Thursday, 4 August 2016

"புரட்சி இலக்கியத்தின் முன்னோடி" ஷெல்லி பிறப்பு 1792 ஆகஸ்ட் 4


 "புரட்சி இலக்கியத்தின் முன்னோடி" 
ஷெல்லி பிறப்பு 1792 ஆகஸ்ட் 4

பெர்சி பைச்சு செல்லி

முன்னுரை 

மகாத்மா காந்தியின் அறப்போர் முறைக்கும், முன்னோடி
பெர்சி பைச்சு செல்லி அல்லது பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley, ஆகஸ்ட் 4, 1792 – ஜூலை 8, 1822) ஒரு ஆங்கிலக் கவிஞர். பி.பி. ஷெல்லி என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.புனைவியல்/கற்பனையியல் இயக்கத்தின் (romantic movement) முக்கிய கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

 இவர் ஜான் கீட்ஸ் மற்றும் பைரன் பிரபு ஆகியோரின் நண்பர். இவருடைய இரண்டாவது மனைவி மேரி ஷெல்லியும் புகழ் பெற்ற புதின எழுத்தாளர்.


ஷெல்லியின் அசாத்திய கொள்கைப்பிடிப்பும், தனித்துவ வாழ்க்கைமுறையும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் புகழை அடையவிடாமல் தடுத்தன. அவருடைய படைப்புகள் பலமுறை புறக்கணிக்கப்பட்டன அல்லது உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டன. அவர் இறக்கும்வரை அவருடைய ரசிகர் கூட்டத்தின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டவில்லை.

மகாத்மா காந்தியின் அறப்போர் முறைக்கும், முன்னோடி
 ஓசிமாண்டியாஸ், 
ஓட் டூ எ வெஸ்ட் விண்ட், 
டூ எ ஸ்கைலார்க், 
தி மாஸ்க் ஆஃப் அனார்க்கி அஃப் அனார்க்கி
 போன்ற தனிக்கவிதைகள் ஷெல்லியின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். 

ஆங்கில கவிதையுலகில் அழியாப்புகழ் பெற்றிருக்கும் இவை, இன்று வரை செவ்வியல் கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர அடோனாய்ஸ், குயின் மாப், அலாஸ்டர், ரிவோல்ட் ஆஃப் இஸ்லாம், தி டிருயம்ஃப் ஆஃப் லைஃப் போன்ற புகழ்பெற்ற நெடுங்கவிதைகளையும், 

தி சென்சி, புரோமீத்தியஸ் அன்பவுண்ட் போன்ற மேடை நாடகங்களையும் ஷெல்லி எழுதியுள்ளார். முப்பதாண்டுகளே வாழ்ந்தாலும், ஆங்கில இலக்கியத்தில் ஷெல்லி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

 நான்கு தலைமுறைகளாக பல கவிஞர்கள் ஷெல்லியின் படைப்புகளால் உந்தப்பட்டு கவிதைகளை எழுதினர். அவரது வன்முறையற்ற போராட்ட முறைகள் கென்றி டேவிட் தூரோவின் சட்டமறுப்புக் கொள்கைக்கும் மகாத்மா காந்தியின் அறப்போர் முறைக்கும், முன்னோடியாக இருந்தது

பிறப்பு மற்றும் இளமைக் காலம்]
திமோதி ஷெல்லி என்பவருக்கு முதல் மகனாக ஷெல்லி 1792 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் நான்காம் திகதி பிறந்தார்.இவருக்கு நான்கு தங்கைகளும்,ஒரு தம்பியும் இருந்தனர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின்  ஈடோன் கல்லூரியில்
 அவர் தன் கல்லூரிப் படிப்பை படித்தார்.

கல்லூரியில் மதங்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வினியோகித்த காரணங்களுக்காக அவர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.அதன் பின் அவர் ஹாரியட் வெஸ்ட் புரூக் என்பவரை
 காதல் திருமணம்   செய்து கொண்டார்.வில்லியம் காட்வின் என்பவரையே ஷெல்லி குருவாக ஏற்றிருந்தார்.

காட்வின்னின் மகளான மேரியை ஷெல்லி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்



Shelly பரம்பரைச் செல்வ வளம் இங்கிலாந்து நாட்டு அரசியலில் செல்வாக்கும் மிகுந்திருந்த குடியிலே பிறந்து (ஆகஸ்ட், 4, 1792) தனது இளம்வயதிலேயே இலக்கியவானில் சிறகடிக்கத் தொடங்கி செங்குத்தாய் மேலெழும்பி - 

இந்தப் பூமியின் அவலங்களையெல்லாம் பொசுக்கிடும்தர்மாவேசத்தால் கனற் கவிதைகள் பொழிந்து, முப்பது வயது நிரம்புவதற்குள் (ஜூலை, 2, 1822) கொழுந்து விட்டெரிந்த தனதுகவிதாக்கினியைக் கடலிற் கரைத்துக் கொண்ட வானம்பாடி ஷெல்லி.




இலக்கியப் பரப்பில் எழுந்த ஞான குரு கவிஞர் ஷெல்லி

கவிதையின் அனைத்துத் துறைகளிலும் கரை கண்ட திறமையாளன். வற்றாத ஜீவநதியெனப் பொங்கிப் புரண்டோடி வந்த ஒப்பற்றகவித்துவத்தின் ஊற்றாய் விளங்கியவன். கற்பனை என்னும் மந்திர வாகனத்தைத் தன் சொற்படி இயங்க வைக்கும் சூட்சுமம் தெரிந்தவன்.

அழகு மொழியின் வண்ணங்கள் குழைத்து, லாவகமோனை ஆடைகள் கூட்டிக் கவிதையை நடமாட விடும் நட்டுவாங்கம் நன்கு கற்றவன்.

அதேசமயத்தில் பொங்கும் வீரியமிக்க கவிதைகளுக்கு நெருப்பாடை நெய்து - கட்டுப்படாத காற்றும் மட்டுப்படாத அலைகளும்கொண்டிருக்கும் ஆற்றலைப் போல வீறு கொண்டு - அணிவகுக்கச் செய்யும் போர்த்திறனும் பெற்றவன் ஷெல்லி.

இந்த உலகை சீரமைக்கும் உன்னத வேட்கை அவன் படைப்புகள் யாவற்றிலும் பரந்து நிறைந்திருக்கக் காணலாம். இவையாவற்றுடன் கூடத்தற்கால உலகின் பொதுக் கோட்பாடாக விகசித்து நிற்கும் மனித உரிமைக் கோட்பாடுகளை இலக்கியக் களத்திலிருந்து பிரகடனம் செய்தமுதல்வன் அவன். 

அந்த அமாக் கவிஞனின் உரிமை முழக்கங்களை அறிமுகம் செய்து கொள்வது, நம்மைப் புதுமைப்படுத்திக் கொள்ளவும்,மனித உரிமைகள் காக்கும் அணிக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் உதவும்.

ஷெல்லியை ஓர் ஆர்வமிக்க இயற்கைப் பாடகனாக அனைவரும் அறிந்திருப்போம். அவன் கூர்மையான அறிவியல் நோக்கனாகவும்விளங்கினான். "அறிவியலின் பயன்கள் யாவும் மனிதகுல மேம்பாட்டிற்கு உதவும்; உதவ வேண்டும்" என்று வலியுறுத்தினான். 

மானிடவாழ்க்கையில் மண்டிக் கிடக்கும் அவலங்களை எல்லாம் ஒரு நொடியும் தாமதிக்காமல் தூக்கியெறியத் துடித்துக் கொண்டிருந்த புரட்சிவேட்கை பொங்கிய இதயம் அவனுடையது.

"சுதந்திர வேட்கையும் சீர்திருத்த எண்ணங்களும் தனது கவிதைகளின் உயிர் மூச்சாய்த் திகழுமாறு" செய்தவன் ஷெல்லி. மனித குலத்தில்,எங்கும் சமத்துவம் முளைவிடும் பொற்காலம் பிறக்க விழைந்து, மரபு சாராப் புதுமைக் கருத்துக்களை படை திரட்டி அணிவகுக்கச்செய்தான். 

மக்கள் அனைவருக்கும் நற்பலன்களைப் பெருக்கக் கூடிய பொற்காலத்தை இப்பூமிக்கு விரைவில் கொண்டு வர என்ன செய்யவேண்டும் என அனைவருக்கும் போதிக்க இலக்கியப் பரப்பில் எழுந்த ஞான குரு அவன்.

வரம்பற்ற அதிகாரம், அடக்குமுறை, அடிமைத்தனம் ஆகியவற்றிற்கெதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராடத் தனியாத தர்மாவேசம் (asacred rage) கொண்டிருந்தான். சூழலின் வெம்மைக்குப் பயந்து தலையை உள்ளிழுத்துக் கொள்கின்ற ஆமைத்தனம் கொஞ்சமும்இல்லாதவன் அவன். 

இலக்கியப் படைப்புகளில் மட்டுமல்லாது தன் சொந்த வாழ்க்கையிலும் மனித நேயம் பொழியும் மேகமெனவாழ்ந்தவன்.
ஷெல்லியின் கவிதைகள் யாவும் இலக்கியப் படைப்பு என்ற எல்லையில் நின்று சக மனிதர்களுக்காக இரங்கும் இயல்பு கொண்டுள்ளஎவரையும் விழிப்புணர்வு கொள்ளச் செய்யும் கவிதைகளாகும்.

கவிதைகளையும், சமுதாய மாற்றங்களுக்கான தனது அரசியல் எண்ணங்களையும் பிரித்து வைக்காமல் இணைத்து வைத்தே எங்கும்நடமாட விட்டிருக்கின்றான். அதன் காரணமாக அக்காலத்தில் அவனது கவிதையின் சிறப்புகள் கூட குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டதுஉண்மை.

தனது எழுத்துக்கள், மனித குலத்தின் நிலைத்த மகிழ்விற்கு வழிகோலுதலாக இருக்க வேண்டும் என்ற உறுதி பூண்டு எழுதுகோல் தொட்டவன்ஷெல்லி. 

அவனைப் புரிந்து கொண்டவர்கள், நேசிப்பவர்கள் முப்பது ஆண்டுகளுக்குள் அவன் முடிந்து போனானே எனக் கவலைகொண்டார்கள். அவன் மேலும் வாழ்ந்திருந்தால் - அடிப்படையிலேயே சீர்திருத்தக்காரனாகிய அவன் சோசலிஸத்தின் முதன்மைக்காவலனாக விளங்கியிருப்பான் என்று காரல் மார்க்ஸ் ஷெல்லியைப் பற்றிக் கூறியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

"சுதந்திரம் இவ்வுலகின் சொர்க்கம்"
ஷெல்லி ஒரு நாத்திகவாதியாக இருந்தபோதிலும், சுதந்திரம் இவ்வுலகின் சொர்க்கம் என்று நம்பிக்கை கொண்டிருந்தான். 

அத்தகையசொர்க்கத்தை மக்கள் அனைவரும் சென்றடைய விடாமல் தடுப்பது "அடிமைத்தனம், கொடுங்கோன்மை என்ற ஒட்டிப் பிறந்த இரட்டைஎதிரிகள்" என்று மக்களுக்கு அடையாளம் காட்டினான். 

மக்கள் நலத்திற்கு நேரடியாய் உதவவல்லது அரசியல் சுதந்திரம்தான் என்று ஷெல்லிஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தான்.
அரசியல் சுதந்திரம் பெறுவதற்கு மக்களைத் தூண்டி விடக் கூடிய நெம்புகோல் கவிதைகளை உருவாக்கினான். 

"ஆள்பவர் சிலர்,ஆளப்படுபவர் பலர் என்பதை மக்கள் உணர்ந்து விட்டால், எழுச்சி பெற்று விடலாமே"என்று அவன் ஆதங்கப்பட்டான். 

"மனிதனுக்குஉணவு, உடை, நெருப்பு போன்ற அடிப்படை தேவையல்லவா சுதந்திரம்" என்று மக்களிடம் தெளிவுபடுத்தினான்.

"அடிப்படைத் தேவையான சுதந்திரமில்லாத வாழ்க்கை அடிமை வாழ்க்கை - அது மனித வாழ்க்கையே அல்ல" என்று அவன் முழங்கினான்."

ஒவ்வொரு அடிமையும் (சுதந்திர) மனிதனாக விழித்தெழ வேண்டும் என்று விழைந்து, அடிமை இருளில் மூழ்கித் தூங்கிக் கிடந்த மக்களைவிழிப்படையச் செய்வதற்காக தூங்கிக் கிடக்கும் சிங்கங்களே, விழிமின், எழுமின்" எனக் கவிதை கர்ஜனை புரிந்து வேகமூட்டினான்.


உலகின் எந்தப் பகுதியில் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்தாலும் அல்லது எந்த நாடாவது அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றாலும்மிக்க பரவசத்தோடு கவிதைப் பாலம் அமைத்தவன் ஷெல்லி. 

சுதந்திர வேட்கையை, முடியாட்சிக்கெதிரான உணர்வுகளை, ஷெல்லியைப்போல வலுவான குரலில் முழக்கமிட்ட கவிஞர்களைக் காண்பது அரிது. "இயற்கையே முடியாட்சியை மறுத்து நிற்பதாக" அவன்அறிவித்தான். 

"மனித அவலத்தில்தான் கொடுங்கோலர்களின் மகிழ்வு பிறக்கிறது; அவர்களது விளையாட்டு மனிதர்களின் வேதனை" என்றுஅவன் வெகுண்டான்.

கொடுங்கோன்மை, பொய்மை முதலியவற்றை எதிர்த்து நிரந்தரமாகப் போடுவதற்கும், மனித இதயங்களில் மண்டிக் கிடக்கும் துயரங்களைவேரறுப்பதற்காகவும் விதிக்கப்பட்டிருப்பதாகத் தன்னைத்தானே அவன் வகுத்துக் கொண்டான். 

சுதந்திரத்திற்கான பாட்டு (Ode to liberty)என்ற நீள் கவிதையில் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் விடுதலைக்காக நடத்திய வீரமிக்க போராட்டங்களை,அவற்றின் உன்னதங்களை, அவர்கள் பெற்ற வெற்றிகளின் பெருமைகளை உவகை பொங்க வடித்தெழுதி யிருக்கிறான்.

"சகோதரர்களே ! சுதந்திரமா? சாவா? என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உங்களின் துடிப்பை நானும் கொண்டிருக்கிறேன். சுதந்திரவெற்றிச் செய்தி வரும் வரை ஆவலுடன் காத்திருப்பேன்" என்று மெக்ஸிகோ புரட்சியாளர்களுக்கு (To the Republicans of NorthAmerica) செய்தியனுப்பினான்.

இத்தாலியின் தலைநகர் நேப்பிள்ஸில் 1820ம் ஆண்டில் அரசியல் சட்டப்பூர்வமான அரசாங்கம் அமைக்கப்பட்டதை அறிந்தவுடன், "நேப்பிள்ஸுக்குப் பாட்டு"  பிறந்தது. "முடியாட்சியின் தளைகளை உடைத்து மக்களாட்சியை மலரச் செய்துள்ளதால்,இத்தாலி நாட்டு மக்கள் மட்டுமல்ல, அந் நாட்டிலுள்ள அனைத்துப் பொருள்களும் தம்மைச் சுற்றிச் சொர்க்கம் விரிந்திருக்குமாறு"செய்துள்ளதாகப் பரவசப்பட்டான்.


இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் (ஆகஸ்ட் 16, 1819) தொழிலாளர் மீது வன்முறை ஏவப்பட்டுப் படுகொலைகள் நிகழ்ந்தன. இத்தாலிநாட்டில் அப்போது வாழ்ந்து வந்த ஷெல்லியின் மனம் இந் நிகழ்வால் தாங்கொணாத வேதனையில் உழன்றதாக அவனது மனைவி மேரிஷெல்லி எழுதியுள்ளார். 

"அராஜகத்தின் முகமூடி"

ஆகஸ்ட் 16, 1819 அந்தப் படுகொலை நிகழ்வினைக் கண்டித்துப் பிறந்ததுதான் "அராஜகத்தின் முகமூடி" (The Mask of Anarchy).சாதாரணக் கவிதையா அது? "நெருப்பாடை கட்டி நடந்து வந்த கவிதை" அது.

அப்போதைய சூழலில் அக்கவிதை பிரசுரிக்கப்படுவது ஆபத்தானது எனக் கருதியதால், எக்ஸாமினர் இதழின் ஆசிரியர் - ஷெல்லியின்நண்பர்- லீ ஹண்ட் அதனை வெளியிடவில்லையாம். பதின்மூன்று ஆண்டுகள் கழித்து 1832ல் அக்கவிதை வெளியானபோது லீ ஹண்ட்எழுதிய குறிப்பு இச்செய்தியைத் தெரிவிக்கிறது. வெறுங் கவிதைகளாக மட்டுமல்லாமல், புரட்சிக்கு மக்களைத் தயார் செய்யும்பட்டறைகளாக விளங்கின எனச் சொல்லலாம்.

"இங்கிலாந்து மக்களுக்கான பாட்டு" (Song to the Men of England) என்ற சித்னாவைப் படைத்தான். பெண் விடுதலைக்கான பொறுப்புபெண்களிடம்தான் உள்ளது. அப்பொறுப்பில் ஆண்களுக்கும் பங்குண்டு என்ற சித்னாவின் கூற்றுக்களின் மூலம் ஷெல்லி பேசியுள்ளான்."உலகின் சரி பாதியான பெண்களை அடிமைப்படுத்தி அல்லற் சூழலில், தள்ளி விட்டு விட்டு ஆண்கள் மட்டும் எப்படிச் சுதந்திரமாக இருந்துவிட முடியும்" என்று வினாக்களைத் தொடுத்த சித்னா, ஷெல்லியின் எதிரொலிப்பே.

ஷெல்லியின் இத்தகைய பெண்ணுரிமைக் கருத்துக்களுக்கான தாக்கம் அவன் பிறந்த ஆண்டில் மே உல்ஸ்டன் கிராப்ட் வெளியிட்ட பெண்ணுரிமைகளுக்கான நியாயங்கள் (A Vindication of the Rights of Women, 1792) என்ற நூலில் இருந்தும், மே உல்ஸ்ட்ன்கிராப்டைத் தனது துணையாக ஏற்றுக் கொண்ட காட்வினுடன் பின்னாட்களில் அவனுக்கு ஏற்பட்ட தொடர்பு காரணமாகவும்நிகழ்ந்திருக்கலாம்.

சீர்திருத்தக் கருத்துக்கள்
ஷெல்லியின் காலத்தில் அவன் வெளிப்படுத்திய கருத்துக்கள் பல அப்போதைய உலகைச் சாராத புதுமொழியாகத்தான் இருந்திருக்கும்.அவனது காலத்தில் அவன் கருத்துக்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்ததாகத் தெரியவில்லை. மாறாகப் பல இடர்களை அவன்எதிர்கொள்ள நேர்ந்தது. பகுத்தறிவினை அடிப்படையாகக் கொண்டு கடவுள் இல்லை என்பதை வலியுறுத்தி, நாத்திகத்தின் அவசியம் (TheNecessity of Atheism, 1811) என்ற சிறு வெளியீட்டைக் கொணர்ந்ததற்காக ஷெல்லியின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்விவாழ்க்கை பலியானது.

மதத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் இருந்தவன் என்ற காரணத்தால் அவனது முதல் மனைவி ஹாயட் முலம் பிறந்த குழந்தைகளைஅவன் பொறுப்பில் விட நீதிமன்றம் மறுத்தது. 

எந்தச் சூழலிலும் தளர்வு கொள்ளாமல், "எனது வெற்றியில் எனக்கு மன நிறைவுஇல்லாவிட்டாலும் கூட, எனது முயற்சிகளில் எப்போதும் நிறைவு இருக்கும்" என்று தன்னம்பிக்கையுடன் ஷெல்லி செயல்பட்டான்.

