Thursday, 14 June 2018

GAUTHAMA NEELAMBARAN ,WRITER BORN 1948 JUNE 14- SEPTEMBER 14,2015





GAUTHAMA  NEELAMBARAN ,WRITER
BORN 1948 JUNE 14- SEPTEMBER 14,2015

கௌதம நீலாம்பரன் (இயற்பெயர்: க. கைலாசநாதன், சூன் 14, 1948 - செப்.14,2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் புதின எழுத்தாளர் ஆவார்.


இவரது முதல் சிறுகதை, புத்தனின் புன்னகை, சுதேச மித்திரனில் 1970 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[1] இதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வரலாற்றுப் புதினங்கள், வானொலி மற்றும் தொலைக் காட்சி நாடகங்கள் என பல படைப்புகளை ஆக்கியுள்ளார்.

தீபம், இதயம் பேசுகிறது, ஞானபூமி, ஆனந்த விகடன், குங்குமம், குங்குமச் சிமிழ் போன்ற இதழ்களில் இவர் பணியாற்றியுள்ளார். இந்த இதழ்களில் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் வருகையை பெரிதும் ஊக்குவித்தார். 'முத்தாரம்' வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் புத்தர் பிரான் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.[2]


இவரது வரலாற்று புதினங்களான சேது பந்தனம், மன்னன் மாடத்து நிலவு, ஈழவேந்தன் சங்கிலி, பல்லவன் தந்த அரியணை, வெற்றித் திலகம், விஜய நந்தினி, பல்லவ மோகினி, மாசிடோனிய மாவீரன், சோழவேங்கை, கலிங்கமோகினி, வேங்கை விஜயம், வீரத்தளபதி மருதநாயகம், மோகினிக் கோட்டை, கோச்சடையன், ரணதீரன், ரஜபுதன இளவரசி, சுதந்திர வேங்கை ( பூலித்தேவன் வரலாறு ) ஆகியவை வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

எழுதிய நூல்கள்[தொகு]
பல்லவன் தந்த அரியணை
அதியமான் கோட்டை
ஈழவேந்தன் சங்கிலி
உதய பூமி
கலிங்க மோகினி
காலம் போற்றும் சரித்திர சம்பவங்கள்
சாணக்கியரின் காதல்
சித்திரப் புன்னகை
சிம்மக்கோட்டை
சேதுபந்தனம்
சேரன் தந்த பரிசு
சோழ வேங்கை
நிலா முற்றம்
பல்லவன் தந்த அரியணை
பாண்டியன் உலா
புலிப் பாண்டியன்
பூமரப் பாவை
மந்திர யுத்தம்
மருதநாயகம்
மன்னன் மாடத்து நிலவு
மாசிடோனிய மாவீரன்
மோகினிக் கோட்டை - பல்லவ மோகினி
ராஜகங்கனம்
ராஜபீடம்
ராஜபுதன இளவரசி
ராஜபொக்கிஷம்
விஜய நந்தினி
வெற்றி மகுடம்
வேங்கை விஜயம்

No comments:

Post a Comment