Saturday, 2 June 2018

WHY YOU ARE ALWAYS OPPOSING DMK ? IS ADMK IS DIVINE -INDIAVASAN




WHY YOU ARE ALWAYS OPPOSING DMK ?
IS ADMK IS DIVINE
-INDIAVASAN



தேர்தல் முடிவுகள் இணையத்தின் போலிப் பூச்சுக்களைக் கழுவி விட்டிருக்கின்றன. திராவிடம் ஒழிக! மாற்றம் ஒன்றே இனி வழி என்றவர்கள் எல்லாம் இப்போது முழுமையாகாச் சந்திரமுகியாக சுயரூபம் காட்டுகிறார்கள்! அவர்களில் பெரும்பான்மை யாரென்று பார்க்கும்போதுதான் அந்த அதிர்ச்சி!

வழக்கம்போல் இதிலும் ஒரு திரை மறைவு நாடகம் நடந்து முடிந்திருக்கிறது!இத்தனை நாள் வெளியே நடுநிலை பேசியவர்கள் இன்று, “ஆம், நாங்கள் அம்மா ஆதரவாளர்கள்தான்!” என்று வண்ணம் கலைகிறார்கள்!

ஒருவர் தன்னிலை விளக்கமாக, நடுநிலை என்று ஒன்று இருக்கவே முடியாது! அம்மா அல்லது ஐயா ஆதரவாளராக இருப்பதே சாத்தியம் என்று விளக்கம் தருகிறார்!

ஆனால் ஏன் இதைத் தேர்தல் முடிந்தபின் சொல்கிறார்?
முன்பே சொன்னால் நோக்கம் சிதைந்துவிடக்கூடும் என்பதால்!

நம்மைப்போல் அவர்கள் எக்காலத்தும் ஓட்டுக்களை மாற்றிப்போடுவதே இல்லை!
எப்போதும் பெரும்பான்மை சிந்தாமல் சிதறாமல் அம்மாவுக்குத்தான்!

இன்றைய ஆட்சியை, அதன் அவலங்களை விமர்சிக்கும் யாரும், நாளை எந்த ஆட்சி வந்தாலும் அதையும் இதை விட வேகமாக, நேர்மையாக விமர்சிப்பார்கள்!
அதிமுகவை விமர்சிக்கும் பலரும் அதனினும் வேகமாக திமுகவை விமர்சிப்பதுண்டு!

அவர்கள்தான் உண்மை நடுநிலைவாதிகள்!
அவர்களுக்கு மறைமுகத் திட்டங்கள் ஏதும் இருப்பதில்லை!

இந்த ஆட்சி மோசம்தான் ஆனால் ..... என்று இழுப்பவர்கள் வேறுவகை!

திமுகவின் போன ஜென்மப்பிழை வரை விமர்சிக்கும் இவர்கள் அதிமுக அவலங்களை, திமுகவை இழுக்காமல் பேசியதே இல்லை!

அவர்களின் நோக்கமே திமுக மீண்டும் தலை தூக்கிவிடக்கூடாது என்பது மட்டும்தான்!

எதனால் கருணாநிதிமேல் இத்தனை வன்மமும் காழ்ப்பும்?
எந்த வகையில் ஜெயலலிதா அவரைவிட நல்லவர்?

இவ்வளவு மோசமான, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சிக்காமல், வீட்டிலிருக்கும் கிழவரின் வயது, ஒழுக்கம் பற்றியே அதிகம் விமர்சிக்கிறார்கள்?

எந்த நன்மையையும் செய்யாமலா அவரைத் தமிழர்கள் ஐந்துமுறை முதால்வர் ஆக்கினார்கள்? தேர்தலில் நின்ற பதின்மூன்று முறையும் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள்?

ஏறத்தாழ அறுபது ஆண்டுக்கும் மேலாகத் தமிழக அரசியல் அவரைச் சுற்றியே இயங்க, அவரது பங்களிப்பு ஏதும் இல்லையா?

பிறகேன், அந்த மனிதரின் "குற்றங்கள் மட்டும்" இங்கு அலசப்படுகின்றன?


அது தலைமுறை தாண்டிய வன்மம்.

அதுபற்றிப் பேசுமுன் இணையத்தில் அவர்பற்றி வைக்கப்படும் விமர்சனங்கள், அதே விஷயத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிலைப்பாடு இரண்டையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம்!

வாரிசு அரசியல்:

கருணாநிதி செய்த மாபெரும் வரலாற்றுப்பிழை, கட்சியே குடும்பம் என்ற நிலையிலிருந்து மாறி, குடும்பம்தான் கட்சி என்று ஆனது!

மனைவி, துணைவி இவர்களின் அர்த்தமற்ற வற்புறுத்தல் காரணமாக அருகதையே இல்லாத அழகிரி, எங்கோ நிம்மதியாக இருந்த கனிமொழி, இவர்களைக் கட்சிக்குள் திணித்தார்!

போதாக்குறைக்கு, மாறன் மீதான நன்றி உணர்ச்சியில் தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கியது இமாலயப்பிழை!

டெல்லி அரசியல் லாபியில் கொடிகட்டிப் பறந்தவர் முரசொலி மாறன்!
அவர் மறைவுக்குப்பின், தகுதி வாய்ந்த திருச்சி சிவா போன்றவர்களை ஒதுக்கி, தகுதியே இல்லாத இந்தச் சிறுவனை முன்னிறுத்தினார்!

அதன் தீவிளைவை அவரோடு கட்சியும் அனுபவித்தது!

நாற்பது வருடங்களுக்கு மேல் அரசியலில் இருக்கும் ஸ்டாலின், அரசியலில் நுழைந்தது வேண்டுமானால் வாரிசு என்பதால் இருக்கலாம்!

ஆனால் இன்று அவர் தன்னை ஒரு தலைவனாக நிலை நிறுத்திக்கொள்ளுமளவு தன்னை நிரூபித்துவிட்டார்!

இன்றைய முதல்வர் உட்பட அரசியலில் இருக்கும் பலரினும் அவருக்கு அனுபவம் அதிகம்!

ஆனாலும் இன்று அவரை வாரிசு என்றே விமர்சிப்பவர்கள், அம்மா எப்படி அரசியலுக்கு வந்தார் என்பதை வசதியாக மறந்து, மறைத்தே பேசுவார்கள்!

ஜெ வாரிசாக வந்தபோதே, அவரை உளவு பார்க்க வந்த பெண்மணியோடு, மன்னார்குடிக் கொள்ளைக் கும்பலின் ஒவ்வொரு வாரிசும் அரசியலில் ஆட்டம் போடுவதும், திவாகாரன், சுதாகரன், இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், எல்லாவற்றுக்கும் மேலாக சின்னம்மா என்று அரசியல் நிபுணர்கள் அதிமுகவை நிர்வகிக்க, அவர்களுக்குக் கட்சியில் இருக்கும் செல்வாக்கும், அடிக்கும் கொள்ளைகளும் ஊரறிந்த ரகசியம்!


திமுக மாவட்டச் செயலாளர்களின் வாரிசுகள் அடித்த லூட்டிக்கு நூறுமடங்கு அதிகம் அதிமுக மாவட்டக் குறுநில மன்னர்கள் அடிக்கும் கொள்ளை!

இதற்கு பணிவுச் செல்வத்தின் தம்பி ஒருசோறு பதம்!

இவர்கள் மாற்றாய்ச் சுட்டும் கட்சிகள் இன்னும் கேவலம்!
விஜயகாந்த் மைத்துனன் மந்திரிசபை இலாகாக்களை அறிவித்ததும்,
சீமான் மனைவி மாற்று வேட்பாளர் ஆனதும் அவல நகைச்சுவையின் உச்சம்!
அன்புமணி யாருடைய மகன் என்பது வாரிசில் வராது!?

வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு கருணாநிதி மேல் மட்டும் வைக்கப்படுவது உள்நோக்கம் காரணமாகவே என்பது வெளிப்படை!

ஊழல்:

இதில், கருணாநிதி நட்ட விதை, அம்மா ஆட்சியில் ஆலமரமாய் வளர்ந்தது! நாற்பது பர்சண்ட் அரசாங்கம் என்று உலகப் புகழ் பெற்றது இந்த அரசு! ஒரு சாதாரண மாவட்டச் செயலாளரும் கோடிகளில் புரள்வதும், அமைச்சர்கள் அம்பானிகளாக மாறியிருப்பதும் கண்கூடு!

சமீபத்தில் ஐந்து மூத்த அமைச்சர்களிடம் ஆயிரக்கணக்கான கோடிகள் அம்மாவால் பறிமுதல் செய்யப்பட்டது அவர் கட்சிக்காரர்களாலேயே பெரும் சாகசமாகப் புகழப்பட்டது! அது நிச்சயம் நேர்மையாக உழைத்துச் சம்பாதித்த பணமாகத்தான் இருக்கும்!

இந்தியாவிலேயே, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற முதல் முதல்வர் என்ற அவமானமான பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் அம்மா! தமிழர்கள் மானம் உலக அரங்கில் கொடிகட்டிப் பறந்தது!


1.7 லட்சம் கோடி உத்தேச இழப்பு என்பதை 1.7 லட்சம் கோடி ஊழல் என்றே திரித்தன ஊடகங்கள்!
இன்றுவரை அதன் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இங்கு தீர்ப்புகளே எழுதப்பட்டுவிட்டன!
அந்த விசாரணையை இழுத்தடிக்காமல் எதிர்கொள்கிறது திமுக!
பதினெட்டு வருடம் விசாரணையை இழுத்தடித்து அதிலும் சாதனை படைத்தார் அம்மா!
இன்று அந்தக் கத்தி உச்சநீதிமன்றத்தின் தலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது!

இடையில் விசாரணைக் கைதி ஆனார் தடம் மாறி அரசியலுக்கு வந்த கனிமொழி!
இரண்டுமுறை, வெவ்வேறு வழக்குகளில் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனைக் கைதியானார் அம்மா!

இரண்டையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதோடு, அம்மா செய்தது ஊழலே இல்லை என்றும் சாதிக்கிறார்கள் அம்மா ஆதரவு நடுநிலைகள்!

ஊழல் தராசில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதும் வெளிப்படை!

சுயதம்பட்டம்:

நெல்லுக்குக் கருணா என்று நாமகரணம் சூட்டிப் பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி!
ஆனால் அதிலும் அம்மா அறுபதடி பாய்ந்தார்!
அரசுப்பணத்தில் அத்தனை திட்டங்களிலும் அம்மா பெயர்!
சமீபத்து ஸ்டிக்கர்களும், மணமக்கள் நெற்றிப்பட்டைகளும் உலகப் பிரசித்தம்!
அம்மா கழிவறைகளும், அம்மா சாராயக்கடைகளும் மட்டுமே இன்னும் பாக்கி!

நிர்வாகச் சீர்கேடு:


அதிலும் சிகரம் தொட்டவர் அம்மா!
அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் விருப்பம்போல் பந்தாடுவதுதான் நிர்வாகத் திறமை என்றால், அதில் அம்மாவுக்கு ஈடு இணை இல்லை!
இன்றைய மின்சாரத்துறையின் அவல நிலையும், தாறுமாறாய் எகிறியிருக்கும் மாநிலத்தின் கடன் சுமையும், மாநிலத்தைவிட்டு ஓட்டம் பிடித்த முதலீடுகளும் அம்மாவின் அரிய சாதனைகள்!
சென்னை செயற்கைப் பேரிடர் போனஸ்!

தனி மனித ஒழுக்கம்:

இதில்தான் கருணாநிதி பெரிதும் தாக்கப்படுகிறார்.

அவருக்கு வெளிப்படையாய் ஒரு மனைவியும் துணைவியும் இருப்பது முக்கியத் தாக்குதல் காரணி!
அது முற்ற முழுக்க அவரது சொந்த விஷயம்!

மற்றபடி அவர் சின்னவயதுச் சேட்டைகள் இன்று எழுபது வருடங்களுக்குப்பின் கேவலமாக விமர்சிக்கப்படுவதின் உள்நோக்கம் என்ன?

கண்ணதாசனின் வனவாசம் வேதப்புத்தகமாகக் கொண்டாடப்படும் இணையத்தில், அம்மா அவரே எழுதிய வாழ்க்கைத் தொடர் ஏன் விவாதப் பொருள் ஆவதில்லை?

சோபன்பாபுவோடு கோயிங் ஸ்டெடி என்று அவர் புகைப்படத்தோடு எழுதிய தொடரைப் பதிப்பித்த அதே குமுதம் என்ற மஞ்சள் பத்திரிக்கைதான், கார்டூனிஸ்ட் பாலா என்ற வக்கிரவாதியை வைத்துக் குஷ்புவைப்பற்றிக் கார்ட்டூன் போடுகிறது!

கருணாநிதி குஷ்பு திருமணம் என்று வயிற்றுப்பிழைப்புக்கு விபச்சாரம் செய்யும் ஏடு அது!

எம்ஜியார் என்னை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்துவந்தார் என்று குமுறிய அதே பெண்மணிதான் எம்ஜியார் மறைவில் வேறு நாடகம் போட்டார்!

எம்ஜியார் என்னை மகளாகத் தத்தெடுத்துக்கொண்டார் என்றும், எம்ஜியார் என் கணவர் என்றும் ஒரே மாத இடைவெளியில் கூச்சமே இன்றி அறிக்கை விட்டார்!

எம்ஜியாரின் மறைவுக்குப்பின் அவர் மனைவியா, இல்லை மனைவி என்று தானே சொல்லிக்கொண்டவரா என்று பலப்பரீட்சை நடத்திய தேர்தலில் இருவரையுமே வீழ்த்தினார்கள் மக்கள்!

அப்போது அம்மாவை அரவணைத்துக் காப்பாற்றியவர்கள் திருநாவுக்கரசரும் கேகேஎஸ்எஸ்ஆரும் !

ஒரு மதி மயங்கிய சூழலில் தனக்கும், ஜெவுக்குமான உறவு பற்றி ஜெ முதல்வரானபின் KKSSRR உளறித் தொலைக்க, அப்போதுதான் தன்னை எம்ஜியாரின் உண்மை வாரிசு என்று நிரூபித்தார் ஜெ!

ராமாவரத் தோட்ட உத்தி என்ன வேலை செய்ததோ, ஒரே வாரத்தில் மனைவியோடு வந்து அம்மா காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்!

அதைப் பின்னாலிருந்து முழு அளவு புகைப்படமாக எடுக்கச் செய்து எல்லாப் பத்திரிக்கைகளிலும் மறுநாள் வரவைத்தார் அம்மா!

இந்தியன் எக்ஸ்ப்ரஸ் டெல்லிப்பதிப்பு அதிர்ந்துபோய் இதுபற்றி எழுதிய தலையங்கம் அப்போதைய பரபரப்பு!

இன்று மேலே பறக்கும் ஹெலிகாப்டருக்குத் தரையில் விழுந்து புரளும், அம்மா வாகனத்தின் டயரை சேவிக்கும், சாதாரணக் காட்சிகளுக்கு அதுதான் பிள்ளையார் சுழி!

தன்னைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகித்துக்கொண்ட ஆண்களை உளவியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்தக் காலில் விழும் கலாச்சாரத்தை ஜெ ஊக்குவிப்பது!

இத்தனை அவலங்களும் இவர்கள் கொண்டாடும் மனவாச காலத்துக்குப் பல பத்தாண்டுகளுக்குப் பின் நடந்தவை!
இதைப்பற்றி, கலைஞரின் குடும்ப வாழ்வை அலசும் யாரும் ஏன் பேசுவதே இல்லை?

சக மனிதர்களுக்கு மரியாதை:

இதைப்பற்றிப் பேச அதிமுகவினருக்கு இன்னும் அருகதை இருக்கிறதா?
மக்களால் சந்திக்கவே முடியாத மகாராணியை அவரது மந்திரி பிரதானிகள் சந்திப்பதோ, தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்வதோ களவிலும் நடக்காத விஷயம்!
திமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் விவாதம் அனல் பறக்கும்!
ஆனால் அம்மா முன் முணுமுணுக்கும் திராணி இருக்கிறதா இந்த மங்குனி மந்திரிகளுக்கு?
"அம்மாவின் செருப்பைப் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்" என்று புளகாங்கிதப் பேட்டி கொடுக்கிறார் இன்று திமுகவுக்குத் தாவிவிட்ட கொங்கு நாட்டுச் சிங்கம்!

இது ஒன்று போதும் பெருமாள் முருகனை ஓடவிட்ட இந்த ஆண்ட பரம்பரையின் உண்மை சுயமரியாதை சொல்ல!

இத்தனை அவலங்களை மீறி அம்மாவைவிடக் கூடுதலாக இவர்கள் ஏன் கருணாநிதியை வெறுத்து விமர்சிக்கிறார்கள்?

கருணாநிதி ஆட்சியில் நடந்த நல்லவை ஏன் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன?

சிப்காட்களும் டைடல் பார்க்குகளும் மேம்பாலங்களும் அரசு மருத்துவக் கல்லூரிகளும், அண்ணா நூலகம் போன்ற அறிவுச் சோலைகளும் திரை போட்டு மறைக்க முடியாதவை என்பது அவரை வேறு காரணத்தால் நிந்திக்கும் அறிவாளிகளுக்குத் தெரியும்!

தலைமுறைகளாய்த் தாங்களே உயர்ந்தவர்கள் என்று மூளைச் சலவை செய்து ஆண்டவர்களுக்கு வேறு வழி தெரியாதா என்ன?

எதைப்பற்றிப் பேசினால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பது அவர்களுக்கா தெரியாது?

வெறுப்புத் தீயை நையாண்டித் திரையால் மறைத்தார்கள்!

கருணாநிதியின் தனிமனித ஒழுக்கம், மனைவி, துணைவி, வாரிசுகள் என்பதைப் பிரதான காரணமாக்கி தொண்ணூற்று நான்கு வயதுக் கிழவரை, இரண்டு பெண்களுக்குத் தாயானவரோடு இணைத்துப் பேசினார்கள்!

கட்டுமரம், தள்ளுவண்டி என்று நையாண்டி செய்யப்படும் முதுமை இப்படிப் பேசும்போது மட்டும் இருபது வயது இளமை ஆனது!

முன்னாள் நடிகை என்பதால் அவர் ஒழுக்கம் கெட்டவராகத்தான் இருப்பார் என்றால், இதே அளவுகோல், குடும்பம், துணை என்று ஏதுமே இல்லாத முன்னால் நடிகைக்குப் பொருந்தாதா?

இதுதான் இவர்களின் தரம், இதைத்தான் சொல்லிகொடுத்தது இவர்களின் கல்வி, வளர்ப்பு எல்லாம்!

தாங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்தாவது அவரைத் தாழ்த்தும் அவசியம் இவர்களுக்கு என்ன?

காரணம் மிக எளிமையானது!

இன்றுவரை இவர்கள் அடிவயிற்றில் தீ மூட்டியிருப்பது இட ஒதுக்கீடும், சமூக நீதியும்தான்!

இட ஒதுக்கீட்டில் பலன் பெற்று முதல் தலைமுறை அரசு உயர் அதிகாரிகள் பதவிக்கு வந்தபோது இந்த ஆண்டவர்கள் செய்த விமர்சனங்களும் ஏளனங்களும் இன்றுவரை தொடரத்தான் செய்கிறது!

தன உயர்வு பிறப்பால் வந்தது என்ற மூட நம்பிக்கையும் உயர்வு மனப்பான்மையும் அடிவாங்கிச் சரிவதை அவர்களால் எப்படிச் சகித்துக்கொள்ளமுடியும்?

அந்த வலி, பழிவாங்க அவர்களுக்குக் காட்டியதுதான் இந்தக் கேவலமான வழி!

குறிப்பிட்ட அறிவுசார் தொழில்கள் தமக்கு மட்டும்தான் சொந்தம் என்று இறுமாந்திருந்தவர்கள் அந்த இடத்துக்கு மற்றவர்களும் வந்து தம்மினும் சிறப்பாக வெல்வதைப் பார்த்து வெம்பி வெதும்பிப் போகிறார்கள் .

அது, இந்த மாற்றத்துக்கெல்லாம் காரணி என்று தாங்கள் கருதுபவர்கள் மீது சாக்கடையை வாரி இறைக்கிறது!

இந்த மனநிலை படித்தவர்கள் உலவும் இணையத்தில்கூட மாறவில்லை என்பதுதான் அவல நிஜம்!

படிக்காத பாமரர்கள் மிகத் தெளிவாகத்தான் இருந்தார்கள்!

கீழ்மட்டத்திலிருந்து வந்த படித்த இளைஞர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு!

கொஞ்சம் படித்து ஒரு நிலைக்கு வந்ததும் தங்கள் இயல்பு மொழியை, பழக்கவழக்கங்களை வெறுத்து மாற்றிக்கொள்ள முனைவார்கள்!

தங்களைவிடப் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஜாதியினரைப் போலப் பேசும் உச்சரிப்புக்கு மாற்றிக்கொள்வார்கள்!

அவர்கள் பழக்க வழக்கங்களை, அவர்கள் உணவுப்பழக்கத்தை, அவர்கள் தொழும் கடவுள்களை சிலாகித்துத் தங்களை அவர்களைப்போல் காட்டிக்கொள்ள முயல்வார்கள்!

இது தன் ஜாதி, பிறப்பு பற்றி விதைக்கப்பட்ட தாழ்வு மனப்பான்மையின் பின்விளைவு!

இணையத்திலும் அதுதான் நடந்தது!

அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்!

எதையும் காரண காரியத்தோடு சுயமாக யோசிக்க மறந்தார்கள்!

இவ்வளவு கேவலமான ஆண்டான் அடிமை அரசை வெளிப்படையாக ஆதரிக்கக் கூசிய இளைஞர் படை, அன்புமணி, சீமான், வைகோ, விஜயகாந்த் என்று தனக்குக் கண்ணில் பட்டவர்களை மாற்றாக எண்ணி, அவர்களின் கடந்த காலச் செயல்பாட்டை சற்றும் ஆராயாமல் அவர்கள் பின்னால் போனது!
அவர்களை மறைமுகமாக வழி நடத்திய ஆண்டவர்களுக்கு இது இன்னும் வசதியாகப் போயிற்று!

ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறுவது கருணாநிதியை வராது தடுக்கும் என்பது அவர்களுக்குப் புரிந்தது!

தங்கள் நோக்கமும் நிறைவேறும், நடுநிலை முகமூடியும் பொருந்திப்போகும் என்று இரட்டை பலனை அறுவடை செய்ய முனைந்தார்கள்!

சந்தோசம் மறைத்த புன்னகையோடு இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்!

அவர்கள் கொஞ்சம் யோசிக்கிறார்கள் என்று பட்டால், 2ஜி, ஈழம், வாரிசு, கட்டுமரம் என்று மடை மாற்றிக்கொண்டே இருந்தார்கள்!

இப்படி இவர்கள் அலைமோதிக்கொண்டிருக்க, தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அம்மாவுக்குப் போட்டார்கள்!

தேர்தல் முடிந்த கையோடு, "இந்த மாற்றம் என்று வந்த கூட்டம் அடித்த கூத்தில் நம்பிக்கை இல்லாமல், மோசம் என்று தெரிந்தாலும் அம்மாவுக்குத்தான் வாக்களித்தோம்!” என்று லஜ்ஜையே இல்லாமல் சொன்னார்கள்!

வழக்கம்போல், அதையும் கேள்வி கேட்காமல் மந்தைகளாய் ஆதரித்தது இணையம்!

நினைத்ததை முடித்த நிம்மதியில் இன்று ஏகடியம் பேசுகிறார்கள்!

ஆனாலும், அவர்களுக்குப் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத் தூளைப்போல சில விஷயங்கள் உறுத்தின!

திமுக,அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களைப் பெற்றது! அவர்களின் ஆதர்ஷ நாயகியின் கட்சி பெரும்பான்மை பெற்றாலும் இரண்டு இடங்களில் டெபாசிட் இழந்தது!

திமுகவுக்கு விழுந்த வாக்குகள் மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் மாற்றிப்போட்டவை என்று கூசாமல் புளுகி, சுய ஆறுதல் அடைந்தார்கள்!

அவர்கள் எப்போதுமே இப்படித்தான்!

கருணாநிதி மட்டுமல்ல!
தலைமுறைகளாகத் தங்கள் ஆளுமையைக் கேள்வி கேட்ட எல்லோருமே அவர்களுக்கு விரோதிகள்தான்!

ஜாதி சார்ந்த வேறுபாடுகளை எதிர்த்து, இந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்களைக்கூட அவர்கள் மன்னித்துவிடுவார்கள்
ஆனால் உள்ளே இருந்துகொண்டே அதை உடைக்க முயலும் கலகக்காரகள் என்றும் அவர்களுக்கு என்றும் கசப்பானவர்களே!

அப்படி வந்த கசப்பு மருந்து பாரதி!

பூணூலை அறுத்தெறிந்துவிட்டு சேரிக்குக் குடி பெயர்ந்திருந்தால் பாரதி அவர்களால் மன்னிக்கப்பட்டிருப்பான்!

நீ உன் உயர்வு எதுவென்று நினைக்கிறாயோ, அதை இவர்களுக்கும் தந்து இவர்களை உங்களுக்கு இணையாக்குவேன் என்று சேரிக்குழந்தைகளுக்குப் பூணூல் அணிவித்தும், வேதம் கற்பித்தும் அவர்களுக்கு இணையாக உட்காரவைத்ததில் அவன் அவர்களுக்குப் பரம விரோதி ஆனான்!

"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே" என்று ஒரு பிராமணன் கூற்று அவர்களுக்கு சர்வாங்கத்தையும் எரித்தது!

அப்படிப்பட்ட தங்கள் முன்னோடியான பாரதியை, அவன் பிறந்த ஜாதியை வைத்து அங்கீகரிக்காமல் உதாசீனம் செய்தது திராவிடக் கட்சிகளின் மடமை!

இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று தன் முன் கூனிக்குறுகி வணங்கி நின்றவர்களைக் கை பிடித்து மேலே கூட்டிவரும் வேலையில் முனைப்புக் காட்டியதுதான் ஆரம்பகால திராவிடக் கட்சிகளின் மீதான அவர்கள் ஆத்திரத்தின் காரணி!

அதன் இன்றைய வாழும் கடைசி பிரதிநிதி கலைஞர் என்பது அவர்கள் வயிற்றில் தீ மூட்டுகிறது!

மதமாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் உயிர்ப்பலிக்குத் தடை என்ற நடவடிக்கைகள் அவர்களின் ஒளிவிளக்காக ஜெயை சுட்டிக்காட்டியது - தங்களவர் என்ற அடிப்படைத் தகுதிக்கு மேலாக!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தட்டில் விழும் பிச்சைக் காசுகளுக்காக அல்ல!

செய்யும் தொழிலை வைத்தே ஜாதிகள் தீர்மானிக்கப்படும் என்ற நிலையை மாற்றவே!
உன்பிறப்பு உன் தொழிலைத் தீர்மானிக்கும் இழிநிலை மாறட்டும், சில தொழில்கள் மட்டும்தான் புனிதமானது, அது சிலருக்கு மட்டுமே பிறப்புரிமை என்ற மூட நம்பிக்கை ஒழியட்டும் என்பதற்காகவே!

ஒருவன் வழிபடும் தெய்வம், சாப்பிடும் உணவு, செய்யும் தொழில் இவை அவனது உயர்வு தாழ்வைத் தீர்மானிக்கும் அவலத்தை மாற்றும் முயற்சி தங்கள் ஆதிக்க ஆணவத்தின்மீது விழும் பேரிடி என்றும், அதை முன்னெடுப்பவன் தங்கள் பரம் விரோதி என்றும் அவர்கள் நினைப்பது ஒருவகையில் புரிந்துகொள்ளக் கூடியதே!

ஆனால், தங்களைப் புதிய ஆதிக்க சக்தி என்று சொல்லிக்கொள்பவர்களும், இந்த மாறுதலால் பலன் பெற்ற குலத்தின் இளைஞர்களும் அவர்கள் வலையில் தாங்களே போய் விழுந்து, தங்கள் கைகளால் தங்கள் கண்களைக் குத்திக்கொள்ளும் அவலத்தை என்ன சொல்வது?

தங்கள் மீது திணிக்கப்படும் எதையும் அதற்கான காரண காரியத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் பகுத்தறிவை இந்தக் கல்விமுறை கற்பிக்காதது துரதிர்ஷ்டம்!

யாரையும் நீங்கள் கொண்டாடுங்கள்!

யாரையும் நீங்கள் தூற்றுங்கள்!

ஆனால், அதற்குமுன், வெறும் இரண்டு தலைமுறை வரலாற்றை ஊன்றிப் படியுங்கள்!

உங்கள் பாட்டனுக்கும், பூட்டனுக்கும் மறுக்கப்பட்ட உரிமைகளும், கல்வியும் உங்கள் முந்தைய தலைமுறைக்கும் உங்களுக்கும் தடையின்றிக் கிடைக்க, யார், எந்த இயக்கம் காரணம் என்று கேட்டறியுங்கள்!

பிறகு, அந்த அறிவால் முடிவெடுங்கள்!

இனி வரும் இளைஞர் பட்டாளமாவது சுயமாக யோசிக்கப் பழகட்டும்!

இல்லையேல் தலைமுறைகளாகத் தாங்கள் தோற்கடிக்கப்படும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வழக்கம்போல் வீழ்ந்துபடட்டும்!

indiavaasan at 09:25

SALEM WITCHCRAFT TRIAL ,Massachusetts USA






SALEM WITCHCRAFT TRIAL ,Massachusetts USA

சேலம் பேய்வழி நம்பிக்கை பற்றிய விசாரணைகள் 
பிப்ரவரி 1692 மற்றும் மே 1693 க்கு இடையில் காலனித்துவ மாசசூசெட்ஸில் நடைபெற்றது

Bridget Bishop is the first person to go to trial in the Salem witch trials in Salem, Massachusetts; IN 1692,JUNE 2. she was found guilty and later hanged..

இவற்றில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர் .
அதில் பெண்கள் 14 பேர் ஆண்கள் 6 பேர்

விசாரணை கைதியை இருக்கும் போதே ஐந்து பேர் இறந்தனர் .அதில் இருவர் குழந்தைகள்

ஒருவர் தூக்கிட்டு கொல்லப்பட்டனர் .Bridget Bishop
14 பேர் மொத்தமாக உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இந்தியாவில் இது போன்ற மந்திர தந்திரங்கள் தாராளமாக புழங்கி வந்துள்ளன .இதற்கு காரணங்கள் முட்டாள்தனமான சோதிட புத்தகங்கள் ,அவற்றின் நம்பிக்கைகளும் தான் .

வெளிநாடுகளில் இருந்து வரும் புத்தகங்கள் ஏற்கனவே ஆராய்ந்து பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை இதற்கென்று பல நிறுவனங்கள் ,உள்ளன . ஆனால் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் இதை ஆரம்பிக்கலாம் பிழைக்கலாம் .

குறிப்பாக திருமணப்பொருத்தம் என்பது . வெளிநாட்டு கொள்கைக்கும் நமது திருமண பொருத்தத்திற்கும் 
கிட்டத்தட்ட 90 % வரையில் தவறு உள்ளது .எனவே தான் நம் நாட்டில் 70 % திருமணங்கள் தோல்வியையே தழுவுகின்றன 
காரணம் தவறான வழிகாட்டி புத்தகங்கள்

MY OPINION

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

WITCHCRAFTஎன்றால் என்ன ?

"சூனியக்காரி" என்ற வார்த்தையானது பண்டைய ஆங்கிலோ-சாக்சன் வார்த்தையான "விக்கா " யில் தோற்றம் கொண்டது, இது "wise" என்ற வார்த்தையிலிருந்து "ஞானமானது" என்று பொருள்படும்

மந்திரவாதம் பல (பெரும்பாலும் முரண்பாடான) வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது, அவற்றில் சில மற்றவர்களை விட மிகவும் பயனுள்ளதாகவும் துல்லியமாகவும் உள்ளன. இவற்றில்:

மாயாஜால அல்லது மாய சக்திகள் பல்வேறு வகையான பயன்பாடு

ஒரு சமுதாயத்தின் மத முக்கிய வெளியீட்டிற்கு வெளியேயுள்ள மந்திரம் அல்லது மந்திரவாதியின் நடைமுறை:

சூனியம், மந்திரம் மற்றும் ஆத்மாவுடன் உடலுறவு நடைமுறை

சில வகையான இயற்கை அல்லது மாயாஜால சக்திகளின் பயன்பாடு

கிறிஸ்தவத்திற்கு எதிரான ஒரு கொடூரமான சதி

மனிதத் துரதிர்ஷ்டத்தை விளக்குகின்ற ஒரு கலாச்சார கருத்தியல்

மாயாஜால மற்றும் முன் ஜென்ம வினைகள் நடைமுறைகள், பொதுவாக ஆவிகள் அல்லது தெய்வங்கள், பின்புல வாழ்க்கை, மந்திரம் மற்றும் சடங்குகளை கையாளும்

ஒரு பக்திமிக்க,இயற்கை சார்ந்த மதம்,
சாத்தியமான பழைய கிறிஸ்துவ சம்பிரதாயங்கள் அனுசரிதல்

மந்திரவாதியின் வரையறையை மற்றும் அதனுடன் தொடர்புடைய நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றோடு தொடர்புடையது

மறைபொருள் ஆய்வும் occultism
முற்பிறவி பற்றி சொல்லுவது shamanism
சாத்தான் satanism
ரசவாதம், alchemy,
தத்துவம், theosophy
எஸோதெரிசிசம், esotericism
மூலிகை, herbalism
ஆன்மீகம், spiritualism
ஜோதிடம், astrology
இவை யாவும் தடை செய்யப்பட்டவை .இதை பயன்படுத்தி பிழைப்பவர்கள் விசாரணை செய்யப்பட்டு தண்டனை அளிக்க படுவர்

Convicted and executed[edit]

See also: List of people executed for witchcraft
Bridget Bishop (née Playfer; executed June 10, 1692)
Rebecca Nurse (née Towne; July 19, 1692)
Sarah Good (formerly Poole, née Solart; July 19, 1692)
Elizabeth Howe (née Jackson; July 19, 1692)
Susannah Martin (née North; July 19, 1692)
Sarah Wildes (née Averill; July 19, 1692)
George Burroughs (August 19, 1692)
George Jacobs, Sr. (August 19, 1692)
Martha Carrier (née Allen; August 19, 1692)
John Proctor (August 19, 1692)
John Willard (August 19, 1692)
Martha Corey (September 22, 1692; wife of Giles Corey)
Mary Eastey (née Towne; September 22, 1692)
Mary Parker (née Ayer; September 22, 1692)
Alice Parker (September 22, 1692)
Ann Pudeator (September 22, 1692)
Wilmot Redd (September 22, 1692)
Margaret Scott (September 22, 1692)
Samuel Wardwell, Sr. (September 22, 1692)
Convicted and died in prison[edit]

Convicted and died in prison[edit]
Ann Foster (née Alcock) – died in custody in December 1692
Convicted but escaped[edit]
Mary Bradbury (née Perkins)
Pardoned[edit]
Convicted and pardoned[edit]
Abigail Faulkner, Sr. (née Dane), who was pregnant
Dorcas Hoar, "confessed"
Elizabeth Proctor (née Bassett), who was pregnant
Sarah Wardwell, "confessed"



GHOST SEX,SPEECH IN EUROBE






GHOST SEX,SPEECH IN EUROBE




என்றாலும் இவை ஊர்ஜிதம் ஆன உண்மை

ஐரோப்பாவில் மந்திரம் ,ஆவியுடன் பேசுதல் ,ஆவியுடன் உறவு கொள்ளுதல் ஆகியவை 
நடைமுறையில் இருந்து வந்துள்ளன . ஆவியுடன் உறவு கொண்டு பிள்ளை பெற்ற ஒருவருக்கு 
மரணதண்டனை 1275 இல் பிரான்சில் தரப்பட்டுள்ளது

பிசாசுடன் வழக்கமாய் பாலியல் உடலுறவு கொண்டு தன் 46 வயதில் ஒரு ஓநாய் தலை மற்றும் ஒரு பாம்பு 
வால் கொண்ட பிள்ளையை பெற்றெடுத்தார் .என்று குற்றம் சாட்டியவர் உச்ச நீதிமன்ற நீதிபதி Inquisitor Hugues de Beniols

அசுரர்களின் ஒரே உணவு குழந்தைகளால் ஆனது, 
இது அங்கெல்லே டி லா பார்தேவால் கொல்லப்பட்டது அல்லது தொலைதூர தேவாலயங்களில் 
தங்கள் கல்லறைகளில் தோண்டியெடுக்கப்பட்டது

அசுரன் இரவின் நடுவில் ஓடிவிடுவதற்கு இரண்டு வருடங்கள் குழந்தைகளுக்கு உணவளித்ததாக அவர் ஒப்புக்கொண்டார் - பேயோட்டுடன் வர்த்தகமும், இதில் ஒரு நிலையான பணியாளராகவும் இருப்பதாக பெருமையடித்துக் கொண்டார்.

