Saturday 4 June 2022

DUTCH CAPTURED CELON ,IMPLEMENTED LAW ON 1707 JUNE 4

 

DUTCH CAPTURED CELON ,IMPLEMENTED LAW ON 1707 JUNE 4



தேசவழமைச் சட்டம் என்பது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை (customs) அடிப்படையாக வைத்து யாழ்ப்பாண முதலிமாரின் உதவியுடன் ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும். தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் வழக்கம் என்பதாகும். மக்களிடையே இதற்கிருந்த பிரபலத்துவம் காரணமாக ஒல்லாந்தரால் இது 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக்கப்பட்டது.[1][2]

பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்ட மூலமாக்கப்பட்டது. இச்சட்டமானது பின்னர் 1869 இலும் பின் 1911 இலும் கடைசியாக 1947 இலும் திருத்தியமைக்கப்பட்டது. இச்சட்டம் உடமை உரிமைகள் பற்றியும் திருமணம் பற்றியும் விபரமான வரையறைகளை விபரிக்கின்றது.[2]

இலங்கையில் பொதுவான சட்டமான பொதுச் சட்டக் கோவைக்கு மேலதிகமாக உள்ள மூன்று சட்டங்களில் தேசவழமைச் சட்டமும் ஒன்று. ஏனையவை இரண்டும், கண்டிச் சட்டம்இசுலாமியச் சட்டம் ஆகியவையாகும். கண்டிச் சட்டமானது கண்டி வாழ் பெளத்தர்களுக்கும், இசுலாமியச் சட்டமானது இலங்கை வாழ் இசுலாமியர்களுக்கும், தேசவழமைச் சட்டமானது வட மாகாணத்தில் வாழும் மக்களுக்கும் மாத்திரமே இயல்புடையதாகிறது.[2]


வரலாறு[தொகு]

கிபி 1620 ஆம் ஆண்டுக்கு முன்னர், இலங்கையின் வடபகுதியில், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தனியான நாடு இருந்தது. இதுவே யாழ்ப்பாண அரசு அல்லது யாழ்ப்பாண இராச்சியம் எனப்படுகின்றது. முடியாட்சி முறையின் கீழ் ஆளப்பட்டுவந்த யாழ்ப்பாண இராச்சியத்தில், சட்டம் ஒழுங்கு முதலியவை எழுத்தில் இல்லாத ஆனால், குறைந்தது மூன்று, நான்கு நூற்றாண்டுகளாகவாவது நடைமுறையில் இருந்து வளர்ந்த ஒரு சட்டமுறை இருந்திருக்கிறது.[3] கி.பி 1620 இல் போத்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த பின்னரும், அவர்கள், யாழ்ப்பாணத்தின் உள்ளூர் முதலிமார்கள் ஊடாகவே மக்களைக் கட்டுப்படுத்தி வந்தமையால் பழைய நடைமுறைகளே யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டன.

ஒல்லாந்தர் ஆட்சியில் சட்டவாக்கல்[தொகு]

1658 இல் யாழ்ப்பாணம் போத்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் கைக்கு மாறியது. எனினும், முன்போலவே, மரபு வழியான விடயங்கள் எல்லாவற்றிலும் பழைய நடைமுறைகளே, அதாவது வழமைகளே பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ்ப்பாண இராச்சியத்தின் குடிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை எழுத்து மூலமாகத் தொகுக்கும் பொறுப்பு, அன்றைய டச்சு ஆளுனர் கோர்னெலிஸ் ஜோன் சைமன்ஸ் (Cornelis Joan Simons) என்பவரால் யாழ்ப்பாணத்தில் திசாவை (Dessave) பதவி வகித்த கிளாஸ் ஈசாக்ஸ் (Class Issaksz) என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர், யாழ்ப்பாணத்து முதலியார்கள் 12 பேரின் உதவியுடன் நாட்டின் வழமைகளைத் தொகுத்தார். இதுவே தேசவழமைச் சட்டம் எனப்படுகின்றது. ஜூன் 41707 ஆம் ஆண்டில் ஒல்லாந்த அரசினால் யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சட்டம் டச்சு மொழியில் எழுதப்பட்டுத் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்[தொகு]

கிளாஸ் ஈசாக்ஸ், இத் தொகுப்புக்காகத் தான் எழுதிய முன்னுரையில் இத் தொகுப்பு தொடர்பான பின்வரும் அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

  • தொகுப்பில் அடங்கியவை யாழ்ப்பாண நாயன் பட்டினத்தில் நடந்து வருகிற வழமைகள் என்பது.
  • இத் தேசத்தவரின் சென்மசுபாவமான வழமைகளின்படி நியாயத் தலங்களில் நீதி செலுத்தப்பட்டு வருகிறது என்பது.

ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் தந்திரத்துக்குமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் யாழ்ப்பாணத்தில் பின்பற்றியதாக தெரியவில்லை.

"தேசவழமைச் சட்டத்தின்படி கூட்டு உரிமையாளர்கள், கூட்டு முதுசகத்தார்கள், அயல்காணி உரிமையாளர்கள், வட மாகாணத்தில் தம் காணியை ஈடு வைத்துள்ளவர்கள் விலைப்படும் காணியை வாங்குவதற்கு முதல் உரிமையாளராகின்றனர்".[4]

சொத்துடைமைகள்[தொகு]

தேச வழமைச் சட்டத்தின்படி சொத்துடைமைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை முதுசம்சீதனம்தேடிய தேட்டம் ஆகியனவாகும். முதுசொம் என்பது கணவர் வழிவந்த மரபுரிமைச் சொத்தாகும். சீதனம் என்பது மனைவியின் தாய் வழி வந்த மரபுரிமைச் சொத்தாகும். தேடிய தேட்டம் என்பது கணவனும் மனைவியும் தங்கள் மண வாழ்வின் போது தேடிக் கொண்ட சொத்துக்களாகும். ஒரு குடும்பத்தின் புதல்வியர் தாயின் சீதனச் சொத்தையும், புதல்வர் தந்தையின் முதுசொச் சொத்தையும் அடைவர். தேடிய தேட்டமானது புதல்வரிடையேயும் புதல்வியரிடையேயும் சரி சமமாகப் பிரிக்கப்படுகின்றது. இவ்விதம் பரம்பரைச் சொத்தானது கணவனுடனும் மனைவியுடனும் தனித்தனியாக பேணப்படுகிறது.

ஒரு விதவை மறுமணம் செய்யுமிடத்து அவருடைய சீதனச் சொத்தானது அவருடைய இருமண புதல்வியருக்கும் பங்கிடப்படுகின்றது. மனைவியை இழந்தவர் மறுமணம் செய்யுமிடத்து அவருடைய இறந்த மனைவியின் சீதனச் சொத்துக்களை அம்மனைவியின் பெண்பிள்ளைகளுக்கும், தனது முதுச சொத்துக்களில் பாதியை அம்மனைவியின் ஆண் பிள்ளைகளுக்கும், தேடிய தேட்டத்தில் பாதியை அம்மனைவியின் எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தல் அவசியமாகிறது.

மணமுறிவின் போது பெண்ணுக்குச் சீதனமாக வழங்கப்பட்ட சொத்துக்களனைத்தும் பெண்ணுடன் வருவதுடன் தேடிய தேட்டத்தில் ஐம்பது சதவிகிதமும் அவருக்கு வழங்கப்பட வேண்டும். பெண்ணின் சீதனத்தில் ஆண் செலவு செய்திருப்பின் அத்தொகையும் பெண்ணுக்கு வழங்கப்படல் வேண்டும்.

இச்சலுகைகளானவை திருமண வாழ்வின் போது பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பாக இருந்ததுடன், சலுகைகளானவை திருமண வாழ்வின் போது பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் அக்காலச் சமூகத்தில் விதவைக்கும் விவாகரத்தாகிய பெண்ணுக்கும் சமூக அங்கீகாரம் வழங்கும் அனுகூலமான சட்டமாக இதனைக் கருதலாம்[5]

இவற்றையும் பார்க்க[தொகு]




உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத் தமிழன் தேசவழமைச் சட்டத்துக்கு உட்பட்டவன்’. எவரும் குடாநாட்டில் காணியை கொள்வனவு செய்யத் தடையில்லை!

தமிழனாக இருந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த எந்தவொரு நபரும் தேசவழமைச் சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவரெனக் கூறியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் யாழ்ப்பாணத்தைச் சேராதவர்களுக்கும் அங்கு காணியை கொள்வனவு செய்வதற்குத் தடை விதிக்கும் எந்தவொரு சட்டமும் அமுலில் இல்லையெனவும் தெரிவித்தார்.

வட மாகாண உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்குமான சட்ட அறிவூட்டல் கருத்தரங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோது உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்தேசவழமைச் சட்டம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

தேச வழமை என்பதை தேசத்தின் வழமையென கருத்தில் கொள்ளலாம். தேசவழமைச் சட்டம் சட்டங்களில் மிகவும் முக்கியமானதொரு சட்டமாகும். தேசவழமைச் சட்டம் வாழ்வின் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எம்மைத் தொட்டுச் செல்கின்றது. குறிப்பாக வடக்கில் அதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள சட்டங்களில் தேசவழமைச் சட்டம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தேசவழமைச் சட்டம் எவ்வாறு சட்டமாக்கப்பட்டது என்பதனை ஆராய்ந்தால் யாழ்.மக்களால் தொன்று தொட்டு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒழுக்க முறைமைகளைத் தொகுத்தே தேசவழமைச் சட்டம் உருவாக்கப்பட்டது.

1707 ஆம் ஆண்டில் தேச வழமை சேவையென உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம் 1800 களில் சட்டமாக ஒழுங்கமைக்கப்பட்டு தேசவழமைச் சட்டமாக உருப்பெற்றது. மகா தேசாதிபதி ஜோன் சைமன் தேசவழமைச் சட்டம் நாட்டின் வழமையெனக் கூறியுள்ளார்.

இத் தேசவழமைச் சட்டம் எத்தனையோ மாறுதல்களுடன் வாழ்வின் எந்தவொரு அத்தியாயத்தையும் தொட்டுச் செல்கின்றது. 1869 இல் தேசவழமைச் சட்டத்தை கற்றுக் கொண்ட அப்போதைய பிரதம நிதியரசர் அலெக்சான்டரா ஜொனாதன் தேசவழமைச் சட்டத்தை மக்கள் வழங்கும் மரியாதை எனவும் வட பகுதி மக்களால் புனிதமாகப் போற்றப்படும் ஒரு சட்டம் எனவும் அச்சட்டத்தினை மேலைத்தேய நீதிபதிகளும் கற்று அதன் பிரகாரம் தீர்ப்பு வழங்க வேண்டுமெனக் கூறியுள்ளார்இன்று நாம் நாளாந்தம் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். ஒருவர் இறந்தால் சொத்துக்களை எவ்வாறு பிரிப்பதுஎவருடைய பெயரிற்கு மாற்றுவது என்பன உள்ளிட்ட பல பிரச்சினைகள் உண்டு.

அதேவேளை பிள்ளைகள் அற்ற பெற்றோர் இறந்தால் அந்தச் சொத்துக்களை எவ்வாறு பிரிப்பது என்பன குறித்தும் பல பிரச்சினைகள் எழுவதுண்டு. கணவன் இறக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் சரிசமமாக சொத்துக்கள் பிரிக்கப்படவேண்டும். 50 வீதம் மனைவிக்கும் 50 வீதம் பிள்ளைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். தேடிய தேட்டம்முதுசொம்சீதனம் என சொத்துக்கள் மூன்று வகைப்படும். தேடிய தேட்டம் கணவன்மனைவியின் இல்லற வாழ்வின் போது கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள். இதற்கு கணவனும் மனைவியும் பங்குதாரர்கள் முதுசொம் பரம்பரை பரம்பரையாக வரும் சொத்துக்கள். மற்றையது சீதனச் சொத்துக்கள்.

தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சர்வானந்தா கந்தசாமி எதிர் மாணிக்கவாசகர் என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பு சிறந்த உதாரணமாகும். இல்லறத்தின் போது மனைவியோ கணவனோ சொத்தினை கொள்வனவு செய்தால் இருவருக்குமே அதில் சம உரிமை உண்டு. கணவன் கொள்வனவு செய்யும் சொத்தில் மனைவிக்கும் மனைவி கொள்வனவு செய்யும் சொத்தில் கணவனுக்கும் சம உரிமை உண்டு.

