BAJI RAO II ,LAST PESHWA OF MARATHA EMPIRE
BORN 1775 JANUARY 10
இரண்டாம் பாஜி ராவ் (Baji Rao II) (10 சனவரி 1775 – 28 சனவரி 1851), மராத்திய பேரரசின் இறுதி பேஷ்வாக 1796 முதல் 1818 முடிய ஆட்சி செலுத்தியவர். 1817–1818இல் நடந்த மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், மராத்திய ஆட்சிப் பகுதிகளை பிரிட்டனின் கம்பெனி அட்சியிடம் இழந்தவர். [1]
ஆட்சியை இழந்த பாஜி ராவ், உத்தரப் பிரதேசம், பித்தூரில், ஆங்கிலேயர்களால் தங்க வைக்கப்பட்டு, ஆண்டுக்கு 80,000 பிரிட்டன் பவுண்டு ஸ்டெர்லிங் ஓய்வூதியமாக பெற்றுக் கொண்டு வாழ்ந்தார். குழந்தை இல்லாத பாஜி ராவ், நானா சாகிப் என்பவரை தத்தெடுத்து வளர்த்தார். டல்ஹவுசி பிரபு கொண்டு வந்த அவகாசியிலிக் கொள்கையின்படி பிரித்தானிய கம்பெனி ஆட்சி இவருக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்திவிட்டது.
ஒரு திருத்தமும் கூடுதல் தகவலும்
மஹாராஷ்டிரா மாநிலத்தின் கோரிகாவுன் கிராமத்தில் 1818 ஜனவரி 1இல் நடந்த, மூன்றாம் ஆங்கிலோ மராத்தா போரின் இறுதிச் சண்டையில், அன்றைய பேஷ்வா படையை முறியடித்த கிழக்கிந்திய கம்பெனி படையின் மஹர் வீரர்களின் வெற்றியை ஆண்டுதோறும் தலித் மக்கள் நினைவுகூர்ந்து கொண்டாடிவருவது பற்றிய ‘கோரிகாவுனில் அணையா நெருப்பு’ கட்டுரை ‘மின்னம்பலம்’ ஜனவரி 3 பதிப்பில் வெளியாகியுள்ளது. அந்தச் சண்டை தொடர்பாக மேலும் சில முக்கியத் தகவல்கள் உள்ளன.
பிரிட்டிஷ் அரசின் முகமை நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனி என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது சரியான பொருளைத் தரவில்லை. அது முழுக்க முழுக்க ஒரு வணிக நிறுவனம்தான். படை பலத்தோடும் வந்த நிறுவனம் இந்திய மன்னர்களை வளைத்தும், அடக்கியும் ஒரு பேரரசை நிறுவியது. பிற்காலத்தில்தான் பிரிட்டிஷ் அரசே, இந்திய நிர்வாகத்தைத் தன்வசம் எடுத்துக்கொண்டது.
பிராமண சமூக மன்னராட்சியான பேஷ்வா ஆட்சியின் படைப் பிரிவுகளில் ஆங்காங்கே மஹர் சமூகத்தினரும் இருந்திருக்கிறார்கள். பேஷ்வா மன்னர் முதலாம் பாஜி ராவ் 1740இல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, நாட்டிலும் படைகளிலும் மஹர் மக்கள் பல அவமதிப்புகளைக் கூடுதலாகச் சந்தித்தார்கள்.
கம்பெனிப் படைகளை விரட்டும் போரில் தங்களைச் சேர்த்துக்கொள்ளக் கோரினார்கள் மஹர் இளைஞர்கள். ஆனால், இரண்டாம் பாஜி ராவ் அவர்களைச் சாதி மமதையோடு அவமானப்படுத்திப் படையில் சேர்க்க மறுத்தார். அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு உணர்வோடும்தான் அவர்கள் கம்பெனியை நாடினார்கள். நிர்வாகம் உடனே அவர்களைப் படையில் எடுத்துக்கொண்டது.
பேஷ்வா படையில் அப்போது சுமார் 28,000 பேர் இருந்தார்கள். 12 அதிகாரிகளுடன் இருந்த கம்பெனியின் படையிலோ, காலாட்படையினர் 834 பேர்தான். அவர்களில் கிட்டத்தட்ட 500 பேர் மஹர்கள். அந்தச் சிறிய படைதான் பேஷ்வாவின் பெரும்படையை வீழ்த்தி, கோரிகாவுன் கிராமத்தை மீட்டது. இப்படிப்பட்ட வரலாறுகள் பிராமணியக் கண்ணோட்டத்துடனும் உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் இதர பிரிவுகளைச் சேர்ந்தோரது பார்வையிலுமே சித்திரிக்கப்பட்டு வந்துள்ளன. 1927 ஜனவரி 1இல் டாக்டர் அம்பேத்கர் கோரிகாவுனுக்குச் சென்று மஹர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகுதான், அதுவரையில் அடிமைப்பட்டவர்களாக மட்டுமே காணப்பட்டவர்களின் மகத்தான வீரமும் தியாகமும் வெளி உலகத்துக்குத் தெரியவந்தது. இதை நினைவுகூர்ந்து பரப்பிடும் நோக்கத்துடன் 2005இல் பீமா கோரிகாவுன் ரன்ஸ்தம்ப் சேவா சங் (பீகேஆர்எஸ்எஸ்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இருநூறாவது ஆண்டு என்பதையொட்டி இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்கார் பரிஷத் (போர்க்குரல் சங்கமம்) கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை சில பிராமண அமைப்புகள் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பேஷ்வா அரண்மனை இருந்த இடத்தில் விழா நடத்தப்படுவதற்குத் தடை கோரினார்கள். குழுமிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.
தலித் மக்களின் ஒருமைப்பாடு பிராமணியத்துக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்துத்துவா சித்தாந்தத்துக்கு எதிராகவும் அணி திரண்டு வருவது ஒரு முக்கிய நிகழ்ச்சிப் போக்கு, தற்போது குஜராத்தின் உனா எழுச்சி இதற்கொரு மைய விசையாக இருக்கிறது என்று வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஏப்ரல் 18, 1859. குவாலியரிலிருந்து 75ந்து மைல் தொலைவிலுள்ள ஷிவ்புரி.
மாலை நான்கு மணி.
இடம் – தூக்குமேடை.
கைதி – நானா சாகிப்பின் தளபதி.
தளபதி புன்முறுவலுடன் தன் முகத்தில் கறுப்பு திரையை அணிவிக்க வந்த வீரர்களை தடுத்து நிறுத்தினான்.
”இதெல்லாம் எனக்கு தேவையில்லை” என்று சொல்லியவாறு தன் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு வீர மரணம் எய்தினான்.
தளபதியின் மரணத்திற்கு பிண்ணனி என்ன?
1857 ஆம் ஆண்டு இந்திய முதல் சுதந்திர போராட்டம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது. கிழக்கிந்திய கம்பெனியிடம் ராஜியத்தை இழந்து ஒய்வூதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கான்பூரின் அருகேயுள்ள பிரம்மவர்த்தா என்ற நகரில் தஞ்சம் அடைந்திருந்தார் இரண்டாம் பாஜி ராவ். டல்கௌசி பிரபு, பாஜி ராவின் மகன் நானா சாகிபிற்கு ஓய்வூதியத்தை கொடுக்க மறுத்தார். ஏற்கனவே கம்பெனியின் அநீதிகளையும் மக்களுக்கு விளைவித்த கொடுமைகளையும் பார்த்துக் கொதிப்படைந்த நானா சாகிபும், புரட்சி தளபதியும் இனியும் பொறுத்திறுக்க விரும்பவில்லை. அடிமை தனத்தை உடைத்து நாட்டை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிக்க முடிவு செய்தனர்.
நானா சாகிபும், தளபதியும் மே 31 1857ல் ஒரு பெரும் புரட்சிக்கு திட்டம் வகுத்தனர் . குறித்த நேரத்தில் ஜான்சியை ராணி லெக்ஷ்மிபாயும், கான்பூர் பிரம்மவர்த்தா பகுதிகளை நம் தளபதியும் தாக்கினர்.வெற்றியும் பெற்றனர், நானா சாகிப் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனால் கான்பூரில் படையை பெருக்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் விரைவிலேயே கான்பூரை மீட்டது.
புரட்சி தளபதி, நானா சாகிபுடனும், படைகளுடனும் பின் வாங்கினான். பின்னர் தனித்தனியாக தலை மறைவாக இருந்து தாக்க திட்டமிட்டான். இதுவரை இணை பிரியாமலிருந்த நானாசாகிபும் புரட்சி வீரனும் விரைவிலேயே தங்கள் தேசத்தின் விடுதலைக்காக பிரிய நேர்ந்தது.
கொரில்லா போர்முறையில் வல்லவனான தளபதி, ஷிவராஜபுரம், கான்பூர் முதலிய இடங்களை வெற்றிகரமாக முற்றுகையிட்டான். பிரிட்டிஷ் படையினர் மின்னலென தாக்கும் தளபதியிடமும், அவனுடைய படையினிடமும் செய்வதறியாது திகைத்தனர். தளபதி விரைவில் கல்பி என்னும் நகரை முற்றுகையிட்டான். கல்பியை ஆயுதம் தயாரிக்கும் ராணுவகிடங்காக மற்றினான். குவாலியரில் கிளர்ச்சியைத் தூண்டினான்.
அதன் பின்னர் பிரிட்டிஷிடம் சிறை பிடிக்கப் பட்ட தன் தோழியான லக்ஷ்மிபாயை மீட்க ஜான்சியை நோக்கி தன் படையுடன் முன்னேறினான். ஆனால் தளபதியின் ஆவேசமான தாக்குதலில் கலங்கியிருந்த பிரிட்டிஷ் படை இம்முறை நன்கு திட்டம் தீட்டியிருந்தது. தளபதியை சிறைபிடிக்க ஜான்சியில் காத்திருந்தது, அடுத்து அடுத்து வெற்றிகளைப் பார்த்து வந்த தளபதியின் படை சற்றே அசட்டையுடன் ஜான்சியை அணுகியது. அதனால் தளபதி வீரமாக போரிட்டாலும், அவன் படை பிரிட்டிஷ் படையின் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் சின்னா பின்னமாகியது. தளபதி மட்டும் தப்பி ஓடினான். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அவன் சென்று தஞ்சம் அடையக் கூடிய நண்பன் மான் சிங்கை வளைத்து கையூட்டுக் கொடுத்தது. கையூட்டில மயங்கிய மான் சிங் அவனிடம் வந்த தளபதியை காட்டிக் கொடுத்தான்.
அந்த தளபதி தாந்தியா தோப்பே.
No comments:
Post a Comment