Saturday, 8 October 2016

PATTUKOTTAI KALYANASUNDARAM பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற பாட்டு க்கோட்டை மறைவு அக்டோபர் 8, 1959

PATTUKOTTAI KALYANASUNDARAM 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற 
பாட்டு க்கோட்டை  மறைவு  அக்டோபர் 8, 1959





பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]
பிறப்பு வளர்ப்பு குடும்பம்[மூலத்தைத் தொகு]

தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

எழுத்தாற்றல்[மூலத்தைத் தொகு]

பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர்.
திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

பொதுவுடைமை ஆர்வம்[மூலத்தைத் தொகு]

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.
தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர். இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசிந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார்.[1]

கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்[மூலத்தைத் தொகு]
விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி[மூலத்தைத் தொகு]
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :[மூலத்தைத் தொகு]
கருப்பொருள்:இயற்கை[மூலத்தைத் தொகு]
பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு

1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
2.ஓ மல்லியக்கா ( மக்களைப் பெற்ற மகராசி 1957 )
3.வம்புமொழி ( பாண்டித்தேவன்1959 )
4.வா வா வெண்ணிலவே ( செளபாக்கியவதி 1957 )
5.கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962 )
6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 )
7.சலசல ராகத்திலே -கங்கையக்கா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
8.துணிந்தால் துன்பமில்லை ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
9.காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது )
10.வா வா சூரியனே ( பாண்டித்தேவன் 1959 )
11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
கருப்பொருள்:சிறுவர்[மூலத்தைத் தொகு]
12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
13.அன்புத் திருமணியே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
14.அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959 )
15.செங்கோல் நிலைக்கவே - மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959 )
16.சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958 )
17.அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958)
18.ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958 )
19.இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
20.சின்னப்பயலே...சின்னப்பயலே ( அரசிளங்குமரி 1958)
21.தூங்காதே தம்பி தூங்கதே ( நாடோடி மன்னன் 1958 )
22.திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961 )
23.ஏட்டில் படித்ததோடு இருந்துவிடுதே ( குமாரராஜா 1961 )
24.உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு )
கருப்பொருள்:காதல்,மகிழ்ச்சி,சோகம்[மூலத்தைத் தொகு]
25.பக்கத்திலே இருப்பே ( தேடிவந்த செல்வம் 1958 )
26.வாடாத சோலை ( படித்த பெண் 1956 )
27.புது அழகை -ஆணும் பெண்ணும் ( அவள் யார் 1959 )
28.படிக்க படிக்க நெஞ்சிருக்கும் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
29.காலம் எனுமொரு ஆழக்கடலில் ( அமுதவல்லி 1959 )
30.உள்ளங்கள் ஒன்றாகி ( புனர்ஜென்மம் 1961)
31.இன்று நமதுள்ளமே ( தங்கப்பதுமை 1958 )
32.கழனி எங்கும் கதிராடும் ( திருமணம் 1958 )
33.ஆசை வைக்கிற இடந்தெரியனும் ( கலையரசி 1963 )
34.என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 )
35.அன்புமனம் கனிந்தபினனே ( ஆளுக்கொருவீடு 1960 )
36.நீயாடினால் ஊராடிடும் ( பாண்டித் தேவன் 1959 )
37.வாடிக்கை மறந்ததும் ஏனோ ( கல்யாணபரிசு 1959 )
38.நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு ( இரும்புத்திரை 1960 )
39.வருஷத்திலே ஒருநாளு தீபாவளி ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
40.ஆசையினாலே மனம் ( கல்யாணபரிசு 1959 )
41.துள்ளி துள்ளி அலைகளெல்லாம் ( தலை கொடுத்தான் தம்பி )
42.பெண்ணில்லே நீ ( ஆளுக்கொருவீடு 1960 )
43.ஆண்கள் மனமே அப்படித்தான் ( நான் வளர்த்த தங்கை )
44.மஞ்சப்பூசி பூ முடிச்சு ( செளபாக்கியவதி 1957 )
45.கன்னியூர் சாலையிலே ( பொன் விளையும் பூமி 1959 )
46.போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் -தாலி ( வீரக்கனல் 1960 )
47.அடக்கிடுவேன் ( அவள் யார் 1959 )
48.எழுந்தென்னுடன் வாராய் ( தங்கப்பதுமை 1958 )
49.ஆடைகட்டி வந்த நிலவோ ( அமுதவல்லி 1959 )
50.மானைத் தேடி மச்சான் வர ( நாடோடி மன்னன் 1958 )
கருப்பொருள்:காதல்[மூலத்தைத் தொகு]
51.துள்ளாத மனமும் துள்ளும் ( கல்யாணபரிசு 1959 )
52.அழகு நிலாவின் பவனியிலே ( மஹேஸ்வரி 1955 )
53.உனக்காக எல்லாம் உனக்காக ( புதையல் 1957 )
54.கண்ணுக்கு நேரிலே ( அலாவுதினும் அற்புத விளக்கும் 1957 )
55.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப்பதுமை 1959 )
56.கற்பின் இலக்கணமே ( நான் வளர்த்த தங்கை 1958 )
57.எதுக்கோ இருவிழி ( செளபாக்கியவதி 1957 )
58.உன்னை நினைக்கையிலே ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
59.உன்னைக் கண்டு நானாட ( கல்யாணபரிசு 1959 )
60.ஆசை கொண்ட நெஞ்சிரண்டு ( இரும்புத்திரை 1960 )
61.மொகத்தைப் பார்த்து முறைக்காதிங்க ( விக்கிரமாதித்தன் 1962 )
62.இல்லாத அதிசயமா ( கற்புக்கரசி 1957 )
63.துடிக்கும் வாலிபமே ( மர்மவீரன் 1958 )
64.கன்னித் தீவின் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
65.வேல் வெல்லுமா ( மஹாலட்சுமி 1960 )
66.ஐயா நானாடும் நாடகம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
67.மாந்தோப்பு வீட்டுக்காரி ( இரத்தினபுரி இளவரசி 1959 )
68.பார் முழுவதுமே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
69.கண்கள் ரெண்டும் வண்டு ( அமுதவல்லி 1959 )
70.ஊரடங்கும் வேளையிலே ( ரங்கோன் ராதா 1956 )
71.சின்னக் குட்டி நாத்துனா ( அமுதவல்லி 1959 )
72.இன்ப முகம் ஒன்று ( நான் வளர்த்த தங்கை 1958 )
73.அன்பு அரும்பாகி ( தலை கொடுத்தான் தம்பி 1959 )
74.ஒன்றுபட்ட கணவனுக்கு ( தங்கப்பதுமை 1959 )
75.பறித்த கண்ணைப் பார்த்துவிட்டேன் ( தங்கப்பதுமை 1959 )
76.ஓ...சின்ன மாமா ( செளபாக்கியவதி 1957 )
77.ஓ...கோ கோ மச்சான் ( செளபாக்கியவதி 1957 )
78.சிங்கார பூங்காவில் ஆடுவோமே ( செளபாக்கியவதி 1957 )
79.என்றும் இல்லாமல் ( கலைஅரசி 1963 )
80.நினைக்கும்போது நெஞ்சம் ( கலைஅரசி 1963 )
81.கண்ணாடிப் பாத்திரத்தில் ( புனர் ஜென்மம் 1961 )
82.உருண்டோடும் நாளில் ( புனர் ஜென்மம் 1961 )
83.மருந்து விக்கிற ( தங்கப்பதுமை 1959 )
84.மச்சான் உன்னைப் பாத்து ( பாசவலை 1956 )
85.சிங்கார வேலவனே ( செளபாக்கியவதி 1957 )
86.காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் ( கல்யாணபரிசு 1959 )
87.காதலிலே தோல்வியுற்றான் கன்னியொருத்தி ( கல்யாணபரிசு 1959 )
88.மங்கையரின்றி தனியாக ( குமார ராஜா 1960 )
89.கண்ணோடு கண்ணு ( நாடோடி மன்னன் 1958 )
90.மணமகளாக வரும் ( குமார ராஜா 1960 )
91.நான் வந்து சேர்ந்த இடம் ( குமார ராஜா 1960 )
92.ஆனந்தம் இன்று ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 )
கருப்பொருள்:நகைச்சுவை[மூலத்தைத் தொகு]
94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958)
95.மாமா மாமா பன்னாடெ ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
96.காப்பி ஒண்ணு எட்டணா ( படித்த பெண் 1956 )
97.கோபமா என்மேல் ( குல தெய்வம் 1956 )
98.கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு ( குல தெய்வம் 1956 )
99.கோழியெல்லாம் கூவையிலே ( குல தெய்வம் 1956 )
100.காயமே இது மெய்யடா ( கற்புக்கரசி 1957 )
101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 )
102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 )
103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 )
கருப்பொருள்: கதைப்பாடல்[மூலத்தைத் தொகு]
104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 )
105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 )
கருப்பொருள்: நாடு[மூலத்தைத் தொகு]
106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
107. துள்ளி வரப் போறேன் ( திருமணம் 1958 )
108.ஒற்றுமையில் ஓங்கிநின்ற ( மர்ம வீரன் 1958 )
109.தஞ்சமென்று வந்தவரைத் ( கலையரசி 1965 )
110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 )
கருப்பொருள்: சமூகம்[மூலத்தைத் தொகு]
111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 )
112.வீடு நோக்கி ஓடிவந்த ( பதிபக்தி 1958 )
113.ஒரு குறையும் செய்யாம - இருக்கும் ( கண் திறந்தது 1959 )
114.உருளுது பொரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
115.ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959 )
116.பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்யன் 1962 )
117.தாயில்லை தந்தையில்ல ( ஆளுக்கொருவீடு 1960 )
118.சூதாடி மாந்தர்களின் ( உலகம் சிரிக்கிறது 1959 )
119.அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)ஸ்ரீ
கருப்பொருள்: அரசியல்[மூலத்தைத் தொகு]
121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 )
122.எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
123.படிப்பு தேவை அதோடு உழைப்பும் ( சங்கிலித் தேவன் 1960 )
124.சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் ( பாண்டித் தேவன் 1959 )
125.மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959 )
126.விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
127.தேனாறு பாயுது செங்கதிரும் ( படித்த பெண் 1954 )
கருப்பொருள்: தத்துவம்[மூலத்தைத் தொகு]
128.ஔவிதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 )
129.ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
130.கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
131.இரை போடும் மனிதருக்கே இரையாகும் ( பதிபக்தி 1958 )
132.நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 )
133.ஈடற்ற பத்தினியின் - ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 )
134.தர்மமென்பார் - இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958 )
135.உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 )
136.சூழ்ச்சியிலே - குறுக்கு வழியில் ( மகாதேவி 1957 )
137.எல்லோரும் - அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 )
138.உறங்கையிலே - பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957 )
139.இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956 )
140.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 )
கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல்[மூலத்தைத் தொகு]
139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 )
140.பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958 )
141.கொடுமை - சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959 )
142.சின்னச் சின்ன இழை ( புதையல் 1957 )
143.டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 )
144.எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
145.என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959 )
146.நாட்டுக்குப் பொருத்தம் - விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி )
147.வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959 )
148.என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961)
149.பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959 )
150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 )
151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958)
152.நன்றிகெட்ட மனிதருக்கு ( இரும்புத் திரை 1960 )
153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
155.கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
156.குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
157.தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
158.சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960 )
159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 )
கருப்பொருள்: இறைமை[மூலத்தைத் தொகு]
160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 )
161.ஓங்கார ரூபிநீ -அம்பிகையே ( பதிபக்தி 1958 )
162.தேவி மனம் போலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
163.அறம் காத்த தேவியே ( மஹேஸ்வரி 1955 )
164.ஊருக்கெல்லாம் ஒரே சாமி ( ஆளுக்கொரு வீடு 1960 )
165.ஓ மாதா பவானி ( செளபாக்கியவதி 1957 )
166.ஆனைமுகனே -புள்ளையாரு கோயிலுக்கு ( பாகப்பிரிவினை 1959 )
167.கண்டி கதிர்காமம் -எட்டுஜான் குச்சிக்குள்ளே ( அரசிளங்குமரி 1958)
168.அம்மா துளசி ( நான் வளர்த்த தங்கை 1958 )
169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 )
கருப்பொருள்: பொது[மூலத்தைத் தொகு]
170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 )
171.வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957 )
172.பாசத்தால் எனையீன்ற ( அமுதவல்லி 1959 )
173.ஜிலு ஜிலுக்கும் -சிட்டுக் குருவியிவ ( அமுதவல்லி 1959 )
174.அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955 )
175.சவால் சவாலென்று ( கலைவாணன் 1959 )
176.அடியார்க்கு -அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960 )
177.மங்கையருக்கு -அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959 )
178.ஆட்டம் ( பாகப்பிரிவினை 1959 )
179.கையில வாங்கினேன் ( இரும்புத்திரை 1960 )
180.பிஞ்சு மனதில் -கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
181.ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965 )
182.ஆறறிவில் ஓரறிவு ( மகனே கேள் 1965 )
183.கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965 )
184.ஆட்டம் பொறந்தது ( மகனே கேள் 1965 )
185.மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965 )
186.லால லால- பருவம் வாடுது ( மகனே கேள் 1965 )
187.மணவரையில் -சூதாட்டம் ( மகனே கேள் 1965 )

