Monday, 9 August 2021

MAHABHARAT BASIC TRUTH

 


MAHABHARAT  BASIC TRUTH


தெரிந்த பாரதம், பலரும் அறிந்திராத பாத்திரங்கள்.
ஹஸ்தினாபுரத்தைத் தலைநகரமாகக் கொண்ட குரு தேசத்தை ஆண்ட சந்திர குல அரசன் யயாதி...,
நகுஷனின் மைந்தன். நகுஷன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோக இந்திர பதவி அடைந்தவன்...,
இந்திர பதவி அடைந்ததால் ஆணவத்தின் உச்சியில் இந்திராணியை அடைய முயன்று அகத்தியரின் சாபத்திற்கு ஆளான கதை பிரிதொரு பதிவில் காண்போம்...,
அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியை யயாதி திருமணம் செய்து கொள்கிறான்...,
யயாதிக்கும், தேவயானிக்கும் யது, துர்வசு என இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறது...,
யதுவின் வழி பிறந்தவர்கள்
" யாதவர்கள் "...,
துர்வசுவின் வழி தோன்றியவர்கள்
" சேர, சோழ,பாண்டியர்கள் "...,
அசுர மன்னன் விருஷபர்வன் மகளும் தேவயானியின் நெருங்கிய தோழியுமான சர்மிஷ்டையை யயாதி இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்ள. சர்மிஷ்டைக்கு யயாதி மூலமாக துருயு, அனு மற்றும் புரு எனும் மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர்...,
இந்த ரகசிய உறவைத் தெரிந்ததும் தேவயானி, யயாதி மீது கடும் கோபம் கொண்டு , தன் தந்தையும் அசுர குருவுமான சுக்கிராச்சாரியாரிடம் தனக்குத் தன் கணவன் யயாதி இழைத்த அநீதி குறித்து முறையிட்டாள்...,
சுக்கிராச்சாரியார், மன்னன் யயாதிக்கு கிழட்டுத்தன்மை அடைய சாபமிட்டார். யயாதியும் அடுத்த நொடியிலே இளமை நீங்கி கிழட்டுத் தன்மை அடைந்தான்...,
கிழட்டுத்தன்மை அடைந்த யயாதி தனது மாமனாரும், அசுர குருவும் ஆன சுக்கிராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்டு, தான் அடைந்த கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான்...,
அதற்கு அவர், " உனது கிழட்டுத் தன்மையை உனது மகன்களில் ஒருவன் மனமுவந்து ஏற்றுக்கொண்டால் அவனின் இளமையை நீ அடையலாம் " என்று கூறினார்...,
பின்னர் யயாதி தனது முதல் மனைவியான தேவயானியின் மூத்த மகன் யதுவிடம், தனது மூப்பை ஏற்று இளமையைக் கேட்டான். யது, தந்தை யயாதியின் வேண்டுகோளை மறுக்கவே...,
யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கு,
" இனி உனக்கும், உன் தலைமுறைக்கும் ஹஸ்தினாபுரத்து அரச மணிமகுடம் சூட்டிக்கொள்ளத் தகுதி இல்லாமல் போகக்கடவது " என்று சாபம் இட்டான்...,
பின்னர் மற்ற மகன்களான துர்வசு, துருயு, அனு ஆகியோரும் தந்தை யயாதியின் கோரிக்கையை மறுத்து விட்டனர்...,
சர்மிஷ்டைக்குப் பிறந்த கடைசி மகனான புரு மட்டுமே யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டு, தனது இளமையைக் கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி முதுமை நீங்கி இளமை அடைந்து பல ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் இன்பம் துய்த்தான்...,
ஒரு நாள், தனக்கு இளமை வழங்கி, தன் முதுமையை ஏற்றுக் கொண்ட தனது கடைசி மகன் புருவின் நினைவு வரவே, புருவை அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்து, தனது முதுமையை ஏற்றுக்கொண்டு, புருவை ஹஸ்தினாபுரத்து மன்னனாக முடி சூட்டிய பின் தனது மனைவியருடன் கானகம் ஏகி நற்றவம் செய்து தேவலோகம் அடைந்தான்...,
தேவயானியின் முதல் மகனான யதுவின் வழித்தோன்றல்களே யாதவர்கள்...,
ஸ்ரீகிருஷ்ணர் இந்த யாதவ குலத்தில்தான் தோன்றினார். யதுவின் வழித்தோன்றல்கள் வடமதுரை, விதர்ப்பம், சேதி, குந்திபோஜம், துவாரகை, சூரசேனம், மகதம் போன்ற நாட்டை ஆண்ட சிற்றரசர்களான யாதவர்கள். கம்சன், கண்ணன், பலராமர், சிசுபாலன், ஜராசந்தன், குந்தி, கிருதவர்மன், சாத்தியகி, உத்தவர் ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர்...,
சர்மிஷ்டையின் இளைய மகன் புருவின் வழித்தோன்றல்களே பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆவார்...,
Mohan Latha and 5 others

No comments:

Post a Comment