Wednesday, 30 September 2020

BABUR MASJID CASE JUDGEMENT DAY SEPTEMBER 30,2020

 

BABUR MASJID CASE  JUDGEMENT DAY  

SEPTEMBER 30,2020





குற்றச்சாட்டுகளை போதிய ஆதரங்களுடன் சி.பி.ஐ நிரூபிக்கவில்லை. எனவே, பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது.

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், 351 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, 600 பக்க அறிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ. அவை அனைத்தையும் சரிபார்த்து வாதி, பிரதிவாதிகளிடம் விசாரணை நடத்தி தீப்பளித்திருக்கிறது லக்னோ சிறப்பு நீதிமன்றம்.


1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களான அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இரண்டு வழக்குகளாக இருந்தது, பின்னர் 49 வழக்குகளாக விரிவடைந்தது. முதற்கட்டத்தில் முக்கியத் தலைவர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணைகளும் வழக்குகளும் அதிகரிக்கவே மொத்தம் 48 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் தற்போது 32 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்.


சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான பாபர் மசூதி வழக்கில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று லக்னோ சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகிய மூன்று முக்கியப் புள்ளிகளைத் தவிர இந்த வழக்கில், தற்போதைய பா.ஜ.க எம்.பி-க்களான சாக்‌ஷி மகாராஜ் (Sakshi Maharaj), லல்லு சிங் (Lallu Sing), பிரிஜ் பூஷண் சரண் சிங் (Brij Bhushan Sharan Singh) ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இதனால், தீர்ப்பு வழங்கப்படும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.





351 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, 600 பக்க அறிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ. அவை அனைத்தையும் சரிபார்த்து வாதி, பிரதிவாதிகளிடம் விசாரணை நடத்தியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு கடந்துவந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.


1528

* பாபரின் தளபதி மிர் பாகி என்பவர் அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார்.


1853

* பாபர் மசூதி கட்டப்பட்டபோது, அங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்னையைக் கிளப்பினர்.


1859

* பதற்றம் அதிகரிக்கவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மசூதியைச் சுற்றி வேலி அமைத்தனர்.





* மசூதிக்கு உள்ளே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தவும், வெளியில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.

1860 - 1960

* விஷ்வ இந்து பரிஷத், நிர்மோகி அகாரா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்போவதாக அறிவித்தன. இது தொடர்பாக சில வழக்குகளும் இந்து அமைப்புகள் சார்பில் தொடங்கப்பட்டன.


1961

* சன்னி சென்ட்ரல் போர்டு அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் `மசூதிக்குள் இருக்கும் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். மசூதி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் எங்களுக்கே சொந்தம்’ என்று மனுத்தாக்கல் செய்தனர்.


1984

* பிரச்னைக்குரிய இடத்தில் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயில் கட்டப்போவதாக இந்துக் குழுக்கள் அறிவித்தன. கோயில் கட்டுவதற்காக மிகப்பெரிய இயக்கம் உருவெடுத்தது. இதில் பா.ஜ.க தலைவர் அத்வானி முக்கியப் பங்குவகித்தார்.



1986

* `பாபர் மசூதி கதவுகள் திறக்கப்பட வேண்டும். இந்துக்கள் அங்கு வழிபட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்ற ஹரிசங்கர் துபேவின் மனுவை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


* பாபர் மசூதி ஆக்‌ஷன் கமிட்டி உருவாக்கப்பட்டது.


1989

* பாபர் மசூதி அருகே ராமர் கோயில் கட்ட விஷ்வ இந்து பரிஷத் அடிக்கல் நாட்டியது.


* இதுவரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.





அத்வானி ரத யாத்திரை

அத்வானி ரத யாத்திரை

1990

* வி.ஹெச்.பி (விஷ்வ இந்து பரிஷத்) அமைப்பினர் மசூதியின் சில பகுதியைச் சேதப்படுத்தினர்.


* அதே ஆண்டில், செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம், சோம்நாத்திலிருந்து அத்வானி ரத யாத்திரையைத் தொடங்கினார்.



1991

* நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது பா.ஜ.க.


* ரத யாத்திரையின் பலனாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது.


* இதைத் தொடர்ந்து, கோயில்கட்ட கரசேவை இயக்கம் தொடங்கப்பட்டது.


1992

* டிசம்பர் 6, கரசேவகர்களால் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது.


* இதனால் நாடெங்கும் கலவரம் வெடித்தது. 2,000 பேர் உயிரிழந்தனர். அதில், அநேகர் இஸ்லாமியர்கள் என்றும் சொல்லப்பட்டது.


* இதன் பின்னணியை விசாரிக்க அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், லிபரான் ஆணையத்தை அமைத்தார்.


பாபர் மசூதி

பாபர் மசூதி

Junior Vikatan

1993

* பாபர் மசூதி இருந்த பகுதியில் 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது.


* பா.ஜ.க-வைச் சேர்ந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, சிவசேனா தலைவர் பால் தாக்ரே உள்ளிட்ட சில தலைவர்கள்மீது சதித் திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


2001

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சி.பி.ஐ நீதிமன்றம் 21 பேரை விடுதலை செய்தது.


* அப்போது அத்வானி உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


2002

* அலகாபாத் உயர் நீதிமன்றம், பாபர் மசூதி இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து, அங்கு இந்துக் கோயில் இருந்ததா என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யும்படி `ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா’வுக்கு உத்தரவிட்டது.


2010

* அலகாபாத் உயர் நீதிமன்றம், மத்திய அரசு கையகப்படுத்திய இடத்தில் மூன்றில் இரண்டு பகுதி நிலத்தை ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள ஒரு பகுதி நிலத்தை இஸ்லாமியர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டது.


* அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்ய கோரி உத்தரவிட்ட ரேபரேலி உயர் நீதிமன்றத் தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.



2017

மார்ச் 6

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவில் ``ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்காமல் `கால தாமதம்’ என்பது போன்ற `டெக்னிக்கல்’ காரணங்களின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது’’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


உச்ச நீதிமன்றம் 

உச்ச நீதிமன்றம்

மார்ச் 17

* `பாபர் மசூதி இடிப்பு சதியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது’ என்று சி.பி.ஐ திட்டவட்டமாகக் கூறியது.


* `இது தொடர்பாக மிக விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


ஏப்ரல் 6

* `அத்வானி உள்ளிட்டோரின் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறிய உச்ச நீதிமன்றம், ரேபரேலியில் நடந்துவந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கை அரசியல் அமைப்புச் சட்டம் 142 விதியின் கீழ், லக்னோவுக்கு மாற்ற உத்தரவிட்டது.


ஏப்ரல் 19

* அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிடப்பட்டது. தினந்தோறும் விசாரணை நடத்தி, இரண்டாண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


மே 30

* அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பிறகு, ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது சதிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.


2018-2019

* குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இரண்டு ஆண்டுகளாகத் தீவிர விசாரணை மேற்கொண்டது சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம்.


2020

ஜூலை 23

* முரளி மனோகர் ஜோஷியிடம் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் காணொலி வாயிலாக விசாரணை நடத்தியது. தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துப் பேசினார் ஜோஷி.


முரளி மனோகர் ஜோஷி - அத்வானி

முரளி மனோகர் ஜோஷி - அத்வானி

உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

Also Read

உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

ஜூலை 24

* அத்வானியிடமும் காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்பட்டது. அத்வானியும் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துவிட்டார்.



செப்டம்பர் 1

* வாதி, பிரதிவாதி என அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்தன. செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டார்.


செப்டம்பர் 26

* உமா பாரதி பா.ஜ.க-வின் தேசியப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அன்று ஜே.பி.நட்டா-வுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில்,

அயோத்தி வழக்கில் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இந்த வழக்கில், நான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டாலும், நிச்சயம் ஜாமீன் பெறப் போவதில்லை. அப்படிப் பெற்றால் அது நம் கெளரவத்தைக் களங்கப்படுத்திவிடும். அயோத்தி இயக்கத்தில் பங்குபெற்றதற்கு நான் பெருமை கொள்கிறேன்

.

ANI

செப்டம்பர் 29

* அயோத்தி வழக்கில் முக்கியப் புள்ளிகளாக இருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் நாளில், லக்னோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகின.


* உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாலும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாகவும் பங்குகொள்ளவில்லை என்ற தகவல்களும் வெளியாகின. மூவரும் காணொலி வாயிலாக கலந்துகொள்வார்கள் என்றும் சொல்லப்பட்டது.


செப்டம்பர் 30

காலை 11:30 மணியளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு வெளியானது.


குற்றச்சாட்டுகளை போதிய ஆதரங்களுடன் சி.பி.ஐ நிரூபிக்கவில்லை. எனவே, பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது.

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு

``பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சம்பவம் அல்ல. இந்த வழக்கில் போதுமான சாட்சியங்களும் ஆதாரங்களும் சி.பி.ஐ-யால் சமர்ப்பிக்கப்படவில்லை'' என்று லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ தரப்பு மேல்முறையீடு செய்யலாம்.


.

No comments:

Post a Comment