Sunday, 24 May 2020

Constitution of India. இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்





Constitution of India.
இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்
.
இந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்' ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது. 





அமெரிக்காவின் உரிமைகள் சட்டவரைவை (Bill of Rights) மூலமாக கொண்டது. இந்திய அரசியலமைப்பின் சட்டவிதி 12 முதல் 35 வரை ஆறுவகை உரிமைகள் குறித்து விவரிக்கும் அரசியலமைப்பின் மூன்றாவது பகுதி, உரிமைகளுக்கான, இந்தியாவின் மேக்னா கார்ட்டா என அழைக்கப்படுகிறது. 

ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன. 

இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகுபாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.

இந்த அடிப்படை உரிமைகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை, மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார். அடிப்படை உரிமையை, நெருக்கடி கால அறிவிப்பின் மூலம், குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.




ஆறு அடிப்படை உரிமைகளாவன[1]

சம உரிமை
சுதந்திர உரிமை
சுரண்டலை எதிர்க்கும் உரிமை
சமய சார்பு உரிமை
கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை
அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் தங்களுக்குள்ளேயே எவ்விதமான உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும் இவை வெற்றுப் பாத்திரங்களாகவே உள்ளன. ஒவ்வொரு தலைமுறையினரும் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில்பெற்ற உன்னதமான அனுபவங்களை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம். கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கம்: அடிப்படை உரிமை என்ற அதன் பெயரிலிருந்தே அதன் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இதற்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உத்திரவாதமும் முக்கியத்துவம் நன்கு வெளிப்படுகிறது. மேலும் அரசியலமைப்பினால் உத்திரவாதமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் அடிப்படை சட்டமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு தனிமனிதனின் உடைமை, அறிவுசார் உரிமை, நீதி மற்றும் ஆன்மிக மேம்பாடு போன்ற அனைத்திற்கும் மிக அத்தியாவசியமாக அடிப்படை உரிமைகள் உணரப்படுகிறது. • 


அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் பகுதி –III ல் சரத்து 12 முதல் 35 வரை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. • அரசியலமைப்பின் பகுதி –III இந்தியாவின் மகா சாசனம் (Magna carta of India) என அழைக்கப்படுகிறது. • 

இப்பகுதி மிக நீளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய, நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறும் அடிப்படை உரிமைகள் கொண்டுள்ளது. • நமது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையானது உலகின் வேறு எந்த நாட்டின் அடிப்படை உரிமைகளை காட்டிலும் அதிக விரிவானது ஆகும். குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டை காட்டிலும் விரிவானதாகும். • அரசியலமைப்பினால் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்து நபர்களுக்கும் எவ்வித வேறுபாடும் காட்டுவதில்லை. • அனைத்து தனி நபர்களின் சமத்துவத்தையும், தனி மனிதனின் கௌரவத்தையும், பொதுமக்களின் நலன்களையும் மற்றும் தேசத்தின் ஒற்றுமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. • அடிப்படை உரிமைகளின் நோக்கம் அரசியல் மக்களாட்சியை (Political Democracy) வளர்ப்பதாகும். உண்மையில் நமது அரசியலமைப்பில் ஏழு (7) அடிப்படை உரிமைகள் இருந்தன. 


1. சமத்துவ உரிமை ஷரத்து 14 முதல் 18 வரை 
2. சுதந்திர உரிமை ஷரத்து 19 முதல் 22 வரை 
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை சரத்து 23 முதல் 24 வரை 
4. சமய சுதந்திர உரிமை சரத்து 25 முதல் 28 வரை 
5. கலாச்சார மற்றும் கல்வி சரத்து 29 முதல் 30 வரை 
6. அரசியலமைப்பு வாயிலான தீர்வு சரத்து 32 (சரத்து 226 – உயர்நீதிமன்றம்) 
7. சொத்துரிமை (சரத்து 31 1978-ல் 44-வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக நீக்கப்பட்டது. இச்சரத்து தற்போது 300A-வாக உள்ளது. அடிப்படை உரிமைகளின் முக்கியத்துவம் • 


அடிப்படை உரிமைகள் பூர்ணத்துவமானடிவ அல்ல ஆனால் தகுதி வாய்ந்தவை. • அரசானது இவற்றின் மீது போதுமான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். • இவை பெரும்பாலும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக உள்ளன. • நீதிமன்றங்களை அணுகி தீர்வு பெற முடியும். • உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் உத்தரவாதமும் வழங்குகின்றது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற முடியும். • இவைபுனிதமானவையோ அல்லது நிரந்தரமானவையோ அன்று. 

