Tuesday, 10 August 2021

MGR ,SOMETHING SPECIAL

 


MGR ,SOMETHING SPECIAL



மக்கள் திலகத்தை
பற்றி...
நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன்
ஒரு துக்க வீட்டிற்கு ஹைதராபாத் சென்றிருந்தப் பொழுது ,
அங்கேயே மாரடைப்பால் காலமானார் .
அவரது மறைவுச் செய்தி மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .
தேங்காய் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு மரியாதை செலுத்த வரும் நிலையில் மக்கள் திலகத்தின் உடல் நிலை இல்லை என்பதால் , ஜானகி அம்மையார் மட்டும் மரியாதை செலுத்த வருவார் என்றும் , அது வரை இறுதி ஊர்வலம் கிளம்ப வேண்டாம் என்றும் முதலில் தெரிவிக்கப் பட்டது .
ஆனால் திடீர் என்று , மக்கள் திலகமே வருகிறார் என்று தெரிவித்தனர் , அவரும் வந்தார் , நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்தப் பொழுதும் , அங்கே அவர் வந்து தேங்காய் ஸ்ரீநிவாசனுக்கு மரியாதை செலுத்தியதுடன் , அவரது முகத்தை பார்த்தப் படி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் .
பின்னர் கிளம்பும் பொழுது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகனை மட்டும் தனது காருக்குள் ஏறச் சொன்னார் ... இந்த நேரத்தில் எங்கே அழைத்துச் செல்கிறார் முதல்வர் என்று அனைவரும் புரியாமல் திகைத்து நிற்க , கார் சற்று தூரம் சென்று நின்றது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகன் இறங்கி வந்தார் , அவர் கையில் பொட்டலம் கட்டிய படி பணக் கட்டு
உலகம் சுற்றும் வாலிபன் , படபிடிப்பு , ஹாங்காங்கில் , யார் யாருக்கு என்றைக்கு பிறந்த நாள் என்று மக்கள் திலகம் டைரியில் குறித்து வைத்திருப்பார் , அன்று , நாகேஷின் பிறந்த நாள் ...
அனைவரையும் அழைத்தார் மக்கள் திலகம் , " இன்று இரவு 10 மணிக்கு சின்ன பன்க்ஷன் இருக்கு , எல்லோரும் கலந்துக் கொள்ள வேண்டும்" என்றார் .... என்ன பன்க்ஷன் என்பதையும் அவரே விவரித்தார் .
ஆனால் அன்று இரவு நடந்ததோ , பெரிய பங்க்ஷன் , பணத்தை பற்றியெல்லாம் மக்கள் திலகம் கவலை படவில்லை , நாகேஷுக்கு 9 கற்கள் பதித்த வைர மோதிரத்தை பரிசாக அளித்தார் ...
அதை நாகேஷ் தான் இறக்கும் வரை கையில் அணிந்திருந்தார்
எங்க வீட்டு பிள்ளை , படத்தை தயாரித்தவர் நாகிரெட்டி , படம் 100 நாட்களையும் தாண்டி மிகப் பெரிய வெற்றியாக அமைந்து விட்டது ... இவ்வளவு பெரிய வெற்றியாக இந்தப் படம் அமைந்திடும் என்று எதிர்பார்கவில்லை , அதனால் உங்களுக்கு பேசிய சம்பளத்தை விட அதிகமாக தனியாக ஒரு தொகையை தரப் போகிறேன் , நீங்க அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் திலகத்திடம் நாகி ரெட்டி வற்புறுத்த ...
"சரி , அந்தத் தொகையை வாகினி ஸ்டுடியோ ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுங்கள் " என்று கூறி விட்டார் மக்கள் திலகம்
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியும் பொழுதும் , தன்னுடைய சம்பளத்தை பெறுவதற்கு முன்னர் , திரைப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து ஊழியர்கள் , நடிகர்கள் , டெக்னீஷியன்களையும் தனித் தனியே அழைத்து , அவர்களுக்கான சம்பளம் எவ்வளவு , அது முழுவதுமாக வந்து விட்டதா என்று விசாரிப்பார் மக்கள் திலகம் ...
அதுமட்டுமில்லாமல் , சம்பளம் 5000 என்றால் , தயாரிப்பாளரை அழைத்து 7000 என்று கொடுக்கச் சொல்வார் ,
அதை எந்த தயாரிப்பாளரும் மீற முடியாது ...
அனைவருக்கும் சம்பளம் வந்து விட்டது என்று அறிந்துக் கொண்ட பின்னரே , தனது சம்பளத்தை பெற்றுக் கொள்வார் மக்கள் திலகம்

No comments:

Post a Comment