PANDARIBHAI ,
THE FIRST HEROINE OF KANNADA
FILM INDUSTRY DIED JANUARY 29,2003
பண்டரிபாய் – (பிறப்பு-1928 SEPTEMBER 18-இறப்பு-29.1.2003) வயது-75.
இவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜிகணேசனின் முதல் படமான பராசக்தியில் கதாநாயகியாக நடித்தவர். தமிழில் சிவாஜிகணேசன், கன்னடத்தில் ராஜ்குமாருடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவரது தாய் மொழி கன்னடம். எனினும் ஏனைய தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த போது இவரது சொந்த குரலிலேயே தவறில்லாமல் பேசி நடித்தார் என்பது சிறப்பு. குறிப்பிட்ட காலத்திற்குப்பின் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்தார்.
இவரது தங்கை மாலையிட்ட மங்கை, வண்ணக்கிளி போன்ற பல்வேறு படங்களில் நடித்த நடிகை மைனாவதி. 1998 முதல் 2000 வரை மைனாவதி தயாரித்த கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். ஒரு முறைப் படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்னையிலிருந்து பெங்களூருவிற்குப் பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு கையை இழந்துவிட்டார். அதன் பின் இவர் படங்களில் நடிப்பதில்லை. 2003 ஆம் ஆண்டு மறைந்தார்.
சிவாஜிகணேசனின் தாயாக தெய்வ மகன், கௌரவம் போன்ற படங்களில் தமது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
பண்டரிபாய் (18 செப்டம்பர் 1928 - 29 ஜனவரி 2003) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர், கன்னடத் திரைப்பட உலகின் முதற் கதாநாயகியாகக் கருதப்படுகிறார்[1]. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்து
ள்ளார்[
பண்டரிபாய்...
பழம்பெரும் நடிகை..
இவருடைய பிற்கால
வாழ்க்கையில்
சோதனைகள் அதிகம்.
...
இவர் நிலைகண்டும்,
பழம்பெரும்நடிகர்கள் மீது
மதிப்பும் அன்பும்
இருந்ததாலும்
நமது தலைவர் ரஜினி இவருக்கு
தமது மன்னன் படத்தில்
வாய்ப்பு கொடுத்தார்...
அதோடு தனது
அருணாச்சலம்
படத்தயாரிப்பாளர்களில்
ஒருவராக இவரையும்
சேர்த்தார்...
ஒரு விபத்தில் தன்
கையை இழந்தார்..
விபத்தில் கைபோனபோது
தலைவர் ரஜினி பண்டரிபாய்
அம்மாவைப் பார்த்து
ஒரு கவர் தருகிறார்...
கவரில் இருப்பதை
மறுக்காமல் ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்றும் அன்புக்
கட்டளை இடுகிறார்...
அம்மா கவரைப்
பிரித்துப்பார்த்து அதிர்ச்சி
அடைகிறார்..உள்ள
ரூ.25 லட்சத்துக்கான
காசோலை இருக்கிறது...!!
நெகிழ்ச்சியில் தான்
கண்கலங்கியதாக ஒரு
நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்...
தலைவரின் உதவும்
குணம் உலகறிந்த ஒன்று...!!!!credits rajiniarmy
No comments:
Post a Comment