Monday, 27 April 2020

SRI RANJANI , TELUGU ACTRESS BORN 1927 FEBRUARY 22 - 1974 APRIL 27


SRI RANJANI , TELUGU ACTRESS BORN 1927 FEBRUARY 22 - 1974 APRIL 27



ஸ்ரீரஞ்சனி (Sriranjani 22 பெப்ரவரி 1927 – 27 ஏப்ரல் 1974) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகையாவார். இவர் ஸ்ரீரஞ்சனி (சீனியர்) என்பவரின் தங்கை. அதனால் இவர் ஸ்ரீரஞ்சனி (ஜூனியர்) என அழைக்கப்பட்டார்.[1] இவர் பெரும்பாலான திரைப்படங்களில் துன்பத்தில் உழலும் மனைவி பாத்திரங்களில் நடித்தார்.

முன் வாழ்க்கை
ஸ்ரீரஞ்சனி பிறந்தது ஆந்திரப்பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள முருக்கிபுடி கிராமமாகும். இவரது அக்கா மூத்த ஸ்ரீரஞ்சனியும் ஒரு நடிகையாவார். இவர் முதலில் தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். இவரது இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தன் அக்காவுடன் வளர்ந்து, திரைத்துறையில் நடிக்க விரும்பினார். சித்திரப்பு நாராயணமூர்த்தி இவருக்கு நடிக்கும் வாய்ப்பை பீஷ்மா (1944) படத்தில் அளித்தார். பின்னர் கொல்லபாமா, பிரம்மாச்சாரி, கீதாஞ்சலி, மதலாசா, லைலா மஜ்னு போன்ற படங்களில் நடித்தார். இவர் வாழ்வின் திருப்பு
முனையான பாத்திர வாய்ப்பாக குணசுந்தரி கதா ( 1949 ) என்ற படம் புகழ்பெற்ற இயக்குநரான கத்ரி வெங்கட ரெட்டி இயக்கிய படத்தில் கிடைத்தது. இவர் நடித்த குண சுந்தரி பாத்திரம் திரைத்துறையில் இவருக்கு நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. தெலுங்கு படமான குணசுந்தரி கதா படத்தை தமிழில் எடுத்தபோது குண சுந்தரி வேடத்தில் தமிழிலும் ஸ்ரீரஞ்சனியே நடித்து பாராட்டைப் பெற்றார். இதன் பிறகு தலைசிறந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கத் துவங்கியது. மன்றதண்டம், சங்கராந்தி, பிரேமா, ப்ரதுகு தெருவு, சுவயம்ப்ரபா, ராமாஞ்சநேய யுத்தம் போன்ற பல படங்களில் நடித்தார். என்றாலும் இவரின் குணசுந்தரி கதா பட நடிப்பு எப்போதும் பாராட்டத்தக்கதாக இருந்தது.

இவர் நடித்த தமிழ்ப் படமான பராசக்தி (1952), இவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது. அதே ஆண்டு அவர் எம்.ஜி.ஆருடன் குமாரி என்ற படத்தில் நடித்தார். ரத்தக்கண்ணீர் படத்தில் தொழுநோய் பிடித்த (1954) நாயகனாக நடித்த எம்.ஆர்.ராதாவுக்கு இணையாக நடித்தார். ராஜி என் கண்மணி (1954) படத்தில் ராஜி என்னும் பார்வையற்ற பூக்காரி பாத்திரைத்தை ஏற்று நடித்தார்.[2] இந்தப்படம் சார்லி சாப்ளின் படமான சிட்டி லைட்சு (1931) படத்தின் தழுவல் ஆகும்.

1960 ஆம் ஆண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். மீண்டும் வயதான தாயார், குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 1974 ஆம் ஆண்டு காலமானார்.



ஸ்ரீ ரஞ்சனி – 22.2.1927-ல் பிறந்து 27.4.1974-இல் மரணமடைந்தார். ’குமாரி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். பிரபல தமிழ், தெலுங்கு நடிகை. ‘விக்ரமாதித்தன்’ படத்திலும் நடித்தார். பராசக்தி படத்தில் சிவாஜிகணேசனின் தங்கையாக கல்யாணி என்ற பாத்திரத்தில் நடித்தவர் என்றால் பலருக்கு உடனடியாக ஞாபகம் வரும். தமிழில் ராஜீ என் கண்மணி, பராசக்தி, மூன்றெழுத்து போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.தமிழிலும் தெலுங்கிலுமாக 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சோக வேடங்களில் அதிக படங்களில் நடித்த இவரை ‘கண்ணீர் திலகம்’ என்று கூறலாம். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், முரிக்கிபுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 1949-இல் கத்ரி வெங்கிட ரெட்டி என்பவர் இயக்கிய ‘குணசுந்தரி கதா’ என்ற திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.
ஸ்ரீரஞ்சனி- அக்காவின் பெயரில் கலக்கிய தங்கை!
Updated: July 15, 2016 11:48 IST

பா.தீனதயாளன்

ஒரு நடிகை எப்படிப்பட்ட பாத்திரம் கொடுத்தாலும் நடிக்கணுமே தவிர, எதிர்ப்புஉணர்வைக் காட்டக் கூடாது. திறமை இருக்குமானால் ஒரு நடிகைக்கு எந்த வேஷமும் நடிக்கக் கூடியதுதான். சிரமத்தைப் பாராமல் வசனத்தை மனப்பாடம் செய். போகப் போக நடிப்பது சுலபமாகிவிடும்.”

திமிறிக்கொண்டு வெளியேறத் துடித்த இளம் தெலுங்கு நடிகைக்கு, இதமாக எடுத்துச் சொல்லி நடிக்கவைக்க வேண்டிய பொறுப்பு இயக்குநர் பஞ்சுவுக்கு. கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையரில் ஒருவர். மு.கருணாநிதியின் உரையாடலைப் பார்த்துப் பயந்து, பேசக் கஷ்டப்பட்டு பராசக்தியில் சிவாஜியின் தங்கை ‘கல்யாணி’யாக நடிக்க மறுத்து விலக விரும்பினார் ஸ்ரீரஞ்சனி.

விலகிச் சென்றவர் விரும்பி வந்தார்

ஸ்ரீரஞ்சனி நடித்த வாஹினி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘வர விக்ரயம்’, ‘குணசுந்தரி கதா’ ஆகியவை ஆந்திராவில் பிரமாதமாக ஓடியவை. ‘எனக்கு அழுகை பிடிக்காது. ஆனால் நீங்கள் என் மனத்தைத் தொட்டுவிட்டீர்கள்!’ என்று ‘வரவிக்ரயம்’ படத்தில் அறிமுகமான பி. பானுமதியின் பாராட்டுதலைப் பெற்றிருந்தார் ஸ்ரீரஞ்சனி.நடிக்கத் தெரிந்தவர். ஆயினும் கலைஞரின் கன்னித் தமிழ் உதடுகளில் ஒட்டாமல் ஓட்டம் பிடித்தது. இரட்டை இயக்குநர்களின் கடின உழைப்பின் பலன், ஸ்ரீரஞ்சனி கொஞ்சம் கொஞ்சமாகக் கல்யாணியாகச் செதுக்கப்பட்டார். தொடர்ந்து அதே பராசக்தி படக் குழு. பி.ஏ. பெருமாளின் நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பு. கிருஷ்ணன் பஞ்சு இயக்கம். தோற்றத்திலேயே அச்சுறுத்தும் முரட்டு ஹீரோவுடன் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். முதல் நாள் ஷூட்டிங். ஸ்ரீரஞ்சனி நிஜமாகவே நடுநடுங்கினார்.

“என்னைப் பற்றி ஏதாவது சொல்லி சிலர் பயமுறுத்தி இருப்பாங்க. அதைக் கேட்டுட்டு நான் ஒரு ரோக்- அப்படின்னு டிசைட் பண்ணி இருப்பே இல்ல. உண்மையில் நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். நீ பயப்படாமே வொரி பண்ணிக்காமே ஃப்ரீயா நடி பொண்ணே” என்று சுந்தரத் தெலுங்கில் மனம் திறந்து பேசிய எம்.ஆர். ராதாவின் மனம் திறந்த பேச்சுக்குப் பிறகே அவருடைய மனைவியாக ‘ரத்தக் கண்ணீ’ரில் நடிக்கும் தைரியம் ஸ்ரீரஞ்சனிக்கு வந்தது.

எம்.ஜி.ஆர். – சிவாஜிக்கு இணை
1952-ல் பராசக்தி, 1954-ல் இல்லற ஜோதி, ரத்தக்கண்ணீர் என ஸ்ரீரஞ்சனி நடித்தவை பகுத்தறிவுப் பாசறை முத்திரைகளோடு இன்றும் பரபரப்பாகப் பேசப்படுபவை. சிவாஜி கணேசனின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்த இல்லற ஜோதி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. அடையாறு ஏரியில் எம்.ஜி.ஆருடன் படகில் டூயட் பாடி நடித்த படம் ‘குமாரி’. அது முகவரியற்றுப் போனது. சார்லி சாப்ளின் நடித்துப் பெரும் வெற்றிபெற்றது சிட்டி லைட்ஸ். ஜெமினியின் தயாரிப்பாக அது ‘ராஜி என் கண்மணி’ என்ற தலைப்பில் தமிழுக்கு ஏற்ப உருமாறியது. டைட்டில் ரோலில் ஸ்ரீரஞ்சனிக்குக் கிடைத்த மிக அரிய சந்தர்ப்பம்.

‘மல்லிகைப்பூ ரோஜா… முல்லைப் பூ வேணுமா…

தொட்டாலே கை மணக்கும் பட்டான ரோஜா’

என்று பாடி நடிக்கும் பார்வையற்ற பூக்காரியாக ஸ்ரீரஞ்சனியை வாரி அணைத்துக்கொண்டனர் தமிழ் ரசிகர்கள்.

காதலிக்குக் கண் கிடைக்கக் காரணம் காதலன் நாயகன் டி.ஆர்.ராமசந்திரன். காதலியோ கண் மருத்துவரை மணந்துகொள்ள, ஏமாந்துபோவார். ராமச்சந்திரன் முதன்முதலில் முழு நீள குணச்சித்திர நடிகராக இந்தப் படத்தில் மாறியிருந்தார்.
‘ராஜி என் கண்மணி’
எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராஜி என் கண்மணி’ தோல்வியைச் சந்தித்தது.

“ஜெமினி ஸ்டுடியோ எனக்குக் கிட்டாத பொருளாகத் தோன்றியது. அதில் தயாராகும் ஒரு படத்துக்கு நான் ஹீரோயின் என்றவுடன் பெருமை பிடிபடவில்லை. ஜெமினிக்குள் நுழைந்து நானும் மேக்-அப் போட்டு கதாநாயகியாக நடித்ததை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதினேன். காரணம் ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’.அதில் நடித்த வசுந்தரா தேவியின் தீவிர ரசிகை ஆனேன். வசுந்தரா தேவி ஒரு விதமாகப் பளபளக்கும் ஆடை அணிந்து, தோள்களைக் குலுக்கி ஆடிய நடனம் இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது. அவர்தான் எனக்கு சினிமா மீது மோகத்தை உண்டாக்கினார்.‘ராஜி என் கண்மணி’யின் டைரக்டர் கே.ஜே. மகாதேவன். கல்கியின் ‘தியாக பூமி’ படக் கதாநாயகன். ஹாலிவுட் படங்களில் அலாதி மோகம் அவருக்கு. பல மேல் நாட்டுப் படங்களைப் பார்த்து, ஏதேதோ ஐடியாக்களைத் தமிழ்ப் படத்தில் புரியவைக்கப் பார்த்தார். ஆனால் ஜனங்களுக்குப் புரியவில்லை” என்று 1971-ல் பேட்டியளித்திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

ஏமாற்றமும் ஏற்றமும்

‘விக்ரமாதித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடி என்று நம்பவைத்து, கடைசியில் வில்லன் பி.எஸ். வீரப்பாவுடன் இணை சேர்ந்த ஏமாற்றமும் ஸ்ரீரஞ்சனிக்கு உண்டு. ஸ்ரீரஞ்சனியின் இயற்பெயர் மகாலட்சுமி. சினிமாவுக்காக அவரது அக்காவின் பெயரான ஸ்ரீரஞ்சனியைச் சூட்டிக்கொண்டார். அக்காவின் மீது அவ்வளவு பாசம். அவரது அக்கா சினிமாவில் நடித்தாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் ஸ்ரீரஞ்சனிக்கு ஏற்றம் தந்து கொண்டாடிய ஆந்திரத் திரையுலகம் என்ன காரணத்தாலோ அவரை ஜூனியர் ஸ்ரீரஞ்சனி என்றே அழைத்தது. சினிமா நடிகைகள் செயற்கை வெளிச்சத்தில் கதறி அழுது, இன்னொரு குடும்பத்துக்காக மெழுகாகக் கரைந்து உருகி ஓடி ஒளி தருவது ஸ்ரீரஞ்சனிக்கும் நேர்ந்தது.

அக்கா ரஞ்சனியும் நல்ல பாடிநடிக்கக்கூடிய நடிகை தான் .ஆந்திராவில் கிருஷ்ண விலாச நாடக சமாஜம் நாடக மன்றத்தில் கிருஷ்ணன் ,அபிமன்யு ,சத்தியவான் போன்ற கதா பாத்திரத்திலும் நடித்தவர் .சி .புல்லையா இயக்கிய லவகுசா ,1934  ஸ்ரீ க்ரிஷ்ணலு  ௧௯௩௫ போன்ற படத்திலும் நடித்தவர் .ரஞ்சனிக்கு 21  வயது மூத்தவர்  .இயக்குனர் மல்லிகார்ஜுன ராவ்   இவருடைய மகன் ஆவார்  . தன் அக்காவின் அகால மறைவு 1939 க்குப் பிறகு, அக்காவின் கணவர் நாகமணியையும், அவரது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் தவிர்க்க முடியாத பொறுப்பு ஸ்ரீரஞ்சனிக்கு. தொடர்ந்து அரிதாரம் பூச அதிக அவகாசம் அமையவில்லை.

வெற்றிகரமாக ஓடிய டி.ஆர். ராமண்ணாவின் ஓரிரு வண்ணச் சித்திரங்களில், ஸ்ரீரஞ்சனியை ஜெயலலிதாவின் அம்மா வேடத்தில் பார்க்க முடிந்தது. அதன் பிறகு வி.எஸ். ராகவனின் மனைவியாகவும் பிரமிளா, பி.ஆர். வரலட்சுமி, ஜெயசித்ரா ஆகிய அன்றைய அறிமுக நடிகைகளின் தாயாராகவும் பல படங்களில் நடித்த ஸ்ரீரஞ்சனிக்கு ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ‘வாழையடி வாழை’ திரைப்படத்தில் மனத்துக்கு நிறைவான வேடம் அளித்தார். அடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸின் வெற்றிப் படமான ‘பூக்காரி’யில் மு.க. முத்துவின் அன்னையாகத் தோன்றினார் ஸ்ரீரஞ்சனி.

நடித்த படங்கள்
இண்டி கோடலு (1974)
ஜீவன தரங்காலு (1973)
பலே தம்முடு (1969)
நேனன்டே நேனே (1968)
பங்காரு பஞ்சாரம் (1965)
ஸ்ரீ கிருஷ்ணார்ஜுண யுத்தம் (1963)
மஹாகவி காளிதாசு (தெலுங்கு, 1960)
கிருஷ்ண லீலலு (1959)
பிரேமே தெய்வம் (1957)
பெங்கி பெல்லாம் (1956)
உமா சுந்தரி (1956)
சந்தானம் (1955)
ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம் (1955)
ரத்தக்கண்ணீர் (1954)
சந்த்ரஹாரம் (1954)
அமரசந்தேசம் (1954)
பேதமனசுலு (1954)
ராஜி என் கண்மணி (1954)
இல்லற ஜோதி (1956)
திலகம் (1960)
ஒரே வழி
ப்ரதுகு தெருவு (1953)
காதல் (1952)
மணவாட்டி (1952)
பராசக்தி (1952)பெண்குலத்தின் பொன் விளக்கு
பிரேமா (1952)
ராஜேஸ்வரி (1952)
குமாரி (1952)
சங்ராந்தி (1952)
மந்த்ரதண்டம் (1951)

வாலி சுக்ரீவா (1950)
அன்பே தெய்வம் (1956)
லைலா மஜ்னு (1949)
குணசுந்தரி கதா (1949)
கீதாஞ்சலி (1948)
மதலசா (1948)
பெண்குலத்தின் பொன் விளக்கு (1949)
ப்ரேம ரதம் (1947)
கிரகப்பிரவேசம் (1946)
பீஷ்மா (1944)

No comments:

Post a Comment