Wednesday 7 September 2016

தெலுங்கு நடிகை பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சரித்திரம்- -பிறப்பு 1925 செப்டம்பர் 7


தெலுங்கு நடிகை பானுமதி ராமகிருஷ்ணா 
ஒரு சரித்திரம்-  -பிறப்பு 1925 செப்டம்பர் 7


பி. பானுமதி (Paluvayi Bhanumathi Ramakrishna, 

பானுமதி இராமகிருஷ்ணா, 7 செப்டம்பர் 1925 – 24 டிசம்பர் 2005) பல மொழிகளில் நடித்த ஒர் இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரின் பெரும்பாலான திரைப்படப் பங்களிப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே அமைந்திருந்தன.


 2003-ம் வருடம் திரைப்படத்துறைக்கு இவராற்றிய பங்களிப்பிற்காக பத்ம பூசண் விருது வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டார்.












பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை[தொகு]

செம்படம்பர் 7 , 1925ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள தோடவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் பானுமதி. அவர் சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார்.


 அவருடைய தந்தை அவருக்குக் கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக்கொடுத்தார். தன் முதல் படத்திலேயே அவர் தியாகராஜ கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றார் பானுமதி.[1]

1939ஆம் ஆண்டு வரவிக்கிரயம் என்னும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் நடந்துகொண்டிருந்தது. அது ஒரு முக்கியமான சோகக் காட்சி. அந்தப் படத்தின் நாயகியான 13 வயது பெண்ணுக்கு அந்தச் சோகக் காட்சியில் நடிக்க இயலவில்லை. அவளுக்கு அழுகை வரவில்லை. இயக்குனர் சி.புல்லையா அந்தச் சிறு பெண்ணை நோக்கிக் கத்தி இருக்கிறார். பயந்துபோன அந்தச் சிறுமி அழுதிருக்கிறார். அந்தக் காட்சி வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டது.


பிறகு அந்த 13வயது சிறுமி தென்னிந்தியச் சினிமாவின் முக்கியமான ஆளுமையாக வலம் வந்தார். நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களுடன் புகழ் பெற்றார். அவர்தான் பானுமதி
திருமணம்[தொகு]

1943 ஆம் வருடம் கிருஷ்ண பிரேமா படப்பிடிப்புக்காக சென்னை வந்தவர் ,அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். 
ஆனால் இவர்களின் காதலை பானுமதியின் பெற்றோர் எதிர்த்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமைய்யாவின் மனைவி கண்ணாமணி மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்..[1]

திரைப்படத் துறை[தொகு]

திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பானுமதி முடிவெடுத்திருந்த நிலையில், பி.என்.ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார்.
ராமகிருஷ்ணாவும் இதைக் கடைசிப் படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. 











அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் பி. யூ. சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் இணைந்து நடித்தார். 
1947இல் வெளிவந்த ரத்னமாலா பானுமதியும் அவர் கணவரும் இணைந்து தயாரித்த முதல் படம். 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது.[1] 1992 ஆம் ஆண்டு வெளிவந்த 'செம்பருத்தி', தமிழில் அவரது கடைசிப் படம்.[1]




நடித்த திரைப்படங்கள்[தொகு]

கள்வனின் காதலி
அறிவாளி
மக்களைப்பெற்ற மகராசி
அன்னை
மணமகன் தேவை
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்





சாரங்கதாரா

நாடோடி மன்னன்
மணமகன் தேவை
கண்ணுக்கு மை எழுது
விருதுகள்[தொகு]
பத்மஸ்ரீ, 1966
பத்ம பூசண், 2003
தன் சினிமா பங்களிப்புக்காக பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.[1




 "நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை' என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் நடிகை பி.பானுமதி. (ராணி என்ற படத்தில் பானுமதி பாடிய நானே ஞானியர் போற்றும் தங்கம் என்ற பாடலை இங்கு நினைத்துப் பார்ப்பது பொருத்தமாக உள்ளது).

  தயாரிப்பு, இயக்கம், இசை, கதை, திரைக்கதை, நடிப்பு, பாடல் பாடுவது, ஸ்டுடியோ நிர்வாகம், எழுத்தாளர் என்று பல்துறை வித்தகியாக விளங்கினார் பி.பானுமதி.


  ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகேயுள்ள தெட்டாவரம் என்ற கிராமத்தில் 07.09.1924 இல் பிறந்தார் பானுமதி. ஜமீன்தாரின் மகனும் ரெவின்யூ இன்ஸ்பெக்டருமான பொம்மராஜு வெங்கட சுப்பையா என்பவர் பானுமதியின் தந்தை. பானுமதியுடன் ஒரு சகோதரியும் இரு சகோதரர்களும் பிறந்தனர்.

  கிருஷ்ண பிரேமா என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அப்படத்தின் உதவி இயக்குநர் எஸ்.ராமகிருஷ்ணா என்பவரை 08.08.1943 இல் காதல் மணம் செய்து கொண்டார் பானுமதி.
 பரணி நட்சத்திரத்தில் பிறந்த இவர்களின் மகனுக்கு பரணி என்ற பெயரைச் சூட்டினார்கள். பரணி அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிந்தார்.

  பானுமதியின் கண்டிப்பு மிக்க குணம் அவரின் பலமாகவும் இருந்தது, பலவீனமாகவும் இருந்தது. கணவர் வரும் பொழுது எழுந்து நின்று மரியாதை தரும் குணம் கொண்டவராக, கணவருக்கு மிகவும் மரியாதை கொடுப்பவராக இருந்தார் பானுமதி. திங்கள்கிழமை தோறும் மெüனவிரதம் இருக்கும் பழக்கமுடையவர் இவர். வீட்டில் பசுமாடுகளை வளர்த்து, அவைகளுக்குப் பெண் தெய்வங்களின் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார்.

  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என் ஐந்து மொழிகளையறிந்தவர் இவர். சிறந்த சிறுகதை எழுத்தாளரான இவர், தெலுங்கு சஞ்சிகைகளில் அத்தைகாரு கதலு என்ற பெயரில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். 
இவரின் தெலுங்குச் சிறுகதைகள் சில ஆனந்த விகடனில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பிரசுரமாகின.

  எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பதவி வகித்தார் பானுமதி. பானுமதி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 1969 இல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. 1983 இல் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. 1986 இல் மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் பானுமதியைப் பற்றி ஒரு படம் திரைக்கு வந்தது.

  01.11.1952 இல், பானுமதியும் அவர் கணவரும், சென்னை வடபழனி ஆற்காடு சாலையில், தங்கள் மகனின் பெயரில், பரணி ஸ்டுடியோவை உருவாக்கினார்கள். இந்த ஸ்டுடியோவில் ஒரு தியேட்டரும் இருந்தது. படத்தயாரிப்பாளரும் கவிஞர் கண்ணதாசனின் அண்ணனுமாகிய ஏ.எல்.சீனிவாசன் குறிப்பிட்ட காலத்திற்கு இந்த ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுத்து நடத்தினார். 
பானுமதி தன் கணவருடன் சேர்ந்து தயாரித்த படங்கள் பரணி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டன. இந்த ஸ்டுடியோ இப்பொழுது மருத்துவமனையாக மாற்றப்பட்டு, டாக்டர் பரணி நிர்வாகத்தில் உள்ளது.

  இவர் தமிழ் சினிமாவின் இரண்டாவது பெண் இயக்குநராக விளங்கினார்.

  அரங்கேற்றம் படத்தில் பிரமிளா நடித்த பாத்திரத்தையும் நடிப்பையும் பானுமதி பாராட்டியுள்ளார்.


  பானுமதி நாயகியாக நடித்த படங்கள் 1.ராஜமுக்தி (1948) 2. ரத்னகுமார் (1949) 3. நல்லதம்பி (1949) 4. அபூர்வ சகோதரர்கள் (1949) 5. தேவமனோகரி (1949) 6. லைலா மஜ்னு (1949) 7. ராணி (1952) 8. காதல் (1952) 9. சண்டிராணி (1953) 10. மலைக் கள்ளன் (1954) 11. கள்வனின் காதலி(1955) 12. விப்ரநாராயணா (1955) 13. தாய்க்குப் பின் தாரம் (1956) 14. அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) 15. மதுரை வீரன் (1956) 16. தெனாலிராமன் (1956) 17. சதாரம் (1956) 8. ரங்கோன் ராதா (1956) 19. ரம்பையின் காதல் (1956) 20. அம்பிகாபதி (1957) 21. மக்களைப் பெற்ற மகராசி (1957) 22. மணமகன் தேவை (1957) 23. ராணி லலிதாங்கி (1957) 24. நாடோடி மன்னன் (1958) 25. சாரங்கதாரா (1958) 26. மணிமேகலை (1959) 27. ராஜா தேசிங்கு (1960) 28. கானல் நீர் (1961) 29. அன்னை (1962) 30. காஞ்சித் தலைவன் (1963) 31. கலையரசி (1963) 32. அறிவாளி (1963)


