Saturday, 2 June 2018

CORONATION OF ELIZABETH 2 1953,JUNE 2




CORONATION OF ELIZABETH 2- 1953,JUNE 2


இரண்டாம் எலிசபெத் CORONATION JUNE 2,1953

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.

அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள்.

சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.
இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை;

ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.

அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.
இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார்.

பெப்ரவரி 6, 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் இறந்தவுடன் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாக்கித்தான் மேலாட்சி, இலங்கை ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. 65 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; விக்டோரியா மகாராணியார் மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.[dated info]

எலிசபெத் இலண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் 1936ஆம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக வரிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947 இல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்: சார்லசு, ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.

எலிசபெத் யார்க் கோமகனாக இருந்த இளவரசர் ஆல்பெர்ட்டிற்கும் அவரது மனைவி எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக பிறந்தார். தனது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்று பெயர் சூட்டப்பட்டார். தனது நெருங்கிய குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார்.

அரசியின் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க வருகைகளிலும் சந்திப்புகளிலும் அயர்லாந்து குடியரசுக்கான அரசுப் பயணமும reciprocal visits to and from the திருத்தந்தையுடனான சந்திப்புக்களும் முதன்மையானவை. தனது ஆளுமைக்குட்பட்ட நாடுகளில் பல அரசியல்சட்ட மாற்றங்களை கண்டுள்ளார்; ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு மற்றும் கனடிய அரசியல் சட்டத்தின் திரும்பப் பெறல் போன்றவை. தனிப்பட்ட வாழ்க்கையில் பிள்ளைகளின் பிறப்பும் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைரவிழா (2012)க் கொண்டாட்டங்கள் முதன்மையான நிகழ்சிகளாகும்.

அரசியின் ஆட்சியில் முக்கிய நிகழ்வுகளாக வட அயர்லாந்து போராட்டங்கள், பாக்லாந்து போர், ஈராக் போர் மற்றும் ஆப்கானித்தான் போர்கள் விளங்குகின்றன. அவரது தந்தையின் மறைவு, இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபுவின் கொலை, 1992இல் பிள்ளைகளின் மணமுறிவுகள், 1997இல் அவரது மகனின் முன்னாள் மனைவி டயானாவின் மறைவு, தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தமாக அமைந்தன. அரச குடும்பம் மற்றும் குடியரசு கொள்கைகளுக்காக ஊடகங்களில் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டாலும் இவரது ஆட்சிக்கு மக்களின் முழுமையான ஆதரவு உள்ளதுடன் தனிப்பட்ட முறையிலும் பெரும் புகழ் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment