Friday, 25 September 2020

HOW ROBERT CLIVE DIED 1774 NOVEMBER 22

 

HOW ROBERT CLIVE DIED 1774 NOVEMBER 22

கிளைவின் ஊழலும் இறுதிக்காலமும்!



1760-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற கிளைவிடம் 2 லட்சத்து 34 ஆயிரம் பவுண்ட் பணம் இருந்தது, (அதாவது இந்திய மதிப்பில் 1 கோடியே 81 லட்சத்து 93 ஆயிரத்து 500 ரூபாய் ) தான் முறைகேடாக சம்பாதித்த பணத்தை எளிதாக இங்கிலாந்துக்கு எடுத்து செல்ல வசதியாக தங்கம் மற்றும் வைரமாக மாற்றிகொண்டார் கிளைவ், இப்படி டோனிங்டன் என்ற கப்பலில் அவர் 1400 பாளங்களாக எடுத்து சென்ற தங்கம், புயலில் சிக்கி கடலில் முழ்கிபோனது.


அதை இன்றும்கூட தேடிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு தனது தந்தையின் கடன்களையெல்லாம் அடைத்த கிளைவ் தனது தங்கைகளுக்கு மிக ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்ததுடன் லண்டன் நகரின் முக்கிய இடத்தில் 92,000 பவுண்ட் விலை கொடுத்து பண்ணை வீடு ஒன்றை வாங்கி பிரபல பணக்காரர்களில் ஒருவராக தன்னை காட்டிகொண்டார், கிளைவ் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பெரும் ஊழல் செய்து பணம் சம்பாதித்தார் என்ற குற்றசாட்டு எழுந்தபோது அதை மறுத்த கிளைவ் பல நாடகங்களை அரங்கேற்றினார்.


1769 -1973 வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டாலும் ,விவசாயிகளை கசக்கி பிழிந்தார் .விளைவு .

35 % பேர் செத்தனர்


ஜான் பர்கோயின் என்பார் கிளைவின் மட்டமான வகையில் சொத்து சேர்த்ததை ஆட்செபித்தார் .

கிளைவ் சொன்னார் .என்னுடைய கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள என் அதிர்ஷ்டத்தை பயன் படுத்திக்கொண்டேன் .இந்த வழக்கு முடிவுற்றது . ஒப்பற்ற வகையில் சேவை செய்தவர் என்று கௌரவிக்கப் பட்டார்


கிழக்கிந்திய கம்பனியை ஏமாற்றிய கிளைவால் மனசாட்சியை ஏமாற்றமுடியவில்லை அவரின் உடல் மிக மோசமான சூழ்நிலையை அடைந்தது தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டார். சாவோடு போராடிக்கொண்டிருந்த கிளைவ், தனது கடந்த காலம் இந்தியாவின் எதிர்காலத்தை கொள்ளையடித்ததன் வினைதான் தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்பதை கிளைவ் உணர்ந்தே இருந்தார்,


அவரின் நாள் குறிப்புகள் இதை உறுதி செய்கின்றன.

தீவிரமான மனச்சிதைவு மற்றும் பித்தப்பை கோளாறு காரணமாக அவதிப்பட்ட அவர் தூக்கம் வருவதற்காக தினமும் போதை ஊசி போட்டுகொண்டிருந்தார், அது நரம்பு தளர்ச்சியை அதிகமாக்கியது. அவரால் யாரிடமும் பேச முடியவில்லை,


வலியும் வேதனையும் மிதமிஞ்சிய கோபத்தையே உருவாக்கியது. அழுது கதறியதோடு தன்னை கொன்றுவிடுமாறு நாளெல்லாம் கத்திக்கொண்டே இருந்தார்.1774-ஆம் ஆண்டு தனது 49-வது வயதில் இங்கிலாந்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது கழுத்தை தானே அருத்துகொண்டு ரத்தம் சொட்ட சொட்ட தற்கொலை செய்துகொண்டார் ராபெர்ட் கிளைவ்.


இந்தியாவை தனதாக்கிகொள்ள முயன்ற கிளைவ், தற்கொலை செய்துகொண்ட காரணத்தால் தேவாலயத்தில் இறுதி சடங்குகள் நடத்தகூட அனுமதிக்கப்படவில்லை. தேவாலயங்கள் தற்கொலைகளை ஏற்றுகொள்வதில்லை.


கிளைவின் கல்லறையில் பொறிக்கப்படும் கல்கூட அனுமதிக்கப்படவில்லை, அடையாளமற்ற ஒரு மண் மேடாகவே அவர் புதைந்து போனார்.#நன்றி! அடிமை இந்தியா!


No photo description available.


.

No comments:

Post a Comment