Wednesday, 23 September 2020

GEMINI HITS

 


GEMINI HITS



மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ
மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

காட்சிகள் மாறும் நாடகம் போலே
காலமும் மாறாதோ காலமும் மாறாதோ
காலங்களாலே வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ பாதையும் மாறாதோ
யார் மாறிய போதும் பாவை எந்தன்
இதயம் மாறாது என் நிலையும் மாறாது
மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய்
கலந்தே நின்றாரே கலந்தே நின்றாரே
நினைவுகள் தோன்றும் நெஞ்சில் என்றும்
நிறைந்தே நின்றாரே நிறைந்தே நின்றாரே
இனி அவருடன் வாழ்வில் ஒன்று சேரும்
திருநாள் வாராதோ என் மண நாள் வாராதோ
மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்



நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
மணம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா
மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது



சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ
அதில் புள்ளி மயில் பள்ளி கொண்டதோ
அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ
அதில் புள்ளி மயில் பள்ளி கொண்டதோ
 புள்ளி போடும் தோகையை
வெள்ளி வண்ண பாவையை
அள்ளிக்கொண்டு போகலாகுமோ நீயும் கள்வனாக மாறலாகுமா
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

பின்னி வைத்த கூந்தலில் நீ முல்லை பூவை சூடினால்
கண்ணி நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை தாங்குமா
பின்னி வைத்த கூந்தலில் நீ முல்லை பூவை சூடினால்
கண்ணி நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை தாங்குமா
மின்னலிடை வாடினால் கண்ணி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்
அதில் அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

.

.

காலையும் நீயே மாலையும் நீயே ஆ…
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே

ஆலைய மணிவாய் ஓசையும் நீயே ஆ…
ஆலைய மணிவாய் ஓசையும் நீயே
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே

பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீயெ
பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீய்யே
மனதில் மேடை அமைத்தவள் நீயே ஆ…
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட வந்தாயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா
இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா
இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா
இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா
காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா
இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா


ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி

ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்

பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா
பாயும் தென்றல் வேகம் உங்கள் கண்கள் அல்லவா
பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா
பாயும் தென்றல் வேகம் உங்கள் கண்கள் அல்லவா
இன்னும் சொல்லவா
அதில் மன்னன் அல்லவா
அந்த எண்ணம் போதும் போதும் எந்தன் பேபி நீ வா
ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்

கண்ணே உன்னை காணும் கண்கள் பின்னால் இல்லையே
கண்ணால் காணும் வண்ணம் நானும் உன்னால் இல்லையே
கண்ணே உன்னை காணும் கண்கள் பின்னால் இல்லையே
கண்ணால் காணும் வண்ணம் நானும் முன்னால் இல்லையே
அன்பே ஓடிவா
என் ராஜா ஓடிவா
வெகு தூரம் நிற்கும் காதல் போதும் பேபி ஓடிவா
ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி


விழிவாசல் அழகான மணி மண்டபம் -உன் 
விழிவாசல் அழகான மணி மண்டபம்
மின்னல் விளையாடும் புது 
பார்வை உயிர் தாண்டவம் 
விழிவாசல் அழகான மணி மண்டபம்

வண்டாடும் மலர்மீது அலங்காரமே
ஆ ..ஆ ..ஆ 
வண்டாடும் மலர்மீது அலங்காரமே
என்னை வரவேற்க வரும் இன்ப சாம்ராஜ்யமே 
விழிவாசல் அழகான மணி மண்டபம்

புகழ் மாலை அமுதான கவி மாளிகை -உன் 
புகழ் மாலை அமுதான கவி மாளிகை
பாச புதுமாலை உன்னை நாடி வரும் தாரகை 
புகழ் மாலை அமுதான கவி மாளிகை

உணர்வான தேன்கூடு பார் வெண்ணிலா 
உணர்வான தேன்கூடு பார் வெண்ணிலா 
வந்த பொழுதெல்லாம் உன் பாடல் என்னை நெஞ்சிலே
புகழ் மாலை அமுதான கவி மாளிகை

செடியிலே பூவிருக்கு அழகாக -உன் 
சிரிப்பிலே நான் இருக்கேன்  உனக்காக 
கொடியிலே கோணல் இருக்கு எதற்காக  -பூங் 
கொடியிலே கோணல் இருக்கு எதற்காக 
 
பெண்கள் குணத்திலே நாணமிருக்கு அதுக்காக 
நாணம் தானே பெண்களுக்கு நாணயம் -இந்த 
நல்ல பண்பு கொண்ட பெண்கள் 
குடும்பவாழ்வின் ஆலயம் 
ஞானத்தோடு பேசுது இங்கே ஓவியம் -கலை
ஞானத்தோடு பேசுது இங்கே ஓவியம்
தமிழ்வானில் ஆடும் தாரகை நீ 
உலகமகா இலக்கியம் 

ஆ ..ஆ ..ஆ ..
ஆ ..ஆ ..ஆ ..
விழிவாசல் அழகான மணி மண்டபம்-உன் 
புகழ் மாலை அமுதான கவி மாளிகை

ஆ ..ஆ ..ஆ ..
ஆ ..ஆ ..ஆ ..
ம்ம் ..ம்ம் .ம்ம் 
..Male
இதழ் மொட்டு விரிந்திட
முத்து விளைந்திடும்
சித்திரப் பெண் பாவை
கண் பட்டு மறைந்த தென்னை
விட்டு பறந்திடும்
காரணம் தான் யாதோ
இங்கு கோபமும் வரலாமோ
முகம் குங்கும நிறமாமோ

Female
எனை கண்டதும் வந்து
குழைந்திட நின்றவர்
கவிஞனின் உறவாமோ
சொன்ன சொல்லை மறந்தவர்
என்னை மறந்தவர்
யாரென தெரியாதோ
வர தாமதம் எதனாலோ
அது காதலின் குணமாமோ

Male
இளம் தென்றலில் மனமாவாள்
அள்ளிக் கொண்டதும் சேயாவாள்
நான் வந்ததும் பனியாவாள்
ஏன் இன்றவள் பகையானாள்

Female
கொடி கண்டதும் கிளையாவார்
இசை வந்ததும் மொழியாவார்
மலர் கண்டதும் வண்டாவார்
கனி கண்டதும் கிளியாவார்

Male
இள மலருக்கு கோபமும் வருமோ
Female
வரும் வண்டுக்கு இது தெரியாதோ
Male
அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ
Female
அதை கண்டது யார் என்ன கதையோ

Male
அந்த வள்ளுவன் குரல் போலே
அவள் வகைக்கொரு சுவையாவாள்
கரும் கல்லினில் மனமாமோ
என்னை கண்டதும் இளகாதோ

Female
அவர் கண்களும் சிறையாமோ
அதில் கன்னியர் இறையாமோ
இழை கல்லிலும் எடுப்பாரோ
அதை பின்னியும் முடிப்பாரோ
Male
அன்பு தழைக்கிற இடம் என்ன மனமோ

Female
விதை தெளிக்கிற இடம் என்ன விழியோ
Male
நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ

Female
கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ

Both
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும்
முத்தமிழ் பயிராகும்
மனம் ஒத்து நடந்தோருமித்த
உளம் தனில் வைத்தது நெறியாகும்
Male
இளம் காவியம் அரங்கேறும்

Female
தென்றல் காற்றினில் சுரம் பாரும்

Both
ஆஹா ஹாஹா ஓஹோ ஹோஹோ
ஆஹா ஹாஹா ஓஹோஹோ

.
காதலெனும் வடிவம் கண்டேன், கற்பனையில் இன்பம் கொண்டேன், மாலையிடும் நாளை எண்ணி, மயங்குகிறேன், ஆசைக்கன்னி, காதலெனும் வடிவம் கண்டேன், கற்பனையில் இன்பம் கொண்டேன், மாலையிடும் நாளை எண்ணி, மயங்குகிறேன், ஆசைக்கன்னி, காதலெனும் வடிவம் கண்டேன், ஹோ.., ஹோ.., ஹோ.., ஒஓஓஒ.., ஓ.., ஹோ.., ஹோ.., ஆ.., அ.., ஆஹா.., ஆஹா.., அ.., ஆஆ.., துள்ளாமல் துள்ளும் உள்ளம், மின்னாமல் மின்னும் கன்னம், துள்ளாமல் துள்ளும் உள்ளம், மின்னாமல் மின்னும் கன்னம், தொட்டவுடன், மேனி எல்லாம், துவண்டுவிடும், கொடியைப்போல, தொட்டவுடன், மேனி எல்லாம், துவண்டுவிடும், கொடியைப்போல, காதலெனும் வடிவம் கண்டேன், கற்பனையில் இன்பம் கொண்டேன், மாலையிடும் நாளை எண்ணி, மயங்குகிறேன், ஆசைக்கன்னி, காதலெனும்வடிவம் கண்டேன்,ஹோ.., ஹோ.., ஹோ.., ஒஓஓஒ.., ஓ.., ஹோ.., ஹோ.., ஆ.., அ.., ஆஹா.., ஆஹா.., அ.., ஆஆ.., நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நாட்டியமாகும், நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நாட்டியமாகும், தென்றலெனும், தேரின் மேலே, சென்றிடுவோம், ஆசையாலே, தென்றலெனும், தேரின் மேலே, சென்றிடுவோம், ஆசையாலே, காதலெனும் வடிவம் கண்டேன், கற்பனையில் இன்பம் கொண்டேன், மாலையிடும் நாளை எண்ணி, மயங்குகிறேன்,ஆசைக்கன்னி, காதலெனும் வடிவம் கண்டேன், – Kadhal ennum vadivam kandu – Movie:- Bhagyalakshmi (பாக்யலக்ஷ்மி)


காதல் என்றால் ஆணும் பெண்ணூம் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ தூது செல்வார் எனக்காருமில்லை சொல்வதில் முன்பின் பழக்கமில்லை நேரடியாகவே தேடி வந்தேன் நேரிழையே நீ அருள் புரிவாய். வாங்கிய பூசைகள் போதாதா மங்கையின் பின்னால் வரலாமா ஆயிரம் வேஷங்கள் போட்டாலும் என் ஆசையும் அன்பும் கிடைக்காது காதல் என்றால் ஆணும் பெண்ணூம் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

F : பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா
பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
M : பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே
Music...
F : வேலாலெறிந்து வெல்லும்
உங்கள் வீரமும் காதல் சொல்லும்
வேலாலெறிந்து வெல்லும்
உங்கள் வீரமும் காதல் சொல்லும்
M : பால்போல் தெளிந்த முகமும்
பால்போல் தெளிந்த முகமும்
நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்
நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்
Music...
F : சித்திர வடிவம் போலே
தங்கச் சிலையைக் கண்டதினாலே
சித்திர வடிவம் போலே
தங்கச் சிலையைக் கண்டதினாலே
M : நித்திரை தீர்ந்தது கனியே
நித்திரை தீர்ந்தது கனியே
உன் நினைவில் வீழ்ந்தது மனமே
F : உங்கள் அழகிய மேனி சுகமா
M : உன் காவலன் மேனி சுகமே
F : பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
M : பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே
F : வளரும் காதலின் எல்லை
M : இதை மறுப்பவர் யாரும் இல்லை
Music...
F : வளரும் காதலின் எல்லை
M : இதை மறுப்பவர் யாரும் இல்லை
F : வளரும் காதல் வளரும்
வளரும் காதல் வளரும்
M : நம் வாழ்வினில் அமைதி நிலவும்
F : உங்கள் அழகிய மேனி சுகமா
M : உன் காவலன் மேனி சுகமே
F : பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
M : பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே

  • .

No comments:

Post a Comment