ஆங்கிள் டி லா பார்த் Angéle de la Bartheகுற்றவாளி எனக் கண்டறிந்து, துலூஸில் உள்ள பிளேஸ் செயிண்ட் ஸ்டீபனில் உயிருடன் எரித்தார்

ஆனால் இந்த சம்பவம் சரி என்பதை பெரும்பாலும் யாரும் ஒப்பு கொள்வதே இல்லை . என்றாலும் இவை ஊர்ஜிதம் ஆன உண்மை

Angéle de la Barthe was a prosperous woman of Toulouse, France, who was supposedly tried for witchcraft and condemned to death by the Inquisition in 1275. She has been popularly portrayed as the first person to be put to death for heretical sorcery during the medieval witch trials.

Born a noblewoman of Toulouse, France, de la Barthe was an adherent of Catharism, a Gnostic Christian sect deemed heretical by the Catholic Church. She was allegedly accused in 1275 by Inquisitor Hugo de Beniols of having sexual intercourse with the Devil (or an incubus) and giving birth to a flesh-eating monster with a wolf's head and a serpent's tail, whose sole food consisted of babies and young children. De la Barthe was accused of having either kidnapped and killed these children or of digging them up from graves, and was held responsible for the disappearance of many infants over the previous two years. Under torture, she confessed to having had sexual relations with Satan, and she was found guilty and burned alive.

Contemporary scholars have cast doubt on the truth of the Angèle de la Barthe story since there is no mention of her trial in the Toulouse records of the time and congress with demons was not yet a crime in 1275, and the 15th Century chronicle from which her story derives is now considered spurious.

QUARTERING ACT 1774 JUNE 2





QUARTERING ACT 1774 JUNE 2


நமக்கெல்லாம் குவாட்டர் பத்தி தெரியும் 
ஆனா QUATERING ACT பத்தி தெரியுமா ? 
அமெரிக்க சுதந்திர போருக்கு வழி வகுத்த காரணங்களில் இதுவும் ஒன்று 
AMENDED ON 1774 JUNE 2

இங்கிலாந்துக்காரன் ஒரு நாட்டை பிடிக்க என்ன சட்டம் வேண்ணாலும் போடுவான் .ஆனா பராமரிப்பு செலவெல்லாம் வேறொருத்தர் தலைல கட்டி விடுவான் .பலனை மட்டும் அனுபவிப்பான் .கர்நாடக போரில் மஞ்ச குளிச்சது பிரிட்டிஷ் காரங்க தான் .
ஆனா வாலாஜா முகமது அலிக்கு பில் போனது . அதே போல் ஒரு சட்டம் .அமெரிக்க காலனியில் 
இங்கிலாந்து துருப்புகள் நுழைந்தால் அவர்கள் செலவை காலனி அதிகாரிகள் தான் செலுத்தணும்


வீடுகள் ,பூட்டி கிடைக்கும் இடங்கள் ,மது விடுதிகள் ,மற்றும் குடியிருக்கும் வீடுகள் எங்கு வேண்டு மானாலும் தங்கலாம் .

This first Quartering Act[2] was given Royal Assent on May 15, 1765,[3] and provided that Great Britain would house its soldiers in American barracks and public houses,
as by the Mutiny Act of 1765, but if its soldiers outnumbered the housing available, would quarter them in "inns, livery stables, ale houses, victualing houses, and the houses of sellers of wine and houses of persons selling of rum, brandy, strong water, cider or metheglin", and if numbers required in "uninhabited houses, outhouses, barns, or other buildings."

Colonial authorities were required to pay the cost of housing and feeding these troops.

CORONATION OF ELIZABETH 2 1953,JUNE 2




CORONATION OF ELIZABETH 2- 1953,JUNE 2


இரண்டாம் எலிசபெத் CORONATION JUNE 2,1953

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.

அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள்.

சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.
இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை;

ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.

அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.
இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார்.

பெப்ரவரி 6, 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் இறந்தவுடன் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாக்கித்தான் மேலாட்சி, இலங்கை ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. 65 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; விக்டோரியா மகாராணியார் மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.[dated info]

எலிசபெத் இலண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் 1936ஆம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக வரிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947 இல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்: சார்லசு, ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.

எலிசபெத் யார்க் கோமகனாக இருந்த இளவரசர் ஆல்பெர்ட்டிற்கும் அவரது மனைவி எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக பிறந்தார். தனது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்று பெயர் சூட்டப்பட்டார். தனது நெருங்கிய குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார்.

அரசியின் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க வருகைகளிலும் சந்திப்புகளிலும் அயர்லாந்து குடியரசுக்கான அரசுப் பயணமும reciprocal visits to and from the திருத்தந்தையுடனான சந்திப்புக்களும் முதன்மையானவை. தனது ஆளுமைக்குட்பட்ட நாடுகளில் பல அரசியல்சட்ட மாற்றங்களை கண்டுள்ளார்; ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு மற்றும் கனடிய அரசியல் சட்டத்தின் திரும்பப் பெறல் போன்றவை. தனிப்பட்ட வாழ்க்கையில் பிள்ளைகளின் பிறப்பும் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைரவிழா (2012)க் கொண்டாட்டங்கள் முதன்மையான நிகழ்சிகளாகும்.

அரசியின் ஆட்சியில் முக்கிய நிகழ்வுகளாக வட அயர்லாந்து போராட்டங்கள், பாக்லாந்து போர், ஈராக் போர் மற்றும் ஆப்கானித்தான் போர்கள் விளங்குகின்றன. அவரது தந்தையின் மறைவு, இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபுவின் கொலை, 1992இல் பிள்ளைகளின் மணமுறிவுகள், 1997இல் அவரது மகனின் முன்னாள் மனைவி டயானாவின் மறைவு, தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தமாக அமைந்தன. அரச குடும்பம் மற்றும் குடியரசு கொள்கைகளுக்காக ஊடகங்களில் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டாலும் இவரது ஆட்சிக்கு மக்களின் முழுமையான ஆதரவு உள்ளதுடன் தனிப்பட்ட முறையிலும் பெரும் புகழ் பெற்றுள்ளார்.

NARGIS ,THE LEGEND, BORN 1929 JUNE 1






NARGIS ,THE LEGEND,
BORN 1929 JUNE 1



ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்ட 
'உலக சினிமாவின் சரித்திரம்' என்ற புத்தகத்தில் சினிமாவின் மேம்பாட்டுக்காக உழைத்த 140 பேரை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவை பொறுத்தமட்டில் எம்.ஜி.ஆர்., நர்கீஸ், சத்யஜித்ரே ஆகிய மூவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்திய சினிமா வரலாற்றி

ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்ட 'உலக சினிமாவின் சரித்திரம்' என்ற புத்தகத்தில் சினிமாவின் மேம்பாட்டுக்காக உழைத்த 140 பேரை வெளியிட்டு ள்ளது. அதில் இந்தியாவை பொறுத்தமட்டில் எம்.ஜி.ஆர்., நர்கீஸ், சத்யஜித்ரே ஆகிய மூவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய சினிமா வரலாற்றில் நர்கீஸின் பங்களிப்புக்கு இந்த ஒரு சான்றே போதுமானது.

இந்தியா சுதந்திரம் பெறும் முன் வட இந்திய திரையுலகில் 1930-களில் பட்டொளி வீசிப்பறந்த நடிகை தேவிகா ராணி. இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1950-களில் திரைவானில் விடிவெள்ளியாக மின்னியவர் நர்கீஸ்.


நர்கீஸின் வாழ்க்கை அவரது தாயைப் பின்னிப்பிணைந்தது. நர்கீஸ் தாயார் பெயர் ஜட்டான்பாய். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடைபெறாத காலம். பஞ்சாபில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, அலாகாபாத்தில் வளர்ந்தவர் ஜட்டான்பாய். இவர் ஒரு அற்புதமான உருது பாடகி. பல தனவந்தர்கள் வீட்டில் பாடி அமோகமான பேரும் புகழும் பெற்றிருந்தார்.

அப்போது அலகாபாத்திலிருந்து ஒரு சிறு நாடகக்குழு, கொல்கத்தாவில் ஒரு இசை விழாவில் பங்கெடுத்தது. ஜட்டான்பாய் இக்குழுவுடன் சென்றார்.

இந்த பயணம் அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நடன, இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கே.எல்.சைகால் (சொந்தக்குரலில் பாடி நடித்த சினிமா நடிகர். வட இந்தியாவின் தியாகராஜ பாகவதராகக் கருதப்படுபவர்).

ஜட்டான்பாயின் இசையைக் கேட்ட அவர், அதில் இழைந்தோடிய கிராமிய இசையையும், நெஞ்சை வருடும் மென்மையையும் கண்டு பாராட்டினார்.
இங்குதான் மற்றொரு முக்கியமானவரின் சந்திப்பு நிகழ்ந்தது.

காதல்

கொல்கத்தா இசையில் பங்கேற்றவர்களில் ஒருவர் மோகன்பாபு. பெரிய செல்வந்தர் வீட்டுப்பிள்ளை. பிறப்பில் ஒரு பிராமணர். பஞ்சாபைச் சேர்ந்தவர்.
ஜட்டான்பாயின் அழகிலும் குரலிலும் மயங்கிய மோகன்பாபு, அவரைத் தீவிரமாக காதலித்தார். அவரை திருமணம் செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

ஜட்டான்பாய் ஆரம்பத்தில் மறுத்தாலும், மோகன் பாபுவின் அபரிமிதமான காதல் அவர் உள்ளத்தில் ஆழமாக ஊடுருவி மோகன்பாபுவை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கச் செய்தது.

