Wednesday, 8 June 2022

SWAPNA GOLD SMUGGLING CASE

 

SWAPNA GOLD SMUGGLING CASE





கொச்சி: கேரள தங்க கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயன் ,அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளதாக ஜாமினில் உள்ள முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். .


2020 ஜூலை மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, கேரளா வின் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பார்சலில், 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சல், திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு வந்தது. இதை பெற்றுக் கொள்ள வந்த, துாதரக முன்னாள் ஊழியர், சரித் குமாரை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, துாதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர், கர்நாடகாவின் பெங்களூரில், கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷூக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.


ஜாமினில் இருக்கும் சுவப்னா சுரேஷ், கொச்சி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ரகசிய வாக்குமூலம் அளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.அதில் கூறியுள்ளதாவது, தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல், முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், செயலாளர் ரவீந்திரன், அதிகாரி, நளினி ஆகியோருக்கு இந்த வழக்கில் என்ன தொடர்பு உள்ளது.

2016-ல் முதல்வர் பினராயி விஜயன் வெளிநாடு சென்றிருந்த போது ரூ. பல கோடி கைமறியுள்ளது. தற்போது எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு தேவை என கோர்ட்டில் மனு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment