Friday, 17 April 2020

MUSIC DIRECTOR, T.K.RAMAMURTHY, 1922, MAY 15 - 2013, APRIL 17





MUSIC DIRECTOR T.K.RAMAMURTHY  
1922 MAY 15 - 2013 APRIL 17



தமிழ் திரையுலகில் பல ஆண்டுகாலம் ஆளுமை செலுத்திய 'மெல்லிசை மன்னர்கள்' என்று அழைக்கப்பட்ட விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களில் ஒருவரான டி கே ராமமூர்த்தி தமது 91 ஆவது வயதில் 17.4.2013 அன்று சென்னையில் காலமானர்.

அவர் தனிப்பட்ட முறையில் இசையமத்த பல பாடல்களும், விஸ்வநாதனுடன் சேர்ந்து இசையமைத்த நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றளவும் காலத்தை வென்று நிற்கின்றன.பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92.

மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டி.கே.ராமமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

##~~##
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திரையிசையில் தங்களுக்கென்று தனிப்பாணியை உருவாக்கிய விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் மெல்லிசை மன்னர்கள் என்று போற்றப்பட்டனர். இருவரும் இணைந்து 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதை டி.கே.ராமமூர்த்தி பெற்றுள்ளார்.
இதனிடையே, இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.கள்



டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி (Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.










.

No comments:

Post a Comment