இதற்கு இரு பெரும் தடைகள் இருந்தன. முதலாவது ஒரு முஸ்லிம் பெண் ஒரு இந்து வாலிபனை எப்படி திருமணம் செய்து கொள்வது என்பது. இரண்டாவது முக்கியமானது. ஜட்டான்பாய்க்கு ஏற்கனவே திருமணமாகி அக்தர், அன்வர் என்ற இரு மகன்களும் இருந்தனர். எனினும் காதல் கடலில் மூழ்கிய மோகன்பாபுவுக்கு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. எப்படியும் ஜட்டான்பாயைத் திருமணம் செய்தே தீரவேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தார்.

கணவனைத் துறந்தாலும் மதத்தைத் துறக்க ஜட்டான்பாய் தயாராக இல்லை. இவ்விஷயத்தில் மோகன்பாபு தயக்கம் காட்டவே இல்லை. உடனே முறைப்படி இஸ்லாமை ஏற்று முஸ்லிமாக மதம் மாறினார். தன் முதல் திருமணத்தை முறித்துக்கொள்ள ஜட்டான்பாய்க்கு தடங்கல் ஏதும் இல்லை.எனவே ஜட்டான்பாய்-மோகன்பாபு திருமணம் 1928-ல் நடந்தது.

குழந்தை பிறந்தது

இவர்களுக்கு 1.6.1929-ல் கொல்கத்தாவில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.முஸ்லிம் முறைப்படி குழந்தைக்கு பாத்திமா அப்துல் ரஷீத் என்று பெயரிட்டு அழைத்தனர். ஆனால் குழந்தையின் தந்தை மோகன்பாபு இஸ்லாமைத் தழுவிய போதும் வெளி உலகில் முஸ்லிமாகவும், உள்ளத்து உணர்வில் இந்துவாகவும் வாழ்ந்தார். தன் அருமை மகளை 'தேஜேஸ்வரி' என்றே அழைத்தார்.

1. நர்கீஸ்

2. 'தலேஷே ஹாக்' என்ற படத்தில் நர்கீசின் தாயார் ஜாட்டன் பாய் நடித்த போஸ்டர்.

3. நர்கீஸ் தனது இளம் வயதில் 'பேபி ராணி' என்ற பெயரில் 'தலேஷே ஹாக்' என்ற படத்தில் நடித்தார்.

உணர்வுகள் எப்படி இருந்த போதிலும், மோகன்பாபு முஸ்லிம் மதத்தை மதித்ததுடன் ஜட்டான்பாய் வாழ்க்கை முறையில் தலையிட்டதில்லை. தவிர ஜட்டானை அனுசரித்து, அவரது முன்னேற்றத்திற்கும் உதவியாக இருந்து ஒரு சிறந்த கணவனாகவே வாழ்ந்தார். மோகன்பாபு மகள் தேஜேஸ்வரியின் வளர்ப்பில் அக்கறைக் காட்டினார்.

தன் பெண் படித்து பட்டம் பெற்று பதவியும், புகழும் பெறவேண்டுமென்பது மோகன்பாபுவின் அடங்காத ஆசை. குழந்தை வளர ஆரம்பித்தாள். படிக்கவும் தொடங்கினாள். தந்தையார் குழந்தையை அக்காலத்தில் கொல்கத்தாவிலிருந்த 'குயின் மேரீஸ்' என்ற செல்வந்தர்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் தரமான பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். குழந்தையும் படித்து வளர்ந்து 'கேம்பிரிட்ஜ் சர்ட்டிபிகேட்' பெற்றது.

பெண்ணை மேல்படிப்பிற்காக கல்லூரியில் சேர்க்க தந்தை நடவடிக்கைகள் எடுத்தார். இதற்கிடையில் கணவரின் ஆதரவினாலும் செல்வாக்கினாலும் ஜட்டான்பாய் பெரிய பாடகியாக வளர்ந்தார். 'போட்டோ போன்' போன்ற அக்கால பிரபல கிராமபோன் கம்பெனிகளுக்காக அவர் பாடி பதிவு செய்யப்பட்ட இசைத்தட்டுகள் வெளிவந்து அமோக விற்பனையானது.

மகள் 'தேஜேஸ்வரி'க்கு படிப்புடன் இசை மீதும் தாயைப் போலவே நாட்டம் உண்டு. அதற்கேற்ப குரலும் இனிமையாக இருந்தது. தனவந்தர்கள் இல்லங்களில் தாயுடனும், தனித்தும் பாடி பாராட்டுப் பெற்றார்.

திரை உலகம்

இப்போது ஜட்டான்பாய்க்கு திரைப்படங்களில் பாடி நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இவர் முதலாவதாக முக்கிய கதாபாத்திரம் தாங்கி நடித்த 'சேவா சதனம்' என்ற இந்திப்படம் 1934-ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் ஜட்டான்பாயுடன் ஸீபேடா, ஹாஜுமொடாக், ஜபாய் ஆகியோர் நடித்திருந்தனர்.

அதன்பின் திரைவாழ்க்கை தொடர ஜட்டான்பாய் தங்கள் குடும்பத்தாரோடு மும்பையில் மெரின் டிரைவ் பகுதியில் குடியேறினார். அங்கு சங்கீத் பிலிம்ஸ் தயாரித்த 'டாஸ்ஸி ஹாக்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் 1935-ம் ஆண்டு வெளிவந்தது.

ஜட்டான்பாய் இப்படத்திற்கு இசையும் அமைத்திருந்தார்.

இதனால், இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக திரைப்படத்திற்கு இசை அமைத்த பெண்மணி என்ற பெயர் பெற்றார்.

தவிர ஜட்டான்பாய் இப்படத்தில் சிறுமி தேஜேஸ்வரியின் பெயரை 'பேபி ராணி' என்று மாற்றி ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கவும் வைத்தார். இதுதான் வருங்கால நர்கீஸ், நடித்த முதல் படம்.

திரைப்படங்களில் வெற்றி குவிந்தது. ஜட்டான்பாய் புகழ் பரவியது. அன்றைய சினிமா உலகம் அவரது வீட்டை முற்றுகையிட்டது. காலம் உருண்டோட சிறுமியாக இருந்த தேஜேஸ்வரி வளர்ந்து வனப்புமிக்க வனிதையானார்.

சினிமா நடிகையான போதிலும் ஜட்டான்பாய் தன் மகளை கண்டிப்புடன் வளர்த்தார். கல்லூரி செல்லும் காலத்துக்காக காத்திருந்தார் தேஜேஸ்வரி.

'அந்தாஸ்' படத்தில் நர்கீஸ்-ராஜ்கபூர்-திலீப் குமார்

ஏனெனில் அடிப்படையில் அவளுக்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வமில்லை. ஆனாலும் அவர் நடித்தார்.

மெஹ்பூப்கான்

அக்காலத்தில் வட இந்தியாவின் பிரபல படத்தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் மெஹ்பூப்கான். இவர் ஓர் முஸ்லிம். சிறந்த கலா ரசிகர். தவிர ஆற்றல் மிக்கவர்.

இசை ரசிகராக மெஹ்பூப்கானுக்கு ஜட்டான்பாய் குடும்பத்தினரோடு தொடர்பு உண்டு. தேஜேஸ்வரியின் வளர்ச்சி, திறமை மெஹ்பூப்கானைக் கவர்ந்தது. திரையுலகில் அவளுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்குமென்று மெஹ்பூப்கான் கணித்தார். ஜட்டான்பாயிடம் பேசி தேஜேஸ்வரியை நடிக்க ஒப்புதல் வாங்கினார். மோகன்பாபுவும் அரைமனதாக சம்மதித்தார்.

பெயர் மாற்றம்

குழந்தை தேஜேஸ்வரியாக இருந்து சினிமாவில் 'பேபி ராணி' என்ற சிறுமியாக நடித்த இந்தப்பெண், இப்போது எழில் மங்கையாகத் திகழ்ந்தார். ஆகவே அவர் படத்தில் நடிப்பதற்கு சிறந்த பெயர் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 'ந' என்ற எழுத்து, அதிர்ஷ்டகரமானது என்பது மெஹ்பூப்கானின் நம்பிக்கை.

எனவே, பேபி ராணிக்கு 'ந'வை முதலெழுத்தாகக் கொண்டு 'நர்கீஸ்' என்ற புதிய பெயரைச் சூட்டினார். மெஹ்பூப்கான் தன்பெயரில் 'மெஹ்பூப் புரடெக்ஷன்ஸ்' என்ற ஒரு திரைப்படக் கம்பெனியைத் தொடங்கி இருந்தார். நர்கீஸைக் கொண்டு 'தக்தீர்' என்ற திரைப்படம் தயாரித்தார். இந்தப்படத்தில் நர்கீசுடன் அந்தகாலத்தில் புகழ்பெற்று விளங்கிய மோதிலால் மற்றும் சந்திரமோகன் என்ற இரண்டு கதாநாயகர்கள் நடித்தனர்.

'மதர் இந்தியா' படத்தில் நர்கீஸ், சுனில்தத், ராஜேந்திர குமார்.

நர்கீஸ் பண்பட்ட நடிகைபோல் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து வெகு இயல்பாக நடித்து ஸ்டூடியோவிலுள்ள அனைவரையும் வியக்கவைத்தார். அவரது நடிப்பில் புதுமை பொங்கியது.

