Saturday, 6 January 2018

MAMTA BANERJEE , CHIEF MINISTER OF WEST BENGAL BORN 1955 JANUARY 5



MAMTA BANERJEE ,
CHIEF MINISTER OF WEST BENGAL 
BORN 1955 JANUARY 5




மம்தா பானர்ஜி (வங்காள: মমতা বন্দ্যোপাধ্যায়) (பிறப்பு 5 சனவரி 1955) இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும் ஆவார். இவர் தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் விளிக்கப்படுகிறார். விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் நலன் கருதி சி.பொ.மண்டலத்திற்கும் மேற்கு வங்கத்தின் தொழில்முனைப்படுத்தலுக்குமான இவரது எதிர்ப்பு நன்கு அறியப்பட்டது.
துவக்க வாழ்க்கையும் கல்வியும்[மூலத்தைத் தொகு]

கொல்கத்தாவின் அஸ்ரா பகுதியில் பிறந்தவர் மம்தா. பசந்தி தேவி கல்லூரி, கொல்கத்தாவில் பட்டம் பெற்று ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

அரசியல் வாழ்வு[மூலத்தைத் தொகு]
அவர் தமது அரசியல் வாழ்வை காங்கிரசு(இ) கட்சியில் 1970களில் துவங்கினார். உள்ளூர் காங்கிரசில் படிப்படியாக முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொது செயலாளராக விளங்கினார்[1].1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதுபெரும் மார்க்சிய அரசியல்வாதியான சோம்நாத் சாட்டர்ஜியை ஜாதவ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வென்று இந்தியாவின் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றம் சென்ற பெருமை பெற்றார்.அனைத்திந்திய இளைஞர் காங்கிரசு தலைவராகவும் பதவி வகித்தார்.1989ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தோற்ற மம்தா அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே 1991ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1996,1998,1999,2004,2009 ஆண்டுகளில் யடந்த தேர்தல்களில் தொடர்ந்து வென்று கொல்கத்தா தெற்கு தொகுதியின் நிரந்தர பிரதிநிதியாக உள்ளார்.



1997ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து பிரிந்து (மேற்கு வங்க காங்கிரசைப் பிளந்து) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கினார்.திரிணாமல் காங்கிரசு, அவரது பல அரசியல் இயக்கங்களால் மேற்கு வங்காளத்தின் முதன்மை எதிர்கட்சியாக இருந்தது.

1999ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த தேசிய சனநாயக கூட்டணி அரசில் பங்கேற்று தொடர்வண்டித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.2001இல் ஆளும் கூட்டணியுடன் பிணக்கு கொண்டு தமது பதவியை துறந்த மம்தா 2004இல் மீண்டும் எரிசக்தித் துறை அமைச்சராக அமைச்சரவையில் இணைந்தார்.

2009ஆம் ஆண்டு காங்கிரசுடன் இணைந்து இந்திய தொடர்வண்டித்துறை அமைச்சராக இரண்டாம் முறை பதவியேற்றார்.தனது முதல் வரவுசெலவுத் திட்டத்தில் நிறுத்தமில்லா விரைவுத் தொடர்வண்டிகளையும் (துரந்தோ) இளைஞர்களுக்கான வண்டிகளையும் (யுவா) துவக்கியுள்ளார்.[2].மகளிர்களுக்காக நெரிசல்நேரங்களில் சிறப்பு மகளிர் மட்டும் புறநகர் தொடர்வண்டிகளை அறிமுகப்படுத்தி யுள்ளார்.[3].[4].

2011 சட்டப்பேரவைத் தேர்தல்[மூலத்தைத் தொகு]

2011 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுவந்த இடதுசாரி முன்னணி அரசினை வீழ்த்தினார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசு 294 இடங்கள் உள்ள சட்டப்பேரவையில் 184 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் 227 இடங்களைப் பிடித்தது. மே 20, 2011 அன்று மேற்குவங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2016)[மூலத்தைத் தொகு]
2016 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசு கட்சி 211 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மேற்குவங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.[5][6] இத்தேர்தலில் மம்தா பானர்ஜி பபானிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேற்கோள்கள்

No comments:

Post a Comment