கணவன் மனைவிக்கு எழுதப்பட்ட ஆதனத்தையோ அல்லது மனைவிக்கு எழுதப்பட்ட ஆதனத்தையோ மனைவியின் அனுமதியின்றி கணவன் அடகு வைக்க முடியும். ஆனால் விற்பனை செய்ய முடியாது. திருமணத்தின் பின்னர் கணவன்,மனைவியின் ஒரு பிரதிநிதியாகவே செயற்படுவார்இதனால் கணவன் சுயேச்சையாக செயற்பட முடியும்.

ஆனால் மனைவிக்கு எழுதியிருந்தாலும் அந்த ஆதனத்தை மனைவியால் மாத்திரம் ஒப்பமிட்டு விற்பனை செய்யவோ அடகு வைக்கவோ முடியாது. பெண்ணியம்,சம உரிமை குறித்து நாம் இன்று பேசிக் கொண்டாலும் திருமணத்தின் பின்னர் பெண்கள் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட வேண்டும்அதேவேளைகணவன் வெளிநாட்டில் இருந்தால் குறித்த ஆதனத்தை விற்பனை செய்வதற்கு எவ்வாறாயினலும் கணவனின் ஒப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லாதுவிடின் அந்த சொத்துக்களை விற்பனை செய்ய முடியாது.

ஆனால் சில குறித்த சந்தர்ப்பங்களில் மனைவி நீதிமன்றம் சென்று கணவர் ஆதனப்பத்திரத்தில் கைச்சாத்திட சரியான காரணம் எதுவும் இன்றி மறுப்புத் தெரிவிக்கின்றார் என வழக்குத் தாக்கல் செய்தால் வழக்கை விசாரித்த பின்னர் அந்த சொத்தினை விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கும்அதேவேளை கணவனும் மனைவியும் இணைந்து ஆதனங்களை அனுபவிக்கின்ற சில விடயங்களில் கட்டுப்பாடுகள் உண்டு. இல்லற வாழ்வின் போது மனைவியால் தனியாக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. அதேவேளை மனைவிக்கு எதிராக ஒருவர் வழக்குத் தாக்கல் செய்தால் கணவனும் மனைவி சார்பில் கட்சிக்காரராகின்றார். கணவனும் கட்சி தாரராக இணைக்கப்படவேண்டும்.

அதேவேளை இல்லறத்தின் போது மனைவியோ கணவரோ தமது ஆதனத்தின் அல்லது சொத்தின் பெறுமதியின் 50 வீதத்திற்கும் குறைவானதையே தேடி தேட்ட ஆதனத்தில் பிள்ளைகளுக்கு நன்கொடையாக கொடுக்கலாம்.

அதேவேளை மனைவி இறந்தால் மனைவியின் சொத்தில் 25 வீதம் பிள்ளைகளுக்கும் 25 வீதம் கணவனுக்கும் சென்றடையும். கணவன் இறந்தால் மனைவிக்கு பிள்ளைகள் இல்லாவிடின் 75 வீதமான சொத்துக்கள் வந்தடையும்.

அதேவேளை கணவன் தேசவழமைச் சட்டத்திற்கு உட்படாதவராக இருந்தால் மனைவிக்கு 50 சதவீதமும் கணவனின் சகோதரர்களுக்கு 50 வீதமும் சொத்துக்கள் சென்றடையும்.தமிழனாக இருந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த எந்தவொரு நபரும் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்டவராவார்குறித்த ஒரு நபர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வெளிநாட்டில் அந்நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் யாழ்ப்பாணத்துடன் பூர்வீகத் தொடர்புகளை பேணுமிடத்தில் அவர் தேச வழமைச் சட்டத்திற்கு உட்பட்வராவார்.

அதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள காணிகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு தான் விற்பனை செய்ய வேண்டுமென எந்தச் சட்டமும் கூறவில்லை. சொந்தக் காணியாக இருந்தால் ஏனைய பங்குதாரர்கள் கொள்வனவு செய்யாதவிடத்து அக்காணியை பிறருக்கு விற்பனை செய்ய முடியும். சிறுபான்மையினர் தமது கலாசார மரபுகளை பேணிப் பாதுகாத்து வளர்த்துக் கொள்வதற்கே தேசவழமைச் சட்டம் வழி வகுக்கின்றதென வெளிநாட்டவர்களால் கூறப்படுகின்றது எனத் தெரிவித்தார்.




வட இலங்கையின் மரபுவழிச் சட்டமான தேசவழமையின்படி 'தேடியதேட்டம் என்பது, ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மணம் புரிந்து கொண்டு ஒன்றாக வாழும் காலத்தில் கணவனோ, மனைவியோ சம்பாதித்த சொத்துக்களைக் குறிக்கும். தேசவழமை, இத்தகைய சொத்துக்களை, குறித்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவர்களது முன்னோரிடமிருந்து வரும் சொத்துக்களிலிருந்து வேறுபடுத்துகிறது. இவ்வாறு ஆணுக்கு வரும் சொத்தை முதுசொம் எனவும், பெண்ணுக்கு வரும் சொத்தை சீதனம் எனவும் தேசவழமை குறிப்பிடுகிறது.[1]

பழைய வழக்கின்படி பெண் கொண்டுவந்த சொத்து அவர்களில் பெண் பிள்ளைகளுக்கும் அவர்கள் வழி வரும் பெண் வாரிசுகளுக்கும் மட்டுமே உரியது. அது போலவே ஆண் கொண்டுவரும் சொத்துக்கு அவர்களுடையை ஆண் பிள்ளைகளும் அவர்களது ஆண் வாரிசுகளுமே உரித்து உடையவர்கள். ஆனால், தேடியதேட்டத்தில் இரு பாலாருக்குமே சம பங்கு உண்டு. ஆனாலும், பெண் பிள்ளைகளுக்குச் சற்றுக் கூடிய பங்கு கொடுப்பதற்கு ஆண் பிள்ளைகள் எப்போதும் சம்மதிக்க வேண்டும் என்கிறது தேசவழமை.

வரைவிலக்கணங்கள்[தொகு]

தேசவழமை கூறும் தேடியதேட்டம் என்பதற்குப் பல வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 1911 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட "யாழ்ப்பாண திருமண வாழ்க்கை உரிமைகள் மற்றும் மரபு வாரிசுரிமைச் சட்டம்" இதைப் பின்வருமாறு வரையறுக்கிறது:

1. ஒன்றாக வாழும் காலத்தில் கணவன் அல்லது மனைவி பெறுமதியான விலை கொடுத்துப் பெற்றுக்கொண்ட சொத்து.
2. ஒன்றாக வாழும் காலத்தில் கணவன் அல்லது மனைவியின் சொத்திலிருந்து கிடைக்கும் இலாபம்.

ஆனால், 1947 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்கச் சட்டமான யாழ்ப்பாண திருமண வாழ்க்கை உரிமைகள் மற்றும் மரபு வாரிசுரிமைத் திருத்தச் சட்டம், இதை எதிர்மறையான முறையில் வரையறுக்கிறது. இதன்படி, ஒன்றாக வாழும் காலத்தில் வாழ்க்கைத்துணை ஒருவரின் தனியான சொத்தையோ அதன் ஒரு பகுதியையோ பயன்படுத்தாமல், பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்தையும், அக்காலத்தில் குறிப்பிட்ட வாழ்க்கைத் துணைவரின் சொத்திலிருந்து கிடைக்கும் இலாபத்தையும் தவிர்த்த எதுவும் தேடியதேட்டமாகக் கொள்ளப்படமாட்டாது.

தேசவழமையின்படி, ஒன்றாக வாழும் காலத்தில் கணவன் அல்லது மனைவியின் தனியான சொத்துக்களை விற்று வாங்கிய சொத்துக்களையும் தேடியதேட்டமாகக் கருதமுடியும். ஆனால், 1947 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் மூலம் இவ்வாறு வாங்கப்பட்ட சொத்துக்கள் தேடியதேட்டத்துள் சேராது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment