Wednesday, 7 April 2021

YOGIYANAND ,UP CHIEF MINISTER BIOGRAPHY

 

YOGIYANAND ,UP CHIEF MINISTER BIOGRAPHY




யோகியை பற்றி பேச,ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது..?

2015 வருடம் என்னுடைய உத்திரப்பிரதேச நண்பர் அமித் அகர்வால் எனக்கு போன் செய்து என்னுடைய நண்பரொருவர் கோவை வருகிறார், அவரை பேரூரில் ஒரு ஆசிரமத்தில் இறக்கிவிட வேண்டும் ஒரு கார் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டார்.

அவர் எங்கள் ஊர் எம்பி, மிகவும் எளிமையானவர், நல்ல மனிதர் கண்டிப்பாக நீங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றார்.

எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்த இடத்தில் இருந்து தேவையானவற்றை சாதித்துக் கொள்ள முடியும், நம்மிடம் ஏன் உதவி கேட்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன்.

வாய்ப்பிருந்தால் நேரில் போய்ப் பாருங்கள் உங்களுக்கு புரியும் என்றார், நானே போய் உதவுகிறேன் என்று உறுதியளித்தேன்.

 விமான நிலையத்திலிருந்து ஒரு பையை தூக்கிக் கொண்டு வேகமாக என்னை நோக்கி நடந்து வந்து, நலம் விசாரித்து வண்டியில் ஏறிக் கொண்டார், நண்பர் என்னைப் பற்றி அவரிடம் சொல்லி இருந்தார் மேலும் என்னுடைய தொலைபேசி எண்ணையும்  அவளிடம் கொடுத்து விட்டு இருந்தார்.




எனக்கும் அவரைப் பற்றி விவரங்களை எல்லாம் அனுப்பி வைத்திருந்தார், போகும் வழியில் ஒரு காபி சாப்பிடலாம் என்று கேட்டேன்.

சரி என்றார், kg மருத்துவமனை அருகில் உள்ள அன்னபூர்ணா உணவகத்திற்கு சென்றோம், அவர் எதுவும் சாப்பிடாமல் நீங்கள் ஆர்டர் சொல்லுங்கள் என்றார், 

நான் உங்களுக்கு என்ன வேண்டும் என்றேன்.

இல்லை எனக்கு ஒன்னும் வேண்டாம் நீங்கள் திருப்பூரில் இருந்து எனக்காக வந்து உள்ளீர்கள், கண்டிப்பாக களைப்பாக இருப்பீர்கள், நீங்கள் காபி சாப்பிடுங்கள் என்றார்.

ஐயா நீங்கள் லக்னோவில் இருந்து 2 விமானம் மாறி வந்துள்ளீர்கள், நீங்கள் தான் களைப்பாக இருப்பீர்கள் அதுவுமில்லாமல் என்னுடைய விருந்தினர் நீங்கள் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட்டாக வேண்டும் என்றேன்.

அவரோ நான் உணவு கொண்டு வந்து விட்டேன் வெளி உணவு எனக்கு சேராது இதை நான் முதலிலேயே சொல்லியிருந்தால் நீங்கள் காபி குடிக்க மாட்டீர்கள் அதனால்தான் சொல்லவில்லை என்றார். 

நான் மட்டும் ஒரு காபியை சொல்லிவிட்டு திரும்புவதற்குள் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் சப்ளையர்கள் வடநாட்டவர், மற்றும் ஊழியர்கள் மேலாளர்கள் பாகுபாடு இல்லாமல் வரிசையாக வந்து அவர் காலில் விழ ஆரம்பித்தார்கள்.

எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது, சூப்பர்வைசர் ஒருவர் இவர் தொகுதியைச் சேர்ந்தவர், இவரைப் பற்றி அனைவருக்கும் சொல்ல வரிசையாக வந்து காலில் விழ ஆரம்பித்து விட்டார்கள் என தெரிந்தது.

நான் குடித்த அந்த காபிக்கு காசு நான் தான் கொடுப்பேன் என்று அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டார்கள்..




அதன் பாராளுமன்ற உறுப்பினர் தான் பின்னோக்கி கிடந்த கோரக்பூர் தொகுதியை முன் நோக்கி இழுத்து வந்த மகத்தான பணியைச் செய்தவர், இவர் 1998 முதல் 2017 வரை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தன் தொகுதி மக்களுக்கு செய்த பணிகள் மகத்தானது.

இளம் வயதில் கோரக்பூரில் மடாதிபதி ஆனவர்.

26 வயதில் எம்பி ஆகப் பதவி ஏற்றுக் கொண்டவர், இவருடைய குடும்பத்தினர் யாருக்கும் இவரால் ஒரு காரியங்கள் கூட செய்து தரப்படவில்லை.

உடன்பிறந்தவர்கள் பெட்டிக்கடை மற்றும் சாலையோரத்தில் வியாபாரம் செய்தும் பிழைத்து வருகிறார்கள் என்று விபரம் தெரிந்தது.

ஒவ்வொரு நிமிடமும் புதிய  அனுபவம் கிடைத்தது, எனக்கு உயர்வாக தெரிந்த அந்த மனிதரை ஹிந்தி தெரிந்த காரணத்தினால் பல விஷயங்களைப் பேசி புரிந்து கொள்ள முடிந்தது.

Rss வளர்ப்பு, மக்கள் நலனில் மட்டுமே பற்று, பிரம்மச்சாரி, எதற்கும் ஆசைப்படாதவர், அவருடைய கையால் அன்று இரவு கோதுமை ரொட்டி சுட்டுக் கொடுத்தார்.

அவர் அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்தார், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் போன் செய்வார் நானும் போவேன்.

பூஜை செய்வது, உபதேசம் செய்வது, கோசாலை பராமரிப்பது, என்று ஏதாவது ஒரு இறைபணி செய்து கொண்டே இருப்பார்.

வெறும் நிலத்தில் தான் படுத்து உறங்குவார்.

அங்கிருந்து மீண்டும் விமான நிலையத்திற்கு நான் உடன் சென்று டெல்லிக்கு வழியனுப்பி வைத்தேன்..

அன்று முதல் இன்று வரை தினமும் நினைவில் வரும் ஒரு மாமனிதர், அவர் கையால் எனக்கு உணவு தயாரித்துக் கொடுத்தவர், நாட்டு நலனையும், மக்கள் வளம் பெறவும், பல கருத்துக்களை வித்தியாசமான கோணத்தில் சொல்லிக் கொடுத்தாவர்,

உத்திரபிரதேசம் மாநிலத்தை இப்பொழுது வேகமாக வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் மாமனிதர்.

அவர் தான் இன்றைய உத்திரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்..

நன்றி.இராஜேஷ்வரீ விஸ்வநாதன்.






முதல்வரான யோகி ஆதித்யநாத் குறித்து உ.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்? : ஒரு ரிப்போர்ட்

கோரக்பூர் மட்டுமல்லாது யோகி ஆதித்யநாத்தை நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அவரது பதவியேற்பை தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சியைப் போல் கொண்டாடியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் 21வது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கோரக்பூர் மடத்தின் தலைவர் யோகி ஆதித்யநாத் குறித்து, மதவாத முத்திரையுடன் சிலர் விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர் மதப் பாகுபாடு காட்டுபவரில்லை என்று கூறுகிறார் இஸ்லாமியர் ஒருவர்.

உத்தர பிரசேத்தில் புகழ்பெற்ற கோரக்நாத் கோயிலில் தொண்டாற்றும் தன்னார்வலர்களில் முகம்மது (30) என்ற முஸ்லிம் இளைஞரும் இடம்பெற்றுள்ளார். இவர், கோயிலின் தலைமைத் துறவியும், உ.பி.முதல்வருமான யோகி ஆதித்யநாத்தின் அன்புக்குரியவராகத் திகழ்கிறார்.

கோரக்நாத் கோயிலை அடுத்து 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது ஒரு கோசாலை. இங்கே 500க்கும் மேற் பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களில் ஒருவர் முகம்மது (30) என்ற இஸ்லாமிய இளைஞர்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது 10-ம் வயது முதல் இங்கே தொண்டாற்றி வருகிறார். உணவுடன் சிறு தொகை அவருக்கு ஊதியமாகத் தரப்படுகிறது. பசுக்களைக் குளிப்பாட்டுவது, அவற்றுக்கு உணவளிப்பது உள்ளிட்ட பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

தீவிர இந்துத்துவவாதி என்று முத்திரை குத்தப் பட்டு, வெறுப்பு விமர்சனங்களை பலரும் முன்வைக்கும்போது, இது குறித்து கருத்து தெரிவித்தார் முகம்மது.

அவர் கூறிய போது, “குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் இங்கு இருந்து வருகிறேன். இதுதான் எனது வீடு. என் மீது யோகிஜிக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனது வாழ்நாள் முழுவதும் நான் இங்கு இருப்பேன். யோகிஜியை ஒரு மதவாதத் தலைவர் என்று கூறுகிறார்கள். ஆனால், பொதுவாக அவர் வெளியில் வந்துவிட்டால், எவரிடமும் தனிப்பட்ட முறையில் மதப் பாகுபாடெல்லாம் காட்ட மாட்டார். உ.பி., முதல்வராக அவர் அனைத்து சமூகத்தின் வளர்ச்சியையும் உறுதிசெய்வார்” என்றார்.

முகம்மது, இங்கே பசுக்களைப் பராமரித்து வந்தாலும், தொழுகை உள்ளிட்ட இஸ்லாமிய நடைமுறைகளை அவர் வழக்கப்படி பின்பற்றி வருகிறார்.

முகம்மதுவின் தந்தையும் இங்குதான் பணியாற்றினாராம். அவர் தற்போது சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மகாராஜ் கஞ்ச் நகரில், தனது வீட்டில் வசித்து வருகிறார். முதுமைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மருத்துவச் செலவை, யோகி ஆதித்யநாத்தான் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

கோரக்பூரின் வணிகரான மொகம்மத் காலீம் ஃபாரூகி என்பவர், யோகி ஆதித்யநாத் குறித்து கூறியபோது, “உபி.,யின் முதல்வராக யோகியை தேர்ந்தெடுத்த செயலை வரவேற்கிறோம். அவரது வரவால், கோரக்பூருக்கும், மாநிலம் முழுமைக்குமே ஒரு நல்ல மாற்றம் வரும். அரசு என்பது ஒரு தனிப்பட்ட நபரின் அரசு அல்ல. நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த அரசை தேர்ந்தெடுத்திருக்கிறோம். அவர் நிச்சயமாக மாநிலத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறோம். நாங்கள் இதய பூர்வமாக இதனைக் கூறுகிறோம். இப்போது நாங்கள் எங்குச் சென்றாலும், நாங்கள் முதல்வரின் ஊரில் இருந்து வருகிறோம் என்றே பெருமையுடன் கூறுகிறோம்” என்றார்.

அவரது ஹிந்துத்துவா இமேஜ் குறித்து சிலர் பேசிக் கொண்டிருக்க, உள்ளூரில் உள்ள பலரும் அவரது வளர்ச்சிப் பணிகளைச் சொல்லிச் சொல்லி வாழ்த்துகிறார்கள். எம்.பி.யாக இருந்து கோரக்பூரில் எய்ம்ஸ் கொண்டுவரப் பாடுபட்டதும், ஒரு உரத் தொழிற்சாலையை அமைப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் என!

பெருமளவிலான இஸ்லாமியர்கள், யோகி ஆதித்யநாத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதை பெரும் மகிழ்ச்சியுடன் இனிப்பு கொடுத்து வரவேற்றுக் கொண்டாடினார்கள்.

 பாஜகவின் அல்பசங்க்யாக் மோர்ச்சாவின் உறுப்பினர் இர்பான் அஹ்மத் என்பவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், அவர் எங்கள் முதல்வர். அதற்கு மேல் எதையும் நாங்கள் எவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை. எங்கள் பிரச்னைகள் என்ன என்பது அவருக்குத் தெரியும். அவற்றை விரைவில் அவர் தீர்த்து வைப்பார். நாங்கள் இன்று ஹோலியை அவரது வண்ணத்துடன் சேர்த்துக் கொண்டாடுவோம்” என்றார்.

யோகி ஆதித்யநாத் நடத்தி வரும் ஜுண்டா தர்பாருக்கு வரும் எவரும் வெறும் கையுடன் திரும்பியதில்லை. ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள தனது பெயரைச் சேர்க்க பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்த சௌத்ரி கைஃபுல் வாரக், இதனை பெருமையுடன் கூறுகிறார். இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “இங்கே யார் வந்தாலும் அவரது வேலை சுலபமாக முடிந்துவிடும். சில நாட்களுக்கு முன், ஆக்கிரமிப்பால் சீரழிந்திருந்த மசூதியின் நிலையை எடுத்துச் சொல்லி, உதவிகேட்க வந்திருந்தோம். அதனை மகராஜ்தான் தீர்த்துவைத்தார்.” என்றார் பெருமையுடன்.

ஜாகிர் அலி வார்ஸி என்பவரும் ஆதித்யநாத் குறித்து பெருமிதத்துடன் கூறினார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையுடன் இருக்கும் கோரக்பூரின் மான்வேலா கிராமப் பகுதியில், பாஜக 2014 பொதுத் தேர்தல் நேரத்தில் பிரசாரக் கூட்டம் நடத்த இடத்தைக் கொடுத்தார்கள் முஸ்லிம்கள். இதற்கு மோடியின் மீதான மதிப்பு என்பதை விட, ஆதித்யநாத் மீதான நன்றியுணர்வு என்றே சொல்லலாம். கோரக்புர் வளர்ச்சி முகமையின் பிடியில் விரும்பத்தகாத வகையில் வளைக்கப் பட்டிருந்த ஏழை இஸ்லாமியர்களின் பெரும்பாலான நிலங்களை மீட்டுக் கொடுத்தவர் ஆதித்யநாத். 2017 தேர்தலில் அவர் 175 பேரணிகளை இங்கே நடத்தியுள்ளார் என்றார் ஜாஹிர் அலி வார்ஸி.

இன்னும் கோரக்பூர் மட்டுமல்லாது யோகி ஆதித்யநாத்தை நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அவரது பதவியேற்பை தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சியைப் போல் கொண்டாடியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகைகள் (21/03/2017) வெளியிட்டுள்ளன.

குறிப்பு;இவரை பார்த்து  கேள்வி கேட்க ஸ்டாலினுக்கு என்ன தகுதியுள்ளது..?


No comments:

Post a Comment