1943-ம் ஆண்டில் நர்கீஸ் நடித்து வெளிவந்த 'தக்தீர்' மகத்தான வெற்றிபெற்றது. அடுத்து பஸ்லி சகோதரர்களின் 'இஸ்மெட்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் 1944-ம் ஆண்டு வெளிவந்து போனதோடு சரி. மறுபடியும் மெஹ்பூப்கான் தயாரித்த 'ஹ¨மாயூன்' என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படம்தான் நர்கீசின் நட்சத்திர அந்தஸ்தை நிலை நிறுத்தியது.

இதன் பிறகு நர்கீஸ் ஈலான், ரோமியோ-ஜுலியட், மெஹந்தி போன்ற படங்களில் நடித்தார். 1948-ம் ஆண்டில் நர்கீஸ் நடித்த 'அனோக்கிபியார், மேளா, ஆக் மற்றும் அஞ்சுமான்' ஆகிய படங்கள் வெற்றியைத் தேடிதந்தன. இந்த நான்கு படங்களில் 'ஆக்' திரைப்படம் நர்கீஸ் வாழ்க்கையில் பெறும் மாற்றத்தை உருவாக்கியது. அது என்ன?

ராஜ்கபூர்

'ஆக்' திரைப்படத்தில்தான் முதன் முதலாக நர்கீஸ்-ராஜ்கபூர் ஜோடி சேர்ந்தனர்.
ஏற்கனவே வெற்றி கதாநாயகர்களாக திகழ்ந்த மோதிலால், சந்திரமோகன் சகாப்தம் முடிவடைந்து, திலீப்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த் யுகம் தொடங்கியது. ஆனால் கதாநாயகியைப் பொறுத்தமட்டில் 1949-ல் நர்கீஸ் தான் முடிசூடா மகாராணியாகத் திகழ்ந்தார்.

இந்த ஆண்டில் மெஹ்பூப்கான் தயாரித்த 'அந்தாஸ்' திரைப் படமும், ராஜ்கபூர் தயாரித்த 'பர்சாத்' திரைப்படமும் அப்படங்களில் கதாநாயகியாக நடித்த நர்கீசுக்கு பெரும் புகழ் அளித்தது. 'அந்தாஸ்' திரைப்படத்தின் இசை அமைப்பாளரான நவுஷாத் அலியும், 'பர்சாத்' திரைப்படத்தின் இசையமைப்பாளர்களான சங்கர்-ஜெய்கிஷ்னும் படத்தின் வெற்றிக்கு துணை நின்றனர். இந்த இசையமைப்பாளர்களின் இன்னிசையில், லதாமங்கேஷ்கரின் குரலிசையில் நர்கீசின் நடிப்பும் இணைய இந்தியா முழுவதும் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

ஒரு நேர்காணலில், திரைப்பட உலகின் ஜாம்பவான் நடிகர் அசோக்குமார், 'நர்கீஸ§க்கு கவர்ச்சி கிடையாது. ஆனால் ராஜ் கபூரோடு சேர்ந்து நடிக்கும்போது நம்மை முழுமையாக ஈர்த்துவிடுகிறார். அவர்களது காதல்கதை பிரசித்தி பெற்றது. திரையுலகை ஒளிரச் செய்தது' என்று கூறியுள்ளார்.

ஒரு முறை ராஜ்கபூர், 'நர்கீஸ் என்னை அறிவார். நானும் அவரை அறிவேன்' என்று தங்கள் நிலையை ரத்தினச் சுருக்கமாகக் கூறி முடித்துக் கொண்டார்.

நர்கீஸ்-ராஜ்கபூர் ஜோடிக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்தது. சினிமா உலகமும் அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்த ஜோடி தொடர்ந்து நடித்த படங்கள் ஆக், அந்தாஸ், பர்சாத், ப்யார், ஜான்பெஹஜான், ஆவாரா, அம்பர், பேவப்பா, அன்ஹோனி, ஆஸ்ஸியான், ஹா. தூன், பாப்பி, ஸ்ரீ420, சோரி சோரி, ஜக்தே ராஹோ.

இதில் ராஜ்கபூரின் ஆர்.கே. ஸ்டூடியோவைத் தவிர இதரத் தயாரிப்பாளர்களின் படங்களும் அடங்கும். 1950-ம் ஆண்டில் நர்கீஸ் நடித்து 'பீஷ்ம பிரதிக்ஞா' என்ற புராணப்படம் வெளிவந்தது. இதுவே நர்கீஸ் நடித்த முதலும் கடைசியுமான புராணப்படம்.

இதே ஆண்டில் நர்கீஸ் நடித்து வெளிவந்த சமூகச் சித்திரம் 'சோட்டி பாபி'. இப்படம் படித்த புதுமைப் பெண்களின் திறனை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டியது.

எதிர்ப்பில் வளர்ந்த காதல்

இப்போது ராஜ்கபூரின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி சற்று அறியலாம். ராஜ்கபூரின் தந்தை பிருத்திவிராஜ் கபூர் மிகப் புகழ்பெற்ற நடிகர், தயாரிப்பாளர். தன்னுடன் பிறந்த சகோதரியின் மகளான கிருஷ்ணா என்ற பெண்ணை ராஜ்கபூருக்கு 1946-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான பிறகு நான்கே மாதங்களில் ராஜ்கபூருக்கு நர்கீஸ் அறிமுகமானார். நர்கீஸ்-ராஜ்கபூர் தொடர்புக்கு தொடக்கத்திலேயே எதிர்ப்புக்குரல் எழுப்பியது ஜட்டான் பாய்தான். இந்த எதிர்ப்பு 'ஆக்', 'பர்சாத்' படத்தில் இருவரும் நடித்துக் கொண்டிருக்கும் போதே எழுப்பப்பட்டதாகும்.

நர்கீஸ்-ராஜ்கபூருடன் படப் பிடிப்புக்காக வெளியூர் செல்லும் போதெல்லாம் ஜட்டான் பாயும், சகோதரர் அக்தரும் உடன் சென்றனர்.

ஆனால், நர்கீசின் தந்தை மோகன்பாபு 1948-ல் காலமாகிவிட்டார்.

ஜட்டான்பாயும் 1950-ல் இறந்துவிட்டார். இந்த எதிர்ப்பாளர்கள் மறைவினால் நர்கீஸ்-ராஜ்கபூர் காதல் வெளிப் படையாகத் தெரிய ஆரம்பித்தது. நர்கீசை பொறுத்தமட்டில் தடை நீங்கிவிட்டாலும் ராஜ்கபூர் தரப்பில் அவரது குடும்பம் இந்தக் காதலை கடுமையாக எதிர்த்தது.

ராஜ்கபூரின் இளம் மனைவி கண்ணீரால் கரைந்தார். தற்கொலைக்கும் முயன்றார்.

எனினும் தன் குழந்தைகளுக்காகவாவது கிருஷ்ணா வாழ வேண்டிய அவசியம் இருந்தது. பிருத்திவிராஜ் எவ்வளவு புத்திமதி கூறியும், ராஜ்-நர்கீஸ் காதல் நீடித்தது.

நர்கீஸ்-ராஜ்கபூர் காதலை குடும்ப நண்பர்களும் ரசிகர்களும் ஆதரித்தனர். பிறவியிலேயே நர்கீஸ் அபார தைரியமும், அயராத முயற்சியும் கொண்டவர். அப்போது மும்பையைச் சேர்ந்த மொரார்ஜ்தேசாய் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். மொரார்ஜ் தேசாய் ஏற்கனவே இந்துக்கள் திருமணச் சட்டத்தில் முற்போக்குத் திருத்தங்கள் செய்ய முயன்று வந்தார்.

இதைக் கருத்தில் கொண்டு தேசாயின் உதவியை பெறலாமென எண்ணி நர்கீஸ் அவரை சந்தித்து, 'நான் ராஜ்கபூரை திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறேன்' என்று தயங்கியவாரே சொன்னார். தேசாய் கோபப்பட்டு நர்கீசை அறையை விட்டு உடனடியாக வெளியேறச் சொல்லிவிட்டார். எனினும் நர்கீஸ் மனம் மாறவில்லை.


மஞ்சள் கயிறு

31.12.1949 நள்ளிரவு முடிந்து 1950-ம் ஆண்டு பிறந்தது. அன்று நர்கீஸ்-ராஜ்கபூர் சந்திப்பு நிகழ்கிறது. நர்கீசின் வற்புறுத்தலின் பேரில், 'ராக்கி' யாக கையில் கட்ட வேண்டிய மஞ்சள் கயிற்றை ராஜ்கபூர் நர்கீசின் கழுத்தில் கட்டினார். 'நான் ராஜ்கபூரின் மனைவியாகிவிட்டேன்' என்று ஆனந்தத்தில் நர்கீஸ் குதித்தார்.

நர்கீஸ் மனோரீதியில் ராஜ்கபூரின் உண்மையான காதலி. ஆனால், ராஜ்கபூரோ எதையும் எளிதாகவும் விளையாட்டாகவும் எடுத்துக்கொள்ளும் ஒரு 'ஷோ மேன்'. ஆகவே, ராஜ்கபூர் தன் மனைவி கிருஷ்ணாவை துறக்க விரும்பவில்லை.

நர்கீசுடன் ராஜ்கபூர் உறவு தொடர்ந்ததற்கு காதலைத் தவிர மற்றுமொரு முக்கிய காரணம் இருந்தது. அதுதான் நர்கீஸ்-ராஜ்கபூர் ஜோடிக்கு மக்களிடையே இருந்த மவுசு. அதனால் திரைப் படங்கள் அடைந்த வெற்றி.ஆனால் இப்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. ராஜ்கபூரின் கவனம் தென்னிந்திய நடிகைகளான வைஜயந்திமாலா, பத்மினி முதலானோர் பக்கம் திரும்பியது. ராஜ்கபூரின் புதிய ஜோடி வைஜயந்திமாலாவுக்கு இந்திப்படங்களில் வரவேற்பிருந்தது. இது ராஜ்கபூரின் எண்ணம் திசைமாறியதற்கு ஒரு காரணமாயிருந்தது.

தவிர தனது திரையுலக போட்டியாளரான திலீப்குமாருடன் நர்கீசை ஜோடி சேர்த்து 'மொகல்-ஏ-ஆஸாம்' என்ற பிரமாண்டமான திரைப்படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பாளர் கே.ஆசிப் முடிவு செய்திருந்தது ராஜ்கபூருக்கு தெரியவந்தது. உடனே அதில் தலையிட்டு, நர்கீஸ் அப்படத்தில் நடிப்பதை நிறுத்தினார். பிரமாண்டமான இப்படம் கை நழுவிப் போனது நர்கீசுக்கு பெரும் தொழில் பாதிப்பை ஏற்படுத்தியது.

போதாததற்கு நர்கீசின் குடும்ப நண்பரான மெஹ்பூப்கான் தான் திலீப்குமாரை வைத்து தயாரித்து வரும் முழு நீள கலர் படமான 'ஆன்' திரைப்படத்தில் கால்ஷீட் பிரச்சினை ஏற்படுமெனக்கருதி, நர்கீசை நீக்கி அதற்கு பதிலாக 'நிம்மி'யை நடிக்க வைத்து படம் எடுத்தார். இது இடிமேல் இடியாக நர்கீஸின் தலையில் விழுந்தது.

நர்கீசுக்கு உண்மைகள் புலர ஆரம்பித்தன. ராஜ்கபூர் தன்னை சினிமாவில் நடிக்க பயன்படுத்திக் கொண்டாரே தவிர வாழ்க்கையில் இல்லை என்பதை நர்கீஸ் புரிந்து கொள்ளத் தொடங்கினார்.

எனவே ராஜ்கபூரின் ஆர்.கே. ஸ்டூடியோவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். முடிவில் ராஜ்கபூருடனான உறவையும் முறித்துக் கொண்டார்.

இதன்பின் 'அதாலத்', 'கர்ஸன்ஸார்', 'லஜ்வந்தி' ஆகிய படங் களில் பிற கதாநாயகர்களுடன் நடித்தார். அப்படங்களும் வெற்றிகரமாக ஓடின.
நர்கீஸின் நிலைமை சீர் அடைந்ததால் குடும்ப நண்பர் மெஹ்பூப்கான் தான் தயாரிக்கும் 'மதர் இந்தியா' என்ற படத்தில் நர்கீசுக்கு முக்கிய பாத்திரம் அளிக்க முடிவு செய்தார்.

தயாரிப்பாளர் மெஹ்பூப் கான், சர்தார் அக்தர் என்ற நடிகையைக்கொண்டு 1940-ம் ஆண்டில் 'அவுரத்' (பெண்) என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டார். இப் படத்தின் மறுபதிப்பே அவர் தயாரிக்க முயன்ற 'மதர் இந்தியா' திரைப்படமாகும். சர்தார் அக்தரின் பாத்திரமே நர்கீஸ் ஏற்றது. ஆனால் அது வயது முதிர்ந்த தாயார் கதாபாத்திரம். இந்த பாத்திரத்தை நர்கீஸ் ஒரு சவாலாக ஏற்று நடித்தார்.

இந்தியாவின் கலாசாரப் பண்பாட்டைக் காக்க வயது முதிர்ந்த ஒரு இந்தியப் பெண்மணி அனுபவிக்கும் கொடுமைகளையும், செய்யும் தியாகத்தையும் சித்தரிப்பதே 'மதர் இந்தியா' திரைப்படத்தின் கதைக்கரு. திரைப்படத்திற்கு தந்தை, பிள்ளைகள் பாத்திரத்தில் நடிக்க நடிகர்களை தேர்வு செய்வதில் மெஹ்பூப்கானுக்கு குழப்பம் ஏற்பட்டது.

இறுதியாக நர்கீசின் கணவனாக நடிக்க ராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நர்கீசின் ஒரு மகன் பாத்திரத்திற்கு நடிகர் ராஜேந்திரகுமார் தேர்வு செய்யப்பட்டார். நர்கீசின் மற்றொரு மகனாக நடிக்க நடிகரை தேர்வு செய்வது சிக்கலாக இருந்தது. கடைசியில் நர்கீஸைவிட ஒரு வயது குறைவான வாலிபனாயிருந்த சுனில்தத் தேர்வு செய்யப்பட்டார்.

பொதுவாக மெஹ்பூப், தன் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கிடையே பரஸ்பர நட்பு இருந்தால்தான் நடிப்பில் கூட்டு முயற்சி இயல்பாகவும் சிறப்பாகவும் அமையும் என்று கருதுபவர். அதனால் பெரும்பாலும் படப்பிடிப்பை வெளியூர்களில் நடத்துவார். படப்பிடிப்பிற்கிடையேவும், முடிந்த பின்னும் நடிக-நடிகைகள் கலந்து பேச அதிக வாய்ப்பு கிடைத்தது.


தாயாக நர்கீசும், மகனாக சுனில்தத்தும் உணர்ந்து நடித்தனர், உருகி நடித்தனர். 1957-ம் ஆண்டில் வெளிவந்த 'மதர் இந்தியா' மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

ஒரு சமயம் சுனில்தத்தின் சகோதரியின் மகள் காச நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். நர்கீஸ் அந்தப் பெண்ணை தன் வீட்டுக்கு கொண்டுவந்து, மருத்துவ சிகிச்சை அளித்து குணப்படுத்தினார். அது முதல் இரு குடும்பத்தின ருக்கும் இடையே பாசமும், நேசமும் வளர்ந்தது.

சுனில்தத்தின் சகோதரியான ராணியின் வீட்டுக்கு நர்கீஸ் அடிக்கடி சென்றார். ஒருநாள் ராணியின் வீட்டிலிருந்து நர்கீஸை காரில் அழைத்துப்போன சுனில், வழியில் தான் அவரை மணக்க விரும்புவதாகச் சொன்னார். பதிலேதும் சொல்லாமல் நர்கீஸ் தன் வீடு சென்றார்.

மறுதினம் ராணியைக் கலந்தாலோசித்து சுனிலைத் திருமணம் செய்துகொள்ள நர்கீஸ் சம்மதம் தெரிவித்தார். இந்த திருமணத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுனில்தத்தின் தாயார் சற்று பிற்போக்குவாதி. அவர் முஸ்லிமான நர்கீஸை ஏற்பாரோ என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு இருந்தது. மாறாக நர்கீசின் முகம் பார்த்து, சுனிலின் தாயார் திருப்தியடைந்தார்.

'என் மகனை இவள் நன்றாகப் பார்த்துக் கொள்வாள்' என்று தன் திருப்தியை வெளிப்படுத்தினார்.


காதலித்த ராஜ்கபூர் கைவிட்ட போதிலும் தன்னிலும் வயதில் சிறியவரும், சினிமாவில் தனக்கு மகனாக நடித்தவருமான சுனில்தத்தை நர்கீஸ், 11.3.1958-ல் மும்பை சாந்தாகுரூஷ் பகுதியிலிருந்த ஆர்யசமாஜம் ஹாலில் திருமணம் செய்து கொண்டார். சுற்றமும், நட்பும் சூழ வந்து வாழ்த்தி இனிதே திருமணத்தை நடத்தி வைத்தனர்.

நர்கீஸ்-சுனில்தத் இனிய இல்லறத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தனர். மும்பையின் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவரும், பின்னர் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி 6 ஆண்டு சிறைதண்டனை அடைந்தவருமான சஞ்சய் தத், இவர்களது மகன்தான்.

நெருப்பில் இருந்து காப்பாற்றினார்


'மதர் இந்தியா' படப்பிடிப்பின் போது நெருப்பு பற்றிக்கொள்ளும் காட்சி ஒன்றில் நர்கீஸ் நடித்தார். அப்போது அவர் நெருப்புக்குள் சிக்கிக்கொண்டார். அந்த நேரத்தில் சுனில் தத் தைரியமாக நெருப்புக்குள் பாய்ந்து சென்று நர்கீசை காப்பாற்றினார். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சுனில் தத் மீது நர்கீசுக்கு காதல் பிறந்தது.
இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் 'டார்லிங் ஜி' என்று அழைத்துக்கொள்வார்கள்.

தற்கொலை திட்டம்

நடிகர் ராஜ்கபூருடன் ஏற்பட்ட காதல் முறிந்ததைத்தொடர்ந்து நர்கீஸ் சோகத்துடன் இருந்தார். இந்த காதல் தோல்வியை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளவும் அவர் முடிவு செய்திருந்தார். அந்த நேரத்தில் தான் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்த சுனில்தத்திடம் இதை நர்கீஸ் கூறினார். அப்போது சுனில்தத், 'நீ வாழவேண்டும்' என்று தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறினார். இதன் மூலம் மனமாற்றம் ஏற்பட்டு தற்கொலை முடிவை கைவிட்டதாக நர்கீஸ் தனது டைரியில் எழுதி இருக்கிறார்.