T.K.Bhagavathi

T.K.பகவதி- பழம்பெரும் குணச்சித்திர நடிகர்.
நாடகத்தாய் பெற்ற கலைஞர்கள் பலருக்கு, வளமும் வாழ்வும் கொடுத்துவரும் வளர்ப்புத் தாயாக விளங்குவது திரைப்படம்.
நாடக நால்வர் எனப் புகழ்பெற்ற ரி.கே.எஸ்.சகோதரர்களில் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் ரி.கே.பகவதிதான்.
1935-இல் “மேனகா” முதல் 1980-இல் “ஆறிலிருந்து அறுபது வரை” மட்டும் 45 ஆண்டுகளாக நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பல வகையான முக்கிய பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ரி.கே.பகவதி.
அவருடைய எடுப்பான திஓற்றமும், மிடுக்கான நடையும், கனமான குரலும், ஈடற்ற ராஜபார்ட் நடிகர் என்ற புகழைத்தந்தன. ராஜபர்த்ரு ஹரியாகவும், இராவணனாகவும், ராஜ ராஜ சோழனாகவும், மகேந்திரப் பல்லவச் சக்கரவர்த்தியாகவும், பல்வேறு சமூகப் பாத்திரங்களாகவும் நாடகவுலகில் பவனி வந்தவர். திரையுலகிலும் தனக்கென ஒரு தனியான பாணியில் வெற்றி பெற்றார். அப்பா வேடங்களில் பெரும்புகழ் பெற்ற இருவரில் எஸ்.வி.ரங்காராவ் ஒருவர். அடுத்து ரி.கே.பகவதி. மிடுக்காகவும் கலகலப்பாகவும் அக்கதாபாத்திரங்களில் செயற்கைத் தனமின்றி ஒன்றி விடுவதில் இவ்விருவரும் தன்னிகரல்லாது விளங்கினர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் “பணமா பாசமா” படத்தில் மனைவிக்குக் கட்டுப்பட்ட கணவனாக எஸ்.வரலெட்சுமியின் கணவராகவும் சரோஜாதேவி, நாகேஷின் தந்தையாகவும் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டார் என்றார் என்றால் அது மிகையில்லை.
மேனகா, ரத்தபாசம், மனிதன், இன்ஸ்பெக்டர், சபதம், பணமா பாசமா முதலான சமூகப் படங்களில் பகவதியின் திறமை ஒளி வீசிய போதிலும், எம்.ஏவி. பிக்சர்ஸ் உருவாக்கிய சம்பூர்ண ராமாயணத்தில், அவர் இராவணனாகப் பீடு நடைபோட்ட பெருமையை ரசிகர்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள்.
நாடகத்தில் “சோழன்” பகவதியாக விளங்கியவர் திரைப்படங்களில் “இராவணன்” பகவதியாகப் புகழ் பெற்றார்.
நடிப்பின் மூலம் மாமன்னராக செங்கோல் செலுத்திய பகவதி, சொந்த வாழ்க்கையில் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்து சக நடிகர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
கலை வாழ்வில் ரி.கே.சண்முகம், தம்பி பகவதியும் இரட்டையர் போலவே உலா வந்தார்கள். எனவே, ஔவை சண்முகம் 1973-இல் மறைந்தபின், தன் வலிமையில் பாதி மறைந்தது போலவேதான் பகவதி வாழ்ந்து வந்தார்.
1972-இல் தஞ்சாவூரில் ராஜ ராஜ சோழன் சிலை திறப்பு விழாவில்தான் ரி.கே.எஸ். சகோதரர்களின் ராஜ ராஜ சோழன் நாடகம் கடைசியாக நடத்தப்பட்டது. அதற்குப்பின் ரி.கே.எஸ். நாடகக்குழு இயங்கவில்லை. வாழ்நாள் முழுவதையும் நாடகக்கலைக்கே காணிக்கையாக்கிய பகவதிக்குத் தங்கள் நாடகக் குழுவைத் தொடர்ந்து இயக்க முடியவில்லையே என்ற கவலை வாட்டிக் கொண்டேயிருந்தது.
