ACTRESS KASTHURI BORN 1974 ,MAY 1
கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆத்தா உன் கோயிலிலே (1991), ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.[1]
இளமைக்காலம்
இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் மே 1, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் சென்னையில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்.[2] இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.[3]
ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர்.[4][5] கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் தி பைபாஸ் என்னும் இந்தி குறும்படத்திலும், 2010இல் தமிழ் படத்தின் வாயிலாகம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.[6]
தடவுவது பற்றி நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை விமர்சிக்க பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர். நடிகை லதாவை தடவியதை மேற்கோள் காட்டினார் நடிகை கஸ்தூரி.
அதற்கு லதா உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கஸ்தூரியும் மன்னிப்பு கேட்டுவிட்டார்.
பிக்பாஸ் நிர்வாகம், வனிதாவுக்கு மாற்றாகவே என்னை எண்ணி, உள்ளே அனுப்பியது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடையில் சென்று, சில நாட்களிலேயே திரும்பி வந்த கஸ்தூரி, தன்னுடைய தைரியமான, சர்ச்சைகள் நிறைந்த ட்விட்டர் கருத்துகளுக்குப் பெயர் போனவர். அதையே பிக்பாஸிலும் மக்கள் எதிர்பார்த்தனர், அது நடந்ததா, அந்நிகழ்ச்சியின் கொள்கைகள், எதிர்பார்ப்புகள், நிஜங்கள் என்ன? விரிவாகப் பேசுகிறார் கஸ்தூரி.
இதில் பங்கேற்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
3 வருடங்களாக மறுத்த பிறகு, இந்த முறை ஒப்புக்கொண்டேன். ஏனெனில் நான் அப்போது கொஞ்சம் ஓய்வாக இருந்தேன். என்னால் மறுக்க முடியாத வகையில் என்னை அழைத்தனர். என்னை நானே சுய பரிசோதனை செய்துகொள்ளவும் விரும்பினேன்.
குறிப்பிட்ட சில ஒழுக்க நெறிமுறைகளைக் கடைபிடிக்க முடியாமா என்று தெரிந்துகொள்ளவே சென்றேன். அமைதியையும் தெளிவையும் எனக்குள்ளேயே கண்டுகொண்டேன்.
வெளியில் இருக்கும் கஸ்தூரியாகவே பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இருந்தீர்களா?
இதைக் கமல் கேட்டார். எல்லோரும் கேட்கின்றனர். கஸ்தூரி, கஸ்தூரியின் வீட்டுக்குள் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது, அவர்களுக்கு ட்விட்டரில் இயங்கும் 'பிராண்ட் கஸ்தூரி'யை மட்டுமே தெரியும். நான் கால்பந்து குறித்து எழுதுகிறேன் என்பதற்காக, வீட்டுக்குள் கால்பந்து விளையாட வேண்டுமா என்ன?
குறிப்பிட்ட ஒருவரின் அதிகாரம், புகழ் ஆகியவற்றைப் பார்க்காமல் தைரியமாக விமர்சிப்பவர் என்னும் பெயர் இருக்கிறது. ட்விட்டரில் கருத்து சொல்கிறேன்; விமர்சனம் வைக்கிறேன் என்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் கேட்கப்படும் முதிர்ச்சியற்ற அவதானிப்புகளுக்கு பதில் சொல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள் பார்க்க நேரிட்டவற்றுக்கு நான் பொறுப்பலல.
மக்களின் தவறுகளை மட்டுமே பூதக்கண்ணாடி வைத்து பிக்பாஸ் பார்ப்பது ஏன்?
அவர்கள் பெண்கள் மீதான வெறுப்பைக் கொண்டாடினர். இன்னும் அதைச் செய்கின்றனர்.
மக்கள் கஸ்தூரியை வனிதாவுக்கு மாற்று என்று எதிர்பார்த்தார்களா?
மக்களைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் பிக்பாஸும் அதன் தயாரிப்பாளர்களும் அது மாதிரியான கடுமையான அணுகுமுறையைத்தான் என்னிடம் எதிர்பார்த்தனர். என்னுடைய ட்விட்டர் டைம்லைனை வைத்து அவ்வாறு தவறாக எண்ணி, அனுப்பினர்.
நீங்கள் என்னுடைய ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர்பவர்களாக இருந்தால், சுமார் 10 ஆயிரம் ட்வீட்டுகளைக் காண வேண்டும். அதில் 3 ட்வீட்டுகள் வேண்டுமெனில் அரசியல் கருத்தாகவோ, விமர்சனமாகவோ இருக்கும். அவைதான் சர்ச்சையாக உருமாறி, செய்தியாகின்றன. அதனால் அப்படிப்பட்ட பிம்பம் ஏற்பட்டுவிட்டது.
மதுமிதா வெளியேற்றத்தின்போது எப்படி உணர்ந்தீர்கள்?
அப்போது எனது இதயம் நொறுங்கி விட்டது. அதுகுறித்துப் பேசுவதே கடினமாக இருக்கிறது. அந்த நாளில் அடிப்படை மனிதத் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். என்னுடைய மூளையில் முதலில் தோன்றியது மதுமிதாவுக்கு மருத்துவ உதவி வேண்டும் என்பதுதான்.
நான் முழுமையாக வெறுப்பவர்கள் எதாவது முட்டாள்தனத்தை செய்து, ஆபத்தில் இருந்தாலும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றுதான் தோன்றும். இரண்டாவதாக இதை மீண்டும் செய்யாதீர்கள் என்று சொல்லத் தோன்றும். கேலி செய்வதோ, கிண்டலுக்கு ஆளாக்குவதோ, அவர்களைக் குறிவைப்பதோ, விமர்சிப்பதோ, விலக்கிவைப்பதோ என்னுடைய அகராதியில் இல்லை. யாராவது ஆபத்தில் இருக்கும்போது, நீங்கள் அவரை எவ்வளவு வெறுக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை, அவர்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்பதுதான் அவசியம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறீர்கள்?
வெற்றி மட்டுமே அனைத்துமல்ல. சென்று சேரும் இடமும் அதற்கான பாதையும்தான் முக்கியம்.
படங்கள் எதிலாவது கமிட் ஆகியிருக்கிறீர்களா?
'தமிழரசன்', 'வெல்வெட் நகரம்' ஆகியவை வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. இந்த மாதத்தில் இன்னும் சில படங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. இவை தாண்டி கையில் கல்வி சம்பந்தமான ஒரு வேலையும் காத்திருக்கிறது.
இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.
-ராஜஸ்ரீ தாஸ், தி இந்து (ஆங்கிலம்)
திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கூறி, நடிகைகள் கஸ்தூரி,காயத்ரி ரகுராம் ஆகியோரை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் கள்ளக்குறிச்சியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.திருமாவளவனைப் பற்றி ட்விட்டரில் இழிவாகவும், தரம் தாழ்ந்தும் பதிவிட்ட நடிகைகள் மற்றும் வலைத்தளங்களில் இவர்களை பின் தொடர்ந்து இழிவாகப் பின்னூட்டம் இட்டவர்களையும், கொலை மிரட்டல் விடுத்தவர்களையும் கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று புகார் அளித்தனர்.
No comments:
Post a Comment