Sunday, 31 October 2021

WHERE IS MRS.M.G.R

 



WHERE IS MRS.M.G.R



"எங்கே மிஸஸ் எம்ஜிஆர்"
என கேட்டபடியே விரைவாக நடந்து வந்தார் இந்திரா காந்தி.
அது சென்னை அப்போலோ
மருத்துவமனை.
அக்டோபர் 1984.
திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால், அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர்.
அவரை பார்ப்பதற்காக
டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு விரைந்து வந்திருந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.
எம்.ஜி.ஆரைப் பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் இந்திரா காந்தி அப்போலோ மருத்துவ மனைக்கு வந்தவுடன் நேரடியாக சென்று கண்ணாடிக் கதவு வழியாக எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.
ஐ.சி.யூ.வில் அந்த ஆபத்தான நிலையில் எம்ஜிஆரை பார்த்தவுடன் இந்திரா காந்தியின் வாயிலிருந்து அவரையும் அறியாமல் வந்த வார்த்தைகள் :
"இஸ் தட் எம்ஜிஆர் ?
ஓ மை காட் ...
ஐ காண்ட் பிலீவ் இட்..."
அருகில் இருந்த ஜானகி அம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி சொன்னாராம் : “கவலைப்படாதீர்கள்.
இவரை காப்பாற்றுவது இந்த நாட்டின் கடமை. என்னுடைய கடமை.”
இப்படி சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் உடனடியாக செயலிலும் இறங்கினார் இந்திராகாந்தி.
எம்ஜிஆருக்கு சிகிச்சை அளிக்க உலகத்திலேயே தலை சிறந்த மருத்துவர்கள் யார் என்பதை விசாரிக்க உத்தரவிட்டார்.
அடுத்த நாளே அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் அப்போலோவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை இந்திராகாந்தி.
ஏர் இந்தியாவின் போயிங் விமானம் ஒன்றை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தயாராக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
.
அவசரமாக மருத்துவர்களை அழைத்து வருவதற்கும், தேவைப்பட்டால் எம்.ஜி.ஆரை வெளி நாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கும் கூட ஏற்பாடுகளை செய்திருந்தார்.
எப்படியாவது எம்ஜிஆரின் உயிரை காப்பாற்றி விடவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் அவர்.
இந்த வேளையில்
1984 அக்டோபர் 31 காலையில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் !
இந்திரா காந்தி தன் சொந்த பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
இப்போது எம்ஜிஆருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை.
எப்படி இந்த செய்தியை எம்ஜிஆரிடம் சொல்வது ?
ஏனென்றால் அந்த சமயத்தில்தான் எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடிக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்.
இந்த செய்தியை அவரிடம் சொல்லி, அதைத் தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டு விட்டால்...?
சிகிச்சை தொடர்ந்தது.
சிக்கல்களும் நீடித்தது.
எம்.ஜி.ஆரின் உடல் நிலை இன்னும் மோசம் ஆகவே
5.11.1984 அன்று ஏற்கனவே இந்திராகாந்தி ஏற்பாடு செய்து வைத்திருந்த தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அடுத்த சில நாட்களில் அமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட எம்.ஜி.ஆரின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
அதன் பின்னர்தான்
மெல்ல மெல்ல இந்திரா காந்தியின் மரணச் செய்தியை எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள் அதிகாரிகள்.
அதிர்ச்சியில் உறைந்து போனார் எம்.ஜி.ஆர்.
கண்களில் நீர் வடிய கவலை தோய்ந்த முகத்தோடு அதிகாரிகளை ஏறிட்டுப் பார்த்தார்.
உடனடியாக இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளின் வீடியோக்களை கொண்டு வாருங்கள் என சைகையில் சொன்னார்.
வீடியோ ஓட ஓட,
எம்.ஜி.ஆரின் விழிகளிலிருந்து கண்ணீர் பெரு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
எதற்கும் கலங்காத எம்ஜிஆர் இந்திராவின் இறுதி ஊர்வலக் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவைப் பார்த்து விட்டு
சிறு குழந்தையைப் போல
தேம்பி தேம்பி அழுதார்.
'நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்'
என்ற எண்ணத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட எம்ஜிஆர்,
தான் அப்போது இருந்த அந்த சிக்கலான நிலையிலும்,
தன் உயிரைக் காப்பாற்ற ஓடோடி வந்து உதவிகளைச் செய்த இந்திராகாந்திக்கு நன்றி சொல்ல துடித்தார்.
ஆனால் இந்திரா காந்தியும் இப்போது உயிரோடு இல்லை.
எம்ஜிஆருக்கும் பக்கவாத பாதிப்பினால் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.
மௌனமாக மனதுக்குள் இந்திரா காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் எம்ஜிஆர்.
“வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி.”
இன்று (அக்டோபர் 31)
இந்திரா காந்தி நினைவு தினம் .

HISTORY OF CEYLON TEA

 

HISTORY  OF CEYLON TEA

சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்!
இன்றும் கூட தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக மலையகத் தமிழர்கள் இல்லை!
History of Ceylon tea, Indian Tamils, Sirima – Shastri pact : 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியா முழுவதும் நில உடமை தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ராயத்துவரி அமலாக்கப்பட்டது. இங்கிலாந்தின் வளர்ச்சிக்காகவும், ஐரோப்பிய சந்தைகளுக்காகவும் நம்முடைய நிலங்கள் அவர்களுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்தது. ஐரோப்பிய சந்தைகளில் பெரிதும் ஆதிக்கம் செலுத்த துவங்கிய பிரிட்டிஷ் தங்களின் காலனி நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டங்களில் வேலைக்காக ஆட்களை சேர்க்கும் முடிவுக்கு வந்தது.
சந்தைகள் விரிவடையும் போது உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நிறைய நிலங்களும், அதற்கேற்ற உழைப்பும் ஆங்கிலேயர்களுக்கு தேவைப்பட்டது. உணவுக்கு வழியில்லாத சூழலாலும், சொந்த நிலமற்ற கையறு நிலையிலும் லட்சக்கணக்கான மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர். மக்களின் சூழ்நிலையை ஆங்கிலேயர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். “வெளிநாடுகளில் வேலை, மூன்று நேரமும் உணவுக்கு உத்திரவாதம், திரும்பி வரும் போது பெரும் பணக்காரனாக வரலாம்” என்று மூளைச்சலவை செய்வதற்காகவே ஆங்கிலேயர்கள் இடைத்தரகர்களை தேர்வு செய்து அனுப்பினர்.
இலங்கையின் தேயிலைக்காடுகள், பர்மா, மலேசியாவின் ரப்பர்த்தோட்டங்கள், கயானாவின் காஃபித் தோட்டங்கள் என தமிழர்கள் அடிமைகளாக வெளிநாடுகளுக்கு சென்றனர். 24 மணி நேரமும் அவர்களின் வாழ்க்கை மேற்பார்வையிடப்பட்டது. தப்பித்து செல்லும் சூழல் வெளிநாடுகளில் கற்பனைக்கு எட்டாத வகையில் இருந்தது. தென்னிந்திய பஞ்சத்திற்கு முன்பும் இலங்கையில் தமிழர்கள் ஏற்றுமதி, இறக்குமதி, காட்டுவேலைகள், மேம்பாட்டு பணிகளுக்கு சென்றதால், அங்கு குடும்பங்களாக மீண்டும் செல்வதில் அவர்களுக்கு பிரச்சனை ஏதும் இருக்கவில்லை.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் பண்ணை அடிமைகளில் இருந்து பதவி உயர்வு பெற்று தோட்ட அடிமைகளாக பணி செய்யத் துவங்கினர். இன்றும் கூட அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக அம்மக்கள் இல்லை என்று கூறுகிறார் கண்டியை சேர்ந்த புவனேஷ். இணையதளம் ஒன்றின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.
ஈழத்தமிழர்கள் இந்திய தமிழர்கள்
ஈழத்தமிழர்கள் இலங்கையின் யாழ்பாணத்தை சேர்ந்த அந்நாட்டின் பூர்வ குடிகள். அவர்களுக்கும் மலையில் வாழும் மலையகத் தமிழர்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. மலையகத் தமிழர்கள் இன்றளவும் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்றே அடையாளம் காணப்படுகிறார்கள். “தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலருக்கும் இந்த வித்தியாசங்கள் புரிவதில்லை. ஈழப்பிரச்சனைகள் கூட பெரும்பாலும் அரசியல் நோக்கத்துக்காகவும், வெறுப்பரசியலை ஊக்குவிக்கவும் தான் பயன்பட்டது. மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட மலையக மக்களின் பிரச்சனைகளைக் காட்டிலும் ஈழத்து பிரச்சனை வீரியமாக இருக்கும் என்று அவர்கள் யோசித்திருக்க கூடும்” என மட்டக்களப்பை சேர்ந்த ரக்‌ஷனா நம்மிடம் அறிவித்தார்.
இதற்கான தேடலை நீங்கள் தான் தொடர வேண்டும் என திரிகோணமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளிதரன் அறிவிக்கிறார்.
இலங்கையும் காஃபி விவசாயமும்
ஆரம்பத்தில் இலங்கையின் கண்டி, அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 1820 – 1880 காலங்களில் காஃபி பயிரட்டப்பட்டது. காஃபிக்கு முழுக்காடுகளையும் அழிக்க வேண்டியதில்லை. அடியில் இருக்கும் புதர்களை மட்டும் அழித்து 1849 வரையான 29 ஆண்டுகளில் 65 ஆயிரம் ஏக்கரில் காஃபி பயிரடப்பட்டது. காஃபியின் தேவை அதிகரிக்க அதற்காக அழிக்கப்படும் எண்ணிக்கையும், அந்த பணியில் அமர்த்தப்படுவதற்காக தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகம் தேவைப்பட்டது. 1868 ஆண்டின் முடிவில் இலங்கையில் சுமார் 2,75,000 ஏக்கர் அளவில் காஃபி பயிரிடப்பட்டது.
இலங்கையில் குடியேறிய தமிழர்கள்
தென்னிந்தியாவில் இருந்து இலங்கை சென்ற மக்களில் பலர் மன்னார் துறைமுகத்தில் இறங்கி கண்டி மலைக்காடுகள் வரை நடந்தே சென்றுள்ளனர். கண்டி, வத்தேகம, மடுல்கல, இரங்கல, கலகா, ஹேவாஎட்ட, கம்பொல, மாத்தளை, பேராதெனிய, பள்ளேகல ஆகிய இடங்களில் மக்கள் குடியேறினர். காஃபி பயிர்களின் உற்பத்தி அதிகரிக்க மக்கள் நாவலப்பிட்டி, கினிகஸ்த்தென்ன, கொத்மல, தலவாகெல, நுவரெலியா, அட்டன், ஊவா மாகாணங்களில் பின்னர் குடியேறினர். இந்த குடியேற்றங்கள் 1830 முதல் 1840 வரை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து வந்த மக்கள் காடுகளை காஃபி தோட்டங்களாக மாற்றினார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த உழைப்பு மிகவும் அளப்பரியது. ஆனாலும் காஃபி பயிர்களில் நோய் தொற்றுகள் உருவாக காஃபி பயிரிடுதல் முடிவுக்கு வந்தது.
இலங்கைக்கு முன்பே இந்தியாவின் அசாம் பகுதியில் தேயிலைகள் பயிரிடப்பட்டு, வெற்றிகரமாக வளர்க்கப்பட்டது. காஃபியின் சாம்ராஜ்ஜியம் முடிவடைய தேயிலை அந்த இடத்தை பிடித்துக் கொண்டது. அடிக்காட்டினை அழிப்பது மட்டும் தற்போது வேலையில்லை. மொத்த காட்டினையும் அழித்து, தேயிலை பயிருக்கான நிலம் உருவாக்கப்பட்டது. தேயிலைத் தோட்டங்களில் மக்கள் வாழ லேன்களை அமைப்பது, பறிக்கப்பட்ட தேயிலையை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்ல சாலைகளை அமைப்பது, தேயிலையை தூளாக மாற்ற கருவிகளை இயக்குவது, உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூளை சந்தைப்படுத்துவது, துறைமுகங்களுக்கு அனுப்பவது என அனைத்தையும் மக்கள் செய்தனர்.
History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact
கோத்தகிரி குயின் சோலா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை… Express Photo by Nithya Pandian
1860-ம் ஆண்டு கண்டியின் நூல் கந்துலாவின் லிப்டன் தேயிலைக்காட்டில் ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் இலங்கையின் புகழ்பெற்ற ‘சிலோன் டீ’ முதன்முறையாக உற்பத்தி செய்யப்பட்டது. இலங்கையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்தது. சிலோன் டீ என்ற பெயர் நிலைத்துவிட்டது. இலங்கை பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை சிலோன் டீ உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. 1914ம் ஆண்டில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மதிப்பு ரூ. 90 மில்லியன் ஆகும். அடுத்த ஆண்டில் ரூ. 122 மில்லியன் என்ற அபரீதமான இலக்கை அவர்களின் பொருளாதாரம் எட்டியது. இலங்கையின் மக்கள் தொகையில் இவர்கள் வெறும் 5%-த்தினர் மட்டுமே. ஆனால் இவர்களால் இலங்கை பொருளாதாரத்தில் 100 கோடி டாலர்கள் வருமானத்தை பெற்றுத்தரும் முக்கிய அங்கமாக செயல்படுகிறார்கள்.
“மக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலை இன்று இல்லை. அவர்கள் அனைவரும் குடியுரிமை பெற்றவர்கள். ஆனாலும் அவர்களுக்கு சொந்தமாக நிலமோ வீடுகளோ கிடையாது. தோட்ட நிர்வாகத்தின் கீழ் தான் அனைத்தும் வருகிறது. தோட்டம் கைமாற்றப்படும்போதோ அல்லது விற்கப்படும்போதோ அம்மக்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நாவலப்பிட்டியில் தோட்டமொன்றில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்று முரளிதரன் கூறினார். “அவர்களுக்கான சம்பளம் போதுமானதாக இல்லை” இல்லை என்கிறார் புவனேஷ்.
இலங்கை குடியுரிமைச் சட்டமும் அதன் பின்னணியும்
1948 நவம்பர் 15ம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென்பது முக்கிய அம்சமாகும். 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருக்கு முந்தைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே அவரால் இலங்கை குடியுரிமை பெற இயலும்.
அதற்கான காரணங்களாக பார்க்கப்பட்டது தமிழர்களின் எண்ணிக்கை. அவர்கள் தேர்வு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களின் வாக்கு வங்கிகள், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருந்தது. வேறொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இது போன்ற அதிகாரத்தை மாற்றும் காரணியாக இருப்பதை சிங்கள அரசு விரும்பவில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்களை மீண்டும் தாயகம் அனுப்ப இந்தியாவுடன் 1951, 1953, 1954 ஆண்டுகளில் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. புதிதாக லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவிலும், சிறிமாவோ பண்டாரநாயக்கே இலங்கையிலும் ஆட்சி அமைத்த போது அக்டோபர் 30, 1964ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தத்தின் படி மலையகத்தில் வசித்த 10 லட்சம் தமிழர்களை நாடற்றவர்கள் என்று அறிவித்தது இலங்கை அரசு. அந்நாட்டில் அவர்கள் குடியுரிமை அற்றவர்களாகவும் வாக்குரிமை அற்றவர்களாகும் நடத்தப்பட்டனர். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
ஒப்பந்தத்தின் படி 5 லட்சத்தி 25 ஆயிரம் இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்தியாவும், 3 லட்சம் தமிழர்களை இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் 1.5 லட்சம் நபர்கள் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. நான்கு தமிழர்கள் தாயகம் திரும்பினால் ஒரு தமிழருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 20 ஆண்டுகளில் 4,45,519 நபர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மீதம் இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் மிகவும் காலம் தாழ்த்தியது இலங்கை அரசு. 1984ம் ஆண்டு உள்நாட்டுப் போர் மிகவும் தீவிரமடைய ராமேஸ்வரம் – தலைமன்னார் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒப்பந்தத்தின் படி வெளியேற வேண்டிய தமிழர்கள் பலரும் நாடற்றவர்களாக இலங்கையில் வாழ்ந்து வந்தனர். பின்னர் குடியுரிமை சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்கான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது மலையக தமிழர்களும் அந்த போராட்டத்தில் இணைந்து விடுவதை தடுக்க அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அனைவருக்கும் குடியுரிமை வழங்க முடிவு செய்தது இலங்கை அரசு. 1988ம் ஆண்டு நாடற்றோர் என்ற பதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஆனால் சில காலக்கட்டத்தில் மலையக தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களால் பிரச்சனை ஏற்பட்டது என்பதை நினைவுபடுத்துகிறார் புவனேஷ்.
தமிழகத்திற்கு திரும்பி வந்தவர்கள்
1966ம் ஆண்டு முதல் 1984 ஆண்டுகள் வரை 4,45,519 நபர்கள் தாயகம் திரும்பினார்கள். தேயிலைத் தோட்டங்களில் 2445 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டன. ரப்பர் தோட்டங்களில் 225 குடும்பங்களும், சிங்கோனா வளர்ப்பிற்காக 125 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டதாக அரசு அறிவிக்கிறது.
பெரம்பலூரின் துரைமங்கலம், வெங்கலம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தங்க வைக்கப்பட்டனர். திருச்சியின் துவாக்குடி தென்மலை, திருச்சி நகரம், கரூரின் வெள்ளாளப்பட்டி, பெரியார் நகர், மணப்பாறையின் வேம்பனூர் காலனி, துறையூரின் சிறு நத்தம், முசிறி, ஜெயங்குண்டம், நாமக்கல் போன்ற பகுதியில் குடியேறினர். ஏற்காட்டின் கிளிப்டன் தோட்டம், ஆதியார் தோட்டம், சோமசுந்தரம் தோட்டம், கிரே தோட்டம் , நீலகிரி கூடலூரில் நெல்லியாளம் டீ எஸ்டேட், சேரங்கோடு தேயிலைத் தோட்டம், சின்கோனா சேரங்கோடு, பந்தலூர், தேவாலா, நந்தட்டி, உதகையின் பார்சன் வேலி, சுனோ டவுன், தலையட்டு மந்து மற்றும் கோத்தகிரியின் பல்வேறு டீ எஸ்டேட்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இன்றைய மலையக தமிழர்கள் நிலை
அரசியலில் மலையகத் தமிழர்களின் பங்கீடு குறித்து முரளிதரனிடம் கேள்வி எழுப்பிய போது “நாட்டின் ஏனைய பகுதிகளின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைவிட மேலதிகமாக பல பிரச்சினைகளை இம்மக்கள் எதிர்கொள்கிறார்கள். முழுநாட்டுக்குமாக உருவாக்கப்படும் திட்டங்கள், நிர்வாகக்கட்டமைப்புக்கள், கொள்கைகளுள் இவர்கள் உள்வாங்கப்படாத காரணத்தால் இவர்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தேசிய தொழிலாளர் கொள்கைக்குள்/ சட்டங்களுக்குள் மலையகத் தோட்டத்தொழிலாளர் உள்வாங்கப்படுவதில்லை. இதேபோன்று கல்விக்கொள்கை, காணிக்கொள்கை, சுகாதார/மருத்துவத்துறையிலும் நிகழ்கிறது. இவை அனைத்தும் தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது. மருத்தவர் நியமனம் கூட இவ்வாறு தான். இதனால் மாகாணசபை, உள்ளூராட்சி சபை போன்ற நிர்வாகக் கட்டமைப்புக்களால் தோட்டப்புறத்தில் வாழும் மக்களுக்கு எதுவும் நேரடியாக செய்ய முடிவதில்லை. ஒரே நாட்டுக்குள் தோட்ட நிவாகத்தின் கீழான தனியான மக்களாக இவர்கள் வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று அம்மக்களின் நிலை குறித்து விவரித்தார்.
வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்பட்ட போது அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை விவரிக்க இயலாது. நம்பி வந்த நாடு திரும்பப் போக கட்டளையிடும் போது நிலைமை மோசமாவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 19 லட்சம் மக்களின் நிலை என்ன ஆகும் என்பதை எதிர்காலம் தான் நமக்கு காட்டும்.
Chandra Bhagawan, Ayyakutty and 2 others
1 Share
Share

vijayakumari actress

 


vijayakumari actress

நானாக இருக்கவே விரும்புகிறேன்!
நான் ஒருசில படங்கள்ல பாவாடை, தாவணி போட்டு நடிச்சேன். பிறகு முழுக்கவே புடவைதான். மாடர்ன் உடைகள் பயன்படுத்தினதேயில்லை. 1950-1975 வரை முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடியா நடிச்சேன். 150 படங்களுக்குமேல நடிச்சிருப்பேன். 1980-களில் ரஜினி, பிரபுனு பல ஹீரோக்களுக்கும் அம்மாவா நடிச்சேன். 1960-களில் எங்க வீட்டில் 15-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தோம். அப்போ தேனாம்பேட்டையில் எங்க வீடு. விடியற்காலை எழுந்து, மெரினா பீச்சுக்கு வாக்கிங் போவேன். அப்போதும் சரி... இப்போதும் சரி... வீட்டு வேலைகளை நானே செய்வது வழக்கம். நடிகைங்கிற பிம்பம் என் நிஜ வாழ்க்கையில் வந்ததில்லை. பகட்டான தோரணையுடன் இருந்ததில்லை. என் இயல்பான குணங்களுடன், நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்.
கடைசியாக, `காதல் சடுகுடு' படத்தில் நடிச்சேன். பிறகு சினிமாவை விட்டு விலகி, தனிமை வாழ்க்கையில் அடைக்கலம் ஆகிட்டேன். பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளுக்கும் போவதில்லை. என் பிள்ளை ரவிக்குமார் குடும்பத்தினர் மற்றும் சொந்தக்காரங்க அடிக்கடி என்னை வந்து பார்ப்பாங்க. மத்தபடி, டி.வி பார்க்கிறதுதான் என் பிரதான பொழுதுபோக்கு. இந்த அமைதியான வாழ்க்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. `கற்றுக்கொள் கற்றுக்கொடு! ஏமாறாதே ஏமாற்றாதே! வாழு வாழவிடு!' - என் வாழ்வில் அனுபவ ரீதியா கடைப்பிடிச்ச, எல்லோருக்கும் ஆட்டோகிராபில் நான் எழுதிக்கொடுக்கும் வாசகம் இது. இந்த வாக்கியத்திலேயே என் வாழ்க்கைப் பயணமும் அடங்கியிருக்கு. நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக சந்தோஷப்படுகிறேன்!''
- கு.ஆனந்தராஜ் படங்கள்: க.பாலாஜி படங்கள் உதவி: ஞானம்
எம்.ஜி.ஆரும் நானும் வாங்கின ஓட்டுகள்!
1960-களில், ஒவ்வோர் ஆண்டும் வெளியான தமிழ்ப் படங்களில் தங்களுக்குப் பிடிச்ச படம், நடிகர், நடிகைகளை மலேசியா, சிங்கப்பூர் ரசிகர்கள் தேர்வு செய்வாங்க. அது அப்போ பெரிய கெளரவமா இருக்கும்.
1968-ம் ஆண்டுக்கான போட்டியில, 34,938 வாக்குகள் பெற்று எம்.ஜி.ஆர் அண்ணன் சிறந்த நடிகராகவும் 23,493 வாக்குகள் பெற்று நான் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டோம். அந்த வெற்றித் தகவலை அறிந்த எம்.ஜி.ஆர் அண்ணன் உடனே போன் செய்து, எனக்கு வாழ்த்து சொன்னார். ரொம்ப சந்தோஷமான தருணம் அது!
வைரமுத்துவுக்கு நன்றி!
என் சுயசரிதையை, 2008-ம் ஆண்டு, ஒரு முன்னணி தினசரி பத்திரிகையில் தொடராக எழுதியிருந்தேன். அதைப் படிச்சுட்டு, கவிஞர் வைரமுத்து எனக்கு போன் செய்தார். `நீங்கள் குறிப்பிட்டிருந்த, `சென்ற ஜென்மம், அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கையில்லை. வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஜென்மத்தை மட்டுமே நம்புகிறேன்' என்ற வரிகள் நெகிழ்ச்சியாக இருந்தன; எனக்கு மிகப் பிடித்திருந்தது'னு சொன்னதுடன், ஒரு கடிதமும் அனுப்பினார். அந்தத் தருணத்தில் அவரின் பாராட்டு எனக்குப் பெரிய ஆறுதலா இருந்துச்சு. இந்தப் பேட்டியின் வாயிலாக அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.
9
2013
Vijayakumari
விஜயகுமாரி ஓர் 1950-களில் நடிக்கத் துவங்கிய தமிழ்த் திரைப்பட நடிகை.பிறமொழி நடிகைகள் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தபோது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட விஜயகுமாரி பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர்.இவரது முதல் படம் அம்மையப்பன். ஸ்ரீதரின் ” கல்யாண பரிசு “, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் படம் சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய “பெண் என்றால் பெண் ” மற்றும் மல்லியம் ராஜகோபாலின் “ஜீவனாம்சம்”. இதேபோல அவர் நடித்த திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்ததும் ஓர் சிறப்பாகும்.காட்டாக, சாரதா, சாந்தி, ஆனந்தி, பவானி ஆகும்.ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த போலீஸ்காரன் மகள் படத்திலும் ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய நானும் ஒரு பெண் படத்திலும் அவரது நடிப்பு மறக்க இயலாதது.
பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்ததும் பின்னர் கண்ணகி சிலை வடிக்க துணை புரிந்ததும் குறித்து அவருக்கு மிக்க பெருமிதம்.
திரைப்பட நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனை திருமணம் புரிந்து கொண்டார். இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.
பழமையை விரும்பும் அபிமானி திரு.ஆர்.பி.ராஜநாயஹம் என்பவர் அவரது http://rprajanayahem.blogspot.in வலைத்தளத்தில் விஜயகுமாரியைக் குறித்து சில தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தெரிந்து கொள்ளுங்கள். திரு.ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களுக்கு எனது நன்றி.
நடிகை விஜயகுமாரி பேட்டி சமீபத்தில் கலைஞர் டி வி யில் பார்க்க நேர்ந்தது . இளமை இவரிடம் எப்படி இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அவர் காலத்து சரோஜா தேவியை விட இப்போது ரொம்ப அழகாக தெரிகிறார்.
கே ஆர் விஜயா தொப்பையும் ,தோற்பையுமாக கழன்று போய்விட்டார்.
பின்னால் வந்த ஜூனியர் நடிகை ‘கலர்’ காஞ்சனா இப்போது முழுக்கிழவி. ராஜஸ்ரீ யும் உருக்குலைந்து போன நிலை.
இவ்வளவு ஏன் இவர் கதாநாயகியாய் நடித்த ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமான லக்ஷிமியை இப்போது கமலின் ‘ உன்னைப்போல் ஒருவன் ‘ படத்தில் காண சகிக்கவில்லை.
இன்று கடந்த சிலவருடங்களுக்கு முன் வந்த நடிகைகளே எத்தனை பேர்
குண்டி, கை,நெஞ்சி,மூஞ்சி சுருங்கி வத்திப்போய் அல்லது ஊதிப்பெருத்து யாளி போல விகாரமாக தோற்றமளிக்கிறார்கள்.
ஆனால் விஜய குமாரி அப்படியே இளமையுடன் இருக்கிறார்!’எங்க வீட்டுக்காரர் ‘ என்று எஸ்.எஸ். ஆர் பற்றி இன்னமும் குறிப்பிடுவது சோகம் தான். அவர் எப்போதோ முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவரை விட்டு விட்டு தாமரை செல்வி என்ற பெண்ணை மணந்து பிள்ளை குட்டி என்று ஒதுங்கி விட்டார். அல்லது விஜயகுமாரி ஒதுங்கிகொண்டதால் மூன்றாவது திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார் என்று கூட சொல்லலாம்.
இலட்சிய நடிகருடன் வாழ்வு கசந்து பிணக்கு ஏற்பட்டதை, பின்னால் பிரிவு தவிர்க்கமுடியாதது என்பதை அவருடைய தலைவர் சி.என். அண்ணாத்துரையிடம் நேரில் தான் விளக்கியதைப்பற்றி அந்த காலத்தில் ஒரு பேட்டியில் நடிகை விஜய குமாரி கூறியிருந்தார்.
விஜயகுமாரி மகன் ரவி நடிகர் விஜயகுமார் மூத்த மகளை (மஞ்சுளா மகள் அல்ல)திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார்.நிம்மதி இல்லை என்று நடிகைகள் எப்போதும் சொல்வதை டி வி பேட்டியில் விஜயகுமாரி அடிக்கடி சொன்னார் .’தலையில் குத்து ,முதுகில் குத்து , நெஞ்சில் ஏகப்பட்ட குத்து ‘என்று அதை அப்படி தன் கையால் குத்தி செய்து காட்டினார்.
பிரச்னைகள் !The intray is never finished. யாருக்குமே தான் உயிர் உள்ளவரை!சினிமாவில் செயற்கைத்தனம், நாடகத்தனம் விஜயகுமாரியிடம் உண்டு. இயல்பாக துருதுருப்பு,படபடப்பு அதிகம் உள்ளவர் என்பதால் கொஞ்சம் மிகை நடிப்பு. பத்மினி கூட கொஞ்சம் மிகையாகத்தான் நடிப்பார்.
பூம்புகார் படம் பற்றியும் கண்ணகி சிலைக்கு மாடல் தான் தான் என்பதிலும் விஜயகுமாரிக்கு மிகுந்த பெருமிதம்.இவர் பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர்.
ஸ்ரீதர் ” கல்யாண பரிசு “.
கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் முதல் படம் ” சாரதா ” விஜயகுமாரி படங்களில் மாஸ்டர் பீஸ்!
பி . மாதவன் முதல் படம் ” மணியோசை ” யில் விஜயகுமாரி தான் கதாநாயகி .
ஆரூர் தாஸ் இயக்கிய முதல் படம் “பெண் என்றால் பெண் ” படத்திலும் நடித்துள்ளார்.
அன்று பேட்டி கொடுக்கும்போது அவர் நினைவில் வர மறுத்த படம் “ஜீவனாம்சம் “. மல்லியம் ராஜகோபால் இயக்கிய முதல் படம் . அதிலும் இவர் கதாநாயகி.
இன்னொன்று இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெயர் அப்போது படங்களின் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது.சாரதா,
சாந்தி,
ஆனந்தி,
பவானி
போன்ற படங்கள்.
கற்பகமும் இவருக்கு வந்தது தான். ஆனால் எஸ் எஸ் ஆர் தனக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கற்பகமாக விஜயகுமாரி நடிக்க அனுமதி தரமுடியும் என்று பிடிவாதம் பிடித்ததால் கே.ஆர். விஜயா என்ற நடிகை கற்பகமாக தமிழ் திரையில் அறிமுகமானார் !
கே எஸ் ஜி ” இந்த விஜயா இல்லாவிட்டால் இன்னொரு விஜயா ” என்று சவால் விட்டு கே ஆர் விஜயாவை நடிக்க வைத்தார்.எம்.ஜி.ஆருக்கு காஞ்சித்தலைவன் படத்தில் தங்கையாக நடித்திருக்கிறார்.
விஜயகுமாரியுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த போது எம்.ஜி.ஆர் மறுத்தார். அவர் சொன்ன காரணம் “ விஜயகுமாரி என் தம்பியின் மனைவி. அதனால் ஜோடியாக நான் நடிக்கக்கூடாது.”இலட்சிய நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள விஜயகுமாரி கொடுத்த விலை இப்படி மிக அதிகம்.சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினிபோன்றவர்கள் பிறமொழியில் இருந்து தமிழுக்கு வந்து அளப்பரிய சாதனை புரிந்தார்கள். அவர்களிடையே தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை விஜயகுமாரி ஓரளவு சாதனை புரிந்தவர்.மனோரமா எப்போதும் தமிழக முன்னாள் இந்நாள் முதல்வர்களுடனான தன்னுடையrapport பற்றி பெரிதாக சொல்லிக்கொள்வார்.
ஆனால் விஜயகுமாரி தான் இப்படி பெருமைப்பட்டுக்கொள்ளும் முதல் தகுதி கொண்டவர்! வி. என்.ஜானகி யின் கிச்சன் கேபினட் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். எஸ்.எஸ்.ஆர் அவர்களின் அப்போதைய அரசியல்,சினிமா அந்தஸ்து காரணமாக அண்ணாத்துரை, கருணாநிதி, ஜெயலலிதா அனைவரும் இவர் வாழ்வில் முக்கியமானவர்கள்.
பல வருடங்களுக்கு முன் மணியனின் ‘இதயம் பேசுகிறது ‘ வாரப் பத்திரிகையில் இவர் தன் வாழ்க்கை தொடரை பரபரப்பாக எழுதினார் . அப்போது அவர் நெஞ்சில்,தலையில்,முதுகில் விழுந்த குத்துகள் பற்றி நிறைய குறிப்பிட்டார். பகீரங்கமாக.
அவற்றில் ஒன்று : எஸ் . எஸ் .ஆர் எடுத்த மணிமகுடம் திரைப்படம் பற்றியது . வெளிப்புற படப்பிடிப்புக்கு கொடைக்கானல் சென்ற
எஸ். எஸ்.ஆர். இவரை அந்தப்படத்தில் நடித்த போதும் சென்னையில் ஒதுக்கி விட்டு விட்டு அந்த படத்தில் நடித்த ஜெயலலிதாவுடன் சென்றார் என்கிற விஷயம்.
Suppra Manim, Chandra Bhagawan and 4 others