Sunday, 27 September 2020

G.VARALAKSHMI, ACTRESS, BORN, SEPTEMBER 13, OR SEPTEMBER 27 -2006 NOVEMBER 26

 

G.VARALAKSHMI BORN SEPTEMBER 13 OR

 SEPTEMBER 27 -2006 NOVEMBER 26



ஜி. வரலட்சுமி (G. Varalakshmi, தெலுங்கு: జి.వరలక్ష్మి) என அழைக்கப்படும் கரிக்கப்பட்டி வரலட்சுமி (Garikapati Varalakshmi, செப்டம்பர் 27, 1926[1] - நவம்பர் 26, 2006)[2][3] தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின், மேடை நடிகையாகவும், திரைப்பட கதாநாயகி மற்றும் இயக்குனராகவும் அறியப்படுகிறார். குணச்சித்திர பாத்திரங்களும் நடித்த ஜி.வரலட்சுமி, பின்னணியும் பாடியுள்ளார்.வாழ்க்கைக் குறிப்பு

ஜி. வரலட்சுமி, ஆந்திர பிரதேசம் ஓங்கோல் எனும் பகுதியில் நாயுடு குடும்பத்தில் 1926 செப்டம்பர் 27[4] ஆம் திகதி சுப்பராமய்ய நாயுடுவின் இரண்டாவது புதல்வியாகப் பிறந்தார் வரலட்சுமி.[1] இவருக்கு முன்னும் பின்னும் இரு சகோதரிகள். இவரது இளமைப் பருவம் குண்டூரில் கழிந்தது. உள்ளூர் கான்வெண்டில் படித்தார், ஆனாலும் படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. பள்ளியில் படிக்கும் போதே தந்தை இறந்து விட்டார்.[1]


நாடகங்களில் நடிப்பு

சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார். தூரத்து உறவினர் துங்கல சலபதி ராவ் என்பவர் விஜயவாடாவில் நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். நாடகங்களில் ஆர்வம் கொண்ட தனது ஒன்றுவிட்ட சகோதரருடன் சேர்ந்து விஜயவாடா வந்தார்.[1] தனது பதினோராவது அகவையில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பாதுகா, சக்குபாய், பிரகலாதா, கிருஷ்ணலீலா போன்ற நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். நாடகக் கம்பனியுடன் ஆந்திரா முழுவது பயணம் செய்து பெரும் புகழ் பெற்றார்.[1] 1938ல் ஆந்திராவின் ராசமுந்திரி எனும் ஊரில், தனது 12வது வயதில் சக்குபாய் நாடகத்தில் ராதா பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான கே. எஸ். பிரகாஷ்ராவ் அப்போது ராஜமுந்திரிக்கு வந்திருந்தார். வரலட்சுமியின் நடிப்பைப் பார்த்துப் பாராட்டியதோடு திரையுலகிற்கு வர அழைப்பும் விடுத்தார்.





திரைப்படங்களில்


பாசவலை (1956) திரைப்படத்தில் ஜி. வரலட்சுமி

கே. எஸ். பிரகாஷ்ராவ் பாரிஸ்டர் பார்வதீசம் என்ற தனது தெலுங்கு நகைச்சுவைத் திரைப்படத்தில் வரலட்சுமியை நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். இப்படத்தில் நடிக்க சென்னை வந்தார். அதன் பின்னர் எம். கே. ரெட்டி தனது படங்களில் நடிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். 1939களில் தட்சயக்ஞம், நியூ தியேட்டர் நிறுவனம் தயாரித்த பிரகலாத ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.[1] மிகவும் மெலிந்து காணப்பட்ட ஜி.வரலட்சுமி, பி. பானுமதி, காஞ்சனமாலா, புஷ்பவல்லி போன்ற கதாநாயகிகள் புகழின் உச்சியிலிருந்த அந்த காலகட்டத்தில், தனது தனித்துவத்தை நிருபிக்க கடுமையாக போராடவேண்டயிருந்தது. தென்னிந்தியாவில் அவருக்குப் போதிய சந்தர்ப்பங்கள் கிடைக்காததால், பம்பாய் சென்றார். வனராணி, ஜிந்தகி, யாம்வுத் ஆகிய படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தார். ஒரு சில படங்களில் சிறு பாத்திரங்களில் தோன்றினார்.[1]



1942 ஆம் ஆண்டில் கே. எஸ். பிரகாஷ்ராவைத் திருமணம் புரிந்து கொண்டார். திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இரண்டு ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.[1]


இந்நிலையில், சி. புல்லையா தயாரித்த வையஜந்தி பிலிம்சாரின் விந்தியாராணி என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்து 1946 இல் மீண்டும் சென்னை வந்தார். சுவதந்திரா பிலிம்சாரின் துரோகி, மற்றும் வாலி சுக்கிரீவன், மண்டோதரி, ஜி. பலராமய்யாவின் லட்சமம்மா, முதலிரவு, சுவப்னசுந்தரி போன்ற படங்களிலும் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.[1]


தமிழ்த் திரைப்பட வரிசை

[5]


அண்ணி (1951)

பரோபகாரம் (1953)

பெற்ற தாய் (1953)

நல்லதங்காள் (1955)

போர்ட்டர் கந்தன் (1955)

பாசவலை (1956)

வாழ்விலே ஒரு நாள் (1956)

மறுமலர்ச்சி (1956)

பத்தினி தெய்வம் (1957)

அமுதவல்லி (1959)

அழகர்மலை கள்வன் (1959)

மாமியார் மெச்சின மருமகள் (1959)

பெற்ற மனம் (1960)

பொன்னான வாழ்வு (1967)

ஹரிச்சந்திரா (1968)

No comments:

Post a Comment