மணி மண்டபம்[மூலத்தைத் தொகு]

தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.



பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில் எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில், தளங்களில் பயணித்தது. இவர்களை தமிழ்

pattukottai_kalyanasundaram_400உலகம் பாரதி பரம்பரையினர் என்று பெருமைப்படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று, பாரதிதாசனே வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 -அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது அவருடைய சிறப்பு . இப்போது அவரது பாடல்கள்

நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 29 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் 'பாட்டுக்கோட்டை'யாகவே அறியப்பட்டவர் பட்டுக்கோட்டையார். திரையுலகப் பாடல்களில் பட்டிருந்த கறையை நீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும்,

வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்களும், முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டையார். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதிய‌வர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

கவி பாடும் விவசாய குடும்பம்..!

தமிழ்நாட்டின் தஞ்சை மண்ணில், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் குக்கிராமத்தில், அருணாச்சலனார் – விசாலாட்சியின் இளைய மகனாக 13.04.1930-ல் பிறந்தார். அது ஓர் எளிய விவசாய குடும்பம். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். 'முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி' எனும் நூலையும் அவர் தந்தை இயற்றியிருக்கிறார். தந்தை கவிஞராக இருந்ததால், மகன்களான கணபதி சுந்தரமும், கல்யாண சுந்தரமும் கவிபாடும் திறத்தை வளர்த்துக் கொண்டனர்.

அண்ணன் தந்த கல்வி..!

பட்டுக்கோட்டையார் துவக்கக்கல்வியை அண்ணன் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். அத்துடன் அவரது பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. அவருக்குத் திண்ணைப் பள்ளிக்கூடம் செல்ல பிடிக்கவில்லை. 2-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கு போகவில்லை. தன் அண்ணனிடம் அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டார். அவருக்கு வேதாம்பாள் என்ற சகோதரி இருந்தார்.

பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள்.

மக்கள் கவிஞனின் மகத்துவம்..!


தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்கள் கிராமிய மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புதப் பாடல்களாக வடித்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது.

1955ஆம் ஆண்டு 'படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியராக‌ இவரைக் கண்டனர்.

பட்டுக்கோட்டை பாடுவதிலும் வல்லவர். நாடகம், திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர். இதுவே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது. 1946இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.

'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார். அதுதான் இது.

ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே - கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே - கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே

இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள் என்றார். 

இடதுசாரி இயக்கத்தின் இடையறா ஈர்ப்பாளி..!

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

பட்டுக்கோட்டையின் பன்மமுக பரிமாணங்கள்..!

pattukottai_kalyanasundaram_239விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்

தன்மானம் மிக்க பட்டுக்கோட்டையார்..!

திரை உலகில் நுழைய பட்டுக்கோட்டையார் சென்னைக்கு வந்து ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் 10-ம் நெம்பர் வீட்டில் ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்குப் பிடித்தார். சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என். ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே.தேவரும் தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை துவக்க காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராகவும் தைரியசாலியாகவும் இருந்தார். சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதிக் கொடுத்தார். பணம் வந்து சேரவில்லை. பணத்தைக் கேட்க பட அதிபரிடம் சென்றால், 'பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கோ' என்று பதில். ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். 'நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்' என்ற பட அதிபர் வீட்டிற்குள் போய்விட்டார்.

உடனே கல்யாணசுந்தரம் சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தைக் கொடுத்தார். அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதினார் பட்டுக்கோட்டை? இதோ 'தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல?' இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.

மனித நேயம் மிக்க பட்டுக்கோட்டையார்..! 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதைப் பறிகொடுத்தவர் கவியரசு கண்ணதாசன். அதுபோலவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் மிகுந்த அன்பு கொண்டவர். புகழின் உச்சியில் இருந்து, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டையை, கண்ணதாசன் நேரில் சந்தித்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டதிற்கு , அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் ஒரு சமயம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். மனித நேயமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் உள்ள மாமனிதர் பட்டுக்கோட்டையார். அந்த காலத்தில் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார். கவிஞர் கண்ணதாசனும் அதற்குப் பலியானார். ஒரு விழாவில் பத்திரிகை ஆசிரியரை பட்டுக்கோட்டையார் சந்தித்தபோது, க்ண்ணதாசனைக் குறிப்பிட்டு, "என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?" என்று கேட்டு உதைக்கப் போனார்.

எளிமையான பட்டுக்கோட்டை..!

"உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்" - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிருபரை ராயப்பேட்டையிலிருந்த தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம் நடந்திருக்கிறார். பிறகு இருவரும் ரிக்ஷாவில் ஏறி மௌண்ட் ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்புறம் பஸ்ஸைப் பிடித்து கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கி இருக்கின்றனர். கேட்டைக் கடந்து ஒரு டாக்ஸி பிடித்து வடபழநியில் தம் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்கினார்கள். கூடவே வந்த நிருபர், "கவிஞரே, வாழ்க்கை வரலாறு" என்று நினைவூட்டி இருக்கிறார். உடனே பட்டுக்கோட்டையார், "முதலில் நடையாய் நடந்தேன், ரிக்ஷாவில் போனேன், பிறகு பஸ்ஸில் போக நேர்ந்தது. இப்போது டாக்ஸியில் போகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுல எங்கே இருக்குது வரலாறு?" என்று சிரித்துக்கொண்டே போய்விட்டாராம். இந்த எளிமைதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

pattukottai_kalyanasundaram_559 

வேடிக்கையும், விவேகமும் மிக்க கவிஞர்..!

ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடப்பதை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், 'எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்' என்றார்.

ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தைத் தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளைத் தட்டி பாட ஆரம்பித்தார்கள். 

'சின்னக்குட்டி நாத்தனா 
சில்லறைய மாத்துனா 
குன்னக்குடி போற வண்டியில் 
குடும்பம் பூரா ஏத்துனா!'

இந்த பாட்டு ஆரவல்லி படத்தில் வருகிறது..!

பட்டுக்கோட்டையார் சிறந்த தத்துவப் பாடல்கள் மட்டுமின்றி, நகைச்சுவை பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். 

'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு 
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும் 
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா 
அதுவுங்கூட டவுட்டு!'

'நான் வளர்த்த தங்கை' என்ற படத்திலே போலி பக்தர்களை இப்படி நையாண்டி செய்கிறார் 

'பக்த ஜனங்கள் கவனமெல்லாம் 
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா... 
பசியும், சுண்டல் ருசியும் போனால் 
பக்தியில்லை பஜனையில்லை'

சமுதாயப் பாடல்களை ஏராளமாக எழுதி இருக்கிறார். 

'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை 
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான் 
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு 
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்... 

எழுதிப் படிச்சு அறியாதவன்தான் 
உழுது ஒளச்சு சோறு போடுறான். 
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி 
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன் 
சோறு போடுறான் அவன் 
கூறு போடுறான்...'

'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் 

'வீரத்தலைவன் நெப்போலியனும் 
வீடு கட்டும் தொழிலாளி! 
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின் 
செருப்புத் தைக்கும் தொழிலாளி! 
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு 
காரு ஓட்டும் தொழிலாளி! 
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட 
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி 

”பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது”

படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957

'திருடாதே' திரைப்படத்தில் குழந்தைகளுக்கு சொல்வது போல பெரியவர்களுக்கு பொதுவுடமை போதித்தல்.

'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி 
எடுக்கிற அவசியம் இருக்காது. 
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால் 
பதுக்கிற வேலையும் இருக்காது. 
ஒதுக்கிற வேலையும் இருக்காது. 
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா 
கெடுக்கிற நோக்கம் 
வளராது

கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும் ஆற்றலுக்கும் அவரின் ஆயுள் மிகக் குறுகியது. 29 ஆண்டுகள் மட்டுமே..!ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது. 1959-ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், கௌரவாம்பாளுக்கும், குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) பட்டுக்கோட்டை அகால மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டை பற்றிய ஆவணப்படம்...!

 பட்டுக்கோட்டையாரைப் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறார், அம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன். இதில் பட்டுக்கோட்டையா‌ரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது கவிதை உலகம், இடதுசா‌ரி ஈடுபாடு, வறுமை, திரை அனுபவங்கள் அனைத்தும் அவருடன் நெருக்கமானவர்ளுடனான பேட்டிகளின் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டையா‌ரின் மனைவி கௌரவாம்பாள், அவரது பால்ய நண்பர் சுப்ரமணியம், தியாகி மாயாண்டி பாரதி, எம்.எஸ்.விஸ்வநாதன் உள்பட கவிஞருக்கு நெருக்கமானவர்கள் அனைவ‌ரின் பேட்டிகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கவிஞ‌ரின் முக்கியமான 12 திரைப்பாடல்களின் காட்சியும், அவரது அ‌ரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது ஆவணப் படத்தின் தரத்தை உயர்த்துகிறது.

பட்டுக்கோட்டையாரின் துணைவியின் பதிவு..!

pattukottai_kalyanasundaram_577

“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும்‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ’அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக. ‘உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம். அப்போ வீட்டுல வந்து எழுதுனதுதான், ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ பாட்டு. இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் ஆடைகட்டி வந்த நிலவு” என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.

“அன்னைக்கு அவுக அண்ணன் பொஞ்சாதிக்கு வளைகாப்பு. அப்போ நான் கிண்டலா, ‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் மொகத்துல பொன் சிரிப்பு’ன்னு சொன்னேன். இதை, ‘கல்யாணப் பரிசு’ படத்துல, அவுக பல்லவியா போட்டு பாட்டா எழுதிட்டாக. ‘இது நீ எழுதுன பாட்டு. இந்தா பிடி சன்மானம்’னு அந்தப் பாட்டு எழுதுனதுக்குக் கிடைச்ச பணத்தை என் கையில கொடுத்தாக.

***

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போர வார்த்தையை நல்லா
எண்ணிப்பாரடா. (படம்: அரசிளங்குமரி - 1957)

குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம். குள்ள நரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம். 

“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ,
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ,
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா ,
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா ,
சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா “.


இன்று பட்டுக்கோட்டை போல மக்களுக்கான கருத்துக்களை விதைக்கும் பாடலாசிரியரைத் தேடவேண்டியுள்ளது.



மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் இந்த ஆவணப்படம் ஏனோ தெரியவில்லை மக்களை சரியான முறையில் இன்னும் சென்று அடையவில்லை..
இந்த  ஆதங்கத்தில் அதை இங்கு மீண்டும் பதிவு செய்துள்ளோம்
பட்டுக்கோட்டையில் இருந்து வடக்கே திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் சாலையின் 13-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ‘சங்கம் படைத்தான்காடு’ என்னும் சிற்றூர். இங்கு அருணாசலம்பிள்ளை – விசாலாட்சி தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம். ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த கல்யாணசுந்தரம் உள்ளூர் திண்ணைப் பள்ளியில் மூன்றாவது வகுப்பிற்கு மேல் படிக்க வசதியும் வாய்ப்பும் இல்லாததால், ஏழெட்டு வயதிலேயே வயலில் இறங்கி ஏர் உழவேண்டிய நிலை ஏற்பட்டது. தகப்பனாரான அருணாசலம் பிள்ளை பிழைப்புத்தேடி சிங்கப்பூர் சென்றுவிட்டார். அவர் ‘இயற்கைப்புலமை’ பெற்றிருந்தார். அதைக்கொண்டு ‘முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்மி’ என்னும் தலைப்பில் கவிதைகள் – பாட்டுகள் இயற்றி அவற்றை ஒரு நூலாக அங்கு வெளியிட்டார்.
இளமையிலேயே முறையான கல்வி அறிவு பெறாத கல்யாணசுந்தரம், தந்தை ‘மரபணு’ மூலம் பெற்ற கவிதை அறிவு உதிரத்தில் பெருக்கெடுத்து ஓடியதால், ‘எழுத்து’, ‘சொல்’, ‘பொருள்’, ‘யாப்பு’, ‘அணி’ என்னும் ஐந்து பகுதியான
ஐந்திலக்கண வரம்பு முறைக்கெல்லாம் அப்பாற்பட்டு, எதுகை மோனையை மட்டும் பிடித்துக்கொண்டு அதை வைத்து தனது கற்பனையில் தோன்றியவாறு ‘இட்டுக்கட்டிப்பாடுதல்’ என்னும் பழைய வழியைப் பின்பற்றிப் பாடல்களை எழுதுகோல் கொண்டு எழுதாமலே வாயாலேயே பாடலானார்.

வரப்பில் அமர்ந்தவாறு சிந்தித்த அந்த இயற்கை இளங்கவி இனி வயலில் இறங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். பிறந்த மண்ணைவிட்டுப் பிரிந்து, அந்நாட்களில் பிரபலமாயிருந்த ‘சக்தி நாடக சபா’வில் போய்ச் சேர்ந்தார்.

எதுவுமே தெரியாத அவரை ‘எதற்கும் இருக்கட்டுமே’ என்று சபாவின் முதலாளியான சக்தி டி.கே.கிருஷ்ணசாமி தம் நாடகக்குழுவில் சேர்த்துக்கொண்டார். இந்த சக்தி நாடக சபாவில்தான் சிவாஜிகணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, எஸ்.ஏ.நடராஜன், ஓ.ஏ.கே.தேவர் முதலியோர் நடிகர்களாக இருந்தனர்.
கல்யாணசுந்தரம் சிறுசிறு நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துக்கொண்டே கவிதைகளும் எழுதி வந்தார். அவற்றில் ‘எண்ணம்’ சரியாக இருந்தது. ஆனால், எழுத்துப்பிழைகள் நிறைய இருந்ததைப்பார்த்த அவரது நாடக நண்பர்கள், “நீ முறையாகத் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தில் ஒரு சிறந்த கவிஞனாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நடிப்பதை விட்டு விட்டு நேராக பாரதிதாசனிடம் போய்ச்   சேர்ந்துவிடு. பலர் அவரிடத்தில்தான் கவிதை எழுதக் கற்றுக்கொண்டு, கவிஞர் களாகியிருக்கின்றனர்” என்று கூறினார்கள்.

அதைக்கேட்டு கல்யாணசுந்தரம் புதுச்சேரிக்குப் போய் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைப் பார்த்துக் கும்பிட்டு, அவர் முன்னே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்து பணிவுடன் நிற்க, பாரதிதாசன் அவரைக்கேட்டார்:-

பாரதி:- யாருப்பா நீ?
கல்யாணசுந்தரம்:- கல்யாணசுந்தரம்.
பாரதி:- எந்த ஊரு?
கல்யாணசுந்தரம்:- பட்டுக்கோட்டைக்குப் பக்கத்துல சங்கம்படைத்தான்காடு.

பாரதி:- என்ன விஷயமா இங்கே வந்திருக்கே?
கல்யாணசுந்தரம்:- பாட்டு எழுதணும்.
பாரதி:- என்ன படிச்சிருக்கே?
கல்யாணசுந்தரம்:- (சற்று நேர மவுனத்திற்குப்பின்) சொல்லிக்கிற மாதிரி பெரிசா ஒண்ணும் இல்லேங்கய்யா.

பாரதி:- பரவாயில்லே சொல்லு.
கல்யாணசுந்தரம்:- (விரலைக்காட்டி) மூணாங்கிளாஸ்.
பாரதி:- தமிழ் எழுதத் தெரியும்ல.
கல்யாணசுந்தரம்:- தப்புத்தப்பா எழுதுவேன்.

பாரதி:- அப்ப எதை வச்சு பாட்டெழுதணும்னு ஆசை உனக்கு உண்டாச்சு?
கல்யாணசுந்தரம்:- எங்கப்பா ஒரு கவி. முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்மின்னு சிங்கப்பூர்ல புத்தகம் போட்டாரு. அப்பா மாதிரி நானும் ஒரு கவி ஆவணும்னு ஆசை.

பாரதி:- வேற என்ன வேலை தெரியும்?
கல்யாணசுந்தரம்:- விவசாயம் நல்லா செய்வேன். பாத்திங்களாய்யா? (தன் கைகளைக்காட்டி) கலப்பை புடிச்சு உழுது உழுது, மம்பட்டி புடிச்சு வெட்டி வெட்டி எங்கையே காய்ச்சிப்போயிடுச்சு. அதோட வீட்டு வேலைங்கள்ளாம் செய்வேன். வேட்டித் துணிமணித் தொவைச்சிப் போடுவேன். உங்களுக்கு முதுகு தேய்ச்சி விடுவேன். எண்ணெய் தேச்சிக் குளிப்பாட்டி விடுவேன். நீங்க எந்த வேலை சொன்னாலும் தட்டாமச்செய்வேன். வேணும்னா பாருங்க.

பாரதி:- இந்த ஊர்ல உனக்கு வேண்டியவுங்க, தெரிஞ்சவுங்க வேற யாராவது இருக்காங்களா?
கல்யாணசுந்தரம்:- இல்லிங்கய்யா. அதான் நீங்க இருக்கீங்களே. அப்புறம் என்னா?
கள்ளங்கபடம் இல்லாத கல்யாணசுந்தரத்தின் வெள்ளை மனதையும் வெகுளித்தனத்தையும் நன்கு விளங்கிக்கொண்ட கனகசுப்புரத்தினம் என்கின்ற பாவேந்தர் பாரதிதாசன் சற்று யோசித்து, “பழனியம்மா” என்று அழைக்க, உள்ளிருந்து அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் வந்து நின்று…

பழனி:- என்னங்க?

பாரதி:- இந்தப்பையன் எங்கிட்டே பாட்டெழுதக் கத்துக்குறதுக்கு பட்டுக்கோட்டையிலிருந்து வந்திருக்கான். இங்கே அவனுக்கு வேற யாரும் இல்லே. நம்ம வீட்டோட இருந்துக்கட்டும். கிராமத்துப் பையன். வீட்டை நல்லா கவனிச்சிக்குவான். பார்த்துக்க.

பழனி:- சரிங்க. வாப்பா சாப்பிடலாம். வா.

அந்நாட்களில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ அதிபர் அமரர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘பொன்முடி’ (புரட்சிக்கவிஞரின் குறுங்காப்பியமான ‘எதிர்பாராத முத்தம்’ திரைப்பட வடிவத்தின் மாற்றுப்பெயர் ‘பொன்முடி’) ‘வளையாபதி’, ‘சதி சுலோசனா’ முதலிய படங்களுக்கு பாரதிதாசன் திரைக்கதை – வசனம் – பாடல்கள் எழுதியதன் மூலம், அந்தப்பட நிறுவனத்தின் நிரந்தர ஆஸ்தான ஆசிரியராக இருந்து வந்தார்.

பொதுவாக பாரதிதாசனிடம் ஒரு வழக்கம் உண்டு. படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை அவர் எழுதிய பிறகு அவற்றில் மற்றவர்கள் திருத்தமோ அல்லது மாற்றமோ சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார். தப்பித்தவறி சில வேளைகளில் ஏற்றுக்கொள்வதும் உண்டு. அது அப்போதைய அவருடைய மனோ நிலையைப் பொறுத்தது.

ஒருமுறை தன் மாணவன் கல்யாணசுந்தரத்தையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் வந்த பாவேந்தர் அப்போது அங்கு தயாராகிக் கொண்டு இருந்த ‘மகேஸ்வரி’ படத்திற்காக எழுதிய ஒரு பாடலில் அவரது குணமும், கோபமும் தெரிந்தும்கூட, வேறு வழி இன்றித் திருத்தம் சொன்னார்கள். உடனே அவருக்குக் கோபம் வந்து வழக்கம்போல அவர்களைத்திட்டி, “இந்தப்பாட்டை நான் எழுதமாட்டேன். இதோ எங்கூட வந்திருக்கான் பாரு – என் மாணவன் கல்யாணசுந்தரம். இவன் நல்லா எழுதுவான்.

இவன்கிட்டே எழுதி வாங்கிக்குங்க. அப்பா நீ எழுதுடா” என்று கூற இதை எதிர்பாராத அவர் வெல வெலத்துத் தயங்கியபடி கூறினார்.

கல்யாணசுந்தரம்:- ஐயா! என்னங்க திடீர்னு இப்படிச் சொல்லிட்டிங்க? நான் எப்படி எழுதுறது?… எனக்கு…

பாரதி:- (குறுக்கிட்டு) பயப்படாதே! நான் சொல்றேன். தைரியமா எழுது. எல்லாம் நல்லா வரும். எழுது என்று அவரைத் தட்டிக்கொடுத்தார். ஆகவே தன் பக்திக்கும், பாசத்திற்கும் உரிய ஆசானின் பாதம் தொட்டு வணங்கி முதன் முதலாக அவர் சினிமாவுக்கென்று எழுதிய பாடலின் பல்லவி இது:-

“அம்பிகையே முத்து மாரியம்மா – உன்னை
நம்பி வந்தேன் ஒரு காரியமா
ஆளை விழுங்குற காலமம்மா – இங்கு
ஏழை நிலைமையைக் கேளுமம்மா.”

இந்தப் பாடலை இசை அமைப்பாளர் பாடிப்பார்த்தார். சரியாக இருக்கவே இன்புற்று எல்லோரும் பாராட்டினர். செய்தி அதிபர் டி.ஆர்.எஸ்ஸின் செவிகளுக்குச் சென்றது.

உடனே அவர் உத்தரவிட்டார். “இனிமே இந்தப் பையனை வச்சே நம்ம மத்த எல்லாப் படங்களுக்கும் வேண்டிய பாட்டுங்களை எழுதி வாங்கிக்குங்க. பெரியவருக்கு சிரமம் கொடுக்கவேண்டாம். அவரோட சிஷ்யன் தானே! ஒண்ணும் சொல்லமாட்டாரு.”

முதல் முறையாகத் தன் குருநாதருடன் சேலம் வந்த கல்யாணசுந்தரம் அடுத்தடுத்து அவரது அனுமதியுடனும், ஆசியுடனும் அடிக்கடி தனியாகப் பாட்டெழுத வரவேண்டியதாயிற்று.

கவிஞர் புதுச்சேரியில் இருந்தபொழுது பாவேந்தர் ‘குயில்’ என்னும் கவிதை இதழை வெளியிட்டு வந்தார். அதில் அ.கல்யாணசுந்தரம் என்பதைச் சுருக்கி ‘அகல்யா’ என்ற புனைப்பெயரில் அவர் ஒரு கவிதை எழுதி அஞ்சலில் அனுப்ப அது அங்கு வந்து அதனுடன் சேர்ந்து வந்த மற்ற தபால்களையும் அவரே கொண்டுபோய் குருநாதரிடம் கொடுத்தார்.

