MADURAI VEERAN HISTORY
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரை வீரன், நாயக்கர் அரசு காலத்தில் வழிப்பறி கொள்ளையர்களை அடக்க பயன்படுத்தப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொட்டுக் கட்டி விடப்பட்டிருந்த செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை மீட்பதற்காக கோயிலுக்குள் நுழைய முயன்ற மதுரை வீரனை, உயர் சாதியினர் கை, கால்களை வெட்டி கொலை செய்ததுதான் உண்மையான வரலாறு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆதித் தமிழர் பேரவையின் தொழிலாளர் அணி சார்பில் வெளியிடப்பட்ட "மதுரை வீரன் உண்மை வரலாறு' என்ற நூலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும், ஆளுநரிடம் முறையிடவும் முடிவு செய்திருப்பதாக பேரவையின் நிறுவனர் இரா.அதியமான் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:
மதுரை வீரன் குறித்து கடந்த 2007-ஆம் ஆண்டில் பேராசிரியர் அருணன் 64 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் இல்லாத வரலாற்றுத் தகவல்களை சேகரித்து கடந்த 2013-இல் எழுத்தாளர் ராயப்பன் எழுதிய "மதுரை வீரன் உண்மை வரலாறு' என்ற நூலுக்கும், செந்தில் மள்ளர் என்பவரின் "வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது' என்ற நூலுக்கும் தமிழக அரசு அண்மையில் தடை விதித்துள்ளது. இந்த நூல் வெளியாகி 2 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு இப்போது தடை விதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நூலில் தலித் மக்களின் கடவுளாகப் போற்றப்படும் மதுரை வீரனின் வரலாற்றை மட்டுமே கூறியுள்ளோம். நூலின் எந்த ஓர் இடத்திலும் எந்த ஒரு சமுதாயத்தைக் குறித்தும் குறைவாகவோ, தாழ்த்தியோ எழுதவில்லை. ஆய்வு இலக்கியமான மதுரை வீரன் நூலை அதிமுக அரசு தடை செய்திருப்பது கருத்துரிமைக்கு எதிரானது மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான அரசின் அடக்குமுறையை காட்டுவதாகவும் உள்ளது.
ஏற்கெனவே கடந்த 1956-இல் வெளியான மதுரை வீரன் திரைப்படத்தில் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த மதுரை வீரனை, அரச குடும்பத்து வாரிசாக தவறாக சித்திரித்துள்ளனர். 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரை வீரன், நாயக்கர் அரசு காலத்தில் வழிப்பறி கொள்ளையர்களை அடக்க பயன்படுத்தப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொட்டுக் கட்டி விடப்பட்டிருந்த செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை மீட்பதற்காக கோயிலுக்குள் நுழைய முயன்ற மதுரை வீரனை, உயர் சாதியினர் கை, கால்களை வெட்டி கொலை செய்ததுதான் உண்மையான வரலாறு.
இந்த நூலுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நூலைப் போலவே இதுவும் முகநூல், கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் போன்ற ஊடகங்கள் மூலமாகப் பரவும் வாய்ப்பை அரசே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இருப்பினும் இந்த நூலின் மீதான தடையை நீக்காவிட்டால் மாநிலம் முழுவதிலும் போராட்டங்கள் நடத்தப்படும். முன்னதாக நூலின் மீதான தடையை நீக்க வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம். மேலும், மாநில ஆளுநரிடமும் மனு அளிக்க இருப்பதாக அதியமான் கூறினார்.
கருப்பு, ஐயனார் போல மதுரைவீரனும் பரவலாக எல்லோரும் வணங்கும் கடவுளாக இருக்கிறார். மதுரை வீரன் கதைப்பாடலும், மதுரைவீரன் கூத்தும் இந்தக் கதையை காலங்காலமாக மக்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. சரித்திரங்களை படங்களாக கொண்டு செல்லும் முயற்சியில் எம்.ஜி.ஆர் எடுத்து நடித்த படம் “மதுரைவீரன்”.
எல்லா தெய்வங்களைப் போல சாதிபாராமல் வணங்கினாலும், மதுரைவீரன் சத்திரியன் அல்ல, சக்கிலியன் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் கதைப் பாடல்களில் அரசனின் மகனாகவே மதுரைவீரன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். தாழ்த்தப்பட்ட ஒருவனை தலைவனாக ஏற்றுக் கொள்ளாத மக்கள் இருக்கிறார்கள். கதையில் திரிபு ஏற்படுத்தி தந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை எதுவென மதுரைவீரனை குலதெய்வமாக வணங்கும் நண்பர்கள் தான் சொல்லவேண்டும்.
கதை :
வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.
காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன். ஆற்றில் விழுந்த ராஜகுமாரியான பொம்மியைக் காப்பாற்றுகிறான். பிறகு அரண்மனையை விட்டுத் தள்ளி பொம்மி விரதம் இருக்கும்போது காவலுக்குப் போகிறான். காதல் உருவாகிறது. அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.
திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.
திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள் வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான் வீரன். அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.
பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.
பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான். பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.
திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.
மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.
அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்.
INTRODUCTION
Madurai Veeran is a Tamil folk deity popular in southern Tamil Nadu, India. His name was derived as a result of his relationship with the city of Madurai and he is the protector of Madurai. Madurai Veeran protected Madurai and Madurai Meenakshi Amman Temple and is still protecting Madurai and all of his devotees.
Worship
Madurai Veeran is commonly worshiped as a guardian deity by the Tamils. When the town of Madurai was troubled by bandits, the Pandyan king ordered Veeran to fight. Veeran then met Vellaiyammal, a royal danseuse, and both of them were attracted against each other.
The Pandyan king, who was himself attracted to Vellaiyammal, did not encourage this affair. Some people in the king’s court complained to the king that the delay in attacking the robbers was due to the fault of Madurai Veeran. This made the king to become furious, and chopped his one hand and one leg and afterwards he ordered his guards to kill him also. On hearing about this, Bommi and Vellaiyammal(both of them loved Madurai Veeran), asked the king for the injustice caused to Madurai Veeran.
History says, that Madurai Veeran is brought back to life by the effort of Bommi and Vellaiyammal. Veeran, thereafter has taken his shelter in Madurai Meenakshi Amman Temple.
A shrine was later erected at the east gate of Meenakshiamman Temple by the Pandyan king. The story persists through the singing of songs and street theatre.
Temples
Today there are several temples dedicated to Madurai Veeran across tamilnadu, kerala, Malaysia, Singapore and south africa. One famous temple dedicated to Madurai Veeran is situated in Hanumanthapuram,Chenglepet District,Chenglepet,Tamilnadu. At this temple there are shrines for 18 feet statue Maduraiveeran, Pachaiamman,Nataraja,Bhairavar and Karrupannaswamy besides seven kannimars. All of these deities are KULADEIVAM to many people and also are KAVAL DEIVANGAl for all the people who worship them. He still protects his devotees from thieves and he is worshipped by everyone, without any caste discrimination.
Nearby my home, one small road side temple is dedicated to Madurai Veeran in Agaram, Chennai. People will gather in that temple during festivals and give their offerings.
CONCLUSION
Madurai veeran who is a guardian of Madurai, will also be with us as our guardian, and will protect us from all sorts of problems, and safeguard us from our enemies. We can worship Madurai veeran by going to his temples or otherwise, we can worship him at our home with his picture. He will definitely answer to our prayers and will be with us. Let us pray to the Great and Brave Madurai Veeran for our wellness in our life and chant his nama ‘OM SREE MADURAI VEERANE NAMAHA’.
WRITTEN BY
R.HARISHANKAR
.
No comments:
Post a Comment