Friday, 19 June 2020

A.L.RAGHAVAN ,SINGER BORN 1933 - 2020 JUNE 20


A.L.RAGHAVAN ,SINGER 
BORN 1933 - 2020 JUNE 20



கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த..'எங்கிருந்தாலும் வாழ்க' ஏஎல் ராகவன் மரணம்.. திரையுலகம் இரங்கல்!'சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 87. பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன், தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.1950-களில் இருந்து 1970-கள் வரை தமிழ்திரைப்பட பாடல்களில் கொடி கட்டிப் பறந்தவர் ராகவன்.
பாடகராக அறிமுகம் 1947-ஆம் வருடம் கிருஷ்ண விஜயம் என்ற படம் மூலம் நடிகராக சினிமாவுக்கு வந்தவர் இவர். 1950-இல் வெளிவந்த 'விஜயகுமாரி' என்ற படத்துக்காக ஒரு பாடலை பாடினார். குமாரி கமலாவுக்காக, பெண் குரலில் அவர் இந்த பாடலை பாடியதன் மூலம் பாடகராக அறிமுகமானார். அவர் குரல் ஈர்ப்பதாக இருக்க, தொடந்து அவருக்கு பாடல் வாய்ப்புகள் வந்தன.
எங்கிருந்தாலும் வாழ்க தமிழ் பாடல்களுடன் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் 'எங்கிருந்தாலும் வாழ்க' போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களையும் பாடி இருக்கிறார். மேலும் பொம்பளை ஒருத்தி இருந்தாளாம், சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்பட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளர்.

அதிகமான வாய்ப்பு கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடியிருந்தார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோர் இவருக்கு அதிகமான வாய்ப்புக்களை வழங்கினர். 1951-இல் வெளிவந்த சுதர்ஸன் என்ற படத்தில் கண்ணனாக நடித்துள்ளார். கல்லும் கனியாகும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

நடிகை எம்.என்.ராஜம் கல்லும் கனியாகும், கண்ணில் தெரியும் கதைகள் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன், டி.ஆர்.பாப்பா, இளையராஜா ஆகிய 5 இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்தார். ஏ.எல்.ராகவனின் மனைவி, பிரபல நடிகை எம்.என்.ராஜம். இவர்களுக்கு பிரம்ம லக்‌ஷமண் என்ற மகனும் மீனா என்ற மகளும் உள்ளனர். இருவரும் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.
கொரோனா அறிகுறி சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புகழ்பெற்ற பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் இன்று காலமானார்!

புகழ்பெற்ற நடிகையுமான எம்.என்.ராஜம்தான் இவர் மனைவி. ஆதர்ச தம்பதி என்று புகழப்பட்டவர்கள் இவர்கள். இந்நிலையில் ஏ.எல்.ராகவன் உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று காலமானார்!

தஞ்சாவூர் அருகில் உள்ள அய்யம் பேட்டைதான் இவரது ஊர்.அய்யம்பேட்டை லட்சுமணன் ராகவன் என்பதுதான் அந்த ஏ.எல்.ராகவன் என்ற பெயரின் சுருக்கம். இவர் ஒரு பாடகராக அனைவருக்கும் தெரியுமே தவிர, பன்முக வித்தகர் என்பது யாரும் அறியாதது.

ஆரம்பத்தில் நடிப்புதான் உயிர், பாய்ஸ் கம்பெனியில் இவர் ராஜபார்ட் வேடம் போட்டு நடித்தால், பெண் வேடமிட்டு உடன் நடிப்பது எம்ஜிஆர்தானாம். நன்றாக மிருதங்கம் வாசிப்பார். வயலின் வாசிப்பார். ஆனால் குரல் என்னவோ அப்போது பெண் குரலாக இருந்தது. இருந்தாலும் அதையும் பிளஸ் ஆக மாற்றி, பல படங்களில் பெண் கோரஸில் பாட ஆரம்பித்தார்.
விடாமுயற்சியும், அதீத திறமை காரணமாக எம்எஸ்வியிடம் பாடும் வாய்ப்பு கிடைத்தது. “புதையல்” படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து “ஹலோ மை டியர் ராமி” என்ற பாடல் பாடினார். இதுதான் ஆண்குரலில் ராகவன் பாடிய முதல் பாட்டு.

