Friday, 25 September 2020

S.P.BALASUBRAMANIAM THE LEGEND

 


S.P.BALASUBRAMANIAM 

THE LEGEND



"சரித்திரம்" படைத்த பாடும் நிலாவின் வரலாறு


எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

கின்னஸ் உலக சாதனை, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பல தேசிய விருதுகள்..பெற்ற பன்மொழி, பல்துறை வித்தகர், S.P.ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்

சம்பமூர்த்தி − சகுந்தலம்மா தம்பதியருக்கு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது  (ஆந்திரப் பிரதேசம்) பிறந்தார்.


சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். 


இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். 


இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார்.


சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.


பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். 


அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.


டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. 


கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.


1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி முதல் பரிசு பெற்றார்.


ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார்.இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். 


இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி. இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 


எஸ்.பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ்.பி.பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்


புகழ்பெற்ற இந்தியத்திரைப்பட இசைப் பாடகரான எஸ்.பி.பி. என்ற மூன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 


1966ல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 


உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 


திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் என பன்முக அடையாளம் கொண்டவர். 


இந்திய அரசு இவருக்கு 2001ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011ம் ஆண்டில்  பத்மபூஷண்விருதும் வழங்கியது.


இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.


சாதனைகள்


நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.


ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். 


எஸ்.பி. பி. முறையாக கர்நாடக இசையைப்பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் 

என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். 


இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. 


பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். 


தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் 

நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். 


இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.


எஸ்.பி.பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். 


இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். 


மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். 


இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

[1:28 pm, 25/09/2020] Singan RamaiyerJanakiraman: 



ஒரு பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பாடகர் எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஒரு போட்டியாளர்  நிலவே என்னிடம் நெருங்காதே பாடலைப் பாடினார். அவருடைய பாட்டுக்குப் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.


பாடி முடித்தவுடன் எஸ்.பி.பி., கோடையில் ஒருநாள் மழை வரலாம்... என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ என்கிற வரியை மட்டும் பாடச் சொன்னார். ஆனால் எஸ்.பி.பி. எதிர்பார்த்த நுணுக்கத்தைப் போட்டியாளரால் கொண்டு வர முடியவில்லை. முக்கியமாக என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ என்கிற வரியை மிகவும் ஏக்கத்துடன் பாடியிருப்பார் பிபிஎஸ். கவனியுங்கள்... கோலத்தில் என்கிற வரியை எத்தனை அநாயசமாகப் பாடியிருக்கிறார். அவர்தான் பிபிஎஸ் என்று சொல்ல, பார்வையாளர்களுக்குச் சிலிர்த்துவிட்டது. இந்தப் பாடலை எஸ்.பி.பி.யும் பாடி அதன் காணொளி யூடியூப் தளத்தில் உள்ளது.


நீங்கள் பாடும் பாடல் கேட்பவர்களின் காதுகளை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் தொட வேண்டும் என்பதுதான் பிபிஎஸ்ஸின் இசைத் தத்துவம். அவரால் இதை முழுமூச்சுடன் பின்பற்ற முடிந்திருக்கிறது. அதனால் தான் இன்றைக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இவர் பாடிய பாடல்களை இன்றைக்கும் மறக்காமல் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

.


Soulful Peaceful Beautiful... இதுதான் ‘பாடும் நிலா’ பாலுவின் குரலைக் கேட்டு வளர்ந்த என் போன்றோரின் வாழ்க்கையில் SPB என்ற மூன்றெழுத்தின் அர்த்தம்!


எஸ்.பி.பி ஓர் அதிசயப்பிறவி. கர்னாடக சங்கீதம் கற்காமலே இசையில் சாதனைகள் நிகழ்த்திய, பொறியியல் படித்த இளைஞன். எல்லாமே கேள்வி ஞானம்தான். மெல்லிசைக் கச்சேரிகளில் பாடுவதையும் பாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவிப்பதையும் ஆர்வத்தோடு செய்தவர். அவைதான் அவருக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவுக்குப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. எந்தப் பாடகனுக்கும் ஆரம்பத்தில் உச்ச நட்சத்திரங்களுக்குப் பாட வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் எஸ்.பி.பி தமிழில் எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி அறிமுகமானவர்.


.

இப்படி மிக இளம்வயதில் மெச்சூர்டான, ‘ஆயிரம் நிலவே வா’ பாடலைப் பாடியவர், ‘Reverse Aging’ என்பார்களே... ஆரம்பத்தில் வயதான பாடகர்களுக்கே உரிய இறுக்கமான குரலிலும், வயதாக வயதாக மலைத் தேனடையைப் பிளந்ததைப்போல எல்லோருக்கு மானதாய் நாலாபுறமும் வடிந்து தேனினும் இனித்தது அவர் காந்தக் குரல்!


எஸ்.பி.பியின் பாடல்களைக் கேட்காமல் தமிழர்கள் யாரும் காதலித்திருப்பார்களா என்று தெரியாது. “ரொமான்டிக் பாடல்களைப் பாடுறதுக்கு எனக்குள்ள தாக்கத்தை உண்டாக்கியது லெஜண்ட் முகமது ரஃபி சார். அவர் பாடல்களை கண்ணை மூடிக்கிட்டுக் கேட்டுப் பாருங்க... அவர் ஏதோ தன் காதலிகிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரியே தோணும். அவரோட பாதிப்புதான் என்கிட்ட இருக்கு. அதனாலகூட ரொமான்டிக் பாடல்களில் என் குரலில் காதல் நிரம்பி வழியலாம்!’’ என்று ரஃபியைச் சிலாகிக்கும் பாலுவும் காதல் திருமணம் செய்தவர்தான்.


சங்கீதத்தோடு இங்கிதமும் தெரிந்தவர் பாலு. எந்த இடத்திலும் அவர் உணர்ச்சிவயப்பட்டுப் பேசி யாரையும் காயப்படுத்தியதே இல்லை. உயிரைக் கொடுத்துப் பாடிய பாடல், படத்திலிருந்து தூக்கப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. இப்போதுபோல அப்போது ரெக்கார்டுகளிலும் இடம்பிடிக்காமல் குப்பைகளுக்குப் போகும் அந்தப் பாடல்களுக்காக அவர் சண்டை போட்டதுமில்லை.


தன்னை நம்பி வந்த பல இளம் இசையமைப்பாளர்களுக்கு உயிரைக் கொடுத்துப் பாடி அவர்களுக்குப் பெரிய பிரேக் கொடுத்திருக்கிறார். இவரைப் பிடித்துப்போய் கடைசிவரை இவரைத்தவிர வேறு யாரையும் பாட வைக்காமல் தங்கள் கரியரில் Single singer Wonder-ஆகப் பயன்படுத்தி இசையமைத்தவர்கள் பலர். அதேபோல ஏ.ஆர். ரஹ்மானுக்கும் வேறுவிதமான அனுபவம் நடந்திருக்கிறது.


“ ‘ரோஜா’ படத்தின்போது சாமியார் மடத்திலுள்ள என் பஞ்சதன் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் அப்போ அவ்ளோ வசதியெல்லாம் இருக்காது. பாடகர்கள் பாடும் அந்தக் கண்ணாடி அறைக்குள் எஸ்.பி.பி சாரால் வசதியாக நின்றுகூட பாட முடியாது. அவ்வளவு சின்னதாய் இருக்கும். ஆனாலும் புன்சிரிப்போடு மூன்று நாள்கள் வந்து பொறுமையாகப் பாடிக் கொடுத்துட்டுப் போனார்!” என்கிறார் ரஹ்மான்.


‘சங்கராபரணம்’ படத்துக்காக முதல் தேசிய விருதை வாங்கிவிட்டு, ‘எனக்குக் கர்னாடக சங்கீதம் தெரியாது’ என்று பாலு சொன்னபோது கர்னாடக சங்கீத மேதைகளே ஆடிப்போனார்கள். அதேபோல இராண்டாவது தேசிய விருதினை ‘ஏக் துஜே கேலியே’ படத்துக்காக வாங்கியபோது, ‘எனக்கு இந்தி தெரியாது’ என்றபோது, ‘கியா..!’ என ஷாக் ஆனது பாலிவுட்.


சாரீரம் சரீரம் எல்லாமே இசையால் நிரம்பியவர் எஸ்.பி.பி. ஒரேநாளில் அசுரத்தனமாக 19 பாடல்களைப் பாடி கம்போஸ் செய்ததெல்லாம் இன்றளவும் யாரும் மிஞ்ச முடியாத ரெக்கார்டு. அதேபோல ஒரு பாடகர் இசையமைப்பாளராக உருமாறி பல படங்களுக்கு இசையமைத்ததும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இந்தியா முழுவதும் 13 நடிகர்களுக்குக் குரல் கொடுத்திருப்பதும் ஆல்டைம் ரெக்கார்டுதான்!


ஐஸ்க்ரீமில் செர்ரி போல நடிப்புத் திறமை என்பது அவர் நமக்குக் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ். மிக நல்ல நடிகர்!


“ஒரு பாடகன் என்பவன் கிட்டத்தட்ட நடிகன்தான். என்ன, மைக் முன்னாடி நடிக்கிற நடிகன். நான் பள்ளி நாள்களிலேயே மேடை நடிகன்தான். இயல்பாக நடிப்பேன். அதனால் நடிப்பது சிரமமாக இல்லை. ஆனால், நல்ல அப்பா, நல்ல அண்ணன், நல்ல டாக்டர் என ஒரே மாதிரி ரோல்கள் செய்வது பிடிக்கல. தெலுங்கில் தணிகல பரணியின் இயக்கத்தில் ‘மிதுனம்’ படத்துல கிடைச்சது மாதிரியான சவாலான கேரக்டர்களை எதிர்பார்த்துட்டு இருக்கேன்!” என்று தன் நடிப்பார்வத்தையும் 74 வயதில் வெளிக்காட்டியவர் பாலு!


எஸ்.பி.பியை எல்லோருக்கும் பிடிக்கக் காரணமே அவரின் எளிமைதான். எவ்வளவு உயரங்கள் போனாலும் சிகரங்கள் தொட்டாலும் அவர் எல்லோரிடத்திலும் அன்பாகவே இருக்கிறார். எளிதில் அணுகும் மனிதராக இருக்கிறார்.


“நான் உங்களை ரொம்ப நேரம் காக்க வெச்சிட்டேனோ... ஐ ஆம் ரியலி ரியலி ஸாரி..!”-கைகளைக் கூப்பியபடி தன்னைச் சந்திக்க வந்த நிருபனின் கைகளைப் பற்றி, “என்ன சாப்பிடுறீங்க?” என்று வாஞ்சையோடு கேட்கும்போதே அவன் வானத்தில் மிதந்து கொண்டிருப்பான். பேட்டியில் போகிற போக்கில் பிடித்த ஐஸ்க்ரீம் ‘கஸாட்டா’ பற்றி சப்புக்கொட்டியபடி பேசுவார். குரல் உடைந்து இனி பாடவே முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்ததையும், மீண்டு வந்ததைப் பற்றியும் கண்ணீரோடு நிருபனிடம் பகிர்ந்துகொள்வார், ஒரு பாசக்கார பெரியப்பாவைப் போல!


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் அவர் யாரையும் திட்ட மாட்டார். “ஏன் திட்டணும்... முடிந்த அளவு பாசிட்டிவிட்டியை விதைப்போமே?” என்பார்.


தான் பிஸியாக கமல்-ரஜினி என உச்ச நட்சத்திரங்களுக்குப் பாடிக்கொண்டிருந்தபோதுகூட, சக பாடகரான மனோவை வளர்த்துவிட மெனக்கெட்டார். “பாலுண்ணா எப்பவும் மத்தவங்க நல்லாயிருக்கணும்னு நினைக்கிறவர். நான் பாடுன பாட்டுல பாதி அவர் சிபாரிசு செஞ்சதுதான். ரஜினிக்கு ‘எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா’ அப்படிப் பாடினதுதான். யாருக்கு அப்படி ஒரு மனசு வரும்!” என்று மனோவே நெகிழ்ந்து சொல்கிறார்.


.

கொடுத்ததை அப்படியே பாடுபவர் அல்ல பாலு. சின்னச் சின்ன விளையாட்டுகள் மூலம் பாடலை செழுமைப்படுத்தும் ரசாயன வித்தைகள் தெரிந்தவர். அவர் தாண்டிவந்தது தலைமுறைக் கலைஞர்களை மட்டுமல்ல, பல தலைமுறை ரசனைகளையும்தான். எல்லா தலைமுறை ரசனைக்கும் ஈடுகொடுத்து மயக்கியது எஸ்.பி.பியின் குரல்.


எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜய், அஜித், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான், அனிருத், கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று காலங்கள் கடந்து பயணிக்கும் பாடலின் குரல் பாலுவுடையது. காலங்களைக் கடந்த அந்த குரல் இன்னும் பல காலங்களைக் கடந்தும் ஒலிக்கும்; நிலைக்கும்; நிறைக்கும்; இசைக்கும்!


விகடன் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரைகள்...

s. p. balasubrahmanyam

music



அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார்! ஒபாமா என நினைவு. குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து. அதற்கு அழைக்கப்பட்ட எஸ்பிபியை நமது குடியரசுத்தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்..


“இவர் எஸ்பிபி., எங்க நாட்டின் புகழ் வாய்ந்த பாடகர்.,

35000 பாடல்கள் பாடியிருக்கார்”

அமெரிக்க பிரசிடெண்ட் தலையாட்டி கை குலுக்கிட்டு நகர்ந்து விடுகிறார். பிறகு நடந்தது எஸ்பிபி இப்படி சொன்னார்..,


“அந்த அறிமுகத்தின் பிறகு, பிரசிடெண்ட் யாரையோ தேடிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்., என் பக்கம் வரும்போதெல்லாம் நான் விலகிக் கொண்டே இருந்தேன்.


இறுதியாக என்னை அவர் தோள் பிடித்து நிறுத்திவிட்டார். என்னைத்தான் தேடினார் என்பதையே அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் கையில் இருந்த காலிக் கோப்பையை எங்கே வைப்பது என தடுமாறிய அந்தக் கணத்தில் அவரே அதை வாங்கி, அருகிருந்த ஒரு டிரேயில் வைத்து விட்டு, Mister Singer! Is that true?

Did you really sung 30 thousand songs so far? என்றார். நான் பதிலுக்கு No Sir., My President was wrong on that fact. I actually cross 35 thousand last week என்றேன். அவர் திகைத்தபடி, என்னை இறுகப் பற்றி, oh god! I have never heard about a singer sung more than 1000 songs! you are

just impossible என்று சொல்லிவிட்டு, எதையோ முணுமுணுத்தபடியே விலகிச் சென்றார். 

இப்போது நான் 40 ஆயிரம் பாடல்களை பாடி முடித்ததை இங்கிருந்தே அமெரிக்காவுக்கு கேட்கும்படி உரக்க கத்த வேண்டும் போலிருக்கு” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதியை விடுங்க! நமக்கு அடுத்த தலைமுறையே இப்படியொரு பாடகர்

இருந்தார்! அவர் 11 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடினார். ஒரே நாளில் 7 மொழிகளில் 15 பாடல்களும், ஒரே நாளில் 22 பாடல்களும் பாடினார் என படித்தால் நம்பவா போகிறார்கள்? இவைகளை கேட்டு, பார்த்து வாழ்ந்த நமது வாழ்க்கை அல்லவா முழுமை பெற்ற வாழ்வு! 🙏



எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாலசுப்ரமணியம் அப்போது சென்னை மாகாணம்( தற்போது ஆந்திர மாநிலம்) நெல்லூர் மாவட்டம் கொண்டம்பேட்டையில் 1946ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சம்பமூர்த்தி. தாயார் சகுந்தலம்மா
தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞராக விளங்கினார். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா[29] இளைய தங்கைகள். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

பாலசுப்பிரமணியம் இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் போது அதை கவனித்து கற்று வந்தார். இசை கருவிகளை வாசிக்கவும் பயிற்சி பெற்றார். குறிப்பாக ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பதில் கைதேர்ந்து விளங்கினார்.
இவர் பள்ளிப்படிப்பு முடித்ததும் என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனன்டபூரில் உள்ள ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.

அங்கு படிக்கும்போதே டைப்பாய்டு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். என்ஜினீயரிங் படித்தாலும் இவருக்கு இசை மீது ஆர்வம் குறையவில்லை. எப்படியாவது பாடகனாக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவருடைய தந்தையோ படித்து முடித்து சிறந்த என்ஜினீயர் ஆக வேண்டும் என்று விரும்பினார்.

இசைப்போட்டியில் பரிசு

கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.
1964 ஆம் ஆண்டு அமெச்சூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாசார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றார்.
ஒருமுறை எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அவர் மெல்லிசைக் குழு ஒன்றை அமைத்து அதை நடத்தி வந்தார். இதில் இளையராஜா பங்கு பெற்று ஹிட்டார் மற்றும் ஹார்மோனியம் வாசித்தார். அனிருதா ஹார்மோனியமும், பாஸ்கர் மற்றும் கங்கை அமரன் ஹிட்டாரும் வாசித்தனர்.
இவர்களோடு சேர்ந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி நாடகங்களில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

அவ்வப்போது அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்டு வந்தார்.
சினிமா வாய்ப்பு

எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. எஸ். பி. கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற படத்தில் இத்திரைப்படத்தில் ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார்.
இந்தப் படம்1966-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி வெளிவந்தது.
அதன் பிறகு எட்டு நாட்களில் “நகரே அதே ஸ்வர்க” என்ற கன்னட மொழி படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் தமிழில்1969 ஆம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ஆனால் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியாகவே இல்லை.

அதன்பின் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் “இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி”
என்ற பாடலைப் பாடினார். இப்போதும் இந்தப் பாடல் தேனினும் இன்னிசையாக நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அதற்குப்பிறகு எம். ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலையும் பாடினார்.
மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் “இ கடலும் மறு கடலும்” பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.

சிவாஜி கணேசன்

சுமதி என் சுந்தரி படத்தில் முதன்முறையாக சிவாஜிகணேசனு்கு பொட்டு வைத்த முகமோ என்ற பாடலை பாடினார். இந்த படத்தில் பாட ஒப்பந்தம் ஆனவுடன் அவரிடம் சிவாஜி கணேசன் நீ எனக்காக குரலை மாற்றி பாட வேண்டாம் உள் இஷ்டப்படி பாடு, நான் உன்குரலுக்கு தகுந்தபடி நடித்துக்கொள்கிறேன் என்றார். அதன்படி மெல்லிய இனிமையான குரலுக்கு தகுந்தபடி சிவாஜி கணேசன் அந்த பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதை எஸ்.பி.பாலசுப்பிரமணியமே சொல்லியுள்ளார்.
இவர் பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.
எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கர்நாடக சங்கீதத்தை முறைபடி கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார். அடுத்து இவருக்கு ஏக் தூஜே கே லியே (1981-ம் ஆண்டு) என்ற இந்தி படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.
எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ் பி பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடினார். குறிப்பாக மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது.

1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஏ ஆர் ரகுமானின் ரோஜா படத்தில் இவர் மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் “ஜுலை மாதம் வந்தால்” பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும்.
கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் “மானூத்து மந்தையிலே மாங்குட்டி” பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.

பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது.

2000ஆம் ஆண்டிற்கு பிறகு
எஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பில் பாடினார்.

எஸ் பி பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் “நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்” தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.

பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டார்.
2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் “ஹரிவராசனம்” விருது பெற்றுள்ளார்.

பின்னணி குரல்






No comments:

Post a Comment