பாமினி அரசின் தோற்றம் 1347 AUGUST 3
முகமது பின் துக்ளக் தன் தந்தையான Ghiyasuddin Tughluq மூத்த பிள்ளையான இவர் 1324 இல் நிருவாகத்தை கவனிக்கும் பொறுப்பிலான பட்டத்திற்கு வந்தார் - தந்தை கியாசுதீன் துக்ளக் 1325 பிப்ரவரியில் இறந்தார் -
Tughluqabad நகரத்தில் யானைப்படையை அதன் அணிவகுப்பை பார்வை இடும் போது யானை மதம் கொண்டு அணிவகுப்பை சிதற செய்தது -இந்த கலவரத்தில் கியாசுதீன் துக்ளக் மற்றும் அவருடைய இரண்டாவது மகன் முகமத் காணும் யானைப்படையின் அடியில் சிக்கி உயிர் இழந்தனர்
The graves of Ghiyath al-Din Tughluq, his wife and son Muhammad bin Tughluq Zafar Khan's Tomb
கியாஜுதீன் விசுவாசமான நாயின் சமாதியும்
அருகில் உள்ளது
டில்லியில் இருந்து தேவகிரி க்கு 1500 கிலோமீட்டரில் தலைநகர் மாற்றம்
முகமது பின் துக்ளக் தலை நகரை மாற்ற முடிவு செய்தார் -அடிக்கடி நிகழும் மங்கோலிய படையெடுப்புகள் அச்சம் தருவதாய் இருந்தன -எனவே தலைநகரை தேவகிரிக்கு மாற்றும் எண்ணம் ஏற்பட்டது .இந்த நகரம் முஸ்லீம் அரசருக்கு உண்டான பெயர் மாற்றத்தில் தவ்லதாபாத் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது .
தந்தை இறந்த பின் 40 நாள் கழித்து தன்னை மன்னனாக அறிவித்து சிம்மாசனம் ஏறினார் - என்றாலும் 1324 லிலிருந்தே நிர்வாகம் அவர் கட்டு பாட்டில் இருந்தது -சுல்தான் முகமது பின் துக்ளக் நில அளவையை சீராக்கி அதற்கேற்ற வரி விதித்தார் - இப்போதும் இந்தியாவின் பல இடங்களில் இந்த அளவையே மேற்கொள்ளப் படுகிறது இவ்வாறு பல சீர்திருத்தங்கள் செய்தார் .ஆனால் பலன் அளிக்கவில்லை என்பது வேறு விஷயம் .ஆனால் திட்டம் என்னவோ நல்ல திட்டமே .
அவ்வாறு முடிவு செய்யப்பட்டதுதான் தலை நகரை மாற்றும் திட்டம்
1327 இல் சுல்த்தான் தவ்லதாபாத்திற்கு டில்லியில் இருந்து குடிமக்கள்
சகிதமாய் புறப்பட்டார் .நடக்க முடியாதவர்கள் கொல்லப்பட்டனர்
கண் தெரியாதவர்கள் குதிரை வாலில் வழிகாட்டியாய் கட்டப்பட்டனர்
இவ்வாறே அலாவுதீன் ஹஸன் தேவகிரி வந்தடைந்தார் -அங்கிருந்தவாறே அரசின் அலுவல்களை கவனித்தார் -
1334இல்பிரார் காண்டெஷ்,மாளவம்,தக்காணம் என்று டில்லியை சுற்றி குழப்பம் ஏற்பட்டது -எல்லாவற்றையும் சுல்த்தான் அடக்கினாலும்
குஜராத்தி கலவரத்தை அடக்க அங்கு செல்ல வேண்டியதாயிற்று
Deccan (1326, 1347), Mabar (1334), Bengal (1338), Gujarat (1345), and Sind (1350)
முகமது பின் துக்ளக் சமாதி
அலாவுதீன் ஹாசன்
இவர் கி பி 1290 இல் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் அவர் Gangadhar Shastri Wabale என்ற பிராமணரிடம் கல்வி கற்றார் -அக்குருவின் ஞாபகமாய் ஹஸன் கங்கு என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார் .விரைவில் தக்க வயதில் சுல்தானின் படையில் சிப்பாயாக சேர்ந்து குதிரைப்படையில் தளபதியாய் உயர்ந்தார்
நாட்டில் ஏற்பட்ட பல்வேறு கிளர்ச்சியின் பயனாக 1345 இல் குஜராத்திற்கு
சுல்த்தான் புறப்பட்டார் .இதை பயன்படுத்திக்கொண்டு தக்காணத்து பிரபுக்கள் ஒன்று கூடி இஸ்மாயில் முக் ismail mukh தலைமையில் ஒரு அரசை நிறுவினர் .
அவர் அமீர்-உல்-உம்ரா என்ற பட்ட பெயர் சூட்டி கொண்டார் - சிறிது காலத்திற்கு பின்னர் திறமைசாலியான ஹசன் கங்கு வை அரசராக்கி னார் .
இவர் சிக்கந்தரி சானிக் அப்துல் முஜாபார் சுல்த்தான் அலாவுதீன் ஹாசன் SIKKANTHARI SANIK ABDUL MUZAFFAR SULTAN ALLAUDDIN HASSAN BAHMANSHA BAHMINI
பாமன் ஷா பாமினி என்ற பெயரில் 1347 ஆகஸ்ட் 3 இல் அரியணை ஏறினார்
No comments:
Post a Comment