தனக்கு வந்த தபால்களுடன் சேர்ந்திருந்த உறையைப் பிரித்து குறிப்பிட்ட அந்த கவிதையைப் படித்துப்பார்த்த பாவேந்தர் மனம் மகிழ்ந்து மற்றவர்களிடம் காட்டி “யாரோ ‘அகல்யா’ன்னு ஒரு பொண்ணு இந்தக் கவிதையை எழுதி அனுப்பியிருக்கு. நல்லாருக்கு. இதை இந்த வாரம் நம்ம ‘குயில்’ இதழ்ல பிரசுரிங்க” என்றார். அதற்கு அவர்கள்:-

“ஐயா! அகல்யாங்குறது வேறு யாரும் இல்லேங்க. நம்ம கல்யாணசுந்தரந்தான். அ.கல்யாணசுந்தரம்கிற தன் பேரைச் சுருக்கி ‘அகல்யா’ன்னு வச்சிக்கிட்டிருக்காரு” என்று கூறியதைக்கேட்டு, அப்பொழுதே அவர் தன் இளங்கவிஞரின் கைநாடியைப் பிடித்துப் பரிசோதித்துப் பார்த்ததுபோல, “இந்தக் கவிக்குயில் வருங்காலத்தில் மிக இனிமையாகக் கூவிப் புகழ் பெறும்” என்று சொல்லி வாயார வாழ்த்தினார். அதன் எதிரொலிதான் ‘மகேஸ்வரி’ படத்திற்கு அவரைப் பாட்டெழுதச் சொல்லி, உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தியது.

‘மகேஸ்வரி’ வழங்கிய ஆசியுடன் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘ஆரவல்லி’ மற்றும் ‘பாசவலை’ ஆகிய படங்களுக்கும் கல்யாணசுந்தரம் பாடல்கள் புனையலானார்.

அடங்காப்பிடாரிகளான ஆரவல்லி – சூரவல்லி சகோதிரிகளால் சிறையில் அடைக்கப்பட்ட ஆண் கைதிகள் கழுதையை வைத்துக்கொண்டு சிலேடையாகப் பாடுவதாக அவர் எழுதிய பல்லவி இது:-

“பழக்கமில்லாத கழுதைகிட்டே கொஞ்சம்
பாத்துக் கறக்கணும் பாலை – அது
பட்டுன்னு தூக்கிப்புடும் காலை – அப்போ
பல்லு போகுமோ மூக்குப் போகுமோ சொல்லமுடியாது அதனால்” (பழக்கமில்லாத) ‘பாசவலை’ படத்தில் புகழ் பெற்ற அவருடைய வேதாந்த பாடல் வரிகள் இவை:-

“குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்; குள்ள நரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பாக்கப்போனா எட்டடிதான் சொந்தம்.”

இந்தத் தத்துவப்பாடலைக்கேட்டு அதிபர் டி.ஆர்.எஸ். மட்டுமல்ல, மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவின் அத்தனை பேரும் மயங்கி நம் கவிஞரைப் பாராட்டினர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டுப் புகழ்க்கொடி சேலத்தைத் தொடர்ந்து சென்னைப் பட உலகிலும் பறக்கத்தொடங்கியது. எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோரை வைத்துப் படம் தயாரிக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் கல்யாணசுந்தரத்தின் கால எழுச்சிப் பாடல்களுக்காகக் காத்திருந்தன.

அவருடைய பாடல்கள் எழுச்சி பெற்ற அந்தக் காலக்கட்டம் 1957, 1958-, 1959 ஆகிய மூன்றே மூன்று ஆண்டுகள் மட்டும்தான். அவருடைய பாடல்கள் எதுவுமே என்னால் மறக்க முடியாதவை!

1957-ல் நான் துணை வசனகர்த்தாவாகப் பணிபுரிந்து ஜெமினிகணேசன், சாவித்திரி நடித்த ‘சவுபாக்கியவதி’யில் கவிஞர் முதன் முதலாக ஒரு முழு படத்திற்குமான எல்லாப் பாடல்களையுமே எழுதுவதற்கு அதன் வசனகர்த்தாவான அமரர் ஏ.எல்.நாராயணனும், நானும் ஏற்பாடு செய்தோம்.

‘சவுபாக்கியவதி’ படத்தைத்தொடர்ந்து அதுவரையில் பின்னணிப் பாடகராக மட்டுமே இருந்த என் இனிய நண்பர் ஏ.எம்.ராஜா முதன் முதலாக இசை அமைத்து ஸ்ரீதர் முதன் முதலாக இயக்கிய ‘கல்யாணப்பரிசு’ படத்தின் எல்லாப் பாடல்களையுமே கல்யாணசுந்தரம் அற்புதமாக எழுதித் தன் பாட்டுக்கோட்டைக்கு ஒரு பலமான அஸ்திவாரத்தைப் போட்டுக்கொண்டார்!

இதைப்போல நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், ‘நாட்டியப் பேரொளி’ பத்மினியும் நடித்த ஜூபிடர் பிக்சர்ஸ் ‘தங்கப்பதுமை’ படத்தில் ஒரு சோகக்காட்சி: கண்கள் குத்தப்பட்டுக் குருடாக்கப்பட்ட தன் கணவனைக் கண்டு அவன் மனைவி கதறித் துடித்துக் கண்ணீர்ப் பெருக்கோடு கேட்கிறாள்:-

“அத்தான்! இக்கொடிய தண்டனை பெறக்கூடிய அளவிற்கு அப்படி என்ன கொலைக்குற்றம் புரிந்துவிட்டீர்கள்?” அதற்கு அவன் கூறுகின்ற பதிலாக நம் கவிஞர் வடித்த கவிதைப் பாடலின் தொகையரா (கஜல்) இது:-

‘ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான் – அவள்
இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத்தகுந்தவளை வாழாமல் செய்துவிட்டுப்
பாழும் பரத்தையரால் பண்பதனைக் கொன்றவன் நான்,
அந்தக் கொலைகளுக்கே ஆளாயிருந்து விட்டேன் இனி
எந்தக் கொலை செய்தால்தான் என்னடி என் ஞானப்பெண்ணே’.

