இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி
வி.வி .கிரி பிறப்பு 1894 ஆகஸ்ட் 10
வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி வேங்கட கிரி (10 ஆகஸ்ட் 1894 - 23 ஜூன் 1980)இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார்.
பிறப்பு முதல் பட்டம் வரை[தொகு]
முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி .இன்னகரமும் அதன் மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது.இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல்.
1913-ஆம் ஆண்டு டுப்ளின்-இல் உள்ள உநிவர்சிட்டி கல்லூரிக்கு சட்டம் பயில சென்றார்.ஆனால் 1916 -ஆம் ஆண்டு அயர்லாந்து -இல் உள்ள சின் பியன் இயக்குத்துடன் இவர் கொண்ட தொடர்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஈடுபட்டால் அவருக்கு எமன் தே வலேரா , மைகேல் கோல்லின்ஸ்,பாட்றிக் பியர்ஸ் , தேச்மொண்டு பித்ச்கரல்து ,எஒஇன் மச்நேஇல் ,ஜேம்ஸ் காங்நோல்லி மற்றும் பலருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
பிறந்த நாள்: | 10 ஆகஸ்ட் 1894 |
---|---|
இறந்த நாள்: | 23 ஜூன் 1980 |
இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவி வரிசை: | 4 ஆவது குடியரசுத் தலைவர் |
தற்காலிகமாக | |
பதவி ஏற்பு: | 3 மே 1969 |
பதவி நிறைவு: | 20 ஜூலை 1969 |
முன்பு பதவி வகித்தவர்: | ஜாகீர் உசேன் |
அடுத்து பதவி ஏற்றவர்: | முகம்மது இதயத்துல்லா |
First Term | |
பதவி ஏற்பு: | 24 ஆகஸ்ட் 1969 |
பதவி நிறைவு: | 24 ஆகஸ்ட் 1974 |
முன்பு பதவி வகித்தவர்: | முகம்மது இதயத்துல்லா |
அடுத்து பதவி ஏற்றவர்: | பக்ருதின் அலி அகமது |
தொழில்[தொகு]
தாயகம் திரும்பியதும் , அவர் தொழிலாளர் இயக்கத்தில் பொது செயலராக பெரிதும் ஈடுபட்டார். பின்பு அகில இந்திய தொடர்வண்டிதொழிலாளர்கள் பேரவையின் அதிபராகவும் மற்றும் அகில இந்திய தொழில்சங்க அவையின் அதிபராக இருமுறை பதவி வகித்தார்.
கிரி பேரரசுக்குரிய சட்டபேரவையில்
1934-ஆம் ஆண்டு உறுப்பினரானார்..
1936-ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில் , கிரி காங்கிரஸ் வேட்பாளராக போப்பிளியின் ராஜாவை எதிர்த்து போப்பிளியிலே போட்டியிட்டு வென்றார். மதராஸ் பிராந்தியத்தில் சி. ராஜகோபாலச்சாரி அமைத்த காங்கிரஸ் அரசில் 1937-ஆம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சர் ஆனார்.
1942-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்துக்கு ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்குதுக்கே திரும்பினார் . ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது.
இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் , அவர் இலங்கைக்கு உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் . அதன் பின் 1952- ஆம் ஆண்டு சட்டசபைக்கு போட்டியிட்டார்.முதல் லோக் சபாவிற்கு பதபத்னம் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.1954-ஆம் ஆண்டு ராஜினாமா செய்யும் வரை தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்தார்.
உத்தர பிரதேசம்(1957-1960) , கேரளா(1960-1965) மற்றும் மைசூர் (1965-1967)மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார்.
1967-ஆம் ஆண்டு இந்தியாவின் துணை-அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர் ஹுச்சைனின் பதவிக்கால மரணத்தினால் 1969-ஆம் ஆண்டு கிரி தற்காலிக அதிபர் ஆனார். அதிபர் பதவிக்கான தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்திரா காந்தியின் அரசோ நீளம் சஞ்சிவ ரெட்டியை ஆதரித்தது , எனினும் இந்திரா காந்தி அவர்களின் கடைசி-நிமிட முடிவு மாற்றத்தால் இவரே 1974-ஆம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றினார்.
இந்தியாவின் தலைசிறந்த விருதான , பாரத ரத்னாவை 1975-ஆம் ஆண்டு பெற்றார் கிரி.
கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்" மற்றும் "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்" போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.
No comments:
Post a Comment