Tuesday, 2 January 2018

SRI VIKKIRAMA RAJA SINGHAN 1798-1832


SRI VIKKIRAMA RAJA SINGHAN 1798-1832

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1798 -1816-1832



கண்டி அரச மரபினர் மதுரை நாயக்கர் அல்லது தஞ்சை நாயக்கர் மரபிலிருந்து பெண் எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கண்டி அரசன்  ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு  (1782 - 1798) ஐந்து மனைவிமார் இருந்தும் ஒருவருக்கும் பட்டத்துக்குரிய வாரிசு இருக்கவில்லை. இந்த நிலைமையை சாதகமாக்கிக்கொள்ள அதிகாரிகளும், பிரதானிகளும், திசாவமார்களும் தருணம் பார்த்துகொண்டிருந்தனர். மன்னர் வாரிசின்றி இறக்க நேரிட்டது. தனக்குப் பின் அரசாட்சியை மேற்கொள்ளவென மூத்த மனைவியின் தம்பி முத்துசாமியையே இறப்பதற்கு முன் முடிக்குரிய இளவரசனாக நியமனம் செய்திருந்தார் மன்னார். ஆனால் மன்னரின் மரணத்திற்குப் பின்னர் அரசாட்சியில் கண் வைத்துக்கொண்டிருந்த கண்டி மந்திரிகளில் ஒருவரான பிலிமத்தலாவ அரசாட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் மன்னரின் மரணத்திற்குப் பின் முத்துசாமியை நியமிக்க விடவில்லை. மன்னரின் இரண்டாவது மனைவியின் சகோதரனான கண்ணுசாமியை மதுரையில் இருந்து அழைத்து வந்து அரசனாக்கினான். கண்ணுசாமி “ஸ்ரீ விக்ரமசிங்க” என்கிற பெயரில் 1798இல் மகுடம் சூட்டப்பட்டார். 

1816ஆம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் மாலை. அந்த அந்திவேளையில் கொழும்புவில் இன்றைய சிலிங்கோ கட்டிடம் இருக்கும் இடத்திலிருந்த  சிறையினுள் அடிபட்ட புலிபோல் அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தான் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன். இவன் மதுரை நாயக்க குலத்தைச் சேர்ந்த தமிழ் மன்னன். இவனது இயற்பெயர் கண்ணுசாமி.
ஒரு வருடத்துக்கு முன் அவன் வாழ்ந்த வாழ்க்கையையும் இன்றுதான் இருக்கும் நிலையினையும் நினைத்து நினைத்து அவன் எத்தனையோ நாட்கள் உறக்கமின்றிக் கழித்திருக்கிறான்.

கொழும்பு சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் கண்டி மன்னனின் நினைவுச் சின்னம் இந்த இடத்தில்தான் மன்னன்  சிறைவைக்க ப்பட்டிருந்தாராம்

புகழ்பெற்ற கண்டி ராஜதானியயை கட்டி ஆண்ட காலத்தையும், பிரித்தாளும் பிரித்தானியர் தனது அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு கண்டிமீது படையெடுத்து வந்ததையும் தனது பட்ட மகிஷிகளுடன் மெத மகா நுவரைக்கு தப்பியோடிய நிகழ்ச்சியையும் அங்கு மலைக்குகையொன்றினுள் மறைந்து வாழ்ந்ததையும் எஹலப்பொளையின் கையாட்கள் 1815 ஆம் ஆண்டு பெப்ரவரி 19ம் நாள் சிறைப்பிடித்த நிகழ்ச்சிகளும் அவன் சிந்தனையில் ஒன்றின் பின் ஒன்றாக ஓடி மறைந்தன. எஹலப்பொளையின் கையாளான எக்னெலிகொட தன் குரோதத்தைத் தீர்த்துக்கொள்ள தன்னைக் கயிற்றால் கட்டி வீதியில் இழுத்துச் சென்றதை நினைத்தபோது அவன் ரத்தம் கொதித்தது. இக்காட்சியைக் கண்ட ஆங்கிலேய தளபதி டொயிலி உடனடியாக என்னெலிகொடையைக் கண்டித்து தனக்குரிய ராஜ மரியாதையை அளித்ததை எண்ணி எதிரியின் சிறந்த குணத்தினையும் தன் சொந்த மக்களின் அற்ப புத்தியையும் ஒப்பிட்டுப் பெருமூச்செறிந்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று இலங்கை மக்களை விட்டே அவனைக் கப்பலேற்ற வெள்ளையர் ஆட்சி துணிந்து விட்டதை எண்ணி அவன் வெதும்பினான். ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனை நாடு கடத்தும் திட்டம் மிக மிக இரகசியமாக லண்டனில் பைட் ஹோலிலுள்ள காலனி ஆட்சி அலுவலகத்தோடு தொடர்புகொண்டு ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கான நாளாக 1816 ஆம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் என தேதியும் குறிப்பிடப்பட்டு இதனைச் செய்து முடிக்க இளம் சிவில் சேவை அதிகாரியான கிறான்விலியும் நியமிக்கப்பட்டான். இந்தச் சோக நாடகத்தின் கதா நாயகனான ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கோ இந்த ரகசியத் திட்டம் ஏற்கனவே தெரிந்திருந்தது. தெரிந்தும் என்ன பயன்? தான் இனி எக்காலத்திலும் இலங்கை திரும்ப முடியாதென்பதை உணர்ந்திருந்தான். எனவே தோல்வியையும் தனக்கே உரிய கௌரவத்துடன் ஏற்றுக்கொள்ள அவன் சித்தமானான்.

மன்னரை கட்டிவைத்திருக்கும்  எக்னெலியகொட மற்றும் மன்னருக்கு 
மரியாதை செய்யும் ஆங்கில  அதிகாரிகளையும் இந்தப் படம் சித்தரிக்கிறது. அரசன், அவனது நான்கு அரசிகள், தாயார் மற்றும் நெருங்கிய உறவினர்களான அறுபது பேரை கொழும்பிலிருந்து தென்னிந்தியாவிலுள்ள வேலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டுமென்று கிறான்விலிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

சிறையிலிருந்து ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனையும் அவனது குடும்பத்தினரையும் ஏற்றிக்கொண்டு கடற்கரைக்குச் செல்ல அன்றைய கவர்னராயிருந்த சேர். றொபேர்ட் ஆறு    குதிரைகள் பூட்டிய அலங்கார வண்டியைக் கொடுத்துதவ முன்வந்தான். கைதியாக தம் பாதுகாப்பில் இருந்தாலும் அரசனுக்குரிய கௌரவம் எல்லாம் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு அளிக்கப்பட வேண்டுமென்று அவன் கட்டளையிட்டிருந்தான்.

வில்லியம் கிறான் விலி, மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தங்கியிருந்த சிறைக்குச் சென்ற போது அவனுக்கு அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்சியைப் பறிகொடுத்த மன்னனைக் காண்பதற்குப் பதிலாக அங்கே தன் அரச உடுப்புகளுடன் வழக்கமான ராஜ கம்பீரத்தோடு நின்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைக் கண்டதும் அவன் ஒருகணம் அதிர்ந்தே போய்விட்டான்.
கேணல் கென் என்ற பிரிட்டிஷ் அதிகாரியும், கண்டி மாவட்ட அதிகாரியான ஜோன் சதலண்ட் என்பவனும் இருபக்கமும் இருக்க, பிரசித்தி பெற்ற கண்டியரசனின் இலங்கையை விட்டு அகலும் இறுதிப் பயணம் ஆரம்பமாகியது. அவனது பட்ட மகிஷிகள் வேறு ஒரு வண்டியில் பின்னால் சென்றார்கள். பிரயாணத்தின் ஒரு கட்டத்தில் அரசனும் அவனது பரிவாரங்களும் சென்ற குதிரை வண்டிகள் சுங்க அலுவலகத்தின் ஒரு மேல்மாடிக் கட்டடத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

அரசனின் நாடுகடத்தலை எப்படியோ அறிந்து கொண்ட வெளிநாட்டுப் பிரயாணிகள் பலர் அக்கட்டடத்தின் மேல்மாடியில் வந்து குவிந்துவிட்டனர். இதனைக் குதிரை வண்டியிருந்தே கவனித்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் குதிரை வண்டிகளை உடனடியாக நிறுத்தும்படி கட்டளையிட்டதோடு மேல்மாடியிலிருக்கும் பிரயாணிகள் அத்தனைபேரும் கீழே இறங்கி வாந்தாலன்றி தன் குதிரை வண்டியை அக்கட்டடத்தின் கீழாகச் செலுத்தக் கூடாதென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டான்.

வில்லியம் கிறான்விலியும் ஏனைய பிரிட்டிஷ் அதிகாரிகளும் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டனர். கைதியாக இலங்கையை விட்டே நாடு கடத்தப்படும் நிலையிலும்    ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுடைய துணிவையும் வீரத்தையும் கண்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். உடனடியாக அக்கட்டடத்தின் மேல்மாடியிலிருந்த பிரயாணிகளெல்லாரையும் கீழே இறங்கி விடும்படி உத்தரவிடப்பட்டது. இதன்பின்பே அரசனின் அனுமதியின்படி குதிரை வண்டி அக்கட்டடத்தைத் தாண்டி மேலே சென்றது.

அன்றைய நாட்களில் கொழும்பில் துறைமுகம் என்று ஒன்று இருக்கவில்லை. பெரிய கப்பல்களெல்லாம் அந்நாட்களில் நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டு படகுகள், தோணிகள் மூலமே பிரயாணிகள் கப்பலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே சில படகுகள் மன்னனையும் அவனது பட்டமகிஷிகளையும் ஏனைய நாயக்க வீரர்களையும் உறவினர்களையும் ஏற்றிக்கொண்டு கப்பலை நோக்கி விரைந்தன. கடற்பிரயாணத்தை மேற்கொள்ளாத அரசிகளும் அவர்களது உறவினர்களும் கப்பலைச் சென்றடைய முன்னமே மயக்கமுற்று சோர்ந்து வீழ்ந்தனர். கப்பலில் ஏறவே சோர்வுற்றிருந்த அவர்கள் ஆசனங்களில் வைத்து மேலே கப்பலுக்கு எடுக்க வேண்டியேற்பட்டது.

சிறைவைக்கப்பட்டிருந்த இடம்.
(கொழும்பு-சிலிங்கோ)

மன்னனுடன் பிரயாணஞ் செய்த பல வீரர்கள் ஏனைய கப்பல் சிப்பந்திகளின் உதவியுடனேயே கப்பலேற்றப்பட்டனர். 
ஆனால் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனோ எந்தவிதமான உதவியும் தனக்குத் தேவையில்லையென்றுகூறி, தனக்கே உரிய வீர நடையுடன் சென்று கப்பலேறினான். கப்பல் பயணத்துக்கு பரிச்சயமற்ற அவன் அன்று நடந்து கொண்டவிதம் பலரை ஆச்சரியத்திலாழ்த்தியது. கப்பல் மேல்தளத்தை அவன் அடைந்ததும் பாண்ட் வாத்தியங்கள் முழங்கின. கடற்படை கப்பல்களுக்கு மன்னர்கள் விஜயம் செய்யும்போது அளிக்கப்படும் ராஜ மரியாதைகள் அனைத்தும் அங்கே அளிக்கப்பட்டு கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையும் தரப்பட்டது.

கப்பலின் மேற்தளத்தில் நின்றவாறே தூரத்தே தெரியும் தன் தாயகத்தை ஒருகணம் உற்றுநோக்கினான். அமைதியாக தன் பட்டமகிஷிகள் பின்வர கப்பலில் தனக்கொதுக்கப்பட்ட அறைக்குச் சென்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் திரையை இழுத்து மூடிக்குகொண்டு அதன் பின்னே தன் உணர்ச்சிகளை அடக்கி கொண்டான். நிறைவேறாத ஆசையுடன், பின்னர் இந்திய மண்ணில் மடிந்துபோன அவனைச் சுமந்துகொண்டு, கப்பல் தனது பிரயாணத்தைத் தொடங்கியது. முடி மன்னன் ஆட்சியின் கடைசிச் சின்னமும் அக்கப்பலோடு இலங்கையை விட்டு அகன்றது.

