்டுக்குருவி
1979- கடவுள் அமைத்த மேடை
1989- ஒரே ஒரு கிராமத்திலே




எழுதிய திரைப்பாடல்கள்[தொகு]

கீழே காண்பது வாலி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இது முழுமையான பட்டியல் அல்ல.

ஆண்டுதிரைப்படம்பாடல்(கள்)பிற குறிப்புகள்
2014காவியத் தலைவன்"அல்லி அர்ச்சுனா"கடைசி திரைப்படம்
திருடன் போலீஸ்"மூடு பனிக்குள்"
யான்"ஏ லம்பா லம்பா"
ராமானுஜன்"நாராயணா"
நான் தான் பாலா"திரு வாய்"
கோச்சடையான்"மெதுவாகத்தான்"
பண்ணையாரும் பத்மினியும்"எனக்காக பிறந்தாயோ"
"பேசுறேன் பேசுறேன்"
"உனக்காக பிறந்தேனோ"
2013என்றென்றும் புன்னகை"கடல் நான்தான்"
பிரியாணி"நானா நானா"
"மிஸ்சிப்பி"
மரியான்"சொனாபரியா"
"நேற்று அவள்"
தில்லு முல்லு 2014"கை பேசி"
எதிர்நீச்சல்"எதிர்நீச்சல்"
"வெளிச்சப் பூவே"
உதயம் தே நெ 4" இன்றோடு தடைகள்"
அலெக்ஸ் பாண்டியன்"ஒன்னாம் கிளாஸ்"
கண்ணா லட்டு தின்ன ஆசையா"ஏ உன்னைத்தான்"
"பர்த் டே"
"டூயட் சாங்"
2012போடா போடி"அப்பன் மவனே வாடா"
மிரட்டல்
தடையறத் தாக்க
ஆதலால் காதல் செய்வீர்"தப்புத் தண்டா"
2011ஒஸ்தி"கலாசலா"
"ஒஸ்தி மாமே"
மங்காத்தா"மச்சி ஓப்பன் தி பாட்டில்"
"நண்பனே"
வெடி"காதலிக்க பெண் ஒருத்தி", "இச்சு இச்சு இச்சுக்கொடு"
சட்டப்படி குற்றம்
ஆடு புலி
உயர்திரு 420
அய்யன்"விடுதலைக் குயில் நான்"
மாவீரன்"பொன்னான கோழிப் பொண்ணு"
"வண்டினத்தைச் சும்மா சும்மா"
"ஆசை ஆசை"
கண்டேன்"யாவருக்கும் தலைவன்"
எங்கேயும் காதல்"தீ இல்லை"
"நங்கை நீதானே செங்கை"
பொன்னர் சங்கர்
2010பாணா காத்தாடி"தாக்குதே கண் தாக்குதே"
நினைவில் நின்றவள்அனைத்து பாடல்களும்
சுறா"வெற்றிக்கொடி ஏத்து"
தீராத விளையாட்டுப் பிள்ளை"தீராத விளையாட்டுப் பிள்ளை"
அகராதி
வாலிபன் சுற்றும் உலகம்
லீலை
தொட்டுப்பார்
கோவா"ஊரு நல்ல ஊரு"
"அடிடா நையாண்டிய"
"கோவா"
"இடை விழி"
குரு சிஷ்யன் (2010)