Monday, 25 June 2018

ELEPHANT -REMARKABLE ANIMAL






ELEPHANT -REMARKABLE ANIMAL


ஏசி அறையிலோ , எட்டு ரூபாய்க்கு 20 எம்பி கிடைக்கும் நெட்டில் எது வேண்டுமானாலும் எழுதலாம்..


அதிகமான Tranquilizer பயன்படுத்தியதால்
தான் யானை இறந்தது என்பது உண்மையாக இருக்கலாம்..ஆனால் காட்டுக்குள் மனிதன் போனதால் யானை ஊருக்குள் வந்ததாக சொல்வதெல்லாம் கண்ணால் பார்க்காமல் சும்மா ஒப்புக்கு எழுதும் கதைகள் தான்..யானைகள் தனக்கென்று ஒரு வழித்தடத்தை நிரந்தரமாக அமைத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவை..

இன்று தாய் யானை வரும் அதே வழியில் அதன் குட்டி இன்னும் பத்து ஆண்டுகள் கழித்தும் வரும்..அந்த யானை குட்டி போட்டால் அதுவும் அந்த வழித்தடத்தை பின்பற்றும் .. இது ஆண்டுகள் பலவானாலும் மாறாத யானைகளின் பழக்க வழக்கம்..

உணவுக்காக அலையும் யானைகள் மட்டுமல்ல.. நீருக்காக அந்த வழியை மாற்றும் யானைகள் தடம் மாறி ஊருக்குள் வரும்போது அங்கே கிடைக்கும் பயிர் உணவு வகைகள் , நீர் , அரிசி என அறிந்துகொண்டு விடுகின்றன.அதன் பின்னர் அந்த பகுதியை தங்களின் உணவு கேந்திரமாக மாற்றிக்கொள்கின்றன.

வால்பாறையில் இருக்கும் யானைகள் அடிக்கடி ரேசன்கடைகள் ,மளிகை கடைகளை துவம்சம் செய்து அரிசியை உண்கின்றதாக படித்திருக்கிறீர்களா? வனம் காய்ந்து போய் இருக்கும் நிலையில் யானைகள் இது போன்ற இடமாற்றங்களை செய்வது இயல்புதான்.. அது அல்லாமல் கூட்டமாக வரும் யானைகள் திரும்பி கூட்டமாக செல்லும்.. இதில் வழி தவறி வரும் ஒற்றை யானை , காட்டில் தனியாக உலவும் மனிதனை போலவே அதற்கும் இயல்பான பய உணர்வும் கோபமும் கூடி எதிர் வருவபர்களை , பொருட்களை எல்லாம் நொறுக்கிவிடும்..

இது போலத்தான் கோவைப்பகுதிகள் முழுவதும் சுற்றும் யானைகள் மலைகளில் இருந்து இறங்கி வழி மாறி வருகின்றன..உடனே இவர்கள் யானை இருக்கும் இடத்தில் வீடு கட்டிவிட்டார்கள் , அதை செய்தார்கள் இதை செய்தார்கள் என கதைகளை அவிழ்த்து ஒப்பாரி வேறு வடிக்கிறார்கள்..உண்மையில் மதுக்கரை பகுதியில் பல்லாண்டுகளாக யானைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன..

யானை இருக்கும் இடத்தில் வீடு கட்டினார்கள் என்ற பொதுவான வாதத்தை அந்த பகுதியை சாராதவர்கள் சொல்வது நகைப்பாக இருக்கிறது..அந்த பகுதிகள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கிறார்கள்.. ஏன் எல்லா யானைகளும் ஒற்றையாக திரியவில்லை.. ஏன் எல்லா யானைகளும் மிரண்டு சுற்றவில்லை என்ற ஒரு கேள்வியே போதுமானது இதற்கு விடை சொல்ல.

எட்டிமடை , வாளையார் , மதுக்கரை ,அறிவொளிநகர் என எல்லா இடங்களிலும் வருடத்தில் பாதி நாட்கள் யானைகள் நடமாடும்.. இரவுக்குள் மலைகளில் தஞ்சமாகிவிடும்..மலைகளில் ஏற்படும் வறட்சி , நீர் இன்மை இது போன்றவை அல்லாத , உணவு தேடும் பழக்கத்தின் விளைவுகள்தான் இவை தவிர சும்மா ஏதோ சமூக அக்கறை உங்களுக்கு மட்டுமே உள்ளதாக கற்பனையில் எழுதித்தள்ளாதீர்..

யானைகள்.பற்றி இன்னும் சில தெரிந்து கொள்ளுங்கள்..

யானைகள் மிக அதிகமான ஞாபக சக்தி கொண்டவை

யானைகள் மொழி வேறுபாடை அறிந்தவை..

யானைகள் அதன் கூட்டத்திற்கு ஊக்கமளிக்கும் குணம் கொண்டவை..

யானைகள் மனிதனின் அசைவுகளை உணர வல்லவை..

யானைகள் துக்கம் அனுஷ்டிக்கும் பழக்கம் உள்ளவை..

#இதில் முதல் பழக்கம் ஒரு நாள் கண்ட உணவு உள்ள இடத்தை மீண்டும் தேடி வரும் அளவு அபார நினைவாற்றல் கொண்டவை..முக்கியமாக யானைகளை வேண்டுமென்றே கொல்லும் அளவு வனத்துறையினர் மோசமானவர்கள் அல்ல.. மயக்க மருந்து என்னும் Tranquilliser கொடுக்கும் போது கோபத்தில் ,மிரட்சியில் அலையும் யானைக்கு பி பி செக் செய்துவிட்டெல்லாம் கொடுக்க முடியாது..இதில் யானையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தால் இது போன்ற யானை பலிகள் தவிர்க்க இயலாது..

வன விலங்கு நலனின் உங்களை விட பல மடங்கு அக்கறை உள்ளவர்கள் அவர்கள்.. அதனால்தான் முதுமலை , பந்திப்பூர் , முண்டந்துறை என எல்லா இடங்களிலும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது..

அழிவின் விளிம்பில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை கிர் காடுகளில் மட்டும் 520 தாண்டி இருக்கிறது..ஏசி அறையிலோ , எட்டு ரூபாய்க்கு 20 எம்பி கிடைக்கும் நெட்டில் எது வேண்டுமானாலும் எழுதலாம்..

உண்மைகள் நேரில் பார்த்தோ கேட்டோ தெரியாத வரை !

No comments:

Post a Comment