இரா.கனகரத்தினம் கண்டியில் இருந்து 
வெளியான 'செய்தி' இதழில் எழுதியது. 
வெளியான திகதி  1-2-1969





ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவான். முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவன் சிம்மாசனம் ஏறினான். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவன் சிறை பிடிக்கப்பட்டான்.
இவன் தமிழ் நாட்டின் நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான். இவனது இயற்பெயர் கண்ணுசாமி. இவன், இவனுக்கு முதலில் நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவான். முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயருடன் கண்ணுசாமி முடி சூட்டப்பட்டான்
அரசுரிமைப் போட்டி[மூலத்தைத் தொகு]
எனினும், ராஜாதி ராஜசிங்கனின் வாரிசு உரிமைக்காக அவனது அரசியின் தம்பியும் போட்டியிட்டான். உண்மையில் அவனுக்கே கூடிய உரிமை இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், பிலிமத்தலாவை என்னும் கண்டியரசின் அதிகார் எனப்படும் முதலமைச்சன், கண்ணுச்சாமியை அரசனாக்கினான். கண்டியரசைத் தானே கவர்ந்து கொள்ளும் நோக்கிலேயே பிலிமத்தலாவை இவ்வாறு செய்ததாகவும் கருத்து நிலவுகிறது. பதவியேற்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பல சதி முயற்சிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவனது ஆட்சிக்காலம் இலங்கை வரலாற்றின் மிகவும் குழப்பமான காலங்களில் ஒன்றாகும்.
உள் முரண்பாடுகள்[மூலத்தைத் தொகு]
பிலிமத்தலாவையின் சதி[மூலத்தைத் தொகு]
இவனது காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி அரசில் தலையிடவில்லை. ஆனால், பிலிமத்தலாவையோ பிரித்தானியருடன் மறைமுகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். இதனால் பிரித்தானியர் கண்டியரசைக் கைப்பற்றுவதற்கான காரணம் கிடைக்கும் என அவன் கருதினான். கரையோர மாகாணங்களில் உறுதியான நிலையில் இருந்த பிரித்தானியருடன் போரில் ஈடுபடும்படி பிலிமத்தலாவை ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைத் தூண்டி விட்டான். 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது. பிரித்தானியர் எதிர்ப்புக்கள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர். கண்டி அரசன் தப்பி ஓடினான். எனினும், அதிகார் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்துக் கண்டியரசனை மீண்டும் பதவியில் அமர்த்தினான். பிலிமத்தலாவை இரண்டு முறை அரசனுக்கு எதிராகச் சதிசெய்து நாட்டைக் கவர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் மன்னிக்கப்பட்டான். மூன்றாவது தடவையும் அவன் பிடிபட்டபோது அவன் கொல்லப்பட்டான்.
எகலப்பொலையின் சதி[மூலத்தைத் தொகு]
பிலிமத்தலாவைக்குப் பதிலாக அவனது மருமகனான எகலப்பொலை அதிகாராக நியமிக்கப்பட்டான். அவனும் தனது மாமனைப் போலவே அரசனுக்கு எதிராகச் செயற்பட்டுக் குழப்பங்களைத் தூண்டி விட்டான். இக்குழப்பங்கள் அடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எகலப்பொலை தப்பிக் கொழும்புக்கு ஓடிப் பிரித்தானியருடன் சேர்ந்து கொண்டான்.
கண்டி கைப்பற்றப்படல்[மூலத்தைத் தொகு]
இவனது தூண்டுதலின் பேரில், பிரித்தானியர் மீண்டும் 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். மார்ச் 2 ஆம் திகதி கண்டி ஒப்பந்தம் என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான் அங்கே பிரித்தானியரால் கொடுக்கப்பட்ட சிறிதளவு பணத்தில் இரு மனைவியருடன் வாழும் நிலை ஏற்பட்டது. 1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் அவன் காலமானான்.

No comments:

Post a Comment