Tuesday, 21 December 2021

ACTRESS SINDHU`S REAL SAD STORY

ACTRESS SINDHU`S REAL SAD STORY

நல்லது செய்ய போய் இறந்த தன் ஒரே அக்கா, 9 வயது அக்கா மகளுக்கு தந்தையாக மாறிய சஞ்சீவ் – இது தான் அவரின் அக்கா மகள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

அக்கா மகளை நினைத்து கலங்கிய சஞ்சீவ் :

இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அவரது சகோதரி பற்றியும் அவரும் ஒரு நடிகை தான் என்பதை பற்றியும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள ‘அன்பறிவு’ படக்குழு வந்திருந்தனர். அப்போது இந்த படத்தின் இயக்குனர் அஸ்வின் தான் சஞ்சீவின் உறவினர் என்று கூறி இருந்தார்.

சஞ்சீவின் அக்கா சிந்து :

அப்போது பேசிய சஞ்சீவ், என் அக்கா இறந்த பின்னர் என்னுடைய அக்கா பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற ஒரு பொறுப்பு எனக்கு இருந்தது. அஸ்வினை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், உண்மையில் அவருடைய அக்கா வேறு யாரும் இல்லை பிரபல நடிகை சிந்து தான் தான் என்பது பலரும் அறிந்திராத ஒன்று பிரபல நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஒரே சகோதரியான ஷியாமளா மகன் மற்றும் மகள் தான் சஞ்சீவ் மற்றும் சிந்து.

தமிழில் இணைந்த கைகள் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பட்டிக்காட்டு தம்பி, பரம்பரை, சின்னத்தம்பி, கிரி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவர் இறந்த பிறகு தான் வெளியே வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அஸ்துமா பிரச்சனை :

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய ்இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.. இவர் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து இருக்கிறார் அதிலும் இவர் மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்று சொல்லலாம். இவர் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். இவர் சினிமாவில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்ப நல்ல, தங்கமான மனிதர். இவர் 1995 ஆம் ஆண்டு ரகுவீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

9 வயதில் அம்மாவை இழந்த அக்கா மகள் :

பின் இவர்களுக்கு 1996 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதனிடையே இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. இருந்தும் இவர் சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வந்து இருக்கிறார். மேலும், இதற்காக இவர் பல்வேறு விதமான சிகிச்சை பெற்று வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் 2004ஆம் வருடம் டிசம்பர் 26ஆம் தேதி தமிழகத்தையே புரட்டிப் போட்ட சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியினால் பல ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதற்கு பலரும் உதவி செய்தார்கள். அப்போது நடிகை சிந்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டினார்

சிந்துவின் மகள் ஸ்ரேயா :

இவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனை இருந்ததும் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். அப்போது நீண்ட தூரம் நடந்ததால் இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின் இவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இருந்தும் சிகிச்சை பயனளிக்காமல் சிந்து இறந்தார். அப்போது சிந்துவுக்கு 33 வயதுதான் இருந்தது. சிந்து இறக்கும் போது அவரது மகளுக்கு வெறும் ஒன்பது வயது தான் அப்போது முதல் தன்னுடைய அக்கா மகளுக்கு ஒரு தந்தை தானத்தில் இருந்து அனைத்தையும் கவனித்து வந்தவர் சஞ்சீவ்

Monday, 20 December 2021

S.P.BALASUBRAMANIAN

S.P.BALASUBRAMANIAN

எவ்வளவு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டு போயிருக்கிறார் எஸ்பிபி.

சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றை பார்த்தேன். எஸ்பிபி பற்றி எத்தனையோ நல்ல விஷயங்களை எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார்.

'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில் சிவாஜியும் பிரபுவும் ஒன்றாக காரில் போய்க்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

பிரபு காரில் உள்ள ஆடியோ பிளேயரை ஓட விட்டிருக்கிறார். 'ஆயிரம் நிலவே வா' பாடல் ஒலித்திருக்கிறது. 

பாடலை கேட்க கேட்க சிவாஜியின் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. பக்கத்திலிருந்த பிரபு இதை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

பாடல் முடிந்ததும் சிவாஜி பிரபுவிடம், 

"பிரபு, இன்னொரு தடவை அந்த பாட்டை போடு."

மறுபடியும் பாடல்.

கண்களை மூடி தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் சிவாஜி. பாட்டு முடிந்தது. 

"பிரபு..."

"என்னப்பா ?"

"இன்னும் ஒரு தடவை அதை பிளே பண்ணு."

மீண்டும்... மீண்டும்... மீண்டும்... 

பிரபு அந்த பேட்டியில் சிரித்துக்கொண்டே சொல்கிறார். "மொத்தம் 50 தடவைக்கு மேலே 'ஆயிரம் நிலவே வா' பாடலை ரசித்து கேட்டார் அப்பா.

அதற்கு பிறகு என்னிடம் கேட்டார். ''இந்தப் பாட்டை பாடியது யாருப்பா ?" 

பிரபு சொல்லியிருக்கிறார்.

"புதுசா எஸ் பி பாலசுப்ரமணியம்னு ஒருத்தர் வந்திருக்காருப்பா. அவர்தான் இதைப் பாடி இருக்கார்."

சிவாஜி தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டே, "பிரபு, என்னோட அடுத்த படத்துல இந்த பையனை பாட வைக்கணும். வீட்டுக்கு போன உடனே விச்சு கிட்ட  (MSV) பேசணும்."

அப்படித்தான் சிவாஜிக்கு 'பொட்டு வைத்த முகமோ' பாடலை பாடியிருக்கிறார் எஸ்பிபி,

'சுமதி என் சுந்தரி'

திரைப்படத்தில்.

இந்த செய்தியை அந்த பேட்டியில் சொன்ன பிரபு, இன்னொரு விஷயத்தையும் சொன்னார். 

"எஸ்பிபி அண்ணனை பொறுத்தவரை நிறைவான குணங்கள் நிறைய அவர்கிட்ட உண்டு. பல தடவை நான் அதை பார்த்திருக்கிறேன்.

அவரைப் பாராட்டி ஏதாவது நான் பேச ஆரம்பித்தால், என்னை தடுத்து நிறுத்திவிட்டு அவர் பக்கத்தில் இருப்பவர்களிடம் என்னைப் பாராட்டி பேச ஆரம்பிப்பார் எஸ்பிபி அண்ணன்."

"பிரபுவோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். 'என்னவென்று சொல்வதம்மா' பாட்டை ராஜகுமாரன் படத்துக்காக நான் பாடியிருந்தேன். அந்த பாட்டுக்கு பிரமாதமான எக்ஸ்பிரஷன் கொடுத்திருந்தார் பிரபு. அதனாலதான் அந்த பாட்டு ஹிட் ஆச்சு" என்று சொல்வாராம் எஸ்பிபி.

இதைக் கேட்டவுடனே நெகிழ்ந்து போய், பேச்சு வராமல் நிற்பாராம் பிரபு.

அதற்குள் எஸ்பிபி பக்கத்தில் இருப்பவர்களை நோக்கி, "டூயட் படம் பாத்திருக்கீங்களா ?

அதுல பிரபு சாக்சபோன் வாசிக்கிற அழகிருக்கே... பியூட்டிஃபுல்."

இதை உண்மையாகவே கண்களை மூடி மெய்மறந்து சொல்வாராம் எஸ்பிபி.

இதையெல்லாம் அந்தப் பேட்டியில் சொன்ன பிரபு,  நெகிழ்ந்து போய் இப்படி சொல்கிறார்.

"நாமும் கவனிக்காத, மற்றவர்களும் நம்மிடம் சொல்லாத எத்தனையோ சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களையெல்லாம் பெரிதாக பாராட்டுவார் எஸ்பிபி.

அதனால்தான் எல்லோரும் அவரை இன்னமும் அவங்க மனசில வைத்து கொண்டாடுறாங்க."

இப்படி சொல்லி அந்தப் பேட்டியை நிறைவு செய்தார் பிரபு.

இதில் மிகப்பெரிய பாடம் ஒன்று ஒளிந்திருக்கிறது.

மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் தேட ஆரம்பித்தால், 

நெகட்டிவான விஷயங்களைப் பற்றி நினைக்க கூட நமக்கு நேரம் இருக்காது.

எஸ்பிபி நல்ல நல்ல பாடல்களை மட்டும் தந்து விட்டுப் போகவில்லை. 

நல்ல நல்ல பாடங்களையும் கூட 

நமக்கு தந்து விட்டுப் போயிருக்கிறார்.

John Durai Asir Chelliah

Sunday, 19 December 2021

MGR AND NSK

MGR AND NSK

வள்ளலாக வாழ்ந்த கலைவாணரும், எம்.ஜி.ஆரும்!

https://thaaii.com/.../10/article-about-mgr-and-kalaivanar/

எம்.ஜி.ஆர். அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர்.

ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான்.

ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார்.

அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார்.

‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம்.

தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்தப் பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.

என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம்.

அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாகக் கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர்.

அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.

உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன்.

அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு.

‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பி வெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போய்விட்டார்.

அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாகப் பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார். அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம்.

பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது.

வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.

தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன்.

அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே. என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.

என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.

என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டிப் பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.

என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..

‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’

பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்…

‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது…”

உடனே, ‘‘சரிதான்… சரிதான்….’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.

புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.

Sunday, 28 November 2021

ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN 1814 JANUARY 23-1893 NOVEMBER 28

ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN

 1814 JANUARY 23-1893 NOVEMBER 28

சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர்.[1][2] இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர்.

இளமைக் காலம்

இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவநிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச சேவையில் பணியாற்றினார். 1833 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவுக்கு வந்ததுமே, ஜேம்ஸ் பிரின்செப் என்பவருடன் இவருக்குக் கிடைத்த சந்திப்பு, இந்தியத் தொல்லியல் மீது வாழ்நாள் முழுதும் இவர் கொண்டிருந்த ஆர்வத்துக்குக் காரணமாகியது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குனராக பணியாற்றியவர்.

சாஞ்சி தூபி எண் 2 (Stupa No.2) பௌத்த தூபிகளில் மிகவும் பழைமையானது. கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய இத்தூபி சாஞ்சி பௌத்த தொல்லியல் வளாகத்தில் உள்ளது. 1849 - 1851 முடிய பிரித்தானிய தொல்பொருள் அறிஞர் மேஜர் அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் லெப்டினண்ட் மேய்சி ஆகிய இருவரும் இணைந்து, சாஞ்சியின் இப்பௌத்த தொல்லியல்களத்தின் தூபி எண் 2ல் அகழாய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.[1]

சாஞ்சி பௌத்த தொல்லியல் களத்தின் பெரிய தூபிக்குப் பின்னர் இரண்டாவதான இத்தூபி நிறுவப்பட்டது. இவ்விரண்டாம் தூபி மௌரியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (கிமு 323-185) கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.

இந்த இரண்டாம் தூபி, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி முக்கியத்தூபி வளாகத்திற்கு மேற்கில் 300 மீட்டர் தொலைவில், சாஞ்சி மலையின் சாய்வில் அமைந்துள்ளது.[3]

தூபி எண் 2 -தொல்பொருட்கள்

சாஞ்சி இரண்டாவது தூபியில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னங்களின் மாதிரி வடிவங்கள்

சாஞ்சி அகழாய்வின் போது தூபி எண் 2 அருகே கிடைத்த நான்கு சிறிய அழகிய பேழைகளில் எலும்புகள் கொண்டிருந்தது. பேழைகளில் பண்டைய பிராமி எழுத்துக்களில், பௌத்த குருமார்களின் அஸ்திகள் இப்பேழைகளில் உள்ளது என குறிப்புகள் கொண்டிருந்தது.

மேலும் இப்பேழைகளில், அசோகர் ஆதரவில் நடைபெற்ற மூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்டு, பின் இறந்து போன பத்து பௌத்த அறிஞர்களை எரித்த சாம்பலுடன் கூடிய எலும்புகள் உள்ளது என்ற குறிப்புகளும் கொண்டுள்ளது. [3]

தொல்பொருட்களின் உள்ளடக்கம்

சாஞ்சி தூபி எண் 2ன் சிற்பங்கள் கிமு 115 - கிமு 80 முடிய வரையிலான காலத்தில் செதுக்கப்பட்டது என ஆய்வில் அறியப்படுகிறது.[4]

முந்தைய காலம் (கிமு 115)

சாஞ்சி தூபி எண் 2ன் (கிமு115) தொல்பொருட்கள், இந்தியச் பாறைச் சிற்பக் கலையின் முன்னுதாரணமாக உள்ளது. [5][4][6]

குதிரைத் தலை பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயா

சாஞ்சி தூபி எண் 2ல் கண்டெடுக்கப்பட்ட குதிரைத் தலையுடன் கூடிய பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயாவில் உள்ள குதிரைத் தலை பெண் சிற்பத்துடன் ஒத்துப் போகிறது. இச்சிற்பங்கள் போதிசத்துவரின் ஜாதக கதைகளை விவரிக்கிறது எனக் கருதப்படுகிறது. [5]

சுங்கர் காலத்திய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மறைப்பு கிராதிகள் (இடது:சாஞ்சி பெரிய தூபி), மற்றும் கிமு 115ல் அலங்கரிக்கப்பட்ட தூபி எண் 2 (வலது) [5][7]

இத்தூபியின் 455 துண்டுச் சிற்பங்களில் 293 தாமரை மலர்ச் சிற்பங்களுடனும், பிற சிற்பங்கள் தாமரை மற்றும் பிற சிற்பங்களுடன் இணைந்தும் காணப்படுகிறது. [5]

புத்தரின் வாழ்வில் நடைபெற்ற நான்கு முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும், நான்கு சிற்பங்கள் உலகில் முதல் முறையாக இத்தூபியில் சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[8]

காந்தாரச் சிற்பக் கலைஞர்கள்

இத்தூபியில் உள்ள சிற்பங்கள், இந்தோ கிரேக்க நாட்டின் பகுதியான காந்தார சிற்பக் கலைஞர்களால், கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில், கிரேக்க-பௌத்த சிற்பக் கலைநயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் தூபியின் கல்வெட்டுக்களில், காந்தாரி எழுத்தில் குறிப்புகள் உள்ளது. [9] [9]

கிமு 115ல் சுங்கப் பேரரசிற்கு வருகை புரிந்த இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவர் ஹெலியோடோரஸ் என்பவர், விதிஷாவில் ஒரு வெற்றித் தூணை நிறுவினார்.[10]

Saturday, 27 November 2021

BRUCE LEE ,ACTOR BORN NOVEMBER 27,1940 -1973 JULY 20

BRUCE LEE ,ACTOR BORN 

NOVEMBER 27,1940 -1973 JULY 20

1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின்சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ
நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையைவிட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர்.உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டிஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்புபோன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்குஅப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காகபள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டைநடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனைசெய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும்உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும்முடிந்திருக்காது.
1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவானஉயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயதுஇளைஞன். அப்போது ஜான் வேய்ங், ஜேம்ஸ் டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள்புகழின் உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்த அந்த இளைஞன்என்ன சொன்னான் தெரியுமா? அந்த ஆக்*ஷன் கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நாந்தான் மாற்றுஎன துணிந்து சொன்னான். அப்போது அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த இளைஞனின் சமூகம்கூடஅவனை ஏளனமாக பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி அடுத்த 14 ஆண்டுகளில்வெற்றிக்கொடி நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம் தற்காப்புக்கலைக்கு உலகலாவியஅங்கீகாரம் பெற்றுத்தந்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர் திரைப்பட நடிகர். அவரதுபெயர் புரூஸ் லீ.
1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின்சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ. பிறந்தபோது அவருக்கு இடப்பட்டபெயர் லீ ஜுன்பேன்' அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர், தாயார் கிரேஸ் ஐரோப்பியர்.சிறுவயதில் ஹாங்காங்கில் வாழ்ந்தது புரூஸ் லீயின் குடும்பம். அங்கே பெரும்பாலானசிறுவர்கள் தெருக்களில்தான் பொழுதைக் கழிப்பார்கள். அப்படி நிறைய நேரத்தைக் கழித்தபுரூஸ் லீக்கு சண்டை போடுவதில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. மேலும் சுமார் 20 சீனப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்கு கிடைத்தது.சண்டையையும் சினிமாவையும் எடுத்துக்கொண்டு பள்ளியையும் பாடங்களையும் ஒதுக்கினார்புரூஸ் லீ.
இயற்கையாகவே நன்றாக சண்டைபோடும் திறமை அவருக்குஇருந்ததால் ஒரு கும்பலுக்கு தலைவனாகவும் இருந்தார். புரூஸ் லீயின் தந்தையோ நன்குபடித்து தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என விரும்பினார் ஆனால் சண்டைபோட்டுஎல்லோரையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் புரூஸ் லீ.சிலமுறை பெரிய குண்டர்களிடம் மோதி தோல்வியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் ஒருநல்ல தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எழுந்தது. தன்தந்தையிடமே குங்பூ என்ற பாரம்பரிய சீன தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டார்.அடிக்கடி அடிதடிகளில் ஈடுபட்டதால் புரூஸ் லீயின் கொட்டத்தைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பெற்றோர் அவரிடம் 100 டாலரைக் கொடுத்து அமெரிக்காவில் போய் எப்படியாவதுபிழைத்துக்கொள் என்று கப்பலேற்றிவிட்டனர்.
அப்போதுதான் 18 வயது இளைஞனாக அமெரிக்கா வந்துசேர்ந்தார் புரூஸ் லீ. சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில்தங்கிக்கொண்டு தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்க தொடங்கினார். அந்த விடுதியில்வேலையும் பார்த்தார். அவரது எண்ணம், செயல் எல்லாம் குங்பூ என்ற தற்காப்புக்கலையைப்பற்றியே இருந்தது. மேற்கத்திய மல்யுத்தம், ஜீடோ, கராத்தே, குத்துச்சண்டைஆகியவற்றையும் கற்றுக்கொண்டு சில புதியபாணி அசைவுகளையும் சேர்த்து அவர் சொந்தமாகஒரு தற்காப்புக்கலையை உருவாக்கினார். அதற்கு ஜீட்குன்டோ என்று பெயரிட்டார். அவரிடம்தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணை மணந்து கொண்டார் புரூஸ் லீ. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த புரூஸ் லீக்கு ஹாலிவுட்டில்கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் ஹாலிவுட் அவரைஏறெடுத்தும் பார்க்கவில்லை. சோர்ந்துபோன புரூஸ் லீ ஹாங்காங் திரும்பினார்.
தி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி என்ற இரண்டுபடங்களில் புரூஸ் லீ நடித்தார் அதில் அவர் பம்பரம்போல் சுழன்று சுழன்று காட்டியவித்தைகளும், சாகசங்களும் ஆசிய சினிமா பிரியர்களை அசத்தின. ஆனால் ஆசியாவை அசத்தியஅந்தப்படங்கள் ஹாலிவுட்டின் கடைக்கண் பார்வையைக்கூட பெறத்தவறின. அதைப்பற்றிகவலைப்படாத புரூஸ் லீ 1972 ஆம் ஆண்டில் “தி ரிட்டன் ஆப் த டிராகன்” என்ற படத்தைசொந்தமாக தயாரித்தார். சினிமாவின் மந்திரங்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருந்தபுரூஸ் லீ திரைக்கதையைத் தானே எழுதி திரைப்படத்தை இயக்கவும் செய்தார்.
பொதுவாகசண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் நடிகர்களை வைத்துதான் படம் எடுப்பது வழக்கம் ஆனால்புரூஸ் லீயோ கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப்போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.
அதுவரை ஆசிய இளையர்கள் மட்டும் புரூஸ் லீயின்விசிறிகளாக இருந்தனர். “தி ரிட்டன் ஆஃப் த டிராகன்” படத்திற்கு பிறகு அமெரிக்கஇளையர்களும் புரூஸ் லீயின் வெறித்தனமான விசிறிகளாயினர். அந்தப்படம் தந்தவெற்றிக்களிப்பில் “கேம் ஆப் டெத்” என்ற தனது அடுத்தப்படத்துக்கான வேலையைஆரம்பித்தார் புரூஸ் லீ. அவரது பிரபலத்தையும் வசீகரத்தையும் உணர்ந்துகொண்ட ஹாலிவுட்தயாரிப்பாளர்கள் ஓடோடி வந்து தங்களுக்காக படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ் லீயைக்கேட்டுக்கொண்டனர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதை தனது வாழ்நாள் லட்சியமாககொண்டவராயிற்றே அவர். உடனே தனது சொந்த படத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஹாலிவுட்டு க்காக “என்டர் தி டிராகன்” என்ற படத்தை எடுக்கத் தொடங்கினார். அசுரவேகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு, ரீ ரெக்கார்டிங், எடிட்டிங் வேலைகள் அனைத்தும்இரண்டே மாதங்களில் முடிவடைந்தன.
“என்டர் தி டிராகன்” என்ற படம் திரைக்கு வரமூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாரத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. 1973 ஆம் ஆண்டுஜீலை 20 ந்தேதி தன் மனைவி லிண்டாவிடம் விடைபெற்றுக்கொண்டு முடிக்கப்படாமல் இருந்ததனது சொந்தப்படமான “கேம் ஆப் டெத்” என்ற திரைப்படத்தைப்பற்றி விவாதிக்க வெளியில்சென்றார் புரூஸ் லீ. அன்று இரவே மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ் லீ. அப்போதுஅவருக்கு வயது 33 தான். அவர் இறந்தது பெடிட் டிங் பே என்ற ஒரு நடிகையின் வீட்டில்அதனால் புருஸ் லீயின் மரணம் குறித்து பல வதந்திகள் எழுந்தன.
ஒருமுறை படப்பிடிப்பில்ஏற்பட்ட சண்டைக்கா ட்சியின் போது தலையில் விழுந்த அடியால் மூளை வீங்கி இறந்துபோனார்என்று மருத்துவர்கள் கூறினர். உண்மையைக் கண்டுபிடிக்க ஹாங்காங் அரசாங்கம் ஒருவிசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால் இன்றுவரை புரூஸ் லீ இறந்ததற்கான உண்மை யானகாரணம் தெரியவிலை.
புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகுவெளிவந்த “என்டர் தி டிராகன்” படம் சக்கைப்போடு போட்டு 200 மில்லியன் டாலர் வசூலைஅள்ளிக்குவித்தது. உலகெங்கும் பல இளையர்கள் கராத்தே பைத்தியமானார்கள். மூளைமுடுக்குகளிலெல்லாம் கராத்தே பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு உலக இளையர்களின்கவணத்தை தனி ஒரு மனிதனாக தற்காப்புக்கலைப்பக்கம் திருப்பிய பெருமை புரூஸ் லீயையேசேரும். வரலாற்றின் எந்த கால கட்டத்தையும்விட எழுபதுகளில்தான் மிக அதிகமானஇளையர்கள் தற்காப்புக்கலை பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர் என்ற உண்மையே அதற்குசான்று. தன் கனவை நனவாக்க அயராது பாடுபட்டவர் புரூஸ் லீ. உடல்தான் தனது மூலதனம்என்று நம்பிய அவர் அதை ஒரு கோவிலாகவே வழிபட்டார். தினசரி ஓடுவது,எடை தூக்குவதுஎன்று தனது உடலை வலுப்படுத்திக்கொண்டதோடு வைட்டமின்கள், ஜின்செங், ராயல் ஜெல்லிபோன்றவற்றையும் உட்கொண்டு உடலை திடமாக வைத்துக்கொண்டார்.
அகால மரணம் அவரது ஆயுளை குறைக்காமல்இருந்திருந்தால் சினிமாவிலும், தற்காப்புக்கலையிலும் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளைகுவித்திருப்பார் புரூஸ் லீ. 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஓர் அர்த்தமுள்ள வாழ்கையைவாழ்ந்திருக்கிறார். குண்டர் கும்பலில் இருந்தாலும், ஒழுங்காக படிக்காவிட்டாலும்தான் தேர்ந்தெடுத்த துறையில் அவர் செலுத்திய முழு கவணமும் காட்டிய ஆர்வமும் கொட்டியஉழைப்பும் சிந்திய வியர்வையும்தான் புரூஸ் லீக்கு அந்த இளம் வயதிலேயே வானத்தைவசப்படுத்தின.
நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்லதேர்ந்தெடுத்த பிறகு அந்த துறையில் முழு கவணம், ஆர்வம், உழைப்பு, வியர்வை, விடாமுயற்சி ஆகியவற்றை செலுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஈடுபடுத்திக்கொண்டால் நமக்கும் எந்த வானம் வசப்படாமல் போகும்!!!1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின்சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ

நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்லதேர்ந்தெடுத்த பிறகு அந்த துறையில் முழு கவணம், ஆர்வம், உழைப்பு, வியர்வை, விடாமுயற்சி ஆகியவற்றை செலுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஈடுபடுத்திக்கொண்டால் நமக்கும் எந்த வானம் வசப்படாமல் போகும்!!!1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின்

சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ

நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்லதேர்ந்தெடுத்த பிறகு அந்த துறையில் முழு கவணம், ஆர்வம், உழைப்பு, வியர்வை, விடாமுயற்சி ஆகியவற்றை செலுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஈடுபடுத்திக்கொண்டால் நமக்கும் எந்த வானம் வசப்படாமல் போகும்!!!
Like
Comment
Share