Tuesday, 26 June 2018

MALAYALAM ACTOR SURESH GOBI BORN 1960 ,JUNE 26









MALAYALAM ACTOR SURESH GOBI 
BORN 1960 ,JUNE 26

சுரேஷ் கோபி கொல்லத்தில் 
ஜுன் 26, 1960ல் பிறந்தார்

சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் ஜுன் 26, 1960ல் பிறந்தார். இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார்.

ஐ, சமஸ்தானம், தீனா, கற்பூர முல்லை, நிரபராதி போன்ற படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. மம்மூட்டி, மோகன்லாலுக்கு அடுத்தபடியான ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வைத்திருப்பவர். இவர் பாஜவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு ஏற்றார். சமீபத்தில் சுரேஷ்கோபி வெளியிட்ட ஒரு அறிவிப்பு திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 30 வருடமாக நடிப்பில் ஈடுபட்டிருந்தவர் இனி நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்திருப்பதாக கூறியதே அதிர்ச்சிக்கு காரணம்.

திடீரென்று இந்த முடிவை எடுத்ததற்கு என்ன காரணம் என தெரியாமல் குழப்பம் அடைந்தனர். தற்போது அவரே உருக்கமான விளக்கம் அளித்திருக்கிறார். ‘எனது தந்தை இறந்தபோது திரையுலத்திலிருந்து யாருமே வந்து எனக்கு ஆறுதல் சொல்லவில்லை. இரக்கமற்ற இத்திரையுலகில் நான் ஏன் தொடர்ந்து நீடிக்க வேண்டும். எனவேதான் நடிப்பிலிருந்து விலக முடிவு செய்தேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

கொச்சி, மாநிலங்களவை ​ உறுப்பினரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி பா.ஜ.க.,வில் இணைந்தார்.கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்த எம்.பி.சுரேஷ் கோபி தற்போது அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் சுரேஷ் கோபியை கலைத்துறை சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமித்தது. மலையாள சினிமாவில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் எம்.பி. என்ற பெருமைக்குரியவர் சுரேஷ் கோபி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பா.ஜ.க.,வில் இணைந்துள்ள சுரேஷ் கோபி, மத்திய சினிமா வளர்ச்சி கழகத்தின் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







No comments:

Post a Comment