தனது சீர்திருத்தக் கருத்துக்களைத் துண்டறிக்கைகளாக்கிப் பல வழிகளைக் கையாண்டு பரப்ப முனைந்தான். தெருக்களில் நின்று போவோர்,வருவோடம் நேரடி வினியோகம்; 

உயர்ந்த கட்டடங்கள், மலைகளில் இருந்து துண்டறிக்கைகளை வீசுதல்; மதுக் கடைகளில் யாரும்அறியாவண்ணம் வாடிக்கையாளர் பைகளில் அறிக்கைகளை விட்டு விடுதல்;
 பலூன்களில் கட்டிப் பறக்க விடுதல்; 
பாட்டில்களில்அடைத்துக் கடலில் வீசி எறிதல் என வினோதமான, கற்பனை காட்டும் வழிகளில் எல்லாம் முயன்று தனது கருத்து விதைகளைத் தூவிடும்மேலைக்காற்றாய் அவன் இருந்தான்.

மனித உரிமைகள்

இவ்வாறு வேடிக்கையான வழியில் ஒரு பாட்டிலில் அடைத்துக் கடலில் வீசி எறியப்பட்ட துண்டறிக்கைதான் இலக்கிய உலகில் இருந்துமனித உரிமைகளைப் பிரகடனப்படுத்திய முதல் அறிக்கை ஆகும். ஓர் இலக்கியவாதி வெளிப்படுத்திய அந்த உரிமை முழக்கம்தான் "மனித உரிமைகள்" (A Declaration of the Rights of Man, 1812) பிரகடனம் என்பதாகும்.

தற்போது உலகமெங்கிலும் மனித உரிமைகளுக்கான பொதுவான அடிப்படை என்று மதிக்கப்படுகின்ற ஐ.நாவின் உலக மனித உரிமைப்பிரகடனம் (Universal Declaration of Rights, 1948) பிறப்பதற்கு 136 ஆண்டுகளுக்கு முன்பே மனித உரிமைகளைப்பிரகடனப்படுத்தியுள்ள ஷெல்லி இத்துறையில் முன்னோடி எனப் போற்றத்தக்கவன்.

ஷெல்லியின் மனித உரிமைப் பிரகடனம்
உலகத்தின் பொது ஏற்பினைப் பெற்றுள்ள ஐ.நாவின் உலக மனித உரிமைப் பிரகடனம் 30 உட் பிரிவுகள் (30 articles) கொண்ட ஒரு மகாசாசனம் ஆகும். ஷெல்லி 1812ம் ஆண்டில் வெளியிட்டுள்ள மனித உரிமைப் பிரகடனம் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை (31 உட்பிரிவுகள்) கொண்டிருப்பது ஒரு சாதாரண ஒற்றுமைதான். 

இருப்பினும் ஐ.நாவின் பிரகடனம் தனது முகப்புரையில் (Preamble) பொதித்துவைத்திருக்கும் கருத்தும், ஷெல்லியின் பிரகடனத்தின் பின்னுரையில் வலியுறுத்தப்படும் கருத்தும் அடிப்படையில் ஒரே இழைகளால்பின்னப்பட்டிருப்பது வியக்கத்தக்க ஒற்றுமையாகும்.

"மனித மாண்பு உலகமெல்லாம் போற்றப்பட, எங்கும் அமைதி தவழ, சுதந்திரம் நீதியும் உலகில் நிலை பெற்று ஓங்கிட மனித உரிமைகள்ஏற்கப்பட்டுப் போற்றப்பட்டுச் சட்டப்பூர்வமான வழிகளில் அவை காக்கப்பட்டாக வேண்டும்" என்பதுதான் இரு பிரகடனங்களையும்இணைக்கின்ற இழையாகும்.


கொடுங்கோன்மையும், அடக்குறைகளும் தொடருமானால் இறுதியில் மக்கள் புரட்சி எனும் ஆயுதத்தைக் கையிலேந்திட நேருமாதால்,அத்தகைய சூழல்கள் விளையாமற் காக்க மனித உமைகளைச் சட்டப்பூர்வமாக காப்பது மிக மிக அவசியம் என்று ஐ.நாவின் பிரகடனம்நாசூக்காக எடுத்துரைப்பதைச் ஷெல்லியின் பிரகடனம் வெளிப்படையாகவே வலியுறுத்தியுள்ளது.

அனைவரும் சமம்

"அரசாங்கம் என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காக, அவர்களுடைய உரிமைகளைக் காப்பதற்காக மக்களே ஏற்படுத்திக் கொண்டுள்ள அமைப்புதானே தவிர அரசாங்கத்திற்கென்று தனியே அதிகாரம் எதுவும் கிடையாது" என ஷெல்லியின் பிரகடனம் 

தெளிவுபடுத்துவதுடன்நில்லாமல், "தாம் விரும்பியவாறு உரிமைகளைக் காக்க இயலாத அரசுகளை உடனே மாற்றி விட மக்களுக்கு உரிமை உண்டு" என்றுமுழங்கியுள்ளது (பிரிவு 2).
"மனிதர் யாவரும் சமமே" எனும் சமத்துவக் கோட்பாடு "மனிதர்களிடையே மதம், பிறப்பிடம் போன்ற எந்த வகையான அடிப்படையிலும்பாகுபாடுகள் இருக்கக் கூடாது. அனைவரும் சமம். யாவரும் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழ வேண்டும்" எனப் பிரிவு 24ல்வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனத்தின் முதல் பிரிவே இதுதான்.

"சுதந்திரம் மனிதனின் உரிமை"


ஷெல்லியின் பிரகடனம் "சுதந்திரம் மனிதனின் உரிமை" என்றும் "இயற்கையின் பொது வளங்கள் யாவற்றிலும் மனிதர்களுக்குச் சமபங்குண்டு" (பிரிவு 3) எனவும் "சுதந்திரத்தையும் பொது (உடமை) உரிமையையும் வலியுறுத்தியுள்ளது. சுதந்திரம் என்பது "தனது சிந்தைப்போக்கின் வழித் தடைகளில்லாமல் சிந்திக்க" (பிரிவு 12, 13) "விவாதிக்க வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும்" என்றும் ஷெல்லியின்பிரகடனம் பேசியுள்ளது.

கருத்துக்களைக் கட்டுப்பாடின்றி வெளிப்படுத்தும் உரிமை மனிதனுக்குண்டு என முழங்கியதோடு நில்லாமல், தனது கருத்துக்களைச்சுதந்திரமாக வெளிப்படுத்துவது மனிதனின் அவசிமயான கடமையும் ஆகும் என உரிமையின் மற்றொரு பக்கத்தையும் அவன்வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறான்.

"சமத்துவச் சட்டங்களையே நாடுகள் இயற்ற வேண்டும்" என்று பிறிதொரு இடத்தில் பேசியுள்ள ஷெல்லி, "எந்த நாடும் பிற்காலச்சந்ததியினரைக் கட்டுப்படுத்தும் வகையான சட்டங்களை இயற்றக் கூடாது" (பிரிவு 16) என்னும் புதுக்கோட்பாடு ஒன்றினைஇப்பிரகடனத்தில் வெளியிட்டிருக்கிறான்.

 "மனிதர்கள் யாவரும் உலகத்தின் குடிமக்கள். எங்கும் ஒரே மாதியான உரிமைகளுக்குச்சொந்தக்காரர்கள். எந்த நாட்டினராக இருந்தாலும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி உரிமை பெற்ற உலக் குடிமக்கள்" ( பிரிவு 20) எனச்சட்டமியற்றியுள்ளான் ஷெல்லி.

கவிஞர்கள், உலகப் பேரவையின் அங்கீகக்கப்படாத உறுப்பினர்கள் (Poets are unacknowledged legislators of the World) என்றுஏற்கனவே இலக்கணம் வகுத்து வைத்தவன் அல்லவா அவன்? அதனால்தான் புதுமைச் சட்டங்கள் பல அவனது எழுதுகோல் வழியாகதங்கு தடையின்றிப் பிரகடனமாகியுள்ளன.

உலகின் பல நாடுகளிலும் இன்று வரை மனித உரிமை மீறல்கள் குறித்த அதிகமான புகார்கள் காவல்துறை, ராணுவம் போன்ற சீருடைப்பணியில் உள்ள அலுவலர்கள் செய்த அத்துமீறல்கள் குறித்துத்தான் விளைகின்றன.  

மனித உயிர்கள் அவசியமின்றி கொல்லப்படுவது, 
தேவையற்ற முரட்டு வழிகளில் மனிதர்கள் துன்புறுத்தப்படுவது, அவமானப்படுத்தப்படுவது ஆகியன சீருடைப் பணியாளர்களால் அடிக்கடிநிகழ்த்தப்படுகின்றன என்பது கசப்பான உண்மையாகும்.

"எல்லோரும் சகோதரர்களாக இருப்பதால் யாரும் யாரையும் கொல்ல உரிமை கிடையாது" என்றான் ஷெல்லி

"சீருடைப் பணியின் நிமித்தம்கொல்ல நேர்ந்து விட்டது எனச் சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அப்படி நிகழ்ந்தால் கூட அது கொலையே தவிர வேறில்லை"(பிரிவு 19) என சீருடைப் பணியாளர்களின் வன்முறைகளை ஆணித்தரமாகக் கண்டித்தான்.

உலகம் பல வகைகளில் முன்னேறியிருந்தாலும் மதத்தின் பெயரால் பல சமயங்களில் பிளவுபட்டு நிற்கும் பேராபத்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. மதங்களின் பெயரால் மனிதர்களிடையே எந்தவித வேறுபாடும் நிகழக் கூடாது என ஷெல்லி வலியுறுத்தினான். 

"கிறிஸ்தவர், துருக்கியர், யூதர் என யாராயினும் அனைவரும் சம உரிமை கொண்டவர்கள்தான்; அனைவரும் சகோதரர்கள்" என அவன்அறிவுறுத்தினான்.

தனி மனிதடையே மதச் சகிப்புத் தன்மையும் (பிரிவு 25) அரசுகளிடம் மதம் சாராத் தன்மையும் (பிரிவு 21) நிலவிட வேண்டியதன்அவசியத்தை ஷெல்லி தெளிவாக எடுத்துக் காட்டினான். "மத வேறுபாடுகள் கடந்த மனித நேயம் மக்களைப் பிணைத்திருக்க வேண்டும்"என்று அவன் விழைந்தான்.

 "மனித உரிமைகளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் தடையாய் இருப்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், வறுமையும் ஆகும்".

பொருட்குவிப்பு ஒரு இடத்தில் நிகழும்போதே ஏழை மனிதர்களின் உரிமைப் பறிப்பு நிகழ்ந்து விடுமாதலால் பொருட்குவிப்பு ஒரு சார்பாகநிகழ்வதை அவசியம் தடுக்க வேண்டும் (பிரிவு 28) என்றான். 

"எல்லோர்க்கும் எல்லாம் என்றிருப்பதான நிலைநிாேக்கி இவ்வையம் பீடுநடை போட வேண்டு"மென கவிக் கனவு கண்டவன் ஷெல்லி.

தனது கவிதை வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதி வரை மக்களாட்சி முறைக்கு ஆதரவாளனாக - முடியாட்சிக்குத் தீவிரஎதிர்ப்பாளனாக - மதத்தின் பொய் முகங்களை அகற்றும் போராளியாக - சமத்துவம் மலரும் பொற்காலச் சமுதாயம் உருவாக்கும்சிற்பியாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு படைப்புகள் செய்தவன் ஷெல்லி. பள்ளிப் பருவம் முதலே அடக்குறைகளைத் துணிவுடன்எதிர்த்தவன்.

புதியதோர் உலகம்

அடைக்குந்தாழ் இலா அன்பு ஊற்றாய் வளர்ந்தவன். கதிரின் ஒளியைப் போல எங்கும் பொதுவாய் - காற்றினைப் போல் தடைகளின்றிப் -பூமியின் மையம் போல் உறுதியாய் நின்று, 

கவிதை வாளெடுத்துப் 
புயலையே போர்க் குதிரையாக்கிக் கொண்டு 
புதியதோர் உலகம் செய்ய
இலக்கியப் பவனி வந்த புரட்சிக்காரன் அவன்.

மனித உரிமைகளுக்கான முழக்கங்களைத் தனது எழுத்துக்களில் முதன்மைப்படுத்திய ஷெல்லியின் புகழ் உரிமை போற்றும் உள்ளங்களில்என்றும் நிலைத்திருக்கும்.



இறப்பு

1822 ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் நாள் படகு விபத்தில் ஷெல்லி இறந்தார்.ஒரு நூற்றாண்டுக்கு பிறகு ஆக்ஸ்போர்ட் கல்வி நிறுவனம் அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியது.

No comments:

Post a Comment