Tuesday, 3 February 2026

INDIA FIRST WAR OF INDEPENDENCE

 



சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் முதல் சுதந்திரப் போரும் (1857) சாவர்க்கரும்!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் முதல் சுதந்திரப் போரும் (1857)  சாவர்க்கரும்!

எஸ்.வி.ராஜதுரை

இந்திய வரலாற்றை ‘ஓர் இந்தியனின் நோக்குநிலை’யிலிருந்து எழுதுவதில் உதாரண புருஷராக ‘வீர்’ சாவர்க்கர் விளங்குகிறார் என்று அமித் ஷா கூறியிருப்பதால், அப்படிப்பட்ட வரலாற்று நூல் மீது கவனம் செலுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

1857ஆம் ஆண்டில் வட இந்தியாவின் சில பகுதிகளில், கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் இருந்த இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த நிகழ்வை , பொதுவாக ‘சிப்பாய் கலகம்’ என்றழைக்கப்பட்ட நிகழ்வைப் பற்றி பல்வேறு கருத்துகளும் விளக்கங்களும் சொல்லப்பட்டு வருகின்றன. அந்தக் கிளர்ச்சியின் 150ஆண்டு நிறைவையொட்டி இந்தியாவின் புகழ்பெற்ற வார ஏடான, 'எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி' சிறப்பிதழைக் கொண்டு வந்தது. இந்திய அரசியல் தலைவர்கள், வரலாற்றாசிரியர்கள் எனப் பல தரப்பட்டவரும் 1857ஆம் ஆண்டுக் கிளர்ச்சி பற்றிய தத்தம் கருத்துகளைக் கூறியுள்ளனர். அது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கீழே இருந்து தோன்றிய கிளர்ச்சி!

பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் இந்திய சிப்பாய்கள் நடத்தப்பட்டு வந்த விதம், பிரிட்டிஷாரின் பொருளாதாரச் சுரண்டல், அவர்களுடைய ஆக்கிரமிப்புகளின் விரிவாக்கம், கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்றச் செயல்பாடுகள், சுதேசி மன்னர்கள் ஆண்டு வந்த நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதற்காக குழந்தைப் பேறுகள் இல்லாதவர்கள் தத்து எடுத்துக் கொள்வதைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டன . ( இது சுதேசி மன்னர்களை மட்டுமின்றி, நிலமும் சொத்தும் வைத்திருந்த ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் பாதித்தது), மத விவகாரங்களில் தலையிட்டமை என்ற பல்வேறு காரணங்களால் அதிருப்தியும் எரிச்சலுமடைந்திருந்த பல்வேறு வர்க்கங்களையும் சாதிகளையும் சேர்ந்த மக்களின் ஆதரவு அந்தக் கிளர்ச்சிக்கு இருந்தது.

எனவே அதை ‘கீழே இருந்து தோன்றிய கிளர்ச்சி’ என்று சொல்லலாம்; சுவீகார முறை தடை செய்யப்பட்டதால் பிரிட்டிஷாரால் பதவி பறிக்கப்பட்ட, அல்லாது அவர்களால் ஓய்வூதியம் தரப்படாதவர்களும் சமஸ்தான ஆட்சியாளர்கள் என அங்கீகரிக்கப்படாதவர்களும் அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கத் தொடங்கினர். எனினும், அந்த சிப்பாய்களின் தன்னெழுச்சியிலோ, பின்னர் அவர்களை வழிநடத்திச் சென்ற தலைவர்களிடமோ ‘இந்திய தேசிய உணர்வு’ இருந்தது, இந்திய தேசியத்தின் வெளிப்பாடாகவே அந்தக் கிளர்ச்சியைக் காண வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்வது கடினம்.

ஏனெனில் அப்போது ‘இந்துஸ்தான்’ என்பது ஒரு நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்பட்டு வந்ததேயன்றி, ‘தேசம்’ என்று நவீனகாலத்தில் பொருள் கொள்ளப்படக்கூடிய ஓர் அரசமைப்பாக இருக்கவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனிதான், ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யுடன் இந்திய மக்களை ‘இந்துக்கள்’ என்றும் ‘முஸ்லிம்கள்’ என்றும் பாகுபடுத்தியிருந்தது. ‘ ஜாதியை ஒழித்துக்கட்டுதல்’ (Annihilation of Caste) என்னும் புகழ்பெற்ற உரையில் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்: “முதலாகவும் முக்கியமானதாகவும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்து சமூகம் என்பதே ஒரு கட்டுக்கதைதான் என்பதைத்தான். ‘இந்து’ என்ற பெயரே ஒர் அந்நியப் பெயர்தான். உள்ளூர் மக்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக முகமதியரால் அந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட பெயர்தான் ‘இந்துக்கள்’ என்பது.முகமதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் ‘இந்து’ என்ற சொல்லே காணப்படவில்லை”

இந்தக் கருத்தும் ஓர் இந்தியனால் ‘இந்திய நோக்கு நிலை’யிலிருந்து எழுதப்பட்டதுதானே அல்லவா?

ஹிந்து பற்றி மஹா பெரியவர்

’மஹாபெரியவர்’ என்று கூறப்படும் காஞ்சி சங்கராச்சாரியார்கூட ’தெய்வத்தின் குரல்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள அவரது கட்டுரைகளின் தொகுப்பின் முதல் பாகத்தில் கூறியுள்ளார். ”நமக்கு சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்ற பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது…நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்ற பொதுப் பெயரைத் தந்து இன்று இந்திய தேசம் என்ற ஒன்று இருக்கும்படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்”.

ஆக, இதுவும்கூட ‘ ஓர் இந்தியனால், இந்தியனின் நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்ட வரலாறு’ என்று அமித் ஷா ஏற்றுக் கொள்வார் என்று நம்பலாம்.

தேசியத்துக்கு அடிப்படையிட்ட காங்கிரஸ்

சிப்பாய்களின் எழுச்சி தோற்கடிக்கப்பட்ட பின், பிரிட்டிஷ் அரசாங்கம் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்த இந்தியப் பிரதேசங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் சமஸ்தானங்களைத் தன் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வைத்திருக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. மறுபுறம், ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்த அறிவாளிகளால் இந்திய அளவிலான தேசிய உணர்வை வளர்க்க முடிந்தது. அந்த அறிவாளிக்கூட்டத்தைச் சேர்ந்த சிலர்தான் 1884ஆம் ஆண்டில் பம்பாயில்கூடி காங்கிரஸ் என்னும் அமைப்பைத் தோற்றுவிப்பதற்கான அடிப்படைகளை வகுத்தனர் என்பதை ‘தி ஹிந்து’ , ‘சுதேசமித்ரன்’ ஏடுகளை நிறுவியவரும் தொடக்ககாலக் காங்கிரஸ்காரருமான ஜி.சுப்பிரமணிய ஐயரின் வரலாற்றை எழுதியுள்ள குருமலை சுந்தரம் பிள்ளை கூறியுள்ளார்:

“இதற்கு முன் இந்தியா முழுவதிலுமுள்ள பெரிய மனிதர்களெல்லோரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கலாமேயன்றி நேரே சந்தித்திருக்க முடியாது. காசி, இராமேஸ்வரம் முதலிய ஷேத்திரங்களுக்கு இந்தியாவிலுள்ள எல்லா இந்துக்களும் வந்து கூடுவது வெகுகாலமாயிருக்கும் வழக்கமாயிருப்பினும், அங்கு கூடுபவர்கள் பெரும்பாலும் தெய்வ பக்தர்களும் சந்நியாஸிகளுமன்றி தேசபக்தர்களல்லர். அன்றியும் ஒவ்வொரு ஸ்தலத்திலும் ஒவ்வொரு மதத்தலைவர்கள் கூடுவார்களேயன்றி எல்லா மதஸ்தர்களும் கூடுவது அரிது . ஏக்தேசமாய்க் கூடும்படி நேர்ந்தாலும் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு வருமுன் இங்கிலீஷ் கற்றறிந்திருந்த இந்தியர்கள் தத்தம் சுயபாஷையில் பேச முடிந்திருக்குமேயன்றி அனைவரும் ஒரே பாஷையில் சம்பாஷணை செய்திருக்க முடியாது. சம்பாஷணையில்லாவிடத்து அநுதாபமும் ஒருதாய் மக்களென்ற சகோதர பாவமும் உண்டாதல் அரிது. ஆதலால் ரிப்பன் பிரபு இந்தியா விட்டு நீங்கிய அப்புண்ணிய வருஷத்தில் இங்கிலீஷ் கற்றவர்களும் தேசாபிமானமுள்ளவர்களும் பல்வேறு மதத்தவரும் ஆகிய இந்தியப் பெரிய மனிதர்கள் கூடும்படியான சந்தர்ப்பம் மிகவும் அபூர்வமான சந்தர்ப்பமேயாகும். இந்த சந்தர்ப்பமே இப்போது இந்தியா முழுமையையும் தன்வயப்படுத்தியாளுகின்ற இந்தியன் நேஷனல் காங்கிரஸ் என்னும் மகாசபைக்கு கருப்போற்பத்திச் செய்த மகாசந்தர்ப்பமாகும்”

அதற்கு முன்பே வங்காளத்தைச் சேர்ந்த கேசவ சென் போன்றோர், வங்காளத்துக்கு அப்பால் உள்ள பகுதிகளில் தேசிய உணர்வு கொண்டிருந்தவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் செய்திருந்த போதிலும், அனைத்திந்திய தேசியம் என்பதற்கு அடிப்படையிட்டது காங்கிரஸ்தான். எனினும், உலகின் பலவேறு நாடுகளில் இருந்த, இருந்துவருகிற தேசியவாதிகள் தங்கள் தேசத்திற்கும் தேசியத்துக்கும் நீண்ட நெடுங்கால வரலாறு உள்ளதாக உரிமை கொண்டாடுவதுபோலவே, நினைவுக்கு எட்டாத பழங்காலத்திலிருந்தே இந்தியா என்கிற தேசமும் இந்திய தேசிய உணர்வும் இருந்தது என்ற கருத்து இந்திய தேசியவாதிகள் கிட்டத்தட்ட எல்லோரிடமும் வகுப்புவாதத்தை விரும்பாத, வகுப்புவாதத்தை ஊக்குவித்த இரு தரப்பாரிடமும் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இந்த இருவகையான தேசியவாதிகளும் இருந்தனர்.

ஓ... தியாகிகளே...

இந்தப் பின்னணியில்தான் வி.டி.சாவர்க்கர் எழுதிய ‘இந்தியாவின் முதல் சுதந்திரப் போர், 1857’ ( India’s First War of Independence of 1857) என்னும் நூலைக் காணவேண்டும்.சிப்பாய் கிளர்ச்சியின் 51ஆம் ஆண்டு நிறைவையொட்டி மராத்தி மொழியில் அவர் எழுதிய ‘ஓ, தியாகிகளே’ என்னும் நீண்ட கட்டுரையின் சுருக்கமான வடிவம் ஏற்கனவே 1907இல் மராத்தி நாளேடான ’விஹாரி’ என்னும் ஏட்டில் வெளிவந்திருந்தது. இந்த நீண்ட கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் 1909இல் இங்கிலாந்தில் அச்சிடப்பட்டது. ஆனால், அந்த நூலின் முதல் அத்தியாயம் மட்டுமே இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குக் கிடைத்திருந்த போதிலும், அது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கலகம் செய்யத் தூண்டிவிடும் என்றஞ்சி , அந்த நூல் இந்தியாவிற்கு வராமல் தடை செய்துவிட்டனர்.

அந்த ஆங்கில நூலில், அதன் ஆசிரியர் பெயர் ‘ஓர் இந்திய தேசபக்தன்’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. சாவர்க்கார் மீது சதிக்குற்றம் சாட்டப்பட்டதால், அப்போது இங்கிலாந்தில் இருந்த அவர், அந்தப் புத்தகத்தைத் தடை செய்வது பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் சட்டப்படி சரியானதுதான் என்றாலும், அது நியாயமானது அல்ல என்றும், தமக்கும் அந்தப் புத்தகத்துக்கும் சம்பந்தமில்லை என்றும், தம்மிடம் அரசாங்கம் விளக்கம் கேட்காமலேயே தம் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது தவறு என்றும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறினார்.

பிரிட்டிஷாரின் தடையுத்தரவை மீறி, அந்தப் புத்தகம் இந்தியாவின் பல பாகங்களில் படிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்த இந்திய தேசியவாதிகள் மட்டுமின்றி இந்தியாவில் செயல்பட்டுகொண்டிருந்த பகத் சிங், சுபாஷ் போஸ் போன்றவர்களாலும் அந்தப் புத்தகம் படிக்கப்பட்டும் அதன் பிரதிகள் விநியோகிக்கப்பட்டும் வந்ததால் அந்த நூலுக்குக் கூடுதலான கீர்த்தி கிடைத்தது.

இங்கிலாந்தில் நடந்த விவாதம்

1848 ஆம் ஆண்டு நிகழ்வு சிப்பாய் கலகமா, தேசியக் கிளர்ச்சியா என்ற விவாதம் பிரிட்டனிலும்கூட நடந்தது. கார்ல் மார்க்ஸால் மாய்மாலவாதி என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டவரும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற அவைத் தலைவராக இருந்தவருமான டிஸ்ரேலி அதை ‘தேசியக் கிளர்ச்சி’ (National Revolt) என்றே குறிப்பிட்டார். மார்க்ஸும்கூட அதை ‘இந்தியக் கிளர்ச்சி’ என்று குறிப்பிடுகிறார். ஆனால் பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகளும் வரலாற்றாய்வாளர்களும் கொண்டிருந்த கருத்து என்னவென்றால், சிப்பாய்களும் அவர்களை ஆதரித்த சுதேசி மன்னர்களும் அற்பத்தனமானவர்கள், சுயநலமிகள், அறிவற்றவர்கள், என்பதுதான். இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில், சிப்பாய் கலகம் பற்றி பிரிட்டிஷ் அதிகாரிகளும் வரலாற்றாசிரியர்களும் எழுதிய நூல்களைப் படித்து, அவர்கள் அதைப் பற்றி எழுதியவற்றை மறுதலிக்கும் வகையில், அந்த நூல்களிலுள்ள விவரங்களைப் பயன்படுத்தியே சாவர்க்கரால் எழுதப்பட்டுள்ள நூலில்தான் அந்த எழுச்சி இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று குறிப்பிடப்படுகிறது.

சாவர்க்கர் சொல்லும் காரணிகள்

அதே போலவே ‘சிப்பாய் கலகம்’ தோன்றியதற்கான காரணிகள் என்று பிரிட்டிஷார் தரப்பில் சொல்லப்பட்டவற்றை (துப்பாக்கி முனைகளிலும் குண்டுகளிலும் பசு,பன்றிக் கொழுப்புகளைத் தடவியதால் இந்திய சிப்பாய்களுக்கு ஏற்பட்ட கோபம் இந்தியாவின் கடைசி மொகலாய மன்னரிடமிருந்த கடைசி ஆட்சிப் பகுதியான ஆவதை கிழக்கிந்தியக் கம்பெனி கைப்பற்றியமை) ’இரண்டாம்பட்சக் காரணிகள்’ என்றும், அந்தப் புரட்சிக்கு மூலகாரணமாக இருந்தது ‘ஸ்வதர்மம்’’, ‘ஸ்வராஜ்யம்’ ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்ச்சிதான் என்று தமது நூலின் முதல் பாகத்தின் முதல் அத்தியாயத்திலேயே அறுதியிடுகிறார். எனினும், அந்த இரண்டாம் பட்சக் காரணிகளை விளக்குவதற்கு ஏராளமான பக்கங்களை ஒதுக்கியுள்ளார் இந்த நூலில்.

1858ஆம் ஆண்டு ‘சுதந்திரப் போர்’ இந்தியாவின் கடந்த காலப் போர் மரபின் நவீனப் புரட்சிகர வடிவம் என்றும், குவாலியர் அரசர் ஸிந்தியா, நேபாள இந்து மன்னர், காஷ்மீர் இந்து மன்னர் போன்ற பிரிட்டிஷ் விசுவாசிகள் இழைத்த துரோகம்தான் அந்த சுதந்திரப் போர் தோல்வியடைந்ததற்கான காரணம் என்றும் கூறுகிறார்.

அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சியில் நிகழ்ந்ததைப் போலவே, இந்தியாவிலும் படித்த, அறிவொளி பெற்ற இந்தியர்கள் சுதந்திர உணர்வுடன் தங்களை ஒட்டுமொத்தமாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறும் சாவர்க்கர், அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சியில் ஈடுபட்டவர்கள் மக்களின் மத உணர்வையோ நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே இருந்து வந்த தேசிய உணர்வையோ கொண்டிருக்கவில்லை என்பதைச் சொல்வதில்லை.

அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளைவிட மேம்பட்டதாகவும், புதிய சமூக அமைப்பை உருவாக்கக்கூடியதாகவும் இந்தியப் புரட்சி அமைய வேண்டும் என்று கூறும் அவர், அதே மூச்சில் கிழக்கு நாடுகளில் தோன்றிய புரட்சிகள் எல்லாம் மதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று சொல்கிறார். சாதி அமைப்பில் சில சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்று கூறுகிறார்.

‘இராமராஜ்யத்தை’ உருவாக்குவதற்காக நீண்டகாலமாகக் காத்துக் கொண்டிருந்த போருக்கு இராவணன் சீதையைக் கடத்திய சம்பவம் எப்படி ஓர் இரண்டாம் பட்சக் காரணியாக இருந்ததோ, அது போன்றவைதான் மேற்சொன்ன ‘இரண்டாம்பட்சக் காரணிகள்’ என்றும் ‘இராமராஜ்யம்’ என்பது ‘தர்ம ராஜ்யம்’ (அறம்சார்ந்த அரசு) என்றும் கூறுகிறார். இராவணனை வெற்றி கொண்ட பிறகு இராமராஜ்யத்தை நிறுவி பல நூற்றாண்டுகள் அதை இராமன் ஆண்டு வந்ததற்கான காரணம், அவன் ‘ஸ்வதர்மம்’, ‘ஸ்வராஜ்யா’ ஆகிய இரண்டு நெறிகளையும் பற்றியொழுகியதும், அவனே தர்மத்தின் உருப்பிழம்பாக இருந்ததும்தான்.

அகண்ட பாரதம்

1757இல் பிளாஸி யுத்தத்தில் வெற்றி பெற்றதிலிருந்து தொடங்கி, 1848 வரை பிரிட்டிஷார் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, சிலோன் ஆகியவை உள்ளடங்கிய நிலப்பரப்பைத் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிட்டனர். இந்தப் பகுதிகள் முழுவதையும் அடங்கிய நிலப்பரப்புதான் ஒரு காலத்தில் ‘பிரிட்டிஷ் இந்தியா’ என்ற வரைபடமாக ஆங்கிலேயரால் உலகப் படத்தில் காட்டப்பட்டு வந்தது. ஆனால், பிரிட்டிஷார் வெற்றிகொண்ட நிலப்பரப்பை, நவீன காலத்துக்கு முன்பே இருந்துவந்த ‘அகண்ட பாரதம்’ என்றும் ‘பாரதமாதா’ வின் வரைபடக் காட்சி என்றும் வாதிடுகிறார் சாவர்க்கர். வேதகால ஆரியர்களின் தாக்கத்தினால்தான் இந்திய நாகரிகம் உருவாயிற்று என்பது அவர் கருத்து.

சாவர்க்கர்-மார்க்ஸ் பார்வைகள்

இந்திய சிப்பாய்களின் கிளர்ச்சி பற்றியும் அதை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷார் மேற்கொண்ட இராணுவ முயற்சிகள் பற்றியுமான விவரங்கள், வி.டி,சாவர்க்கரின் நூலை ஒப்பிடுகையில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகளில் நிறையவே உள்ளன. எனினும் மார்க்ஸ் இந்தியாவை நவீன காலத்துக்கு முன்பே இருந்த தேசம் என்று கூறவில்லை. மாறாக, இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முக, பன்மொழித் தன்மையை மார்க்ஸ் அறிந்திருந்தார் என்று கூறலாம். “தீர்க்க முடியாத முரண்பாடுகள், இனங்கள், பழங்குடி மக்கள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, (ஆங்கிலேயர்களால்) உருவாக்கப்பட்ட பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்” என்று ‘நியூயார்க் ட்ரிப்யூனில்’ 1857 ஜூலை 15இல் வெளிவந்த ‘இந்திய இராணுவத்தில் கிளர்ச்சி’ (The Revolt in the Indian Army) என்ற கட்டுரையில் கூறுகிறார்.

பிரிட்டிஷாருக்கும் இந்தியர்களுக்கும் இருந்த கலாச்சார வேறுபாடுதான் அந்த சுதந்திரப் போருக்கான காரணம் என்று கூறும் சாவர்க்கர், அரசியலையும் மதத்தையும் தனித்தனியாகப் பிரித்து வைத்த பிரிட்டிஷாரின் செய்கை இந்து மரபுக்கு வெறுப்பை உண்டாக்கக்கூடியது என்றும் ‘ஸ்வதர்மமும்’ ‘ஸ்வராஜ்ய’மும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்று கீழ்த்திசை நாடுகளைச் சேர்ந்த எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றும், ‘ஸ்வதர்மா’ என்பது ’ பரலோகத்தில் தரப்படும் பாதுகாப்பு என்றும்’ ’ஸ்வராஜ்யா’ என்பது இகலோக அதிகாரத்தின் வாள் என்றும் கூறுகிறார்.

ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் ‘உடன்கட்டை ஏறுதல்’, ‘ பெண் குழந்தைகளைக் கொல்லுதல்’ ஆகியவற்றைத் தடை செய்தும், விதவைகள் மறுமணம் செய்து கொள்வதற்கு ஒப்புதல் அளித்தும் கிழக்கிந்தியக் கம்பெனி பிறப்பித்த ஆணைகள் அறவியல் சார்ந்தவையல்ல என்றும், மாறாக இந்திய மதங்களை (இந்து மதம், மொகமதிய மதம்) ஒழித்துக்கட்டுவதும், அப்படி ஒழித்துக்கட்டுவதன் மூலம் இந்திய தேசிய உணர்வுக்குக் குழிதோண்டுவதும், அந்த மதங்களின் இடத்தில் கிறிஸ்தவ மதத்தைக் கொண்டுவருவதற்குமான நடவடிக்கைகளே என்று சாடும் சாவர்க்கர், இந்த ஒடுக்குகுறை நடவடிக்கைகள் ஒளரங்கசீப்பின் நடவடிக்கைகளை ஒத்திருப்பதால், இன்று நமக்கு சிவாஜிகளும் குரு கோவிந்த் சிங்கும் தேவைப்படுகின்றனர் என்கிறார்.

தீக்குச்சியான சுவீகார தடைச் சட்டம்

பிரிட்டிஷார் அமைத்த ரயில்பாதைகள் சாதி ஒழிப்புக்கு வழிவகுக்கும் என்று மார்க்ஸ் கருதியதற்கு மாறாக, சாவர்க்கரோ இந்துக்களின் சாதி உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இரயில் பாதைகளும் இரயில் பெட்டிகளும் கட்டப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். ‘உடன்கட்டை ஏறும் வழக்கத்தை’ பிரிட்டிஷார் தடை செய்தது, மக்களின் விருப்பத்துக்கு எதிரான செயல் என்று கூறும் சாவர்க்கர், இது போன்ற சட்டங்கள் சிலை வழிபாட்டைத் தடை செய்வதிலும்கூட போய் முடியலாம் என்றும், மத நூல்களின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் சமூகப் பழக்கவழக்கங்கள், அனுஷ்டானங்கள் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மதங்களைச் சேர்ந்த, தக்க அதிகாரம் கொண்ட தனிநபர்களுக்கும் அல்லது நிறுவனங்களுக்கும்தான் அந்த மாற்றத்தைச் செய்யும் உரிமை இருக்கின்றது, அவற்றைப் பின்பற்றுபவர்களின் ஊடாகத்தான் அதைச் செய்ய முடியும், வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று கூறுகிறார். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தத்து எடுத்துக் கொள்வதை இந்துக்கள் உன்னதமான விஷயமாகக் கருதுகிறார்கள் என்றும் தர்ம சாஸ்திரங்கள் விதிக்கும் புனித ஆணைகளில் அதுவுமொன்று என்றும் கூறும் அவர், இந்திய சுதந்திரப் போர் என்னும் வெடிமருந்தை வெடிக்கச் செய்வதற்கான தீக்குச்சியாகப் பயன்பட்டதுதான் டல்ஹெளசி கொண்டுவந்த சுவீகாரத் தடைச் சட்டம் என்கிறார்.

இரகசிய சங்கங்கள்

மொகலாயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட சிவாஜி, ஐக்கிய இத்தாலியை உருவாக்குவதற்கான போராட்டத்தில் முக்கியப் பாத்திரம் வகித்த மாஜினி ஆகியோராலும் ஐரோப்பியப் புரட்சியாளர்களாலும் உருவாக்கப்பட்ட ‘இரகசிய சிறு அமைப்புகள்’ (secret cells), இந்தியாவில் தங்கள் படைபலத்தையும் சுதேசிக்கூட்டாளிகளையும் கொண்டிருக்கும் பிரிட்டிஷாரை எதிர்த்து முறியடிப்பதற்கு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தும் சாவர்க்கர், இந்திய சிப்பாய்களும் அவர்களுக்குத் தலைமை தாங்கியவர்களுக்கும் இருந்த இத்தகைய இரகசிய அமைப்புகளின் திறமையைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட சித்திரத்தை வழங்குகிறார். (’இரகசிய சங்கங்’களில் சாவர்க்கருக்குக் கடைசிவரை ஆர்வம் இருந்தது வரலாறு.)

இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே ரத்தம்

இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இருசாராரையும் அந்த சுதந்திரப் போரில் வழிநடத்திச் சென்ற அடிப்படையான நெறிகள் ‘ஸ்வதர்மா’வும் ‘ஸ்வராஜ்யா’வும் என்றும் இந்து மதம், இஸ்லாம் ஆகிய இரண்டும் இந்தியாவின் மதங்கள் என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரே இரத்தம்தான் இருக்கிறது என்றும், சுதந்திரம் என்னும் மிக உன்னதமான இலட்சியத்தின் பொருட்டும், தேசம் மரித்துவிடக்கூடாது என்பதற்காகவும் இந்திய மக்கள் சாதி, மதம், வர்க்க, மொழி வேறுபாடுகளைக் கடந்து , தாய் (பாரத மாதா) ஒடுக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாமல் ஒன்றிணைந்து போராடினர் என்றும் கூறுகிறார்.

அதே வேளை , முகமது கஜினி இந்தியா மீது படையெடுத்து வந்த பிறகு, இந்தியாவில் நடந்த சண்டைகள் யாவும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த சண்டைகளே என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் கூறுகிறார். இந்து மன்னர்களுக்கிடையிலும் முஸ்லிம் மன்னர்களுக்கிடையிலும் நாடு பிடிப்பதற்காக நடந்த சண்டைகளை அவர் குறிப்பிடுவதேயில்லை. கிளர்ச்சியாளர்கள் மீரத்திலிருந்து புறப்பட்டு டெல்லியைக் கைப்பற்றிய ஐந்து நாட்களின்போது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்து வந்த இடைவிடாத சண்டைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அந்த நாட்களில் ” இந்துக்களும் முஸ்லிம்களும் பகைவர்களல்லர், வெற்றியாளர்களோ, வெற்றி கொள்ளப்பட்டவர்களோ அல்லர், ஆனால் அவர்கள் இருவரும் சகோதரர்கள்!” என்று பிரகடனம் செய்யப்பட்டதாகவும் கூறுகிறார். “சிவாஜி, பிரதாப் சிங், சத்ரசால், பிரதாபாதித்யா, குரு கோவிந்த் சிங், மகாதாஜி ஸிந்தியா ஆகியோரால் கடந்தகாலத்தில் மொகலாயர்களின் நுகத்தடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பாரத மாதா” அந்த ஐந்து நாட்களின்போது “இனிமேல் நீங்கள் (இந்துக்களும் முஸ்லிம்களும் – எஸ்.வி.ஆர்) சரிசமமானவர்கள், சகோதரர்கள், உங்கள் இருவருக்கும் சரிசமமாக நான்தான் தாய் என்ற புனிதமான மந்திரத்தை ஓதியதாக” சொல்கிறார். மேலும், பண்டைய ஆரியர்களின் காலத்திலிருந்து தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் அதிகாரம் அந்த ஐந்து நாட்களில் மீண்டும் எழுந்ததாகக் குதூகலிக்கிறார். (105)

அந்த சுதந்திரப் போரை நடத்தியவர்களும் அதற்கு ஆதரவளித்தவர்களும் தத்தம் மதங்களை உயிரினும் மேலானதாகக் கருதியவர்கள் என்று கூறும் அவர், அதற்கு ஆதாரமாக டெல்லியில் மொகலாய மன்னராக மீண்டும் முடிசூட்டப்பட்ட பகதூர் ஷா வெளியிட்ட பிரகடனத்தைக் குறிப்பிடுகிறார்: ” கடவுள் நமக்கு செல்வம், நிலம், அதிகாரம் ஆகியவற்றை எதற்காகக் கொடுத்தார்? தனிப்பட்ட மனிதர்களின் சந்தோசத்துக்காக அல்ல மாறாக நமது மதத்தைக் காப்பாற்றும் புனிதச் செயலுக்காக”.

பிரிட்டிஷாரின் பொருளாதாரச் சுரண்டலைப் பற்றிப் பேசுகையில் சாவர்க்கர் பெரிதும் கவனம் குவிப்பது, மன்னர்கள், ஜமீந்தார்கள், நவாப்புகள், தாலுக்தாரர்கள் ஆகியோரின் உடைமைகள் பிரிட்டிஷாரால் அபகரிப்பட்டதன் மீதுதான்.

முஸ்லிம் மன்னர்களைப் புகழ்ந்த சாவர்க்கர்

அந்த சுதந்திரப் போரில் பங்கேற்ற கான் பகதூர் கான், மெளல்வி அஹ்மது, அலி நாக்கி கான், அஸிமுல்லா போன்ற முஸ்லிம்களைப் புகழ்ந்தும், பிரிட்டிஷ் விசுவாசிகளாக இருந்த இந்து மன்னர்களை இகழ்ந்தும் எழுதும் சாவர்க்கர், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே இரத்தத்தைக் கொண்டவர்கள், இந்து மதமும், மொகலாய மதமும்தான் இந்தியாவின் மதங்கள் என்றெல்லாம் கூறினாலும், முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ‘ராமராஜ்யம்’, ‘பாரத மாதா’, ‘ஆரிய நாகரிகம்’ போன்ற சொல்லாடல்களை அவர் கைவிடுவதில்லை. அதுமட்டுமல்ல, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றுக்கும் – அவரைப் பொறுத்தவரை சீரிய எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்கள் – நானா சாகிப் போன்ற மராத்திய வீரர்கள்தான்.

கிளர்ச்சிப் படைகள் மொகலாய வம்சத்தின் கடைசி மன்னரான பகதூர் ஷாவை மீண்டும் அரியணையில் ஏற்றியதைப் பற்றிக் குறிப்பிடுகையில், மொகலாய வம்சம் இந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல, பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒன்று என்றும், வெளிநாட்டுத் துணிச்சல்காரர்களாலும் உள்நாட்டு சுயநலமிகளாலும் சேர்ந்து உருவாக்கப்பட்டதே அது என்றும், இப்போது பகதூர் ஷா ஏறிய அரியணை அதுவல்ல என்றும் கூறினார். முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இருந்த நீண்டகாலப் பகைமை இந்த சுதந்திரப் போரின் காரணமாக மறைந்தொழிந்ததது என்றும், அந்த இரு மதத்தினருக்கும் உள்ள சகோதரத்துவத்தின் குறியீடாகவே பகதூர் ஷா அரியணை ஏற்றப்பட்டார் என்றாலும், அது தாற்காலிக ஏற்பாடுதான் என்று திட்டவட்டமாக அறிவித்துவிடுகிறார் சாவர்க்கர்!

அந்த ‘சுதந்திரப் போர்’ தோல்வியடைந்ததற்கான காரணங்களில் ஒன்று, கிளர்ச்சியாளர்களை ஒப்பிடுகையில் பிரிட்டிஷாரிடம் பன்மடங்கு கூடுதலான இராணுவ வலிமை இருந்தது என்றும், அது தற்காலிகமான தோல்வியே என்றும், இந்திய தேசியம் என்னும் எரிமலை மீண்டும் வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திலிருந்த இந்து, முஸ்லிம் சிப்பாய்களுக்குக் கொடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பன்றி, பசுமாட்டுக் கொழுப்புகள் தடவப்பட்டிருந்தது அவர்களது மத உணர்ச்சியைப் புண்படுத்தியதால் அது அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்தெழுந்ததற்கான ஒரு இரண்டாம் பட்சக் காரணியாக அமைந்தது என்பதை விரிவாக எடுத்துரைக்கும் சாவர்க்கர், அதே துப்பாக்கிகளையும் குண்டுகளையும்தானே கிளர்ச்சியாளர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் பயன்படுத்தினர் என்று ஒரு ஆங்கிலேய ஆய்வாளர் கூறியதை அடிக்குறிப்பொன்றாகத் தம் நூலில் சேர்த்திருக்கிறாரேயன்றி அதற்கான மறுப்பு எதனையும் சொல்வதில்லை.

தீண்டப்படாதோரும் பிரிட்டிஷ் பேரரசும்

‘தீண்டப்படாதோரும் பிரிட்டிஷ் பேரரசும்’ என்னும் கட்டுரையில் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார், “பிளாசிப் போரில் கிளைவுடன் சேர்ந்து போரிட்டவர்கள் துசாத்துகள் இந்த துசாத்துகள் தீண்டப்படாதவர்கள். கோரேகெளன் போரில் பங்கு கொண்டு சமர் புரிந்தவர்கள் மகர்கள், இந்த மகர்கள் தீண்டப்படாதவர்கள். இவ்வாறு முதல் போரிலும் கடைசிப் போரிலும் பிரிட்டிஷார் பக்கம் சேர்ந்து போரிட்டு, அவர்கள் இந்தியாவை வெற்றிகொள்ள வைத்தவர்கள் தீண்டப்படாதவர்களே…இந்தியாவை வெற்றி கொள்ள பிரிட்டிஷாருக்கு தீண்டப்படாதவர்கள் உதவியதோடு மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்து நிற்கவும் துணைபுரிந்தனர். 1857ஆம் வருடக் கலகம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவு கட்ட மேற்கொண்ட முயற்சியேயாகும். பிரிட்டிஷாரை விரட்டியடித்துவிட்டு இந்தியாவை அவர்களிடமிருந்து மீட்கும் முயற்சியே அது. பம்பாய் படையும் சென்னைப் படையும் பிரிட்டிஷாரிடம் விசுவாசமக இருந்தன. அவற்றின் உதவியைக் கொண்டே கலகம் ஒடுக்கப்பட்டது. பம்பாய் படை, சென்னைப் படை ஆகியவற்றின் இயைபு என்ன? பம்பாயைச் சேர்ந்த மகர்கள், சென்னையைச் சேர்ந்த பறையர்கள் போன்ற தீண்டப்படாத மக்களைக் கொண்டே இந்த இரு படைகளும் அமைக்கப்பட்டிருந்தன….”

அம்பேத்கர் இங்கு முக்கிய கருத்தொன்றை – மார்க்ஸாலும் ஏங்கெல்ஸாலும்கூட கவனிக்க முடியாமல் போன விஷயமொன்றை - சொல்கின்றார்: “தீண்டப்படாதவர்கள் இவ்வாறு பிரிட்டிஷாருடன் சேர்ந்து கொண்டது பச்சைத் துரோகம் என்று கருதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். துரோகமோ, துரோகமில்லையோ தீண்டப்படாதவர்களின் இந்த செயல் முற்றிலும் இயல்பானதே. நாட்டின் ஒரு பகுதியினர் படையெடுப்பாளரிடம் அனுதாபம் காட்டிய நிகழ்ச்சிகள் வரலாற்றின் எத்தனையோ உண்டு. தங்கள் நாட்டவரின் கொடிய ஒடுக்குமுறைகளிலிருந்து புதிதாக வருபவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற அவர்களது நம்பிக்கையே இதற்குக் காரணம்”.

இந்த வாசகங்களையும்கூட ’ஓர் இந்தியனின் நோக்குநிலையிலிருந்து’ இன்னொரு இந்தியனால் எழுதப்பட்டவை என்று அமித் ஷா ஏற்றுக் கொள்வாரா?

ஆனால் 1870ஆம் ஆண்டிற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்களை விலக்கிவிட்டு, சாதி இந்துக்களை மட்டுமே தங்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளும் முடிவை பிரிட்டிஷார் மேற்கொண்டதையும் அம்பேத்கர் எடுத்துரைக்கிறார். உண்மையில், 1857ஆம் ஆண்டு ‘சுதந்திரப் போர்’ தோல்வியடைந்தாலும் சாதி இந்துக்களுக்கு, குறிப்பாக சாதி அமைப்பைப் பேணிப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு ஒரு நன்மையைக் கொண்டு வந்தது. அதாவது விக்டோரியா மகாராணி விடுத்த பிரகடனம், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் மத விஷயங்களில் தலையிடாது என்ற உறுதி மொழியைத் தந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் கட்சியிலும் அதற்கு வெளியிலும் இருந்த சனாதனவாதிகள் தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களின் வயதை 12இலிருந்து 14ஆக உயர்த்தும் சட்டம், தாழ்த்தப்பட்டோர் கோவிலில் நுழைய அனுமதிக்கும் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து வந்தது தனி வரலாறு.

சாவர்க்கரை மாற்றிய 14 ஆண்டுகள்

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நூலில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் போற்றிப் புகழும் (இங்கும்கூட அவர் மறைமுகமாக ஆரிய இந்து மேன்மையை மறைமுகமாக வலியுறுத்திக்கொண்டேதான் இருந்திருக்கிறார்) , இரு மதத்தினருக்கும் ஒரே இரத்தம்தான் உள்ளது, இந்து மதம் , மொகலாய மதம் ஆகிய இரண்டுமே இந்திய மதங்கள்தான் என்று வாதிடும் சாவர்க்கரிடம் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வெளியிட்ட இந்துத்துவா என்னும் நூலில் காணலாம். இந்த 14 ஆண்டுக் கால இடைவெளியில் நிகழ்ந்தவை என்ன ?

(தொடர்ச்சி நாளைய கட்டுரையில்)

கட்டுரையாளர் குறிப்பு:

கட்டுரையாளர் எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

அமித் ஷாவின் வரலாறு எழுது நெறி!

MORARJI DESAI

 



1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி இந்தியாவுக்கு மிக முக்கியமான நாள். சுதந்திரம் அடைந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக பிரதமர் நாற்காலியை அலங்கரித்து வந்த நிலையில், இதோ நான் இருக்கிறேன், நீங்கள் விலகுங்கள் என்று அரியணையில் ஏறினார் ஒருவர். அவர் பிறந்த இடம் வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், வளர்ந்த இடம் கூட வளம் இல்லாமல் சராசரியாக இருக்கலாம். ஆனால், அவரின் நேர்மை இன்றளவும் இந்திய அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா என்றால் அதற்கு நம்மிடம் சரியான பதில் இருக்காது. ஆம், நேர்மையின் மறுஉருவம் அவர், அவர் வேறு யாரும் அல்ல காங்கிரஸ் கட்சியை முதன்முதலாக கூப்பில் அமர வைத்து, ஜனதா கட்சியன் சார்பாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மொரார்ஜி தேசாய்தான் அவர். 


நேர்மையை அவரிடம் பிரதானப்படுத்த என்ன இருக்கிறது என்று கூட சிலர் கேட்கலாம், அதற்கு வலிமையான காரணம் இருக்கிறது. முன்பு ஒருமுறை அவர் பம்பாய் மாகாணத்தின் அமைச்சராக இருந்தபோது, அவரின் மகள் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார். ஒரு பாடத்தில் அவர் தோல்வி அடையவே, அவரின் மகள் மீண்டும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க தயாரானார். இதற்காக தன் தந்தையிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் உடனடியாக மறுத்துவிட்டார். தான் அமைச்சராக இருப்பதால் மகளுக்கு சலுகை காட்ட வாய்ப்பிருப்பதாக அடுத்தவர்கள் நினைப்பார்கள் என்று கூறி மகளின் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் வருத்தமடைந்த அவரின் மகள் தற்கொலை செய்துகொண்டார். தேசாயின் நேர்மைக்கு இது ஒன்றே போதுமான சாட்சியாக இருக்கும்.


 


தேசாய் அரசியல் வாழ்க்கை என்பது நேரு, காந்தி காலத்தில் ஆரம்பித்தது. நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான அவர், எமர்ஜென்சியின்போது ரகசிய சிறையில் அடைக்கப்படார். கிட்டதட்ட 18 மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். 1977ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் வெளியே வருகிறார், மார்ச் மாதம் பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார் என்றால், அவர் சிறையிலும் அரசியல் செய்யாமல் இல்லை. அவர் பிரதமராக இருந்த அந்த இரண்டு ஆண்டுகள் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றினார். இன்றைக்கு குறைந்த விலையில் உணவு என்று எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் தேசாய் என்றால் அது மிகையல்ல. ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு என்ற திட்டத்தை அவர் கொண்டு வந்தார். அப்படி சாப்பாடு தர முடியாத ஓட்டல்களுக்கு அங்கீகாரம் தர முடியாது என்று அறிவித்தார். 


தங்கத்தின் விலையைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். வரதட்சணை என்ற வார்த்தையே அவருக்குப் பிடிக்காது. தான் கலந்துகொள்ளும் திருமணங்களில் வரதட்தணை கொடுக்கப்பட்டதாக தகவல் தெரிந்தாலே அந்த திருமணத்துக்கு செல்லாமல் தவிர்த்துவிடுவாராம். ஒருமுறை அவர் தமிழகம் வந்தபோது ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய முடிவெடுத்து சென்றுள்ளார். 5 ரூபாய் கட்டணம் கட்டி வரிசையில் நின்றே அவர் சாமி தரிசனம் செய்துள்ளார். தன்னுடைய பதவியை தனக்கான லாப நோக்கத்திற்காக அவர் எப்போதும் பயன்படுத்தியதில்லை. இதனால்தான் என்னவோ நம்முடைய எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தான் கூட, அந்நாட்டின் மிக உரிய விருதான நிஷான்- இ - பாகிஸ்தான் விருதினை அவருக்கு அளித்து கவுரவப்படுத்தியுள்ளது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றிருக்கிறார்.  


 


பாகிஸ்தான் மற்றும் இந்திய அரசுகளின் உரிய விருதுகளைப் பெற்ற இந்தியாவின் ஒரே முன்னாள் பிரதமர் என்றால் அது தேசாய் மட்டுமே. இதைவிட அவருக்கு வேறு ஒரு சிறப்பு இருக்கிறது. அவர் தன்னுடைய பிறந்தநாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கொண்டாடுவார். ஏனென்றால் அவர் பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்தவர். தன்னுடைய 98 வயது வாழ்க்கையில் 25 முறை கூட அவர் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தால் என்ன, அவர் சாதனைகள் இன்றளவும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறதே! இன்று அவரின் நினைவு நாள் என்பது கூடுதல் சிறப்பு.

MOST FAMOUS 10 BEAUTYS அசர வைத்த 10 அழகுத் தேவதைகள்

 




அசர வைத்த 10 அழகுத் தேவதைகள்


அழகான பெண்களின் தாய் தனது மகளை தேவதைப் போல் அழகுடன் இருக்கிறார் என்று புகழ்வது உண்டு. அத்தகைய அழகுத் தேவதைகளைப் பற்றியே நாம் காண இருக்கிறோம்.


முருகன் என்றால் அழகு என்பது தமிழ் மரபு, அத்தகைய அழகினைப் போற்றிக் கொண்டாடி ஆராதனை செய்வது தமிழர்களின் மாண்பு.


ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அசர வைக்கும் அழகுத் தேவதைகள் தோன்றுகிறார்கள், புகழ்பெறுகிறார்கள், பின்னர் மறைகிறார்கள். அதன்பின்னர் புதியதாக அழகு தேவதைகள் தோன்றுகிறார்கள். இது ஒரு வரலாற்று சுழற்சியாகும்.


ஆண்டுதோறும் சர்வதேச நாடுகளின் அழகுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் தேர்ந்தெடுக்கப்படும் அழகிகள் 5 கோடி ரூபாய் நிதியும் ஓராண்டிற்கு பிற சலுகைகளும் பெறுகின்றனர்.


உலக அழகிகளுக்கு அணிவிக்கப்படும் கிரீடம் 500 வைரங்களும், 120 முத்துக்களும் கொண்ட 1.25 கோடி ரூபாய் பெறுமானமுள்ள பரிசாகும்.


உலக அழகிப்போட்டிகள் மிஸ்வேர்ல்டு என்றும், மிஸ் எர்த் என்றும், திருமதி உலக அழகி என்றும், பிரபஞ்ச அழகி என்றும் பல பெயர்களில் நடத்தப்பெறுகின்றன.


அழகு என்பது ஒருவருக்கு இயல்பாக இருக்கக் கூடிய எண்ணங்களின் வெளிப்பாட்டு இயல்பு ஆகும். இவ்வியல்பு அவற்றைக் காண்போருக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் தரக்கூடிய அனுபவத்தை வழங்கினால் அது தான் தூய அழகு.


இதில் பிரதானமாக அமைவது மூக்கும், கண்களும்தான். கண்புருவம் மெல்லியதாக இருப்பதைத்தான் சாமுத்ரிகா லட்சணம் பெருமையாகச் சொல்கிறது. சிலருக்கு கண்புருவம் கட்டையாக இருக்கும். அதைவிட மெல்லிய புருவ அமைப்பு நல்லது. பெண்களுக்கு இடை குறுகி இருப்பது நலம். கை விரல்கள் நீண்டு இருந்தால் அவர்கள் கலை உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள்.


இன்றைய நாளில் பாலியல் ரீதியான கவர்ச்சியே அழகு என்று வர்ணிக்கப்படுகிறது. அழகுக்கான செயற்கை சாதனங்களின் உதவியால் மாடலிங் கலை அபரிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.


1. கிளியோபாத்ரா

ஒரு காலத்தில் எகிப்திய அரசி கிளியோபாத்ரா மிகச் சிறந்த உலக அழகியாக கருதப்பட்டார். மேற்கத்திய கலாசாரத்தில் மிகப்பிரபலமான பெண்ணாக இருந்தார்.  ஷேக்ஸ்பியரின் துன்பவியல் நாடகமான ஆன்டனி கிளியோபாத்ராவைத் தழுவி கிளியோபாத்ரா  எனும் ஆங்கில திரைப்படம் வெளிவந்தது.


கிளியோபாத்ராவின் ஒப்பற்ற அழகு மிகவும் புகழப்பட்டு, உலகின் பலம் வாய்ந்த மனிதர்களின் செல்வாக்கினை பயன்படுத்த இவருக்கு உதவியது. இவரது இயற்கை அழகும், கிரக்கம் கொள்ள வைக்கும் காந்தப் பார்வையும் இவரை உலக அழகியாக மெய்பித்தது. கிளியோபாத்ராவுக்கு நீண்ட மூக்கு இருந்தென்றும், அதுதான் அவரின் அழகுக்கு அழகு சேர்த்தது என்ற ஒரு கருத்து உண்டு.


ஆனால் அவரது மூக்கு இன்னும் சிறிதாக மாற்றப்பட்டிருந்தால் மொத்த உலகினையும் அவர் தன் பக்கம் ஈர்த்திருப்பார் என்பது மற்றொரு சாரார் கருத்து.


கூடா நட்பாக 21 வயதேயான கிளியோபாத்ரா 52 வயதான சீசரிடம் தொடர்பு கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். பின்னர் ரோம் மன்னர் அந்தோணியுடன் உறவு கொண்டு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இறுதியில் கிளியோபாத்ரா தானே வலிய கொடிய எகிப்திய நாகப்பாம்பினை, தனது மார்பகத்தில் கடிக்க வைத்து விஷம் ஏறி இறந்து போனதாகக் கூறப்படுகிறது.


ஒரு பேரரழகி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை விளக்கும் வகையில் கிளியோபாத்ராவின் அழகு குறிப்பிடப்படுகிறது.

------------------------

2 . மும்தாஜ்

தாஜ்மகால் என்றாலே மும்தாஜ்பேகம் தான் நினைவுக்கு வருவார். அழகிய தாஜ்மகாலைப் போலவே  அரசி மும்தாஜும் அழகுமிக்கவர். ஜாஜஹான் மன்னருக்கு ஒரு மனைவியாக மட்டும் இல்லாமல் இவர் ஒரு  நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.


இவருடைய அழகு அரசவையில் உள்ள கவிஞர்களால் புகழ்ந்து பலமுறை பாடப்பட்டுள்ளது. மொகலாயப் பேரரசின் பிரமாண்ட பேரழகிகளில் இவர் முதலாமவர். இவருடைய கனிவும், பளபளப்பான உடல்பொலிவும், இளமையான உடல்வாகும், அரவணைப்பும் பாராட்டப்பட்டுள்ளன.

----------------------------

3. ராணி காயத்ரிதேவி

இந்திய மக்களைக் கவர்ந்த பேரழகிகளில் ஒருவர் ராணி காயத்ரிதேவி. ஜெய்ப்பூரின் ராஜமாதா என்று அழைக்கப்பட்ட இவர், ஜெய்ப்பூர் அரசின் மூன்றாவது மகாராணியாகத் திகழ்ந்தார். 1939-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை இவர் ஆட்சியில் இருந்தார். அதன்பின்னர் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டதால் இவர் அரசியலில் புகுந்து மீண்டும் புகழ் பெற்றார்.


காயத்ரிதேவி அவரது இளமைக்காலத்தில் அபரிதமான அழகுடன் திகழ்ந்தார். நவநாகரீகப் பெண்களின் அடையாளமாக மின்னினார். அமெரிக்க நாட்டின் வோக் பத்திரிகை இவரை உலகின்  அதிஅழகு பெண்கள் 10 பேரில் ஒருவராகத் தேர்ந்து எடுத்து பாராட்டியது. இவர் சிறந்த குதிரை ஏற்ற வீரர் மட்டுமின்றி போலோ விளையாட்டு வீரரும் கூட.  பெண்களின் கல்விக்காக பாடுபட்டு, தனது பெயரில் பல பள்ளிகளைப் பெண்களுக்காகவே, நாட்டில் ஏற்படுத்தினார்.


1947ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1,92,909 வாக்குகள் பெற்று கின்னஸ்-ல் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். இதன் மூலம் உலகிலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் என்ற புகழை அடைந்தார்.

--------------------------

4. லீலா நாயுடு

1954ம் ஆண்டு பெமினா பத்திரிகையால் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லீலாநாயுடு. ஆந்திரப்பிரதேசம் மதனப்பள்ளியைச் சேர்ந்த டாக்டர். பட்டிப்பட்டி ராமையாநாயுடு இவருடைய தந்தையாவார்.


இதே ஆண்டில் அமெரிக்காவிலுள்ள "வோக்" பத்திரிகை உலக அழகிகள் 10 பேரில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. இவர் ஏக் ரஸ்தே ஹெயின் பியார் ஹி, தி ஹவுஸ் ஹோல்டர், அனுராதா ஆகிய இந்திப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். பின்னர் இயக்குனர் ஷியாம் பெனகலின், திரிகால் எனும் படத்திலும், எலக்ட்ரிக்மூன் என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இவர் நடித்த எந்தப்படமும் வசூலைக் குவிக்கவில்லை.


தனது 17வது வயதில் ஒபராய் ஹோட்டல் குழும நிறுவனர் மகனான 33 வயதான திலக்ராஜ் ஒபராயை மணந்தார். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற பிறகு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். லண்டனில் தான் சந்தித்த தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை இரண்டாம் முறையாக மணந்துகொண்டார்.

-----------------------------

5. ஜீனத் அமன்

ஜீனத் அமன் பற்றி இந்திப்பட உலகில் தெரியாதவர் எவரும் இல்லை. இந்திப்பட எழுத்தாளர் அமானுல்லாகான்- சிண்டா தம்பதிகளின்  புதல்வி. மும்பையில் படித்த இவர் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். திரும்பி இந்தியாவிற்கு வந்தபோது பெமினா பத்திரிகையில் பத்திரிகையாளராகச் சேர்ந்தார்.


பின்னர் மாடலிங் உலகில் நுழைந்து புகழ் பெற்றார். 1970-1980ம் ஆண்டுகளில் தொடர்ந்து இந்திப்படங்களில் நடித்ததால் பெரும் புகழ் இவரைத் தேடி வந்தது. மிஸ் ஆசியா பசிபிக் என 1970ம் ஆண்டு தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்தி சினிமாவில் ஒரு செக்ஸ் அடையாள கதாநாயகியாக விளங்கினார். இந்திப்பட கதாநாயகிகளுக்கு மேற்கிந்தியப் பார்வையினை ஏற்படுத்துவதில் முன்னணியில் நின்றார்.


இவர் நடித்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில் தர்மேந்திரா பாடல்பாடி ரசிகர்களை கிரங்கடித்தார். இவருடைய யாதோன் கி பாரத் இந்திப்படமும் வசூலை குவித்து ஒரு புதிய வரலாற்றினை ஏற்படுத்தியது. 1985ம் ஆண்டு இவர் மஜ்தர்கான் என்பவரை மணந்து 2 குழந்தைகளுக்கு தாயானார்.

 --------------------------------

6. ஹேமா மாலினி

தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்க சென்று கனவுக்கன்னியாகப் புகழ் பெற்றவர் இந்தி நடிகை ஹேமாமாலினி, இவர் சிறந்த பரத நாட்டியத் தாரகை, 150 இந்திப் படங்களில் நடித்து 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திப் பட உலகில் தனது புகழ்க் கொடியை நிலை நாட்டியவர். நடிப்புக் காலத்தில் பல்வேறு கதா பாத்திரங்களை ஏற்று, முன்னனி நடிகையாக இந்திப்பட உலகில் வலம் வந்தார். அவருடைய அழகும், பரத நாட்டியத்திறனும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.


1972 ஆம் ஆண்டு இவர் சிறந்த நடிகையாக பிலிம்பேர் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் பிலிம்பேர் பத்திரிகையால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.


அன்றைய நாளில் இந்திப்பட கதாநாயகர்களாக வலம் வந்த நடிகர் சஞ்சீவ் குமாரும், ஜிதேந்திராவும் இவரைத் திருமணம் செய்ய முன் மொழிந்த போதும், இவர் ஏற்கனவே திருமணமான தர்மேந்திராவையே திருமணம் செய்து கொண்டார்.


என்றென்றும்  மாறாத புன்னகை ததும்பும் முகமே இவரது வெற்றியின் ரகசியம்.

-----------------------------------

7. ரீட்டா பரியா

1966 ஆம் ஆண்டு தான், முதன்முதலாக இந்தியாவிற்கு அழகிப் போட்டி கதவுகள் திறந்தன. இந்திய அழகி ரீட்டா பரியா, உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பையில் பிறந்த அவர் இதற்கு முந்தைய ஆண்டு தான் ஈவ்ஸ்வீக்லி பத்திரிகையால் மும்பையின் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அழகுக் கிரீடம் சூட்டப் பெற்றார்.


ஓராண்டு மாடலிங் துறையில்  பணியைத் தொடர்ந்த ரீட்டா பரியா பின்னர் அழகுப் போட்டிகளிலோ, மாடலிங் துறையிலோ ஈடுபடவில்லை, பின்னர் எம்.பி.பி.எஸ் படித்து, டாக்டர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அயர்லாந்து சென்று விட்டார்.

---------------------------------------

8. சுஷ்மிதா சென்

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிக் கிரீடத்தை சூடியவர் சுஷ்மிதாசென். ஹைதராபாத்தில் பிறந்து, புதுடெல்லியில் வளர்ந்த சுஷ்மிதாசென் வங்காள இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.


1994 ஆம் ஆண்டு நடந்த பெமினா ஆழகுப் போட்டியில் உலக அழகி ஐஸ்வர்யா ராயினைத் தோற்கடித்து, சிறந்த அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1996 ஆம் ஆண்ட தங்தக், பீவி நம்பர் 1, ஆகிய இந்திப் படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். 2006 ஆம் ஆண்டில் இந்திப்பட உலகில் சாதனை படைத்ததற்காக ராஜீவ் காந்தி தேசிய விருது பெற்றார்.

------------------------------------------

9. டைனா ஹைடன்

டைனா ஹைடன் 1993 ஆம் ஆண்டு உலக அழகியாகவும், பெமினா அழகியாகவும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹைதராபாத்தில் பிறந்த இவர் உஸ்மானிய பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் மாடலிங் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார், 1997 ஆம் ஆண்டு  நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வென்றவர்.


இதன் பின்னர் இங்கிலாந்து சென்று நடிப்புக் கலை பயின்றார். 'பிக்பாஸ்' தொலைக்காட்சித் தொடரில் 2008 ஆம் ஆண்டு தோன்றி புகழ் பெற்றவர்.

--------------------------------------------

 10. யுக்தா முகி

வட இந்தியாவினைச் சேர்ந்த யுக்தாமுகி தனது 7-வது வயது வரை மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து பின்னர் மும்பைக்கு வந்தார். இவர் இந்துஸ்தானி சங்கீதத்தில் வல்லவராய் இருந்தார்.


1994 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு கிரீடம் வென்றவர். இந்தப் போட்டியில் கலந்து கொண்ட 94 நாட்டைச் சேர்ந்த அழகிகளை இவர் தோற்கடித்தார்.


யுக்தாமுகி,  மேம் சாப், கட்புட்லி, பிஸாகா போன்ற இந்திப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

-------------------------------------------

11. பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா ஷாம்ஜெட் பூரில் பிறந்தவர். இவரது தாய்-தந்தை இருவரும் டாக்டர்கள். இவர் மும்பையில் ஜெய்கிந்த் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதால் தனது படிப்பை  கைவிட்டார்.


முதலில் மாடலிங் உலகில் புகுந்து லக்ஸ், பான்ட்ஸ், சன்சில்க் போன்ற விளம்பரப் படங்களில் தோன்றி புகழ் அடைந்தார். பின்னர் தமிழன், தி ஹீரோ, அந்தாஸ், முஸ்கி ஷாதி கிரோகி ஆகிய திரைப்படங்களில் நடித்து சமகால நடிகைகளில், சிறந்த முன்னனி நடிகை என்ற பெயர் பெற்றார்.


2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு உலக அழகி என போற்றப்பட்டார். இதே ஆண்டில் தான் லாரா தத்தாவும், தயாமிர்சாவும் உலக அழகி  மற்றும் ஆசிய பசிபிக் அழகி ஆகிய பட்டங்களைப் பெற்றனர். இந்த ஆண்டில் இந்திய அழகிகளாக 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியாவின் அதிர்ஷ்டம்.

----------------------------------

12 -- லாரா தத்தா

 உத்தர பிரதேச மாநிலம் காசியா பாத்தில் பிறந்தவர் லாரா தத்தா. இவரது தந்தை இராணுவத்தில் விங் கமான்டராக இருந்து வந்தார். பெங்களூரில் கல்வியை முடித்த இவர் மாடலிங் துறையில் புகுந்தார்.


2000 ஆம் ஆண்டில் லாரா தத்தா உலக அழகியாக முடிசூடினார். அதே ஆண்டில் பெமினா பத்திரிகையின் இந்திய அழகிப் போட்டியிலும் வென்றார். அழகிப் போட்டியின் போது நீச்சல் உடையில் வந்த போது மெய் மறந்து நீதிபதிகள் உச்ச அளவு மதிப்பெண்கள்  தந்ததால் வெற்றி பெற்று எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.


இவர் நடித்த மஸ்தி, நோ என்டரி, பார்ட்னர், ஹவுஸ்புல் ஆகிய இந்தித் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இவர் பிலிம்பேர் பத்திரிகையின் சிறந்த துணை நடிகை விருதினை 2003 ஆம் ஆண்டு அந்தாஸ் படத்திற்காக பெற்றார்.


2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஸ் பூபதியை மணந்தார். திருமண விழாவை கிறிஸ்துவ முறைப்படி கோவாவில் பிரமாண்டமாகக் கொண்டாடினார்.

----------------

13 -- ஐஸ்வர்யாராய்

உலக ஊடகங்களால் எப்போதும், உலகப் பேரழகி என்று புகழப்படுவர் ஐஸ்வர்யாராய். கன்னடத்துப் பைங்கிளி என்று அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. இவரைப் போன்று கர்நாடக மாநிலம், மங்களுரில் பிறந்தவர், மும்பையில் ஜெய்ஹிந்த் கல்லூரியில் படித்தார், பின்னர் கட்டிடக்கலை வல்லுநர் படிப்பில் சேர்ந்தார்.


இவர் 9வது வகுப்பு படிக்கும் போதே மாடலிங் செய்து வந்தார். பின்னர் முழுநேரம் இதில் ஈடுபட்டதால் கட்டிடக்கலை வல்லுநர் படிப்பை பாதியில் கைவிட்டார். 1997-ஆம் ஆண்டு இருவர் என்ற தமிழ் படத்தில் நடித்து ஈடில்லா புகழ் பெற்றார். 1998-ம் ஆண்டில் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.


பாலிவுட்டின் கவனம் இவர் மீது திரும்பியதில், ஹம் தில் தே சுக்சனம் என்ற இந்திப் படத்தில் நடித்து, அதற்காக பிலிம்பேர் பத்திரிக்கையின் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார்.


1994-ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில்  பங்குபெற்று உலக அழகிப் பட்டத்தினை வென்றார். ஏறத்தாழ 40 இந்திப் படங்களில் நடித்ததால் இவரின் புகழ் உலகெங்கும் பரவியது. மாடலிங் கலையில் தொடர்ந்து புகழ் பெற்று வந்ததால் இவர் சிறந்த புகைப்படத்திற்கேற்ற முக அழகி என்ற பட்டத்தினை பெற்றார்.


கடந்த 10 ஆண்டுகளாக கேன்ஸ் பட விழாவிற்கு தொடர்ந்து அழைக்கப்பட்டு வரும் இந்திய உலக அழகி இவர் மட்டுமே. இந்த ஆண்டும் கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்ட இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


தனிப்பட்ட வாழ்க்கையில் 1990-ம் ஆண்டு சல்மான்கானுடன் நட்பாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் விவேக் ஓபராய் இவரைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இதன்பின்னர், 2007-ம் ஆண்டு ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சனைத் திருமணம் செய்து கொண்டார்.


37 வயதான ஐஸ்வரயாராய் தற்போது கற்பமாக உள்ளார், இதுபற்றி திரைப்பட தயாரிப்பாளர் ராம் கோபால்வர்மா, அழகான பெண்கள் கர்ப்பமடைவதை பொதுவாக விரும்புவதில்லை என்றும், ஆனால் அழகுத் தேவதையான ஐஸ்வர்யாராய்க்கு  அதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


2004 ஆம் ஆண்டு இவரது மெழுகுச்சிலை லண்டன் மேடம் தி சுயாட் மெழுகு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியத்தில் இடம் பெற்ற 6-வது இந்தியரும், இரண்டாவது பாலிவுட் நடிகையும் ஐஸ்வர்யாராய் தான்.


2009 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நடத்திய கன்னட உலக மாநாட்டில் இவருடைய சேவைகள் புகழப்பட்டு பாராட்டப்பட்டன. இந்த விழாவில் இவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


இணையதளங்களில், உலகின் அழகான பெண்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். அவற்றில் முதன்மையாயிருக்கும் 10 பேரில் கண்டிப்பாக ஐஸ்வர்யாராய் இடம் பெற்று வருகிறார்.


 லீலா நாயுடு,  இவர் 1956-ம் ஆண்டு உலக அழகிப்பட்டம் பெற்றவர். சிறந்த நடிகை 2009 ஆம் ஆண்டு வோக் பத்திரிக்கையின் அட்டையை அலங்கரித்தவர்.


 ரெய்டா பரியா, 1966 ஆம் ஆண்டு உலக அழகிப்பட்டம் வென்றவர்.


 ஜீனத் அமன்- பாலிவுட் நடிகை 1970-ம் ஆண்டு ஆசிய பசிபிக் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


 ஜூகி சாவ்லா - 1984 ஆம் ஆண்டு இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற இளமை ததும்பும் பாலிவுட் நடிகை.


 மதுசாப்ரே - ஆங்கிலப்புலமை இல்லாததால் 1992-ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தினை தவற விட்டவர், இருப்பினும் சிறந்த சிரிப்பழகி.


சுஷ்மிதாசென் - 1994-ல் உலக அழகிப்பட்டத்தினை வென்ற முதல் இந்தியப் பெண்மனி, சிறந்த நடிகை.


டயானா ஹான்டன் - 1997 ஆம் ஆண்டு சிறந்த உலக அழகியானவர், மகிழச்சி ததும்பும் இவரது முகப் பொழிவு காண்போரை வசப்படுத்தும்.


 ஐஸ்வர்யாராய் - உலக அழகி பட்டம் பெற்ற இரண்டாவது இந்தியப் பேரழகி. பட்டம் பெற்றதுடன் நில்லாது இன்று வரை உலக அழகியாகவே வாழ்ந்தும் வரும் ஐஸ்வர்யாராயை உலக அளவில் அறியாதவர் எவரும் இல்லை.


 லாரா தத்தா - 2000 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் பெற்ற பாலிவுட் நடிகை. டென்னிஸ் விளையாட்டு வீரரான மகேஷ்பூபதியின் மனைவியானவர்.


 பிரியங்கா சோப்ரா - கடைசியாக உலக அழகிப்பட்டம் வென்றவர் இந்திய அழகி. இவருக்குப்பின் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அழகிகளில் எவரும் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பாலிவுட்டின் சிறந்த முன்ணனி நடிகைகளில் ஒருவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பெண்மணிகள் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த காலகட்டத்தில் மட்டும் தான் அவர்கள் அழகிகள் என்ற நிலைப்பாட்டில் ஒரு பத்து ஆண்டுகளில் அவர்கள் இளமையை இழந்து அடுத்த அழகிப்போட்டிக்கு நீதிபதியாகி விடுகிறார்கள்.


தமிழ் திரைப்பட உலகினைப் பொருத்தவரை, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் அழகிகளாகப் போற்றப்படுவார்கள். பின்னர் அவர்களின் தேவை திரையுலகில் தளர்ந்ததும் அடுத்த கதாநாயகி ஆட்சிக்கு வந்துவிடுவார். வைஜெயந்திமாலா, பானுமதி, பத்மினி, சரோஜாதேவி, ஆகிய பலரை இதற்கு சான்றாகச் சொல்லலாம்.


அழகு ஆராதனைக்குரியது தானே...!

---------------------------------------------

எழுத்து‌

டாக்டர். ப. தென்னவன்

China is the world’s most populous country, with over 1.38 billion people,

 


  • China is the world’s most populous country, with over 1.38 billion people, and the second-largest country by land area.
  • China has the world’s largest standing army and second-largest defense budget.
  • 100 million people in China live on less than US$1 per day.
  • China uses 45 billion chopsticks per year.
  • China is the world’s largest exporter and second-largest importer of goods.
  • In China, over 35 million people still live in caves.
  • The sunrise in parts of China can be as late as 10am because the country joined its five time zones into a single one.
  • There’s a bridge between mainland China and Macau, where cars switch from left to right-hand drive and vice versa.
  • Table tennis is China’s national sport.
  • Toilet paper was invented in China in the late 1300s. It was for emperors only
  • The Chinese invented kites (“paper birds” or “Aeolian harps”) about 3,000 years ago, to frighten the enemies in battle.
  • Despite its size, all of China is in one time zone.
  • Many historians believe soccer originated in China around 1000 B.C.
  • White, rather than black, is the Chinese color for mourning and funerals.
  • China invented ice cream.
  • The Chinese were the first to invent the waterwheel to harness water.
  • The crossbow was invented and first used by the Chinese.

Facts about China

1) The Chinese New Year celebration lasts for 15 days.

2) In China, every year is represented by one of 12 animals.

Check out our magazine!National Geographic Kids is an exciting monthly read for planet-passionate boys and girls, aged 6-13!

Packed full of fun features, jaw-dropping facts and awe-inspiring photos – it’ll keep you entertained for hours!

Find our magazine in all good newsagents, or become a subscriber and have it delivered to your door! Ask your parents to check out the ‘Subscribe’ tab on our website!




(AD)




3) China’s Bailong Elevator carries visitors more than 300m up a cliff’s edge.


4) You can buy green-bean-flavoured ice pops in China!


5) In Ancient China, soldiers sometimes wore armour made from paper.


Facts-about-China


6) In 2010 a 2,400-year-old pot of soup was unearthed in Xi’an, China.


7) The Forbidden City, a palace complex in Beijing, contains about 9,000 rooms!


Did you know that we have a FREE downloadable Imperial China primary resource? Great for teachers, homeschoolers and parents alike!


8) Found in northern China, long-eared jerboas have ears that are one-third longer than their heads!


9) People race boats with dragon designs at a Chinese festival in the spring.


10) Chinese monal birds sometimes build nests in caves.


Facts-about-China


11) Put together, all of China’s railways lines could loop around earth twice!


12) The mortar used to bind the Great Wall’s stones was made with sticky rice!


13) 7th-century Emperor Tang of Shang had 94 ‘ice men’ who made him ice-cream.


14) Temperatures in China”s Turpan Depression can range from 49°C in summer to -29°C in winter.


15) Asiatic golden cats in the country’s south sometimes communicate by spitting.


Facts-about-China


16) Developed about 5,000 years ago, the earliest chopsticks were used for cooking, not eating.


17) Hong Kong has more skyscrapers than any other city in the world.


18) Chinese white dolphins, which live off southern China, are often pink.


19) China is about the same size as the continental USA but it only has one official time zone. Continental USA has four.


20) China’s Yunnan snub-nosed monkeys live at a higher altitude than any other primate except humans.


facts-about-China


21) More people speak Mandarin, a Chinese Dialect, as their first language than any other language in the world.


22) China is home to a cluster of ancient rock pillars called the Stone Forest.


23) China’s Leshan Giant Buddha, a gigantic stone statue, has 5.5-m-long eyebrows!


24) China’s giant pandas are good swimmers.


25) Many Chinese emperors considered themselves to be descendants of dragons.


Facts-about-China


26) The word “ketchup” may come from a Chinese word for pickled-fish sauce.


27) Half of all pigs on earth live in China.


28) It took around 37 years to make the Terracotta Army, a set of around 8,000 clay soldiers built in Xi’an to guard an Emperor’s tomb. Take a look at these super-impressive statues in the video, below!


29) Dogs get special treats on one day of the Chinese New Year celebration.


30) Chinese brides often wear red, a colour considered to be lucky.




Country fact file: China

Read our in-depth profile to discover more facts about China….


Facts-about-China


OFFICIAL NAME: People”s Republic of China


FORM OF GOVERNMENT: Communist state


CAPITAL: Beijing (Peking)


POPULATION: 1,393,783,836


OFFICIAL LANGUAGES: Chinese, Mandarin


MONEY: Yuan (or Renminbi)


AREA: 9,596,960 square kilometres


MAJOR MOUNTAIN RANGES: Himalayas


MAJOR RIVERS: Yangtze, Yellow


China’s geography

Facts-about-China


Stretching 5,000 kilometres from east to west and 5,500 kilometres from north to south, China is one seriously huge country! It has lots of different landscapes, too, including mountains, high plateaus (areas of level high ground), sandy deserts and dense forests.


One-third of China’s land area is made up of mountains. The tallest mountain on Earth, Mount Everest, sits on the border between China and Nepal.


China has thousands of rivers. The two main rivers are the Yellow River and the Yangtze River, which both flow from west to east. At 6,300 kilometres long, the Yangtze is the longest river in Asia and the third longest in the world.


Chinese people and culture

Facts-about-China


With a population of over 1.3 billion, China has more people than any other country on Earth. About a third of the population lives in cities, and the rest of the people live in the countryside.


Arts and crafts have a long history in China. Thousands of years ago, the Chinese were some of the first people to use silk, jade, bronze, wood and paper to make art. The artistic writing called calligraphy was invented in China.


Much of China’s modern beliefs and philosophies are based on the teachings of a government official who lived nearly 3,000 years ago – Kongfuzi, also known as Confucius. He taught people the value of things such as morality, kindness and education.


China’s nature

Facts-about-China


China’s diverse habitats are home to hundreds of species of animals and plants. More than 3,800 species of fish and hundreds of amphibians and reptile species live in the rivers, lakes and coastal waters.


China’s forest wildlife is threatened by logging and clear-cutting (clearing the land of all trees) for farmland. Expanding deserts in the north are also reducing animal habitats. The good news is that the Chinese government has created more than 1,200 reserves to protect plant and animal species.


The giant panda lives in the misty mountains of central China and nowhere else on Earth. They can usually be found in thick bamboo forests, where they feast on the leaves of this woody evergreen plant. Sadly, due to habitat loss and hunting, these beautiful bears are on the endangered species list, and it’s estimated that only around 1,800 remain in the wild. Although that doesn’t sound like many, panda numbers have actually grown by 17% since the 1970s – good news! You can check out our panda facts, here.


China’s government and economy

facts-about-China


China is ruled by a very powerful central government. A huge workforce and lots of natural resources have driven economic change. This has forced the communist* government to allow more economic and personal freedoms, but it has come at a huge cost to the environment, too.


Many experts predict that the 21st century will be the ‘Chinese century.’ Whether or not that proves to be true, there is no doubt that what happens in China will affect many other nations.


Chinese history

Facts-about-China


China is the home of one of the world’s oldest civilisations, but it has only recently become a ‘modern’ nation. In the last 20 years, China has changed faster than any other country in the world.


Chinese history is divided into dynasties, each of which marks the period when a line of emperors ruled. The first empire was the Qin dynasty and began in 221 B.C. The last emperor was overthrown in 1912, and China became a republic. The communist government began its rule in 1949 following a civil war with the Chinese Nationalists.


Ancient China was a land of invention. For centuries, China was much more advanced than most other countries in science and technology, astronomy and maths. The Chinese invented paper, the magnetic compass, printing, tea porcelain, silk and gunpowder, among other things.


Did you enjoy these facts about China? Then visit our geography section to take a trip around the world and discover Japan, Peru, Brazil, South Africa, France, the Bahamas… and more!


* Communism is a system which aims to create a society where everything is shared equally among the people.

* A republic is a form of government where the people elect their leaders to run the country


Words adapted from kids.nationalgeographic.com. Photos: Getty Images UK.