பாராளுமன்றம் இவற்றை குறைக்கவோ அல்லது நீக்கவோ முடியும். • தேசிய நெருக்கடி நிலை செயல்பாட்டில் இருக்கும் போது அடிப்படை உரிமைகளில் ஷரத்து 20 மற்றும் 21-ஐத் தவிர பிற அடிப்படை உரிமைகளை செயல்படாத வண்ணம் நிறுத்தி வைக்க முடியும். ஷரத்து 19-ஐ யுத்தம் அல்லது அந்நிய படையெடுப்பின் போது செயல்படாமல் தடுத்த நிறுத்த முடியும். 

அரசின் வரையறை (சரத்து 12) ஒருவரது அடிப்படை உரிமையை மீறியது அரசா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக சரத்து 12-ஆனது “அரசு”(ளுவயவந) என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்பதற்குண்டான வரையறையைக் கொடுக்கிறது. சரத்து 12-ன்படி,“அரசு” என்ற சொல்லில் பின்வருவன அடங்கும். • இந்திய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம்; மற்றும் • ஒவ்வொரு மாநிலத்தினுடைய அரசாங்கம் மற்றும் சட்டமன்றம்; மற்றும் • இந்திய ஆட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து உள்ளுர் அதிகார அமைப்புகள் (Local Authorities) அல்லது பிற அதிகார அமைப்புகள் (Other Authorities); அல்லது • 



இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து உள்ளுர் அல்லது பிற அதிகார அமைப்புகள். அடிப்படை உரிமைகளுடன் முரண்படும் சட்டங்கள் (சரத்து 13) சரத்து 13ன் படி அடிப்படை உரிமைகளுக்கு முரண்படுமாறு அல்லது மீறுமாறு சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது இல்லாநிலையதாகும் மற்றும் செல்லாததாகும். •

 சரத்து 13(1) – அரசியலமைப்பு தொடங்குவதற்கு முன்பாக, இந்திய எல்லைக்குள் அமலில் உள்ள அனைத்து சட்டங்களும் (Law in force)இ அடிப்படை உரிமைகள் குறித்த வகைமுறைகளுடன் எந்த அளவிற்கு முரண்பட்டதாக உள்ளதோ அந்த அளவிற்கு இல்லா நிலையதாகும். • 

சரத்து 13(2) – குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவோ அல்லது மீறுவதாகவோ, அரசு எந்தச் சட்டத்தையும் (law) இயற்றக் கூடாது மற்றும் இந்நிபந்தனைக்கு முரணாக (in contravention) சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது அம்முரண்பாடு அளவிற்கு இல்லாநிலையதாக்கப்படும். 

1. சமத்துவ உரிமை (சரத்து 14 – 18) • 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு சரத்து – 
14. • சாதி, சமய, இன, பால், பிறப்பிட வேறுபாடுகளினால் பாரபட்சம் காட்டாமை சரத்து – 
15. • அரசு வேலைகளில் சமவாய்ப்பு ஷரத்து – 
16. • தீண்டாமை ஒழிப்பு மற்றும் இதன் செயல்பாட்டினை தடுத்தல் 

சரத்து  17. • இராணுவத்திலும் கல்வித் துறையிலும் சாதனை புரிவோருக்கு வழங்கப்படும் பட்டங்களைத் தவிர பிற பட்டங்கள் ஒழிப்பு 

சரத்து – 18. 2. சுதந்திர உரிமை : (ஷரத்து 19 – 22) • இந்திய அரசியலமைப்பு விதி 19 ஏழு (7) அடிப்படை உரிமைகளை குடிமக்களுக்கு உறுதி செய்கிறது. • 

குற்றங்களுக்குத் தண்டனையளிப்பது குறித்த பாதுகாப்பு, (ஷரத்து – 20) • உயிருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகதப்பு (ஷரத்து – 21) • ஆரம்ப கல்வி கற்பதற்கான உரிமை – சரத்து 21A • 
கைது செய்யப்படுவதற்கும், காவலில் வைக்கப்படுவதற்கும் எதிராகப் பாதுகாப்பு – சரத்து 3.

 சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு (சரத்து 23 மற்றும் 24) • மனிதர்களை வியாபார பொருளாக கருதி விற்பது மற்றும் கட்டாய வேலை வாங்குவதை தடைசெய்தால் – 

ஷரத்து • 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலோ, மற்றும் ஆபத்தான வேலைகளில் அமர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது – ஷரத்து 4. சமயச் சுதந்திர உரிமை (சரத்து 25 – 28) • 

மனசாட்சி படி செயல்படவும் சுதந்திரமாக வேலைகளில் ஈடுபடவும் மற்றும் விரும்பும் சமயத்தை பின்பற்றவும் மத பிரச்சாரம் செய்யவும் உரிமை – சரத்து • சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை – சரத்து • சமய வளர்ச்சிக்காக வரி செலுத்தாமல் இருக்க உரிமை – ஷரத்து • சமய போதனைகளுக்குச் செல்லாமலிருக்க உரிமை – சரத்து 5. கலாச்சார மற்றும் கல்வி உரிமை (சரத்து 29 – 30) • 


சிறுபான்னையினர் மொழி, எழுத்து வடிவம் மற்றும் கலாச்சாரங்களை பாதுகாக்கும் உரிமை. ஷரத்து • சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நிர்வகிக்கும் உரிமை. ஷரத்து 6. அடிப்படை உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் (சரத்து 31A, 31B மற்றும் 31C)


 7. அரசியலமைப்பு வாயிலாக தீர்வு பெறும் உரிமை – சரத்து 32 அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வுபெற கீழ்க்கண்ட நீதிப்பேராணைகள் வகை செய்கின்றன.

 சமத்துவ உரிமை (சரத்து 14 – 18) சரத்து – 14 • சட்டத்தின் முன் சமம் • சட்டத்தின் “முன் அனைவரும் சமம்” என்பது இங்கிலாந்தில் தோன்றியதாகும். • எந்த நபருக்கும ஆதரவாக சிறப்பு சலுகைகளை மறுத்தல் • சட்டத்தின் முன் எந்த ஒரு தனி நபருக்கும் எவ்வித சலுகைகள் காட்டப்படாது • சட்டத்திற்கு மேல் எதுவும் இல்லை. • அனைவருக்கும் சமமான பாதுகாப்புச் சட்டம் • இக்கருத்து அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து எடுத்ததாகும். • 


சட்டத்தின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப சூழ்நிலையின் அடிப்படையில் சமமாக நடத்தப்படுவர். • சமநிலையில் உள்ளவர்களுக்கு சட்டம் சம பாதுகாப்பை வழங்கும். • எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக கருதப்பட வேண்டும். 

சரத்து – 15 • அரசு எந்தக் குடிமகனையும் அவனுடைய மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைக் காரணமாகக் காண்பித்து, அவனை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது. • எந்தக் குடிமகனும் அவன் சார்ந்துள்ள மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் கடை, பொது ஒய்வு விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் பொதுவான பொழுதுபோக்கு இடங்களில் நுழையும் போதும் தடைப்படுத்தவோ அல்லது நிபந்தனை விதிக்கப்படவோ கூடாது. • பெண்டிர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புச் சட்டங்கள் இயற்றுவதிலிருந்து அரசினை இந்த ஷரத்தில் உள்ள எதுவும் தடுக்காது. • அரசு, சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கி உள்ள வகுப்பினர்களுக்கு அல்லது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தனிச் சலுகைகள் அளித்து, அவர்களும் சமுதாயத்தில் முன்னேற்றமடைய தனிச்சிறப்புச் சட்டங்கள் இயற்றுவதற்கு அரசினை எதுவும் தடுக்காது. 

சரத்து 16 • அரசின் கீழுள்ள எந்த அலுவலகத்திலும் பணி அல்லது நியமனம் குறித்த விவகாரங்களில் எல்லா குடிமகன்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். • இந்தியாவின் எப்பகுதியில் வாழ்ந்து வருவதாக இருப்பினும் வேலை வாய்ப்புகளில் அரசு சம வாய்ப்பு அளிக்க மறுக்கக் கூடாது. மதம், இனம், சாதி, பால், இறங்குரிமை, பிறப்பிடம் மற்றும் உறைவிடம், இவற்றின் அடிப்படையில் அரவின் ஒரு அலுவலகத்தில் அல்லது பணியில் ஒரு குடிமகன் அமரத் தகுதியற்றவனாக ஆக்கப்படக் கூடாது. • அரசுப் பணிகளை திறமையாகச் செய்வதற்குரிய தகுதிகளை நிர்ணயிப்பது ஷரத்து 16க்கு எதிராக அமையாது.