  பானுமதி துணை வேடங்களில் நடித்த படங்கள் 1. சரசா பி.ஏ. (1965) 2. பட்டத்து ராணி (1967) 3. பூவும் பொட்டும் (1968) 4. கட்டிலா தொட்டிலா (1973) 5. பத்துமாத பந்தம் (1974) 6. சுவாதி நட்சத்திரம் (1974) 7. தாய் பிறந்தாள் (1974) 8. இப்படியும் ஒரு பெண் (1975) 9. எடுப்பார் கை பிள்ளை (1975) 10. மனமார வாழ்த்துங்கள் (1976) 11. வாங்க சம்மந்தி வாங்க (1976) 12. கண்ணுக்கு மை எழுது (1986) 13. செம்பருத்தி (1992)

  இவர் நடித்த முதல் தமிழ்ப் படம் ராஜமுக்தி (1948) என்ற படம். கடைசியாக நடித்த படம் செம்பருத்தி (1992) . 1948 முதல் 1992 வரையிலான 45 ஆண்டுகளில் 45 படங்களில் நடித்துள்ளார் பானுமதி. இவர் நாயகியாக நடித்த 32 படங்களில் லைலா மஜ்னு, காதல், விப்ரநாராயணா ஆகிய 3 படங்கள் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்களாகும்
.

  பானுமதி நடித்த மொத்த 45 படங்களில் அலிபாபாவும் 40 திருடர்களும், எடுப்பார் கை பிள்ளை, பத்துமாத பந்தம், கண்ணுக்கு மை எழுது, செம்பருத்தி ஆகிய 5 படங்கள் வண்ணப் படங்களாகும். ஆன் (1952) என்ற மொழி மாற்று படத்தை நீக்கி விட்டு பார்த்தால், அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) படத்தில் நடித்த வகையில், தமிழின் முதல் வண்ணப்பட நாயகி என்ற பெருமை பானுமதிக்கே உரித்தாகிறது.


  பானுமதி நடித்த மலைக் கள்ளன் (1954), அலிபாபாவும் 40 திருடர்களும் (1956), மதுரை வீரன் (1956), ரம்பையின் காதல் (1956), அம்பிகாபதி (1957), சாரங்கதாரா (1958), மணிமேகலை (1959), ராஜா தேசிங்கு (1960) ஆகிய 8 படங்கள், இதற்கு முந்தைய ஆண்டுகளில் முறையே மலைக் கள்வன் (1951), அலிபாபாவும் 40 திருடர்களும் (1941), மதுரை வீரன் (1939), ரம்பையின் காதல் (1939), அம்பிகாபதி (1937), சாரங்கதாரா (1935), மணிமேகலை (அல்லது) பால சந்நியாசினி (1940), ராஜா தேசிங்கு (1936) என்ற பெயர்களில் திரைக்கு வந்துள்ளன என்பதை நினைவு கொள்வோம்.

  தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் நடித்த இவர், பூலோகம், எமலோகம், தேவலோகம் என்று மூவுலகிலும் நடைபெறும் படியாக உள்ள கதையமைப்பு கொண்ட ரம்பையின் காதல் படத்தில் நடித்துள்ளார். 
மேலும் வேற்றுக் கிரகத்திலும் நடைபெறும் படியாக உள்ள கதையமைப்பு கொண்ட கலை அரசி படத்திலும் நடித்துள்ளார்.

  பி.கண்ணம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம் தயாரித்த சுமதி என்ற தெலுங்கு படத்தில் பானுமதி நடித்தார். படத்தில் தொடர்ந்து பானுமதி நடிக்க விரும்பவில்லை. அப்பொழுது பானுமதி மேஜர் என்று கே.பி.நாகபூஷணமும், பானுமதி மைனர்தான் என்று பானுமதியின் தந்தையும் கோர்ட்டில் வழக்கு தொடுக்கவேண்டிய ஒரு சூழ்நிலை உருவாயிற்று.

  லவ்ஸ் ஆஃப் கார்மன் என்ற ஆங்கிலப் படத்தையும், ஜாது என்ற இந்திப் படத்தையும் நினைவூட்டும் படியான கதையைக் கொண்ட ராணி என்ற படத்தில் நடித்துள்ளார் பானுமதி.


  பானுமதி 1938 இல் வரவிக்ரயம் என்ற தெலுங்கு படத்தில் முதன் முதலில் நடித்தார். இப்படத்தில் நடிகை புஷ்பவல்லியின் தங்கையாக, காளிந்தி என்ற வேடத்தில் நடித்திருந்தார்.

  பானுமதி நடித்த ரத்னகுமார், நல்லதம்பி, அபூர்வ சகோதரர்கள், மலைக் கள்ளன், தாய்க்குப் பின் தாரம், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், மக்களைப் பெற்ற மகராசி, நாடோடி மன்னன் ஆகிய படங்கள் 100 நாட்களுக்கு திரையிடப்பட்டு வெற்றி பெற்றன. மத்திய அரசு வழங்கிய சிறந்த மாநில மொழிப் படம் என்ற தகுதியில் மலைக் கள்ளன் படம் வெள்ளிப் பதக்கம் பரிசு பெற்றது. அன்னை படம் மாநிலத்தின் சிறந்த இரண்டாவது படத்திற்கான பரிசு பெற்றது.


  பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா தயாரித்து இயக்கிய லைலா மஜ்னு (1949) என்ற மொழி மாற்று படத்தில் லைலாவாக நடித்துள்ளார் பானுமதி. 1948 இல் ஜெமினியின் ஞானசெüந்தரி படத்தை வெற்றி கொண்டது சிட்டாடலின் ஞானசெüந்தரி படம். ஆனால் 1950 களில் வந்த பரணியின் லைலா மஜ்னு படத்தை, சிட்டாடலின் லைலா மஜ்னு படத்தால் வெற்றியில் முந்த முடியவில்லை.

  காதல் (1952) என்ற படத்திற்கு, கதை எழுதி மலை ஜாதிப் பெண்ணாக நடித்துள்ளார் பானுமதி. பிரேமா என்ற தெலுங்குப் படம்தான் காதல் என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.


  சண்டிராணி (1953) படத்தில், கதை, திரைக்கதை எழுதி நடித்துள்ளார் பானுமதி. தமிழ் தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் தயாரான இப்படத்தில் பானுமதியும் என்.டி.ராமாராவும் நடித்தனர். சண்டிராணி வெற்றிப் படமாக அமைந்தது.

  மணமகன் தேவை (1957) என்ற படத்தில், பானுமதி என்ற பெயரிலேயே பானுமதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவலான இந்த நகைச்சுவைப் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.


  கானல் நீர் (1961) படத்தில், இளம் விதவை மாதவியாக நடித்தார் பானுமதி. ஒரு இளம் விதவையின் காதல் ஏக்கத்தைச் சொன்னது இப்படம்.











  கணவர் ராமகிருஷ்ணா தயாரித்து எடிட்டிங் செய்து இயக்கிய விப்ரநாராயணா (1955) படத்தில், சங்கீத மேற்பார்வை செய்து நடித்துள்ளார் பானுமதி.
 இப்படத்தில் விஷ்ணு பக்தர் விப்ரநாராயணரை மயக்கும் தாஸி தேவதேவியாக நடித்துள்ளார் பானுமதி.

  தயாரிப்பு, இயக்கம், இசை, கதை, திரைக்கதை, நடிப்பு என்று தனது பல்துறை வித்தகங்களினால் பானுமதி உருவாக்கிய படம் இப்படியும் ஒரு பெண் (1975) என்ற படம். ரம்பையின் காதல் படத்தில் நாயகனும் நாயகியுமாக நடித்த கே.ஏ.தங்கவேலுவும் பானுமதியும் இப்படத்திலும் நடித்துள்ளது ஒரு சிறப்பம்சம். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதிய கவிஞர் மருதகாசி, 20 ஆண்டுகள் கழித்து இப்படத்தில் பாடல் எழுதியுள்ளது மற்றொரு சிறப்பம்சம்.

  தனது பல்துறை வித்தகங்களினால் பானுமதி உருவாக்கிய மற்றொரு படம் வாங்க சம்மந்தி வாங்க (1976) என்ற படம். 
இப்படத்தில், கே.ஏ.தங்கவேலு, முக்கமாலா, தேவிகா, டிபி.முத்துலட்சுமி, கே.எஸ்.அங்கமுத்து போன்ற முந்தைய தலைமுறை நடிகர்களுடனும், சந்திரமோகன், சுந்தரராஜன், பிரமிளா, சச்சு போன்ற பிந்தைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார் பானுமதி.

  பானுமதி நடித்த 45 படங்களில் பூவும் பொட்டும், கண்ணுக்கு மை எழுது, செம்பருத்தி ஆகிய 3 படங்களில் இவர் பாடல்கள் பாடவில்லை. இவர் மீதி 42 படங்களில் மொத்தம் 140 பாடல்கள் பாடியுள்ளார். இந்த 42 படங்களில் இவர் தனித்து 100 பாடல்களும், மற்ற பாடகர் பாடகியருடன் சேர்ந்து 40 பாடல்களும் பாடியுள்ளார். எம்.கே. தியாகராஜ பாகவதருடன் 1 பாடலும், பி.யூ.சின்னப்பாவுடன் 3 பாடல்களும், காளி என்.ரத்தினத்துடன் 1 பாடலும், கலைவாணருடன் 1 பாடலும், கண்டசாலாவுடன் 5 பாடல்களும், எஸ்.பாலசந்தருடன் 5 பாடல்களும், டி.எம்.எஸ்ஸýடன் 9 பாடல்களும், சீர்காழி கோவிந்தராஜனுடன் 2 பாடல்களும், ஏ.எம். ராஜாவுடன் 4 பாடல்களும், டி.ஆர்.மகாலிங்கத்துடன் 1 பாடலும், சி.எஸ்.ஜெயராமனுடன் 2 பாடல்களும், ஜிக்கியுடன் 3 பாடல்களும், லீலாவுடன் 1 பாடலும், ஏ.பி.கோமளாவுடன் 1 பாடலும், உஷா உதூப்புடன் 1 பாடலும் ஆக மற்றவர்களுடன் சேர்ந்து 40 பாடல்களை பானுமதி பாடியுள்ளார்.

  அம்பிகாபதி படத்தில் பானுமதி பாடும் "கண்ணிலே இருப்பதென்ன கன்னியிள மானே' என்ற பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். பானுமதியின் பெயரை இப்பாடலில் இடம்பெறச் செய்துள்ளார் கண்ணதாசன். பானுமதி மாறிவரும் வானகத்து மீனே என்ற வரியில் பானுமதியின் பெயர் வரும். அதாவது பானுவும் (சூரியனும்) மதியும் (சந்திரனும்) மாறிவரும் வானத்து மீனே என்று பொருள்படும்படி இவ்வரியை கவிஞர் எழுதியுள்ளார். பானுவைப்போல கனலையும் மதியைப்போல குளிர்ச்சியையும் நடிப்பில் நிலைநாட்டியவர் பானுமதி.

  தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்களை பாடிய பானுமதி, மணமகன் தேவை படத்தில் ஒரு சிங்களப் பாடலையும், பத்து மாத பந்தம், சுவாதி நட்சத்திரம், வாங்க சம்மந்தி வாங்க ஆகிய படங்களில் ஆங்கிலப் பாடல்களையும் பாடியுள்ளார்.

  இவர் இரு வேடங்களில் நடித்த ஒரே படம் சண்டிராணி. உலகப் புகழ் காதல் காவிய நாயகிகளான லைலா, அமராவதி போன்ற வேடங்களிலும், ஐம்பெருங்காப்பியங்களிலொன்றான மணிமேகலை காப்பிய நாயகி மணிமேகலையாகவும் நடித்துள்ளார் பானுமதி. மற்றும் சமண (மணிமேகலை), இஸ்லாம் (லைலா மஜ்னு, அலிபாபாவும் 40 திருடர்களும்), வைணவ (விப்ரநாராயணா) சமய கதைகளைக் கொண்ட படங்களில் நடித்து தனது சமய சார்பின்மையை நிலை நாட்டியுள்ளார்.

  அண்ணன் தம்பிகளான எம்.ஜி.சக்கரபாணியையும் எம்.ஜி.ஆரையும் ஒரு படத்தில் மைத்துனர்களாக்கிவிட்டார் பானுமதி. ராஜமுக்தி படத்தில் பானுமதியின் அண்ணனாக எம்.ஜி.சக்கரபாணியும், பானுமதியின் கணவனாக எம்.ஜி.ஆரும் நடித்த வகையில், அண்ணனும் தம்பியும் இப்படத்தில் மைத்துனர்களாக நடித்துள்ளார்கள்.

  பெற்றால்தான் பிள்ளையா என்ற எண்ண ஓட்டத்தில், தான் பெறாத பிள்ளைக்கு அன்னையாகி, அந்த அன்னையின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் சிறந்த அன்னை பாத்திரத்தில் அருமையாக பானுமதி நடித்த படம் அன்னை. இப்படத்தில் பானுமதியின் நடிப்பை பார்த்த இந்தி நடிகர் பால்ராஜ் சஹானி பானுமதியை மிகவும் பாராட்டியுள்ளார். இப்படத்தில் பானுமதி நடித்த பாத்திரத்தின் பெயர் சாவித்திரி.

  பிரபலமான பல நடிகர்களுடனும் சேர்ந்து நாயகியாக நடித்துள்ளார் பானுமதி. பானுமதியுடன் நாயகர்களாக நடித்த நடிகர்களும் படங்களும் 1. எம்.கே.தியாகராஜ பாகவதர் ராஜமுக்தி, 2. பி.யூ.சின்னப்பா ரத்னகுமார், 3. ஹொன்னப்ப பாகவதர் தேவமனோகரி, 4. எம்.கே.ராதா அபூர்வ சகோதரர்கள், 5. என்.டி.ராமாராவ் சண்டிராணி, தெனாலிராமன், 6. ஏ.நாகேஸ்வரராவ் லைலா மஜ்னு, காதல், கானல் நீர், விப்ரநாராயணா, 7. எஸ்.பாலசந்தர் ராணி, 8. எம்.ஜி.ஆர். ராஜமுக்தி, மலைக் கள்ளன், தாய்க்குப் பின் தாரம், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு, காஞ்சித் தலைவன், கலை அரசி, 9. சிவாஜி கணேசன் கள்வனின் காதலி, ரங்கோன் ராதா, அம்பிகாபதி, மக்களைப் பெற்ற மகராசி, மணமகன் தேவை, ராணி லலிதாங்கி, சரங்கதாரா, அறிவாளி, 10. கே.ஆர்.ராமசாமி சதாரம் 11. டி.ஆர்.மகாலிங்கம் மணிமேகலை, 12. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நல்லதம்பி, 13. கே.ஏ.தங்கவேலு ரம்பையின் காதல்


  அபூர்வ சகோதரர்கள் படத்தில் பானுமதியுடன் இணையாக நடித்த எம்.கே.ராதா, அம்பிகாபதி படத்தில் பானுமதியின் மாமனாராக நடித்திருப்பார். 9 படங்களில் பானுமதியுடன் இணையாக நடித்த எம்.ஜி.ஆர்., பானுமதி நாயகியாக நடித்த ரத்னகுமார் படத்தில் ஒரு துணை வேடத்தில் நடித்துள்ளார். 8 படங்களில் பானுமதியுடன் இணையாக நடித்த சிவாஜி கணேசன், தெனாலிராமன் படத்தில் நாயகனாக நடித்திருந்தாலும் பானுமதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை. எஸ்.எஸ்.ஆர். உடன் பானுமதி 3 படங்களில் நடித்திருந்தாலும், இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  ஜெய்சங்கர், ஏவி.எம்.ராஜன், முத்துராமன், சிவகுமார், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ், சரத்பாபு, பிரசாந்த் போன்ற இளைய தலைமுறை நடிகர்களுடனும் சேர்ந்து பானுமதி நடித்துள்ளார்.

  5 மொழிகளை அறிந்த பானுமதி 5 முதலமைச்சர்களுடன் சேர்ந்து கலைப்பணியாற்றியுள்ளார். அண்ணா கதை வசனம் எழுதிய நல்லதம்பி படத்திலும், கதை எழுதிய ரங்கோன் ராதா படத்திலும், மு.கருணாநிதி வசனம் எழுதிய மலைக் கள்ளன் படத்திலும், தயாரித்து, கதை வசனம் எழுதிய காஞ்சித் தலைவன் படத்திலும் நடித்துள்ளார் பானுமதி. எம்.ஜி.ஆருடன் 10 படங்களில் நடித்துள்ளார். 
வி.என்.ஜானகியுடன் ராஜமுக்தி படத்தில் நடித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமாராவுடன் சண்டிராணி, தெனாலிராமன் ஆகிய படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் பானுமதி.

  எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பானுமதியை "அம்மா' என்றுதான் மரியாதையாக அழைப்பார்கள். நாகேஸ்வரராவ் "மேடம்' என்று அழைப்பார்.

  கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ரத்னகுமார் (1948) படத்தில் நடித்த பானுமதி, 25 ஆண்டுகள் கழித்து அதே இயக்குநர்களின் இயக்கத்தில் பத்து மாத பந்தம் (1974) படத்தில் நடித்தார்.


  ரத்னகுமார் படத்தில் பானுமதியும் பி.யூ.சின்னப்பாவும் சேர்ந்து நடிக்கும்போது, சின்னப்பாவிடமிருந்து வந்த மது வாடையை சகிக்கமுடியாத பானுமதி, தலைவலி என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்பு படப்பிடிப்பு குழுவினர் பானுமதியின் கணவரிடம் இதுமாதிரி நடக்காது என்று உறுதியளித்து பானுமதியை அழைத்து வந்து படப்பிடிப்பை தொடர்ந்தார்கள். சின்னப்பாவும் உறுதியாக இப்படம் முடியும்வரை மது அருந்தவில்லை. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இப்படத்தின் உதவி இயக்குநர், ஏ.பீம்சிங் என்பது ஒரு கூடுதல் தகவல்.


  பானுமதி நடித்த படத்தில் வரும் ஒரு பாடலை இரு கவிஞர்கள் எழுதியது, பானுமதி நடித்த ஒரு படத்தை இரு இயக்குநர்கள் இயக்கியது, பானுமதி நடித்த ஒரு படம் நிறுத்தப்பட்டு மீண்டும் மறுமுறை தயாரானது என்று, பாடல், இயக்கம், படத்தயாரிப்பு ஆகியவற்றில் இரட்டை நிகழ்வுகள் நடந்துள்ளன. மலைக் கள்ளன் படத்தில் இடம்பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடலை தஞ்சை ராமையாதாஸýம் கோவை அய்யாமுத்துப் புலவரும் சேர்ந்து எழுதினார்கள். ராணி படத்தை இயக்கிய ஏ.எஸ்.ஏ.சாமிக்கும் தயாரிப்பாளர் சோமுவுக்கும் ஏற்பட்ட மனவருத்தத்தினால், இப்படத்திலிருந்து சாமி விலக, மீதிப் படத்தை எல்.வி.பிரசாத் இயக்கினார். தஞ்சை ராமையாதாஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆரும் பானுமதியும் நடித்த லலிதாங்கி என்ற படம் சில காரணங்களினால் நிறுத்தப்பட்டு, மீண்டும் சிவாஜி பானுமதி நடிப்பில் ராணி லலிதாங்கி என்ற பெயரில் திரையிடப்பட்டது.

பானுமதி பாடிய பாடல்கள் சில
 நிலா நிலா ஓடிவா
 - சண்டிராணி
 ஆகா நம் ஆசை நிறைவேறுமா
 - தாய்க்குப் பின் தாரம்
 மாசில்லா உண்மைக் காதலே
 -அலிபாபாவும் 40 திருடர்களும்
 கண்ணிலே இருப்பதென்ன கன்னியிள மானே
 - அம்பிகாபதி
 போறவளே போறவளே பொன்னுரங்கம்
 -மக்களைப் பெற்ற மகராசி
 சும்மா கெடந்த நெலத்தெ கொத்தி
 - நாடோடி மன்னன்
 பூவாகி காயாகி கனிந்தமரம் ஒன்று
 - அன்னை

No comments:

Post a Comment