Monday, 6 April 2020

ACTOR JAI BORN 1985 APRIL 6

ACTOR JAI BORN 1985 APRIL 6




.ஜெய் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் உறவினர். ஜெய் தன் 16-வது வயதில் விஜயுடன் பகவதி என்ற திரைப்படத்தில் நடித்தர். பின்பு சென்னை 28 என்ற முக்கிய கதாப்ப்த்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்போது வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார். இவர் நடித்த கோவா, வாமனன், எங்கேயும் எப்போதும், வடகறி மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற திரைப்படங்கள் பாராட்டப்படும் அளவிற்கு வெற்றியை பெற்றுள்ளது.

படப்பிடிப்புக்குத் தாமதமாகச் செல்கிறார் என்று சுற்றி வரும் செய்திக்கு 'கேப்மாரி' பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜெய் விளக்கமளித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி, சித்தார்த் விபின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கேப்மாரி'. க்ரீன் சிக்னல் தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.



இதில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் பதிலளித்தார். அப்போது 'கேப்மாரி' படம் தொடர்பாக விஜய் என்ன சொன்னார் என்ற கேள்விக்கு "அவர் எதுவுமே சொல்ல மாட்டார். ஏன் படம் பண்றீங்க, வொர்க் பண்றீங்க என்று கேட்பார்" என பதிலளித்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

அதனைத் தொடர்ந்து ஜெய் பேசும் போது, "இது எனக்கு ஸ்பெஷலான படம். ஏனென்றால், இது எனது 25-வது படம். ரொம்ப ஜாலியான ஒரு படத்தில் சின்ன மெசேஜ் சொல்லியிருக்கிறோம். இந்தப் படத்தின் காட்சிகள் எல்லாம் அவ்வளவு உண்மையாக இருக்கும். அது ரொம்பவே பிடித்திருந்தது.


இந்தப் படத்தின் கதையும் என் வாழ்க்கையைப் போலவே இருந்தது. இப்போது கூட நான் படப்பிடிப்பு தாமதமாக வருவதாகச் செய்திகள் வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகச் சரியான நேரத்துக்கு அனைத்து படப்பிடிப்புக்குமே சென்றிருக்கிறேன். என்றைக்காவது ஒரு நாள் தாமதமாகப் போயிருப்பேன். அதை இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பேசினார் ஜெய்.


சினிமா விழாக்களில் கலந்துகிட்டு மேடைகளில் பேசுறது ஒரு கலை. அது எனக்குத் தெரியாது, வராது. எனக்கு முன்னாடி உள்ள சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் பலபேர் 'நாம நடிச்ச படத்தைப்பத்தி நாமே பேசக்கூடாது; மத்தவங்கதான் பேசணும்'னு சொல்லிருக்காங்க.

தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே வருவதில்லை, அஞ்சலியுடன் காதல் எனத் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் ஜெய்யுடன் ஒரு மனம் திறந்த உரையாடல்...

" 'சுப்ரமணியபுரம்' ஹிட். இருந்தும் ஷோலோ ஹீரோவாக உங்களால் ஜெயிக்க முடியவில்லையே? உங்களுக்குப் பின்னால் வந்த சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி எல்லாம் முன்னணி நடிகர்களாகி விட்டனரே?"

"நீங்கள் சொல்வது உண்மைதான் 'சுப்ரமணியபுரம்' படத்துக்குப் பிறகு மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டான 'கோவா' படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏனென்றால் எனக்கு 'சென்னை 600028' படத்தில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிக்க வெச்சவர் வெங்கட்பிரபு. சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி ரெண்டு பேருக்கும் அமைந்த கதை, கிடைத்த டீம் எல்லாம் அவங்களை வேற லெவலுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துடுச்சு. அதுக்காக எனக்குக் கிடைச்ச டீம் சரியில்லைன்னு நினைச் சுடாதீங்க. எனக்கு என்னமோ டைம் சரியில் லைன்னு நினைக்கிறேன். எல்லாப் படங்களையுமே நல்லா ஓடும்னு நம்பித்தான் நடிக்கிறேன். ஏதோ ஒரு இடத்துல தப்பு நடத்துட்டா அது மொத்தமாக அந்தப் படத்தையே பாதிக்குது. இனிமே அப்படி நடக்காமப் பார்த்துக்கணும்!

No comments:

Post a Comment