திரைப்பட உலகில் பாடல் துறையில் அவர் ஆரம்பித்த அந்தத் ‘தன்னாட்சி’ மிகக் குறுகிய காலமான மூன்றே ஆண்டுகளில் முடிந்து போய்விட்டது. புகழின் உச்சாணிக் கொம்பைத் தாவிப் பிடித்த அவரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அக்கொம்பு தானும் முறிந்து அவரையும் தள்ளி வீழ்த்திவிட்டது.

மூக்கின் உட்பகுதியில் தோன்றிய ஒரு சிறு கட்டியை (பரு) அகற்றுவதற்காக அதன் மீதே தவறாக ஊசி குத்தியதால் மூளை பாதிக்கப்பட்டு மூர்ச்சையாகி சொற்ப நேரத்திற்குள் அவரது விழிகளை மூடச் செய்துவிட்டது. வியப்பிற்குரிய வேகத்துடன் விறுவிறு என்று வளர்ந்து வந்த அந்த விந்தைமிகு கவிஞரின் விஷயத்தில் ‘விதி’ சற்று முந்திக்கொண்டு அவசர அவசரமாக அதன் வேலையை முடித்துக்கொண்டு விட்டது!

“கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி – மானே
வளர்த்தவனே எடுத்துக்கொண்டான்டி”

என்று ‘தங்கப்பதுமை’ படத்தில் அவர் பாடியது அவருக்கே பலித்துவிட்டது.

கல்யாணசுந்தரம் 29 ஆண்டுகள் 5 மாதங்கள் 28 நாட்கள் மட்டுமே இந்த நற்றமிழ் மண்ணில் நடமாடினார். அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் ஒரு நூறு பாடலுக்குச் சமம். அப்படிப்பார்த்தால் 1957, 1958, 1959 ஆகிய மூன்று ஆண்டுகளில் அவர் பாடிய 200 பாடல்களும் இருபதாயிரம் பாடல் களுக்கு நிகரானவை ஆகும்.
(மரணத்தை வென்ற கண்ணதாசன் – அடுத்த வாரம்).

பட்டுக்கோட்டையாரின் வருத்தம்

ஒருநாள், என் இதயங்கவர்ந்த கவிஞரிடம் இதைக்கேட்டேன்:-

‘ஏன் கவிஞரே? பாரதிதாசன்கிட்டே நீங்க என்ன செய்தீங்க? பழைய இலக்கண இலக்கியங்கள்ளாம் படிச்சிங்களா? அவர் கவிதைங்க சொல்லச் சொல்ல அதையெல்லாம் உங்கக் கைப்பட எழுதினீங்களா?’.

இதற்கு அவர் சொன்ன பதில் இது:-

‘ஊகூம், அதெல்லாம் ஒண்ணுமில்லே. அவரு எழுதி வைக்குற காகிதங்கள்ளாம் காத்துல பறக்கும். அதை  எடுத்துச் சரியா அடுக்கி வைப்பேன். அப்பப்போ எனக்குத் தோண்றதை எழுதி அவர்கிட்டே காட்டுவேன். அதுல இருக்கிற தப்பையெல்லாம் திருத்துவாரு. எப்படி எழுதணும்? எப்படி எழுதக்கூடாதுன்னு எனக்குச் சொல்லிக்கொடுப்பாரு. அவ்வளவுதான்.

எப்படியோ, பாட்டு எழுதுற அந்த முறையை முழுசா அவர்கிட்டேருந்து நான் கத்துக்கலேன்னாலும் முக்கால்வாசி தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு முந்தியெல்லாம் சும்மா வாயாலேயே இஷ்டத்துக்குப் பாடிக்கிட்டிருந்த நான், அவர்கிட்டே போய் சேர்ந்தப்பறந்தான் அதைக் காகிதத்துல கவிதையா எழுத ஆரம்பிச்சேன்.

அவர் மட்டும் என்னை சேலத்துக்குக் கூட்டிக்கிட்டுப்போயி, அங்கே அவருக்கு கோவம் வந்து, அவர் எழுதவேண்டிய ‘மகேஸ்வரி’ படப்பாட்டை என்னை எழுதச் சொல்லலேன்னா, இன்னும் ரெண்டு வருஷம் அவரோடயே இருந்து, நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டு இன்னும் நல்லா கவிதைங்க எழுதக் கத்துக்கிட்டு ஒரு முழுக்கவிஞனா ஆகியிருப்பேன். அதுக்குள்ளே எனக்கு சினிமா சான்ஸ் வந்திடுச்சு. அதான் தப்பா போயிடுச்சு. அதான் எனக்கு வருத்தமாயிருக்கு’.

தவிட்டோடும், உமியோடும் தம்மிடம் வந்த கல்யாணசுந்தரம் என்னும் அந்த அரிசியை புரட்சிக் கவிஞர் புடைத்து, நேம்பிக்கல் பொறுக்கி, வேக வைத்துச் சோறாக ஆக்கி அவரைச் சமைத்தார். சரியாக அமைத்தார்!

பட்டுக்கோட்டையின் வயல் வரப்பில் தானாக முளைத்த அந்தத் தமிழ்ச்செடிக்கு புதுச்சேரி பாவேந்தர் தண்ணீர் வார்த்து வளர்த்திடாவிடில் அந்த இட்டுக்கட்டிப்பாடல்கள் எல்லாம் சங்கம் படைத்தான் காட்டுச் செம்மண்ணில் கலந்து செத்து மடிந்து மக்கி மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கும்.

அந்தக் குரு பக்தியினால்தான் கல்யாணசுந்தரம் எதை எழுதினாலும் அக்காகிதத்தின் உச்சியில் ‘பாரதிதாசன் துணை’ என்று எழுதினார். dailythanthi.com





No comments:

Post a Comment