M.N.Nambiar - remembering him on his Birthday March 7,1919
100 th day Celebration of Nadodi Mannan..karunanidhi,nambiar, MGR mgr |
I wrote a piece on him in The Hindu in November 2010. This is the unedited version of the article.The snaps are courtesy his family. The Photograph with Kalaignar , MGR and MY FATHER was taken during the Nadodi Mannan 100th day Celebrations where my father was the Chief Guest. The Colour Photograph with me is from the Serial "Oviyam" made by G.N.Dhinesh Kumar in 1996 and is the only serial Nambiar acted in. I had the honour of playing his son.
M.N.Nambiar - The Good , The Bad and the Holy.
About 20 Kms from Coorg is the Village Cherupazhasi whose chieftain was part of the Pazhasi Raja family. A descendant of this family was destined to achieve fame in the film industry. He was Manjeri Narayanan Nambiar. M N Nambiar was born on 7th of march 1919 to Kelu Nambiar and Lakshmi. His father passed away when he was a little boy and the family wealth was all gone. Nambiar went away to Ooty to live with his brother. At the Ooty Municipal High School he studied up to the 3rd Form (present 8th Standard.) .
In 1934 , the famous dramatist, “Nawab” Rajamanickam was performing in Ooty. His brother’s business ran into problems and the family could no longer afford to educate him. Nambiar used to watch the plays and admired the discipline of the boys in the troupe – getting up early and performing Suryanamaskar, exercise , pooja and when an opportunity came up he joined Nawab’s troupe. The Drama Company travelled to Salem and Mysore. Nambiar started helping out in the Kitchen and graduated to assisting in the Pooja Room but he was not asked to act. Finally he was given the role of a lady Judge in a play –“Nachchu Poigai” written by Kovai Ayyamuthu. Nambiar was all ready to go on stage but the British Government , banned the Play.
In 1935 , their Play “Ramadasu” was to be filmed in Maharashtra and Nambiar went with the troupe. He played the role of a Comic with T.K.Sampangi. The pair was called Akkanna – Madanna. He was paid Rs. 40 for this. He spent half the amount in buying a harmonium, which is still there in his house. In a years’ time the chief Comedian of the troupe K.Sarangapani left and Nambiar took his place and became a huge hit with the audience. Even today “Nawab” Rajamanickam’s picture adorns a prominent place in the Pooja room of Nambiar’s House.
Whenever I worked with Nambiar he used to keep us in stitches with his comic remarks as the cast sat down to play cards during the breaks in Film shooting . Some were said with such a dead pan face that it would have been the envy of Buster Keaton. Suddenly his normal face will transform to the Villain with his trade mark scowl, arched eye brows and imperious look – if you looked around you will find some fans coming ti to see him. After they left he will look normal and smile. I asked him why he did this and his characteristic reply was – Avanga indha Nambiar a thaan parka varanga – they have come only to see this ( the Villain) Nambiar and smile….
In 1937 he shot for the film “Inbasagaran” which was never released as the film was burnt in a fire. Nambiar made steady progress and then joined the “Sakthi Nadaga Sabha” . In 1944 he essayed the role of the “Rajaguru” in the Play – Kaviyin Kanavu written by S.D.Sundaram to such perfection that his reputation as a villain , was well established. Nambiar soon signed up with Jupiter Films as a Studio Artiste and played a comedian in the film “Vidyapathi “ – 1946. He married Rukmani the same year.
This was followed by A.S.A.Sami’s “Rajakumari” - 1947 , which featured his friend M.G.Ramachandran, acting for the first time as the hero. Nambiar then played the lead male role (along with S.V.Subbiah) in the film Kanjan – 1947. Then followed Abhimanyu, Mohini and Velaikkari. The 1950 Modern Theatre Production “Dhigambara Samiyar” was a high point in his career as he donned 12 roles. This was written by Vaduvur Doraiswamy Iyengar and directed by T.R.Sundaram. Nambiar the Villain was well and truly established.
MGR who was elder to him by 4 years considered Nambiar his senior in the Profession. Their friendship which dates back to the early Jupiter Films days is well known. In fact Director Pa. Neelakantan once asked Nambiar as to why he never stood up when MGR entered the set ( everybody did) – Nambiar’s answer was – “He is my friend , why should I stand up when a friend walks in ?”. Pa neelakantan went and reported the conversation to MGR who asked him “Why do you go and ask him all this? “. MGR was the best man ( Mappillai Thozhan) in Nambiar’s wedding and carried nambiar’s first born Sukumaran on his shoulders up the Palani Hills for the boy’s Annaprashanam in 1948.
Nambiar steadily rose and became the Industry’s “Bad” man , his roles in Enga veettu Pillay , Aayiraththil Oruvan, Kuditirundha Kovil, Raman Ethanai Ramanadi, Padagotti, Then Nilavu, His Dual role of a Good man and bad man in Rahasiya Police 115, the suave and sophisticated Villain in Annayin Aanai readily come to mind. During this time he also essayed Character roles like in films like Pasa malar . We must remember that Nambiar had stiff competition from the likes of P.S.Veerappa, S.A.Ashokan, R.S.Manohar and a host of others and yet managed to retain his place.
His role as the 100 year old man in Sridhar’s Nenjam Marappadhillai is a classic. When shooting the scene where he chases the lead pair in a horse drawn carriage , the wheel of the carriage suddenly came off , the driver panicked but Nambiar asked him to drive on and as the carriage over turns jumped out, took aim and shot. This was not a planned stunt but an accident that Nambiar, the consummate professional used to the film’s advantage. Nambiar with his years of Physical training in the Drama troupe ( he practiced Yoga and played badminton in a court built in his house) , regular classes in Sword fighting and the other Indian Martial arts was fully equipped to handle the rigours of getting bashed up by the hero.
Nambiar was a very loving family man and all through his career he spent six weeks with his family in Ooty for the summer. He would refuse any assignment that called him away during this time. In a few exceptional cases he asked the producer to shoot his scenes in Ooty. He abstained from Alcohol, Tobacco and led a disciplined life. In fact he always chastised us for slouching in a chair and asked us to sit erect with our back straight. I had the privilege of acting with him in what was probably his only Television serial – Oviyam , where he played a Zamindar , my father.
Baghyaraj in his film Thooral Ninnu Pochchu ( 1982) paid his respects to a practice that Nambiar always followed. In the title shot – An old man will mix the rice and take the first handful to feed his wife. Nambiar always gave the first mouthful of food to his wife and in her absence in Sabarimala to his sons. All through his professional life he only ate food prepared by his wife – who accompanied him everywhere. Even the water he drank was specially double boiled by her. He held on to this practice till his final film “Sudesi” in 2006 with Vijayakanth.
Nambiar first went to Sabari Mala , with his Guru Nawab Rajamanickam in 1942 and thereafter made more than 55 pilgrimages. One can say he was to a large extent Instrumental in popularizing the Temple , as he was the “Guru Swamy” for many popular film stars, Industrialists and so on. His group was close to 200 strong. There was perfect equality and discipline as both the rich and poor were treated alike. This earned him the sobriquet – Swami.
After a career spanning 71 years of acting in films , probably a record he passed away on the 19th of November 2008 and will be remembered for being the Good man , who was Bad on screen and Holy in real life.
MOHAN RAM
I am an actor in Tamil Films and TV & a management Graduate from XLRI. I have acted in about a 100 Films and over 4000 TV episodes. I am also a Corporate Trainer and use movies as a tool to teach .This experiential type of learning with games,movies etc has worked well with people from all areas and levels of Management. As a Philatelist my interests are Stamps on Cinema and I have a huge collection of Stamps on this subject.I have also been instrumental in the Postal Authorities honouring several doyens of the film industry by bringing out Special Day Covers and in a few cases Postage Stamps as well.I regularly give lectures on Film related subjects and have spoken about Chennai in Cinema, Nagesh , Chandrababu, Kishore Kumar, M.R.Radha to name a few. I have written articles on Famous Film personalities in The Hindu, madras Musings, Saty
மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மார்ச் 7[1], 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார்.[2] ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார். குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார்.
வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இளமை
கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டம், தற்போதய கண்ணூர் மாவட்டம், சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்[3].
இல்லறம்
1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். பா. ஜ. கவின் முக்கிய தலைவராக இருக்கும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என்போர் இவரின் மற்ற குழந்தைகள் ஆவர்.
ஆன்மிக ஈடுபாடு
திரைப்படங்களில் எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். [4] நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார்.
நாடகத்துறை பங்களிப்புகள்
தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து [5] சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.
திரைத்துறை பங்களிப்புகள்
முதன்மை கட்டுரை: மா. நா. நம்பியார் நடித்த திரைப்படங்களின் பட்டியல்
நவாப் கம்பனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935 ஆம் ஆண்டு பக்த ராம்தாசு என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது.
வித்யாபதி (1946) திரைப்படத்தில் நாராயண பாகவதராக நம்பியார், எம்.எஸ்.எஸ்.பாக்கியத்துடன்
பல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக் குழு. தஞ்சையில் நடந்த ஏசுநாதர், ராஜாம்பாள் போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் கிருஷ்ணலீலா நாடகத்தில் நடித்து வந்த கே. சாரங்கபாணிக்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தது. 1939 இல் இருந்து பெரிய நடிகர்கள் வாங்கக்கூடிய பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கினார்.
1944 இல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து எஸ். டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் எஸ். வி. சுப்பையாவும் பெரும் புகழடைந்தனர்.
இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வித்யாபதி (1946), ராஜகுமாரி ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கஞ்சன் (1947) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற படங்களிலும் நடித்தார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார். கல்யாணி (1952), கவிதா (1962) ஆகியவற்றிலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம். ஜி. இராமச்சந்திரனின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.
வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் இராமச்சந்திரனுடன் சேர்ந்து நடித்தார்.
எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர் நடித்த தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியார் குணச்சித்திர வேடமேற்றார். ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் விஜய்காந்தின் சுதேசி படத்தில்லேயே கடைசியாக நடித்தார்.
தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.
திகம்பரசாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார்.
மறைவு
உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் 2008, நவம்பர் 19 பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார்.[6]
திரை உலகின் புனிதர் வாழ்க்கை வரலாறு
எம்.என்.நம்பியார்… தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதித்த நடிகர்களில் ஒருவர். கையை பிசைந்து, கழுத்தை சிறுத்து, கட்டை குரலில் அவர் நாயகியை மிரட்டத் தொடங்கும்போது திரையரங்கு சூடேற ஆரம்பிக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆற்றல்மிகு ஹீரோவுக்கு இறுதிவரை ஈடுகொடுத்த ஒரே வில்லன்.
எம்.என்.நம்பியார் என்ற மன்சரி நாரயண நம்பியார் பிறந்தது கேரளாவில் உள்ள கண்ணூர். வருடம், 1919 மார்ச் 7. சின்ன வயதிலேயே அவரது மனதில் நடிப்பு ஆசை துளிர்விடத் தொடங்கியது. தனது 13வது வயதில் நவாப் ராஜமாணிக்கம் குருப்பில் சேர்ந்தார் நம்பியார். அன்றிலிருந்து நடிப்பே அவரது வாழ்க்கையின் எல்லாமுமாக மாறியது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்பியார் என்ற பெயர் உருவாக்கும் பிம்பம் அனைவரும் அறிந்தது. ஏழைகளின் விரோதி, காமுகன், பணத்தாசை பிடித்தவர் இன்னும் தவிர்க்க வேண்டிய அனைத்து குணங்களின் கருவறை அவர். திரை உருவாக்கிய இந்த மாய பிம்பங்களுக்கு நேரெதிரான வாழ்க்கையை இறுதிவரை கடைபிடித்தவர் அவர் என்பது ஆச்சரியமான உண்மை.
நம்பியார் புலால் உண்பதில்லை, புறணி பேசுவதில்லை, ஆடம்பர செலவுகளை ஒருபோதும் விரும்பியதில்லை. பாய்ஸ் நாடக கம்பெனியில் பணிபுரிந்த போது தனக்கு சம்பளமாக கிடைத்த 3 ரூபாயில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி இரண்டு ரூபாயை தனது தாய்க்கு தவறாமல் அனுப்பி வைத்தவர் அவர்.
நம்பியாரின் திரைப்பிரவேசம் 1935ல் தமிழ், இந்தி இரு மொழிகளில் உருவான பக்த ராமதாஸ் படத்தில் நிகழ்ந்தது. வில்லனாக அறிமுகமான அவர் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தும் இறுதிவரை வில்லன் முத்திரையுடனே அறியப்பட்டார்.
ஏறக்குறைய 1,000 படங்கள் நடித்திருக்கிறார் ஏழு தலைமுறை நடிகர்களுடன் பணிபுரிந்திருக்கும் இந்த பழம்பெரும் நடிகர். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களுடன் ஆங்கில படமொன்றும் இவரது கணக்கில் வருகிறது. 1952ல் வில்லியம் பர்க்கின் இயக்கத்தில் வெளியான ஜங்கிள் படத்தில் சிறிய வேடமொன்றில் இவர் நடித்துள்ளார். கணவனே கண்கண்ட தெய்வம் படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டபோது அதில் நம்பியாரும் நடித்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என அன்றைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் திரையை பங்கு போட்டிருக்கிறார் நம்பியார். அவருக்கு பிடித்தமான நடிகர் எம்.ஆர்.ராதா என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். பிடித்த நடிகை சாவித்திரி. அனைவரும் அறிந்த நடிகராக இருந்தும் நடிகன் என்ற எல்லை தாண்டி தனது பிரபலத்தை விலை பேச அவர் ஒருபோதும் முயன்றதில்லை என்பது பலரிடம் காண முடியாத அரிய குணம்.
படத்தில் நடிக்க தொடங்கிய பிறகும் அவரது நாடக ஆசை தணியவில்லை. சொந்தமாக நம்பியார் நாடக மன்றம் என்ற பெயரில் நாடக கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். அந்த நாடக கம்பெனி கவியின் கனவு, கல்யாண சூப்பர் மார்க்கெட் ஆகிய இரு நாடகங்களை அரங்கேற்றியது. அதில் கல்யாண சூப்பர் மார்க்கெட் நகைச்சுவை நாடகம் என்பது நம்பியாரின் ரசனை அவரது திரை பிம்பத்திலிருந்து மாறுபட்டது என்பதற்கு சிறந்த உதாரணம்.
நம்பியாரின் ஆன்மீக முகம் பிரசித்தமானது. ஐய்யப்பனின் சீரிய பக்தர். 65 வருடங்களுக்கு மேல் சபரிமலை சென்று ஐய்யப்பனை தரிசித்தவர். குருசாமிகளுக்கெல்லாம் மேலான மகா குருசாமி. அவர் மாலை அணிவித்து சபரிமலை அழைத்து சென்ற நட்சத்திரங்கள் ஏராளம். தனது ஆன்மீக செயல்பாட்டை பொது வாழ்வில் அதிகாரத்தை கைப்பற்றும் ஆயுதமாக ஒருபோதும் அவர் பயன்படுத்தியதில்லை.
நம்பியார் இரு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். கல்யாணி, கவிதா என்ற அந்தப் படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. திகம்பரசாமியார் என்ற படத்தில் பதினொரு வேடங்களில் அவர் நடித்தது பலரும் அறியாத ஆச்சரியம்.
உடம்பை பேணுவதில் நம்பியாருக்கு நிகராக சொல்ல யாருமில்லை. வயதான காலத்திலும் உடம்பை கட்டுக் கோப்பாக பேணியவர் அவர். அதன் முக்கியத்துவத்தை இளையவர்களுக்கு பலமுறை போதித்தும் இருக்கிறார். தான் நடித்த படங்களில் நம்பியாருக்கு பிடித்தமான படங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். எம்.ஜி.ஆருடன் நடித்ததில் ஆயிரத்தில் ஒருவன், சிவாஜியுடன் நடித்ததில் அம்பிகாபதி, ஜெமினியுடன் மிஸ்ஸியம்மா, ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு. சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலன் சீரியலிலும் நடித்தார்.
எம்.ஆர்.ராதா, சிவாஜி போன்றவர்களுடன் ஒப்பிடும்போது நடிகராக நம்பியாரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள அதிகம் இல்லை என்றாலும், குரூரம் தெறிக்காத அவரது வில்லத்தனம் தமிழ் சினிமாவில் தனி அத்தியாயமாக என்றும் நிலைத்திருக்கும். வில்லனாக நடித்தே தமிழ் மனங்களின் நேசத்துக்குரியவரானவர் அவர். நடிகர்களின் திரை பிம்பத்தை அப்படியே நம்பும் பாமர ரசனையை தனது நெறி பிறழாத வாழ்க்கையால் முறித்துப் போட்டவர்.
எப்படிப் பார்த்தாலும் நம்பியாரின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்
நம்பியார் : நட்பைக் கெடுத்துக் கொள்ளாதே, யோசித்துச் சொல்.
எம்.ஜி.ஆர் : யோசிக்க வேண்டியவன் நானல்ல, அவளை யாசிப்பதை விடுங்கள்.
நம்பியார் : உயிர்மீது உனக்கு ஆசையில்லையா?
எம்.ஜி.ஆர் : இதே கேள்வியை நானும் கேட்கலாமா?
நம்பியார் : மோதுவதுதான் உன் முடிவா?
எம்.ஜி.ஆர் : உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.
நம்பியார் : அவளை அடைந்தே தீருவேன்.
எம்.ஜி.ஆர் : அதுதான் நடக்காது
நம்பியார் : ஆ.. என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய். மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர் : சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.
நம்பியார் : தோல்வியையே அறியாதவன் நான்.
எம்.ஜி.ஆர் : தோல்வியை எதிரிக்குப் பரிசளித்தே பழகியவன் நான்.
நம்பியார் : நாவை அடக்கு. நான் உன் தலைவன்.
எம்.ஜி.ஆர் : உங்கள் நடத்தை அப்படி இல்லையே.
நம்பியார் : ஆ…
***
தமிழகத்தின் தியேட்டர்களில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என். நம்பியாராகத்தான் இருக்கமுடியும். ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் எம்.ஜி.ஆரை அவர் அடிக்கும்போது கதறியவர்கள், அந்த நேரத்தில் நம்பியார் கையில் கிடைத்தால் குதறி யிருப்பார்கள். ‘நான் ஆணையிட்டால்’ என்று வாத்தியார் கிளம்பி நம்பியாரை அடிக்கும் போது ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று. பழி உணர்வைத் தீர்த்துக் கொண்ட திருப்தி.
திரையில் நம்பியாரின் அருமையான வில்லத்தனத்தாலே, நிஜத்தில் தனது ஹீரோயிஸத்தை வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
***
கருப்பு வெள்ளைக் காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. எப்போதுமே எம்.ஜி.ஆர். – நம்பியாரின் கூட்டணி என்றால் வசூல்மழைதான். எம்.ஜி.ஆரோடு ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, சிவாஜியோடு ‘உத்தமபுத்திரன்’ – மறக்க முடியாதவை.
‘திகம்பர சாமியார்’ – நம்பியார் கதாநாயகனாகப் பதினொரு வேடங்கள் அணிந்து நடித்த படம். அந்த மர்மக்கதை சினிமா பெரும் வெற்றியும் பெற்றது. மக்களைப் பெற்ற மகராசியில் ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’ என்று எம்.என். ராஜத்தோடு நம்பியார் பாடும் டூயட், என்றும் இனியது.
பக்தி படங்களில் வைணவம் சார்ந்த கதைகள் ஓடாது என்று தமிழ் சினிமாவில் ஒரு செண்டிமெண்ட் உண்டு. அதை முறியடித்துக் காட்டுகிறோம் என்று ‘சுப்ரபாதம்’ என்றொரு படம் எடுத்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள பல வைணவத்தலங்களில் கதை நகரும். நம்பியார் இதில் பக்தராக நடித்தார். அந்தப் படம் ஓடவில்லை.
***
அகில இந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு ஐயப்ப பக்தரான நம்பியார்தான் குருசாமி. அமிதாப் பச்சன் உள்பட பல நட்சத்திரங்கள் அவரோடு சபரிமலைக்குச் சென்றிருக்கிறார்கள்.
சுத்த சைவத்தைக் கடைபிடித்து வந்த நம்பியார் பசும்பால்கூட சாப்பிட மாட்டாராம். பொதுவாக அந்தக்கால பத்திரிகைகளில்கூட நம்பியார் பற்றி அவ்வளவு விஷயங்கள் வந்ததில்லை. தன்னைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு அவர் இடம் கொடுத்ததில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்பதைக் கொள்கையாக கடைபிடித்த நம்பியார், பத்திரிகையாளர்களையும் பெரும்பாலும் தவிர்த்தே வந்தார்.
1000 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நம்பியாரைக் கௌரவப்படுத்தும்விதமாக யாரும் எந்தவிருதும் அளித்ததில்லை.
***
சந்திரபாபு, எம்.ஆர். ராதா – வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளேன். நம்பியாரைப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தப்படுகிறேன். முன்பு கல்கியில் நம்பியார் குறித்த ஒரு தொடர் வந்துள்ளது.
எம்.என்.நம்பியார் -அபூர்வ தகவல்கள்-18
திரைப்படங்களில் கெட்டவராக நடித்தவர் சொந்த வாழ்க்கையில் நல்லவராக விளங்கினார். அவர்தான் மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என்.நம்பியார்.
நம்பியாருடைய பள்ளிப் பருவத்தில், அவரது மாமா(தமக்கையின் கணவர்) ஊட்டியில் தேநீர் கடை நடத்தி வந்தார். அங்கு சென்ற நம்பியார் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். தேநீர் கடையில் வியாபாரம் குறைந்ததால், சகோதரி குடும்பத்திற்கு சுமையாக இருக்க விரும்பாத நம்பியார் குடும்பத்திலிருந்து வெளியேறினார். ராணுவத்தில் சேர்வதற்காக மனு செய்தார். ராணுவத்தில் மாமிசம் சாப்பிட வேண்டும் என்ற காரணத்தினால், தாவர உணவாளரான இவர் ராணுவத்தில் சேரும் எண்ணத்தைக் கைவிட்டார்.
நான்காவது பாரம் (9 ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தபோது நாடகங்களில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டு நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நவாப் ராஜமாணிக்கம் நடத்திய ஸ்ரீ மதுரை தேவி வினோத பாலகான சபாவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார் நம்பியார்.
தனது 16ஆவது வயதில், நம்பியார் முதன் முதலில் பக்த ராமதாஸ் (1935) படத்தில் நடித்தார். நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் நடிக்கப்பட்டு வந்த பக்த ராமதாஸ் நாடகம் அதே பெயரில் படமாக்கப்பட்டபோது, இப்படத்தின் மூலம் மந்திரி மாதண்ணா என்ற வேடத்தில் நடித்து திரையுலகில் நுழைந்தார் நம்பியார். இப்படத்தில் இவரின் சம்பளம் 40 ரூபாய்.
இரண்டாவதாக நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியின் இன்பசாகரன் நாடகமும் அதே பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. படம் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில், ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீவிபத்தினால் திரைக்கு வராமல் தீக்குள் போனது இப்படம்.
10 ஆண்டுகள் கடந்து ஜுபிடர் ஃபிலிம்ஸ் தயாரித்த வித்யாபதி படத்தில், நாராயண பாகவதர் என்ற வேடத்தில் நடித்தார். இப்படத்தில் இவரது மனைவியாக எம்.எஸ்.எஸ். பாக்கியம் நடித்தார். இந்த நகைச்சுவை ஜோடி பலபடங்களில் தொடர்ந்து நடித்தது. ஜுபிடர் ஃபிலிம்ஸ் தயாரித்த ராஜகுமாரி, கஞ்சன், அபிமன்யூ, மோகினி, வேலைக்காரி ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார் நம்பியார்.
1944 இல் நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பனி நடத்திய ஐயப்பன் நாடகத்தில் நம்பியார் நடித்தார். 12 ஆண்டுகள் நவாப் கம்பனியிலிருந்த இவர், பின்பு சக்தி கிருஷ்ணசாமியின் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். சக்தி நாடக சபாவில் நடிக்கும்போது, கவியின் கனவு நாடகம் இவருக்குப் பெரும் புகழை அளித்தது.
இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தி ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், தேவதா என்ற இந்திப் படத்திலும் நடித்துள்ளார். சமூக கதைகள், சரித்திர கதைகள் என அனைத்து படங்களிலும் இவர் நடிப்பு நன்றாக இருந்தது.
2006 இல் விஜயகாந்த்துடன் சுதேசி படம்வரை இவர் நடித்துள்ளார். தான் 750 படங்களில் நடித்திருப்பதாக ஒரு பேட்டியில் நம்பியார் கூறியுள்ளார்.
நல்லதங்கை படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார் எம்.என்.நம்பியார். ரகசிய போலீஸ் 115 படத்தில் ஒரே உருவத்தைக் கொண்ட வில்லன், போலீஸ் ஆகிய இரு வேடங்களில் நடித்துள்ளார். வேலைக்காரி படத்தில் செல்வந்தர் வீட்டுப் பையன் மூர்த்தி, போலிச் சாமியார் ஹரிஹரதாஸ் ஆகிய இரு வேடங்களில் நடித்துள்ளார் இவர்.
கதாநாயகன், கதாநாயகனின் நண்பன், காமெடியன், வில்லன் என்று பலவித வேடங்களில் நடித்தவர் நம்பியார்.
பிற்காலப் படங்களில் கெட்டவனை நம்பியார் என்று குறிப்பிடும் அளவிற்கு, நம்பியாரின் வில்லன் நடிப்பு தமிழ்த் திரை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது. (போக்கிரி படத்தில் விஜய் பாடும் ஒரு பாடல். நம்பியாரைப் போல இருந்தேனே, இப்ப எம்ஜிஆரைப் போல மாத்திட்டா).
திகம்பரசாமியார் படத்தின் நாயகனான எம்.என்.நம்பியார் திகம்பரசாமியார், செவிட்டு மந்திரவாதி, முகமதிய தனவந்தர், வெற்றிலை வியாபாரி, நாதஸ்வர வித்வான், மைனர், போஸ்ட்மேன், குடுகுடுப்பைக்காரன் போன்ற இன்னும் சில வேடங்களுடன் மொத்தம் 11 வேடங்களில்(!) நடித்துள்ளார்.
நல்லதங்கை படத்தில் நாயகன் மூர்த்தியாக நம்பியாரும் நாயகனின் மனைவி மோகனாவாக மாதுரிதேவியும் நடித்துள்ளனர்.
கஞ்சன் படத்தில் நாயகன் வேலப்பனாக நம்பியாரும் நாயகி அமராவதியாக டி.ஜி.கமலாதேவியும் நடித்துள்ளனர். நாயகனின் மாமனாராகவும் கஞ்சனாகவும் நடித்தவர் எஸ்.வி.சுப்பையா.
பாக்ய தேவதை படத்தில் ஜெமினிக்கு ஜோடி ராஜசுலோச்சனா. எம்.என்.நம்பியாருக்கு ஜோடி சாவித்திரி. ஜெமினியும் நம்பியாரும் இப்படத்தில் சகலைகளாக நடித்தனர்.
நல்லவன் படத்தில் நாயகனாக ஆர்.எஸ்.மனோகரும், துணை நாயகனாக அரைப் பைத்தியம் வேடத்தில் நம்பியாரும் நடித்துள்ளனர்.
ராஜகுமாரி படத்தில் நாயகன் சுகுமாரனை (எம்.ஜி.ஆர்) ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றும் வேடத்தில் பகுவும் (எம்.என்.நம்பியார்) பகுனியும் (எம்.எஸ்.எஸ். பாக்கியம்) நடித்திருந்தனர்.
சர்வாதிகாரி படத்தில் எம்.என்.நம்பியார்தான் சர்வாதிகாரி. இந்த சர்வாதிகாரி மகாவர்மனை அடக்கும் நாயகன் பிரதாபனாக எம்.ஜி.ஆர் நடித்தார். எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள்வீச்சு சண்டைக்கலை அறிந்தவர்கள். இப்படத்தின் ஒரு சண்டைக் காட்சியின்போது எம்.ஜி.ஆர். வீசிய கத்தியின் நுனி நம்பியாரின் விரலில் பாய்ந்து விட்டது. அதன்பின் இருவரும் கவனமாக வாள்களைக் கையாண்டார்கள்.
தேவதாûஸ தீய வழியில் இழுத்துச் செல்லும் நண்பனாக நம்பியார் நடித்த படம் தேவதாஸ்.
மிஸ்ஸியம்மா படத்தில், நாயகியின் (சாவித்திரி) தந்தைக்கு கடன் கொடுத்துவிட்டு நாயகியை பெண் கேட்கும், டேவிட் என்ற ஆங்கிலோ இந்திய காமெடி வில்லன் வேடம் நம்பியாருக்கு.
அம்பிகாபதி படத்தில் புலவர் ஒட்டக்கூத்தராகவும், ஹரிச்சந்திரா படத்தில் விஸ்வாமித்திரராகவும் நம்பியார் நடித்தார்.
ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் 106 வயதுடைய பூர்வஜென்ம வில்லன் வேடத்தில் அருமையாக நடித்திருப்பார் இவர்.
திருடாதே படத்தில் தீக்காயத்துடனான கோர முகத்துடனும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கோர பற்களுடனான வெற்றுடம்புடனும் எம்.ஜி.ஆருடன் மோதுவார் நம்பியார்.
சரித்திரப் படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிப்பவர்கள், கால்களின் எளிதான நடமாட்டத்திற்காக முழுக்கால்சராய் அணிந்து நடிப்பார்கள் அல்லது கால்களை ஒட்டியபடி உடையணிந்திருப்பார்கள். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியார் இரு கால்களையும் சாக்கினுள் விட்டதுபோல் லுங்கியணிந்து தடுமாற்றமில்லாமல் சண்டை காட்சியில் திறம்பட நடித்திருப்பார்.
படத்தின் கதையோட்டத்திற்கும் வெற்றிக்கும் ஆதாரமாக இவர் நடித்த கொடுமையான வில்லன் வேடங்களுக்காக, பெண்களிடமிருந்து கிடைத்த வசவுகளும் திட்டுகளுமே, இவருக்கு கிடைத்த விருதுகளும் பட்டங்களுமாக விளங்குகின்றன.
எம்.ஜி.ஆர். படங்களில் அதிக அளவில் வில்லனாக நடித்தவர் இவர். எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரி முதல், எம்.ஜி.ஆர். இறுதியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரை, எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆரும் நம்பியாரும் இணக்கமாக இருந்தாலும் ஓரிரு சமயங்களில் இருவருக்கும் பிணக்கு வந்ததும் உண்டு. என் அண்ணன் படப்பிடிப்பில் இருவருக்கும் சிறு மனஸ்தாபம் உண்டானது. இப்படத்திற்கு பின்பு திரைக்கு வந்த மாட்டுக்கார வேலன், எங்கள் தங்கம், தேடிவந்த மாப்பிள்ளை, குமரிக் கோட்டம், ரிக்ஷாக்காரன் - ஆகிய படங்களில் நம்பியார் நடிக்கவில்லை.
சிவாஜியுடனும் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தங்கப் பதுமை, ராஜபக்தி, அன்னை இல்லம், தில்லானா மோகனாம்பாள், தெய்வ மகன், சவாலே சமாளி, திரிசூலம், குலமா குணமா, ராஜபார்ட் ரங்கதுரை போன்ற பல படங்களில் சிவாஜியுடன் வில்லனாக நடித்தார் நம்பியார்.
எம்.என்.நம்பியாரைப் போலவே தமிழ்த் திரையில் பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் ஆகியோரும் சிறந்த வில்லன் நடிகர்களாக விளங்கி வந்தார்கள். இந்த நால்வரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். அப்படம் அரசகட்டளை.
எம்.ஜி.ஆரை விட (1917) குறைந்த வயதுடையவர் நம்பியார் (1919). ஆனால் படவுலக அனுபவத்தில் எம்.ஜி.ஆரை விட (சதிலீலாவதி 1936) ஓராண்டு மூப்புடையவர் நம்பியார் (பக்த ராமதாஸ் 1935).
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பலதலைமுறை நாயகர்களுடனும் வில்லனாக மோதியவர் நம்பியார்.
நடைமுறையில் நகைச்சுவையுணர்வு உள்ள இவரை, காலம் வில்லனாக நடிக்க வைத்ததும் ஒரு விந்தைதான்.
---------------------------------------------
கேரளா மாநிலம் கண்ணனூர் தாலுக்கா மஞ்சேரி என்ற சிற்றூரில் 05.03.1919 இல் பிறந்தார் எம்.என்.நம்பியார்.
தந்தையின் பெயர் கேளு நம்பியார் என்பதாகும். மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதில் உள்ள மஞ்சேரியும் நாராயணனும் எம்.என். என்று இனிஷியலாக சுருங்கி, அவரின் நம்பியார் என்ற குடும்பப் பெயருடன் சேர்ந்து எம்.என்.நம்பியார் என்று நிலைத்து விட்டது.
1946 இல் இவருடைய திருமணம் நடைபெற்றது. இவர் துணைவியின் பெயர் ருக்மணி என்பதாகும். வெளியூர்களுக்கு நம்பியார் செல்லும்போது, தனது துணைவியையும் உடன் அழைத்துச் சென்று அங்கும் துணைவி சமைக்கும் உணவைத்தான் உண்பார்.
1982 இல் நடிகர்கள் சிலருடன் சேர்ந்து கைலாய ஆன்மீக யாத்திரை சென்று, அரனின் அருள்பெற்று வந்தார் நம்பியார்.
தமிழக அரசு இவருக்கு 1967 இல் கலைமாமணி விருதும், 1990 இல் எம்.ஜி.ஆர். விருதும், 1992 இல் ஜெயலலிதா விருதும் அளித்தது.
மிகச்சிறந்த ஐயப்ப பக்தரான இவர், அனைவராலும் பக்தி கலந்த மரியாதையுடன் குருசாமி என்று அழைக்கப்பட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை புனித பயணம் மேற்கொண்டார்.
அமிதாப்பச்சன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற பிரபல நடிகர்களான கன்னிசாமிகளுக்கு நம்பியார்தான் குருசாமியாக இருந்தார்.
19.11.2008 இல் இவர் ஐயப்பன் திருவடிகளில் ஐக்கியமானார்.
நம்பியாருக்கு சுகுமாரன், மோகன் என்ற இரு மகன்களும் சிநேகலதா என்ற ஒரு மகளும் உள்ளனர். சுகுமாரன் நம்பியார் பாரதீய ஜனதா கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
நம்பியார் நாயகனாக நடித்த படங்கள்...
திகம்பரசாமியார், கல்யாணி, கஞ்சன், நல்ல தங்கை.
நகைச்சுவை வேடங்களில் நடித்த சில படங்கள்...
கவிதா, வித்யாபதி, ராஜகுமாரி, மர்மயோகி, மோகினி, தூறல் நின்னு போச்சு.
நம்பியார் நல்லவராக நடித்த சில படங்கள்...
ரகசிய போலீஸ் 115, கண்ணே பாப்பா, சுபதினம், வருவான் வடிவேலன், சுவாமி ஐயப்பன்.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, மு.கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய 6 முதலமைச்சர்களுடன் கலைப் பணி ஆற்றியுள்ள ஒரே நடிகர் எம்.என்.நம்பியார் மட்டுமே. அண்ணா கதை திரைக்கதை வசனம் எழுதிய வேலைக்காரி படத்திலும், திரைக்கதை வசனம் எழுதிய நல்லவன் வாழ்வான் படத்திலும் நம்பியார் நடித்துள்ளார். மு.கருணாநிதி வசனம் எழுதிய அபிமன்யூ, அரசிளங்குமரி, ராஜகுமாரி போன்ற படங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பல படங்களிலும் நம்பியார் நடித்துள்ளார். (புதிய பூமி படத்தில் நம்பியார் ஜெயலலிதாவுக்கு தந்தையாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது). வி.என்.ஜானகியுடன் வேலைக்காரி, மோகினி, தேவகி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமாராவுடன் எம்.என்.நம்பியார் நடித்துள்ளார். மாயாபஜார் படத்தில் பாண்டவர்களின் ஆலோசகர் கண்ண பரமாத்மாவாக என்.டி.ராமாராவும், கெüரவர்களின் ஆலோசகர் சகுனி மாமாவாக எம்.என். நம்பியாரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment