Tuesday 7 November 2017

KALLAR DYNASTY - CHOLAS




KALLAR DYNASTY - CHOLAS





பண்டைய கள்ளர் குல நாகரிகம்.
மிகப்பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் நம் இன கள்ளர் குடி மக்களே! 

கள்ளர் குல நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதைச் சரித்திரம் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் தற்கால கள்ளர் சமூகம் தனது பழைய பெருமைகளை மறந்து தன் பெருமை அறியா சமூகமாக மாறி வருகிறது.

பண்டைய காலத்தைப் போல மனித வாழ்க்கை அமைதியாக, நிதானமாக இக்காலத்தில் செல்லவில்லை. நாம் நமது சமூக வளர்ச்சியை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாவிட்டாலும் அவற்றைப் பற்றி மேல் வாரியான பொதுச் செய்திகளையாவது அறிந்திருக்க வேண்டுவது நாகரிகம் படைத்த நம் மக்களின் கடமையாகும். 

நமது மூதாதையர் வளர்த்துப் போற்றிய நம்குல பெருமைகளை சிறிதளவாவது அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டுவது அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும். 

நாம் முன்னேற குலம் கூடி பங்காளிச் சண்டைகளை மறந்து சமுதாய முன்னோடிகளாக நாம் மாற வேண்டும். நம் குல கூட்டமைப்புகளில் விட்டுக்கொடுக்கும் மணப்பான்மை,  சபலங்களுக்கு அடிபனியாமை,லட்சியத்தில் உறுதிப்பாடு,  உணர்சிவசப்படாமை  மற்றும் விவேகத்தோடு செயலாற்றும் திறமை போன்ற பண்புகளை நமது இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டும். 

இளைஞர்களின் முன்னேற்றம் தான் நம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமாக வருங்காலத்தில் அமையும். நாம் முன்னேற ஒவ்வொரு இளைஞனும் இடர்பாடுகளை நீக்கி கல்வியிலும், தொழில் தகுதியிலும் முன்னேற வேண்டும்.

இளைய கள்ளர் குல சந்ததியினர் முன்னேற பாடுபடுவோம். வளர்வோம். 
என்றும் பாசமுடன்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன். 
சர்வதேச கள்ளர் பேரவை. 
லண்டன். 
இங்கிலாந்து 



சோழர் குலம்.
Picture

சோழவேந்தரின் குடிப்பூ ஆத்தி
சோழர் குலம்.
மொழிக்கு முதல் இலக்கணத்தை வகுத்தவன் கள்ளர்
மனுநீதியை காத்த மானுடன் கள்ளர்
அகிலத்தின் முதல் அணையைக் கட்டியவன் கள்ளர்
கடல் கடந்து கடாரம் சென்று ஆட்சி செய்தவன் கள்ளர்
கற்களை கலை வண்ணமாக்க கலைக்கு சங்கம் வைத்தவன் கள்ளர்
கையிலே வாளேந்தி, நெஞ்சிலே பயமிழந்து  சுற்றி வந்த பகைவர் கூட்டத்தை வியக்கச் செய்தவன் கள்ளர்
முல்லைக்கும் தேர்தந்த இனமவன் கள்ளர்
மார்பிலே புண்ணேந்தி   தன்மானமே பெரிதென மரணத்தை மிரட்டியவன் கள்ளர்
காலத்து முன் தோன்றி உலகுக்கு நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவன் கள்ளர்
கள்ளராய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்.

கள்ளர் குல மக்களது வரலாறு தமிழ் நாட்டின் தொன்மைகாலம் முதல் அண்மைகாலம் வரை தொடர்புடையதாக இருக்கிறது. இவர்களுடைய வரலாற்றை  உள்ள படி எழுதினால் அது தமிழ் நாடின் வரலாறாக இருக்கும் என்பதில் ஜயம் இல்லை.

கள்ளர் இனம் என்பது தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, போன்ற மாவட்டங்கலளில் அதிகமாகவும், பிற மாவட்டங்களில் சற்று குறைவாகவும் இருக்கும் ஒரு பெருங்குடி சமுதாயமாகும். இவர்கள் இந்தியாவை ஆண்ட சோழர்களுடன் உறவு கொண்டிருந்தனர் எனபதற்கு நிறைய சாண்றுகள்  உள்ளன. தமிழ் நாட்டில் சுமார் ஒண்றரைகோடி மக்கள் தொகையை இச் சமுதாயம் கொண்டுள்ளது. உலகில் எந்த ஒரு சமுதாயமும் கொண்டிறாத சுமார் 2225 பட்டப் பெயர்களை இந்த மக்கள் கொண்டுள்ளனர். இவர்களை பொதுவாக தஞ்சை கள்ளர் என்று அழைப்பார்கள். 

ஆங்கில ஆட்சி இந்தியாவிற்குள் வந்தவுடன் இவர்களின் செல்வாக்கு படிப்படியாக குறைய துவங்கி தற்பொது மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளனர். ஆண்ட பரம்பரை இன்று நிலை குலைந்து உள்ளது.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தொனெசியா, பர்மா, ஆகிய நாடுகளிளும் இவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்ள இவர்கள் பயன் படுத்தும் பட்டப் பெயர்கள் பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக ஒரு சில பட்டப் பெயர்கள் வருமாறு. 
அரசாண்டார், ஆளியார், ஆலங்கொண்டார், இராங்கியர், இராசாப்பிரியர், கண்டியர், காலிங்கராயர், தொண்டைமான், வாண்டையார், கங்கைநாட்டார், மழவராயர், கருப்பூண்டார்,விசயதேவர், கொன்னமுண்டார், வல்லுண்டார். 
(திரட்டப்பட்ட 2225 பட்டப் பெயர்களும் இணையத்தளத்தில் உள்ளது)

மேல் குறிப்பிட்ட பட்ட பெயர்கள் யாவும் ஒரு காரணத்திற்காக சோழ மன்னர்களால் வழங்கப்படவை என்பதற்கு நிறைய சரித்திர ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக சோழ மன்னன் கலிங்கத்தை வென்ற தளபதிக்கு சூட்டிய பட்டமே காலிங்கராயர். இராசராசசோழன் தெலுங்க வெற்றியை தந்த தளபதிக்குஅளித்த பெயர் தெலிங்கராயர், இராஜெந்திர சோழன் இலங்கையை வென்று முடியை கைபற்றியதால் முடிகொண்டார் என்ற நாமத்தை பெற்றான். 

சோழர்கள் உலக வரலாற்றில் 433 ஆண்டுகள் ( கி. பி. 846 - கி.பி. 1279 வரை ) அரசாண்டவர்கள். இவர்களின் பெரும் வெற்றிக்கு கள்ளரின் பங்கு ஈடு இனை அற்றது. வையகம் ஆண்ட கள்ளர் மரபினர் செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியது வரலாறு. 

 சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. 

சோழர்களின் கொடி புலிக்கொடி. 

சோழவேந்தரின் குடிப்பூ ஆத்தி என்பர். அவர்கள் சூடும் மலர் ஆத்தி. 
ஆத்தி மலர் 
ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை 
ஆத்தி ஒரு சிறிய மரம். சற்று குணக்கும் கோணலுமாக வளரும். இலைகள் இரண்டு சிற்றீலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1 - 2 அங்குல நீளமிருக்கும்.இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும். பூ சற்று ஒரு தளச்சமமானது. புறவிதழ்கள் 5 ஒன்றாகக்கூடி மடல் போல இருக்கும். நுனியில் 5 பற்கள் இருக்கும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும். வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை, தழுவு அடுக்குள்ளவை. விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேற்பக்கத்து இதழ் எல்லவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும்
கேசரங்கள் 10. சூலகத்திற்குச் சிறுகாம்பு உண்டு, பல சூல்கள் இருக்கும். கனி ஒரு சிம்பு.  
6 - 12 அங்குல நீளமும் 3/4 - 1 அங்குல அகலமும் இருக்கும். மரம், பட்டை, வேர், இலை, பூ, கனி முதலியன மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை. பட்டை சொரசொரப்பாகவும் கருமை நிறமுடையதாகவும் நார் எடுத்து முரடாண பலம் வய்ந்த க்யிறு திரிப்பதற்கும் உதவும், மரம் பழுப்பு நிறமுடய கடினமான விறகாகும். ஆத்திக்கு ஆர் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வித மந்தாரையாகும். ஆங்கிலத்தில் பௌஹினியா ராசிமோசா என்ற பெயர் உண்டு.

ராஜ ராஜ சோழன் பிறந்தவுடன் பெற்றோர்கள் அவனுக்குச் சூட்டிய பெயர் அருண்மொழி வர்மன் என்பதாகும்.

தேவர் குடும்பத்தில் பிறந்ததால் 'அருண்மொழித் தேவன் என்றே அனைவரும்  அழைத்தனர்.

முடி சூட்டிக்கொண்ட பின்பு ராஜராஜ தேவர் என்றே தன்னை தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ ராஜ தேவர் என்ற பெயரிட்ட வெள்ளிக்காசையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ராஜ ராஜ சோழன் இறந்த பிறகு பழையாறை உடையாளூரில் எழுப்பப்பட்ட அவருடைய மாளிகைக்கு 'தேவர் திருமாளிகை'என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ராஜ ராஜ சோழன் தந்தை சோழங்க தேவர்.
தாய் சேதுராயர் மகள்.
பாட்டி செம்பியன் மாதேவி.இவர் மழவராயர் மகள்.
பட்டத்தாரசி வானாதிராயர் மகள்.
மற்றொரு ராணி மழவராயர்-பழுவேட்டரையர் மகள்.
மற்றொரு ராணி-கொடும்பூரார் மகள்.
மைத்துனர்-வல்லவராயர்.
இப் பட்டங்கள் அனைத்தும் கள்ளர்களுக்கே உரியது.
Picture
Picture
பழுவேட்டரையர்
Picture

பழுவேட்டரையர்
பழுவேட்டரைகளின் தலைநகர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்துப் பழுவூராகும். முற்காலத்தில் இது அவனிகந்தர்வபுரம் எனவும், "பகைவிடையீச்சுவரம்" என்றும் அழைக்கப்பட்டது. சோழ மன்னன் பராந்தகன் காலத்தில் வாழ்ந்த கண்டன் அமுதன் என்பவனே பழுவேட்டரையர்களின் முதல்வனாவான். பராந்தகனின் மனைவியரில் ஒருவரான அருமொழிநங்கை கண்டன் அமுதனின் புதல்வியாவாள். சோழ மன்னன் பராந்தகனுக்கும் மூன்றாம் இராசசிம்ம பாண்டியனுக்கும் நடைபெற்ற வெள்ளூர்ப் போரில் சோழர் படைக்கு தலைமை தாங்கிப் போர்புரிந்து பெருவெற்றி கொண்டவன் என்று பராந்தகனின் பன்னிரண்டாவது ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

கண்டன் அமுதனுக்குப் பிறகு சிறபுற்றிருந்த பழுவேட்டரையர் அடிகள் மறவன் கண்டனார் ஆவார். இவர் சுந்தர சோழன், உத்தம சோழன் முதலியோர் காலத்தில் குறுநில மன்னராக விளங்கியவர். சோழர்களின் நகரான நந்திபுரத்தில் நிலவிய வரிவிகிதத்தையே இவர் தன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலும் பின்பற்றினார் என்று ஒரு கல்வெட்டு கூறுகின்றது.உத்தம சோழன் காலத்தில் பழுவேட்டரைய குறுநில மன்னர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவன் கண்டன் மறவன். இவன் சுந்தர சோழன் என்ற பெயரையும் பெற்றிருந்தான் என்று சில கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது.இவனுடைய உடன் பிறந்தோன் கண்டன் சத்ருபயங்கரனார் என்பான் ஆவான். இவன் பழுவேட்டரையர் விக்கிரமாதித்தர் என்று அழைக்கப்பட்டான்.முதலாம் இராசராச சோழனின் பட்டத்தரசியான பஞ்சவன் மாதேவி கண்டன் மறவனின் புதல்வியாவார்.

முதலாம் இராசராச சோழனின் ஆட்சியின் பிற்பகுதியுலும் அவனுடைய மகன் காலத்திலும் குறுநில மன்னனாக வாழ்ந்த பழுவேட்டரையர் குமரன் மறவன். இவன் கண்டன் மறவனின் புதல்வனாவான். பழுவேட்டரையர் தங்களை தேவர் என்று கல்வெட்டுகளில் குறித்துள்ளனர். இவர்களின் ஆட்சி முறை சோழர்களின் ஆட்சிமுறையை பின்பற்றியே அமைந்துள்ளது. சைவசமயத்தில் அவர்களுக்கிருந்த ஈடுபாட்டினை பழுவேட்டரையர்கள் கட்டிய கோயில்களிலிருந்து அறியமுடிகிறது. 

கீழப்பழுவூரிலுள்ள பசுபதிச்சுவரம் கோயிலை அடிகள் மறவன் கண்டனாரும் மேலப்பழுவூரிலுள்ள சுந்தரேசுவரர் கோயிலைக் கண்டன் மறவனும் கட்டியுள்ளார்கள்.

பழுவூரை ஆண்ட மன்னர்கள்
1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன் 
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன் 
6. கண்டன் சுந்தரசோழன் 
7. கண்டன் மறவன்

கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

குமரன் பழுவேட்டரையருக்கு இரு மகன்கள் குமரன் கண்டன் எனவும் குமரன் மறவன் என்றும் அறியப்பட்டனர்.
குமரன் கண்டனின் மகன் கண்டன் அமுதன் எனவும் 
குமரன் மறவனின்ன் ம்கன் மறவன் கண்டன் எனவும் அறியப்பட்டனர்.
மறவன் கண்டனின் மகன்கள் கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தர சோழன் மற்றும் கண்டன் மறவன் ஆவார்கள்

பழுவேட்டரையர்களுடன் தொடர்புடைய சோழர் கல்வெட்டுகளின் அட்டவணை 

எண் 1 
கல்வெட்டு இருக்குமிடம் -  திருவையாறு 
கோயில் பெயர் -  பஞ்சநதீசுவரர் கோயில் 
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர் 
ஆட்சியாண்டு - 10 
பழுவேட்டரையர்  - குமரன் கண்டன் 
செய்தி - நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையது 
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 523

எண் 2 
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  முதலாம் ஆதித்தர் 
ஆட்சியாண்டு -  12 
பழுவேட்டரையர் -  குமரன் கண்டன் 
செய்தி -   'குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார் 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 3, No. 235

எண் 3 
கல்வெட்டு இருக்குமிடம் -  திருவையாறு 
கோயில் பெயர் -  பஞ்சநதீசுவரர் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் ஆதித்தர் 
ஆட்சியாண்டு -  19 
பழுவேட்டரையர் -  குமரன் மறவன் 
செய்தி  -  இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம் 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 5, No. 537

எண் 4 
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  முதலாம் ஆதித்தர் 
ஆட்சியாண்டு -  22 
பழுவேட்டரையர் -  குமரன் மறவன் 
செய்தி -  இதிலும் 'குமரன் மறவன் பிரசாதத்தினால்' என்று குறிப்பிடப்படுகிறார் 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 8, No. 298, ARE 355 of 1924

எண் 5 
கல்வெட்டு இருக்குமிடம் - லால்குடி 
கோயில் பெயர் -  சப்தரிஷீசுவரர் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர் 
ஆட்சியாண்டு -  5 
பழுவேட்டரையர் -  குமரன் மறவன் 
செய்தி -  'அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்' என்று பெருமைப்படுத்துகிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 19, No. 146

எண் 6 
கல்வெட்டு இருக்குமிடம் -  திருப்பழனம் 
கோயில் பெயர் -  மகாதேவர் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர் 
ஆட்சியாண்டு -  6 
பழுவேட்டரையர் -  குமரன் மறவன் 
செய்தி -  குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 19, No. 172

எண் 7 
கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர் 
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர் 
ஆட்சியாண்டு -  12 
பழுவேட்டரையர் -  கண்டன் அமுதன் 
செய்தி -  வெள்ளூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்தி 
ஆண்டறிக்கை எண் -  ARE 231 of 1ட்926

எண் 8 
கல்வெட்டு இருக்குமிடம் -  திருவையாறு 
கோயில் பெயர் -  பஞ்சநதீசுவரர் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர் 
ஆட்சியாண்டு -  14 
பழுவேட்டரையர் -  கண்டன் அமுதன் 
செய்தி -  இது 'வெள்ளூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்' என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 5, No. 551

எண் 9 
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  சுந்தரசோழர் 
ஆட்சியாண்டு -  5 
பழுவேட்டரையர் --மறவன் கண்டன் 
செய்தி -  இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறது 
ஆண்டறிக்கை எண் -  SII volume 5, No. 679

எண் 10 
கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர் 
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில் 
சோழமன்னர் -  உத்தமச்சோழர் 
ஆட்சியாண்டு -  9 
பழுவேட்டரையர் -  மறவன் கண்டன் 
செய்தி -  இவரது மறைவைத் தெரிவிக்கிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 19, No. 237, 238

எண் 11 
கல்வெட்டு இருக்குமிடம் -  உடையார்குடி 
கோயில் பெயர் -  அனந்தீசுவரர் கோயில் 
சோழமன்னர் -  உத்தமச்சோழர் 
ஆட்சியாண்டு -  12 
பழுவேட்டரையர் -  கண்டன் சத்ருபயங்கரன் 
செய்தி -  இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான் 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 19, No. 305

எண் 12 
கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர் 
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில் 
சோழமன்னர் -  உத்தமச்சோழர் 
ஆட்சியாண்டு -  13 
பழுவேட்டரையர் -  கண்டன் சுந்தரசோழன் 
செய்தி -  இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக    ஒருமண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி 'ஆடல்வல்லான்' என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர் 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 5, No. 681

எண் 13 
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  உத்தமச்சோழர் 
ஆட்சியாண்டு -  15 
பழுவேட்டரையர் -  கண்டன் மறவன் 
செய்தி -  நிவந்தம் அளித்தது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 8, No. 201

எண் 14 
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  முதலாம் இராஜராஜர் 
ஆட்சியாண்டு -  3 
பழுவேட்டரையர் -  கண்டன் மறவன் 
செய்தி -  கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 5, No. 671

எண் 15 
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  முதலாம் இராஜராஜர் 
ஆட்சியாண்டு -  15 
பழுவேட்டரையர் -  கண்டன் மறவன் 
செய்தி -  இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவே 
ஆண்டறிக்கை எண் -  ARE 363 of 1924

எண் 16 
கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர் 
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் இராஜேந்திரர் 
ஆட்சியாண்டு -  8 
பழுவேட்டரையர் -  யாருமில்லை 
செய்தி -  பழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 5, No. 665

பழுவேட்டரையர்களின் ஆட்சி நூற்று முபத்தொன்பது ஆண்டுகள்
தமிழகத்தில் கி.பி. 880இல் நிகழ்ந்த திருபுறம்பியம் போர் சோழப் பேராட்சிக்கு அடிகோலியது. விஜயலாயன், முதலாம் ஆதித்தன், முதலாம் பராந்தகன் போன்ற சோழ வேந்தர்கள் ஆட்சி எல்லைகளை விரிவாக்கும் பணியில் முனைந்து ஈடுபட்ட போது அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து பங்காற்றியவர்களுள் பழுவூர் அரசர்கள் முதன்மை பெற்றவர்கள்.

திருச்சி செயங்கொண்டம் சாலையில் 54 கிலோமீட்டர் தொலைவில் பழுவூர் உள்ளது. கல்வெட்டுகளில் மன்னுபெரும் பழுவூர், அவனிகந்தர்ப்பபுரம், சிறுபழுவூர், என்று கூறப்பட்டுள்ள இவ்வூர் இந்நாளில் மேலப்பழுவூர்,கீழையூர்,கீழப்பழ்வூர் என்று அறியப்படுகின்றன. இப்பழுவூர் மண்டலத்தை ஆண்டவர்களே பழுவேட்டரையர்கள். முதலாம் ஆதித்தன் (கி.பி. 871 - 907) காலத்தில் முதல் முறையாக வரலாற்று பாதையில் பார்வைக்கு வரும் இவர்கள் முதலாம் இராசேந்திரனின் (கி.பி. 1012 - 1044) ஆட்சிக்கால முற்பகுதியில் வரலாற்றுத் தொடரற்று போய் விடுகிறார்கள்.

பழுவேட்டரையர்களின் கால வரலாற்றை அறிய அன்பில் மற்றும் உதயேந்திரம் செப்பேடுகளும் பழுவூர் கல்வெட்டுகளும் உதவுகின்றன. அன்பில் செப்பேடு மூலம் முதலாம் ப்ராந்தக சோழனின் மனைவி சேர அரசரான பழுவேட்டரையரின் மகள் என்றும் இவர்களுக்கு பிறந்தவனே அரிஞ்சய சோழன் என்பதனையும், திருச்சென்னம்பூண்டி திருச்சடைமுடி மகாதேவர் கோயிலில் காணப்படும் முதலாம் ப்ராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டு கல்வெட்டு மூலம் பழுவேட்டரையரின் மகள் பெயர் அருமொழிநங்கை என்றும் அறிய முடிகிறது.

முதலாம் ப்ராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தில் பழுவூர் அரியணையில் இருந்தவர்கள் குமரன் மறவனும், கண்டன் அமுதனுமே ஆவர். இவ்விருவருள் ஒருவரே முதலாம் ப்ராந்தக சோழனின் தேவியான அருமொழிநங்கையின் தந்தையாக இருத்தல் வேண்டும்.

கண்டன் மறவனைப் பற்றிய வரலாற்று தகவல்களை 17 கல்வெட்டுகள் வழி பெறமுடிகிறது. இவற்றுள் நான்கு உத்தம சோழனின் 15ம் மற்றும் 16 ம் ஆட்சியாண்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.12 கல்வெட்டுகள் முதலாம் இராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டிலிருந்து பதினைந்தாம் ஆட்சியாண்டுவரையிலான காலகட்டத்தில் பொறிக்கப்பட்டவையாகும். முதலாம் இராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் இடையில் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கின்றது. இம்மன்னனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டு பழுவேட்டரையர் கண்டன் மறவனின்ன் வீரர் குழாமொன்று இளைய இரண்முகராமன் படை என்ற பெயரில் செயல்பட்டதாக அறியமுடிகிறது.

முதலாம் இராசராசனின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மேலப்பழுவூரில் பழுவேட்டரையர் கண்டன் மறவன் ஒரு கோயில் எடுப்பித்த செய்தியைத் த்ருகிறது.

முதலாம் ஆதித்தர் காலத்தில் தொடங்கிய சோழ சேர தொடர்புகள் தொடர்ந்து வலிமை பெற்று வந்தமை பற்றிய பல் சான்றுகள் கல்வெடுகளில் கிடைக்கின்றன. அரிஞ்சயரின் சேர மனைவியான ஆதித்தன் கோதைப் பிராட்டியும், சுந்தர சோழனின் சேர மனைவியான ப்ராந்தகன் தேவியம்மனும் 
சேர சோழ மணவினைகள் தொடர்ந்து நிகழ்ந்தமைக்கு சான்றுகளாய் அமைகிறார்கள்.

முதலாம் இராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டிலிருந்து இத்தொடர்புகள் சிதிலமடைய தொடங்கின. காந்தளூர்ச் சாலை போரே சேர சோழ நட்புறவை முறித்த முதல் நிலை என்பதனை திருக்கோவலூரிலுள்ள கல்வெட்டும், தஞ்சை இராஜராஜீசுவரத்திலுள்ள முதலாம் இராசராசனின் கல்வெட்டும் உறுதிப்படுத்துகிறது. முதலாம் இராசராசன் கலத்தில் தொடங்கிய இச் சேர சோழ போர்கள் முதலாம் இராசேந்திரனின் காலத்தில் உச்சமடைந்து 

முதலாம் இராசேந்திரனின் ஆறாம் ஏழாம் ஆட்சியாண்டுகளில் சேரரின் முடியையும் செங்கதிர் மாலையையும் கைப்பற்றிக் கொண்டதுடன் சேர சோழ நட்புறவு முழுவதுமாய் அழிந்து பகையாய் வளர்ந்தது. இதுவே பழுவேட்டரையர்களின் ஆட்சி முடிவுற்றமைக்கு முதன்மைக் காரணமாகும். 

நூற்று முபத்தொன்பது ஆண்டுகளாய் தமிழகத்தின் மையப்பகுதியில் சோழர்களின் எழுச்சியோடு இணைந்து வளர்ந்து செழித்து அவர்களோடு மணவினைத் தொடர்பு கொண்டு வாழ்ந்திருந்த பழுவூர் மரபு அரியணை இழந்து ஆட்சியிழந்து போனாலும் அவர்கள் விட்டுச்சென்ற கலைகோயில்கள் காலம் உள்ளளவும் பழுவேட்டரையர்களின் பெருமைகளைப் பறை சாற்றி நிற்கும்

சரித்திரத்தில் பழுவேட்டரையர்கள் 
முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர்.
ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர்.
பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள்.
இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும் போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார்.
அரிஞ்சய சோழருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்
பெரிய பழுவேட்டரையர் (சோழ தனாதிகாரி  சுந்தர சோழர் காலம்)
Picture

பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர். சோழ நாட்டுத் தனாதிகாரியாக சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் இருந்தவர். துறைமுகப்பட்டினங்களில் சுங்கத் திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்.

பழுவூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தவர்களை பழுவேட்டரையர்கள் என்று அழைக்கின்றார்கள். சுந்திர சோழரின் ஆட்சி காலத்தில் பழுவூர்ச் சகோதரர்கள் இருவர் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள்.காலாந்தகக் கண்டர் சின்ன பழுவேட்டரையர் எனவும், கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் எனவும் வழங்கப்படுகிறார்கள்.

பெரிய பழுவேட்டரையர் இருபத்து நான்கு யுத்தகளங்களில் பங்கெடுத்து அறுபத்து நான்கு விழுப்புண்கள்  பெற்ற  வீரராகவும்  விளங்கியவர். சோழப்பேரரசை சுந்திர சோழனுக்குப் பிறகு மதுராந்தகன் ஆள்வதற்காக சம்புவரையர் அரண்மனையில் ரகசிய கூட்டம் நடத்தினார். மதுராந்தகனை நாடெங்கும் நடந்த கூட்டங்களுக்கு ரகசியமாக அழைத்துச் சென்றார். சோழப்பேரரசின் சிற்றரசர்களுடன் நடந்த கூட்டங்களில் மதுராந்த தேவனுக்கு ஆதரவு திரட்டினார்.
சின்னப் பழுவேட்டரையர் (தஞ்சாவூர் கோட்டைக் காவல் தளபதி)
Picture

சின்னப் பழுவேட்டரையர் என அழைக்கப்படும் காலாந்தகக் கண்டர் சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காக்கும் தளபதியாக விளங்கியவர். 

காலாந்தகக் கண்டர் என்பது இவருடைய இயற்பெயராகும். இவருடைய அண்ணனை கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் என்று மக்களால் அழைக்கப் பெருகிறார். காலாந்தகக் கண்டரின் கீழ் தஞ்சை அரண்மனை பொக்கிசமும், தானிய அறையும் இருந்தது. மேலும் பாதாளச் சிறையொன்றினையும் தஞ்சை கோட்டையிருந்து வெளியே செல்லும் பாதாளச் சுரங்கத்தினையும் நிர்வகித்து வந்தார்.

இளம் வீரர்களை கண்டால், அவர்களுக்கு வேண்டிய உதவி செய்து தன்னுடைய படையில் இணைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தஞ்சை அரண்மனையில் சுந்தர சோழர்உடல்நலமின்றி இருக்கும் போது, பலத்த காவல் புரிந்து கோட்டையைப் பாதுகாத்து வந்தார். பெரிய பழுவேட்டரையரைக் கேட்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடாதவர்,

No comments:

Post a Comment