Sunday, 12 April 2020

TITANIC ARTIFACTS




TITANIC ARTIFACTS


உலகிலேயே முதன் முதலாக தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலான, 'டைட்டானிக்' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். திரைப்படமாக வெளியாகி, சக்கை போடு போட்டது.



ஏப்., 15, 1912, அதிகாலை, 2:19 மணிக்கு, வடக்கு அட்லாண்டிக் கடலில், 'டைட்டானிக்' கப்பல் பயணம் செய்தபோது, எதிர்பாராத விதமாய் பனிப்பாறை மீது மோதி, மூழ்கியது.
இந்த விபத்து நடந்து, 108 ஆண்டுகள் கடந்து விட்டன.
இந்த கப்பலில் பயணம் செய்தவர்களில், 1,500 பேர் இறந்தனர்; 705 பேர் பிழைத்தனர்.
இறந்த, 1,500 பேரில், 340 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்தன; 1,160 பேர் காணவில்லை என, அறிவிக்கப்பட்டனர்.
'டைட்டானிக்' கப்பல், மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்கி, 12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில், ஜல சமாதி ஆனது.



கடந்த, 1985ல், தண்ணீருக்குள் மூழ்கிய, அணு நீர்மூழ்கி கப்பல் இரண்டை தேடியது, அமெரிக்கா. அப்போது தான், சிதைந்த நிலையில், 'டைட்டானிக்' கப்பலை கண்டுபிடித்தது.
கடந்த, 2000த்தில், கண்டுபிடிப்பு கப்பல் மூலம், 28 நீர் மூழ்கி வீரர்களுடன் சென்று, 'டைட்டானிக்' மூழ்கிய இடத்தில் தேடுதல் வேட்டை நடந்தது. இதில், 800 வகையான பொருட்கள் கிடைத்தன.
வைர ப்ரேஸ்லெட், வயலின், செம்மறி ஆட்டு தோலால் ஆன கோட், பாக்கெட் கடிகாரம், கப்பலின் வரைபடம் போன்றவை, இவற்றில் மிக முக்கியமானவை. இப்பொருட்கள் ஏலம் விடப்பட்டதில், வைர ப்ரேஸ்லெட் - 146 கோடி ரூபாய், வயலின் - 130 கோடி, செம்மறி ஆட்டு தோலால் ஆன கோட் - 1.50 கோடி, பாக்கெட் கடிகாரம் - 91 லட்சம், கப்பல் வரைபடம் - 2.15 கோடி ரூபாய் என, ஏலம் போயின.



இது தவிர, வெள்ளியால் ஆன பிராந்தி பாட்டில், 72 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.
ஹாஸ்கர் ஹால்வர்சன் என்ற முதல் வகுப்பு பயணி மற்றும் பெரிய தொழில் அதிபர் எழுதிய ஒரு கடிதம், 2017ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது, 120 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
கப்பலில் பயணித்த, 107 குழந்தைகளில், 50 குழந்தைகள் இறந்து விட்டன. 13 மாதமே ஆன சிசு ஒன்று, குளிரில் விறைத்து போய் இறந்திருந்தது.
பயணித்த, 12 நாய்களில், தங்கள் முதலாளி அம்மாக்களுடன், 'லைப்' படகு மூலம், மூன்று மட்டுமே கரை சேர்ந்து, பிழைத்தன.



கப்பலின் இரும்புகள், 100 ஆண்டிற்கு மேல் ஆனதால், வலு இழந்திருக்கும். எனவே, கப்பலை துாக்கும்போது, நொறுங்கி விடும் என்பதால் கப்பலை வெளியில் எடுக்கும் முயற்சியை கைவிட்டனர்.
டைட்டானிக் கப்பல், காலத்தையும் வென்று நிற்கிறது!

No comments:

Post a Comment