இதனை தொடர்ந்து பல ரம்மியமான பாடல்களும், ரகரகமான பாடல்களும் வெளிவந்தன. “பார்த்தால் பசி தீரும்” படத்தில் “அன்று ஊமைப் பெண்ணல்லோ” “நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்தில் பாடிய “எங்கிருந்தாலும் வாழ்க”, இருவர் உள்ளம் படத்தில் “புத்தி சிகாமணி பெத்த புள்ள”, வேட்டைக்காரன் படத்தில் “சீட்டுக்கட்டு ராஜா”, பூவா தலையா படத்தில் “போடச்சொன்னா போட்டுக்கறேன்” என்று பல தனித்துவம் மிக்க பாடல்களை ரசிகர்கள் காதும், மனமும் குளிர கேட்டு கொண்டே இருந்தனர். நானும்தான்..

டிஎம்எஸ், சீர்காழி என்ற இரு ஜாம்பவான்கள் இருந்தாலும் இவர்களுக்கு நடுவில் சாப்ட் வாய்சுடன் நுழைந்தார் ராகவன். மிகவும் மென்மையான குரல் அது. வெஸ்டர்ன் பாட்டு என்றால் ராகவன்தான். கிளப் டான்ஸ், கலாட்டா பாடல்கள், ஈவ்-டீஸிங், கிக்-பாடல்கள் அனைத்துக்கும் ராகவன்தான் பொருத்தம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை! குறிப்பாக நாகேஷ்-க்கு இவரது குரல் பெர்பெக்ட்டாக பொருந்தும். அதனால்தான் அவருக்கு மட்டும் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

ஒருகட்டத்தில் இவர் படம் எடுக்கவும் ஆரம்பித்து விட்டார். “கண்ணில் தெரியும் கதைகள்” என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அதிலும் ஒரு புதுமையை செய்தார். கேவி மகாதேவன், டிஆர் பாப்பா, இளையராஜா, ஜிகே. வெங்கடேஷ், சங்கர்-கணேஷ் என 5 மியூசிக் டைரக்டர்களை இணைத்தார். இதில் எல்லா பாட்டுமே ஹிட். ஆனால் கதை என்னவோ வலுவாக இல்லை.

அதனால் போதிய வசூலை இந்த படம் அள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு பிறகு ஒரு சில படங்கள் எடுத்தாலும், அவை எல்லாம் எடுபடவே இல்லை. நிறைய பணத்தை இழந்துவிட்டார்.
எத்தனையோ பாடகரை இமிடேட் செய்து பாட முடியும். ஆனால் ராகவன் குரலை மட்டும் இமிடேட் செய்ததே இல்லை. அப்படி செய்யவும் முடியாத குரல் அது. தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத அந்த காலத்திலேயே தன்னுடைய குரலிலேயே எஃக்கோ எபெக்ட்டை மிக துல்லியமாக தந்தவர்.

அதைவிட முக்கியம், மேடைகளில் ஆர்க்கெஸ்டிரா கச்சேரிகளை உருவாக்கியதன் முன்னோடியே ராகவன்தான்.. இந்த ஆர்க்கெஸ்ட்ராவை எல்ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து உருவாக்கினார். காரணம், இவர்கள் இணைந்து பாடிய பாடல்கள்தான் ஏராளம் என்பதுடன் இந்த ஜோடி குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் இருந்தது. “எங்கிருந்தாலும் வாழ்க” என்று எல்லாரையும் சொல்லிவிட்டு இன்று நம்மைவிட்டு போய்விட்டார் ஏ.எல்.ராகவன். எனினும் அவர் பாடல்கள் அத்தனையும் நம்முடன் சேர்ந்தே வாழும்.




ஏ. எல். ராகவன்- சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவின் பழம்பெரும் நடிகரும், திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரும் ஆவார். 1950-களிலிருந்து 1980 வரை தமிழ்த் திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 1947-ஆம் ஆண்டில் கிருஷ்ண விஜயம் என்ற படத்தின் மூலம் நடிகராக திரைத்துறைக்குள் நுழைந்தார். 1950-இல் வெளிவந்த “விஜயகுமாரி” என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். குமாரி கமலாவுக்காக பெண் குரலில் இப்பாடலைப் பாடினார். தமிழுடன் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோர் இவருக்கு அதிகமான வாய்ப்புக்களை வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம் பெற்ற எங்கிருந்தாலும் வாழ்க என்ற மிகப் பிரபலமான பாடலைப் பாடியவர்.

கல்யாண் குமார், ஜெமினிகணேசன் போன்றோர் நடித்த பல படங்களுக்குப் பின்னணி பாடியவர். இவர் 1948-இல் தயாரிக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின் 1951-இல் வெளிவந்த “சுதர்ஸன்” என்ற படத்தில் பகவான் கண்ணனாக நடித்திருக்கிறார். கல்லும் கனியாகும் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கல்லும் கனியாகும்,  கண்ணில் தெரியும் கதைகள் இரு படங்களைத் தயாரித்துள்ளார். கல்லும் கனியாகும் படத்தை பாடகர் ரி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து தயாரித்தார். இப்படம் சுமாராகவே ஓடியது. அத்துடன் ரி.எம்.சௌந்தரராஜன் படம் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால் இவர் 1980-இல் கண்ணில் தெரியும் கதைகள் படத்தைத் தயாரித்தார். இப்படத்தில் ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன், ரி.ஆர்.பாப்பா, இளையராசா  உள்ளிட்ட 5 இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்தார். பாடல்கள் பிரபலமானாலும், கதையில் வலுவில்லாததால் படம் தோல்வியைத் தழுவி இவரைப் பல லட்சங்களை இழக்கச்செய்தது.

நாகேஷ் அவர்களுக்கு இவரது குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். ஆதலால் நாகேஷுக்குப் பல படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியவர். வாடா மச்சான் வாடா (அன்று கண்ட முகம்), உலகத்தில் சிறந்தது எது (பட்டணத்தில் பூதம்), சாப்பிடத்தான் தெரியும் எனக்கு சமைக்கத் தெரியலியே (பவானி) ‘சீட்டுக்கட்டு ராஜா’, ‘என்ன வேகம் நில்லு பாமா'(குழந்தையும் தெய்வமும்), ‘அங்கமுத்து தங்கமுத்து’ (தங்கைக்காக), கடவுளும் நானும் ஒரு ஜாதி, அன்று ஊமை பெண்ணல்லோ உள்ளிட்ட பல பாடல்களால் அறியப்பட்டவர். எஃகோ வசதியில்லாத அக்காலத்தில் தனது குரலில் எஃகோ எஃபெக்டை கொடுத்தவர். மேடைகளில் ஆர்க்கெஸ்டிரா கச்சேரிகள் உருவானதன் முன்னோடி இவர்தான்.எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஆர்க்கெஸ்டிரா குழுவை உருவாக்கியவர். புதையல் படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து மெல்லிசை மன்னர் இசையில் முதன் முதலாக பாடினார்.

நடிகரும், பிரபல பின்னணிப் பாடகருமான ஏ. எல். ராகவன் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.


Career
A. L. Raghavan started his career in 1947 with 'Krishna Vijayam' (1950) and 'Sudarsanam' as Lord Krishna. He also acted on TV series, 'Aliaigal'. As a boy, he was introduced by Chidambaram Jayaraman and sang in a girl's voice for Kumari Kamala in the film Vijayakumari.[2]

Music composers he sang for
Many music directors gave him memorable songs, including C. R. Subburaman, K. V. Mahadevan, Viswanathan-Ramamoorthy, S. M. Subbaiah Naidu, C. N. Pandurangan, S. V. Venkatraman, Ghantasala, H. R. Padmanabha Sastri, S. Dakshinamurthi, R. Sudharsanam, T. R. Pappa, Vedha, Master Venu, P. Adinarayana Rao, G. K. Venkatesh, V. Kumar, Rajan-Nagendra, Vijaya Bhaskar, G. Devarajan, M. S. Baburaj, Veenai S. Balachander, B. Gopalam, T. A. Kalyanam, K. G. Moorthy, S. P. Kodandapani, T. V. Raju and M. S. Viswanathan.

Playback singers he sang with
He had many solo songs but also sang with other singers. He sang immemorable duets mostly with K. Jamuna Rani and L. R. Eswari. Others are P. Susheela, Jikki, S. Janaki, M. S. Rajeswari, A. P. Komala, A. G. Rathnamala, Soolamangalam Rajalakshmi, P. Leela, K. Swarna, Kausalya, Renuka, Sarala, M. R. Vijaya, Manorama, L. R. Anjali and Swarnalatha.

He also sang duets with male singers, most notably with T. M. Soundararajan, S. C. Krishnan, S. V. Ponnusamy, P. B. Sreenivas, J. P. Chandrababu, Seerkazhi Govindarajan, Thiruchi Loganathan, T. A. Mothi, Sai Baba, Malaysia Vasudevan, M. S. Viswanathan, K. Veeramani, G. K. Venkatesh, Dharapuram Sundararajan, S. P. Balasubrahmanyam and Sean Roldan.

No comments:

Post a Comment