சீனா இந்திய எல்லையை ஆக்கிரமித்த
நாள் செப்டம்பர் 9,1962
போர்க்காலத் தயார் நிலைமையைப் பொருத்தவரையில் இந்தியா எப்போதுமே "வந்தபின் காப்போம்' என்கிற மனநிலையில் தொடர்வது வேதனைக்குரியது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட.
1962-இல் சீனப் படையெடுப்பு நடந்தபோது, செப்டம்பர் 9 ஆம் தேதியே இந்திய எல்லைக்குள் நுழைந்து நமது பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருந்த செய்தியே, பிறகுதான் தில்லிக்குத் தெரிந்தது என்றால் எந்த அளவுக்கு நாம் எல்லைப்புறப் பாதுகாப்பில் கவனமாக இருந்தோம் என்பது புரியும்
| Sino-Indian War | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| Part of Cold War | |||||||||
The Sino-Indian War was fought between India and China | |||||||||
| |||||||||
| Belligerents | |||||||||
| Commanders and leaders | |||||||||
| Strength | |||||||||
| 10,000–12,000 | 80,000[4][5] | ||||||||
| Casualties and losses | |||||||||
| 1,383 killed[6] 1,047 wounded[6] 1,696 missing[6] 3,968 captured[6] | 722 killed[6] 1,697 | ||||||||
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே காலப்பகுதியில் ஆசியாவின் இரு பெரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் இராணுவ ரீதியாக மோதின. 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி ஆரம்பித்த இந்த சண்டை நவம்பர் மாதம் 21 ஆம் தேதி சீனா அறிவித்த ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்துடன் முடிவுக்கு வந்தது.
போர் மூலம் இரு நாடுகளும் உரிமை கோரிய, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வட கிழேக்கேயிருக்கும் அகாய்ச்சின் பகுதியை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அதேநேரம் தெற்கு திபெத் என்று சீனா அழைக்கும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளை சீன இராணுவம் கைப்பற்றியும் எவ்வித நிபந்தனையும் இன்றி அங்கிருந்து சீனா வெளியேறியது.
அதன் பிறகு இருநாடுகளுக்கும் இடையே பெரிய அளவிலான இராணு மோதல் இல்லாவிட்டாலும் தொடர்ந்து முறுகல் நிலை அவ்வப்போது ஏற்படுகிறது.
காரணங்கள்
இந்தியாவின் வட கிழக்கே இருக்கும் அருணாச்சலப் பிரதேசமும், ஜம்மு காஷ்மீரின் ஒரு புகுதியாக இருந்த அக்காய்ச்சின் பிரதேசமும் தன்னுடையது என்று சீனா 50 களில் உரிமை கோரியது.
பிரிட்டிஷ் காலனிய அரசு திபேத்தியர்களுடன் செய்த எல்லை உடன்பாட்டை சட்டவிரோதமானது என்று சீனா கூறியது. இந்தியாவோ காலனிய ஆட்சியாளர்களால் வரையப்பட்ட மெக் மோகன் எல்லைக் கோட்டை மாற்ற முடியாது என்று உறுதியாக கூறி வந்தது.
the northern boundary of the disputed area.
எல்லை பிரச்சனை ஒரு புறம் இருக்க சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் 50களின் இறுதிப் பகுதியில் இரு நாட்டுப் படையினரும் அங்காங்கே மோதிவந்தனர். இந்த மோதல்கள் 1962இல் ஒரு யுத்தமாய் உருமாறியது.
அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி சீனப் படையினர் வட கிழக்குப் பகுதியிலும் – அக்காய்ச்சின் பகுதியும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். சரியான ஆயுதங்கள் இல்லாத இந்திய இராணுவத்தால் இமயத்தின் உயரத்தில் நடந்த படையெடுப்பை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்தப் போரால் இராணுவ ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளை விட அரசியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளே அதிகம் என்கிறார் டில்லியில் இருக்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் தலைவர் மோகன் குருசாமி.
![]() |
| NEHRU AND ZU-EN-LAI AT BEIJING OCT,19,1954 |
"இந்திய இராணுவத்தின் நான்கு அல்லது ஐந்து பிரிகேடுகளும் சீனாவின் நான்கைந்து பிரிகேடுகளும் அப்போது சண்டையிட்டன. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய இராணுவத்தினரால் சீனாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. லதாக் பகுதியில் சில இடங்களில் மட்டும் இந்தியப் படையினர் எதிர்த்து சண்டையிட்டனர். ஆனால் சீனப் படையெடுப்பு இந்தியாவில் பெரும் அச்சத்தை தோற்றுவித்தது.
அன்றைய பிரதமர் நேரு, வானோலியில் உரையாற்றுகையில் அஸ்ஸாமை இழந்துவிட்டோம் என்றுகூட குறிப்பிட்டார். அரசியல் ரீதியாக இந்த போரால் ஏற்பட்ட இழப்புகள் அதிகம்". என்றார் மோகன் குருசாமி.
எல்லைப் பிரச்சினை
இந்தியா இப்போரை தேசிய அவமானமாக பார்த்தாலும், சீனாவில் இது ஒரு எல்லைச் சண்டையாகத்தான் பார்க்கப்படுகிறது. அந்தப் போரில் சீனாவின் பதில் தாக்குதலுக்கு அஞ்சி இந்தியா விமானப் படையைக் கூட பயன்படுத்தவில்லை. தற்போதைய நிலையில் இந்தியப் படைகள் பெருமளவு பலப்படுத்தப்பட்டு விட்டன, எனவே மீண்டும் மோசமாகதோரு இராணுவத் தோல்வி நடக்க வாய்ப்பில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.
அதேநேரம் சீனப் பொருளாதாரத்தின் அளவு இந்தியாவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு பெரியது. சீனா தனது இராணுவச் செலவினங்களை கடந்த சில ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எல்லைப் பிரச்சனையை ராஜதந்திர ரீதியாக தீர்க்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்தியாவும் சீனாவும் தமது எல்லைப் பிரச்சனையை தீர்க்க பல சுற்று பேச்சுக்களை நடத்தினர். இரு நாடுகளும் இப்பிரச்சனையில் விட்டுக் கொடுக்க வேண்டும் ஆனால் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளின் உரிமையை மாற்றத் தேவையில்லை என்று இருநாடுகளும் 90களில் ஒரு ஒப்பந்தத்தை எட்டின. ஆனால் இதிலிருந்து சீனா பின்வாங்கிவிட்டது.
திபெத்திய புத்த மதத்தினரின் மிக முக்கியமான மடாலயம் அமைந்துள்ள தவாங் பகுதியை தனக்குத் தர வேண்டும் என்று சீனா கூறுகிறது.
சீனா கேட்கும் தவாங் பகுதி பிரம்புத்திரா ஆற்றுக்கு வடக்கே அமைந்துள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை கொடுக்க இந்தியா முன்வராது என்று தெரிந்தும், பேச்சுவார்த்தைகளின்போது பேரம் பேசுவதற்காக இக்கோரிக்கையை சீனா முன்வைப்பதாகக் கருதுகிறார் மோகன் குருசாமி.
" இந்தியாவும் சீனாவும் தற்போது தத்தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ஒட்டி எல்லைக் கோட்டை தீர்மானிக்க வேண்டும் என்ற யோசனையை மூன்று முறை சீனா முன்வைத்தது. ஆனால் அகாய்ச்சின் பகுதியை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த யோசனையை இந்தியாவால் ஏற்கமுடியவில்லை." என்றார் மோகன் குருசாமி.
"இந்தியா சீனாவை எதிரியாகப் பார்க்கவில்லை நண்பனாகத் தான் கருதுகிறது"
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகம் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் என்ற அளவைக் கடந்து விட்டது. இருந்தும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பது, பாகிஸ்தானுக்கு சீனா பெருமளவில் ஆயுதங்களை வழங்குவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்திவருகிறது.
இந்தியாவில் இருக்கும் திபெத்திய அகதிகளின் அரசியல் செயல்பாடுகள் குறித்து சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா சீனாவை எதிரியாகப் பார்க்கவில்லை நண்பனாகத் தான் கருதுகிறது என்கிறார் சென்னையைச் சேர்ந்த சீன ஆய்வாளர் டி எஸ் ராஜன். எல்லைப் பிரச்சனையை ஒத்திப்போட்டு விட்டு பிற விடயங்களில் உறவை மேம்படுத்தலாம் என்றே இரு நாடுகளும் கருதுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த இரு நாடுகளின் பொருளாதாரங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. அதேநேரம் எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட சில விடங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் கவலைதரும் அளவுக்கு அதிகமாகவே உள்ளன.

















No comments:
Post a Comment