Sunday 13 February 2022

WORLD RADIO DAY FEBRUARY 13

 

WORLD RADIO DAY FEBRUARY 13


உலக வானொலி தினம் - பிப்ரவரி-13.

**********************************************

உலக வானொலி தினம் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் திகதி கொண்டாடபடுகிறது 

இந்த நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்க்கோ) 2011 நவம்பர் 3 ஆம் திகதி  உலக வானொலி தினத்தை அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும் மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப் பட்டு வருகிறது.

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi)

 வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர்.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல், ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், MASS MEDIA முன்னோடி வானொலி தான்.

முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13 இல் கொண்டாடப் பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.

நாமும் வானொலியாளர்களை மனமுவந்து வாழ்த்துவோம்....

தங்கவேல் யோகராஜ் - இலங்கை.



இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கவில்லை. எனினும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் வழங்கிக் கொண்டிருந்த வானொலி மட்டுமே இருந்ததால் பெரிய பெரிய வீடுகளில் மட்டுமல்ல சின்ன சின்ன வீடுகளிலும் வாழ்க்கை அவ்வளவு சீக்கிரம் சலித்துப்போய் விடவில்லை யாருக்கும்.
கிராமங்களில் ஒரு வீட்டில் சைக்கிள் இருந்தால் மற்றவர்களைவிட அவர்கள் சற்றே வசதியானவர்கள் என்று அர்த்தம். இன்னொரு வீடடில் டைனமோ வைத்த சைக்கிள் இருந்தால் (டைனமோவுக்குக்கூட மஞ்சள் துணி ஸ்கார்ப் போட்டு வைத்திருப்பார்கள்) பெரிய நிலச்சுவான்தார் குடும்பமாகவோ அல்லது பள்ளித் தலைமையாசிரியர் குடும்பமாகவோ இருக்கும். அத்தகைய குடும்பங்களும் விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கும். அதேபோலத்தான் மின்விசிறி, வானொலி, இன்னபிற வசதிகள் பலவும். பிலிப்ஸ் பேனாசோனிக், மர்பி ரேடியோ, டிரான்சிஸ்டர் எனப் பல ரகங்கள் வீட்டுக்குத் தகுந்த மாதிரி இருந்தன.
அக்காலத்தில் மாலை நேரங்களில் வேலை முடித்துவரும் மக்களும் பொறுப்பாக வந்து ரேடியோ முன்வந்து அமர்ந்து கொள்வார்கள்
ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை வானொலியில் நேயர் விருப்பம் ஒலிபரப்பாகும்போது இளையராஜாவின் அன்னக்கிளி பாடல்கள் (மச்சானைப் பாத்தீங்களா மலையாளத் தோப்புக்குள்ளே), பத்ரகாளி பாடல்கள் (கேட்டேளே அங்கெ அதப் பாத்தேளா இங்கே எதையோ நினைச்சேன் அதையே முடிச்சேன் நான்.....) , கிழக்கே போகும் ரயில் (மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ) வீட்டின் வெளிவராந்தாவில் வைத்து தெருவே கேட்கும்படி சவுண்டு வைத்த சில வீடுகளையும் நான் கண்டதுண்டு. மின்காந்த அலைகளில் இளையராஜாவின் பாடல்கள் சாலையில் சென்ற ரசிகனைக்கூட கிறங்கச் செய்தன. பள்ளிக்கூட மாணவர்களோடு சினிமா செய்திகளை மட்டுமின்றி வானொலியில் ஒலிபரப்பப்படும் பாடல்களையும் பகிர்ந்து அளவளாவக்கூடிய சம்பவங்கள் ஏராளம்.
எங்கள் வீட்டில் ஒரு பழைய ரேடியோ இருந்தது. மூன்று வால்வுகள் உள்ள ஒர் மர்பி செட். கொரகொர சவுண்டு இல்லாமல் அட்சரசுத்தமான சொற்களோடு அழகழகான இசையொழுங்கோடு அதன் ஒலிபரப்பில் மயங்கிக் கிடந்த நாட்கள் அவை. அந்த ரேடியோ முகப்பின் அழகே தனி. ரேடியோ ஆன் செய்ததும் நான் பலநேரம் ஸ்பீக்கரிலிருந்து வரும் இனிய பாடல்களைக் கேட்டவாறே, ரேடியோவின் ஸ்டேஷன் வைக்கும் முள் நகரும் எண்கள் பகுதிகளில் வண்ண மின்விளக்கு ஒளிரும் பகுதியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அதற்குள் ஆட்கள இருந்துகொண்டு கச்சேரி செய்கிறார்கள் என்றே நான் சின்ன வயதுகளில் நினைத்ததுண்டு.
ஏஎம் ராஜா, ஜிக்கி பாடல்களை இலங்கை ரேடியோவில கேட்கணும்.... இந்த வாழ்க்கைய சுகமா அனுபவிக்கணும்'' என்பார் என் நண்பனின் தந்தை.
வானொலிப் பெட்டி ரிப்பேர் ஆகக்கூடாது என்று நான் பலமுறை கடவுளை வேண்டிக் கொள்வதுண்டு. காரணம் எங்கள் ஊரில் இருந்த ரேடியோ ரிப்பேர் செய்யும் அண்ணன் வீட்டுக்கு ரிப்பேருக்காக ஒரு வானொலிப் பெட்டி போனால் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வராது. சில ரேடியோக்கள் ரிப்பேர் செய்யப்பட்டு உரிய இடங்களை அடைய இரண்டு ஆண்டுகள் கூட ஆனது
சென்னை, புதுவை, திருச்சி, கோவை நெல்லை என பல்வேறு வானொலி நிலையங்களும் ரசனை அடிப்படையிலான நிகழ்ச்சிகளை, அரசியல் செய்திகளை மிகச்சிறப்பாகவே வானொலிகள் வழங்கிக் கொண்டிருந்தன. அதிலும் விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பு என்றால் அதில் விளம்பரங்கள் உள்ளிட்டுப் பேசும் குரல்களிலிருந்து ஒலிக்கும் பாடல்கள் வரை நேயர்களுக்கு நெருக்கமானதொரு பிணைப்பு. ஞாயிறுகளில் திரைப்பட ஒலிச்சித்திரம் ஒரு நல்ல சினிமாவைப் பார்த்த திருப்தியைத் தரக்கூடியது. தங்கப்பதக்கம் சினிமா ஒலிபரப்பானபோது நடிகர் திலகத்தின் கணீர் குரலில் ஒலிபரப்பைக் கேட்கும் பல வீடுகளும் கப்சிப்பென்று உணர்ச்சிவயப்பட்டு ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கும்.
விவிதபாரதியில் மட்டும்தான் இசையமைப்பாளர் பெயர், பாடியவர் பெயர்களோடு பாடலாசிரியர் பெயரையும் சொல்வார்கள். இதனால் எந்தெந்தப் பாடல் யார் யார் எழுதியது என்பது அக்கால வானொலி ரசிகர்களுக்கு மிக எளிய முறையில் மனப்பாடம் ஆகியிருக்கும். கல்யாணப் பரிசு பாடல்கள் அனைத்தும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் என்றால் மன்னாதி மன்னன் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் பாடல்கள். படகோட்டி, அடிமைப்பெண் பாடல்கள் அனைத்தும் வாலி பாடல்கள் என்றால், பாவமன்னிப்பு, பார்த்தால் பசிதீரும், பாசமலர் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் பாடல்கள். ஆறு நிமிடங்கள் இடம்பெறக்கூடிய சில பாடல்களும் உண்டு. பாடலின் பாதி முடிந்ததும் இசைத்தட்டு திருப்பிப் போடும் ஓசையும் வானொலியில் கேட்கும்.
நம்ம ஊர் விவித பாரதிபோல இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்பில் பெரும்பாலும் தமிழ்ப்படப் பாடல்கள்தான். பொங்கும் பூம்புனல், இரவின் மடியில் எனத் தலைப்புகள்தான் மாறுமே தவிர, பாடல்களை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.
சென்னை வானொலி நிலையத்தில் சினிமா நிகழ்ச்சிகளை மட்டுமல்ல வானொலிக்கென்று பிரத்யேக நிகழ்ச்சிகள் நம் மனதைக் கவரும் வகையில் அமைந்திருக்கும். செவிகளுக்கு விருந்தாகும் இந்த சினிமா ஒலிபரப்பு வாரந்தோறும் வருவதில்லை. மாதத்தில் ஒரு ஞாயிறு என்று நினைவு. மற்ற ஞாயிறுகளில் வானொலி நாடகங்கள். அதில் முக்கியமானது அகில இந்திய நாடகப் போட்டி. இந்திய அளவில் தேர்வான நாடகங்களை அனைத்து மொழிகளிலும் வானொலி ஸ்டுடியோக்களில் தயாரித்து ஒலிபரப்புவார்கள். பெரும்பாலும் நாடகத்தில் நடிக்கும் கலைஞர்களின் குரல்கள் நமக்கு நன்கு பழகிப்போய்விடும். நாடகங்கள் பெரும்பாலும் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து கேட்கக்கூடிய தரமான படைப்புகளாக அமைந்திருக்கும். அற்புதமான பாரதியார் பாடல்களைக் கொண்டு சேர்ந்திசையை வழங்கிய எம்.பி.சீனிவாசனை வானொலி அன்றி வேறு எந்த சாதனம் மூலம் நாம் அறிந்திருக்க முடியும். தனது எளிய மெல்லிசையால் இனிய பாடல்களைத் தந்த டி.ஆர்.பாப்பாவை வானொலி மூலம்தானே நாம் அதிகம் அறிந்தோம். சிறுவர் சோலை நிகழ்ச்சிகளில் குழந்தைகளுடன் அன்போடு பேசும் வானொலி அண்ணா, கூத்தரபிரானாக மாறி நாடகங்களில் அதிரும் வசனங்களைப் பேசும் ஜாலங்களை வானொலிதான் தந்தன.
மறக்க முடியாத நாள்கள்.
No photo description available.
252
68 Comments
77 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment