Monday, 16 August 2021

 



நடிகை தேவிகா | Actress Devika

by admin | Posted on 04/01/2021

தேவிகா (ஏப்ரல் 25, 1943 – மே 2, 2002) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார்.



வாழ்க்கைக் குறிப்பு

இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா. தமிழ்த் திரைப்பட இயக்குநரான ஏ. பீம்சிங்கிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார். தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான ரகுபதி வெங்கய்யா நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார். தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.



திரைப்பட அனுபவம்

தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், குலமகள் ராதை, பலே பாண்டியா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த சுமைதாங்கி ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவையும், மற்றும் வாழ்க்கைப் படகு, வானம்பாடி என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். தேவிகா நடித்த கடைசிப்படம் இப்படியும் ஒரு பெண் ஆகும்.



திரைப்படங்கள்

தமிழ்

சத்யம் (1976)


இப்படியும் ஒரு பெண் (1975)


பிள்ளைச் செல்வம் (1974)


பாரத விலாஸ் (1973)


வெகுளிப் பெண் (1971)


அன்னை வேளாங்கண்ணி (1971)


எங்கிருந்தோ வந்தாள் (1970)


தேவி (1968)


தெய்வீக உறவு (1968)


பெண்ணே நீ வாழ்க (1967)


சரஸ்வதி சபதம் (1966)


மறக்க முடியுமா (1966)


திருவிளையாடல் (1965)


அன்புக்கரங்கள் (1965)


சாந்தி (1965)


பூஜைக்கு வந்த மலர் (1965)


நீலவானம் (1965)


பழனி (1965)


வாழ்க்கைப் படகு (1965)


முரடன் முத்து (1964)


கர்ணன் (1964)


ஆண்டவன் கட்டளை (1964)


வழி பிறந்தது (1964)


கலைக்கோவில் (1964)


நெஞ்சம் மறப்பதில்லை (1963)


இதயத்தில் நீ (1963)


ஆனந்த ஜோதி (1963)


குலமகள் ராதை (1963)


ஆயிரம் காலத்துப் பயிர் (1963)


வானம்பாடி (1963)


அன்னை இல்லம் (1963)


நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)


பந்த பாசம் (1962)


சுமைதாங்கி (1962)


பலே பாண்டியா (1962)


ஆடிப்பெருக்கு (1962)


குமார ராஜா (1961)


பங்காளிகள் (1961)


கானல் நீர் (1961)


பாவ மன்னிப்பு (1961)


நாகநந்தினி (1961)


பாவை விளக்கு (1960)


இருமனம் கலந்தால் திருமணம் (1960)


சிவகாமி (1960)


களத்தூர் கண்ணம்மா (1960)


இவன் அவனேதான் (1960)


பாஞ்சாலி (1959)


மாலா ஒரு மங்கல விளக்கு (1959)


பிரெசிடென்ட் பஞ்சாட்சரம் (1959)


சகோதரி (1959)


நாலு வேலி நிலம் (1959)


முதலாளி (1958)


அன்பு எங்கே (1958)


மணமகன் தேவை (1957)


தெலுங்கு

நாட்டியதாரா


'' 'நெஞ்சில் ஓர் ஆலயம்' பட வாய்ப்பை நான் தவறவிட்டதால், தேவிகா அதில் நாயகியாக நடித்தார். படம் பெரிய ஹிட்டானது. தேவிகாவின் அற்புதமான நடிப்பைப் பார்த்து, `இந்த வாய்ப்பை இழந்துவிட்டோமே' என வருத்தப்பட்டிருக்கிறேன்.''அழகும் நடிப்பும் ஒருங்கே அமைந்த நடிகை தேவிகா, கிளாஸிக் கால ரசிகர்களை தன் நடிப்பால் மகிழ்வித்தவர். . தேவிகாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார், நடிகை விஜயகுமாரி.


``தமிழ் சினிமாவில் எங்கள் காலத்தில் நடித்த நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அப்படித்தான் தேவிகாவும். ஆந்திராவைச் சேர்ந்த தேவிகாவின் பெயர் பிரமிளா. நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில்தான் சினிமாவில் அறிமுகமானோம். தேவிகா அறிமுகமான முதல் தமிழ்ப் படம் `முதலாளி'. அதில், என் கணவருக்கு (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) ஜோடியாக நடித்திருப்பார். அப்போதுதான் எங்கள் நட்பும் தொடங்கியது. 


தேவிகா எல்லோருடனும் சகஜமாகப் பேசுவார்; பழகுவார். அவர் ஷூட்டிங் வரும்போது அவர் அம்மா அல்லது அக்கா உடன் வருவார்கள். நாங்கள் இருவரும் `சாந்தி' என்ற படத்தில் மட்டும்தான் இணைந்து நடித்தோம். அப்போது ஷூட்டிங்கில், `நீங்கள் அருகில் இருந்தால் எனக்கு நடிக்கக் கூச்சமாக இருக்கிறது' என தேவிகா என்னிடம் சொன்னார். எனவே, அவர் கேட்டுக்கொண்டதுபோலவே, நான் தேவிகாவின் நடிப்பைப் பார்க்காமல், திரும்பி உட்கார்ந்துகொண்டேன். 



'' 'உடல் எடையைக் குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்கிறேன்' என்பார் தேவிகா!" - விஜயகுமாரி #DevikaMemories

நானும் என் கணவரும் மதிய உணவை, எங்கள் வீட்டிலிருந்து வரவழைப்பதுதான் வழக்கம். அதுவும் எங்களுக்கு மட்டுமன்றி, 10 - 15 பேருக்குச் சேர்த்தேதான் உணவை வரவழைப்போம். அப்படி எங்கள் வீட்டுச் சாப்பாட்டை என்னுடன் தேவிகாவும் இணைந்து சாப்பிடுவார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். நானும் தேவிகாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். 



எங்கள் காலத்தில், சி.வி.ஸ்ரீதர் மிகப் பெரிய இயக்குநர். அவர் படங்களில் நடிக்க, பெரிய நடிகர்கள் பலரும் வாய்ப்புக் கேட்டதுண்டு. அவர் இயக்கிய `நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் என்னைத்தான் நாயகியாக நடிக்க மிகவும் வலியுறுத்திக் கேட்டார். அதற்கு என் கணவர் மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தை என் கணவர் என்னிடம் சொல்லவில்லை. அப்போது என் கணவர்தான் என் கால்ஷீட் விஷயங்களைக் கவனித்துக்கொள்வார். நானும் என் கணவரிடம் காரணத்தைக் கேட்கவில்லை. பிறகு, அப்படத்தில் நாயகியாக நடித்தார் தேவிகா. படம் பெரிய ஹிட்டானது. தேவிகா நடித்த அந்த அற்புதமான கதாபாத்திரத்தைப் பார்த்து, `இந்த வாய்ப்பை இழந்துவிட்டோமே' என வருத்தப்பட்டிருக்கிறேன்.  


'' 'உடல் எடையைக் குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்கிறேன்' என்பார் தேவிகா!" - விஜயகுமாரி #DevikaMemories


என் கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, நான் எங்கள் மகனுடன் தனியாக வாழ்ந்துவந்த காலகட்டம். அப்போதும் எனக்கு மிகச் சிறப்பான கதாபாத்திரங்கள் வந்தன. ஆனால், சில நிகழ்வுகளால் அந்த வாய்ப்புகளெல்லாம் என்னைவிட்டுப் போயின. அதற்கான காரணங்களைச் சொல்லி நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. அப்படி நான் நடிக்க வேண்டிய பெரும்பாலான படங்களில், தேவிகாதான் நாயகியாக மிகச் சிறப்பாக நடித்தார்" என்கிறார் விஜயகுமாரி. 


தேவிகாவிடம் பார்த்து வியந்த அழகுக்கலை திறமை குறித்துப் பேசியவர், ''தேவிகா மிகவும் அழகாகயிருப்பார். அவருக்கு அழகுக் கலை மற்றும் சிகை அலங்காரத்தில் இயல்பாகவே அதிக ஆர்வமும் திறமையும் இருந்தன. எங்கள் காலத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட முறையில் மேக்கப் ஆர்டிஸ்ட் இருக்க மாட்டார்கள். சினிமா கம்பெனிக்கு என மேக்கப் ஆர்டிஸ்ட் இருந்தாலும், எங்களுக்கான மேக்கப் விஷயத்தைப் பெரும்பாலும் நாங்களேதான் பார்த்துக்கொள்வோம். அப்படி தேவிகா மிகச் சிறப்பாகத் தன்னை அழகுபடுத்திக்கொள்வார். அதைப் பார்த்து, சக நடிகர்களே ஆச்சர்யப்படுவோம். தேவிகா சிறப்பாக நடித்து, தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். நிறைய படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். ஆனால், ஷூட்டிங்குக்கு மட்டும் தாமதமாக வருவார். அதை அவர் சரிசெய்துகொண்டிருந்தால், இன்னும் அதிக புகழ் பெற்றிருப்பார். 



'' 'உடல் எடையைக் குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்கிறேன்' என்பார் தேவிகா!" - விஜயகுமாரி #DevikaMemories

நாங்கள் இருவரும் சினிமாவில் புகழுடன் இருந்தபோது அவ்வப்போது சந்தித்துக்கொள்வோம். அப்போதெல்லாம் அழகு, டயட் உள்ளிட்ட விஷயங்களைத்தான் அதிகம் பேசுவோம். அப்போது உடல் பருமன் பிரச்னையில் இருந்த தேவிகா, அது குறித்து என்னிடம் பேசுவார். 'உடல் எடையைக் குறைக்க, குளிர்ச்சியான நீரில் குளிக்கிறேன்' என்பார். நான் சிரித்தபடியே, `குளிர்ச்சியான நீரில் குளிப்பதால் உடல் எடை குறையாது, உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்' என்பேன். நான் எல்லா கலைஞர்களுடனும் ஒரே மாதிரிதான் பழகுவேன். பிறரின் பர்சனல் விஷயத்தில் தலையிட மாட்டேன். அதனால் அவரின் குடும்ப வாழ்க்கை பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது. 



1970-களின் இறுதியில் தேவிகா சினிமாவில் நடிக்காமலிருந்தார். பிறகு, அவர் மகள் கனகா நடிக்க ஆரம்பித்து, புகழ்பெற்றார். அப்போது ஒரு கல்யாண நிகழ்ச்சியில் தேவிகாவைச் சந்தித்தேன். அருகிலிருந்த கனகாவை எனக்கு அறிமுகப்படுத்தினார் தேவிகா. கனகா என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார். அப்போதிலிருந்து கனகாவுடனும் எனக்கு நட்பு இருந்தது. தேவிகா இறந்த சமயத்தில் நான் வெளியூரிலிருந்தேன். அவரின் திடீர் மறைவால் மிகவும் வருந்தினேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை கனகாவைச் சந்தித்தேன். அப்போது மிகவும் அன்புடன் பேசிய கனகா, அவர் அம்மா தேவிகாவைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்" என்று நினைவுகளை அசைபோடுகிறார் விஜயகுமாரி.

 

 


No comments:

Post a Comment