எனவே, இறுதி மூச்சுவரை நாடகச் சிந்தனையுடனேயே மறைந்து விட்டார் அந்த முதுபெரும் நடிகர்.
நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்த ரி.கே.எஸ். சகோதரர்களைப் போன்ற தரமான நாடகக் குழு ஒன்று எப்போது தோன்றப்போகிறது?ரி.கே.எஸ். சகோதரர்களின் பூர்வீகம் நாகர்கோவில் நகரத்தில் அமைந்துள்ள “ஒழுகினசேரியாகும்”. இவர்களது வீட்டை அடுத்தத் தெருவில்தான் கலைவாணரின் வீடும் இருக்கிறது. இன்றும் இவ்விரு வீடுகளும் இருக்கிறது. ஆனால் வியாபாரத்தலமாகவும் சீருந்துகளின் பணிமனையாகவும். 1983-ஆம் ஆண்டு ரி.கே.பகவதி மரணமடைந்தார்.
என் அண்ணன் (1966) படத்தில் ரி.கே.பகவதி, மாஸ்ரர் சேகர். பேபி சிறீதேவி.ImageImageTK.Bhagavathy-En Annan-jpg
1979-இல் வெளிவந்த “அலாவுதீனும் அற்புத விளக்கும்” படத்தில் லலிதாஸ்ரீ, கமலஹாசனுடன் ரி.கே.பகவதி.
Lalithasree-TK.Bhagavathi-Kamal-Alavudinum Arputha vilakkum 1979- Lalithasree-TK.Bhagavathi-Alavudinum Arputha vilakkum 1979-
1970-இல் வெளிவந்த ‘நிலவே நீ சாட்சி’ படத்தில் எஸ்.என்.லட்சுமி, கே.ஏ.தங்கவேலுவுடன் ரி.கே.பகவதி
TK.Bhagavathi-KA.Thangavelu-SN.Lakshmi-Nilave Nee Satchi 1970-
TK.Bhagavathy-Nilave Nee Satchi 1970- TK.Bhagavathy-Nilave Nee Satchi 1970-1 TK.Bhagavathy-Nilave Nee Satchi 1970-2
‘சவாலே சமாளி’ [1971] படத்தில் பெரிய பண்ணையாக ரி.கே.பகவதிT. K. Bagavathy-Savale Samali 1971-T. K. Bagavathy-Savale Samali 1971-1T. K. Bagavathy-Savale Samali 1971-2T. K. Bagavathy-Savale Samali 1971-3
Nagesh-T. K. Bagavathy-Savale Samali 1971-Nagesh-T. K. Bagavathy-Savale Samali 1971-1
PS.Venkitachalam-Nagesh-T. K. Bagavathy-Savale Samali 1971-
TK.Bhagavathi-Thangaikkaga 1970-TK.Bhagavathi-Sivaji-Thangaikkaga 1970-2TK.Bhagavathi-Sivaji-Thangaikkaga 1970-1TK.Bhagavathi-Sivaji-Thangaikkaga 1970-
“குழந்தைக்காக” [1968] படத்தில் ரி.கே.பகவதிTK.Bhagavathi-Kuzhanthaikkaga 1968-2TK.Bhagavathi-Kuzhanthaikkaga 1968-1TK.Bhagavathi-Kuzhanthaikkaga 1968-
“குழந்தைக்காக” [1968] படத்தில் ரி.கே.பகவதியுடன் மேஜர் TK.Bhagavathi-Major-Kuzhanthaikkaga 1968-
“குழந்தைக்காக” [1968] படத்தில் ரி.கே.பகவதியுடன் ஆர்.எஸ்.மனோகர் TK.Bhagavathi-RS.Manokar-Kuzhanthaikkaga 1968-
TK.Bhagavathi-Nagesh-S.Varalakshmi-Panama Pasama 1968-1
K.Kannan-S.Varalakshmi-TK.Bhagavathi-Nagesh-Panama Pasama 1968-2
B.Sarojadevi-TK.Bhagavathi-Nagesh-Panama Pasama 1968-
S.Varalakshmi-K.Kannan-TK.Bhagavathi-Nagesh-Panama Pasama 1968-67