விக்ட்டோரிய மகாராணியார் பேரறிக்கை 


புதுச்சேரி, செப். 13: பிரிட்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆவணங்களின் உதவியோடு, இந்திய வரலாற்றின் தொலைந்த சுவடுகளை வெளிப்படுத்தும் வகையிலான ஆவணங்களின் கண்காட்சி புதுச்சேரியில் நடைபெறுகிறது.

இதற்காக, பிரிட்டிஷ் நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் உதவியோடு, அந்நாட்டில் உள்ள 1858 முதல் 1950-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இந்திய ஆவணங்களின் நகல்களைப் பெற்று, "எல்லைக்கு அப்பால்: பிரிட்டனில் இந்திய வரலாற்றுச் சுவடுகள்' என்ற பெயரில், அவை புதுச்சேரி லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தில் உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT


POWERED BY PLAYSTREAM


இந்திய வரலாற்றில் இடம்பெற்ற பல முக்கியத் தலைவர்களின் கடிதங்கள், தகவல்கள் அவர்களது கையெழுத்துகளிலேயே எழுதப்பட்டிருந்ததை, நகலெடுத்துப் பார்வைக்கு வைத்துள்ளனர். இவை, கால இயந்திரம் மூலம் கடிதம் எழுதப்பட்ட ஆண்டுக்குச் சென்று பார்த்ததுபோல இருப்பதாகவும், வரலாற்றில் இடம்பெற்ற இந்த கடிதங்கள் காணக்கிடைப்பது அரிது என்கின்றனர் பார்வையாளர்கள்.

இதில் குறிப்பிடத்தக்கதாக, 1857-ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சிக்குப் பிறகு, விக்டோரியா மகாராணி 1858 நவம்பரில் வெளியிட்ட பேரறிக்கை, அதன் பிறகு அவரது பேரறிக்கையின் 50-வது ஆண்டு விழாவின்போது 1908-ம் ஆண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவு ஆகியவையும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இடம்பெற்றோரின் புகைப்படங்களும் உள்ளன.

மேலும், கிழக்கிந்திய கம்பெனியினர் காலத்தில் அவர்கள் பயன்படுத்திய கடிகாரம், 1871-ம் ஆண்டு சூயஸ் கால்வாய் குறித்து சர்.எச்.சி.ராலின்சன் எழுதிய நினைவுக் குறிப்பு, சரோஜினி நாயுடுவின் கவிதைகள், 1913-ம் ஆண்டில் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தியர்களின் விவரம், இந்தியன் இன்பர்மேஷன் என்ற நாளேட்டில் வந்த இந்திய பெண்களின் போர் பற்றிய குறிப்புகள், ராயல் விமானப் படையில் இந்திய மாணவர்கள் எனும் தலைப்பில் இந்தியன் இன்பர்மேஷன் என்ற நாளேட்டில் 1942-ம் ஆண்டு வெளிவந்த கட்டுரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

முக்கியமாக, 1857-ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சிக்குப் பிறகு, விக்டோரியா மகாராணி வெளியிட்ட பேரறிக்கையில், வாரிசு இல்லாத மன்னர்கள் குழந்தை தத்தெடுத்துக் கொள்வது, சாதி, மதம் பாராமல் அனைவரையும் சமமாக நடத்துவது உள்ளிட்டவை முக்கிய குறிப்புகளாக இடம்பெற்றுள்ளன. அவரது அறிக்கை, அவரது எழுத்து நடையிலேயே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இக் கண்காட்சியை கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் மு.வைத்தியநாதன் முன்னிலை வகித்தார்.

இக் கண்காட்சிக்கு குறித்து ஆவணக் காப்பக அதிகாரி மு.முருகேசன் கூறியது: வரலாற்று ஆவணங்களைப் பொதுமக்கள் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. பார்க்க விரும்பும் ஆவணம் குறித்து மனு அளித்தால், பரிசீலித்துப் பின்னர் அனுமதி அளிக்கப்படும். ஆனால், பொதுமக்களுக்கு ஆவணங்களின் முக்கியத்துவம், வரலாற்றைக் காப்பதன் அவசியம் புரிய வேண்டும் என்பதற்காக இந்த ஆவணக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இக் கண்காட்சியை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அனைத்து நாள்களிலும் பொதுமக்கள் பார்வையிடலாம் என்றார்.

இது பிரிட்டிஷ் ஆட்சியின்போது நடந்த நிகழ்வுகள் மட்டுமே இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிரெஞ்சு காலத்து ஆவணங்களும் வைக்கப்பட்டிருந்தால் இன்னும் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்றனர் புதுச்சேரி பார்வையாளர்கள்.



இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவான வரலாறு

-     வீ.உதயகுமார்


இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சிலருக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. நாம் இந்தியர்கள் என்ற உரிமையை அளிப்பதே இந்த அரசியல் சட்டம் தான். எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை முழுமையாக படிக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், அதை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் பாருங்கள், கிண்டர் கார்டனிலிருந்தே அவர்களுடைய அரசியல் சட்டத்தைப்பற்றி சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தியாவில் யாராவது இப்படி செய்திருக்கிறார்களா என்று கூட தெரியவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் பெற்ற நாள் 1949 நவம்பர் 26. இச்சட்டம் அடுக்கடுக்காக பல பரிணாமங்களுக்கு பின்னரே முழுமையடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப்பெரிய வரலாற்றுப்பின்னனியும், சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப்பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்துப்பூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இது முறையாக ஏற்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடையும்போது அதற்கென்று தனி அரசியல் சட்டம் வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என பல தலைவர்கள் குறள் எழுப்பினர். அதைப்பற்றி காண்போம்.
இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாவதற்கான காரணங்கள்:
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, அதற்கு அடுத்தபடியாக நமது நாடு இந்தியா தான். இந்தியா மதச்சார்பற்ற நாடு ஆகும். நமது நாட்டின் இந்திய அரசியல் அமைப்பு உருவான விதத்தைப் பற்றி காண்போம்.
இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1857ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் அல்லது முதல் இந்திய சுதந்திரப்போர் தொடங்கிய பிறகு 1858லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது.
ஒழுங்குமுறைச்சட்டம் 1773:
இந்திய விடுதலை போராட்டம் மற்றும் அரசியல் அமைப்பு உருவாக அடிப்படை காரணமான ஒழுங்குமுறைச்சட்டம் 1773ல் உருவாக்கப்பட்டது. வங்காள ஆளுனர் வங்காளத்தின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். வாரன் ஹேஸ்டிங்ஸ் முதல் தலைமை ஆளுநர் ஆனார். தலைமை ஆளுநருக்கு உதவி புரிய நான்கு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பம்பாய் மற்றும் மெட்ராஸ் ஆளுநர்கள் வங்காள தலைமை ஆளுநருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனார்கள்.
கி.பி.1774ல் கொல்கத்தாவில் ஹூக்ளி நதிக்கரையில் உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் 1 தலைமை நீதிபதியும், 3 துணை நீதிபதிகளும் பதவி வகித்தனர். தற்போது, 2015ல் 1 தலைமை நீதிபதியும், 30 துணை நீதிபதிகளும் உள்ளனர்.
பிட் இந்தியச்சட்டம் 1784:
இச்சட்டம் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் அரசியல் நடவடிக்கைகளைப் பிரித்தது. நிர்வாகத்திற்காக இரண்டு விதமான குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை இயக்குனர் குழு மற்றும் கட்டுப்பாட்டுக்குழு.
இதனைத் தொடர்ந்து நான்கு விதமான பட்டையச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

பட்டையச்சட்டம் 1793 (முதல் பட்டையச்சட்டம்):–
இச்சட்டத்தின் படி இந்தியர்களுக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை.
பட்டையச்சட்டம் 1813 (இரண்டாம் பட்டையச்சட்டம்):–
இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூபாய் ஒரு இலட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிதி பயன்படுத்தவில்லை. ஏனெனில், இந்தியர்கள் கல்வியறிவு பெறுவதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை. இந்தியாவில் வாழும் ஐரோப்பியர் சமய நலன் காக்க கிறிஸ்துவ பேராயர்கள் நியமிக்கப்பட்டனர். ஆங்கில நாட்டு வியாபாரிகளுக்கும், மத போதகர்களுக்கும் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு இந்தியாவில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
பட்டையச்சட்டம் 1833 (மூன்றாம் பட்டையச்சட்டம்):–
ஆங்கிலேய கம்பெனியின் தனி உரிமை ஒழிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் வங்காள கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார்.
பட்டையச்சட்டம் 1853 (நான்காம் பட்டையச்சட்டம்):–
தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 2௦ உறுப்பினர்கள் கொண்ட இயக்குனரவை 18 உறுப்பினர்களாகக் குறைத்து 6 பேர் ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டனர். குடிமைப்பணிகளுக்கு இந்தியாவின் உறுப்பினர்கள் போட்டித்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மத்திய நிர்வாகத்தில் இந்தியர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். சட்ட உறுப்பினர் லால் மெக்காலே நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்திய அரசாங்கச்சட்டம் 1858:
மாநிலங்களின் செயலாளர் என்ற கேபினெட் அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.
விக்டோரியா மகாராணி பேரறிக்கை:
1857ல் சிப்பாய் கலகத்தின் முடிவில் விக்டோரியா மகாராணியார் பேரறிக்கை வெளியிடப்பட்டது.
1858 நவம்பர் 1ஆம் நாள் அலகாபாத் நகரில் மாபெரும் பேரவை கூட்டப்பட்டது. அங்கு மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்டது. இதனை இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும், முதல் அரச பிரதிநிதியுமான கானிங் பிரபு வாசித்தார்.
பேரறிக்கையின் அம்சங்கள்:
கட்டுப்பாட்டுக்குழு மற்றும் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டன. இந்தியசெயலாளர் பதவியும் அவருக்கு உதவி செய்ய 15 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு இந்திய நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது. நாடு இழக்கும் கொள்கை கைவிடப்பட்டது. கொலைக்குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்திய கவுன்சில் சட்டம் 1861:
வைசிராய் அவையில் ஐந்தாவதாக ஓர் உறுப்பினர் சேர்க்கப்பட்டார். கானிங் பிரபு பல்துறைப் பிரிவுகளை உருவாக்கினார். இந்தியர்கள் வைசிராய் செயற்குழுவில் இடம் பெறவில்லை. வைசிராய் அவசர சட்டம் வெளியிட அதிகாரம் பெற்றிருந்தார். அச்சட்டம் 6 மாதங்கள் வரை செல்லும். அனைத்து மாகாணங்களும் ஒரே பொதுவான முறைக்கு மாற்றப்பட்டது. சட்டமன்றம் உருவாக்கப்பட்டது.
இந்திய கவுன்சில் சட்டம் 1892:
இச்சட்டத்தில் சட்டமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் ஆகியவை வரையறுக்கப்பட்டன. முதல் முறையாக தேர்தல் கோட்பாடு பற்றி சிறிய அளவில் வலியுறுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இச்சட்டம் இயற்றப்பட்டது.
இந்திய கவுன்சில் சட்டம் 1909:
இந்தியர்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தவும், இந்திய புரட்சி இயக்கங்களின் ஆதரவை குறைக்கவும் இந்தியர்களுக்கு சில உரிமைகளை வழங்க வேண்டும் என காலனி அரசு முடிவு செய்தது.
இந்திய சட்டமன்றங்களுக்கு இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க  முதல்முறையாக தேர்தல் முறையை அறிமுகம் செய்தனர். இந்திய உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். இதில் இஸ்லாமியர்களுக்கு 25% தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன.
சத்யேந்திர சின்ஹா, வைசிராய் கவுன்சிலின் முதல் இந்தியர் ஆனார். அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
இந்திய அரசுச்சட்டம் 1919:-
இச்சட்டம் இந்தியாவிற்கான உயர் ஆணையர் என்ற புதிய அலுவலர் பதவியை இலண்டனில் ஏற்படுத்தியது. முதல் உலகப்போரின் போது இந்தியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முழு ஆதரவு கொடுத்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் போரில் வெற்றி பெற்றனர். இதற்கு கைமாறாக 1919ஆம் ஆண்டு ஆங்கிலேய பாராளுமன்றம் மாண்டேகு-செமஸ்போர்ட்  சீர்திருத்தச் சட்டத்தை இயற்றியது.
இந்திய அரசுச்சட்டம் 1935:-
தற்போது நாம் பின்பற்றும் 75% அரசியலமைப்புச் சட்டங்கள் 1935ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவையே.
இதன்படி மத்தியவங்கி உருவாக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றம் அமைய வழிவகுத்தது.
இந்திய அரசுச்சட்டம் 1935ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம் சைமன் குழுவின் அறிக்கை மற்றும் மூன்று வட்டமேசை மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது. இச்சட்டம் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. மாகாணங்களில் தன்னாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது.
இந்திய சுதந்திரச்சட்டம் 1947:-
பிப்ரவரி 20, 1947ல் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கிளமண்ட் அட்லி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வருகிறதென்றும் அதன் அதிகாரம் போறுப்புள்ளவர்களிடம் அளிக்கப்படும் என்று அறிவித்தார். மவுண்ட்பேட்டன் பிரபு சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார். அவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
தொடரும் 





.

No comments:

Post a Comment